Book Back QuestionsTnpsc

அண்டம் மற்றும் விண்வெளி Book Back Questions 7th Science Lesson 15

7th Science Lesson 15

அண்டம் மற்றும் விண்வெளி

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

வானியல் அலகு: பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான சராசரி தூரம் “வானியல் அலகு” என்று அழைக்கப்படுகிறது. இது “வா.ஆ” என்னும் அலகால் குறிக்கப்படுகிறது. 1 வா.ஆ = 1.496 x 108 கி.மீ

ஒளி ஆண்டு: ஒளியானது ஒரு வருடத்தில் கடந்த தூரம் ஒளி ஆண்டு என்று அழைக்கப்படுகிறது. இது “ஒ.ஆ” எனக் குறிப்பிடப்படுகிறது. 1 ஒ.ஆ = 9.4607 x 1012 கி.மீ

விண்ணியல் ஆரம்: ஒரு விண்ணியல் ஆரம் என்பது வானியல் அலகானது ஒரு ஆர வினாடியில் ஏற்படுத்தும் கோணத்தின் தொலைவு என வரையறுக்கப்படுகிறது. இது ‘pc’ எனக் குறிக்கப்படுகிறது.

1 pc = 3.2615 ஒ.ஆ = 3.09 x 1013 km

ஹப்பிள் விண்வெளித் தொலைநோக்கி மற்றும் சக்தி வாய்ந்த தரையை அடிப்படையாகக் கொண்டு தொலைநோக்கிகள் தற்போது பிக் பாங்கிற்கு சுமார் ஒரு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட விண்மீன் திரள்களைக் கண்டுபிடித்து வருகின்றன. இந்தச் சிறிய விண்மீன் திரள்கள் இன்றைய விண்மீன் திரள்களை விடவும் மிகவும் நெருக்கமாக இருந்தன. மோதல்கள் இயல்பானதாகவே இருந்தன. இரண்டு தீப்பிழம்புகள் ஒன்றையொன்று நோக்கி நகரும்போது, அவை பெரிய விண்மீன் திரள்களாக இணைக்கப்பட்டன. நமது பால்வெளி மண்டலம் இந்த விதமாகத்தான் உருவானது.

சுப்ரமணியன் சந்திரசேகர் (19 அக்டோபர் 1910 – 21 ஆகஸ்ட் 1995) இந்திய அமெரிக்க விண்வெளி இயற்பியலாளர் ஆவார். 1983ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு இவருக்கும் வில்லியம் ஏ ஃபவ்லர் என்பவருக்கும் பகிர்ந்து வழங்கப்பட்டது. இவரது விண்மீன் பரிணாம வளர்ச்சியின் கணித ரீதியான செயல்பாடுகள் நட்சத்திரங்கள் மற்றும் கருந்துளைகளின் பரிணாமப் படிகளின் கோட்பாட்டு மாதிரிகள் பலவற்றை அளித்தது. சந்திரசேகர் தமது வாழ்நாளில் பல்வேறு வகையான இயற்பியல் ரீதியான பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டார்.

1989 இல் கலீலியோ கலிலி வியாழன் சார்ந்த விண்வெளி நுண்ணாய்வுக் கலனுக்கு அவரது பெயர் சூட்டப்பட்டு நினைவு கூரப்பட்டார். இதன் 14 வருட விண்வெளிப்பயணத்தில் கல்வி நுண்ணாய்வுக் கலனும் அதிலிருந்து பிரிந்து செல்லக்கூடிய சிறுகலனும் இணைந்து வியாழன் கஸ்ப்ரா என்னும் துணைக்கோள், ஷூமேக்கர் லெவி-9 என்னும் வால் நட்சத்திரத்தினால் வியாழனில் உள்ள தாக்கம், யூரோப்பா, காலிஸ்டோ, இயோ மற்றும் அமல்தியா போன்றவை ஆகும். வியாழனின் ஒரு நிலவுடன் கலிலியோ கலப்பதனைத் தடுப்பதற்காக இதன் பணியின் முடிவில் வியாழனிலேயே சிதைக்கப்பட்டது.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. நிலவானது பூமியை ஒரு சுற்று சுற்றி வர ___________ நாட்களாகும்.

(அ) 25

(ஆ) 26

(இ) 27

(ஈ) 28

2. இன்றைய நாளில் கார்த்திகை நட்சத்திரத்திற்கு அருகில் நிலவு இருந்தால் 27 நாட்கள் கழிந்து நிலவானது ____________ நட்சத்திரத்திற்கு அருகில் இருக்கும்.

(அ) பரணி

(ஆ) கார்த்திகை

(இ) ரோஹிணி

(ஈ) அஸ்வினி

3. __________ தொலை நோக்கியைக் கண்டறிந்தார்.

(அ) ஹான் லிப்பெர்ஷே

(ஆ) கலிலியோ

(இ) நிக்கொலஸ் காப்பர் நிக்கஸ்

(ஈ) தாலமி

4. அனேக இளம் நட்சத்திரங்களைக் கொண்ட விண்மீன் திரளுக்கு ____________ என்று பெயர்.

(அ) நீள்வட்ட விண்மீன் திரள்

(ஆ) ஒழுங்கற்ற விண்மீன் திரள்

(இ) குழுக்கள்

(ஈ) சுருள் விண்மீன் திரள்

5. __________ துணைக் கோளை நிறுவியவுடன் ISRO 4 டன் எடையுடைய துணைக்கோள்களை ஏவும் திறன் பெறுகிறது.

