Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

அரசியல் அறிவியலின் அடிப்படைக்கருத்தாக்கங்கள் பகுதி – II Online Test 11th Political Science Lesson 4 Questions in Tamil

அரசியல் அறிவியலின் அடிப்படைக்கருத்தாக்கங்கள் பகுதி – II-11th Political Science Lesson 4 Questions in

Congratulations - you have completed அரசியல் அறிவியலின் அடிப்படைக்கருத்தாக்கங்கள் பகுதி – II-11th Political Science Lesson 4 Questions in. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
"இறையாண்மையின் கட்டளையே சட்டம் ஆகிறது" என்று கூறியவர்?
A
க்ராப்
B
சல்மாண்டு
C
அரிஸ்டாட்டில்
D
போடின்
Question 1 Explanation: 
அரசின் இறையாண்மையால் உத்திரவாதம் அளிக்கப்படுகின்ற விதிமுறைகளும், கட்டுப்பாடுகளும் சட்டம் எனப்படுகிறது. போடின் (Bodin) கூறுவதுபோல, இறையாண்மையின் கட்டளையே சட்டம் ஆகிறது.
Question 2
“சட்டம் செயல்படாத நிலையில் மனிதர்கள் விலங்குகளாக மாறுகிறார்கள்”  என்று கூறியவர்?
A
க்ராப்
B
சல்மாண்டு
C
அரிஸ்டாட்டில்
D
போடின்
Question 2 Explanation: 
இதனைப் போன்று அரிஸ்டாட்டிலும், “சட்டம் செயல்படாத நிலையில் மனிதர்கள் விலங்குகளாக மாறுகிறார்கள்” என்று சரியாக சுட்டிக்காட்டுகிறார். சமுதாயத்தின் கட்டுக்கோப்பினைப் பாதுகாக்கவும், தேசத்தின் வளர்ச்சியை மேம்படுத்தவும், சட்டமானது உலகம் முழுமைக்கும் இன்றியமையாததாகிறது.
Question 3
  • கூற்று: சமுதாய ஒழுங்கினைப் பராமரிக்க, சட்டத்தின் அபரிமிதமான சக்தி மட்டுமே முழு தீர்வாக விளங்க முடியாது.
  • கா.ணம்: சட்டத்திற்கு என்று ஒரு குறிப்பிட்ட வரையறை உள்ளது.
A
கூற்று சரி; காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல.
B
கூற்று தவறு; காரணம் தவறு.
C
கூற்று சரி; காரணம் கூற்றின் சரியான விளக்கம் ஆகும்.
D
கூற்று தவறு; காரணம் சரி.
Question 3 Explanation: 
சமுதாய ஒழுங்கினைப் பராமரிக்க, சட்டத்தின் அபரிமிதமான சக்தி மட்டுமே முழு தீர்வாக விளங்க முடியாது. ஏனெனில் சட்டத்திற்கு என்று ஒரு குறிப்பிட்ட வரையறை உள்ளது. குற்றவாளிகளுக்கு சட்டம் கொடுங்கோலனாகவும், குடிமக்களுக்கும், நல்லவர்களுக்கும் அதே சட்டம் பாதுகாவலனாகவும் விளங்குகிறது.
Question 4
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றினைத் தேர்ந்தெடு
  • i)மக்களாட்சி நாடுகளில் நிறைவேற்றப்படக் கூடிய சட்டம், முற்றதிகார நாடுகளின் சட்டங்களை விட வேறுபட்டதாகவும், மக்கள் நலனுக்காகவுமாக செயல்படுகிறது.
  • ii)சட்டம், ஒரு நாட்டு மக்களுக்கு எந்த அளவிற்கு சுதந்திரத்தை வழங்குகிறது என்பது குறிப்பிட்ட சட்டத்தை நிர்வகிக்கும்போதும், செயல்படுத்தும் போதும் தெரிய வருகிறது.
A
(i) சரி
B
(ii) சரி
C
(i) சரி (ii) தவறு
D
(i) மற்றும் (ii) சரியானவை
Question 4 Explanation: 
