Tnpsc

அரசியல் அறிவியலின் அடிப்படைக்கருத்தாக்கங்கள் பகுதி – I Online Test 11th Political Science Lesson 3 Questions in Tamil

அரசியல் அறிவியலின் அடிப்படைக்கருத்தாக்கங்கள் பகுதி - I Online Test 11th Political Science Lesson 3 Q

Congratulations - you have completed அரசியல் அறிவியலின் அடிப்படைக்கருத்தாக்கங்கள் பகுதி - I Online Test 11th Political Science Lesson 3 Q. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  1. ஒரு நாடு தன்னிச்சையாக, தன் மக்களை கட்டுப்படுத்தி பாதுகாக்கும்போது இறையாண்மையைப் பெற்றிருப்பதாக கருதப்படுகிறது.
  2. இறையாண்மையோடு செயல்படும்போது, அந்நாட்டினை அதிகாரம் வாய்ந்ததாகவும், சுயசார்புள்ளதாகவும் ஏனைய நாடுகள் அங்கீகரிக்கின்றன.
A
(i) சரி
B
(ii) சரி
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 1 Explanation: 
விளக்கம்: ஒரு நாடு தன்னிச்சையாக, தன் மக்களை கட்டுப்படுத்தி பாதுகாக்கும்போது இறையாண்மையைப் பெற்றிருப்பதாக கருதப்படுகிறது. அவ்வாறு செயல்படும்போது, அந்நாட்டினை அதிகாரம் வாய்ந்ததாகவும், சுயசார்புள்ளதாகவும் ஏனைய நாடுகள் அங்கீகரிக்கின்றன.
Question 2
இடைக்காலத்தில் இறையாண்மையை “சம்மா பொடெஸ்டாஸ்”என்றும் “ ப்ளெனிடீயூட்பொடெஸ்டாஸ் ” என்றும் வார்த்தைகளை பயன்படுத்தி அழைத்தவர்கள்?
A
ஆங்கிலேயர்
B
ஜெர்மானியர்
C
பிரெஞ்சுக்காரர்
D
ரோமானியர்
Question 2 Explanation: 
விளக்கம்:ரோமானிய நீதிபதிகளும், மக்களும் இடைக்காலத்தில் இறையாண்மையை “சம்மா பொடெஸ்டாஸ்”(Summa Potestas): என்றும் “ ப்ளெனிடீயூட்பொடெஸ்டாஸ் ”( Plenitude Potestas) என்றும் வார்த்தைகளை பயன்படுத்தி, அரசின் மேலான தன்மையை பெயரிட்டு அழைத்தனர்.
Question 3
“இறையாண்மை” என்ற சொல் எந்த  நூலில் முதன் முதலாகப் பயன்படுத்தப்பட்டது?
A
குடியரசு
B
சுதந்திரம்
C
மக்களாட்சி
D
அரசியலமைப்பு
Question 3 Explanation: 
விளக்கம்: அரசியல் அறிவியலில் “இறையாண்மை” என்ற சொல் போடின் என்ற அறிஞர் எழுதி 1576-ல் வெளியான குடியரசு என்ற நூலில் முதன் முதலாகப் பயன்படுத்தப்பட்டது. ஒரு நாட்டின் உறுதித்தன்மை, அந்நாட்டின் இறையாண்மையை அடிப்படையாக கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது.
Question 4
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  1. அரசமைப்பு என்பது அரசு தொடர்பான சட்டங்களையும், விதிகளையும் எடுத்துரைக்கிறது.
  2. அரசமைப்பு என்பது அரசின் இறையாண்மையை பிரதிநிதித்துவபடுத்துவதாகும்.
A
(i) சரி
B
(ii) சரி
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 4 Explanation: 
விளக்கம்: இறையாண்மை என்ற கருத்தாக்கம் அரசின் மேலான தன்மையை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. அரசமைப்பு என்பது அரசு தொடர்பான சட்டங்களையும், விதிகளையும் எடுத்துரைக்கிறது. மேலும் அரசமைப்பு என்பது அரசின் இறையாண்மையை பிரதிநிதித்துவபடுத்துவதாகும்.
Question 5
"இறையாண்மை என்றால், அரசு எந்த துறை சார்ந்த சட்டத்தினை உருவாக்கினாலும் அது அரசமைப்பின் வரையறைகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்" என்று கூறுவது எது?
A
அடிப்படைக்கடமைகள்
B
அடிப்படை உரிமைகள்
C
முகவுரை
D
அரசு நெறியுறுத்தும் கோட்பாடுகள்
Question 5 Explanation: 
விளக்கம்: இந்திய அரசமைப்பின் முகவுரையில் கூறப்பட்டதுபோல, இறையாண்மை என்றால், அரசு எந்த துறை சார்ந்த சட்டத்தினை உருவாக்கினாலும் அது அரசமைப்பின் வரையறைகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.
Question 6
"இறையாண்மை என்பது ஒட்டுமொத்த, மற்றும் தடையில்லாத அரசின் அதிகாரமாகும். மேலும் அதீத கட்டளைத்தன்மை உடையதாகவும் காணப்படுகிறது" என்று கூறியவர்?
A
லாஸ்கி
B
ஜோர்டான்
C
பிராங்க்ளின்
D
ஜீன் போடின்
Question 6 Explanation: 
விளக்கம்: “இறையாண்மை என்பது ஒட்டுமொத்த, மற்றும் தடையில்லாத அரசின் அதிகாரமாகும். மேலும் அதீத கட்டளைத்தன்மை உடையதாகவும் காணப்படுகிறது“. - ஜீன் போடின் (Jean Bodin)
Question 7
இறையாண்மையின் முக்கிய பண்பாக  திகழ்வது எது?
A
மாற்றித்தர இயலாதது
B
நிரந்தரத்தன்மை
C
அனைத்தையும் முழுமையாக உள்ளடக்கியது
D
பிரத்தியோகமானது
Question 7 Explanation: 
விளக்கம்: இறையாண்மையின் முக்கிய பண்பாக அதன் நிரந்தரத்தன்மை திகழ்கிறது. அரசு இயங்கும் வரை இறையாண்மை நீடிக்கிறது. மன்னர் இறப்பதாலும், அரசாங்கம் செயல் இழந்து போவதாலும் இறையாண்மை பாதிக்கப்படுவதில்லை. இதன் எதிரொலியாகவே, “மன்னர் இறந்துவிட்டார், ஆனாலும் அரசபீடம் நீண்டு வாழ்க” என்று இங்கிலாந்து குடிமக்கள் கூறுகின்றார்கள்.
Question 8
கீழ்க்கண்ட கூற்றுகளில் தவறான விடையைத் தேர்ந்தெடு
  1. ஒர் சுதந்திர அரசில், இரண்டு இறையாண்மைகள் இயங்கும்.
  2. ஒவ்வொரு தனிமனிதனும் மற்றும் தனிமனிதர்கள் அங்கம் வகிக்கக்கூடிய குழுமமும் அரசின் இறையாண்மைக்கு உட்பட்டதாகும்.
A
(i) சரி
B
(ii) சரி
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 8 Explanation: 
விளக்கம்: பிரத்தியோகமானது (Exclusiveness): ஒர் சுதந்திர அரசில், இரண்டு இறையாண்மைகள் இயங்காது, அப்படி இருக்குமேயானால் அரசின் ஒற்றுமையானது சீர்குலைந்துவிடும். அனைத்தையும் முழுமையாக உள்ளடக்கியது (All comprehensiveness): ஒவ்வொரு தனிமனிதனும் மற்றும் தனிமனிதர்கள் அங்கம் வகிக்கக்கூடிய குழுமமும் அரசின் இறையாண்மைக்கு உட்பட்டதாகும். குழுமங்கள் அல்லது சங்கங்கள் அதிக வலிமை வாய்ந்ததாக இருந்தாலும், பணம் படைத்ததாக இயங்கினாலும் இறையாண்மையின் அதிகாரத்தை தடுக்கவோ அல்லது அதற்கு கீழ்படியாமலோ இருக்க முடியாது.
Question 9
அரசின் உயிர் மற்றும் ஆன்மாவாக விளங்குவது எது?
A
சமத்துவம்
B
மக்களாட்சி
C
இறையாண்மை
D
அரசியலமைப்பு
Question 9 Explanation: 
விளக்கம்: மாற்றித்தர இயலாதது (Inalienability) இறையாண்மை என்பது அரசின் உயிர் மற்றும் ஆன்மாவாக விளங்குகிறது. இது அரசை அழிக்காமல் இறையாண்மையை மாற்றித்தர முடியாததாக விளங்குகிறது.
Question 10
இறையாண்மையின் தனித்தன்மை எதில் ஒன்றியுள்ளது?
A
சமத்துவம்
B
மக்களாட்சி
C
ஒற்றுமை
D
அரசியலமைப்பு
Question 10 Explanation: 
விளக்கம்: ஒற்றுமை மற்றும் எக்காலத்திலும் நீடித்திருக்கும் தன்மை (Unity and Everlasting) இறையாண்மையின் தனித்தன்மை அதன் ஒற்றுமையில் ஒன்றியுள்ளது. இறையாண்மை என்பது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் செயல்படுவதில்லை. மாறாக அது அரசு இயங்கும் வரை நீடித்திருக்கும் அழியாததன்மை கொண்டதாகும்.
Question 11
இறையாண்மையின் உயிரோட்டமாக விளங்குவது எது?
A
மாற்றித்தர இயலாதது
B
நிரந்தரத்தன்மை
C
அனைத்தையும் முழுமையாக உள்ளடக்கியது
D
பிரிக்கமுடியாதது
Question 11 Explanation: 
விளக்கம்: பிரிக்கமுடியாதது (Indivisibility) இறையாண்மை என்பது பிரிக்க முடியாத தன்மையைக் கொண்டதாகும். இத்தன்மையே இறையாண்மையின் உயிரோட்டமாக விளங்குகிறது.
Question 12
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  1. இறையாண்மை என்பது நிபந்தனையற்றதாகவும், அளவிட முடியாததுமாக விளங்குகிறது.
  2. இறையாண்மை தனது அதிகாரத்தினை சுய உரிமையினை மையமாகக் கொண்டு பெற்றிருக்கிறதே தவிர, யாருடைய தயவிலும் அல்ல.
A
(i) சரி
B
(ii) சரி
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 12 Explanation: 
விளக்கம்: முழுமைத்தன்மை (Absoluteness) இறையாண்மை என்பது நிபந்தனையற்றதாகவும், அளவிட முடியாததுமாக விளங்குகிறது. மேலும் இது கீழ்பணிதலுக்கு அப்பாற்பட்டது. தான் விரும்பிய எதையும் சாதிக்க கூடியதாக விளங்குகிறது. சுயமானத்தன்மை (Originality): இறையாண்மை தனது அதிகாரத்தினை சுய உரிமையினை மையமாகக் கொண்டு பெற்றிருக்கிறதே தவிர, யாருடைய தயவிலும் அல்ல.
Question 13
இறையாண்மை எத்தனை அம்சங்களைக் கொண்டுள்ளது?
A
மூன்று
B
நான்கு
C
ஐந்து
D
இரண்டு
Question 13 Explanation: 
விளக்கம்: (அ) உட்புற இறையாண்மை (Internal Sovereignty) (ஆ) வெளிப்புற இறையாண்மை (External Sovereignty)
Question 14
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  1. உட்புற இறையாண்மை குறித்த கீழ்க்கண்ட கூற்றுகளில் தவறான விடையைத் தேர்ந்தெடு
  2. ஒவ்வொரு சுதந்திர அரசிலும் ஓர் மக்கள் சபையானது கட்டளையிடுவதற்கும், கீழ்பணிதலை செயலாற்றுவதற்குமான முழு சட்ட அதிகாரத்தையும் பெற்று இருப்பதில்லை.
  3. ஓர் அரசுக்கு உட்பட்டு வாழும் அனைத்து தனிமனிதர்கள் அல்லது அவர்கள் சார்ந்த அனைத்து சங்கங்களையும் கட்டுப்படுத்துவதற்குரிய முழு அதிகாரத்தையும் பெற்றுள்ளது.
A
(i) சரி
B
(ii) சரி
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 14 Explanation: 
விளக்கம்: உட்புற இறையாண்மை (Internal Sovereignty) ஒவ்வொரு சுதந்திர அரசிலும் ஓர் மக்கள் சபையானது கட்டளையிடுவதற்கும், கீழ்பணிதலை செயலாற்றுவதற்குமான முழு சட்ட அதிகாரத்தையும் பெற்று காணப்படுகிறது. இவ்வகையான இறையாண்மை, ஓர் அரசுக்கு உட்பட்டு வாழும் அனைத்து தனிமனிதர்கள் அல்லது அவர்கள் சார்ந்த அனைத்து சங்கங்களையும் கட்டுப்படுத்துவதற்குரிய முழு அதிகாரத்தையும் பெற்றுள்ளது.
Question 15
"ஓர் மரமானது தான் முளை விடுவதை மாற்றித்தர முடியாததைப் போன்று இறையாண்மையையும் மாற்றித்தர இயலாது" என்று கூறியவர் யார்?
A
லாஸ்கி
B
லைபர்
C
ரூஸ்வெல்ட்
D
ஆஸ்டின்
Question 15 Explanation: 
விளக்கம்: ஓர் மரமானது தான் முளை விடுவதை மாற்றித்தர முடியாததைப் போன்று இறையாண்மையையும் மாற்றித்தர இயலாது. இது ஓர் மனிதன் தன்னை அழித்துக் கொள்ளாமல் தனது உயிர் அல்லது ஆளுமையை மாற்றித் தர இயலாததைப் போன்றதாகும். -லைபர் (Lieber)
Question 16
எளிமையாக கூறவேண்டுமெனில் வெளிப்புற இறையாண்மை என்பது  எது?
A
தேசிய விடுதலை
B
மக்களாட்சி
C
குடியரசு
D
அரசியலமைப்பு
Question 16 Explanation: 
விளக்கம்: வெளிப்புற இறையாண்மை (External Sovereignty) எளிமையாக கூறவேண்டுமெனில் வெளிப்புற இறையாண்மை என்பது தேசிய விடுதலையாகும். அனைத்து நாடுகளும் தங்கள் வெளியுறவு கொள்கையை நிர்ணயிப்பதற்கும், அதிகாரம் படைத்த கூட்டணியோடு இணைவதற்கும் முழு அதிகாரம் பெற்று செயல்படுகின்றன. ஒவ்வொரு அரசும் ஏனைய அரசுகளை சாராமல் சுதந்திரமாக இயங்குவது வெளிப்புற இறையாண்மை எனப்படும்.
Question 17
பெரும்பான்மை வாக்காளர்களின் அதிகாரம் எனப்படுவது எது?
A
நடைமுறை இறையாண்மை
B
சட்டப்படியான இறையாண்மை
C
மக்கள் இறையாண்மை
D
வெளிப்புற இறையாண்மை
Question 17 Explanation: 
விளக்கம்: மக்கள் இறையாண்மை எனப்படுவது பெரும்பான்மை வாக்காளர்களின் அதிகாரமாகும். மேலும் இவ்வகை அதிகாரமானது, தோராயமாக, உலகளாவிய வாக்குரிமை செயல்படக்கூடிய நாட்டில் வாக்காளர்கள் பல்வேறு நிறுவப்பட்ட வழிமுறைகளின் வாயிலாக வெளிப்படுத்தும் விருப்பமாகும். - முனைவர் கார்னர்.
Question 18
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  1. நடைமுறை இறையாண்மை உண்மையாக நடைமுறையில் இல்லாது, சட்டபூர்வமாக மட்டுமே காணப்படுவதாகும்.
  2. சட்டப்படியான இறையாண்மை சட்ட பூர்வமாக இல்லாது, உண்மையான அதிகாரத்தை பெற்று சட்டத்தை நிறைவேற்றும் இறையாண்மையாகும்.
A
(i) சரி
B
(ii) சரி
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 18 Explanation: 
விளக்கம்: இறையாண்மையின் வகைகள் “நடைமுறை மற்றும் சட்டப்படியான இறையாண்மை” . நடைமுறை இறையாண்மை (De-facto sovereignty): இவ்வகை இறையாண்மை சட்ட பூர்வமாக இல்லாது, உண்மையான அதிகாரத்தை பெற்று சட்டத்தை நிறைவேற்றும் இறையாண்மையாகும். சட்டப்படியான இறையாண்மை (De-jure sovereignty) இவ்வகை இறையாண்மை உண்மையாக நடைமுறையில் இல்லாது, சட்டபூர்வமாக மட்டுமே காணப்படுவதாகும்.
Question 19
கீழ்க்கண்டவற்றுள் இறையாண்மையின் வகை/கள்  எது/எவை?
A
அரசியல் இறையாண்மை
B
சட்ட இறையாண்மை
C
பெயரளவு இறையாண்மை
D
மேற்கண்ட அனைத்தும்
Question 20
ஒட்டுமொத்த மக்களையும் குறிக்கும் இறையாண்மை எது?
A
அரசியல் இறையாண்மை
B
சட்ட இறையாண்மை
C
பெயரளவு இறையாண்மை
D
மேற்கண்ட அனைத்தும்
Question 20 Explanation: 
விளக்கம்: பிரநிதித்துவ மக்களாட்சியில் அரசியல் இறையாண்மை என்பது ஒட்டுமொத்த மக்களையும் குறிப்பதாகும். அதாவது வாக்காளர் முறைமை மற்றும் பொதுக் கருத்தாகும். அரசியல் இறையாண்மை என்பது பொது மக்களைக் கட்டுப்படுத்தக் கூடிய அதிகாரம் பெற்ற வர்க்கத்தை குறிப்பதாகும்.
Question 21
பொது மக்களை மேலா தன்மையுடையவர்களாக பாவிக்கும் இறையாண்மை எது?
A
அரசியல் இறையாண்மை
B
சட்ட இறையாண்மை
C
பெயரளவு இறையாண்மை
D
மக்கள் இறையாண்மை
Question 21 Explanation: 
விளக்கம்: மக்கள் இறையாண்மை என்பது பொது மக்களை மேலான தன்மையுடையவர்களாக பாவிக்கின்றது. ஆதிகாலங்களில் மக்கள் இறையாண்மையானது, முடியாட்சியின் ஏதேச்சதிகாரத்தை எதிர்க்கும் ஆயுதமாக விளங்கியது.
Question 22
கீழ்க்கண்டவற்றுள் பெயரளவு மற்றும் உண்மையான இறையாண்மை எது?
A
முடியாட்சி
B
அரசின் அதிகாரத்துவம்
C
பிரநிதித்துவ மக்களாட்சி
D
மக்களை மேலான தன்மையுடையவர்களாக பாவிக்கின்றத
Question 22 Explanation: 
விளக்கம்: ஆதிகாலத்தில் பல அரசுகளில் முடியாட்சியே இருந்தது. மன்னர்கள் உண்மையான இறையாண்மையைப் பெற்று ஆண்டு வந்தனர். மன்னர் பெயரளவிலும், மந்திரிசபை உண்மையான இறையாண்மையையும் பெற்றிருந்தது.
Question 23
பிரெஞ்சு புரட்சி எந்த ஆண்டு நடைபெற்றது?
A
1763
B
1786
C
1789
D
1779
Question 23 Explanation: 
விளக்கம்: பிரெஞ்சு புரட்சி (1789) முடியாட்சியை முடிவுக்கு கொண்டு வந்த ஒரு வரலாற்று நிகழ்வாகும். இந்த புரட்சி அச்சூழ்நிலையை மாற்றியமைத்தது.
Question 24
எப்போதும் உறுதியாகவும், ஆற்றல் படைத்ததாகவும்  இருக்கும் இறையாண்மை எது?
A
அரசியல் இறையாண்மை
B
சட்ட இறையாண்மை
C
பெயரளவு இறையாண்மை
D
மக்கள் இறையாண்மை
Question 24 Explanation: 
விளக்கம்: சட்ட இறையாண்மை எப்போதும் உறுதியாகவும், ஆற்றல் படைத்ததாகவும் இருப்பதுடன் இறையாண்மையாளரின் அதிகாரம் முழுமையாகவும் மேலானதாகவும் விளங்குகிறது.
Question 25
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  1. இயக்குனரகமுறை ஆட்சியமைப்பினை தூக்கி எறிந்த பின்னர், நெப்போலியன் உண்மையான நடைமுறை இறையாண்மையை (De-facto) பெற்று விளங்கினார்.
  2. ஸ்பெயினில், சட்ட இறையாண்மையை வேரோடு கலைத்து, ப்ராங்கோ நடைமுறை இறையாண்மையை (Defacto) கையகப்படுத்தினார்.
A
(i) சரி
B
(ii) சரி
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 25 Explanation: 
விளக்கம்: இயக்குனரகமுறை ஆட்சியமைப்பினை தூக்கி எறிந்த பின்னர், நெப்போலியன் உண்மையான நடைமுறை இறையாண்மையை (De-facto) பெற்று விளங்கினார். ஸ்பெயினில், சட்ட இறையாண்மையை வேரோடு கலைத்து, ப்ராங்கோ நடைமுறை இறையாண்மையை (Defacto) கையகப்படுத்தினார்.
Question 26
இத்தாலியில் கறுப்புச்சட்டை புரட்சி எப்போது நடைபெற்றது?
A
அக்டோபர் 28, 1922
B
ஜனவரி 28, 1928
C
நவம்பர் 28, 1912
D
அக்டோபர் 28, 1914
Question 26 Explanation: 
விளக்கம்: அக்டோபர் 28, 1922-இல் நடந்த கறுப்புச்சட்டை புரட்சிக்கு பின்னர், முசோலினி சட்டப்பூர்வமான பிரதம அமைச்சராக அதிகாரம் பெற்றார். இவர் நாடாளுமன்றத்தை கைப்பற்றி அதன் மூலம் இத்தாலியை ஆட்சி செய்தார். நாடாளுமன்றம் சட்ட இறையாண்மையையும், முசோலினி நடைமுறை இறையாண்மையையும் (De-facto) பெற்று ஆட்சி அரங்கேறியது. மேலும் ஹிட்லரும், ஜெர்மனியில் இச்செயல்பாட்டையே பின்பற்றினார். இவர் சட்ட இறையாண்மையை கையகப்படுத்தியதுடன் மட்டுமல்லாது, நடைமுறை இறையாண்மையைப் (De-facto) பெற்று ஆட்சி செய்தார்.
Question 27
பாகிஸ்தானில் "ராணுவத்தின் மூலம் ஆட்சியைப் பிடித்து  நடைமுறை இறையாண்மையை பெற்றவர்?
A
ஐயூப்
B
இமானுல்லா கான்
C
ஜின்னா
D
நவாஸ் ஷரீப்
Question 27 Explanation: 
விளக்கம்: மூன்று தசாப்தங்களாக ஸ்டாலின் ஐக்கிய சோவியத் சமதர்மக் குடியரசின், உண்மையான இறையாண்மையை பெற்று ஆட்சி செய்தார். பாகிஸ்தானில், ‘ஐயூப்’, ராணுவத்தின் மூலம் ஆட்சியைப் பிடித்து (De-facto) நடைமுறை இறையாண்மையை பெற்றார். 1977-இல் ஜியா-உல்-ஹக், பூட்டோவின் ஆட்சியைக் கவிழ்த்து நடைமுறை இறையாண்மையை (De-facto) முதலிலும், பின்னர் சட்டப்படியான இறையாண்மையையும் (De-jure) பெற்று ஆட்சி செய்தார்.
Question 28
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  1. சோவியத் நாட்டில் பொதுவுடைமை அரசாங்கத்தின் மூலம் நடைமுறை அரசாங்கம் (De-facto) போல்ஷிவிக் புரட்சிக்கு பின்னர் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது.
  2. 1939-ஆம் ஆண்டு போல்ஷிவிக் புரட்சிக்குப் பிறகு நாளடைவில் மாற்றம் அடைந்து சட்டப்படியான அரசாங்கமாக (De-jure) ஆனது.
A
(i) சரி
B
(ii) சரி
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 28 Explanation: 
விளக்கம்:சோவியத் நாட்டில் பொதுவுடைமை அரசாங்கத்தின் மூலம் நடைமுறை அரசாங்கம் (De-facto) போல்ஷிவிக் புரட்சிக்கு பின்னர் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. 1917-ஆம் ஆண்டு போல்ஷிவிக் புரட்சிக்குப் பிறகு நாளடைவில் மாற்றம் அடைந்து சட்டப்படியான அரசாங்கமாக (De-jure) ஆனது.
Question 29
யாருடைய  படைப்புகளின் மூலமாக பன்மைவாத கோட்பாடு பிரபலமடைந்தது?
A
லாஸ்கி
B
ஆஸ்டின்
C
கில் கிரிஸ்ட்
D
ஓட்டோ வீ.கீர்க்
Question 29 Explanation: 
விளக்கம்: பன்மைவாதம் என்றால் என்ன? பன்மைவாதம் என்பது ஒருமைவாத இறையாண்மைக் கோட்பாட்டை எதிர்த்து உருவான வலிமை வாய்ந்த இயக்கமாகும். இவ்வகை இறையாண்மை அரசினுடைய மேலான மற்றும் அளவில்லாத அதிகாரத்திற்கு வகை செய்கின்றது. ஓட்டோ வீ.கீர்க் (Otto V. Gierke) அவர்களின் படைப்புகளின் மூலமாக பன்மைவாத கோட்பாடு பிரபலமடைந்தது. சமூகம் அரசைப்போல பல கூட்டமைப்புகளை பெற்று விளங்குகிறது.
Question 30
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  1. அரசு என்பது சமூகத்தின் பல்வேறு கூட்டமைப்புகளில் ஒன்றாகும்.
  2. அரசு இறையாண்மையை குறிப்பிட்ட சமுதாயத்திற்கென வகை செய்ய முடியாது.
A
(i) சரி
B
(ii) சரி
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 30 Explanation: 
விளக்கம்: அரசு என்பது சமூகத்தின் பல்வேறு கூட்டமைப்புகளில் ஒன்றாகும். அரசு இறையாண்மையை குறிப்பிட்ட சமுதாயத்திற்கென வகை செய்ய முடியாது. இதன் வெளிப்பாடாக, அரசிற்கு இறையாண்மை அதிகாரம் இயல்பாகவே இல்லாமல் காணப்படுகிறது, என்று பன்மைவாதத்தினர் சவால்விடுகின்றனர். அரசிற்கு முன்னரே, பல சமூக, அரசியல், பண்பாடு மற்றும் பொருளாதாரம் சார்ந்த அமைப்புகள், சமுதாயத்தில் அங்கம் வகித்து இருக்கின்றன. உதாரணத்திற்கு குடும்பம் மற்றும் தேவாலயங்கள் அரசு தோன்றுவதற்கு முன்பே செயல்பட்டு வந்தன.
