Book Back QuestionsTnpsc

அன்றாட வாழ்வில் வேதியியல் Book Back Questions 6th Science Lesson 17

6th Science Lesson 17

17] அன்றாட வாழ்வில் வேதியியல்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

வெங்காயத்தை நறுக்கும்போது கண்களில் எரிச்சலுடன் கண்ணீரும் வருவது ஏன்?

வெங்காயத்தினை நறுக்கும் போது நம்மில் பலருக்கு கண்களில் எரிச்சலுடன் கண்ணீர் வருவதற்கான காரணம், அதன் செல்களில் பொதிந்துள்ள புரோப்பேன் தயால் S-ஆக்ஸைடு எனும் வேதிப்பொருள் ஆகும். இது எளிதில் ஆவியாகக் கூடியது (Volatile). வெங்காயத்தை வெட்டும் போது, சில செல்கள் சிதைந்து இந்த வேதிப் பொருள் வெளிப்படும். எளிதில் ஆவியாகி உடனே கண்களைச் சென்றடைந்து, எரிச்சல் ஏற்படுத்தி கண்ணீரைத் தூண்டும். வெங்காயத்தை நசுக்கினால் கூடுதல் செல்கள் உடைந்து, இந்த வேதிப்பொருள் அதிகமாக வெளிப்படும். எனவே, இன்னும் அதிகமாக கண்ணீர் வரும். வெங்காயத்தை நீரில் நனைத்து நறுக்கும்போது நமக்கு எரிச்சல் குறைகின்றது. ஏன்?

மண்புழுக்கள் உயிரி கழிவுகள் அனைத்தையும் உணவாக உண்டு செரித்து வெளியேற்றுகின்றன. இத்தகைய மண், செழிப்பான தாவர வளர்ச்சிக்கு உதவுகிறது. இவ்வாறு மண்புழு விவசாயத்திற்குப் பல்வேறு வகைகளில் உதவுவதால் இது உழவனின் நண்பன் எனவும் அழைக்கப்படுகிறது.

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த வில்லியம் ஆஸ்பிடின் என்பவர் 1824ஆம் ஆண்டு முதன் முதலில் சிமெண்டைக் கண்டுபிடித்தார். இது இங்கிலாந்து நாட்டில் உள்ள போர்ட்லேண்ட் என்னும் இடத்தில் கிடைக்கும் சுண்ணாம்புக் கல்லின் தன்மையை ஒத்திருந்ததால் போர்ட்லேண்ட் சிமெண்ட் என்று அழைக்கப்படுகிறது.

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. சோப்புக்களின் முதன்மை மூலம் ____________ ஆகும்.

(அ) புரதங்கள்

(ஆ) விலங்கு கொழுப்பும் தாவர எண்ணையும்

(இ) மண்

(ஈ) நுரை உருவாக்கி

2. வெப்ப நிகழ்வின் மூலம் கொழுப்பு அல்லது எண்ணையை சோப்பாக மாற்றுவதற்கு _________ கரைசல் பயன்படுகிறது.

(அ) அம்மோனியம் ஹைட்ராக்சைடு

(ஆ) சோடியம் ஹைட்ராக்சைடு

(இ) ஹைட்ரோகுளோரிக் அமிலம்

(ஈ) சோடியம் குளோரைடு

3. சிமெண்டில் ஜிப்சம் சேர்க்கப்படுவதற்கான காரணம் ______________ ஆகும்.

(அ) விரைவாக கெட்டித் தன்மையடைய

(ஆ) கெட்டிப்படும் தன்மையை தாமதப்படுத்த

(இ) கடினமாக்க

(ஈ) கலவையை உருவாக்க

4. பீனால் என்பது ____________

(அ) கார்பாலிக் அமிலம்

(ஆ) அசிட்டிக் அமிலம்

(இ) பென்சோயிக் அமிலம்

(ஈ) ஹைட்ரோகுளோரிக் அமிலம்

5. இயற்கை ஒட்டும் பொருள் _____________ இருந்து தயாரிக்கப்படுகின்றது.

(அ) புரதங்களில்

(ஆ) கொழுப்புகளில்

(இ) ஸ்டார்ச்சில்

(ஈ) வைட்டமின்களில்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. வெங்காயம் நறுக்கும் போது நம் கண்களில் கண்ணீர் வரக் காரணமான வாயு ___________ ஆகும்.

2. சோப்பு தயாரிக்க நீர், தேங்காய் எண்ணெய் மற்றும் _____________ தேவைப்படுகின்றது.

3. உழவனின் நண்பன் என அழைக்கப்படுவது __________ ஆகும்.

4. சுற்றுச் சூழலுக்கு உகந்தவை ______________ உரங்கள் ஆகும்.

5. இயற்கை பசைக்கு உதாரணம் _____________ ஆகும்.

III. சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: தவறான வாக்கியத்தை திருத்தி எழுதுக

1. செறிவூட்டப்பட்ட பீனால் கிருமிநாசினியாக பயன்படுகின்றது.

2. ஜிப்சம் மருத்துவத் துறையில் அதிகளவு பயன்படுகின்றது.

3. ஜிப்சத்தை சூடுபடுத்துவதன் மூலம் பாரிஸ்சாந்து கிடைக்கின்றது.

4. ஒட்டும்பொருள் என்பது இரு பொருள்களை ஒன்றோடொன்று பிரிக்கப் பயன்படுகின்றது.

5. NPK என்பது தாவரங்களுக்கான முதன்மைச் சத்துக்கள் ஆகும்.

IV. பொருத்துக:

1. சோப்பு – அ. C6H5OH

2. சிமெண்ட் – ஆ. CaSO4.2H2O

3. உரங்கள் – இ NaOH

4. ஜிப்சம் – ஈ. RCC

5. பீனால் – உ. NPK

V. ஒப்புமை தருக:

1. யூரியா : கனிம உரம் :: மண்புழு உரம் : __________

2. ____________ : இயற்கை ஒட்டும் பொருள் : : செலோ டேப் : செயற்கை ஒட்டும்பொருள் :

விடைகள்:

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. விலங்கு கொழுப்பும் தாவர எண்ணையும், 2. சோடியம் ஹைட்ராக்சைடு, 3. கெட்டிப்படும் தன்மையை தாமதப்படுத்த, 4. கார்பாலிக் அமிலம், 5. ஸ்டார்ச்சில்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. புரோஃபேன் தயால் ஆக்ஸைடு, 2. சோடியம் ஹைட்ராக்சைடு, 3. மண்புழு, 4. இயற்கை அல்லது கரிம உரங்கள், 5. நீரில் கரைக்கப்பட்ட ஸ்டார்ச்

III. சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: தவறான வாக்கியத்தை திருத்தி எழுதுக

1. குறைந்த அடர்வுடைய, 2. சிமெண்ட் உற்பத்தியில், 3. சரி, 4.ஒட்ட, 5. சரி

IV. பொருத்துக:

1. இ, 2. ஈ, 3. உ, 4. ஆ, 5. அ

V. ஒப்புமை தருக:

1. இயற்கைஉரம், 2. நீரில் கரைக்கப்பட்ட ஸ்டார்ச்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!