Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Book Back QuestionsTnpsc

அமிலங்கள் மற்றும் காரங்கள் Book Back Questions 8th Science Lesson 14

8th Science Lesson 14

14] அமிலங்கள் மற்றும் காரங்கள்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

ஸ்வீடன் நாட்டு வேதியியலாளர் அர்ஹீனியஸ் அமிலங்கள் பற்றிய ஒரு கொள்கையை முன் வைத்தார். அவரின் கூற்றுப்படி அமிலம் என்பது நீர்க்கரைசலில் H+ அயனிகள் அல்லது H3O+ அயனிகளைத் தரும் வேதிப்பொருளாகும்.

நமது வயிற்றில் சுரக்கும் ஹைட்ரோகுளோரிக் அமிலம் நமது வயிற்றின் உட்புறத்தை அரிப்பதால் நமக்கு பசியுணர்வு ஏற்படுகிறது. ஹைட்ரோகுளாரிக் அமிலத்தின் சுரக்கும் அளவு அதிகரித்தால் வயிற்றுப்புண் தோன்றக்கூடும்.

காப்பர் அல்லது பித்தளைப் பாத்திரங்களின் மீது வெள்ளீயம் என்ற உலோகம் (ஈயம்) பூசப்படுகிறது. அவ்வாறு பூசவில்லையெனில் உணவுப்பொருள்களிலுள்ள கரிம அமிலங்கள் பாத்திரங்களிலுள்ள தாமிரத்துடன் வினைபுரிந்து உணவை நஞ்சாக்கிவிடும். வெள்ளீயம், பாத்திரங்களை அமிலங்களின் செயல்பாட்டிலிருந்து தனித்துப் பிரித்து உணவு நஞ்சாவதைத் தடுக்கின்றது.

ஊறுகாயில் வினிகர் (அசிட்டிக் அமிலம்) அல்லது பென்சாயிக் அமிலம் இருப்பதால் அவை நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் உள்ளன.

சோடியம் கார்பனேட் (Na2Co3) சலவை சோடா எனவும், சோடியம் பைகார்பனேட் (NaHCo3) சமையல் சோடா எனவும், சோடியம் ஹைட்ராக்சைடு (NaoH) காஸ்டிக் சோடா எனவும், பொட்டாசியம் ஹைட்ராக்சைடு (KoH) காஸ்டிக் பொட்டாஷ் எனவும் வணிக ரீதியாக அழைக்கப்படுகின்றன.

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. அமிலங்கள் ___________ சுவையை உடையவை.

அ) புளிப்பு

ஆ) இனிப்பு

இ) கசப்பு

ஈ) உப்பு

2. கீழ்க்காண்பவற்றுள் நீர்க் கரைசலில் மின்சாரத்தைக் கடத்துவது _______________

அ) அமிலம்

ஆ) காரம்

இ) அமிலம் மற்றும் காரம்

ஈ) இவற்றில் ஏதுமில்லை

3. நீல லிட்மஸ் தாள் அமிலக்கரைசலில் __________ நிறமாக மாறுகிறது.

அ) நீல

ஆ) பச்சை

இ) சிவப்பு

ஈ) வெள்ளை

4. காரத்தை நீரில் கரைக்கும்போது அது ___________ அயனிகளைத் தருகிறது.

அ) OH

ஆ) H+

இ) OH

ஈ) H

5. சோடியம் ஹைட்ராக்சைடு ஒரு _____________ ஆகும்.

அ) அமிலம்

ஆ) காரம்

இ) ஆக்சைடு

ஈ) உப்பு

6. சிவப்பு எறும்பின் கொடுக்கில் ___________ அமிலம் உள்ளது.

அ) அசிட்டிக் அமிலம்

ஆ) சல்பியூரிக் அமிலம்

இ) ஆக்ஸாலிக் அமிலம்

ஈ) ஃபார்மிக் அமிலம்

7. மெக்னீசியம் ஹைட்ராக்சைடு _____________ஐ குணப்படுத்தப்ப பயன்படுகிறது.

அ) அமிலத்தன்மை

ஆ) தலைவலி

இ) பற்சிதைவு

ஈ) இவற்றில் ஏதும் இல்லை

8. அமிலமும் காரமும் சேர்ந்து _________ உருவாகிறது.

அ) உப்பு மற்றும் நீர்

ஆ) உப்பு

இ) நீர்

ஈ) இவற்றில் ஏதும் இல்லை

9. நாம் பல் துலக்குவதற்கு பற்பசையைப் பயன்படுத்துகிறோம் ஏனெனில் அது ________ தன்மை கொண்டது.

அ) காரம்

ஆ) அமிலம்

இ) காரம் மற்றும் அமிலம்

ஈ) ஏதுமில்லை

10. மஞ்சள் தூள் நிறங்காட்டியானது கார கரைசலில் மஞ்சள் நிறத்திலிருந்து _____ நிறமாக மாறுகிறது.

அ) நீலம்

ஆ) பச்சை

இ) மஞ்சள்

ஈ) சிவப்பு

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. பென்சாயிக் அமிலம் ________ ஆக பயன்படுகிறது.

2. “புளிப்புச் சுவை” என்பது இலத்தின் மொழியில் _______________ என்ற சொல்லால் வழங்கப்படுகிறது.

3. காரங்கள் _______ சுவையைக் கொண்டவை.

4. கால்சியம் ஆக்சைடின் வேதி வாய்ப்பாடு _________

5. குளவியின் கொடுக்கில் ___________ அமிலம் உள்ளது.

6. உணவு தயாரிக்கப் பயன்படும் மஞ்சளானது _____________ஆக பயன்படுகிறது.

7. செம்பருத்தி பூ நிறங்காட்டி அமிலக்கரைசலில் _____________ நிறத்தைத் தருகிறது.

III. சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: தவறான வாக்கியத்தை திருத்தி எழுதுக

1. பெரும்பாலான அமிலங்கள் நீரில் கரைவதில்லை.

2. அமிலங்கள் கசப்புச் சுவை உடையவை.

3. உலர்ந்த நிலையில் உள்ள காரங்களைத் தொடும்போது அவை வளவளப்புத் தன்மையுடன் காணப்படும்

4. அமிலங்கள் அரிக்கும் தன்மையைக் கொண்டவை.

5. அனைத்துக் காரங்களும் அல்கலிகள் ஆகும்.

6. செம்பருத்திப்பூ சாறு ஒரு இயற்கை நிறங்காட்டி ஆகும்.

விடைகள்:

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. புளிப்பு, 2. அமிலம் மற்றும் காரம், 3. சிவப்பு, 4. ) OH, 5. காரம், 6. ஃபார்மிக் அமிலம், 7. அமிலத்தன்மை, 8. உப்பு மற்றும் நீர், 9. காரம், 10. சிவப்பு

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. உணவு பொருள்கள் கெடாமல் இருக்க, 2. அசிடஸ், 3. கசப்பு, 4. Cao, 5. அல்கலி, 6. நிறங்காட்டி, 7. இளஞ்சிவப்பு

III. சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: தவறான வாக்கியத்தை திருத்தி எழுதுக

1. கரையும், 2. புளிப்பு, 3. திரவ, 4. சரி, 5. நீரில் கரையும் காரங்கள், 6. சரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!