Question 31
பின்வருபவர்களுள் பன்மைவாதக் கோட்பாட்டின் சிந்தனையாளர்/கள் யார்/யாவர்?
A
ஹெரால்ட் ஜெ. லாஸ்கி
B
ஜெ.என்.பிக்கீஸ்
C
எர்னஸ்ட் பார்க்கர்
D
மேற்கண்ட அனைவரும்
Question 31 Explanation: 
விளக்கம்:பன்மைவாதக் கோட்பாட்டின் சிந்தனையாளர்கள் : ஹெரால்ட் ஜெ. லாஸ்கி (Herold J. Laski) ஜெ.என்.பிக்கீஸ் (J.N. Figgis) எர்னஸ்ட் பார்க்கர் (Ernest Barker) ஜி.டி.ஹெச்.கோல் (G.D.H.Cole) மேக் ஐவர் (Mac Iver)
Question 32
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  1. பன்மைவாதக் கோட்பாட்டின் தோற்றம் மக்களாட்சியில் ஆட்சியாளர்களின் அதிகாரம் வரையறைக்கு உட்பட்டது ஆகும்.
  2. அமைச்சரவை அதிகாரம் வாய்ந்ததாக செயல்பட்டாலும், அரசே மேலானதாகவும், இறையாண்மை மிக்கதாகவும் விளங்குகிறது.
A
(i) சரி
B
(ii) சரி
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 32 Explanation: 
விளக்கம்: பன்மைவாதக் கோட்பாட்டின் தோற்றம் மக்களாட்சியில் ஆட்சியாளர்களின் அதிகாரம் வரையறைக்கு உட்பட்டது ஆகும். அமைச்சரவை அதிகாரம் வாய்ந்ததாக செயல்பட்டாலும், அரசே மேலானதாகவும், இறையாண்மை மிக்கதாகவும் விளங்குகிறது. மக்கள் நலஅரசுகளின் தோற்றத்திற்கு பிறகு, அரசின் செயல்பாடுகள் தனி மனிதர்களின் வாழ்வில் அனைத்து பரிமாணங்களிலும் வியாபித்து இருக்கிறது.
Question 33
பின்வரும் எதன் விளைவாகப் பன்மைவாதம் மலர்ந்தது?
A
புரட்சி
B
மக்களாட்சி
C
குடியரசு
D
சமதர்மம்
Question 33 Explanation: 
விளக்கம்: இவ்வாறான மக்கள் நல அரசானது, மக்களின் தேவைகளை நிறைவேற்றாத போது, புரட்சிகளையும், எதிர்நடவடிக்கைகளையும் சந்தித்துஇருக்கிறது.இப்படிப்பட்ட எதிர்வினை என்பது மேலான மற்றும் இறையாண்மை மிக்க அரசுக்கு எதிராகத் தோன்றியதால் புரட்சி ஏற்பட்டு அதன் விளைவாகப் பன்மைவாதம் மலர்ந்தது.
Question 34
பன்மைவாதம் குறித்த கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  1. பன்மைவாதம் என்பது, கூட்டமைப்புகளின் முக்கியத்துவத்தையும், அதன் சுயாட்சி கோரிக்கையையும் தாங்கி நிற்கிறது.
  2. மக்களாட்சி மலர வேண்டுமெனில், இறையாண்மை மிக்க அரசானது சட்ட அதிகாரத்துவத்திற்கு கட்டுப்படாததாக இருத்தல் அவசியமாகும்.
A
(i) சரி
B
(ii) சரி
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 34 Explanation: 
விளக்கம்: பன்மைவாதம் முக்கியமானதா? பன்மைவாதம் என்பது, கூட்டமைப்புகளின் முக்கியத்துவத்தையும், அதன் சுயாட்சி கோரிக்கையையும் தாங்கி நிற்கிறது. *மக்களாட்சி மலர வேண்டுமெனில், இறையாண்மை மிக்க அரசானது சட்ட அதிகாரத்துவத்திற்கு கட்டுப்படாததாக இருத்தல் அவசியமாகும். இறையாண்மையில் ஏற்படும் பிரிவினைகள் என்பது அதன் அழிவுக்கு வழிவகுப்பது உறுதியாகிறது. இறையாண்மை இல்லாத தருணத்தில் சமுதாயத்தில் அமைப்பெதிர்வாத சூழலே இருக்கும்.
Question 35
பின்வருவனவற்றுள்  பன்மைவாதத்தின் மீதான குற்றச்சாட்டுகள் யாவை?
  1. பன்மைவாத நம்பிக்கைக்கு ஒவ்வாததாக அரசே சட்டங்களை இயற்றுகிறது.
  2. கூட்டமைப்புகளின் எண்ணிக்கை மிகுதியாக அதிகரிக்கும் பட்சத்தில், மக்களை பாதுகாப்பதற்கு அரசின் தேவை இன்றியமையாததாகிறது.
A
(i) சரி
B
(ii) சரி
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 35 Explanation: 
விளக்கம்: பன்மைவாதத்தின் மீதான குற்றச்சாட்டுகள் யாவை? இறையாண்மை மிக்க அரசு ஒற்றுமையை ஏற்படுத்தி, சமுதாயத்தில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் அனைத்து கூட்டமைப்புகளையும் ஒன்றுபடுத்தி ஒழுங்குமுறைப்படுத்துகிறது. பன்மைவாத நம்பிக்கைக்கு ஒவ்வாததாக அரசே சட்டங்களை இயற்றுகிறது. கூட்டமைப்புகளின் எண்ணிக்கை மிகுதியாக அதிகரிக்கும் பட்சத்தில், மக்களை பாதுகாப்பதற்கு அரசின் தேவை இன்றியமையாததாகிறது.
Question 36
இறையாண்மை தொடர்பான விளக்கங்கள் எங்கு  காணப்படுகிறது?
A
அரசியலமைப்பு
B
உச்ச நீதிமன்ற தீர்ப்புகள்
C
அரசு இயற்றும் சட்டங்கள்
D
அரசின் கொள்கை முடிவுகள்
Question 36 Explanation: 
விளக்கம்:இந்திய அரசமைப்பின் முகவுரையின் படி இந்தியா ஒரு “இறையாண்மை, சமதர்மம், மதச்சார்பின்மை, மக்களாட்சிக் குடியரசாக” திகழ்கிறது. ஆனால் இதுவே இறையாண்மையின் விளக்கம் அல்லது விரிவான பொருள் விளக்கம் ஆகாது. இறையாண்மை தொடர்பான விளக்கங்கள், பல்வேறு உச்ச நீதிமன்ற தீர்ப்புகளில் காணப்படுகிறது.
Question 37
“இந்திய மக்களாகிய நாங்கள் ஏற்றுக்கொண்ட இறுதியான இறையாண்மை மக்களிடமே உள்ளதுடன் அரசமைப்பும் மக்களுக்கானதாகும்” என எந்த வழக்கின் தீர்ப்பில் கூறப்பட்டது?
A
கோபாலன் Vs மதராஸ் அரசு
B
இந்திய யூனியன் Vs மதனகோபால்
C
சின்தெடிக்ஸ் Vs உத்திரப்பிரதேச அரசு
D
a) மற்றும் b)
Question 37 Explanation: 
விளக்கம்: உதாரணத்திற்கு கோபாலன் Vs மதராஸ் அரசு(1950), மற்றும் இந்திய யூனியன் Vs மதனகோபால் (1954), வழக்குகளில் தீர்ப்பானது பின்வருமாறு கூறப்பட்டு உள்ளது. “அரசமைப்பு சட்டத்தின் முகவுரையில், குறிப்பிட்டுள்ளபடி “இந்திய மக்களாகிய நாங்கள் ஏற்றுக்கொண்ட இறுதியான இறையாண்மை மக்களிடமே உள்ளதுடன் அரசமைப்பும் மக்களுக்கானதாகும்” என கூறியது.
Question 38
இறையாண்மையின் பொருள் குறித்து உச்ச நீதி மன்றம் பின்வரும் எந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியது?
A
கோபாலன் Vs மதராஸ் அரசு
B
இந்திய யூனியன் Vs மதனகோபால்
C
சின்தெடிக்ஸ் Vs உத்திரப்பிரதேச அரசு
D
இந்திராகாந்தி Vs ராஜ்நாராயணன்
Question 38 Explanation: 
விளக்கம்: சின்தெடிக்ஸ் Vs உத்திரப்பிரதேச அரசு (1990) வழக்கில், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி இறையாண்மையின் பொருள் என்பது, “அரசிற்கு எந்த பட்டியலில் வேண்டுமென்றாலும் சட்டம் இயற்றக்கூடிய அதிகாரம் இருப்பதாகவும், ஆனால் அரசமைப்பின் வரையரைக்கு உட்பட்டே இது அமையும்” என கூறியுள்ளது.
Question 39
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு.
  1. சமத்துவத்தை விரும்புகின்ற நாடானது சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு சட்டங்களை உருவாக்குகிறது.
  2. பன்மைத்துவ சமுதாயம் நிலைநாட்டப்பட்டுவிட்டதால் சமத்துவ சட்டம் அதிகமாக எதிர்க்கப்படுகிறது.
A
(i) சரி
B
(ii) சரி
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 39 Explanation: 
விளக்கம்: சமத்துவத்தை விரும்புகின்ற நாடானது சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு சட்டங்களை உருவாக்குகிறது. வளர்ந்த நாடானாலும், வளர்ச்சிகுன்றிய நாடானாலும், சமத்துவம் தொடர்பான சட்டம் போதுமானதாக இல்லை. பன்மைத்துவ சமுதாயம் நிலைநாட்டப்பட்டுவிட்டதால் சமத்துவ சட்டம் அதிகமாக எதிர்க்கப்படுகிறது.
Question 40
சமத்துவம் என்ற மூன்றாவது கொள்கை அமைவதற்கு காரணமாக உள்ளது எது/எவை?
A
புரட்சி
B
சுதந்திரம்
C
உரிமைகள்
D
b) மற்றும் c)
Question 40 Explanation: 
விளக்கம்: அரசியல் கோட்பாட்டில் அமைந்துள்ள சுதந்திரம் மற்றும் உரிமைகள் என்ற கொள்கைகள் சமத்துவம் என்ற மூன்றாவது கொள்கை அமைவதற்கு காரணமாக உள்ளன. உரிமைகள் என்பவை குடிமக்களுக்கும், மக்கள் குழுமங்களுக்கும் அரசால் விநியோகம் செய்யப்படுவதை சமத்துவ கொள்கையே நிர்ணயிக்கிறது.
Question 41
ஒரு நாட்டின் மக்களுக்கு உரிமைகள் சரிசமமாக வழங்கப்பட்டாலும், அல்லது ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும், அதனை நிர்ணயிக்கும் காரணியாக  செயல்படுவது எது?
A
சமத்துவம்
B
சுதந்திரம்
C
அடிப்படை உரிமைகள்
D
மக்களாட்சி
Question 41 Explanation: 
விளக்கம்: ஒரு நாட்டின் மக்களுக்கு உரிமைகள் சரிசமமாக வழங்கப்பட்டாலும், அல்லது ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும், அதனை நிர்ணயிக்கும் காரணியாக சமத்துவமே செயல்படுகிறது.
Question 42
எதன் பார்வையில், பொருளாதார சமத்துவத்தைவிட, சட்ட மற்றும் அரசியல் சமத்துவம் ஆகியவை முக்கியத்துவம் பெறுகின்றன?
A
சுதந்திரத்துவம்
B
இறையாண்மை
C
பாசிசம்
D
மார்க்சியம்
Question 42 Explanation: 
விளக்கம்:சமத்துவத்தைப் பற்றி அலசுகிற போது, வெவ்வேறு கால கட்டங்களில் வேறுபட்ட புரிதல் இருந்திருக்கிறது. சுதந்திரத்துவத்தின் பார்வையில், பொருளாதார சமத்துவத்தைவிட, சட்ட மற்றும் அரசியல் சமத்துவம் ஆகியவை முக்கியத்துவம் பெறுகின்றன.
Question 43
மார்க்சிய கொள்கை கட்டமைப்பிலான பார்வையில் அணுகுகிறபோது  முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குவது எது?
A
சட்ட சமத்துவம்
B
பொருளாதார சுதந்திரம்
C
அடிப்படை உரிமைகள்
D
அரசியல் சமத்துவம்
Question 43 Explanation: 
விளக்கம்: அதுவே சமதர்ம மற்றும் மார்க்சிய கொள்கை கட்டமைப்பிலான பார்வையில் அணுகுகிறபோது பொருளாதார சுதந்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குகிறது. பெண்ணியவாதிக்கு பாலின சமத்துவமும், சாதி அடிப்படையிலான இந்திய சமுதாயத்தில் சமூக சமத்துவமும் முக்கியத்துவம் பெறுகின்றன.
Question 44
பின்வருவனவற்றுள் பங்கீட்டு நீதிக்கு  தேவையானது எது?
A
சுதந்திரத்துவம்
B
சமத்துவக் கொள்கை
C
பொருளாதார சுதந்திரம்
D
சகோதரத்துவம்
Question 44 Explanation: 
விளக்கம்: பங்கீட்டு நீதி (Distributive Justice) என்றால் என்ன? பங்கீட்டு நீதிக்கு சமத்துவக் கொள்கை தேவையாகிறது. அதாவது சமத்துவமான சமூகத்தை நிலை நிறுத்துவதற்கு, சமத்துவமற்ற பங்கீடு செய்தல் அவசியம் என்பதை உறுதிப்படுத்துவதுதான் பங்கீட்டு நீதி ஆகும்.
Question 45
பின்வருவனவற்றுள் பங்கீட்டு நீதிக்கான உதாரணம் எது?
  1. வரிவிதிப்பு விகிதமானது பணக்கார வர்க்கத்திற்கும், ஏழை வர்க்கத்திற்கும் வேறுபட்டு இருத்தல் வேண்டும்.
  2. பொது வேலை வாய்ப்புக்களில் நுழைவதற்கான வரன்முறைகளில் இயல்பானவர்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் மாறுபட்ட கொள்கை அவசியம்.
A
(i) சரி
B
(ii) சரி
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 45 Explanation: 
விளக்கம்: உதாரணத்திற்கு, வரிவிதிப்பு விகிதமானது பணக்கார வர்க்கத்திற்கும், ஏழை வர்க்கத்திற்கும் வேறுபட்டு இருத்தல் வேண்டும். இதுபோலவே பொது வேலை வாய்ப்புக்களில் நுழைவதற்கான வரன்முறைகளில் இயல்பானவர்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் மாறுபட்ட கொள்கை அவசியம் என்பதும் பங்கீட்டு நீதியே ஆகும்.
Question 46
பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.
  1. 18-ஆம் நூற்றாண்டில் நிலப்பிரபுத்துவ ஆட்சியையும், முடியாட்சியையும் எதிர்த்து, “சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்“ என்ற முழக்கத்தை பிரெஞ்சு புரட்சியாளர்கள் ஓங்கி முழங்கினர்.
  2. 20-ஆம் நூற்றாண்டில் ஆசிய மற்றும் ஆப்பிரிக்க கண்டங்களில், சமத்துவ கொள்கையை நிலைநாட்டக் காலனியாதிக்கத்திற்கு எதிராக புரட்சி நிகழ்த்தப்பட்டது.
A
(i) சரி
B
(ii) சரி
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 46 Explanation: 
விளக்கம்: சமூக அமைப்புகளையும், அரசுகளையும் எதிர்த்து போராட சமத்துவ முழக்கம் மிகவும் உதவிகரமாய் இருந்தது. ஏனெனில் நவீனயுகத்தில் பணி, செல்வவளம், நிலை மற்றும் சலுகை அடிப்படையில் தற்பொழுதும் பிரிவினை இருக்கத்தான் செய்கிறது. 18-ஆம் நூற்றாண்டில் நிலப்பிரபுத்துவ ஆட்சியையும், முடியாட்சியையும் எதிர்த்து, “சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்“ என்ற முழக்கத்தை பிரெஞ்சு புரட்சியாளர்கள் ஓங்கி முழங்கினர். 20-ஆம் நூற்றாண்டில் ஆசிய மற்றும் ஆப்பிரிக்க கண்டங்களில், சமத்துவ கொள்கையை நிலைநாட்டக் காலனியாதிக்கத்திற்கு எதிராக புரட்சி நிகழ்த்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, மேற்கூறிய சமுதாயங்களில் விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்டவர்களும், பெண்களும் தங்களின் சமத்துவத்திற்காக புரட்சியை மேற்கொண்டனர்.
Question 47
பின்வருவனவற்றுள்  தவறான விடையைத் தேர்ந்தெடு.
  1. சமத்துவம் என்பது தற்பொழுது உலகெங்கிலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய மாபெரும் லட்சியவாதமாக உலக அளவில் சட்டங்களிலும், அரசமைப்பிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
  2. புரட்சிகளும், எழுச்சிகளும் ஆங்காங்கே எழுந்தபோதிலும் சமத்துவமின்மை என்பது உலக சமுதாயத்தில் தற்பொழுதும் உள்ளது என்பதே வெளிப்படையான உண்மை.
A
(i) சரி
B
(ii) சரி
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 47 Explanation: 
விளக்கம்: சமத்துவம் என்பது தற்பொழுது உலகெங்கிலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய மாபெரும் லட்சியவாதமாக உலக அளவில் சட்டங்களிலும், அரசமைப்பிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறான புரட்சிகளும், எழுச்சிகளும் ஆங்காங்கே எழுந்தபோதிலும் சமத்துவமின்மை என்பது உலக சமுதாயத்தில் தற்பொழுதும் உள்ளது என்பதே வெளிப்படையான உண்மை ஆகும்.
Question 48
"பூமி என்பது அனைவருக்கும் தாய், இதில் வாழும் அனைத்து மக்களுக்கும் அதனிடம் சம உரிமைகள் பெறுவதற்கு உரிமை உண்டு" என்று கூறியவர்?
A
கில் கிரிஸ்ட
B
ஜான் ஆஸ்டின்
C
சீஃப் ஜோசப்
D
வாசன்
Question 48 Explanation: 
விளக்கம்: அனைத்து நாடுகளிலும் வீடு மற்றும் வசதிமிக்க வாழ்க்கைக்கு நடுவே சரிவர பாரமரிக்கப்படாத கழிவறைகளும், குடிநீரற்ற நிலையும் கொண்ட பள்ளிகள் உள்ளன. உணவை வீணடிக்கும் சிலரும், பசிக்கொடுமையால் வாடும் சிலரும் இருக்கின்ற நிலை பலவித சங்கடங்களை அளிக்கிறது. சட்டப்படியான உத்திரவாதங்களுக்கும், நடைமுறையில் நாம் பார்ப்பவற்றிற்கும் இடையே நிறைய வேறுபாடுகளைக் காணலாம்.இந்தியா, தன் அரசமைப்பின் மூலமாக பணக்காரவர்க்கத்திற்கும், ஏழை வர்க்கத்திற்கும் இடையேயான இடைவெளியினை குறைப்பதற்கு இயன்ற வரையில் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பூமி என்பது அனைவருக்கும் தாய், இதில் வாழும் அனைத்து மக்களுக்கும் அதனிடம் சம உரிமைகள் பெறுவதற்கு உரிமை உண்டு. சீஃப் ஜோசப்.
Question 49
பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.
  1. மனித வாழ்க்கையானது பல்வேறு வேற்றுமைகளுக்கிடையில் அமைந்துள்ளது.
  2. எந்த ஒரு சமுதாயமும் அனைத்து மக்களையும் சரிசமமாக நடத்துவது இல்லை.
A
(i) சரி
B
(ii) சரி
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 49 Explanation: 
விளக்கம்: சமத்துவம் என்றால் என்ன? மனித வாழ்க்கையானது பல்வேறு வேற்றுமைகளுக்கிடையில் அமைந்துள்ளது. மனிதர்களுக்கிடையே நிறம், இனம் போன்ற வேற்றுமைகள் இருப்பதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. மனசாட்சியின் அடிப்படையில் தவறானது என தெரிந்தபோதிலும், சக மனிதர்களிடையே மரியாதையும், அங்கீகாரமும் மறுக்கப்படுவது வேதனைக்குரிய நிகழ்வு ஆகும். எந்த ஒரு சமுதாயமும் அனைத்து மக்களையும் சரிசமமாக நடத்துவது இல்லை.
Question 50
பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.
  1. சமமாக உள்ளவர்கள் சமமில்லாமல் நடத்தப்படுவதும், சமமில்லாதவர்களை சமமாக நடத்துவதும், அநீதிக்கு வழி வகுக்கின்றன.
  2. இயற்கை அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகளுக்கு அப்பாற்பட்டு சமூக ரீதியான பிறப்பு, செல்வவளம், அறிவு, மதம் போன்றவைகளில் சமத்துவமின்மை காணப்படுகிறது.
A
(i) சரி
B
(ii) சரி
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 50 Explanation: 
விளக்கம்: மனிதர்களுக்கிடையேயான தேவைகள், திறமைகள் மாறுபடுகின்ற பொழுது அனைத்து மக்களையும் சரிசமமாக பார்ப்பதும், பாவிப்பதும் இயலாததாகக் கருதப்படுகிறது. சமமாக உள்ளவர்கள் சமமில்லாமல் நடத்தப்படுவதும், சமமில்லாதவர்களை சமமாக நடத்துவதும், அநீதிக்கு வழி வகுக்கின்றன. இயற்கை அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகளுக்கு அப்பாற்பட்டு சமூக ரீதியான பிறப்பு, செல்வவளம், அறிவு, மதம் போன்றவைகளில் சமத்துவமின்மை காணப்படுகிறது.
Question 51
  • கூற்று (கூ): எவ்வித வரலாற்றின் இயக்கமும், சமத்துவத்தை நோக்கி செல்வது இல்லை
  • காரணம் (கா): ஓர் ஏற்றத்தாழ்வு நிலையை சரிசெய்கின்றபோது மற்றொரு ஏற்றத்தாழ்வு நிலை உருவாகுகிற சூழ்நிலை நிலவுகிறது.
A
கூற்று சரி, காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமன்று
B
கூற்று சரி, காரணம் தவறு
C
கூற்றும் தவறு காரணமும் தவறு
D
கூற்று சரி, காரணத்திற்கு கூற்று சரியான விளக்கமாகும்.
Question 51 Explanation: 
விளக்கம்: எவ்வித வரலாற்றின் இயக்கமும், சமத்துவத்தை நோக்கி செல்வது இல்லை. ஏனெனில் ஓர் ஏற்றத்தாழ்வு நிலையை சரிசெய்கின்றபோது மற்றொரு ஏற்றத்தாழ்வு நிலை உருவாகுகிற சூழ்நிலை நிலவுகிறது. இதன் விளைவாக அறியப்படுவது என்னவென்றால், அழிக்கப்படுகின்ற ஏற்றத்தாழ்வுநிலை நியாயமற்றதாகவும், புதியதாக உருவாக்கப்படுகின்ற நிலை நியாயமானதாகவும் கருதப்படுகிறது. இதனால் அரசியல், சமூக மற்றும் கல்வி சமத்துவத்தை வலுப்படுத்தவும், ஒருமுகப்படுத்தவும், புதிய தலைமுறை கடமைப்பட்டிருக்கிறது.
Question 52
பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.
  1. எதிர்மறை சமத்துவம் என்பது அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் உள்ள சமூக நிலை
  2. நேர்மறை சமத்துவம் என்பது  யாருக்கும் எந்தவித சலுகைகளும் காட்டாத சமூக நிலை
A
(i) சரி
B
(ii) சரி
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 52 Explanation: 
விளக்கம்: சுதந்திரத்தைபோன்று, சமத்துவ கொள்கையும் நேர்மறை மற்றும் எதிர்மறை கோணங்களையும் பெற்று விளங்குகிறது. எதிர்மறை சமத்துவம் என்பது யாருக்கும் எந்தவித சலுகைகளும் காட்டாத சமூக நிலையையும், நேர்மறை சமத்துவம் என்பது அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் உள்ள சமூக நிலையையும் பற்றியதாகும்.
Question 53
சலுகைகள் இல்லாத நிலை சமத்துவம் என்று கூறியவர்?
A
ஜான் ஆஸ்டின்
B
சீப் ஜோசப்
C
லாஸ்கி
D
காட்வின்
Question 53 Explanation: 
இது சலுகைகள் இல்லாத நிலையாகும். இது சமுதாயத்தில் வாழும் ஒருவருடைய விருப்பமானது வேறொருவருடைய விருப்பத்திற்கு சமமாக கருதப்படுகின்ற சூழ்நிலை ஆகும். சமுதாயத்தில் வாழும் அனைவருக்கும் உரிமைகள் சமமானதாக வழங்கப்படும். இதுவே சமத்துவ உரிமை ஆகும்.
Question 54
  • (i) போதுமான வாய்ப்புகள் அனைத்து மக்களுக்கும் வழங்கப்படுதல். ஒவ்வொரு தனிமனிதனும் தன் ஆளுமைத்தன்மையை உணருவதற்கு வாய்ப்பான சூழ்நிலைகளை உருவாக்கித்தருதல்.
  •  (ii) பொருளாதார மற்றும் சமூக சுரண்டல் இல்லாத சமுதாயமாக விளங்குதல்.
சமத்துவம் குறித்த மேற்கண்ட கூற்று யாருடையது?
A
ஜான் ஆஸ்டின்
B
சீப் ஜோசப்
C
லாஸ்கி
D
பார்க்கர்
Question 54 Explanation: 
விளக்கம்: சமூகத்தின் பலன்கள் அனைவருக்கும் சமமான அளவில் கிடைக்கும்படியாகவும், எந்தவொரு அடிப்படையிலும் யாரையும் இதனை அடையவிடாமல் தடுக்கக்கூடாது. ஒரு மனிதனின் பிறப்பினை அடிப்படையாகக் கொ ண்ட ஏற்றத்தாழ்வுகள், ஆகியவை பாரம்பரியம் மற்றும் மரபுவழி காரணங்களின் அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகள் அர்த்தமற்றவையாகும்.
Question 55
" பெருமளவில் இருக்கக்கூடிய ஏழை வர்க்கமும், சிறியளவில் வாழும் பணக்காரவர்க்கமும் உள்ள அரசில்,அரசாங்கத்தின் செயல்பாடுகள் பணக்கார வர்க்கத்தின் உடைமைகளை பாதுகாக்கும் பொருட்டே அமையும்" என்று கூறியவர்?