(அ) GSAT – 13

(ஆ) GSAT – 14

(இ) GSAT – 17

(ஈ) GSAT – 19

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. வளர்பிறை என்பது ____________

2. சூரியமையக் கொள்கையை முன் மொழிந்தவர் ______________

3. அண்டத்தின் ஆதியைக் குறித்துக் கூறும் மாதிரி ___________ ஆகும்.

4. ஆகாயத்தின் பெரும் பகுதியை அடக்கியுள்ள விண்மீன் மண்டலம் ____________ ஆகும்.

5. இந்தியா ஏவிய முதல் ஏவுகணை __________ ஆகும்.

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: தவறான வாக்கியத்தை திருத்தி எழுதுக:

1. முழு நிலவு நாளன்று சூரியன் மேற்கில் மறையும் பொழுது நிலவு மேற்கில் தோன்றும்.

2. நிலவானது பாதியை விடக் குறைவாக ஒளிரும் நிலைக்கு பிறை நிலவு என்று பெயர்.

3. கலிலியோ புவி மையக் கொள்கையை வழி மொழிந்தார்.

4. நமது பால்வெளித் திரளானது நீள்வட்ட விண்மீன் திரள் ஆகும்.

5. நமது சூரியக் குடும்பத்திலுள்ள வெள்ளிக் கோளுக்கு நிலவு கிடையாது.

பொருத்துக:

1. ரோகிணி – GSLV– Mark III

2. GSAT – 14 – GSLV Mark III M1

3. GSAT – 19 – SLV – 3

4. சந்த்ரயான்-2 – PSLV-XL C25

5. மங்கள்யான் – GSLV-D5

ஒப்புமை தருக:

1. பழைய நட்சத்திரங்கள்: நீள்வட்ட விண்மீன் திரள்:: புது நட்சத்திரங்கள்: _____________

2. அருகிலுள்ள விண்மீன் திரள்: ஆண்ட்ரமெடா:: அருகிலுள்ள நட்சத்திரம்: _____________

மிகக் குறுகிய விடையளிக்கவும்:

1. ___________ என்ற வார்த்தை நிலவானது நிலவு பாதியை விடக் குறைவாக ஒளிரும் நிலை ஆகும். (பிறை நிலவு/கூனல் நிலவு)

2. ___________ மற்றும் ____________ கோள்கள் நடு இரவில் தோன்றாது.

3. சூரியனைச் சுற்றி வர செவ்வாய் எடுத்துக் கொள்ளும் காலம்.

4. வெள்ளியின் அளவு எந்த கட்டத்தில் மிகச் சிறியதாக இருக்கும்?

5. பெருவெடிப்புக் கோட்பாட்டிற்கான ஒரேயொரு சான்று.

6. அதிக அளவு வாயு மற்றும் துகள்களைக் கொண்ட விண்மீன் திரள் ____________ ?

7. உலகின் முதல் ஏவு வாகனத்தை ஏவிய நாடு எது?

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)

1. (27) 2. அஸ்வினி 3. ஹான் லிப்பெர்ஷே 4. சுருள் விண்மீன் திரள் 5. GSAT – 19

கோடிட்ட இடங்களை நிரப்புக: (விடைகள்)

1. வளர்தல் (அ) வெளிச்சத்தில் விரிவடைதல் 2. கோப்பர் நிக்கஸ் 3. நீள் வட்ட மாதிரி

4. உர்சா மேஜர் (சப்த ரிஷி மண்டலம்) 5. ஆர்யப்பட்டா

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: தவறானதைத் திருத்தி எழுதுக: (விடைகள்)

1. தவறு

சரியான விடை: முழு நிலவு நாளன்று சூரியன் மேற்கில் மறையும் பொழுது நிலவு கிழக்கில் தோன்றும்.

2. சரி

3. தவறு

சரியான விடை: தாலமி புவி மையக் கொள்கையை வழி மொழிந்தார்.

4. தவறு

சரியான விடை: நமது பால்வெளித் திரளானது கோடிட்ட சுருள் விண்மீன் திரள் ஆகும்.

5. சரி

பொருத்துக: (விடைகள்)

1. ரோகினி – SLV – 3

2. GSAT – 14 – GSLV – D5

3. GSAT – 19 – GSLV Mark III

4. சந்த்ரயான் – 2 – GSLV Mark MI

5. மங்கள்யான் – PSLV – XL C25

ஒப்புமை தருக: (விடைகள்)

1. சுருள் விண்மீன் திரள்கள் 2. ஆல்ஃபா சென்டாரி

மிகக் குறுகிய விடையளிக்கவும்: (விடைகள்)

1. பிறைநிலவு 2. வெள்ளி, புதன் 3. சூரியனைச் சுற்றி வர செவ்வாய் எடுத்துக் கொள்ளும் காலம் 687 நாட்கள் ஆகும்.

4. கிப்பஸ் கட்டத்தில் வெள்ளியின் அளவு மிகச் சிறியதாக இருக்கும்.

5. பெரு வெடிப்புக்கான ஒரே ஆதாரம் காஸ்மிக் நுண்ணலை பின்னணி என்று அழைக்கப்படும் விண்வெளியில் உள்ள ஒரு மங்களான பிரகாசம் ஆகும்.

6. சுருள் விண்மீன் திரள் 7. உலகின் முதல் ஏவு வாகனத்தை ஏவிய நாடு ரஷ்யா ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!