Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Book Back QuestionsTnpsc

அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி Book Back Questions 9th Social Science Lesson 20

9th Social Science Lesson 20

20] அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

பொ. ஆ. மு. 500ம் ஆண்டு ரோம் நாட்டில் முதன் முதலில் “குடியரசு” (Republic) எனும் சொல் வடிவமைக்கப்பட்டது. இச்சொல் “res publics” எனும் லத்தீன் மொழிச் சொல்லிலிருந்து பெறப்பட்டது. இதன் பொருள் “பொது விவகாரம்” (public matter) என்பதாகும்.

இந்திய அரசியலமைப்பு நவம்பர் 26. 1949ல் ஏற்றுக் கொள்ளப்பட்டு, ஜனவரி 26, 1950ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. எனவே, ஜனவரி மாதம் 26ஆம் நாள், 1950ஆம் ஆண்டு இந்தியா குடியரசு நாடாக மலர்ந்தது.

மக்காளட்சி (Democracy) எனும் சொல் ‘DEMOS’ மற்றும் ‘CRATIA’ எனும் இரு கிரேக்க சொற்களிலிருந்து பெறப்பட்டதாகும். டெமாஸ் என்றால் “மக்கள் கிரஸி என்றால் அதிகாரம்” (power of the people) என்று பொருள்படும்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகள்: ராஜ்ய சபா/மேல் அவை/மாநிலங்களவை. லோக் சபா/கீழ் அவை/மக்களவை.

1912-13ஆம் ஆண்டு புது தில்லியில் உள்ள இந்தியாவின் நாடாளுமன்றக் கட்டிடத்தை எட்வின் லுட்டியன்ஸ் மற்றும் ஹெர்பர்ட் பேக்கர் எனும் பிரிட்டிஷ் கட்டிடக் கலைஞர்கள் வடிவமைத்தனர். இக்கட்டிடத்தை 1921ஆம் ஆண்டு கட்டத் தொடங்கி, 1927-ல் முடித்தனர்.

பொது தேர்தல்கள் – 1920: இம்பீரியல் கவுன்சில் எனும் மத்திய சட்டசபைக்கும் மாகாண சட்ட சபைக்கும் தேவையான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 1920ம் ஆண்டு பிரிட்டிஷ் இந்தியாவில் முதல் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இதுவே இந்திய வரலாற்றின் முதல் பொதுத் தேர்தல் ஆகும்.

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. ஒரு நபரோ, அரசரோ அல்லது அரசியோ ஆட்சி செய்யும் முறை

(அ) தனி நபராட்சி

(ஆ) முடியாட்சி

(இ) மக்களாட்சி

(ஈ) குடியரசு

2. முழு அதிகாரத்துடன் கொண்ட ஒரு அரசாங்க முறை

(அ) சிறுகுழு ஆட்சி

(ஆ) மதகுருமார்களின் ஆட்சி

(இ) மக்களாட்சி

(ஈ) தனிநபராட்சி

3. முன்னாள் சோவியத் யூனியன் ————–க்கு எடுத்துக்காட்டு.

(அ) உயர் குடியாட்சி

(ஆ) மதகுருமார்களின் ஆட்சி

(இ) சிறுகுழு ஆட்சி

(ஈ) குடியரசு

4. பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்

(அ) இந்தியா

(ஆ) அமெரிக்க ஐக்கிய நாடுகள்

(இ) பிரான்ஸ்

(ஈ) வாட்டிகன்

5. ஆபிரகாம் லிங்கன் ————— நாட்டின் ஜனாதிபதியாக இருந்தார்.

(அ) அமெரிக்க ஐக்கிய நாடுகள்

(ஆ) இங்கிலாந்து

(இ) சோவியத் ரஷ்யா

(ஈ) இந்தியா

6. குடவோலை முறையை பின்பற்றியவர்கள்

(அ) சேரர்கள்

(ஆ) பாண்டியர்கள்

(இ) சோழர்கள்

(ஈ) களப்பிரர்கள்

7. பழங்காலத்தில் நேரடி மக்களாட்சி முறை பின்பற்றப்பட்டப் பகுதி

(அ) பண்டைய இந்தியாவின் குடியரசுகள்

(ஆ) அமெரிக்கா

(இ) பண்டைய ஏதன்ஸ் நகர அரசுகள்

(ஈ) பிரிட்டன்

8. எந்த மொழியிலிருந்து “டெமாகிராஸி” என்ற வார்த்தைப் பெறப்பட்டது?

(அ) கிரேக்கம்

(ஆ) லத்தீன்

(இ) பாரசீகம்

(ஈ) அரபு

9. மக்களாட்சியில் இறுதி அதிகாரம் பெற்றவர்கள்

(அ) நாடாளுமன்றம்

(ஆ) மக்கள்

(இ) அமைச்சர் அவை

(ஈ) குடியரசு தலைவர்

10. கீழ்க்கண்ட எந்த ஒரு நாடானது அதிபர் அரசாங்க முறையினைக் கொண்டுள்ளது?