A
ஜான் ஆஸ்டின்
B
சீப் ஜோசப்
C
லாஸ்கி
D
காட்வின்
Question 55 Explanation: 
விளக்கம்: பெருமளவில் இருக்கக்கூடிய ஏழை வர்க்கமும், சிறியளவில் வாழும் பணக்காரவர்க்கமும் உள்ள அரசில்,அரசாங்கத்தின் செயல்பாடுகள் பணக்கார வர்க்கத்தின் உடைமைகளை பாதுகாக்கும் பொருட்டே அமையும். – ஹெரால்ட் லாஸ்கி (Herold Laski) கடந்த காலத்தின் வரலாறு என்பது சமத்துவத்தை மேல்நோக்கிய ஒரு நெடிய போராட்டம் ஆகும்- எலிஸபெத் கார்டிஷார்டோன்
Question 56
பார்க்கரின் கூற்றுப்படி சமத்துவத்தின் கருத்தாக்கம் எது/எவை?
A
அனைவருக்கும் அடிப்படை சமத்துவம்
B
சமமான வாய்ப்புகள்
C
வாழ்வுக்கான சமதளத்தை உருவாக்கும் சமத்துவ நிலைகள்
D
மேற்கண்ட அனைத்தும்
Question 56 Explanation: 
விளக்கம்: பார்க்கரின் கூற்றுப்படி சமத்துவத்தின் கருத்தாக்கம் ϖ  அனைவருக்கும் அடிப்படை சமத்துவம் ϖ  சமமான வாய்ப்புகள் ϖ  வாழ்வுக்கான சமதளத்தை உருவாக்கும் சமத்துவ நிலைகள் ϖ  விளைப்பயன்களில் சமத்துவத்தினை ஏற்படுத்துதல்.
Question 57
பின்வருவனவற்றுள் சமத்துவத்தின் வகை எது/எவை?
A
சமூக சமத்துவம்
B
அரசியல் சமத்துவம்
C
இயற்கை சமத்துவம்
D
மேற்கண்ட அனைத்தும்
Question 58
மதம், மற்றும் நம்பிக்கைகள் போன்றவற்றின் அடிப்படையில் பாகுபாடு இல்லாதிருத்தல் எவ்வகை சமத்துவம் ஆகும்?
A
சமூக சமத்துவம்
B
அரசியல் சமத்துவம்
C
இயற்கை சமத்துவம்
D
குடிமை சமத்துவம்
Question 58 Explanation: 
விளக்கம்: சமத்துவத்தின் பல்வேறு வகைகள் யாவை? சமூக சமத்துவம் : *சமமான வாய்ப்புகள் , *சலுகைகள் இயற்கை சமத்துவம்: *இயற்கை உரிமைகள் பொருளாதார சமத்துவம்: * செல்வ வளம் குடிமை சமத்துவம் : *மதம், மற்றும் நம்பிக்கைகள் போன்றவற்றின் அடிப்படையில் பாகுபாடு இல்லாதிருத்தல். அரசியல் சமத்துவம்: * அதிகாரத்துவத்தை அணுகுவதற்கான வாய்ப்பு வாக்குரிமை.
Question 59
சமூக சமத்துவம் கீழ்க்கண்டவற்றுள் எதனை உள்ளடக்கியது?
A
சலுகைகள் மற்றும் வாய்ப்புகளை வழங்குவதல்
B
அதிகாரத்துவத்தை அணுகுவதற்கான வாய்ப்பு
C
இயற்கை உரிமைகள்
D
மேற்கண்ட அனைத்தும்
Question 59 Explanation: 
விளக்கம்: சமூக சமத்துவம் என்பது பிறப்பு, சாதி, மதம், இனம், நிறம், பாலினம் மற்றும் சமூக நிலை போன்றவைகளை அடிப்படையாக கொண்டு உரிமைகள், சலுகைகள் மற்றும் வாய்ப்புகளை வழங்குவதல், பாகுபாடில்லாத சமூக அமைப்பு போன்றவை ஆகும். ஒவ்வொருவருக்கும், தங்கள் ஆளுமைகளை மேம்படுத்துவதற்கு சமமான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.
Question 60
சமூக சமத்துவம் என்பது பின்வரும் எந்த அம்சங்களைஉள்ளடக்கியது?
A
சமூக நிலையை அடிப்படையாக கொண்ட பாகுபாட்டினை நீக்குதல்
B
சிலருக்கு மட்டுமே உரித்தான சிறப்புச் சலுகைகளை நீக்குதல்
C
அனைவருக்கும் சமமான கல்வி வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவது
D
மேற்கண்ட அனைத்தும்
Question 60 Explanation: 
விளக்கம்:சமூக சமத்துவம் என்பது சில முக்கிய அம்சங்களைஉள்ளடக்கியுள்ளது. அவை, சமூக நிலையை அடிப்படையாக கொண்ட பாகுபாட்டினை நீக்குதல், சிலருக்கு மட்டுமே உரித்தான சிறப்புச் சலுகைகளை நீக்குதல் மற்றும் அனைவருக்கும் சமமான கல்வி வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவது ஆகியவை ஆகும். வரலாற்றைப் பார்க்கும்போது, உலகம் முழுவதும் சில வகையான சமூக ஏற்றத்தாழ்வுகள்எதிர்க்கப்பட்டுவந்துள்ளதும் சமூக சமத்துவத்திற்கான கோரிக்கைள் எழுந்துள்ளதும் தெரிய வருகிறது.
Question 61
பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.
  1. அரசியல் சமத்துவம் அரசின் நடவடிக்கைகளில் பங்குபெறுவதற்கு எத்தகைய பாகுபாடுமின்றி அனைத்து மக்களுக்கும் அளிக்கப்படும் சமமான உரிமைகள் அரசியல் சமத்துவம் எனப்படுகிறது.
  2. வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை என்பதன் மூலம் இந்தஅரசியல்உரிமை உறுதி செய்யப்படுகிறது.
A
(i) சரி
B
(ii) சரி
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 61 Explanation: 
விளக்கம்: அரசியல் சமத்துவம் அரசின் நடவடிக்கைகளில் பங்குபெறுவதற்கு எத்தகைய பாகுபாடுமின்றி அனைத்து மக்களுக்கும் அளிக்கப்படும் சமமான உரிமைகள் அரசியல் சமத்துவம் எனப்படுகிறது. வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை என்பதன் மூலம் இந்தஅரசியல்உரிமை உறுதி செய்யப்படுகிறது.
Question 62
குடிமக்களின் அரசியல் உரிமைகளை உறுதி செய்யும் பிற காரணிகள் எது/எவை?
A
வாக்குரிமை
B
தேர்தலில் போட்டியிடும் உரிமை
C
அரசாங்கப்பதவிகளை வகிப்பதற்கான உரிமை
D
மேற்கண்ட அனைத்தும்
Question 62 Explanation: 
விளக்கம்: குடிமக்களின் அரசியல் உரிமைகளை உறுதி செய்யும் பிற காரணிகள் *வாக்குரிமை *தேர்தலில் போட்டியிடும் உரிமை *அரசாங்கப்பதவிகளை வகிப்பதற்கான உரிமை. *அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக மனு செய்தல் மற்றும் பொது கொள்கைகள் மீதான விமர்சனம் செய்யும் உரிமைகள்.
Question 63
அரசியல் சமத்துவத்தை அடையும் வழியாகக் கருதப்படுவது எது?
A
தேர்தலில் போட்டியிடும் உரிமை
B
அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக மனு செய்தல்
C
வயது வந்தோர் வாக்குரிமை
D
மேற்கண்ட அனைத்தும்
Question 63 Explanation: 
விளக்கம்: அனைத்து குடிமக்களுக்கும் ஒரே மாதிரியான அரசியல் உரிமைகள் அனுபவிப்பதற்கான வாய்ப்புகள் அரசியல் சமத்துவத்தினால் அளிக்கப்படுகின்றன. என்பது அரசியல் சமத்துவத்தை அடையும் வழியாகக் கருதப்படுகிறது. அரசியல் சமத்துவம் என்பது உண்மையில் மக்களாட்சி பரிசோதனைகளுக்கான தேர்வாகும். அரசியல் அதிகாரத்தை மக்களிடையே பரவ செய்வதற்கு அரசியல் சமத்துவம் மட்டுமே போதாது. மேலும் சமூக, பொருளாதார சமத்துவம் என்பது அரசியல் சமத்துவத்தை அடைய அவசியமாகிறது.
Question 64
செல்வ வளங்களில் உள்ள வேறுபாடுகளை அகற்றி, ஒவ்வொரு ஆணுக்கும், பெண்ணுக்கும், நாட்டின் வளமைகளில் சமமான பங்கை அளிப்பது எது?
A
சமூக சமத்துவம்
B
அரசியல் சமத்துவம்
C
இயற்கை சமத்துவம்
D
பொருளாதார சமத்துவம்
Question 64 Explanation: 
விளக்கம்: செல்வ வளங்களில் உள்ள வேறுபாடுகளை அகற்றி, ஒவ்வொரு ஆணுக்கும், பெண்ணுக்கும், நாட்டின் வளமைகளில் சமமான பங்கை அளிப்பது பொருளாதார சமத்துவமாகும்”. - ப்ரைஸ் பிரபு (Lord Bryce)
Question 65
கீழ்க்கண்டவற்றுள் பொருளாதார சமத்துவத்தினை அர்த்தமுள்ளதாக்குவது எது/எவை?
A
தகுந்த வேலைவாய்ப்பு
B
உரிய கூலி
C
போதுமான ஓய்வு
D
மேற்கண்ட அனைத்தும்
Question 65 Explanation: 
விளக்கம்: பொருளாதார சமத்துவம் பொருளாதார சமத்துவம் என்பதை அனைத்து மக்களும் தங்களை முழுமையாக மேம்படுத்திக் கொள்வதற்கு நியாயமான வாய்ப்புகள் இருந்தால் மட்டுமே நியாயப்படுத்த இயலும். தகுந்த வேலைவாய்ப்பு, உரிய கூலி, போதுமான ஓய்வு, மற்றும் பொருளியல் மேலாண்மையில் சமபங்கு ஆகிய இவையனைத்தும் பொருளாதார சமத்துவத்தினை அர்த்தமுள்ளதாக்குகின்றன.
Question 66
“அரசியல் சமத்துவம் என்பது பொருளாதார சுதந்திரமின்றி, மெய்மையாவதில்லை என்று கூறியவர்?
A
கில் கிரிஸ்ட்
B
ஜான் ஆஸ்டின்
C
சீஃப் ஜோசப்
D
லாஸ்கி
Question 66 Explanation: 
விளக்கம்: பேராசிரியர் லாஸ்கி பொருளாதார சமத்துவத்தை பற்றிகூறும் பொழுது “அரசியல் சமத்துவம் என்பது பொருளாதார சுதந்திரமின்றி, மெய்மையாவதில்லை என்றும் அப்படியில்லாத நிலையில் வழங்கப்படும் அரசியல் அதிகாரம் என்பது பொருளாதார அதிகாரத்தின் கைப்பாவையாகும்” என்று கூறுகிறார். இங்கு பொருளாதார சமத்துவம் என்பது சமமான வாய்ப்புகளை அனைத்து மக்களுக்கும்அளிக்கும் போது பொருளாதாரம் மேம்பாடு அடையும் எனப் பொருள்படுகிறது. மேற்கூறிய முறையானது சமதர்மத்தில் சாத்தியமாகுமேயன்றி லட்சியவாதத்தின் அடிப்படையில் முதலாளித்துவத்தில் நடக்காது எனலாம்.
Question 67
பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.
  1. வாய்ப்பு மற்றும் கல்வியில் சமத்துவம் என்பதன் பொருள் அரசு என்பது அனைத்து மக்களுக்கும் சமமான மற்றும் ஒரே மாதிரியான வாய்ப்புகள் அளிக்க வேண்டும் என்பதாகும்.
  2. அனைத்துக் குடிமக்களுக்கும் தங்களது ஆளுமைகளை மேம்படுத்திக் கொள்வதற்காக சமமான மற்றும் ஒரே மாதிரியான வாய்ப்புகள் அரசினால் அளிக்கப்படவேண்டும்.
A
(i) சரி
B
(ii) சரி
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 67 Explanation: 
விளக்கம்: வாய்ப்பு மற்றும் கல்வியில் சமத்துவம் என்பதன் பொருள் அரசு என்பது அனைத்து மக்களுக்கும் சமமான மற்றும் ஒரே மாதிரியான வாய்ப்புகள் அளிக்க வேண்டும் என்பதாகும். அனைத்துக் குடிமக்களுக்கும் தங்களது ஆளுமைகளை மேம்படுத்திக் கொள்வதற்காக சமமான மற்றும் ஒரே மாதிரியான வாய்ப்புகள் அரசினால் அளிக்கப்படவேண்டும். சாதி, மதம், இனம், மொழி, ஏழை, பணக்காரர், பாலினம் போன்றவற்றை அடிப்படையாக கொண்ட பாகுபாடுகள் நீக்கப்பட வேண்டும்.
Question 68
"பசியோடு வாழும் ஒரு மனிதனுக்கு சுதந்திரம் என்ன நன்மையை அளிக்கமுடியும்? அவனால் அந்த சுதந்திரத்தை சாப்பிடவோ அல்லது குடிக்கவோ முடியாது" என்று கூறியவர்?
A
தாமஸ் ஹாப்ஸ்
B
ஜான் ஆஸ்டின்
C
சீஃப் ஜோசப்
D
ப்ரைஸ்
Question 68 Explanation: 
விளக்கம்: இந்திய அரசமைப்பு அனைத்து மக்களுக்கும் சமமான வாய்ப்புகள் மற்றும் சமமான கல்வியை அளிக்கிறது. ”பசியோடு வாழும் ஒரு மனிதனுக்கு சுதந்திரம் என்ன நன்மையை அளிக்கமுடியும்? அவனால் அந்த சுதந்திரத்தை சாப்பிடவோ அல்லது குடிக்கவோ முடியாது. - தாமஸ் ஹாப்ஸ் (Thomas Hobbes).
Question 69
சமத்துவம் இல்லாமல் சுதந்திரத்திற்கு எந்தவொரு விழுமியமும் கிடையாது என்பதற்கு அறிவார்ந்த விளக்கங்களை அளித்தவர்/கள்?
A
ஆக்டன் பிரபு
B
டி டாக்வில்
C
ஹெரால்டு லாஸ்கி
D
மேற்கண்ட அனைவரும்
Question 69 Explanation: 
விளக்கம்: சுதந்திரத்திற்கும், சமத்துவத்திற்கும் இடையேயான உறவுகள் சமத்துவம் இல்லாமல் சுதந்திரத்திற்கு எந்தவொரு விழுமியமும் கிடையாது. இவற்றை பல்வேறு பார்வைகளில் புரிந்து கொண்டு அரசியல் சிந்தனையாளர்களான ஆக்டன் பிரபு, டி டாக்வில், ஹெரால்டு லாஸ்கி (Lord Acton, De Tocqueville and Harold J.Laski) போன்றோர் அறிவார்ந்த விளக்கங்களை அளித்துள்ளனர்.
Question 70
‘சுதந்திரம் இருக்குமிடத்தில் சமத்துவம் இருக்காது எனவும் அதே போல சமத்துவம் இருக்கும் இடத்தில் சுதந்திரம் இருக்காது’ என்பது யாருடைய கருத்து?
A
ஆக்டன் பிரபு
B
ஹாப்ஸ் தாமஸ்
C
ப்ரைஸ்
D
மேற்கண்ட அனைவரும்
Question 70 Explanation: 
விளக்கம்: ஆக்டன் பிரபு, டி டாக்வில் (Lord Acton, De Tocqueville) போன்ற அறிஞர்கள் சுதந்திர கொள்கையின் ஆதரவாளர்கள் ஆவர். ‘சுதந்திரம் இருக்குமிடத்தில் சமத்துவம் இருக்காது எனவும் அதே போல சமத்துவம் இருக்கும் இடத்தில் சுதந்திரம் இருக்காது’ என்பது மேற்கூறிய சிந்தனையாளர்களின் கருத்து ஆகும். ஆக்டன் பிரபு (Lord Acton) கூறும் பொழுது, “சமத்துவத்தை நோக்கிய உணர்வுப்பூர்வமான பயணமானது சுதந்திரத்திற்கான நம்பிக்கையை வீணாக்குகிறது” என்கிறார்.
Question 71
“சுதந்திரமும், சமத்துவமும் ஒன்றுடன் ஒன்று இணைந்து இருப்பது நல்லியல்பு”என்று கூறுபவர் யார்?
A
ஆக்டன் பிரபு
B
ஹாப்ஸ் தாமஸ்
C
ப்ரைஸ்
D
ஹெரால்ட் லாஸ்கி
Question 71 Explanation: 
விளக்கம்: ஹெரால்ட் லாஸ்கி சுதந்திரத்தை பற்றி கூறும்பொழுது, “சுதந்திரமும், சமத்துவமும் ஒன்றுடன் ஒன்று இணைந்து இருப்பது நல்லியல்பு” என கூறுகிறார். மேலும் அவர் கூறும் பொழுது தடையற்ற சுதந்திரம் அளிக்கப்படும்போது, தனிமனிதர்கள் சக மனிதர்களுக்கு தீங்கு இழைக்கிறார்கள். இவ்வகை சுதந்திரம் சமுதாயத்தில் குழப்பத்தை உண்டாக்குகிறது என்கிறார்.
Question 72
  • கூற்று(கூ):  19-ஆம் நூற்றாண்டில் தனிமனிதத்துவவாதிகள் “சுதந்திரத்திற்கு“ தவறான வரையறையை அளித்துவிட்டார்கள்.
  • காரணம் (கா): அவர்கள் பொருளாதார சமத்துவத்திற்கு முக்கியத்துவம் அளிக்காமல் அரசாங்கத்தின் தாராளமயக் கொள்கைக்கு மட்டுமே அழுத்தம் அளித்தார்கள் என்று ஹெரால்ட் லாஸ்கி கூறுகிறார்.
A
கூற்று சரி, காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமன்று
B
கூற்று சரி, காரணம் தவறு
C
கூற்றும் தவறு காரணமும் தவறு
D
கூற்று சரி, காரணத்திற்கு கூற்று சரியான விளக்கமாகும்
Question 72 Explanation: 
விளக்கம்: 19-ஆம் நூற்றாண்டில் தனிமனிதத்துவவாதிகள் “சுதந்திரத்திற்கு“ தவறான வரையறையை அளித்துவிட்டார்கள். அவர்கள் பொருளாதார சமத்துவத்திற்கு முக்கியத்துவம் அளிக்காமல் அரசாங்கத்தின் தாராளமயக் கொள்கைக்கு மட்டுமே அழுத்தம் அளித்தார்கள் என்று ஹெரால்ட் லாஸ்கி கூறுகிறார்.
Question 73
“எங்கு பணக்கார வர்க்கம் ஏழை வர்க்கம்  என்ற பிரிவினை இருக்கிறதோ, அங்கு கண்டிப்பாக முதலாளி, பணியாளர் என்ற வகுப்புவாத நிலையினை காணமுடியும்" என்று தெரிவித்தவர்?
A
ஆக்டன் பிரபு
B
ஹாப்ஸ் தாமஸ்
C
ப்ரைஸ்
D
ஹெரால்ட் லாஸ்கி
Question 73 Explanation: 
விளக்கம்: மேலும் ஹெரால்ட் லாஸ்கி, கூறுகையில் “எங்கு பணக்கார வர்க்கம் – ஏழை வர்க்கம், படித்தவர்கள் – படிக்காதவர்கள் என்ற பிரிவினை இருக்கிறதோ, அங்கு கண்டிப்பாக முதலாளி, பணியாளர் என்ற வகுப்புவாத நிலையினை காணமுடியும் என்று தெரிவித்துள்ளார்.
Question 74
தனியாருக்கு இடையேயான பரிமாற்றங்கள் அரசாங்க தலையீடுகள்  இல்லாமல் சுமூகமாகவும், சுதந்திரமாகவும் நடக்கும் பொருளாதார முறை எது?
A
தனியார் மயம்
B
தாராள மயம்
C
பொதுவுடைமை
D
மேற்கண்ட அனைத்தும்
Question 74 Explanation: 
விளக்கம்:"தனியாருக்கு இடையேயான பரிமாற்றங்கள் அரசாங்க தலையீடுகளான கட்டுப்பாடு, சலுகைகள், வரி, மானியம் போன்றவை இல்லாமல் சுமூகமாகவும், சுதந்திரமாகவும் நடக்கும் பொருளாதார முறைமையே தாராளமயக் கொள்கை (Laisszr Faire) எனப்படும்.
Question 75
"முதலாளிகளுக்கும், தொழிலாளர் சங்கத்தலைவர்களுக்கும் இடையே சுதந்திரமான போட்டி நிலவ வேண்டும்" இக்கூற்றை ஆதரிப்பவர்?
A
கீன்ஸ்
B
ஆடம்ஸ்மித்
C
அமர்த்தியாசென்
D
குமரப்பா
Question 75 Explanation: 
விளக்கம்: மற்றுமொரு பொருளாதார நிபுணரான ஆடம் ஸ்மித், “முதலாளிகளுக்கும், தொழிலாளர் சங்கத்தலைவர்களுக்கும் இடையே சுதந்திரமான போட்டி நிலவ வேண்டும்“ என்ற தனிமனிதத்துவவாதிகளின் கூற்றை ஆதரிக்கிறார்.
Question 76
பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.
  1. அரசாங்கமானது, பொருளாதாரம் தொடர்பான விவகாரங்களில் தலையிடுவதை தனிமனிதத்துவவாதிகள் விரும்புவதில்லை.
  2. அரசாங்கத்தினால் தேவை- வழங்கல் சூத்திரம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
A
(i) மட்டும்
B
(ii) மட்டும்
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 76 Explanation: 
விளக்கம்: அரசாங்கமானது, பொருளாதாரம் தொடர்பான விவகாரங்களில் தலையிடுவதை தனிமனிதத்துவவாதிகள் விரும்புவதில்லை. அரசாங்கத்தினால் தேவை- வழங்கல் சூத்திரம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பொருளாதாரம் தொடர்பான பிரச்சினைகள் இந்த சூத்திரத்தின் மூலமாக நீங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஐரோப்பாவில் இதன் மூலம் ஆபத்தான விளைவுப்பயன்களை சந்திக்க நேரிட்டது.
Question 77
“பொருளாதார சமத்துவமில்லாமல் சுதந்திரம் என்பது பொருளற்றது” என்ற நிலை உருவாக காரணமாக அமைந்தது எது?
A
அரசியல் சுதந்திரம்
B
தனிமனிதத்துவத்தினை எதிர்த்தல்
C
சமதர்மத்தின் உதயம்
D
b) மற்றும் c)
Question 77 Explanation: 
விளக்கம்:முதலாளிவர்க்கமானது வாய்ப்புகள் அனைத்தையும் அதிகபட்சமான சுரண்டலுக்குப் பயன்படுத்தினால், ஏழை வர்க்கத்திற்கும், பணக்காரவர்க்கத்திற்குமான இடைவெளி பெரிதும் அதிகமாகிறது. இதனால் உழைக்கும் வர்க்கம் அதிகம் பாதிக்கப்படுவதால் உண்டான பின்விளைவு, தனிமனிதத்துவத்தினை எதிர்க்கவும் அதனால் சமதர்மம் உதயமாகவும் காரணமாகிறது. இவ்வாறு எழுச்சிபெற்ற சமதர்மமானது தனிமனிதத்துவவாதத்தின் கொள்கைகளை மறுக்க ஆரம்பித்தது. இந்த மாற்றம் “பொருளாதார சமத்துவமில்லாமல் சுதந்திரம் என்பது பொருளற்றது” என்ற நிலை உருவாக காரணமாக அமைந்தது.
Question 78
பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.
  1. தனிமனிதத்துவம் தனிமனிதர்களின் நன்னெறிக்கான அரசியல் மற்றும் சமூக தத்துவம் தனிமனிதவாதம் ஆகும்.
  2. பொருள் உற்பத்தியின் வழிமுறை, விநியோகம் மற்றும் பரிமாற்றம் இவை யாவும், ஒட்டு மொத்தமாக சமுதாயத்தில் வாழும் மக்களால் ஒழுங்குபடுத்தப்பட்டும், உரிமைப்படுத்தப்பட்டும் இருக்கப்பட வேண்டும்.
A
(i) மட்டும்
B
(ii) மட்டும்
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 78 Explanation: 
விளக்கம்: தனிமனிதத்துவம் தனிமனிதர்களின் நன்னெறிக்கான அரசியல் மற்றும் சமூக தத்துவம் தனிமனிதவாதம் ஆகும். சமதர்மம் பொருள் உற்பத்தியின் வழிமுறை, விநியோகம் மற்றும் பரிமாற்றம் இவை யாவும், ஒட்டு மொத்தமாக சமுதாயத்தில் வாழும் மக்களால் ஒ ழு ங் குபடுத்தப்ப ட்டும், உரிமைப்படுத்தப்பட்டும் இருக்கப்பட வேண்டும் என்ற அரசியல் மற்றும் பொருளாதார கோட்பாடே சமதர்ம கோட்பாடு ஆகும்.
Question 79
அரசியல் சுதந்திரம் ஏற்படுவதற்கு  மிகவும் அத்தியாவசியமானது எது?
A
அரசியல் சமத்துவம்
B
பொருளாதார சமத்துவம்
C
சமூக சமத்துவம்
D
இயற்கை சமத்துவம்
Question 79 Explanation: 
விளக்கம்: அரசியல் சுதந்திரம் ஏற்படுவதற்கு பொருளாதார சமத்துவம் மிகவும் அத்தியாவசியமாகிறது. இது சாத்தியம் இல்லாதபோது, அரசாங்கமுறையானது முதலாளித்துவ மக்களாட்சியாக மாறி அதன் விளைவாக தொழிலாளர் வர்க்கம் என்பது வாக்குரிமையை மட்டுமே பெற்று, அதன் மூலம் அவர்களுக்கு எந்தவித பயனுமில்லாமல் போகும் சூழ்நிலை உருவாகும்.
Question 80
"சுதந்திரமும், சமத்துவமும் ஒன்றுடன் மற்றொன்று நெருக்கம் பாராட்டுகின்றன" என்று கூறியவர் யார்?
A
பெல்லார்டு
B
சீப் ஜோசப்
C
லாஸ்கி
D
ப்ரைஸ்
Question 80 Explanation: 
விளக்கம்: சுதந்திரமும், சமத்துவமும் சமதர்ம மக்களாட்சியில் மட்டுமே ஒன்றோடு ஒன்றாக இணைந்து பயணம் செய்ய முடியும். சுதந்திரத்திற்கு ஒரே ஒரு தீர்வுதான் உண்டு. அது என்னவெனில் சமத்துவம் மட்டுமே. “இதனால் சுதந்திரமும், சமத்துவமும் ஒன்றுடன் மற்றொன்று நெருக்கம் பாராட்டுகின்றன“ என்று கூறுகிறார் பொல்லார்டு.
