Book Back QuestionsTnpsc

அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள் Book Back Questions 9th Science Lesson 14

9th Science Lesson 14

14] அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

அனைத்து அமிலங்களும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஹைட்ரஜன் அணுக்களைக் கொண்டவை. ஆனால் ஹைட்ரஜன் உள்ள அனைத்துப் பொருள்களும் அமிலங்கள் அல்ல. எ.கா. மீத்தேன் (CH4) மற்றும் அம்மோனியா (NH3) ஆகியவை ஹைட்ரஜனைக் கொண்டுள்ளன. ஆனால் இவை நீர்த்த கரைசலில் ஹைட்ரஜன் (H+) அயனிகளைத் தராது.

அமிலங்களுக்கு காரத்துவம் என்ற பதத்தைப் பயன்படுத்துகிறோம். இது அதிலுள்ள இடப்பெயர்ச்சி செய்யக்கூடிய ஹைட்ரஜன் அணுக்களின் எண்ணிக்கையைக் குறிப்பதாகும். எ.கா. அசிட்டிக் அமிலத்தில் (CH3COOH) நான்கு ஹைட்ரஜன் அணுக்கள் இருந்தாலும், ஒரே ஒரு ஹைட்ரஜனை மட்டுமே இடப்பெயர்ச்சி செய்ய முடியும். எனவே இது ஒற்றைக் காரத்துவமுடையது.

வெப்பம் அல்லது கதிர்வீச்சு அல்லது வேதிவினை அல்லது மின்னிறக்கத்தால் அயனிகளைப் பிரித்தெடுக்கும் நிலை அயனியாதல் எனப்படும்.

செறிவு மிகுந்த கனிம அமிலத்தை நீர்க்கும் போது மிகக் கவனமாக செயல்பட வேண்டும். எப்பொழுதுமே அமிலத்தை நீரினுள் சிறிது சிறிதாகச் சேர்த்து கலக்கிக் கொண்டே இருக்க வேண்டும். இவ்வாறு செய்யாமல் செறிவு மிகுந்த அமிலத்தினுள் நீரைச் சேர்த்தால், அதிக அளவு வெப்பம் வெளியேறி, அமிலம் கொள்கலனிலிருந்து வெளியே தெறித்து உடலில் காயத்தினை ஏற்படுத்தும்.

சில உலோகங்கள் அமிலத்துடன் வினைபுரிந்து ஹைட்ரஜனை வெளியேற்றுவதில்லை. எ.கா: Ag, Cu.

அமிலக் கரைசலில் நீரின் பங்கு: அமிலங்கள் நீரில் கரையும் போது மட்டுமே தங்களின் பண்புகளை வெளிப்படுத்தும். நீரில் கரையும் போது ஹைட்ரஜன் (H+) அயனிகளைத் தருவதால், அது அமிலம் என அறியமுடிகிறது. அதே சமயம் கரிமக் கரைப்பானில் அமிலங்கள் அயனியுறுவதில்லை. எ.கா: ஹைட்ரஜன் குளோரைடு நீரில் கரையும்போது H+, Cl அயனிகளைத் தருகிறது. அதே சமயம் எத்தனால் போன்ற கரிமக் கரைப்பானில் அயனியுறாமல் மூலக்கூறுகளாகவே இருக்கும்.

அனைத்து எரிகாரங்களும் காரங்கள் ஆகும். ஆனால் அனைத்துக் காரங்களும் எரிகாரங்கள் அல்ல. எ.கா. NaOH மற்றும் KOH எரிகாரங்கள் ஆகும். Al(OH)3 மற்றும் Zn(OH)3 காரங்கள் ஆகும்.

சில உலோகங்கள் சோடியம் ஹைட்ராக்சைடுடன் வினைபுரிவதில்லை. Cu, Ag, Cr.

அமிலத்துவம் என்பது ஒரு கார மூலக்கூறிலுள்ள இடப்பெயர்ச்சி செய்யக்கூடிய ஹைட்ராக்சில் தொகுதிகளின் எண்ணிக்கையாகும்.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. Zn + 2 HCl 🡪 ZnCl2 + … ↑ (H2, O2, CO2)

2. ஆப்பிளில் உள்ள அமிலம் மாலிக் அமிலம். ஆரஞ்சில் உள்ள அமிலம் __________ (சிட்ரிக் அமிலம், அஸ்கார்பிக் அமிலம்).

3. தாவரங்கள் மற்றும் விலங்குகளில் உள்ளவை கரிம அமிலங்கள்; பாறைகளிலும், கனிமப் பொருள்களிலும் இருக்கும் அமிலம் ____________ (கனிம அமிலம், வலிமை குறைந்த அமிலம்).

4. அமிலமானது நீல லிட்மஸ் தாளை ___________ ஆக மாற்றும் (பச்சை, சிவப்பு, ஆரஞ்சு)

5. உலோகக் கார்பனேட்டுகள், உலோக பை கார்பனேட்டுகள் காரத் தன்மை பெற்றிருந்தாலும், அமிலத்துடன் வினைபுரிந்து உப்பையும், நீரையும் தந்து __________ ஐ வெளியேற்றுகின்றன. (NO2, SO2, CO2)

6. நீரேற்றப்பட்ட காப்பர் சல்பேட்டின் நிறம் ____________ (சிவப்பு, வெள்ளை, நீலம்).

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)

1. H2 2. அஸ்கார்பிக் அமிலம் 3. கனிம அமிலம் 4. சிவப்பு 5. co2 6. நீலம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!