அண்டம் Book Back Questions 9th Science Lesson 9
9th Science Lesson 9
9] அண்டம்
Book Back Questions with Answer and Do You Know Box Content
உங்களுக்குத் தெரியுமா?
நமக்கு அருகாமையில் உள்ள அண்டிரோமீடா விண்வெளித் திரளின் தொலைவு 2.5 மில்லியன் ஒளி ஆண்டுகள் ஆகும். பூமி இயங்கும் வேகத்தில் (அதாவது 30 கி.மீ/வி) நாம் சென்றால் கூட அதைச் சென்றடைய 25 பில்லியன் ஆண்டுகள் தேவைப்படும்.
காஸ்மிக் ஆண்டு: நொடிக்கு 250 கி.மீ (மணிக்கு 9 இலட்சம் கி.மீ) வேகத்தில் பால்வெளி வீதியைச் சுற்றி வர பூமி எடுத்துக்கொள்ளும் காலம் காஸ்மிக் ஆண்டு எனப்படும். இது 225 மில்லியன் புவி ஆண்டுகளுக்குச் சமம்.
கணக்கீடு 1: 500 கி.மீ உயரத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் செயற்கைக்கோளின் சுற்றியக்கத் திசை வேகத்தைக் கண்ககிடுக. தகவல்: G = 6.67 x 10-11 நிமீ2 கிகி-2; M = 5.972 x 1024 கிகி; R = 6 371 000 மீ; h = 500000 மீ
தீர்வு: v = √6.67 x 10-11 x 5.972 x 1024/(6371000 + 500000)
விடை: v = 7613 மீவி-1 (அல்லது) 7.613 கிகிவி-1
நுண் ஈர்ப்பு என்பது பொருள்கள் அல்லது மனிதர்கள் எடையற்று இருப்பது போல் தோன்றும் நிலை ஆகும். விண்வெளி வீரர்களும், ஒரு சில பொருள்களும் விண்வெளியில் மிதக்கும் போது, நுண் ஈர்ப்பின் விளைவுகளை நாம் அறியலாம். நுண் ஈர்ப்பு என்றால் மிகச்சிறிய ஈர்ப்பு என்று பொருள்படும்.
கணக்கீடு 2: 500 கிமீ உயரத்தில் ஒரு செயற்கைக்கோளின் சுற்றுக் காலத்தைக் காண்க.
தீர்வு: h = 500 x 103 மீ, R = 6371 x 103 மீ, v = 7616 x 103 மீவி-1.
T = 2π(R + h)/v = 2 x 22/7 x (6371 + 500)/7616 = 5.6677 x 103 வி = 5667 வி. அதாவது T ≈ 95 நிமிடங்கள்
அனைத்து விண்மீன்களும் கிழக்கிலிருந்து மேற்காக நகர்வது போல் தோன்றினாலும் ஒரே ஒரு விண்மீன் மட்டும் நகராமல் உள்ளது போல் தெரியும். அது துருவ விண்மீன் என்று அழைக்கப்படுகிறது. நிலையாக அமைந்துள்ள புவியின் சுழல் அச்சிற்கு நேராக அமைந்திருப்பதால், துருவ விண்மீன் ஒரே இடத்தில் உள்ளது போல் தோன்றுகிறது. புவியின் தெற்கு அரைக்கோளத்திலிருந்து துருவ விண்மீன் தெரிவதில்லை.
சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:
1. சூரிய மையக் கொள்கையை முன்மொழிந்தவர் யார்?
(அ) டைக்கோ பிராஹே
(ஆ) ஆர்க்கிமிடிஸ்
(இ) நிகோலஸ் கோபர் நிக்கஸ்
(ஈ) டாலமி
2. இவற்றுள் எது வெளிப்புற சூரிய மண்டலத்தில் உள்ள கோள் அல்ல?
(அ) புதன்
(ஆ) சனி
(இ) யுரேனஸ்
(ஈ) நெஃப்டியூன்
3. செரஸ் என்பது ___________
(அ) விண்கல்
(ஆ) விண்மீன்
(இ) கோள்
(ஈ) சிறுகோள்
4. A என்ற கோள் சூரியனைச் சுற்றி வர எடுத்துக்கொள்ளும் சுழற்சி நேரம் B என்ற கோளை விட எட்டு மடங்கு அதிகம் எனில், கோள் A வின் தூரம் கோள் B யின் தூரத்தை விட எத்தனை மடங்கு அதிகம்?
(அ) 4
(ஆ) 5
(இ) 2
(ஈ) 3
5. ____________ ஆண்டுகளுக்கு முன்பு பெருவெடிப்பு ஏற்பட்டது.
(அ) 13.7 மில்லியன்
(ஆ) 15 மில்லியன்
(இ) 13 மில்லியன்
(ஈ) 20 மில்லியன்
கோடிட்ட இடங்களை நிரப்புக:
1. சூரியனின் திசைவேகம் ________ கிமீ/வி.
2. முனைகளில், சூரியனின் சுழற்சி வேகம் ___________
3. இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ___________
4. கெப்ளரின் மூன்றாம் விதியை ____________ என்றும் அழைப்பர்.
5. நம் சூரிய குடும்பத்திலுள்ள கோள்களின் எண்ணிக்கை ____________ ஆகும்.
சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: தவறான வாக்கியத்தை திருத்தி எழுதுக:
1. பன்னாட்டு விண்வெளி மையம் என்பது சர்வதேச ஒத்துழைப்பின் ஒரு ஆதாரமாகும்.
2. ஹேலிஸ் வால்மீன் 67 மணி நேரங்களுக்கு ஒரு முறை தோன்றும்.
3. பூமிக்கு அருகே உள்ள கோள்களுக்கு சுழலும் திசைவேகம் குறைவாக இருக்கும்.
4. புதன் கோள் சிவப்புக்கோள் என்றழைக்கப்படுகிறது.
சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)
1. நிகோலஸ் கோபர் நிக்கஸ் 2. புதன் 3. சிறு கோள் 4. (4) 5. (13.7 மில்லியன்)
கோடிட்ட இடங்களை நிரப்புக: (விடைகள்)
1. (250) 2. (36 நாள்களுக்கு ஒரு முறை சுழலும் வேகம்) 3. ஆரியபட்டா 4. ஒத்திசைவுகளின் 5. எட்டு
சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: (தவறான வாக்கியத்தை திருத்தி எழுதுக)
1. சரி
2. தவறு
சரியான விடை: ஹேலிஸ் வால்மீன் 76 ஆண்டுகளுக்கு பின்னர் தோன்றும்.
3. தவறு
சரியான விடை: பூமிக்கு அருகே உள்ள கோள்களுக்கு சுழலும் திசைவேகம் அதிகமாக இருக்கும்.
4. தவறு
சரியான விடை: செவ்வாய் கோள் சிவப்புக்கோள் என்றழைக்கப்படுகிறது.