Question 81
கீழ்க்கண்டவற்றுள் சமத்துவம் தொடர்பான பிரச்சினைகள் எவை?
A
வேறுபட்ட பொருள் விளக்கங்கள்
B
ஒவ்வொரு வகைப்பாடுகளிலும் உள்ள முரண்பாடுகள்
C
வேலை வாய்ப்பு பாகுபாடுகள்
D
a) மற்றும் b)
Question 81 Explanation: 
விளக்கம்: சமத்துவம் தொடர்பான பிரச்சினைகள் வேறுபட்ட பொருள் விளக்கங்கள் – சமமாக நடத்துதல், சமமான வெளிப்பாடுகள், மற்றும் சமவாய்ப்புகள் என்பன பற்றி தேவைக்கதிகமான வரையறைகள், பொருள் விளக்கங்கள் இந்த பரந்த வரைகூறுகளில் உள்ளன. *ஒவ்வொரு வகைப்பாடுகளிலும் உள்ள முரண்பாடுகள் – சமமாக பாவித்தல் என்பது சமமான வெளிப்பாடுகளைத் தடுக்கிறது. அதேபோல சமமான வெளிப்பாடுகள் என்பது சமமான பாவித்தலை பாதிக்கின்றது.
Question 82
சம வாய்ப்புகள் என்பது கருத்தாக்கத்தின் அடிப்படையின் உருவாக்கும் பிரச்சனை எது?
A
பின்னடைவு பிரச்சனை
B
பொருளாதார பிரச்சனை
C
சமூக பிரச்சனை
D
இயற்கை பிரச்சனை
Question 82 Explanation: 
விளக்கம்: சம வாய்ப்புகள் என்பது கருத்தாக்கத்தின் அடிப்படையின் பின்னடைவு பிரச்சனையை உருவாக்குகிறது. சமமாக நடத்துதல் என்பது பல விதமான வாய்ப்பு வேற்றுமைகளை உள்ளடக்கியதாகும். இதன் விளைவாக வாய்ப்பு வேற்றுமைகளை பொருத்தமான வேற்றுமைகள் மற்றும் பொருத்தமில்லாத வேற்றுமைகள் என அடையாளம் காண இயலாது. உதாரணத்திற்கு உடல்பருமனைக் குறிப்பிடலாம்.
Question 83
பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.
  1. சமத்துவத்தைவிட, சம நியாயமே சமூக நீதியாக பார்க்கப்படுகிறது.
  2. சமத்துவமின்மையும் சில சமயங்களில் விரும்பப்படுகிறது, எப்படியெனில் அப்போதுதான் தகுதிக்கான, நியாயமான பரிசு கிடைக்கப்பெறும்.
A
(i) மட்டும்
B
(ii) மட்டும்
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 83 Explanation: 
விளக்கம்: உண்மையில் சமமான வெளிப்பாடுகள் என்பவை எப்போதும் இலக்காக விரும்பப் படுவதில்லை. சமத்துவத்தைவிட, சம நியாயமே சமூக நீதியாக பார்க்கப்படுகிறது. நியாயத்தின் ஒரு கோணமே சமத்துவமாகும். *ஆனாலும் சமத்துவமின்மையும் சில சமயங்களில் விரும்பப்படுகிறது, எப்படியெனில் அப்போதுதான் தகுதிக்கான, நியாயமான பரிசு கிடைக்கப்பெறும்.
Question 84
பின்வருவனவற்றுள் சமத்துவத்தை ஊக்குவிக்கும் வழிமுறை/கள் எது/எவை?
A
முறைசார்ந்த சமத்துவத்தை உருவாக்குதல்
B
வேறுபடுத்தி நடத்துதலின் மூலம் சமத்துவத்தை ஏற்படுத்துதல்
C
உடன்பாடான நடவடிக்கைகள் மூலம் சமத்துவம்
D
மேற்கண்ட அனைத்தும்
Question 84 Explanation: 
விளக்கம்: சுதந்திர வாதிகளுக்கும், சமதர்மவாதிகளுக்கும் இடையேயான வேறுபாட்டை நாம் உணரும்பட்சத்தில், சமத்துவ இலக்கை அடையும் வழிமுறையும் நமக்கு தெளிவடைகிறது. பின்வரும் சமத்துவத்தை ஊக்குவிக்கும் வழிமுறைகளைப் பற்றிய பரந்த விவாதம் நம்மை சில முறைகளுக்கு வழிகாட்டுகிறது. அவற்றினைப் பற்றி தெரிந்து கொள்வோம். அவைகள், முறைசார்ந்த சமத்துவத்தை உருவாக்குதல் வேறுபடுத்தி நடத்துதலின் மூலம் சமத்துவத்தை ஏற்படுத்துதல் உடன்பாடான நடவடிக்கைகள் மூலம் சமத்துவம்.
Question 85
பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.
  1. மரபுவழி சுதந்திரவாதிகள் கடுமையான தகுதிமுறையும், பொருளாதார ஊக்குவிப்புகளையும் பரிந்துரைக்கின்றார்கள்.
  2. தற்கால சுதந்திரவாதிகள், சமூக சமத்துவம் நிலைப்படும்பட்சத்தில், சமவாய்ப்புகள் நியாயமாக வழங்கப்படலாம் என்றுரைக்கின்றனர்.
A
(i) மட்டும்
B
(ii) மட்டும்
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 85 Explanation: 
விளக்கம்: ஆண்ட்ரூ ஹேவுட் (Andrew Heywood) கூறும் பல்வேறுவகை சமத்துவ லட்சியங்களைப் பற்றிய பார்வை: சுதந்திரவாதிகள்: சுதந்திரவாதிகள், நம்புவது என்னவெனில் பிறக்கும்போது அனைத்து மக்களும் சமமாவர். இவர்கள் நீதிநெறி அடிப்படையில் சமமாக கருதப்படுகிறார்கள். இது முறையான சமத்துவத்தை உணர்த்துவதாகவும், குறிப்பாக சட்ட மற்றும் அரசியல் சமவாய்ப்புரிமை என்றாலும், சமூக சமத்துவம் என்பது சுதந்திரத்தை தியாகம் செய்து பெறக்கூடியதாகும். மரபுவழி சுதந்திரவாதிகள் கடுமையான தகுதிமுறையும், பொருளாதார ஊக்குவிப்புகளையும் பரிந்துரைக்கின்றார்கள். இதற்கு மாறாக தற்கால சுதந்திரவாதிகள், சமூக சமத்துவம் நிலைப்படும்பட்சத்தில், சமவாய்ப்புகள் நியாயமாக வழங்கப்படலாம் என்றுரைக்கின்றனர்.
Question 86
பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.
  1. பழமைவாதிகள் சமூகம் இயற்கையிலேயே படிநிலை அமைப்புடையது என்றும், சமத்துவம் என்பதை எப்போதுமே அடைய முடியாத ஒருகற்பனை இலக்காக கருதுகின்றனர்.
  2. புதிய உரிமையின் அடிப்படையில், வலிமையான தொழில்முனைவோர் நம்பிக்கையின் அடிப்படையில் சமவாய்ப்புகளை வழங்கும், அதே நேரத்தில் பொருளாதார சமத்துவமின்மையின் பொருட்பயன்களையும் வலியுறுத்துகிறது.
A
(i) மட்டும்
B
(ii) மட்டும்
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 86 Explanation: 
விளக்கம்: பழமைவாதிகள் சமூகம் இயற்கையிலேயே படிநிலை அமைப்புடையது என்றும், சமத்துவம் என்பதை எப்போதுமே அடைய முடியாத ஒருகற்பனை இலக்காக கருதுகின்றனர். ஆனால் புதிய உரிமையின் அடிப்படையில், வலிமையான தொழில்முனைவோர் நம்பிக்கையின் அடிப்படையில் சமவாய்ப்புகளை வழங்கும், அதே நேரத்தில் பொருளாதார சமத்துவமின்மையின் பொருட்பயன்களையும் வலியுறுத்துகிறது.
Question 87
சமதர்மச் சிந்தனையாளர்கள் எதனை அடிப்படை விழுமியமாக கருதுகின்றனர்?
A
சமத்துவம்
B
சுதந்திரம்
C
குடியரசு
D
இறையாண்மை
Question 87 Explanation: 
விளக்கம்: சமதர்மவாதிகள்: சமதர்மச் சிந்தனையாளர்கள் சமத்துவத்தை அடிப்படையான விழுமியமாகவும், அதிலும் குறிப்பாக சமூக சமத்துவத்தை முக்கியமாக ஒப்புக் கொள்கிறார்கள். சமூக மக்களாட்சி தொடர்பான கருத்தாக்கத்தில் பல பரிமாணங்கள் இருந்தாலும், இவ்வகையான சமத்துவம் நிச்சயமாக சமூக ஒருங்கிணைப்பிலும், சகோதரத்துவத்திலும் கால்தடம் பதிக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
Question 88
நீதியை நிலைநாட்டுவதற்கும், சம நீதியிலான பங்கை அளிப்பதற்கும் பயன்படுவது எது?
A
இயற்கை சமத்துவம்
B
சுதந்திர சமத்துவம்
C
சமூக சமத்துவம்
D
அரசியல் சமத்துவம்
Question 88 Explanation: 
விளக்கம்: சமூக சமத்துவம் என்பது நீதியை நிலைநாட்டுவதற்கும், சம நீதியிலான பங்கை அளிப்பதற்கும், சுதந்திரத்தினை பெருமளவில் நேர்மறையாக அளிப்பதற்கும் பயன்படுகிறது.
Question 89
அரசியல் சமத்துவத்தை மையப்படுத்தி தங்கள் கருத்தாக்கத்தை வலிமைப்படுத்தியுள்ளவர்கள்?
A
சமதர்மவாதிகள்
B
சூழலியல்வாதிகள்
C
அமைப்பெதிர்வாதிகள்
D
பாசிசவாதிகள்
Question 89 Explanation: 
விளக்கம்:அமைப்பெதிர்வாதிகள்: இவ்வகை கொள்கைவாதிகள் அரசியல் சமத்துவத்தை மையப்படுத்தி தங்கள் கருத்தாக்கத்தை வலிமைப்படுத்தியுள்ளார்கள். அரசியல் சமத்துவம் தனிநபர் சுதந்திரத்தை வழங்கும் என்றும், அனைத்து விதமான அரசியல் சமத்துவமின்மையும் எதிர்க்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கிறார்கள். பயன்தரக்கூடிய வளங்களை கூட்டு சொத்துடைமை ஆக்குவதன் மூலம் சமூக சமத்துவத்தை அடையலாம் என்பது அமைப் பெதிர்வாத பொதுவுடைமைவாதிகளின் (Anarcho-Communists) நம்பிக்கையாகும்.
Question 90
பாசிசவாதிகள் குறித்த பின்வரும் கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு.
  1. மனித குலமே இன அடிப்படையிலான சமத்துவமின்மையுடன் இருக்கிறது.
  2. இவ்வுலகில் இப்பாகுபாடு தலைவர், தொண்டர், நாடுகள் மற்றும் பல இனங்களுக்கு இடையேயும் இவ்வுலகத்தில் காணப்படுகிறது.
A
(i) மட்டும்
B
(ii) மட்டும்
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 90 Explanation: 
விளக்கம்: பாசிசவாதிகள் மனித குலமே இன அடிப்படையிலான சமத்துவமின்மையுடன் இருக்கிறது. இவ்வுலகில் இப்பாகுபாடு தலைவர், தொண்டர், நாடுகள் மற்றும் பல இனங்களுக்கு இடையேயும் இவ்வுலகத்தில் காணப்படுகிறது. ஒருதேசமோ அல்லதுஇனமோ எதுவானாலும், அதில் அங்கம் வகிக்கும் நபர்கள் சமமாக பாவிக்கப்படுகிறார்கள். அவர்களின் பிரதான அடையாளமே அவர்களை கண்டறிய பயன்படுகிறது.
Question 91
பாலின சமத்துவத்தை குறிக்கோளாக  கொண்டவர்கள் யாவர்?
A
சமதர்மவாதிகள்
B
பெண்ணியவாதிகள்
C
அமைப்பெதிர்வாதிகள்
D
பாசிசவாதிகள்
Question 91 Explanation: 
விளக்கம்: பெண்ணியவாதிகள்: பாலின சமத்துவமே இக்கொள்கைவாதிகளின் குறிக்கோள் ஆகும். ஆண்களுக்கு சமமாக பெண்களும் சம உரிமைகள், சமவாய்ப்புகள் பெறுவதோடு மட்டுமல்லாமல், சமூக, பொருளாதார நிலைகளிலும் சம அதிகாரம் பெறுவதை இவர்கள் ஆதரிக்கிறார்கள். ஆனால் இவ்வாறு சமத்துவத்தை கோருவது என்பது பெண்கள், “ஆண்களின் மூலம் அடையாளம்“ காணப்படுவதாக சில முற்போக்கு பெண்ணியவாதிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
Question 92
வாழ்வின் அனைத்து வடிவங்களும் வாழவும், மலர்ந்து வளம் பெறவும் சம உரிமை உள்ளது என வலியுறுத்துபவர்கள் யாவர்?
A
சமதர்மவாதிகள்
B
சூழலியல்வாதிகள்
C
அமைப்பெதிர்வாதிகள்
D
பாசிசவாதிகள்
Question 92 Explanation: 
விளக்கம்: சூழலியல்வாதிகள் உயிரி மைய சமத்துவமானது, வாழ்வின் அனைத்து வடிவங்களும் வாழவும், மலர்ந்து வளம் பெறவும் சம உரிமை உள்ளது என வலியுறுத்துகிறது. மரபார்ந்த கருத்தானது, சமத்துவத்தை மனித இனத்தை மையமாக (Anthropocentric) மட்டுமே வைத்து இயங்குகிறது என்று கூறுகிறார்கள். இதனால் மனித இனத்தை தவிர்த்து, ஏனைய மற்ற உயிரினங்களும், உருபொருளும் இதில் சேராது.
Question 93
பின்வரும் கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு.
  1. உலக அளவில் சமூக, பொருளாதார, அரசியல் ஏற்றத்தாழ்வுகள் அனைத்தும் வாய்ப்புகள் மற்றும் வெகுமதிகளை சில சமூக பிரிவுகள் அனுபவிக்க முடியாதவாறு தடுத்து நிறுத்துகின்றன.
  2. உலகத்தின் சில பகுதிகளில், பெண்கள் பணிசார்ந்த வளர்ச்சி பாதையில் செல்வதற்கு அனுமதிக்கப்படுவதில்லை.
A
(i) மட்டும்
B
(ii) மட்டும்
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 93 Explanation: 
விளக்கம்: முறைசார்ந்த சமத்துவத்தை நிறுவும் வழிகள்: உலக அளவில் சமூக, பொருளாதார, அரசியல் ஏற்றத்தாழ்வுகள் அனைத்தும் நடைமுறை பழக்க வழக்கங்களின் மூலமாகவும், சட்ட முறைமை வழியாகவும் குறிப்பிட்ட சில வகையான, வாய்ப்புகள் மற்றும் வெகுமதிகளை சில சமூக பிரிவுகள் அனுபவிக்க முடியாதவாறு தடுத்து நிறுத்துகின்றன. உதாரணத்திற்கு, ஏழைகளுக்கு வாக்குரிமை மறுக்கப்படுகிறது. உலகத்தின் சில பகுதிகளில், பெண்கள் பணிசார்ந்த வளர்ச்சி பாதையில் செல்வதற்கு அனுமதிக்கப்படுவதில்லை.
Question 94
பின்வரும் கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு.
  1. இந்தியாவில் நடைமுறையில் இயங்கும் சாதி முறைமையின்படி, தாழ்த்தப்பட்ட மக்கள், உடலால் உழைப்பதைத் தவிர பிற பணிகளில் ஊக்கப்படுத்தப்படுவதில்லை.
  2. சில நாடுகளில், சில குடும்பங்கள் மட்டுமே முக்கிய பதவிகளை வகிக்கின்றன.
A
(i) மட்டும்
B
(ii) மட்டும்
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 94 Explanation: 
விளக்கம்: இந்தியாவில் நடைமுறையில் இயங்கும் சாதி முறைமையின்படி, தாழ்த்தப்பட்ட மக்கள், உடலால் உழைப்பதைத் தவிர பிற பணிகளில் ஊக்கப்படுத்தப்படுவதில்லை. இன்னும் சில நாடுகளில், சில குடும்பங்கள் மட்டுமே முக்கிய பதவிகளை வகிக்கின்றன. இவ்விதம் செயல்படும் சலுகைகள் நிலுவையில் இருக்கும் வரை சமத்துவத்தை அடைவது கடினமாகிறது. இது மாதிரியான சலுகைகளை நிறுத்தாமல் சமத்துவத்தை அடையமுடியாது. தொன்றுதொட்டு இவ்விதமான முறைமைகள் சட்டத்தின் மூலம் வலிமைப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் விளைவாக சமத்துவத்தை அடைய வேண்டுமென்றால், அரசாங்கத்தின் தலையீடு என்பது சட்டத்தின் மூலமாக அவசியமாகிறது.
Question 95
பின்வரும் கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு.
  1. இந்திய அரசமைப்பின் படி சாதி, மதம், இனம், பாலினம் அல்லது பிறப்பிடத்தை அடிப்படையாக கொண்ட பாகுபாடுகள் அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளது.
  2. நமது அரசமைப்பு தீண்டாமையையும் ஒழித்துள்ளது.
A
(i) மட்டும்
B
(ii) மட்டும்
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 95 Explanation: 
விளக்கம்: நமது அரசமைப்பானது, நாட்டின் அடிப்படையான மற்றும் மேலான சட்டம் என்ற அடிப்படையில் இப்பணிகளை செய்ய முற்படுகிறது. இந்திய அரசமைப்பின் படி சாதி, மதம், இனம், பாலினம் அல்லது பிறப்பிடத்தை அடிப்படையாக கொண்ட பாகுபாடுகள் அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் நமது அரசமைப்பு தீண்டாமையையும் ஒழித்துள்ளது. பல்வேறு நவீன அரசுகளும், மக்களாட்சி அரசாங்கங்களும் சமத்துவக் கொள்கையை தத்தமது நாட்டின் அரசமைப்பில் இணைத்துக் கொண்டுள்ளன.
Question 96
‘சட்டத்தின்முன் அனைவரும் சமம் அல்லது அனைவருக்கும் சட்டத்தின் மூலம் சமமான பாதுகாப்பு’ அளிக்கும் அரசமைப்பு உறுப்பு எது?
A
13
B
15
C
14
D
16
Question 96 Explanation: 
விளக்கம்: இந்திய அரசமைப்பின் சமத்துவ கருத்தாக்கம் இந்திய அரசமைப்பின் உறுப்பு - 14-ன் படி ‘சட்டத்தின்முன் அனைவரும் சமம் அல்லது அனைவருக்கும் சட்டத்தின் மூலம் சமமான பாதுகாப்பு’ அளிக்கப்படுகிறது. இது முறை சார்ந்த சமத்துவமாகவும், முகவுரையில் கூறப்பட்டுள்ளது போல, “சமமான நிலை மற்றும் வாய்ப்புகளை“ குறிக்கிறது.
Question 97
பிறப்பிடம், சாதி, மதம், மொழி, இனம், பாலினம், நிறம் போன்றவை அடிப்படையில் பாகுபடுத்துவதை தடை செய்யும் உறுப்பு எது?
A
13
B
15
C
14
D
16
Question 97 Explanation: 
விளக்கம்: நாட்டின் சட்டமானது அனைத்து மக்களுக்கும் சமமாக பொருந்தும் என்றும் பிறப்பிடம், சாதி, மதம், மொழி, இனம், பாலினம், நிறம் போன்றவை அடிப்படையில் பாகுபாடு காட்டக்கூடாது என்றும் தெரிவிக்கிறது என்றும், இதைப் போல உறுப்பு - 15, உறுப்பு - 14-ஐ உறுதிப்படுத்தும் நோக்குடன் இவ்வகை பாகுபாடுகளை தடை செய்துள்ளது.
Question 98
‘எந்தவொரு தனி நபரும், சட்ட நடை முறையன்றி அவரது வாழ்வு அல்லது தனிப்பட்ட சுதந்திரத்தினை இழக்க வைக்க முடியாது’ என்றும் கூறும் அரசமைப்பு உறுப்பு எது?
A
13
B
15
C
21
D
16
Question 98 Explanation: 
விளக்கம்: சட்டத்தின் முன் சமம்’ மற்றும் ‘சமமான சட்டப் பாதுகாப்பு’ ஆகியவை இந்திய அரசமைப்பின் உறுப்பு - 21-ன் மூலம் வலிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி ‘எந்தவொரு தனி நபரும், சட்ட நடை முறையன்றி அவரது வாழ்வு அல்லது தனிப்பட்ட சுதந்திரத்தினை இழக்க வைக்க முடியாது’ என்றும் விளக்குகிறது. இதன் மூலம் அறிவது யாதெனில், ஒரு தனிநபரை தண்டிக்க வேண்டும் என்றால், அதை சட்டத்தின் நடைமுறை மூலம் மட்டுமே செயல்படுத்த முடியும். இது போல ஒருதலைபட்சமாகவோ, பாகுபாடான முறையிலோ அல்லது சமமற்ற முறையில் பல தனிமனிதர்களை நடத்துதலோ தவறு ஆகிறது’.
Question 99
சுதந்திர உரிமை குறித்து கூறும் அரசமைப்பு உறுப்பு எது?
A
14 - 16
B
15 - 21
C
16 - 21
D
14 - 18
Question 99 Explanation: 
விளக்கம்: சுதந்திர உரிமை (உறுப்பு 14 -18) சட்டத்தின் முன் சமம் (உறுப்பு -14) மத அடிப்படையிலான பாகுபாடுகளுக்கு தடை (உறுப்பு -15)
Question 100
பொது வேலைவாய்ப்பில் சம வாய்ப்புரிமை வழங்கும் அரசமைப்பு உறுப்பு எது?
A
16
B
15
C
18
D
17
Question 100 Explanation: 
பொது வேலைவாய்ப்பில் சம வாய்ப்புரிமை (உறுப்பு -16) தீண்டாமை ஒழிப்பு (உறுப்பு -17) பட்டங்கள் ஒழிப்பு (உறுப்பு -18) சில நேரங்களில் தனிநபர்களை வேறுபடுத்தி நடத்துதல் மூலம், சம உரிமைகள் உறுதிசெய்யப்படுவது அவசியமாகிறது. இதற்காக சிலவித வேற்றுமைகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவது
Question 101
  • கூற்று(கூ): இயலாதவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் இரவு நேரங்களில் பெருநிறுவனங்கள், மென்பொருள் நிறுவனங்களில் பணிபுரிய செல்லும் பெண்களுக்கு சில சிறப்பு சலுகைகள் அளிப்பதுஅவசியமாகிறது.
  • காரணம் (கா): வேறுபடுத்தி நடத்துதல் என்பது சமத்துவத்தை உயர்த்துமேயன்றி சமத்துவக்கொள்கை வரம்பினை மீறாது எனலாம்.
A
கூற்று சரி, காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமன்று
B
கூற்று சரி, காரணம் தவறு
C
கூற்றும் தவறு காரணமும் தவறு
D
கூற்று சரி, காரணத்திற்கு கூற்று சரியான விளக்கமாகும்
Question 101 Explanation: 
விளக்கம்: இயலாதவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் இரவு நேரங்களில் பெருநிறுவனங்கள், மென்பொருள் நிறுவனங்களில் பணிபுரிய செல்லும் பெண்களுக்கு சில சிறப்பு சலுகைகள் அளிப்பதுஅவசியமாகிறது. மேற்கூறியவற்றில் வேறுபடுத்தி நடத்துதல் என்பது சமத்துவத்தை உயர்த்துமேயன்றி சமத்துவக்கொள்கை வரம்பினை மீறாது எனலாம்.
Question 102
சமத்துவம் பாதிக்கப்படாமல் இருக்க, அரசாங்கத்தின் மூலம் எடுக்கப்படும் கொள்கைக்கு எடுத்த்துக்காட்டு எது?
A
இடஒதுக்கீடு கொள்கை
B
உடன்பாட்டு நடவடிக்கை
C
a) மற்றும் b)
D
வாக்குரிமை
Question 102 Explanation: 
விளக்கம்: சமத்துவம் பாதிக்கப்படாமல் இருக்க, அரசாங்கத்தின் மூலம் சில கொள்கைகள் அவசியமாகிறது.உதாரணத்திற்கு இந்தியாவில் இடஒதுக்கீடு கொள்கையும், ஏனைய பிற நாடுகளில் “உடன்பாட்டு நடவடிக்கை”யும் (Affirmative Action) பின்பற்றப்படுகிறது.
Question 103
சட்டத்தின் மூலமாக முறைசார்ந்த சமத்துவம் நிறுவப்பட முடியாத நிலையில் தேவைப்படுவது எது?
A
எதிர்மறை நடவடிக்கை
B
உடன்பாட்டு நடவடிக்கை
C
a) மற்றும் b)
D
வாக்குரிமை
Question 103 Explanation: 
விளக்கம்: சட்டத்தின் மூலமாக முறைசார்ந்த சமத்துவம் நிறுவப்பட முடியாத நிலையில் ‘உடன்பாட்டு நடவடிக்கை’ தேவையாகிறது. நன்றாக வேரூன்றிய சமூக சமத்துவமின்மையை களைவதற்குண்டான நேர்மறையான நடவடிக்கைகளை அமல்படுத்துவது முக்கியமாகிறது. இவை சமூக சமத்துவமின்மையின் தீவிரமான வடிவங்களை படிப்படியாகக் குறைத்து நீக்குகிறது.
Question 104
பெரும்பாலுமான உடன்பாட்டு நடவடிக்கையின் கொள்கைகள் எதற்கு தீர்வாக வடிவமைக்கப்படுகின்றன?
A
கல்வியின்மை
B
சமத்துவமின்மை
C
சுதந்திரமின்மை
D
அடிப்படை உரிமையின்மை
Question 104 Explanation: 
விளக்கம்: பெரும்பாலுமான உடன்பாட்டு நடவடிக்கையின் கொள்கைகள் தொன்றுதொட்டு காணப்படும் சமத்துவமின்மையின் விளைவுகளை சரி செய்ய திரளான ஏதுவாக வடிவமைக்கப்படுகின்றன. நமது நாட்டில் ஒதுக்கீட்டுக் கொள்கை மற்றும் கல்வியில் இடஒதுக்கீடு, வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை, போன்றவை பின்தங்கியமக்களின் நலனுக்காக அளிக்கப்படுவது விவாதம் மற்றும் கருத்து வேறுபாடுகளுக்கு உள்ளாகி வருகிறது.
