Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Book Back QuestionsTnpsc

அன்றாட வாழ்வில் விலங்குகள் Book Back Questions 7th Science Lesson 18

7th Science Lesson 18

18] அன்றாட வாழ்வில் விலங்குகள்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

தேன்: தேன் எங்கிருந்து நமக்குக் கிடைக்கிறது? அது எவ்வாறு உருவாகிறது? என்பது தெரியுமா? நீங்கள் தேன் கூட்டில் பல தேனீக்கள் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். தேனீக்கள் மலர்களிலிருந்து, நெக்டார் என்ற இனிப்புச் சாற்றைச் சேகரித்து, அதைத் தேனாக மாற்றி, அதைத் தேன் கூட்டில் உள்ள தேன் அறைகளில் சேமிக்கின்றன.

வேலைக்காரத் தேனீக்களின் வேலை என்னவென்றால் மலர்களில் உள்ள தேனைச் சேகரிக்கும், மேலும் அவை இளந்தேனீக்களை வளர்க்கும், தேன் கூடு சேதம் அடைந்தால் அதைச் சரி செய்யும், தேன் கூட்டைப் பாதுகாக்கும்.

பட்டு உற்பத்தியில், உலகிலேயே இரண்டாவது இடத்தைப் பெறுவது நம் இந்திய நாடு. தமிழ்நாட்டில் உள்ள காஞ்சிபுரம், திருபுவனம் மற்றும் ஆரணி போன்ற இடங்கள் பட்டு உற்பத்திக்குப் புகழ் பெற்றவை.

விலங்குகளின் இனப்பெருக்கத்தை ஆய்வு செய்தல் மற்றும் அவற்றின் பராமரிப்பு பற்றிப் படிக்கும் பிரிவிற்கு விலங்கு வளர்ப்பு (Animal Husbandary) என்று பெயர்.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. ___________ தினசரி, கால்நடைகளிலிருந்து நமக்குக் கிடைக்கும் முக்கியமான பொருளாகும்.

(அ) முட்டை

(ஆ) பால்

(இ) இவை இரண்டும்

(ஈ) இவை எதுவும் அல்ல

2. முட்டையில் _________ அதிகம் உள்ளது.

(அ) புரதம்

(ஆ) கார்போ ஹைட்ரேட்

(இ) கொழுப்பு

(ஈ) அமிலம்

3. வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளின் எந்த பாகம் ____________ ஆடைகள் தயாரிக்க உதவுகிறது?

(அ) கால்

(ஆ) கை

(இ) உரோமம்

(ஈ) தலை

4. பட்டுப் பூச்சிகளை வளர்ப்பதும், பட்டு இழைகளை உருவாக்குவதும் இவ்வாறு அழைக்கப்படுகிறது _____________

(அ) ஹார்ட்டிகல்சர்

(ஆ) ஃபுளோரிகல்சர்

(இ) அக்ரிகல்சர்

(ஈ) செரிகல்சர்

5. பிரித்தெடுப்பவரின் நோய் என்றழைக்கப்படுவது _____________

(அ) ஆஸ்துமா

(ஆ) ஆந்தராக்ஸ்

(இ) டைஃபாய்டு

(ஈ) காலரா

கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. புரதம் மற்றும் ____________ பாலில் அதிகம் உள்ளது.

2. தேன் கூட்டிலிருந்து ____________ எடுக்கப்படுகிறது.

3. ஆந்தராக்ஸ் நோயை உண்டாக்குவது ____________

4. இயற்கை இழைகளிலேயே வலிமையான இழை _____________

5. அமைதிபட்டு ___________ ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: தவறான வாக்கியத்தை திருத்தி எழுதுக:

1. இயற்கையின் மிகப் பெரிய கொடை விலங்குகள்.

2. குதிரையின் உரோமம் ஓவியம் தீட்டும் தூரிகைகளில் பயன்படுத்தப்படுகிறது.

3. பட்டுப்பூச்சி கம்பளி இழைகளைத் தருகிறது.

4. அஹிம்சைப் பட்டின் மறுபெயர் மல்பெரி பட்டு.

5. ஆந்த்ராக்ஸைக் குணப்படுத்தும் சிறந்த மருந்து பெனிசிலின்.

பொருத்துக:

1. கூட்டுப்புழு – இறைச்சி

2. அமைதிப்பட்டு – கோழிப்பண்ணை

3. பிராய்லர் – பட்டுப்பூச்சி

4. இனிப்பான திரவம் – ஆந்திரப்பிரதேசம்

5. ஆடு – தேன்

ஒப்புமை தருக:

1. நீர்: குழாய்: மின்சாரம்:: ___________

2. தாமிரம்: கடத்தி: கட்டை:: _____________

3. நீளம்: மீட்டர் அளவு: மின்சாரம்: _____________

4. மில்லி ஆம்பியர்: மைக்ரோ அம்பியர்: 10-3 A: _____________

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

1. கூற்று: விலங்குகளின் உரோமங்களிலிருந்து இழைகள் எடுக்கப்படுகின்றன.

காரணம்: ஆடு, யாக், அல்பாகா (உரோம ஆடு) மற்றும் முயல் கம்பளி இழைகளைத் தருகின்றன.

(அ) கூற்றும், காரணமும் சரி

(ஆ) கூற்று சரி, காரணம் தவறு

(இ) கூற்று தவறு, காரணம் சரி

(ஈ) கூற்றும், காரணமும் தவறு

2. கூற்று: பெனிசிலின் மற்றும் சிப்ரோஃப்ளோக்சாசின்

காரணம்: இந்த மருந்துகள் பசு அம்மையைக் குணமாக்கும்.

(அ) கூற்று சரி, காரணம் தவறு

(ஆ) கூற்று தவறு, காரணம் சரி

(இ) கூற்றும் தவறு, காரணமும் தவறு

(ஈ) கூற்றும் சரி, காரணமும் சரி

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)

1. பால் 2. புரதம் 3. உரோமம் 4. செரிகல்சர் 5. ஆந்தராக்ஸ்

கோடிட்ட இடங்களை நிரப்புக: (விடைகள்)

1. கால்சியம் 2. தேன் 3. பேசில்லஸ் ஆந்த்ராசிஸ் 4. பட்டு 5. (1992)

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: தவறானதைத் திருத்தி எழுதுக: (விடைகள்)

1. சரி

2. சரி

3. தவறு

சரியான விடை: பட்டுப்பூச்சி பட்டு இழைகளைத் தருகிறது.

4. தவறு

சரியான விடை: அஹிம்சைப் பட்டின் மறுபெயர் அமைதி பட்டு.

5. சரி

பொருத்துக: (விடைகள்)

1. கூட்டுப் புழு – பட்டுப் பூச்சி

2. அமைதிப் பட்டு – ஆந்திரப் பிரதேசம்

3. பிராய்லர் – கோழிப்பண்ணை

4. இனிப்பான திரவம் – தேன்

5. ஆடு – இறைச்சி

ஒப்புமை தருக: (விடைகள்)

1. கம்பி 2. கடத்தாப் பொருள் 3. ஆம்பியர் 4. 10-6 A

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றைத் தேர்வு செய்க: (விடைகள்)

1. கூற்றும், காரணமும் சரி

2. கூற்று சரி, காரணம் தவறு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!