(அ) இந்தியா

(ஆ) பிரிட்டன்

(இ) கனடா

(ஈ) அமெரிக்க ஐக்கிய நாடுகள்

11. உலகிலேயே மிகப் பெரிய மக்களாட்சி நாடு

(அ) கனடா

(ஆ) இந்தியா

(இ) அமெரிக்க ஐக்கிய

(ஈ) சீனா நாடுகள்

12. கூற்று (A): நேரடி மக்களாட்சி சுவிட்சர்லாந்தில் நடைமுறையில் உள்ளது.

காரணம் (R): மக்கள் நேரடியாக முடிவெடுப்பதில் பங்கு பெறுகிறார்கள்.

(அ) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது மற்றும் (R), (A)வை விளக்குகிறது.

(ஆ) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது (R), (A)வை விளக்கவில்லை.

(இ) (A) சரியானது மற்றும் (R) தவறானது

(ஈ) (A) தவறானது மற்றும் (R) சரியானது

13. கூற்று (A): இந்தியாவில் நாடாளுமன்ற அரசாங்க முறை பின்பற்றப்படுகிறது.

காரணம் (R): இந்திய நாடாளுமன்றம் இரு சபைகளை உள்ளடக்கியது.

(அ) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது மற்றும் (R), (A)வை விளக்குகிறது.

(ஆ) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது (R), (A)வை விளக்கவில்லை.

(இ) (A) சரியானது மற்றும் (R) தவறானது

(ஈ) (A) தவறானது மற்றும் (R) சரியானது.

14. வாக்குரிமையின் பொருள்

(அ) தேர்ந்தெடுப்பதற்கான உரிமை

(ஆ) ஏழைகளுக்கு வாக்களிக்கும் உரிமை

(இ) வாக்களிக்கும் உரிமை

(ஈ) பணக்காரர்களுக்கு வாக்களிக்க உரிமை

15. அனைவருக்கும் வாக்குரிமை வழங்குவது

(அ) சமூகச் சமத்துவம்

(ஆ) பொருளாதார சமத்துவம்

(இ) அரசியல் சமத்துவம்

(ஈ) சட்ட சமத்துவம்

16. பிரதமரை நியமிப்பவர்/நியமிப்பது

(அ) மக்களவை

(ஆ) மாநிலங்களவை

(இ) சபாநாயகர்

(ஈ) குடியரசுத் தலைவர்

17. குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுபவர்கள்

(அ) லோக் சபைக்கு 12 உறுப்பினர்கள்

(ஆ) ராஜ்ய சபைக்கு 2 உறுப்பினர்கள்

(இ) ராஜ்ய சபைக்கு 12 உறுப்பினர்கள்

(ஈ) ராஜ்ய சபைக்கு 14 உறுப்பினர்கள்

18. இந்தியாவில் சுதந்திரத்திற்குப் பிறகு முதல் பொதுத் தேர்தல் நடைபெற்ற ஆண்டு

(அ) 1948-49

(ஆ) 1951-52

(இ) 1957-58

(ஈ) 1947-48

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. இந்திய அரசியலமைப்பு இறுதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டு —————-

2. இரண்டு வகையான மக்களாட்சி —————- மற்றும் ————— ஆகும்.

3. நேரடி மக்களாட்சிக்கு ஒரு எடுத்துக்காட்டு —————-

4. இந்தியா ————– மக்களாட்சி முறையினைக் கொண்டுள்ள நாடாகும்.

5. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ————— ஆவார்.

6. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் முதல் பொதுத் தேர்தல் நடத்தப்பட்ட ஆண்டு —————-

7. இந்தியாவில் நாடாளுமன்ற கட்டிடத்தை வடிவமைத்தவர்கள் ————- மற்றும் ————– ஆவர்.

III. பொருத்துக:

1. தனிநபராட்சி – அ] 18

2. வாக்குரிமை – ஆ] அர்த்த சாஸ்திரம்

3. சாணக்கியர் – இ] வாடிகன்

4. மதகுருமார்கள் ஆட்சி – ஈ] வடகொரியா

விடைகள்:

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. முடியாட்சி, 2. தனிநபராட்சி, 3. சிறுகுழு ஆட்சி, 4. வாட்டிகன், 5. அமெரிக்க ஐக்கிய நாடுகள், 6. சோழர்கள், 7. பண்டைய ஏதன்ஸ் நகர அரசுகள், 8. கிரேக்கம், 9. மக்கள், 10. அமெரிக்க ஐக்கிய நாடுகள், 11. இந்தியா, 12. (A) மற்றும் (R) இரண்டும் சரியானது மற்றும் (R), (A)வை விளக்குகிறது, 13. (A) மற்றும் (R) இரண்டும் சரியானது மற்றும் (R), (A)வை விளக்குகிறது, 14. வாக்களிக்கும் உரிமை, 15. சமூகச் சமத்துவம், 16. குடியரசுத் தலைவர், 17. ராஜ்ய சபைக்கு 12 உறுப்பினர்கள், 18. 1951-52

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. 1. 1949, 2. மறைமுக, 3. ஸ்விட்சர்லாந்து, 4. மறைமுக, 5. ஜவஹர்லால் நேரு, 6. 1920, 7. ஹெர்மாட் பேக்கர், எட்வின் லூட்டியன்ஸ்

III. பொருத்துக:

1. ஈ, 2. அ, 3. ஆ, 4. இ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!