Question 105
பின்வரும் கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு.
  1. உடன்பாட்டு நடவடிக்கைகள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே இயங்கும்.
  2. உடன்பாட்டு நடவடிக்கையின் மூலமான சலுகைகள், சமுதாயத்தில் ஏனைய சமூக குழுக்கள் அனுபவித்து வரும் நலனுக்கு சமமாகவும், குறைபாடுகளைக் களையவும் உதவி புரிகின்றன.
A
(i) மட்டும்
B
(ii) மட்டும்
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 105 Explanation: 
விளக்கம்: உடன்பாட்டுக்கொள்கையானது சமுதாயத்தில் சில குழுக்கள் சந்திக்கும் சமூக பாரபட்சம், விலக்கல், ஒதுக்கப்படுதல் மற்றும் பாகுபாட்டிற்கு நியாயமான தீர்வாக இந்த உடன்பாட்டு நடவடிக்கை நியாயப்படுத்தப்படுகிறது. அது மட்டுமல்லாமல் நியாயமான மற்றும் சமத்துவ சமுதாயம் உருவாக வேண்டுமெனில், இவ்வகையான சிறப்பு சலுகைகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியாக இருக்க கூடும். இவ்வகையான உடன்பாட்டு நடவடிக்கைகள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே இயங்கும். இந்த உடன்பாட்டு நடவடிக்கையின் மூலமான சலுகைகள், சமுதாயத்தில் ஏனைய சமூக குழுக்கள் அனுபவித்து வரும் நலனுக்கு சமமாகவும், குறைபாடுகளைக் களையவும் உதவி புரிகின்றன.
Question 106
பின்வரும் கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு.
  1. சிறுபான்மை மக்கள் குழுவின் பொது நலுனுக்காக அளிக்கப்படும் சலுகை கொள்கை அல்லது மேம்பாட்டுத் திட்டம், உடன்பாட்டு நடவடிக்கை எனப்படுகிறது.
  2. சிறுபான்மை மக்கள்  குழுவிற்கு கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம், சமூக நலன் போன்றவைகளில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
A
(i) மட்டும்
B
(ii) மட்டும்
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 106 Explanation: 
விளக்கம்: உடன்பாட்டு நடவடிக்கை – வரையறை தொன்றுதொட்டு பாதிக்கப்பட்டு வரும் சிறுபான்மை மக்கள் குழுவின் பொது நலுனுக்காக அளிக்கப்படும் சலுகை கொள்கை அல்லது மேம்பாட்டுத் திட்டம், உடன்பாட்டு நடவடிக்கை எனப்படுகிறது. இந்த நடவடிக்கைகளின் மூலம் பாகுபாடுகளை மட்டுமே சந்தித்து வரும் மக்கள் குழுவிற்கு, சமதர்ம சமூகத்தை உருவாக்கும் பொருட்டு கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம், சமூக நலன் போன்றவைகளில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
Question 107
சிவில் என்று வார்த்தை எம்மொழியிலிருந்து பெறப்பட்டது?
A
இலத்தீன்
B
பிரெஞ்சு
C
ஆங்கிலம்
D
ஜெர்மனி
Question 107 Explanation: 
விளக்கம்: சிவில் என்று வார்த்தை சிவில் என்ற இலத்தீன் மொழிச்சொல்லிலிருந்து பெறப்பட்டது. ஆங்கிலத்தில் குடிமக்கள் என்று பெயர் பெறுகிறது. குடிமை சமத்துவம் எனப்படுவது அனைத்து குடிமக்களுக்கும் ஒரே மாதிரியான குடிமை சுதந்திரங்கள் மற்றும் குடிமை உரிமைகளை உள்ளடக்கியது ஆகும்.
Question 108
பின்வரும் கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு.
  1. சட்டத்தின் முக்கிய கடமையே, தனிமனிதர்களின் சுதந்திரத்தைப் பாதுகாப்பது ஆகும்.
  2. ஓர் தனிமனிதனின் பாதுகாப்பு என்பது அவனது சுதந்திரத்தின் நிலையைப் பொறுத்தாகும்.
A
(i) மட்டும்
B
(ii) மட்டும்
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 108 Explanation: 
விளக்கம்: சட்டத்தினால் அனுமதிக்கப்பட்டவாறு நீங்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு உங்களுக்கு உரிமை உண்டு. சட்டத்தின் முக்கிய கடமையே, தனிமனிதர்களின் சுதந்திரத்தைப் பாதுகாப்பது ஆகும். ஓர் தனிமனிதனின் பாதுகாப்பு என்பது அவனது சுதந்திரத்தின் நிலையைப் பொறுத்தாகும். சட்டமும், சுதந்திரமும் ஒன்றோடு ஒன்றாக பிணைந்து, அனைவரும் சமமாக நடத்தப்பட வழிவகை செய்கின்றன. அரசின் தலையாய கடமையே, குடிமக்களின் சுதந்திரத்தை பாதுகாப்பது என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும்.
Question 109
பின்வரும் கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு.
  1. ஒவ்வொரு தனிமனிதனுக்கும், அவர்களுக்குரிய உரிமைகளை அளிப்பதும், பாதுகாப்பதும் அரசினுடைய முக்கிய கடமைகளில் ஒன்றாகும்.
  2. தனிமனிதர்களுக்கிடையேயான சமத்துவத்தையும், அரசு தான் நிறைவேற்ற வேண்டியவற்றில் வைத்துள்ளது.
A
(i) மட்டும்
B
(ii) மட்டும்
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 109 Explanation: 
விளக்கம்: ஒவ்வொரு தனிமனிதனையும், அரசு சில நியாயமான காரணங்களுக்காக கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது உங்களுக்கு தெரியுமா? இதனால் குடிமக்களுடைய சலுகைகள் எவ்விதத்திலும் பாதிப்படைவதில்லை. ஒவ்வொரு தனிமனிதனுக்கும், அவர்களுக்குரிய உரிமைகளை அளிப்பதும், பாதுகாப்பதும் அரசினுடைய முக்கிய கடமைகளில் ஒன்றாகும். இவ்வாறான செயல்பாடுகளில், தனிமனிதர்களுக்கிடையேயான சமத்துவத்தையும், அரசு தான் நிறைவேற்ற வேண்டியவற்றில் வைத்துள்ளது.
Question 110
  • கூற்று(கூ): மாணவர்களை ஓரளவிற்கு கட்டுக்குள் வைக்கவும், கட்டுப்பாடான சுதந்திரத்தை மாணவர்கள் அனுபவிக்கும் வகையிலுமே ஆசிரியர்கள் செயல்படுகிறார்கள்.
  • காரணம் (கா): இவ்வித கட்டுப்பாடுகள், மாணவர்களின் மெ ன்மையான நன்நடத்தைக்கும், அவர்களின் திறன்மிக்க கற்றலுக்கும் ஏதுவாக அமைகிறது.
A
கூற்று சரி, காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமன்று
B
கூற்று சரி, காரணம் தவறு
C
கூற்றும் தவறு காரணமும் தவறு
D
கூற்று சரி, காரணத்திற்கு கூற்று சரியான விளக்கமாகும்
Question 110 Explanation: 
விளக்கம்: வகுப்பறை சூழலில் மாணவர்களுக்கான சுதந்திரம் வேறுபடுகிறது. மாணவர்களின் பார்வையில், சில ஆசிரியர்கள் கடுமையானவர்களாகவும், ஏனைய சில ஆசிரியர்கள் சுதந்திர மனப்போக்குடனும் நடந்துகொள்கின்றனர். மேற்கூறிய பார்வை, மாணவர்கள் தங்களுடைய சுதந்திரத்தை வகுப்பறையில் எந்த அளவிற்கு அனுபவிக்கிறார்கள் என்பதைப் பொறுத்து அமைகிறது. மாணவர்களை ஓரளவிற்கு கட்டுக்குள் வைக்கவும், கட்டுப்பாடான சுதந்திரத்தை மாணவர்கள் அனுபவிக்கும் வகையிலுமே ஆசிரியர்கள் செயல்படுகிறார்கள். இவ்வித கட்டுப்பாடுகள், மாணவர்களின் மெ ன்மையான நன்நடத்தைக்கும், அவர்களின் திறன்மிக்க கற்றலுக்கும் ஏதுவாக அமைகிறது.
Question 111
பின்வரும் கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு.
  1. சுதந்திரம் எனப்படுவது சட்டத்தால் அனுமதிக்கப்படும் செயல்பாடு ஆகிறது.
  2. அதற்கான கட்டுப்பாடுகளும் ஒரு வகையில் சுதந்திரமாக கருதப்படுகிறது.
A
(i) மட்டும்
B
(ii) மட்டும்
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 111 Explanation: 
விளக்கம்: சுதந்திரம் என்னும் கருத்தாக்கத்தினைப் புரிந்துகொள்வது, மாணவர்கள் தங்கள் சக மாணவர்களிடம் உள்ள உறவுமுறை மற்றும் ஆசிரியர்களிடம் காட்டப்படும் நடத்தை மற்றும் மனப்போக்கு போன்றவற்றின் மூலமாக வகுப்பறையில் ஆரம்பிக்கிறது. குறிப்பிட்ட சந்தேகத்தை தீர்ப்பதற்கு கேள்வி கேட்பது மாணவர்களின் உரிமையாகும். அதற்கு ஆசிரியர்கள் அனுமதி வழங்குவது சுதந்திரம் ஆகிறது. சுதந்திரம் எனப்படுவது சட்டத்தால் அனுமதிக்கப்படும் செயல்பாடு ஆகிறது. அதற்கான கட்டுப்பாடுகளும் ஒரு வகையில் சுதந்திரமாக கருதப்படுகிறது.
Question 112
மனிதர்களுடைய வளர்ச்சிக்கும், அரசின் மேம்பாட்டிற்கும்  அதிமுக்கியமான அடிப்படைக் கூறு எது?
A
சமத்துவம்
B
சுதந்திரம்
C
பொருளாதாரம்
D
அடிப்படை உரிமை
Question 112 Explanation: 
விளக்கம்: மனிதர்களுடைய வளர்ச்சிக்கும், அரசின் மேம்பாட்டிற்கும் சுதந்திரம் அதிமுக்கியமான அடிப்படைக் கூறாகும். முற்காலத்திலும், இடைக்காலத்திலும், இங்கிலாந்து முடியாட்சி மக்களுக்குத் தேவையான சுதந்திரத்தை மறுதலித்தது வரலாற்று பதிவாகும். மக்களின் பொறுமையை சோதித்த முழுமையான முடியாட்சி புரட்சியை சந்திக்க நேரிட்டது. இங்கிலாந்து பேரரசர் ஜான் பணிய நேர்ந்ததுடன் குடிமக்களுக்கு சுதந்திரத்தை அளித்து பதவியை விட்டு விலகியதிற்கு பிறகே இந்த புரட்சி ஓய்ந்தது.
Question 113
பின்வரும் வரலாற்று நிகழ்வுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு.
  1. டியூடர் மற்றும் ஸ்டூவர்ட் பேரரசர்களுக்குப் பின்னால் வந்தவர்களும் முழுமையான முடியாட்சி முறையைத் தொடர்ந்ததால் “உள்நாட்டுப்போர்” வெடித்தது.
  2. சார்லஸ் மன்னர் சிரச்சேதம் செய்யப்பட்டு, பின்னர் க்ரோம்வெல் ஆட்சியில் இருந்தபோதும் கூட மக்களுக்கு தேவையான அடிப்படை சுதந்திரம் கிடைக்கவில்லை.
A
(i) மட்டும்
B
(ii) மட்டும்
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 113 Explanation: 
விளக்கம்: டியூடர் மற்றும் ஸ்டூவர்ட் பேரரசர்களுக்குப் பின்னால் வந்தவர்களும் முழுமையான முடியாட்சி முறையைத் தொடர்ந்ததால் “உள்நாட்டுப்போர்” வெடித்தது. சுதந்திர வேட்கையினால் உந்தப்பட்டு இப்போராட்டத்தில் அனைத்து குடிமக்களும் பங்கேற்றனர். சார்லஸ் மன்னர் சிரச்சேதம் செய்யப்பட்டு, பின்னர் க்ரோம்வெல் ஆட்சியில் இருந்தபோதும் கூட மக்களுக்கு தேவையான அடிப்படை சுதந்திரம் கிடைக்கவில்லை என்பது வரலாற்று நிகழ்வு ஆகும்.
Question 114
பின்வரும் கூற்றுகளில்  சரியான விடையைத் தேர்ந்தெடு.
  1. பிரெஞ்சு குடியரசுகள் என்பவை 1799-ஆம் ஆண்டு பிரெஞ்சுப் புரட்சிக்கான பிரகடனத்திற்கு பின்னர் தொடர்ச்சியாக உருவான குடியரசுகளைக் குறிப்பதாகும்.
  2. பிரான்சின் வரலாற்றில் ஐந்து குடியரசுகள் இருந்துள்ளன.
A
(i) மட்டும்
B
(ii) மட்டும்
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 114 Explanation: 
விளக்கம்: பிரெஞ்சு குடியரசுகள் என்பவை 1792-ஆம் ஆண்டு பிரெஞ்சுப் புரட்சிக்கான பிரகடனத்திற்கு பின்னர் தொடர்ச்சியாக உருவான குடியரசுகளைக் குறிப்பதாகும். இவ்வாறு பிரான்சின் வரலாற்றில் ஐந்து குடியரசுகள் இருந்துள்ளன. முதலாவது பிரெஞ்சு குடியரசு (1972 -1804), இரண்டாவது பிரெஞ்சு குடியரசு (1848- 1852), மூன்றாவது பிரெஞ்சு குடியரசு (1870- 1940), நான்காவது பிரெஞ்சு குடியரசு (1946-1958) என்றும் அதன் பின்னர் ஐந்தாவது பிரெஞ்சு குடியரசு அக்டோபர் 5, 1958-இல் ஏற்படுத்தப்பட்டது. ஐந்தாவது குடியரசானது நலிந்த மற்றும் உட்கட்சி பூசல் சார்ந்த நாடாளுமன்ற அரசாங்கத்திலிருந்து மாற்றியமைக்கப்பட்ட ஒரு வலிமை வாய்ந்த மையநோக்கு மக்களாட்சியாகும்.
Question 115
பின்வரும் கூற்றுகளில்  சரியான விடையைத் தேர்ந்தெடு.
  1. மக்கள் போராட்டத்தின் விளைவாக, பிரான்சில்  1688-இல் “மகத்தான புரட்சி”, முடியாட்சியை எதிர்த்து அரங்கேறியது.
  2. மக்களுக்கு மகத்தான வெற்றி கிடைத்ததுடன் சில காலம் முழுமையான முடியாட்சி கட்டுப்படுத்தப்பட்டது.
A
(i) மட்டும்
B
(ii) மட்டும்
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 115 Explanation: 
விளக்கம்: மக்கள் போராட்டத்தின் விளைவாக, இங்கிலாந்தில் 1688-இல் “மகத்தான புரட்சி”, முடியாட்சியை எதிர்த்து அரங்கேறியது. இதில் மக்களுக்கு மகத்தான வெற்றி கிடைத்ததுடன் சில காலம் முழுமையான முடியாட்சி கட்டுப்படுத்தப்பட்டது.
Question 116
”பிரெஞ்சு புரட்சி” எந்த ஆண்டில் ஏற்பட்டது?
A
1789
B
1799
C
1769
D
1779
Question 116 Explanation: 
விளக்கம்: ”பிரெஞ்சு புரட்சி” 1789-ல் ஏற்பட்டது. இது பல மாற்றங்களை ஏற்படுத்தினாலும், மக்களின் விடுதலை வேட்கைக்கு சரியான அளவில் தீர்வு ஏற்படாதிருந்தது. ஏனெனில் நெப்போலியனுக்கு பின்னர் ஆட்சியில் அமர்ந்தவர்களும் முடியாட்சியை தொடர்ந்தார்கள். மூன்றாம் நெப்போலியனின் வீழ்ச்சிக்கு பிறகு மூன்றாவது பிரெஞ்சு குடியரசு நிறுவப்பட்டது.
Question 117
பின்வரும் கூற்றுகளில்  சரியான விடையைத் தேர்ந்தெடு.
  1. 1958-இல் பிரான்சில் ஐந்தாம் குடியரசு நிறுவப்பட்டது.
  2. 19-ஆம் நூற்றாண்டில் இத்தாலியும்,  இந்தியாவும் மிகுந்த தியாகங்களுக்கு பின்னரே தேசிய சுதந்திரம் அடைந்தன.
A
(i) மட்டும்
B
(ii) மட்டும்
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 117 Explanation: 
விளக்கம்: 1940-இல் இதன் வீழ்ச்சிக்குப் பின்னர் வரிசையாக நான்காம் குடியரசும், 1958-இல் அதன் வீழ்ச்சிக்குப் பின்னர் ஐந்தாம் குடியரசும் நிறுவப்பட்டது. இதற்கிடையே காலனி ஆதிக்கத்திற்கு உட்பட்ட நாடுகள் விடுதலைக்கான நீண்ட நெடிய புரட்சிக்குப் பின்னர் சுதந்திரத்தை பெற்றன. 19-ஆம் நூற்றாண்டில் இத்தாலியும், 20-ம் நூற்றாண்டில் இந்தியாவும் மிகுந்த தியாகங்களுக்கு பின்னரே தேசிய சுதந்திரம் அடைந்தன.
Question 118
பின்வரும் கூற்றுகளில்  சரியான விடையைத் தேர்ந்தெடு.
  1. பிரெஞ்சு புரட்சியாளர்கள் ”சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்திற்காக” பாடுபட்டனர்.
  2. பிரெஞ்சு புரட்சியின் சிந்தனைகள் இங்கிலாந்து எழுத்தாளர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
A
(i) மட்டும்
B
(ii) மட்டும்
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 118 Explanation: 
விளக்கம்: * பிரெஞ்சு புரட்சியாளர்கள் ”சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்திற்காக” பாடுபட்டனர். பிரெஞ்சு புரட்சியின் சிந்தனைகள் இங்கிலாந்து எழுத்தாளர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அவர்கள் மக்களாட்சி மற்றும் தனிமனிதனுக்கான பிரெஞ்சு புரட்சியினால் தாக்கத்திற்கு உள்ளாயினர் எனலாம். தொழில்மயமாதலின் விளைவாகும் இயற்கை மற்றும் எளிமைக்கான ஏக்கம்.
Question 119
சுதந்திரம் என்பது “லிபர்” என்கிற எம்மொழி வார்த்தையிலிருந்து உருவாகி ஆங்கிலத்தில் ”கட்டுப்பாடில்லாதது” என்று பொருள் பெறுகிறது?
A
கிரேக்கம்
B
ஜெர்மானியம்
C
பிரெஞ்சு
D
இலத்தீன்
Question 119 Explanation: 
விளக்கம்: சுதந்திரம் என்பது “லிபர்” என்கிற லத்தீன் வார்த்தையிலிருந்து உருவாகி ஆங்கிலத்தில் ”கட்டுப்பாடில்லாதது” என்று பொருள் பெறுகிறது. “லிபர்” என்கிறவார்த்தைக்கு “தடைகள் இல்லாத” எனப் பொருள்படுகிறது. ஒருவர் எந்த சூழ்நிலையில் இருந்தாலும், தான் நினைத்ததை செய்ய முடியும் என்பது இதன் பொருளாகும். ஆனால் சுதந்திரம் என்பதை தனிமனிதர்களை தடையுடன் கூடிய சுதந்திர உரிமையை அனுபவிக்கும் விதத்தில் எடுத்துக்கொள்ளலாம்.
Question 120
"ஒழுங்குமுறை அரசில் சுதந்திரம் சாத்தியமாகிறது." என்று கூறியவர் யார்?
A
ஆஸ்டின்
B
லாஸ்கி
C
பார்க்கர்
D
ப்ரைஸ்
Question 120 Explanation: 
விளக்கம்:சட்டம் என்பது சுதந்திரத்தின் நிபந்தனையாக விளங்குகிறது. பேராசிரியர் பார்க்கரின் கூற்றுப்படி “ஒழுங்குமுறை அரசில் சுதந்திரம் சாத்தியமாகிறது. இவ்வகை அரசில் இறையாண்மையினுடைய சட்ட மற்றும் அரசியல் அம்சங்கள் ஒன்றியோ, ஏறக்குறையவோ அல்லது முழுவதுமாகவோ காணப்படுகிறது”.
Question 121
"மனிதர்கள் சிறப்பாக செயல்படும் வாய்ப்பிற்குரிய சூழ்நிலையை நிர்வகிப்பதே சுதந்திரம் ஆகும்" என்று கூறியவர் யார்?
A
ஆஸ்டின்
B
லாஸ்கி
C
பார்க்கர்
D
ப்ரைஸ்
Question 121 Explanation: 
விளக்கம்: லாஸ்கி உரைப்பது போல, “வரலாற்று அனுபவங்கள் மக்கள் வசதியாக வாழ்வதற்கும், தகுந்த முன்னேற்றத்திலான வாழ்விற்கான விதிமுறைகளையும் அளித்துள்ளது. கீழ்பணிதலை கட்டாயப்படுத்தும்போது சுதந்திரத்திற்கு உரிய நியாயமான வரையறையாக அது விளங்குகிறது”. மனிதர்கள் சிறப்பாக செயல்படும் வாய்ப்பிற்குரிய சூழ்நிலையை நிர்வகிப்பதே சுதந்திரம் ஆகும். - ஹெரால்ட் லாஸ்கி
Question 122
"சுதந்திரம் என்பது தனிமனிதர்கள், தங்கள் ஆளுமைத்தன்மையில் எந்தவித பாதிப்பும் இல்லாமல் தங்களை வெளிப்படுத்துவதாகும்" என்று கூறியவர் யார்?
A
ஆஸ்டின்
B
கெட்டல்
C
பார்க்கர்
D
ஜி.டி.எச். கோல்
Question 122 Explanation: 
விளக்கம்: சுதந்திரம் தொடர்பான அறிஞர்களின் கருத்துக்கள் சுதந்திரம்என்பது தகுதியானமகிழ்ச்சியையும், மற்றும் வேலையையும் அனுபவிப்பதற்கு உண்டான நேர்மறையான சக்தியாகும் – கெட்டல் (Gettel) சுதந்திரம் என்பது தனிமனிதர்கள், தங்கள் ஆளுமைத்தன்மையில் எந்தவித பாதிப்பும் இல்லாமல் தங்களை வெளிப்படுத்துவதாகும். – ஜி.டி.எச். கோல் (G.D.H.Cole)
Question 123
"சுதந்திரம் என்பதன் பொருள் தடைகள் இல்லாத நிலை என்பதல்ல, மாறாக சுதந்திரத்தை மேம்படுத்துவதில் உள்ளது" என்று கூறியவர் யார்?
A
ஆஸ்டின்
B
லாஸ்கி
C
பார்க்கர்
D
மகாத்மாகாந்தி
Question 123 Explanation: 
விளக்கம்: சுதந்திரம் என்பதன் பொருள் தடைகள் இல்லாத நிலை என்பதல்ல, மாறாக சுதந்திரத்தை மேம்படுத்துவதில் உள்ளது – மகாத்மாகாந்தி (Mahatma Gandhi) உரிமைகள் இல்லாமல் சுதந்திரம் கிடையாது, ஏனெனில் உரிமைகள் இல்லாத சூழ்நிலையில் குடிமக்கள் அனைவரும் ஆளுமைத் தன்மையின் தேவைகளுக்கு அவசியமற்ற வெறும் சட்டத்திற்கு உட்பட்ட மக்களாவர். - ஹெரால்ட் ஜே. லாஸ்கி (Harold.J.Laski)
Question 124
பின்வரும் கூற்றுகளில்  சரியான விடையைத் தேர்ந்தெடு.
  1. எதிர்மறை சுதந்திரம் என்பது, தடைகளில்லாத, கட்டுப்பாடுகள் களைந்த முழு சுதந்திர நிலையாகும்.
  2. நேர்மறை சுதந்திரம் என்பது செயல்படக்கூடிய வாய்ப்பு அல்லது செயல்படக்கூடிய உண்மை நிலையாகும்.
A
(i) மட்டும்
B
(ii) மட்டும்
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 124 Explanation: 
விளக்கம்: சுதந்திரம் மற்றும் விடுதலை : ஓர் மாறுபட்ட அணுகுமுறை *சுதந்திரம் என்பது அடக்குமுறையிலிருந்தும், வெளிகட்டுப்பாடுகளிலிருந்தும் விடுபெறும் விடுதலை நிலை ஆகும். எதிர்மறை சுதந்திரம் என்பது, தடைகளில்லாத, கட்டுப்பாடுகள் களைந்த முழு சுதந்திர நிலையாகும். நேர்மறை சுதந்திரம் என்பது செயல்படக்கூடிய வாய்ப்பு அல்லது செயல்படக்கூடிய உண்மை நிலையாகும்.
Question 125
பின்வரும் கூற்றுகளில்  சரியான விடையைத் தேர்ந்தெடு.
  1. எஜீஸ்டெம் ஜெனரிஸ்’ எனும் சட்டமொழியில் கூறுவது யாதெனில் ‘சுதந்திரம்’ என்ற சொல் உறுப்பு 19-ல் உள்ள பொதுவான வார்த்தையாகும்.
  2. ’தனிப்பட்ட சுதந்திரம்’ என்பதால் பாதுகாக்கப்படும் எதுவுமே உறுப்பு - 21-க்கு தொடர்புடையதாகும்.
A
(i) மட்டும்
B
(ii) மட்டும்
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 125 Explanation: 
விளக்கம்: எஜீஸ்டெம் ஜெனரிஸ்’ எனும் சட்டமொழியில் கூறுவது யாதெனில் ‘சுதந்திரம்’ என்ற சொல் உறுப்பு 19-ல் உள்ள பொதுவான வார்த்தையாகும். அது தனது அமைப்பினை அவ்வரசமைப்பு உறுப்பிடமிருந்து பெறுகிறது. ஆனால் உறுப்பு - 21-ல் இத்தகைய குறிப்பிட்ட வார்த்தைகள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை. அதில் ‘சுதந்திரம்’ என்ற சொல்லுக்கு முன்பாக ’தனிப்பட்ட’ என்னும் குறிப்பிட்ட வார்த்தை மட்டுமே பயன்படுத்தப்பட்டது. ஆகவே ’தனிப்பட்ட சுதந்திரம்’ என்பதால் பாதுகாக்கப்படும் எதுவுமே உறுப்பு - 21-க்கு தொடர்புடையதாகும்.
Question 126
தனிமனிதன் தன்னுடைய உரிமைகள் மூலம் ஆளுமை தன்மையை மேம்படுத்திக் கொள்வதற்கு வாய்ப்பளிப்பது எது?
A
நேர்மறை சுதந்திரம்
B
எதிர்மறை சுதந்திரம்
C
இயற்கை சுதந்திரம்
D
இவை அனைத்தும்
Question 126 Explanation: 
விளக்கம்: சுதந்திரத்தின் இரண்டு கட்டங்கள் (Two Phases of liberty) நேர்மறை சுதந்திரம் (Positive Liberty) நேர்மறை சுதந்திரம் என்பது சிலவற்றை செய்வதற்கான சுதந்திரம் ஆகும். இது தனிமனிதன் தன்னுடைய உரிமைகள் மூலம் ஆளுமை தன்மையை மேம்படுத்திக் கொள்வதற்கு வாய்ப்பளிக்கின்றது.
Question 127
யாருடைய கூற்றுப்படி சுதந்திரம் என்பது எதிர்மறையானதாகும்?
A
ஆஸ்டின்
B
கெட்டல்
C
பார்க்கர்
D
ஜே.எஸ்.மில்
Question 127 Explanation: 
விளக்கம்:எதிர்மறை சுதந்திரம் (Negative Liberty) ஜே.எஸ்.மில்லின் கூற்றுப்படி சுதந்திரம் என்பது எதிர்மறையானதாகும். மனிதனின் மீதும், அவனது செயல்பாட்டின் மீதும் எவ்வகை கட்டுப்பாடுகளும் விதிக்கப்படக் கூடாது என்கிறார். மேலும் மனிதனின் பாதையில் எவ்வகை தடைகளும் இருக்கக் கூடாது என வலுயுறுத்துகிறார்.
Question 128
பின்வருவனவற்றுள் சுதந்திரத்தின் வகைகள் யாவை?
A
இயற்கை சுதந்திரம்
B
அரசியல் சுதந்திரம்
C
பொருளாதார சுதந்திரம்
D
இவை அனைத்தும்
Question 129
ஒருவர் நினைப்பதைத் தங்கு தடையில்லாமல் நடத்தி முடிப்பதற்கான சுதந்திரம் எது?
A
இயற்கை சுதந்திரம்
B
அரசியல் சுதந்திரம்
C
பொருளாதார சுதந்திரம்
D
தனிப்பட்ட சுதந்திரம்
Question 129 Explanation: 
விளக்கம்: இயற்கை சுதந்திரம் (Natural Liberty) ஒருவர் நினைப்பதைத் தங்கு தடையில்லாமல் நடத்தி முடிப்பதற்கான சுதந்திரமே இயற்கை சுதந்திரம் என்ற கருத்தாக்கம் ஆகும். முற்றிலுமாக தடைகளில்லாத, கட்டுப்பாடுகளற்ற மற்றும் ஒருவர் நினைக்கக்கூடியதை செய்யக்கூடிய சுதந்திரமே இயற்கை சுதந்திரமாகும்.
Question 130
"பொதுப்படையான அறிவியல் சார்பில்லாத சொற்பிரயோகத்தினையே இயற்கை சுதந்திரம் என்கிறோம்" என்று கூறியவர் யார்?
A
ஆஸ்டின்
B
கெட்டல்
C
பார்க்கர்
D
கில்ரீஸ்ட்
Question 130 Explanation: 
விளக்கம்: அனைவருக்குமே சுதந்திரத்தைப் பற்றிய தெளிவற்ற பார்வைகள் உண்டு. அது அவரவர்களின் விருப்பத்தைப் பொறுத்து அமைகிறது. பத்து நபர்கள் சுதந்திரத்தைப் பற்றி கருத்துரைக்கிறார்கள் எனும்போது ஒரு வேளை எந்த இருவேறு நபர்களும் அவர்களின் சுதந்திரத்தைப் பற்றிய வரையறையில் ஒன்றுவது இல்லை. மேலும் சுதந்திரத்தின் கருப்பொருளையும் அவர்கள் விரும்பிய வகையில் தெளிவாக் கூறுவதில்லை. இந்தப் பொதுப்படையான அறிவியல் சார்பில்லாத சொற்பிரயோகத்தினையே இயற்கை சுதந்திரம் என்கிறோம். – பேராசிரியர் ஆர்.என்.கில்ரீஸ்ட். (Professor R.N.Gilchist)
Question 131
"இயற்கை நிலையில் மனிதர்கள் வாழ்வுரிமை, சுதந்திர உரிமை மற்றும் சொத்துரிமை ஆகியவற்றினை அனுபவித்தார்கள்"என்று கூறியவர் யார்?
A
ஜான்லாக்
B
கெட்டல்
C
பார்க்கர்
D
ரூசோ
Question 131 Explanation: 
விளக்கம்: சுதந்திரம் பற்றிய விவாதங்கள் ஜான்லாக் (JohnLocke): இயற்கை நிலையில் மனிதர்கள் வாழ்வுரிமை, சுதந்திர உரிமை மற்றும் சொத்துரிமை ஆகியவற்றினை அனுபவித்தார்கள். எதிர்வாதம்: இது முழுமையாக தவறாகும், இதற்கு காரணம் அரசு என்பது மட்டுமே மேற்கூறிய உரிமைகள் அனுபவிப்பதற்கு உத்திரவாதமளிக்கிறது. இயற்கை நிலையில் உரிமைகள் அல்லாமல் மிருகங்களுக்கு உண்டான வலிமையை மட்டுமே மனித இனம் பெற்றிருந்தது.
Question 132
"மனிதன் சுதந்திரமாக பிறக்கிறான். ஆனால் எங்கெங்கு காணினும் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருக்கிறான்" என்று கூறியவர் யார்?
A
ஆஸ்டின்
B
ரூசோ
C
பார்க்கர்
D
கெட்டல்
Question 132 Explanation: 
விளக்கம்: ரூசோ (Rousseau): மனிதன் சுதந்திரமாக பிறக்கிறான். ஆனால் எங்கெங்கு காணினும் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருக்கிறான். எதிர்வாதம்: ரூசோவுடைய கருத்தின்படி, மனிதனின் ஆளுமைத்தன்மை வளர்ச்சி அடைய வாய்ப்பில்லை. சமூக ஒப்பந்த கோட்பாட்டியலாளர்களின் கூற்றுப்படி சுதந்திரம் ஓர் உரிமமாக மட்டுமே வழங்கப்படுகிறது. மனிதர்களை தாங்கள் விரும்பும் செயல்களை செய்வதற்கு அனுமதித்தால், அங்கு குழப்பமே மிஞ்சுகிறது.
Question 133
பின்வரும் கூற்றுகளில்  சரியான விடையைத் தேர்ந்தெடு.
  1. சட்டத்தின் ஆட்சியை பிரதிபலிப்பதே குடிமை சுதந்திரத்தின் கருத்தாக்கமாகும்.
  2. இது குடிமக்கள் சமுதாயத்தில் அனுபவிக்கும் சுதந்திரம் அரசில் உள்ளது என்பதைக் குறிப்பதாகும்.
A
(i) மட்டும்
B
(ii) மட்டும்
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 133 Explanation: 
விளக்கம்: குடிமைச் சுதந்திரம் (Civil Liberty): சட்டத்தின் ஆட்சியை பிரதிபலிப்பதே குடிமை சுதந்திரத்தின் கருத்தாக்கமாகும். இது குடிமக்கள் சமுதாயத்தில் அனுபவிக்கும் சுதந்திரம் அரசில் உள்ளது என்பதைக் குறிப்பதாகும். சட்டத்தின் வரன்முறைகளுக்கு உட்பட்டு அச்சுதந்திரம் அனுபவிக்கப்படுகிறது. குடிமை சுதந்திரத்தை, பாதுகாப்பதற்கு உண்டான உத்திரவாதத்தை அரசின் சட்டங்கள் வழங்குகின்றன.
Question 134
"மனிதர்களுக்கிடையேயான வரையறுக்கப்பட்ட சட்டங்களும், உறுதியான நிறைவேற்றுதல் மற்றும் சட்டத்தின் முன் சமத்துவமும் மனிதனின் குடிமை சுதந்திரத்தை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு கொண்டு செல்கிறது" என்று கூறியவர் யார்?
A
ஆஸ்டின்
B
கெட்டல்
C
பார்க்கர்
D
லாஸ்கி
Question 134 Explanation: 
விளக்கம்: மனிதர்களுக்கிடையேயான வரையறுக்கப்பட்ட சட்டங்களும், உறுதியான நிறைவேற்றுதல் மற்றும் சட்டத்தின் முன் சமத்துவமும் மனிதனின் குடிமை சுதந்திரத்தை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு கொண்டு செல்கிறது. – கெட்டல்
Question 135
அரசியல் சுதந்திரத்தை ‘அரசமைப்பு சுதந்திரம்’ என்று கூறுபவர் யார்?
A
கில்கிரீஸ்ட்
B
கெட்டல்
C
பார்க்கர்
D
லீலாக்
Question 135 Explanation: 
விளக்கம்: அரசியல் சுதந்திரம் (Political Liberty) அரசியல் சுதந்திரத்தின் கருத்தாக்கம் என்பது குடிமக்கள் அரசியல் வாழ்வில் பங்கேற்பதுடன், அரசின் நடவடிக்கைகளில் கலந்து கொள்வதும் ஆகும். லீலாக் என்னும் அறிஞர் அரசியல் சுதந்திரத்தை ‘அரசமைப்பு சுதந்திரம்’ என்று கூறுகிறார்.
Question 136
அரசியல் சுதந்திரத்தை மக்களாட்சியோடு ஒத்த பொருளுடையது என்று கருதுபவர் யார்?
A
ஆஸ்டின்
B
கில்கிரீஸ்ட்
C
பார்க்கர்
D
லாஸ்கி
Question 136 Explanation: 
விளக்கம்: கில்கிரீஸ்ட் என்னும் அறிஞர் அரசியல் சுதந்திரத்தை மக்களாட்சியோடு ஒத்த பொருளுடையது என்று கருதுகிறார். அரசியல் சுதந்திரம் என்பது குறைந்தபட்ச உரிமைகளை உள்ளடக்கியதாகும். வாக்குரிமை, தேர்தலில் போட்டியிடும் உரிமை, பொதுக்கருத்து உரிமை, அரசாங்கத்தின் குறைபாடுகளைஎடுத்துரைக்கும் உரிமை, மனுசெய்யும் உரிமை போன்றவை இவ்வகை உரிமைகளாகும்.
Question 137
எந்த ஒரு தனிநபரின் தனிப்பட்ட வாழ்க்கையிலும், அடுத்தவர்கள் குறுக்கிட அனுமதிக்காத உரிமை எது?
A
இயற்கை சுதந்திரம்
B
அரசியல் சுதந்திரம்
C
பொருளாதார சுதந்திரம்
D
தனிப்பட்ட சுதந்திரம்
Question 137 Explanation: 
விளக்கம்:தனிப்பட்ட சுதந்திரம் (Personal Liberty): எந்தவொரு அடக்குமுறையோ அல்லது சட்டவிரோதமான கட்டுப்பாடுகளோ இல்லாமல் தனிமனிதர்கள் தாங்கள் நினைக்கும் காரியங்களை செயல்படுத்தும் நிலையினை இச்சுதந்திரம் எடுத்துரைக்கின்றது. மேலும் எந்த ஒரு தனிநபரின் தனிப்பட்ட வாழ்க்கையிலும், அடுத்தவர்கள் குறுக்கிட அனுமதிக்காத உரிமையும் இவ்வகையைச் சேர்ந்தது ஆகும்.
Question 138
தனிப்பட்ட சுதந்திரம் குறித்த பின்வரும் கூற்றுகளில்  சரியான விடையைத் தேர்ந்தெடு.
  1. அனைத்து தனிநபர்களுக்குமே உடுத்துதல், உண்ணுதல், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல், திருமணம் மற்றும் குழந்தைகளின் கல்வி போன்றவைகளில் தனிப்பட்ட உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன.
  2. தனிமனித சுதந்திரம் என்பது மனித சமுதாயம் சுதரந்திரமாக மேம்படுவதற்கு ஒத்துழைப்பு நல்குகிறது.
A
(i) மட்டும்
B
(ii) மட்டும்
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 138 Explanation: 
விளக்கம்: அனைத்து தனிநபர்களுக்குமே உடுத்துதல், உண்ணுதல், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல், திருமணம் மற்றும் குழந்தைகளின் கல்வி போன்றவைகளில் தனிப்பட்ட உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. அரசு, தனிநபர் விவகாரத்தில் தலையிடுவது ஆகாது. தனிமனித சுதந்திரம் என்பது மனித சமுதாயம் சுதரந்திரமாக மேம்படுவதற்கு ஒத்துழைப்பு நல்குகிறது.
Question 139
ஒருவரின் அன்றாட வாழ்வாதாரத்திற்கான உணவை தேடி கொள்ளும் தனிநபர் சுதந்திரம் எது?
A
இயற்கை சுதந்திரம்
B
அரசியல் சுதந்திரம்
C
பொருளாதார சுதந்திரம்
D
தனிப்பட்ட சுதந்திரம்
Question 139 Explanation: 
விளக்கம்: பொருளாதார சுதந்திரம் ஒருவரின் அன்றாட வாழ்வாதாரத்திற்கான உணவை தேடி கொள்ளும் தனிநபர் சுதந்திரம் என்பது பொருளாதார சுதந்திரம் ஆகும். நியாயமான வழிமுறைகளின் மூலமாக ஒருவரின் அன்றான வாழ்வாதாரத்தைப் பூர்த்தி செய்து கொள்ள சாதி, நிறம், இனம், மற்றும் பாலினம் போன்றவைகளுக்குஅப்பாற்பட்டு சுதந்திரமாக வருவாய் ஈட்டுவதே பொருளாதார சுதந்திரம் ஆகும்.
Question 140
"நாளைய தேவையிலிருந்து விடுபட நான் பாதுகாப்புடன் வாழ விரும்புகிறேன்" என்று கூறியவர்?
A
ஆஸ்டின்
B
கெட்டல்
C
பார்க்கர்
D
லாஸ்கி
Question 140 Explanation: 
விளக்கம்: பொருளாதார சுதந்திரம் என்றால், தனிமனிதருக்கு உண்டான, தேவைப்படுகிற அன்றாட வருவாய் மற்றும் உணவை தேடிக்கொள்ள ஏற்படுத்தப்படும் பாதுகாப்பு மற்றும் வாய்ப்புமாக நான் கருதுகிறேன். வேலையில்லா திண்டாட்டத்திலிருந்தும், போதாமை மற்றும் இல்லாமையிலிருந்து உருவாகும் பயத்திலிருந்தும் நான் விடுதலை அடைய வேணடும். ஏனெனில் இவ்வகையான பயம் ஆளுமைத்தன்மையின் வலிமையை குறைக்கச் செய்கிறது. நாளைய தேவையிலிருந்து விடுபட நான் பாதுகாப்புடன் வாழ விரும்புகிறேன். – ஹொரால்டு .J. லாஸ்கி (Harold.J.Laski)
Question 141
மனித இனத்திற்கு இடையே தற்பொழுது சுதந்திரத்தைப் பற்றிய வேறுபாடுகள் உள்ளமையை ஓநாய் - ஆடு உவமை கொண்டு விளக்கியவர்?
A
நெல்சன் மண்டேலா
B
கெட்டல்
C
கென்னடி
D
ஆபிரகாம் லிங்கன்
Question 141 Explanation: 
விளக்கம்:சுதந்திரத்தற்கான சரியான வரையறை இதுகாறும் இவ்வுலகத்தில் எழுதப்படவில்லை. மேலும் அமெரிக்க குடிமக்களுக்கு தற்சமயம்தான் அந்த வரையறை தேவைப்படுகிறது. நாம் அனைவரும் சுதந்திரத்தை அறிவித்திருக்கிறோம், ஆனால் நாம் உபயோகப்படுத்தும் அந்த வார்த்தைக்கு அர்த்தம் அதுவல்ல. ஒரு செம்மறியாட்டின் கழுத்தை பிடித்திருக்கும் ஓநாயை, மேய்ப்பவன் துரத்தியடிக்கிறான். அதற்காக அந்த செம்மறியாடு அவனுக்கு நன்றியை தெரிவிக்கிறது. ஆனால் அந்த ஒநாயோ, அவனை சுதந்திரத்தை ஒழிப்பவன் என குறை கூறுகிறது. ஏனெனில் குறிப்பாக அந்த ஓநாய்க்கும், கறுப்பு செம்மறியாட்டிற்கும் சுதந்திரம் தொடர்பான ஒத்த கருத்துகள் அமைவதில்லை. இதைப் போலவே தான் மனித இனத்திற்கு இடையேயும் தற்பொழுது சுதந்திரத்தைப் பற்றிய வேறுபாடுகள் உள்ளன. – ஆப்ரகாம் லிங்கன்
Question 142
பின்வரும் கூற்றுகளில்  சரியான விடையைத் தேர்ந்தெடு.
  1. சுதந்திரம் என்பது அரசின் முக்கிய நிலைமையாக கருதப்படுகிறது.
  2. இது மனிதர்களின் ஆளுமைத்தன்மையை மேம்படுத்துவதற்கு ஒரு வாய்ப்பாகவும் அமைகின்றது.
A
(i) மட்டும்
B
(ii) மட்டும்
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 142 Explanation: 
விளக்கம்: சுதந்திரம் பரவுதல்: சுதந்திரம் என்பது அரசின் முக்கிய நிலைமையாக கருதப்படுகிறது. இது மனிதர்களின் ஆளுமைத்தன்மையை மேம்படுத்துவதற்கு ஒரு வாய்ப்பாகவும் அமைகின்றது.
Question 143
பிரதிநிதித்துவம் இன்றி வரிவிதிப்பு கூடாது எனும் கொள்கை கொண்ட சுதந்திரம் எது?
A
நிதி சுதந்திரம்
B
பொருளாதார சுதந்திரம்
C
சமூக சுதந்திரம்
D
தனிப்பட்ட சுதந்திரம்
Question 143 Explanation: 
விளக்கம்: நிதி சுதந்திரம்: பிரதிநிதித்துவம் இன்றி வரிவிதிப்பு கூடாது என்பது இச்சுதந்திரத்தின் கொள்கையாகும். தங்களுடைய வரிப்பணம் எவ்வாறு செலவிடப்பட வேண்டும். யாருக்குபோய் சேர வேண்டும் என்பதில் தெளிவு வேண்டும் என்பது நடுத்தர வர்க்கத்தின் கோரிக்கையாகும். குடிமை மற்றும் நிதி சுதந்திரம் ஆகிய இவ்விரண்டுமே உரிமையாளர்களின் உடைமையையும், உரிமையையும் சார்ந்ததாகும்.
Question 144
குடிமை மற்றும் நிதி சுதந்திரம் இல்லாமல் தங்களால் வாழவே இயலாது என்பது யாருடைய  கூற்று ஆகும்?
A
செல்வந்தர்கள்
B
ஏழை மக்கள்
C
நடுத்தரமக்கள்
D
மன்னர்கள்
Question 144 Explanation: 
விளக்கம்: குடிமை மற்றும் நிதி சுதந்திரம் இல்லாமல் தங்களால் வாழவே இயலாது என்பது நடுத்தரமக்களின் கூற்று ஆகும். மேற்குறிப்பிட்ட சுதந்திரங்கள் முறையே இல்லாதுபோயின், தன்னிச்சையான ஆட்சியால் தாங்கள் சுரண்டப்படுவதுடன் உயிர் வாழ்வதும் இயலாத காரியம் என்பது நடுத்தர மக்களின் எண்ண வெளிப்பாடாக விளங்குகிறது.
Question 145
பின்வரும் கூற்றுகளில்  சரியான விடையைத் தேர்ந்தெடு.
  1. குடும்பம் சார்ந்த சுதந்தரம் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் சமமான உரிமையை வழங்குவது இவ்வகை சுதந்திரமாகும்.
  2. பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் கல்வியுரிமை வழங்க வேண்டும் என்பதே குடும்ப சுதந்திரத்தின் சிறப்பு அம்சங்களாகும்.
A
(i) மட்டும்
B
(ii) மட்டும்
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 145 Explanation: 
விளக்கம்: குடும்பம் சார்ந்த சுதந்தரம் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் சமமான உரிமையை வழங்குவது இவ்வகை சுதந்திரமாகும். கொடுமையாக நடத்துதல், இம்சித்தல், மற்றும் சுரண்டல் போன்ற அநாகரீகமான செயல்களுக்கு எதிராக அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் கல்வியுரிமை வழங்க வேண்டும் என்பதே குடும்ப சுதந்திரத்தின் சிறப்பு அம்சங்களாகும்.
Question 146
"அடிப்படை சுதந்திரத்தை சிறிய அளவிலான தற்காலிக பாதுகாப்பிற்காக யாரேனும் துறந்தால் அவர்கள் சுதந்திரமோ அல்லது பாதுகாப்போ கிடைப்பதற்கு தகுதியற்றவர்களாவர்" என்று கூறுபவர் யார்?
A
ஆஸ்டின்
B
பெஞ்சமின் பிராங்ளின்
C
பார்க்கர்
D
லாஸ்கி
Question 146 Explanation: 
விளக்கம்: அடிப்படை சுதந்திரத்தை சிறிய அளவிலான தற்காலிக பாதுகாப்பிற்காக யாரேனும் துறந்தால் அவர்கள் சுதந்திரமோ அல்லது பாதுகாப்போ கிடைப்பதற்கு தகுதியற்றவர்களாவர். - பெஞ்சமின் பிராங்ளின் (Benjamin Franklin)
Question 147
ஒரு நாடு அல்லது தேசத்தில் நிலவக்கூடிய சுதந்திர சூழ்நிலை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A
இயற்கை சுதந்திரம்
B
பொருளாதார சுதந்திரம்
C
சமூக சுதந்திரம்
D
தேச சுதந்திரம்
Question 147 Explanation: 
விளக்கம்: தேசிய சுதந்திரம்: ஒரு நாடு அல்லது தேசத்தில் நிலவக்கூடிய சுதந்திர சூழ்நிலையை தேசிய சுதந்திரம் என்கிறோம். ஒரு தேசமோ அல்லது சமூகமோ சுதந்திரம் மற்றும் இறையாண்மையுடன் கூடிய நிலையை அடையும் போது தேசிய சுதந்திரம் இருக்கிறது எனலாம். இதையே தேச சுதந்திரம் அல்லது தேச இறையாண்மை என்றும் குறிப்பிடலாம். அனைத்து தேசங்களும் சுதந்திரமாக இருப்பதையே விரும்புகின்றன. சுதந்திரம் இல்லாத சூழ்நிலையில், அத்தேசம் வளர்ச்சிப் பாதையில் செல்ல இயலாது.
Question 148
ஆஸ்திரியாவுக்கு எதிராக  சுதந்திரப்போராட்டம் நடத்திய நாடு எது?
A
இங்கிலாந்து
B
இத்தாலி
C
ஜெர்மனி
D
ஆப்பிரிக்கா
Question 148 Explanation: 
விளக்கம்: ஏகாதிபத்தியத்தின் கட்டுக்குள் இருந்த அத்தனை நாடுகளுக்கும் விடுதலை என்பது இறுதி முழக்கமானது. இவ்வாறாக, ஏகாதிபத்ய சக்திகளால் பாதிக்கப்பட்ட தேசங்கள் அத்தனையுமே அயல்நாட்டு ஆட்சியையும், ஆக்கிரமிப்பையும் எதிர்த்து சுதந்திரம் பெறும்வரை போராட்டத்தில் ஈடுபட்டன. ஆஸ்திரியாவுக்கு எதிரான இத்தாலியின் போராட்டம், ஹிட்லர் மற்றும் நெப்போலியனுக்கு எதிரான இங்கிலாந்தின் போராட்டம், ஆப்பிரிக்க நாடுகளின் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டம், இங்கிலாந்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டம் போன்ற உதாரணங்கள் தேசத்தின் சுதந்திர வேட்கை பற்றிய வரலாற்று நிகழ்வுகளாகும்.
Question 149
இந்தியாவின் மீது சீனா எந்த ஆண்டு  தாக்குதல் தொடுத்தது?
A
1962
B
1975
C
1971
D
1965
Question 149 Explanation: 
விளக்கம்: இந்தியாவின் மீது சீனா 1962-ல் தாக்குதல் தொடுத்த போதும், பாகிஸ்தான் முறையே 1965, 1971ல் தாக்குதல் நடத்திய போதும் இந்திய அரசாங்கம் தேச சுதந்திரத்தை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டது.
Question 150
"சுதந்திரம் என்பது மனிதர்களை நோக்கி வருவது அல்ல, மாறாக மனிதர்களே சுதந்திரத்தை நோக்கி எழுச்சி கொண்டு செல்ல வேண்டும்."  இவ்வாசகம் எங்கு பொறிக்கப்பட்டுள்ளது?
A
புது தில்லி, மத்திய செயலகம்
B
தமிழ்நாடு தலைமைச்செயலகம்
C
குடியரசுத்தலைவர் இல்லம்
D
செங்கோட்டை
Question 150 Explanation: 
விளக்கம்: சுதந்திரம் என்பது மனிதர்களை நோக்கி வருவது அல்ல, மாறாக மனிதர்களே சுதந்திரத்தை நோக்கி எழுச்சி கொண்டு செல்ல வேண்டும். மகிழ்வுடன் வாழ்வதற்காக சிரமப்பட்டு பெறப்படுகின்ற சுதந்திரம் ஓர் ஆசீர்வாதமாகும். - புது தில்லி, மத்திய செயலகத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.
Question 151
பன்னாட்டு சுதந்திரத்தின்  கருத்தாக்கம் எது?
A
பன்னாட்டு அமைதி
B
பன்னாட்டு பொருளாதாரம்
C
பன்னாட்டு வளம்
D
பன்னாட்டு ஒற்றுமை
Question 151 Explanation: 
விளக்கம்:பன்னாட்டு சுதந்திரம் உலக நாடுகளின் கூட்டாட்சியையும், மற்றும் பன்னாட்டு கூட்டுறவையும் ஏற்படுத்தக் கூடிய பன்னாட்டு அமைதியே இவ்வகை சுதந்திரத்தின் கருத்தாக்கமாகும். தேசிய கொள்கையில் வலிமையை ஓர் காரணியாக பயன்படுத்துவதை தாராளவாதிகள் எதிர்க்கின்றார்கள். முதலாளித்துவமானது அமைதி மற்றும் பன்னாட்டு கூட்டுறவின் மூலமாக உலக வளங்கள் மேலும் மேன்மையடையவும், ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டுக்கு பொருட்கள் தங்குதடையின்றி செல்வதற்கும் வேண்டுகிறது. இதற்கு அரசியல் மற்றும் ஏனைய தடைகளை தகர்த்தெறியவும் இக்கொள்கை பாடுபடுகிறது. இதனால் உலக நலன்கள் மேம்பாடு அடைகின்றன.
Question 152
பின்வரும் கூற்றுகளில்  சரியான விடையைத் தேர்ந்தெடு.
  1. சுதந்திரதேவி சிலைக்கென்று ஒரு குறிக்கோள் உள்ளது.
  2. அது விடுதலையை பற்றிய உலகளாவிய நினைவூட்டலாகவும், அமெரிக்க குடிமக்களுக்கு நம்பிக்கை அளிப்பதாகவும் அமைந்துள்ளது.
A
(i) மட்டும்
B
(ii) மட்டும்
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 152 Explanation: 
விளக்கம்: குறியீட்டு பொருள்: சுதந்திரதேவி சிலைக்கென்று ஒரு குறிக்கோள் உள்ளது. அது விடுதலையை பற்றிய உலகளாவிய நினைவூட்டலாகவும், அமெரிக்க குடிமக்களுக்கு நம்பிக்கை அளிப்பதாகவும் அமைந்துள்ளது.
Question 153
பின்வரும் கூற்றுகளில்  சரியான விடையைத் தேர்ந்தெடு.
  1. தாராளவாதிகள், சுதந்திரத்தை தலையாய தனிமனிதத்துவ விழுமியமாக கருதி முன்னுரிமை அளிக்கிறார்கள்.
  2. எதிர்மறை சுதந்திரம் என்பது முழுவதுமாக கட்டுபாடற்ற அல்லது விருப்புரிமை வாய்ப்பற்ற சுதந்திரமாகும்.
A
(i) மட்டும்
B
(ii) மட்டும்
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 153 Explanation: 
விளக்கம்: ஆன்ட்ரூ ஹேவுட்டின் சுதந்திரம் பற்றி லட்சியவாதப் பார்வை: தாராளவாதிகள், சுதந்திரத்தை தலையாய தனிமனிதத்துவ விழுமியமாக கருதி முன்னுரிமை அளிக்கிறார்கள். மரபுவழி தாராளவாதிகள் எதிர்மறை சுதந்திரத்தை ஆதரிக்கின்றார்கள். எதிர்மறை சுதந்திரம் என்பது முழுவதுமாக கட்டுபாடற்ற அல்லது விருப்புரிமை வாய்ப்பற்ற சுதந்திரமாகும். ஆனால் நவீன தாராளவாதிகள் நேர்மறை சுதந்திரம்அல்லது கட்டுப்பாடானசதந்திரத்தை பேணுகின்றார்கள். ஏனெனில் கட்டுப்பாட்டுடன் கூடிய சுதந்திரமே மனிதம் மலர்வதற்கும், தனிமனித மேம்பாட்டிற்கும் உறுதுணையாக அமையும்.
Question 154
பின்வரும் கூற்றுகளில்  சரியான விடையைத் தேர்ந்தெடு.
  1. பழமைவாதிகள், சுதந்திரத்தின் வலிமையற்ற பார்வையை ஆதரிக்கின்றார்கள்.
  2. எதிர்மறை என்பது சுதந்திரம் சமூகத்தின் கட்டமைப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கிறது.
A
(i) மட்டும்
B
(ii) மட்டும்
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 154 Explanation: 
விளக்கம்: பழமைவாதிகள், சுதந்திரத்தின் வலிமையற்ற பார்வையை ஆதரிக்கின்றார்கள். இவற்றையே கடமைகளையும், பொறுப்புகளையும் விருப்பத்துடன் அங்கீகரிப்பதாக கருதுகிறார்கள். அதே சமயம் எதிர்மறை என்பது சுதந்திரம் சமூகத்தின் கட்டமைப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. ஆனால் அவர்கள், எதிர்மறை சுதந்திரத்தை பொருளாதார துறையிலும், சந்தைகளின் விருப்பங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற அடிப்படையிலும் வலியுறுத்துகின்றனர்.
Question 155
பின்வரும் கூற்றுகளில்  சரியான விடையைத் தேர்ந்தெடு.
  1. சமதர்மவாதிகள், சுதந்திரம் பொதுவாக நேர்மறையாக புரிந்து கொள்ளப்படுகிறது.
  2. சமூக மக்களாட்சிவாதிகள் நவீன சுதந்திரத்துவத்துடன் ஒத்த கருத்தாக, சுதந்திரத்தை தனிமனித திறமையின் மெய்ப்படுதலாக பாவிக்கின்றார்கள்.
A
(i) மட்டும்
B
(ii) மட்டும்
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 155 Explanation: 
விளக்கம்: சமதர்மவாதிகள், சுதந்திரம் பொதுவாக நேர்மறையாக புரிந்து கொள்ளப்படுகிறது, கூட்டுறவு சமூக தொடர்பு அல்லது படைப்பாக்க உழைப்பு மூலமாக சுயதிருப்தி அடைவதை சுதந்திரமாக அணுகுகின்றார்கள். சமூக மக்களாட்சிவாதிகள் நவீன சுதந்திரத்துவத்துடன் ஒத்த கருத்தாக, சுதந்திரத்தை தனிமனித திறமையின் மெய்ப்படுதலாக பாவிக்கின்றார்கள்.
Question 156
பின்வரும் கூற்றுகளில்  சரியான விடையைத் தேர்ந்தெடு.
  1. சுதந்திரம் என்பது சுயவிருப்பமும், சுய இயக்கமுமாக தனிமனிதனின் தன்னாட்சி நிலையை ஊக்குவிக்கும் சூழ்நிலையாக பார்க்கப்படுகிறது.
  2. வெறுமனே ”தனித்துவிடுதல்” என்பது சுதந்திரம் அல்ல, பகுத்தறிவிலான சுய விருப்பம் மற்றும் சுய வழிகாட்டுதலாகும்.
A
(i) மட்டும்
B
(ii) மட்டும்
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 156 Explanation: 
விளக்கம்: அமைப்பெதிர்வாதிகள், அரசியல் அதிகாரத்துவத்துடன் எவ்விதத்திலும் ஒத்துபோகாத, முழுமையான விழுமியமாக சுதந்திரம் கருதப்படுகிறது. சுதந்திரம் என்பது சுயவிருப்பமும், சுய இயக்கமுமாக தனிமனிதனின் தன்னாட்சி நிலையை ஊக்குவிக்கும் சூழ்நிலையாக பார்க்கப்படுகிறது. வெறுமனே ”தனித்துவிடுதல்” என்பது சுதந்திரம் அல்ல, பகுத்தறிவிலான சுய விருப்பம் மற்றும் சுய வழிகாட்டுதலாகும்.
Question 157
சுதந்திரம் அனைத்து விதத்திலும், ஒவ்வாதது என்பது யாருடைய வாதம்?
A
அமைப்பெதிர்வாதிகள்
B
தாராளவாதிகள்
C
சமதர்மவாதிகள்
D
பாசிசவாதிகள்
Question 157 Explanation: 
விளக்கம்: பாசிசவாதிகள், சுதந்திரம் அனைத்து விதத்திலும், ஒவ்வாதது என்பது இவர்களின் வாதம். உண்மையான சுதந்திரம் என்பது தலைமையிடம் எந்த கேள்விக்கும் இடமில்லாமல் சரணாகதி அடைவதும், தேசத்துக்காக தனிமனிதத்தை தியாகம் செய்யவுமாக இருக்கக்கூடிய சமூகமே சுதந்திரமானது என்பது பாசிசவாதிகளின் கருத்தாகும்.
Question 158
தனிப்பட்ட சுயநலத்தை உலக சூழலில் கலந்து சுய உணர்தலையும், ஒருமித்த தன்மையும், அடைவதே சுதந்திரம் என்பது யாருடைய கருத்து?
A
அமைப்பெதிர்வாதிகள்
B
பாசிசவாதிகள்
C
சமதர்மவாதிகள்
D
சூழலியலாளர்கள்
Question 158 Explanation: 
விளக்கம்: சூழலியலாளர்கள், தனிப்பட்ட சுயநலத்தை உலக சூழலில் கலந்து சுய உணர்தலையும், ஒருமித்த தன்மையும், அடைவதே சுதந்திரம் என்பதாகும். அரசியல் சுதந்திரத்திற்கு முரணாக சில சமயங்களில் உள்ளார்ந்த சுதந்திரம் மற்றும் சுய அறிதலுக்கான சுதந்திரத்தையும் ஆதரிப்பவர்கள் இக்கோட்பாட்டாளர்களாவர்.
Question 159
ஆழ்மனதின் உள்ளார்ந்த ஆன்மீக நல்லியல்பை போற்றுவதே சுதந்திரமாக கருதுபவர்கள் யார்?
A
அமைப்பெதிர்வாதிகள்
B
மத அடிப்படைவாதிகள்
C
சமதர்மவாதிகள்
D
பாசிசவாதிகள்
Question 159 Explanation: 
விளக்கம்: மத அடிப்படைவாதிகள், ஆழ்மனதின் உள்ளார்ந்த ஆன்மீக நல்லியல்பை போற்றுவதே சுதந்திரமாக இவர்களால் கருதப்படுகிறது. இறைவனின் விருப்பத்தை வெளிப்படுத்துவதும், மதவாதஅதிகாரத்துவத்திற்குத் தலைவணங்கி ஆன்மீக மன திருப்தியை அடைவதுமே சுதந்திரத்தின் பாதையாகிறது.
Question 160
பின்வரும் கூற்றுகளில்  சரியான விடையைத் தேர்ந்தெடு.
  1. சுதந்திரம் என்பது முழுவதுமான சட்டங்களில்லாத நிலையல்ல.
  2. அரசு ஒழுங்குமுறையில் இயங்கினால் மட்டுமே சுதந்திரம் செயல்படுகிறது.
A
(i) மட்டும்
B
(ii) மட்டும்
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 160 Explanation: 
விளக்கம்: சுதந்திரம், இறையாண்மை மற்றும் சட்டம் ஆகியவை எவ்வாறு ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது? சுதந்திரம் என்பது முழுவதுமான சட்டங்களில்லாத நிலையல்ல. அரசு ஒழுங்குமுறையில் இயங்கினால் மட்டுமே சுதந்திரம் செயல்படுகிறது. அரசு சட்டங்களை இயற்றுகிறது. இறையாண்மை மிக்க அரசு செயல்படுவது சட்டங்களால் மட்டுமே ஆகும்.
Question 161
அரசு அதிக அதிகாரம் படைத்ததாக செயல்படும்போது, தனிமனித சுதந்திரம் குறைக்கப்படுகிறது என்பது யாருடைய கருத்தாகும்?
A
அமைப்பெதிர்வாதிகள்
B
அமைப்பெதிர்வாதிகள்
C
சமதர்மவாதிகள்
D
சூழலியலாளர்கள்
Question 161 Explanation: 
விளக்கம்: சுதந்திரம், இறையாண்மை,மற்றும்சட்டம்ஆகியவற்றிற்கு இடையே நெருங்கிய தொடர்பு காணப்படுகிறது. அமைப்பெதிர்வாதிகள் மற்றும் தொழிற்சங்கவாதிகள் போன்றோர் அரசை அழிக்க விரும்புகிறார்கள். அரசு அதிக அதிகாரம் படைத்ததாக செயல்படும்போது, தனிமனித சுதந்திரம் குறைக்கப்படுகிறது என்பது அவர்களுடைய கருத்தாகும்.
Question 162
பின்வரும் கூற்றுகளில்  சரியான விடையைத் தேர்ந்தெடு.
  1. அமைப்பெதிர்வாதம் என்பது ஒழுங்கற்ற தன்மையோ அல்லது குழப்பமானநிலையோ அன்று.
  2. அமைப்பெதிர்வாதம் என்பது  அடக்குமுறையிலான மையப்படுத்தப்பட்ட அதிகாரத்துவத்தின் ஏகபோக ஆற்றல், அதிகாரத்திலிருந்து சுதந்திரம் பெறுவதாகும்.
A
(i) மட்டும்
B
(ii) மட்டும்
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 162 Explanation: 
விளக்கம்: அமைப்பெதிர்வாதம் என்பது ஒழுங்கற்ற தன்மையோ அல்லது குழப்பமானநிலையோ அன்று மாறாக அடக்குமுறையிலான மையப்படுத்தப்பட்ட அதிகாரத்துவத்தின் ஏகபோக ஆற்றல், அதிகாரத்திலிருந்து சுதந்திரம் பெறுவதாகும்.
Question 163
அரசை தனிமனித சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் கருவியாக சித்தரிப்பவர்கள் யார்?
A
அமைப்பெதிர்வாதிகள்
B
தாராளவாதிகள்
C
சமதர்மவாதிகள்
D
தனிமனிதத்துவாதிகள்
Question 163 Explanation: 
விளக்கம்: தனிமனிதத்துவாதிகளின் கருத்துக்கள்: இவர்கள் அரசை தனிமனித சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் கருவியாக சித்தரிக்கின்றனர். இதனால் அரசின் அதிகாரம் குறைக்கப்பட வேண்டும் என உரைக்கப்பட்டு இங்கிலாந்தில் இவ்வகையான கொள்கை பல ஆபத்தான விளைவுகளை உண்டாக்கியது. தற்போதைய காலக்கட்டத்தில் உலக அளவில் சட்டமே சுதந்திரத்தின் பாதுகாவலனாக விளங்குவதை அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். சட்டம் இல்லாவிட்டால் சுதந்திரம் இருக்காது.
Question 164
குறிப்பிடத்தக்க மேற்கோள் சட்டங்கள் இல்லையென்றால் அங்கே சுதந்திரம் இல்லை என்று கூறியவர் யார்?
A
ஜான்லாக்
B
கெட்டல்
C
பார்க்கர்
D
லாஸ்கி
Question 164 Explanation: 
விளக்கம்: குறிப்பிடத்தக்க மேற்கோள் சட்டங்கள் இல்லையென்றால் அங்கே சுதந்திரம் இல்லை – ஜான்லாக் (John Locke)
Question 165
யாருடைய கூற்றுப்படி சட்டத்திற்கு கீழ்பணிதல் என்பது உண்மையான விருப்பத்திற்கு கீழ்பணிதல் ஆகும்?
A
அமைப்பெதிர்வாதிகள்
B
தாராளவாதிகள்
C
சமதர்மவாதிகள்
D
லட்சியவாதிகள்
Question 165 Explanation: 
விளக்கம்: லட்சியவாதிகளின் கருத்து சட்டம் இல்லாவிட்டால் சுதந்திரமான சூழ்நிலை இருக்காது. லட்சியவாதிகளின் கூற்றுப்படி சட்டத்திற்கு கீழ்பணிதல் என்பது உண்மையான விருப்பத்திற்கு கீழ்பணிதல் ஆகும். குறிப்பிடத்தக்க மேற்கோள் பூமியில் இறைவனின் ஆட்சியே அரசு எனப்படுகிறது. மேலும் சமூக நீதிநெறியின் உறுப்பாகவும், நன்னெறி மேலான வெளிப்பாடாகவும் அரசு விளங்குகிறது. - ஹெகல் (Hegel)
Question 166
பின்வரும் எந்த முறையில் சட்டம் சுதந்திரத்தை பாதுகாக்கிறது?
  1. சமூகத்தில் குடிமை வாழ்வை எவ்வித பிரச்சினையும் இன்றி நடத்துவதற்குண்டான இணக்கமான சூழ்நிலையை ஏற்படுத்துகிறது.
  2. தனிமனித உரிமைகள் மற்றும் கடமைகளுக்கு சட்டம் உத்திரவாதம் அளிப்பதுடன் அவற்றை பாதுகாக்கவும் செய்கிறது.
A
(i) மட்டும்
B
(ii) மட்டும்
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 166 Explanation: 
விளக்கம்: *சமூகத்தில் குடிமை வாழ்வை எவ்வித பிரச்சினையும் இன்றி நடத்துவதற்குண்டான இணக்கமான சூழ்நிலையை ஏற்படுத்துகிறது. சட்டம் குற்றவாளிகளை தண்டித்து தனிமனிதர்களின் உரிமைகளை பாதுகாக்கின்றது. *தனிமனித உரிமைகள் மற்றும் கடமைகளுக்கு சட்டம் உத்திரவாதம் அளிப்பதுடன் அவற்றை பாதுகாக்கவும் செய்கிறது. சக மனிதர்களுக்கு, ஒருவர் தீங்கு விளைவிக்கும்போதும், அவர்களின் வழியில் குறுக்கீட்டு சீர்குலைக்கும்போதும் அரசு அவர்களை தண்டிக்கிறது. *சுதந்திரத்தின் பாதுகாவலனாக அரசமைப்பு விளங்குகிறது. அரசின் அதிகாரத்துவத்தை கட்டுப்படுத்துவதுடன் மக்களின் அடிப்படை உரிமைகளையும் பாதுகாக்கின்றது
Question 167
பின்வரும் கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு.
  1. மக்களின் அரசாங்கமாக மக்களாட்சி செயல்படுகிறது.
  2. அரசாங்கத்தை பற்றிய குறைகூறல் என்பது மக்களாட்சியில் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டு சகித்துக் கொள்ளப்படுகின்றன.
A
(i) மட்டும்
B
(ii) மட்டும்
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 167 Explanation: 
விளக்கம்: மக்களாட்சி: வேறு எந்த அரசாங்க முறையையும் விட சுதந்திரம் என்பது மக்களாட்சியில் பாதுகாப்பாக இருக்கிறது எனலாம். மக்களின் அரசாங்கமாக மக்களாட்சி செயல்படுகிறது. ஏனைய ஆட்சிகளான முடியாட்சி மற்றும் சர்வாதிகார ஆட்சி ஆகியவை அதிகார குவிப்பை ஒருவரிடமோ அல்லது குழுமத்திடமோ ஒப்படைக்கின்றன. மக்களாட்சியில் எதிர்க்கட்சிகள் தகுந்த மரியாதையுடன் நடத்தப்படுகின்றன. அரசாங்கத்தை பற்றிய குறைகூறல் என்பது மக்களாட்சியில் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டு சகித்துக் கொள்ளப்படுகின்றன.
Question 168
இந்திய அரசமைப்பின் ஆன்மாவாக  கருதப்படுவது எது?
A
அரசு நெறிமுறை கோட்பாடுகள்
B
அடிப்படை கடமைகள்
C
முகவுரை
D
அடிப்படை உரிமைகள்
Question 168 Explanation: 
விளக்கம்:அரசமைப்பு: ஒரு நாட்டின் அரசமைப்பில் இருந்து தான் அரசின் அதிகாரத்துவம்/ ஆணையுரிமை பெறப்படுகிறது. மக்களாட்சியைப் பற்றிய கவிதையாக இந்திய அரசமைப்பின் முகவுரை விளங்குகிறது. இது ஒட்டுமொத்த இந்திய அரசமைப்பினுடைய அடிப்படை தத்துவத்தை தன்னுள் கொண்டதாகும். அரசாங்கத்தால் உருவாக்கப்படுகின்ற சட்டமும், அதனால் நிறைவேற்றப்படுகின்ற மக்கள் நல நடவடிக்கைகளும், மக்கள் நலனிற்கு உகந்ததா, இல்லையா என்பதை ஆராய்ந்து மதிப்பிடும் தன்மை படைத்தது அரசமைப்பு முகவுரையாகும். இந்திய அரசமைப்பின் ஆன்மாவாக முகவுரை கருதப்படுகிறது.
Question 169
இறையாண்மை குறித்த பின்வரும் கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு.
  1. உள்நாட்டு விவகாரங்களிலும், வெளி விவகாரங்களிலும் முடிவெடுக்கக்கூடிய மேலான உரிமை மக்களிடம் மட்டுமே இருக்கிறது.
  2. எந்த வெளிப்புற அதிகார அமைப்பும் இந்திய அரசாங்கத்திற்கு ஆணையிடும் அதிகாரம் கிடையாது.
A
(i) மட்டும்
B
(ii) மட்டும்
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 169 Explanation: 
விளக்கம்: இறையாண்மை: உள்நாட்டு விவகாரங்களிலும், வெளி விவகாரங்களிலும் முடிவெடுக்கக்கூடிய மேலான உரிமை மக்களிடம் மட்டுமே இருக்கிறது. எந்த வெளிப்புற அதிகார அமைப்பும் இந்திய அரசாங்கத்திற்கு ஆணையிடும் அதிகாரம் கிடையாது.
Question 170
அரசின் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டவராக இருத்தல் வேண்டுமே தவிர வாரிசுரிமை அடிப்படையில் அல்ல என்பதை குறிப்பது எது?
A
சுதந்திரம்
B
குடியரசு
C
இறையாண்மை
D
மதச்சார்பின்மை
Question 170 Explanation: 
விளக்கம்: குடியரசு: அரசின் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டவராக இருத்தல் வேண்டுமே தவிர வாரிசுரிமை அடிப்படையில் அல்ல. நீதி: குடிமக்களை சாதி, மதம் மற்றும் பாலின அடிப்படையில் பாகுபடுத்துவது தவறாகும். சமூக ஏற்றத்தாழ்வுகள் குறைக்கப்பட வேண்டும். அரசாங்கம் அனைத்து மக்களின் நலனுக்காகவும், முக்கியமாக பின்தங்கிய மக்களின் வாழ்வாதாரத்திற்கு உழைக்கவும், செயல்படவும் வேண்டும்.
Question 171
மக்களுக்கு தேவைப்படும் வளங்களை மக்களே உருவாக்கவும், அவற்றை சமமாக பகிரவும் சமுதாயத்தில் உள்ள உரிமை எது?
A
சுதந்திரம்
B
சமதர்மம்
C
இறையாண்மை
D
சமத்துவம்
Question 171 Explanation: 
விளக்கம்: சுதந்திரம்: குடிமக்கள் சுதந்திரமாக சிந்திக்கவும், எண்ணங்களை வெளிப்படுத்தவும், எண்ணியபடி நடவடிக்கைகளில் ஈடுபடவும் நியாயமற்ற கட்டுப்பாடுகள் கிடையாது. சமதர்மம்: மக்களுக்கு தேவைப்படும் வளங்களை மக்களே உருவாக்கவும், அவற்றை சமமாக பகிரவும் சமுதாயத்தில் உள்ள உரிமையாகும். அரசாங்கமானது நிலம் மற்றும் தொழில் சார்ந்த உரிமையை ஒழுங்குமுறைப்படுத்தி சமூகபொருளாதார சமத்துவமின்மையை குறைக்கிறது.
Question 172
மதச்சார்பின்மை குறித்த பின்வரும் கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு.
  1. எந்த மதத்தை வேண்டுமென்றாலும் பின்பற்றக்கூடிய முழுமையான சுதந்திரம் குடிமக்களுக்கு உண்டு.
  2. அரசாங்கம் அனைத்து மதங்களின் நம்பிக்கைகளையும், சம்பிரதாயங்களையும் சமமான மரியாதையுடன் பாவிக்கும் தன்மை படைத்தது.
A
(i) மட்டும்
B
(ii) மட்டும்
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 172 Explanation: 
விளக்கம்: மதச்சார்பின்மை எந்த மதத்தை வேண்டுமென்றாலும் பின்பற்றக்கூடிய முழுமையான சுதந்திரம் குடிமக்களுக்கு உண்டு. ஆனால் அலுவல் மதம் என்று ஒன்று இல்லை. அரசாங்கம் அனைத்து மதங்களின் நம்பிக்கைகளையும், சம்பிரதாயங்களையும் சமமான மரியாதையுடன் பாவிக்கும் தன்மை படைத்தது.
Question 173
மக்களாட்சி குறித்த பின்வரும் கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு.
  1. மக்கள் சமமான அரசியல் உரிமைகளை அனுபவிக்கவும், தங்களின் ஆட்சியாளர்களை தேர்ந்தெடுக்கவும், பொறுப்புடன் அவர்களை செயல்பட வைக்கவும் ஏதுவானது.
  2. அரசாங்கம் சில அடிப்படை விதிமுறைகளின் அடிப்படையில் செயல்படுகிறது.
A
(i) மட்டும்
B
(ii) மட்டும்
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 173 Explanation: 
விளக்கம்: மக்களாட்சி: இவ்வகை அரசாங்கத்தில் மக்கள் சமமான அரசியல் உரிமைகளை அனுபவிக்கவும், தங்களின் ஆட்சியாளர்களை தேர்ந்தெடுக்கவும், பொறுப்புடன் அவர்களை செயல்பட வைக்கவும் ஏதுவான முறை மக்களாட்சி ஆகும். அரசாங்கம் சில அடிப்படை விதிமுறைகளின் அடிப்படையில் செயல்படுகிறது.
Question 174
சமத்துவம் குறித்த பின்வரும் கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு.
  1. அரசாங்கமானது அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
  2. நான் அனைவரும் ஒரே குடும்பத்தில் வசிக்கும் அங்கத்தினர்கள் போல சக மனிதர்களையும் பாவித்து நடந்து கொள்ள வேண்டும்.
A
(i) மட்டும்
B
(ii) மட்டும்
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 174 Explanation: 
விளக்கம்: சமத்துவம்: சட்டத்தின் முன் அனைவரும் சமம். பழமையான, பார ம்ப ரியமான ஏற்றத்தாழ்வுகள் நீக்கப்பட வேண்டும். அரசாங்கமானது அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். சகோதரத்துவம்: நான் அனைவரும் ஒரே குடும்பத்தில் வசிக்கும் அங்கத்தினர்கள் போல சக மனிதர்களையும் பாவித்து நடந்து கொள்ள வேண்டும். சககுடிமகன் யாரையும் தாழ்வாக பாவிக்கக்கூடாது.
Question 175
அரசமைப்பு குறித்த பின்வரும்  கூற்றுகளில்  சரியான விடையைத் தேர்ந்தெடு.
  1. இந்திய மக்களாகிய நாம் (We, the people of India) இந்த அரசமைப்பானது, மக்களால் தங்களின் பிரதிநிதிகளின் மூலமாக உருவாக்கப்ப ட் டு இயற்றப்பட்டதாகும்.
  2. இதை மக்களுக்கு அரசரோ அல்லது வேறு அந்நிய சக்திகளோ தரவில்லை.
A
(i) மட்டும்
B
(ii) மட்டும்
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 175 Explanation: 
விளக்கம்: இந்திய மக்களாகிய நாம் (We, the people of India) இந்த அரசமைப்பானது, மக்களால் தங்களின் பிரதிநிதிகளின் மூலமாக உருவாக்கப்ப ட் டு இயற்றப்பட்டதாகும். இதை மக்களுக்கு அரசரோ அல்லது வேறு அந்நிய சக்திகளோ தரவில்லை.
Question 176
அரசின் அதிகாரத்துவத்தை வரையறுப்பது எது?
A
அரசு நெறிமுறை கோட்பாடுகள்
B
அடிப்படை கடமைகள்
C
முகவுரை
D
அடிப்படை உரிமைகள்
Question 176 Explanation: 
விளக்கம்: அடிப்படை உரிமைகள் அரசின் அதிகாரத்துவத்தை வரையறுப்பது அடிப்படை உரிமைகள் ஆகும். தனிமனிதர்களின் சொந்த விவகாரங்களில் அரசாங்கத்தின் தலையீடின்றி இருப்பதற்கு இவ்வகை உரிமைகள் உறுதியளிக்கின்றன.
Question 177
சுதந்திரத்தை பாதுகாப்பதற்கு அவசியமானது எது?
A
அதிகாரப் பரவலாக்கம்
B
அடிப்படை கடமைகள்
C
சமதர்மம்
D
அடிப்படை உரிமைகள்
Question 177 Explanation: 
விளக்கம்: அதிகாரப் பரவலாக்கம்: சுதந்திரத்தை பாதுகாப்பதற்கு அதிகாரப் பரவலாக்கம் அவசியமாகின்றது. அதிகாரங்கள் முறையே மத்திய, மாநில மற்றும் உள்ளாட்சி அரசாங்கத்திற்கு பகிர்ந்து அளிக்கும் பட்சத்தில் நிர்வாகம் திறம்பட செயலாற்ற இயலும்.
Question 178
சுரண்டலுக்கு எதிரான உரிமை பற்றி கூறும் அரசமைப்பு உறுப்பு எது?
A
உறுப்பு 25-28
B
உறுப்பு 23-24
C
உறுப்பு 19-22
D
உறுப்பு 14-18
Question 178 Explanation: 
விளக்கம்: அடிப்படை உரிமைகள்: சமத்துவ உரிமை (உறுப்பு 14-18) சுதந்திர உரிமை (உறுப்பு 19-22) சுரண்டலுக்கு எதிரான உரிமை (உறுப்பு 23-24)
Question 179
மதச்சுதந்திர உரிமை பற்றி கூறும் அரசமைப்பு உறுப்பு எது?
A
உறுப்பு 25-28
B
உறுப்பு 23-24
C
உறுப்பு 19-22
D
உறுப்பு 14-18
Question 179 Explanation: 
விளக்கம்: மதச்சுதந்திர உரிமை (உறுப்பு 25-28) பண்பாடு மற்றும் கல்வி உரிமை (உறுப்பு 29-30) அரசமைப்பு பரிகார உரிமைகள் (உறுப்பு 32-35)
Question 180
குடிமக்களின் சுதந்திரத்திற்கான பாதுகாப்பு என்பது எதனைச்  சார்ந்து  அமைகிறது?
A
சட்ட மன்றம்
B
பாராளுமன்றம்
C
பொருளாதார சுதந்திரம்
D
நீதித்துறையின் சுதந்திரம்
Question 180 Explanation: 
விளக்கம்: சுதந்திரமான நீதித்துறை: குடிமக்களின் சுதந்திரத்திற்கான பாதுகாப்பு என்பது நீதித்துறையின் சுதந்திரத்தைச் சார்ந்தே அமைகிறது. நீதித்துறை சுதந்திரமாக செயல்பட வேண்டுமெனில், செயலாட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து தனித்திருப்பது அவசியமாகும். பொதுவுடைமை மற்றும் சர்வாதிகார நாடுகளில் மக்களுக்கு அடிப்படை உரிமைகள் வழங்கப்பட்டாலும் நீதித்துறை செயலாட்சியின் ஆதிக்கத்தில் அமைகிறது. இவ்வாறான நாடுகளில், அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதும், சுதந்திரத்தை பேணுவதும், அரசமைப்பினை நடைமுறைப்படுத்துவதும் கடினமாகும்.
Question 181
பின்வரும்  கூற்றுகளில்  சரியான விடையைத் தேர்ந்தெடு.
  1. பொருளாதார இடர்காப்பு சுதந்திரத்தின் நிபந்தனையாக பொருளாதார சுதந்திரம் அமைகிறது.
  2. ஏழை மற்றும் பணக்காரர், படித்தவர் மற்றும் படிக்காதவர் என்ற பிரிவினை சமூகத்தில் நிலைக்கும் வரையிலும் எஜமானர் மற்றும் பணியாளர் என்ற உறவுமுறை நீடிக்கும்
A
(i) மட்டும்
B
(ii) மட்டும்
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 181 Explanation: 
விளக்கம்: பொருளாதார இடர்காப்பு: சுதந்திரத்தின் நிபந்தனையாக பொருளாதார சுதந்திரம் அமைகிறது. “ஏழை மற்றும் பணக்காரர், படித்தவர் மற்றும் படிக்காதவர் என்ற பிரிவினை சமூகத்தில் நிலைக்கும் வரையிலும் எஜமானர் மற்றும் பணியாளர் என்ற உறவுமுறை நீடிக்கும்”.
Question 182
சட்டத்தின் ஆட்சி என்பது  பின்வரும் எந்த  நாடுகளில் நடைமுறையில் உள்ளது?
A
இங்கிலாந்து
B
அமெரிக்கா
C
இந்தியா
D
மேற்கண்ட அனைத்தும்
Question 182 Explanation: 
விளக்கம்: சட்டத்தின் ஆட்சி: சட்டத்தின் ஆட்சி என்பது இங்கிலாந்து, அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளில் நடைமுறையில் உள்ளது.
Question 183
உச்சநீதிமன்ற நீதிபதிகளின் வயது வரம்பு எது?
A
65
B
62
C
68
D
70
Question 183 Explanation: 
விளக்கம்: சுதந்திரமான நீதித்துறை இந்திய அரசமைப்பு, நீதித்துறை சுதந்திரமாக செயல்படத் தகுந்த முறையிலான அம்சங்களை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் சுதந்திரமாக செயல்படும் நீதித்துறையே, மக்களின் உரிமைகளையும் சுதந்திரத்தையும், அரசமைப்பின் மேலான தன்மையையும் பாதுகாக்கிறது. *நீதிபதிகளின் நியமனத்திற்கு பாகுபாடற்ற நடைமுறை பின்பற்றப்படுகிறது. * நீதிபதிகளுக்கு, உயர்ந்த தகுதிகளை நிர்ணயித்துள்ளது. *உச்சநீதிமன்ற நீதிபதிகள் 65 வயது வரையிலும், உயர்நீதிமன்ற நீதிபதிகள் 62வயது வரையிலும் பணியாற்றுவார்கள்.
Question 184
"அடிமைத்தனம் மற்றும் நிறவெறி போன்றவை மனிதர்களால் உருவாக்கப்பட்டவை ஆகும். இவை மனிதர்களின் நடவடிக்கைகள் மூலம் களையப்பட வேண்டியவையாகும்" என்று கூறியவர்?
A
நெல்சன் மண்டேலா
B
கெட்டல்
C
கென்னடி
D
ஆபிரகாம் லிங்கன்
Question 184 Explanation: 
விளக்கம்: வறுமை என்பது விபத்து அல்ல. அடிமைத்தனம் மற்றும் நிறவெறி போன்றவை மனிதர்களால் உருவாக்கப்பட்டவை ஆகும். இவை மனிதர்களின் நடவடிக்கைகள் மூலம் களையப்பட வேண்டியவையாகும். – நெல்சன் மண்டேலா
Question 185
பின்வரும் கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு.
  1. ஒரு நாடு மற்றொரு தேசத்தினால் கட்டுப்படுத்தப்படும்போது இறையாண்மை ஆள்வோரிடம் இருக்குமேயன்றி ஆளப்படுவோரிடம் அல்ல.
  2. உலகமயமாதலின் காலத்தில், இறையாண்மை மிகப்பெரிய அச்சுறுத்தலை சந்திக்கின்றது.
A
(i) மட்டும்
B
(ii) மட்டும்
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 185 Explanation: 
விளக்கம்: இறையாண்மை (Sovereignty): மேலான அதிகாரம் மிக்கதாக இருப்பதுடன் இவற்றை அழிக்கவோ மற்றும் பிரிக்கவோ முடியாது. சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவிற்கு இறையாண்மை கிடையாது. ஏனெனில் அதற்குக் காரணம் பிரிட்டிஷ் பேரரசு இந்தியாவை ஆட்சி செய்ததாகும். ஒரு நாடு மற்றொரு தேசத்தினால் கட்டுப்படுத்தப்படும்போது இறையாண்மை ஆள்வோரிடம் இருக்குமேயன்றி ஆளப்படுவோரிடம் அல்ல. உலகமயமாதலின் காலத்தில், இறையாண்மை மிகப்பெரிய அச்சுறுத்தலை சந்திக்கின்றது. ஏனெனில் உலகலாவிய பரிமாற்றம் என்பது தவிர்க்க முடியாததாகும்.
Question 186
எந்த ஒரு அரசியல் முறைமையின் அடிப்படைக் கட்டமைப்பை புரிந்து கொள்வதற்கும் எதனைப் படிப்பது தகுந்தது?
A
அரசு நெறிமுறைக்கோட்பாடுகள்
B
அடிப்படை கடமைகள்
C
முகவுரை
D
அடிப்படை உரிமைகள்
Question 186 Explanation: 
விளக்கம்: முகவுரை(Preamble): ஒரு புத்தகத்தின் முன்னுரை போன்றதே முகவுரை ஆகும். உலகின் எந்த அரசமைப்பிற்கும் முகவுரை ஒரு தொகுப்பு அல்லது அறிமுகம் ஆகும். எந்த ஒரு அரசியல் முறைமையின் அடிப்படைக் கட்டமைப்பை புரிந்து கொள்வதற்கும் முகவுரையைப் படிப்பதே தகுந்ததாகும். நம்முடைய இந்திய அரசமைப்பின் முகவுரை குறிப்பிடுவது என்னவெனில், இந்தியா என்பது மக்களாட்சி, குடியரசு மற்றும் இறையாண்மை போன்றவையாகும்.
Question 187
வயதுவந்தோர் வாக்குரிமை  குறித்த பின்வரும்  கூற்றுகளில்  சரியான விடையைத் தேர்ந்தெடு.
  1. மக்களுக்கு எந்தவித பாகுபாடுமின்றி வாக்களிக்கும் உரிமை வழங்கப்படுவதாகும்.
  2. இந்தியா சுதந்திரம் அடைந்த உடன் வயது வந்தோர் வாக்குரிமை அறிமுகப்படுத்தப்பட்டது.
A
(i) மட்டும்
B
(ii) மட்டும்
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 187 Explanation: 
விளக்கம்: வயதுவந்தோர் வாக்குரிமை (Universal adult suffrages): மக்களுக்கு எந்தவித பாகுபாடுமின்றி வாக்களிக்கும் உரிமை வழங்கப்படுவதாகும் அதாவது இனம், சாதி, நிறம், மதம், சொத்து மற்றும் இதர பிரவினை காரணிகள் இல்லாமல் வாக்கு அளிக்கும் உரிமையாகும். இந்தியா சுதந்திரம் அடைந்த உடன் வயது வந்தோர் வாக்குரிமை அறிமுகப்படுத்தப்பட்டது. வல்லரசு நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள், வயது வந்தோர் வாக்குரிமையை சுதந்திரம் அடைந்த உடன் அனைவருக்கும் நடைமுறைப்படுத்தவில்லை.
Question 188
நிரந்தரச்சட்டம் குறித்த பின்வரும் கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு.
  1. ஒரு நாட்டின் சட்டமன்ற அமைப்பின் மூலமாக எழுதப்பட்ட சட்டமாக ஏற்படுத்தபடுத்தப்படுவதாகும்.
  2. இவை தகுந்த விவாதங்களுக்கும் பின்னர் நாடாளுமன்ற சட்டங்களில் இணைக்கப்படும்.
A
(i) மட்டும்
B
(ii) மட்டும்
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 188 Explanation: 
விளக்கம்: நிரந்தரச்சட்டம் (Statues) : ஒரு நாட்டின் சட்டமன்ற அமைப்பின் மூலமாக எழுதப்பட்ட சட்டமாக ஏற்படுத்தபடுத்தப்படுவதாகும். இவை தகுந்த விவாதங்களுக்கும் பின்னர் நாடாளுமன்ற சட்டங்களில் இணைக்கப்படும்.
Question 189
எவ்வகையான பாகுபாடுகளையும் கடந்து நிர்வகிக்க வேண்டிய முக்கிய நிகழ்வு எது?
A
நகர அரசு
B
நிதி
C
நீதி
D
இயற்கை நிலை
Question 189 Explanation: 
விளக்கம்: நீதி (Justice): கிரேக்க சிந்தனையாளர்களால் முக்கியமான கருத்தாக்க கொள்கையாக விவாதிக்கப்பட்டது. நீதி என்பது எவ்வகையான பாகுபாடுகளையும் கடந்து நிர்வகிக்க வேண்டிய முக்கிய நிகழ்வாகும். நிதி (Fiscal): இது பணம் சார்ந்ததாகும். அனைத்து வகையான அரசாங்கங்களும் ஓர் நிதிக் கொள்கையில் கவனம் செலுத்துவது வழக்கமாகும்.
Question 190
சமுதாயத்தில் எவ்விதமான முறைப்படுத்தப்பட்ட அரசாங்க வடிவமும் இல்லாமல் தொன்மையான நிலையில் காணப்படுவது எது?
A
நகர அரசு
B
நிதி
C
நீதி
D
இயற்கை நிலை
Question 190 Explanation: 
விளக்கம்: இயற்கை நிலை (State of Nature): சமுதாயத்தில் எவ்விதமான முறைப்படுத்தப்பட்ட அரசாங்க வடிவமும் இல்லாமல் தொன்மையான நிலையில் காணப்படுவது ஆகும்.
Question 191
அமைப்பெதிர்வாதம் குறித்த பின்வரும் கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு.
  1. இது முழுவதும் குழப்பத்துடன் காணப்படுகின்ற நிலையாகும்.
  2. தற்காலத்தில் இராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் நிலையானஅரசாங்கக் கட்டமைப்பு இல்லாமல் காணப்படுகின்ற அரசியல் நிலையாகும்.
A
(i) மட்டும்
B
(ii) மட்டும்
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 191 Explanation: 
விளக்கம்: அமைப்பெதிர்வாதம் (Anarchy): இது முழுவதும் குழப்பத்துடன் காணப்படுகின்ற நிலையாகும். குறிப்பாக தற்காலத்தில் இராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் நிலையானஅரசாங்கக் கட்டமைப்புஇல்லாமல் காணப்படுகின்ற அரசியல் நிலையாகும். இந்த அரசுகள் அமெரிக்க ஆக்ரமிப்பின் கீழ் இருப்பதே இந்நிலைக்கு காரணமாகும்.
Question 192
நகர அரசு  குறித்த பின்வரும் கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு.
  1. இவ்வகை சிறிய அரசுகளில் மக்கள் முடிவு எடுப்பதில் முக்கிய அதிகாரம் வாய்ந்தவர்களாக காணப்படுவார்கள்.
  2. இது கிரேக்க நாட்டில் 1300 ஆண்டுகளுக்கு முன்பாக செயல்பட்டது.
A
(i) மட்டும்
B
(ii) மட்டும்
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 192 Explanation: 
விளக்கம்: நகர அரசு (City – states): இவ்வகை சிறிய அரசுகளில் மக்கள் முடிவு எடுப்பதில் முக்கிய அதிகாரம் வாய்ந்தவர்களாக காணப்படுவார்கள். இது கிரேக்க நாட்டில் 2300 ஆண்டுகளுக்கு முன்பாக செயல்பட்டது.
Question 193
வாசுதெய்வகுடும்பகம்  குறித்த பின்வரும்  கூற்றுகளில்  சரியான விடையைத் தேர்ந்தெடு.
  1. ‘உலகம் ஓர் குடும்பம்’ என்ற கொள்கை உடையது.
  2. இது அனைத்து தேசிய அரசுகளையும் ஒன்றுடன் மற்றொன்றினை பிணைந்து ஒரு குடும்பம் போல எந்த வித பாகுபாடுமின்றி செயல்படுவதாகும்.
A
(i) மட்டும்
B
(ii) மட்டும்
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 193 Explanation: 
விளக்கம்: வாசுதெய்வகுடும்பகம் (Vasudaivakudumbagam): ‘உலகம் ஓர் குடும்பம்’ என்ற கொள்கை உடையது. இது உலகளாவிய சிந்தனை ஆகும். இது அனைத்து தேசிய அரசுகளையும் ஒன்றுடன் மற்றொன்றினை பிணைந்து ஒரு குடும்பம் போல எந்த வித பாகுபாடுமின்றி செயல்படுவதாகும்.
Question 194
அவசரச்சட்டம் யாரால் பிறப்பிக்கப்படுகிறது?
A
ஆளுநர்
B
குடியரசுத்தலைவர்
C
a) மற்றும் b)
D
முதலமைச்சர்
Question 194 Explanation: 
விளக்கம்: எளிதில் மாற்றமுடியாதது (Inalienable): இது எளிதில் பிரிக்கமுடியாத ஒன்றாகும். அவசரச்சட்டம் (Ordinances): குடியரசுத்தலைவர் அல்லது அளுநரால் முறையே நாடாளுமன்றம் அல்லது சட்டமன்ற கூட்டத் தொடர் நடக்காத போது தற்காலிகமாக வெளிப்படக்கூடிய உத்தரவாகும்.
Question 195
பின்வரும்  கூற்றுகளில்  சரியான விடையைத் தேர்ந்தெடு.
  1. சட்டப்படியான (De-jure): சட்டத்தின் மூலமாக அதிகாரம் பெற்றிருத்தல்.
  2. நடைமுறை (De-facto): உண்மையில் யார் ஒருவர் நடைமுறையில் நிலையான அதிகாரம் பெற்றிருக்கின்றனர் என்பதாகும்.
A
(i) மட்டும்
B
(ii) மட்டும்
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 195 Explanation: 
விளக்கம்: சட்டப்படியான (De-jure): சட்டத்தின் மூலமாக அதிகாரம் பெற்றிருத்தல். நடைமுறை (De-facto): உண்மையில் யார் ஒருவர் நடைமுறையில் நிலையான அதிகாரம் பெற்றிருக்கின்றனர் என்பதாகும்.
Question 196
சூப்பரானஸ்”(superanus) என்ற லத்தீன் வார்த்தை ஆங்கிலத்தில் எவ்வாறு பொருள்படுகிறது?
A
மிக உயர்ந்த
B
அருமை வாய்ந்த
C
உண்மைத்தன்மை
D
மக்கள் சக்தி
Question 196 Explanation: 
விளக்கம்: இறையாண்மை என்பது “சூப்பரானஸ்”(superanus) என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து தோன்றியதாகும். இது ஆங்கிலத்தில் மிக உயர்ந்த அல்லது மேலான என்றும் பொருள்படுகிறது.
Question 197
இக்குவாலிஸ் என்ற வார்த்தையிலிருந்து பெறப்பட்டது எது?
A
சமத்துவம்
B
இறையாண்மை
C
சமதர்மம்
D
சுதந்திரம்
Question 197 Explanation: 
விளக்கம்: சமத்துவம் என்பது இக்குவாலிஸ் என்ற வார்த்தையிலிருந்து உருவானதாகும். இது நியாயமான என்று பொருள்படுகிறது. ஒரே மாதிரியான சலுகைகள், உரிமைகள், நிலைகள், வாய்ப்புகள் மற்றும் நடத்தப்படும் முறைகள் போன்றவை சமூகத்தில் மக்களுக்கு சமமான உரிமையுடன் கிடைத்தல் ஆகியவை சமத்துவத்தை குறிப்பதாகும்.
Question 198
மக்களுக்கு இடையேயான திறன் மற்றும் திறன் வேறுபாட்டால் உருவாவது எது?
A
சமூக சமத்துவமின்மை
B
அரசியல் சமத்துவமின்மை
C
இயற்கை சமத்துவமின்மை
D
பொருளாதார சமத்துவமின்மை
Question 198 Explanation: 
விளக்கம்: இது போன்ற சமூக சமத்துவமின்மையானது மக்களுக்கு வழங்கப்படும் சமமில்லாத வாய்ப்புகள் மற்றும் சில சமுதாய குழுக்களினுடைய சுரண்டலின் மூலம் உண்டாக்கப்படுகிறது. இயற்கை சமத்துவமின்மை என்பது பிறப்பிலிருந்து உருவாகின்ற பல இயல்புகள் மற்றும் திறமைகளின் வெளிப்பாடாகும்.
Question 199
சமுதாயத்தினால் சமமற்ற முறையில் நடத்தப்படுவதால் உண்டாக்கப்படும் நிலை?
A
சமூக சமத்துவமின்மை
B
அரசியல் சமத்துவமின்மை
C
இயற்கை சமத்துவமின்மை
D
பொருளாதார சமத்துவமின்மை
Question 199 Explanation: 
விளக்கம்: சமுதாயத்தினால் சமமற்ற முறையில் நடத்தப்படுவதால் உண்டாக்கப்படும் நிலை சமூக சமத்துவமின்மை ஆகும். மேலும் இவ்வகை சமத்துவமின்மை என்பது இனம், சாதி, மதம், பாலினம், நிறம், போன்றவற்றின் அடிப்படையில் சமுதாயத்தில் மக்களை வேறுபடுத்தி நடத்துவதால் உருவாகிறது.
Question 200
அமெரிக்காவில் குடிமை உரிமைகள் இயக்கம் யாரால் தொடங்கப்பட்டது?
A
நெல்சன் மண்டேலா
B
மார்ட்டின் லூதர் கிங்
C
கென்னடி
D
ஆபிரகாம் லிங்கன்
Question 200 Explanation: 
விளக்கம்: அமெரிக்காவில் மார்ட்டின் லூதர் கிங்கின் குடிமை உரிமைகள் இயக்கம், இந்தியாவில் அம்பேத்கார் தொடங்கிய தாழ்த்தப்பட்டோருக்கான சமூக சமத்துவ போராட்டங்கள் போன்றவை உலக வரலாற்றில் சமூக சமத்துவம் சார்ந்த இயக்கங்களுக்கு சிறந்த உதாரணங்களாகத் திகழ்கின்றன.
Question 201
அனைத்து மக்களும் சமமாக படைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று கூறுவது எது?
A
ஆப்பிரிக்க பிரகடனம்
B
இங்கிலாந்தின் பிரகடனம்
C
இத்தாலியின் சுதந்திர பிரகடனம்
D
அமெரிக்க சுதந்திர பிரகடனம்
Question 201 Explanation: 
விளக்கம்: அனைத்து மக்களும் சமமாக படைக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிறது அமெரிக்க சுதந்திர பிரகடனம்.
Question 202
மனிதர்கள் மற்றும் குடிமக்களின் உரிமைப்பிரகடனம் எந்த நாட்டோடு தொடர்புடையது?
A
ஆப்பிரிக்கா
B
இங்கிலாந்து
C
பிரான்சு
D
அமெரிக்கா
Question 202 Explanation: 
விளக்கம்: பிரான்சு நாட்டின் மனிதர்கள் மற்றும் குடிமக்களின் உரிமைப்பிரகடனம் மனிதர்கள் சுதந்திரமாக பிறந்த உடன் எப்பொழுதும் சுதந்திரமான மற்றும் சமமான உரிமைகளை பெற்றிருக்கிறார்கள் என்று கூறுகிறது.
Question 203
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பிரகடனம் எப்போது வெளியிடப்பட்டது?
A
1948, டிசம்பர் 10
B
1949, டிசம்பர் 10
C
1948, டிசம்பர் 20
D
1946, டிசம்பர் 10
Question 203 Explanation: 
விளக்கம்: 1948, டிசம்பர் 10 ஆம் நாள் அன்று வெளியிடப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பிரகடனம் உலக மக்களின் சமூக சமத்துவத்தை உறுதி செய்துள்ளது. சர்வதேச பொது மன்னிப்பு சபையின் அறிக்கையின்படி மேற்கூறப்பட்ட உரிமைகள் அனைத்தும் பல நாடுகளில் மீறப்படுவதாகவும் சமூக ஏற்றத்தாழ்வுகள் தொடர்பான பிரச்சனைகளை தீர்க்க உலகம் முழுவதும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.
Question 204
சட்டத்தின் ஆட்சி எனும் கருத்தாக்கத்தினை பிரபலப்படுத்தியவர் யார்?
A
ஆஸ்டின்
B
கெட்டல்
C
டைசி
D
லாஸ்கி
Question 204 Explanation: 
விளக்கம்: இங்கிலாந்து சட்ட நிபுணரான எ.வி.டைசி சட்டத்தின் ஆட்சி எனும் கருத்தாக்கத்தினை 19 ஆம் நூற்றாண்டில் மேலும் பிரபலப்படுத்தியவர் ஆவார்.
Question 205
"சட்டமே ஆளுகை புரிய வேண்டும்" என எழுதியவர் யார்?
A
ஆஸ்டின்
B
அரிஸ்டாட்டில்
C
டைசி
D
ரூசோ
Question 205 Explanation: 
விளக்கம்: முற்கால ஞானிகளுக்கு சட்டத்தின் ஆட்சி எனும் சொற்றொடர் அறிமுகம் இல்லாவிட்டாலும் அக்கருத்தாக்கத்தினை அரிஸ்டாட்டில் எனும் ஞானி "சட்டமே ஆளுகை புரிய வேண்டும்" என எழுதியுள்ளமையை காணலாம்.
Question 206
"குடிமக்களின் தூய உணர்விலான உத்வேகமானது சட்டத்தின் வார்த்தைகளை விட குறைவு படினும் அதுவே அவர்களுக்கு மிகவும் உண்மையான பாதுகாவலனாகும்" என்று கூறியவர் யார்?
A
ஆஸ்டின்
B
லாஸ்கி
C
டைசி
D
ரூசோ
Question 206 Explanation: 
விளக்கம்: "குடிமக்களின் தூய உணர்விலான உத்வேகமானது சட்டத்தின் வார்த்தைகளை விட குறைவு படினும் அதுவே அவர்களுக்கு மிகவும் உண்மையான பாதுகாவலனாகும்" - லாஸ்கி
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 206 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!