உலகத்தின் ஒரு பகுதியில் சட்டம், கடினமானதாகவும் மறுபக்கம் இணக்கமாகவும் விளங்கக்கூடிய காரணம் என்பது எப்போதும் சர்ச்சைக்குரியதாகவும், விவாதத்திற்குரியதாகவும் தொடர்கிறது. மேற்கூறிய வாதமும், விவாதமும் தத்தம் நாடுகளின் பணிகள், குறிப்பாக தண்டனைகளை பொறுத்து அமைகிறது. உதாரணத்திற்கு மக்களாட்சி நாடுகளில் நிறைவேற்றப்படக் கூடிய சட்டம், முற்றதிகார நாடுகளின் சட்டங்களை விட வேறுபட்டதாகவும், மக்கள் நலனுக்காகவுமாக செயல்படுகிறது. இதை தவிர்த்து சட்டம், ஒரு நாட்டு மக்களுக்கு எந்த அளவிற்கு சுதந்திரத்தை வழங்குகிறது என்பது குறிப்பிட்ட சட்டத்தை நிர்வகிக்கும்போதும், செயல்படுத்தும் போதும் தெரிய வருகிறது.
Question 5
அரசால் அமலாக்கம் செய்யப்படுகின்ற விதிமுறைகளின் தொகுப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A
அரசியலமைப்பு
B
நெறிமுறைகள்
C
சட்டம்
D
நீதி
Question 5 Explanation: 
உலகின் எந்த நாட்டிலுமே சட்டத்தினை அறியாமை என்பது தண்டனையிலிருந்து தப்பிக்கும் ஒரு காரணியாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை. எனவே சட்டத்தின் கருத்தாக்கத்தினை இளைய தலைமுறைக்கு அறிமுகப்படுத்துவதும், அவை அரசமைப்பு வழங்கும் அடிப்படை சட்டங்கள் மற்றும் ஒழுங்கு முறை என புரிய வைப்பதும் இன்றியமையாததாகிறது.
Question 6
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றினைத் தேர்ந்தெடு
  • i)சமூகத்தில் நீதியை அடைவது சட்டத்தின் குறிக்கோள் ஆகும்.
  • ii)நீதி என்பது எது சரி, எது தவறு, எது நல்லது, எது சமத்துவம் போன்றவைகளை விளக்கக்கூடிய ஒர் புலனாகாத கருத்தாகும்.
A
(i) சரி
B
(ii) சரி
C
(i) சரி (ii) தவறு
D
(i) மற்றும் (ii) சரியானவை
Question 6 Explanation: 
சட்டம் – நீதி ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு: -சமூகத்தில் நீதியை அடைவது சட்டத்தின் குறிக்கோள் ஆகும். -நீதி என்பது எது சரி, எது தவறு, எது நல்லது, எது சமத்துவம் போன்றவைகளை விளக்கக்கூடிய ஒர் புலனாகாத கருத்தாகும். -எனவே ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் எது சரியானதோ அல்லது எது நியாயமானதோ அதைச் செய்வதாகும்
Question 7
“லாக்“ என்ற வேர்ச்சொல்லிலிருந்து உருவான சொல் எது?
A
சட்டம்
B
நீதி
C
நெறிமுறைகள்
D
பண்பாடு
Question 7 Explanation: 
சட்டம் என்கிற வார்த்தை பண்டைய டியூட்டோனிக் (Teutonic) மொழியிலுள்ள “லாக்“ என்ற வேர்ச்சொல்லிலிருந்து உருவானதாகும். ‘லாக்’ என்ற சொல்லானது நிலைத்தன்மை அல்லது ஒரே சீரான என்று பொருள்படுகிறது. சட்டமில்லாத சமுதாயம் மற்றும் ஆட்சி, குழப்பவாதத்திலும், கலகத்திலும் முடிவுறும். உன்மையில் சட்டமே வாழ்க்கையை ஒழுங்குபடுத்துகிறது. சட்டம் என்ற சொல் ‘சீரானது‘ என்பதைக் குறிக்கிறது.
Question 8
சட்டத்தை எத்தனை வகையாகப் பிரிக்கலாம்?
A
இரண்டு
B
மூன்று
C
நான்கு
D
ஐந்து
Question 8 Explanation: 
சட்டத்தை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். அவை, இயற்கை சட்டம் மற்றும் மனிதச் சட்டம் ஆகியவையாகும். இயற்கை சட்டம் இயற்கையையும், மனிதச்சட்டம் மனிதர்களின் வாழ்க்கையையும் ஒழுங்குபடுத்துகிறது
Question 9
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றினைத் தேர்ந்தெடு.
  • அரசியல் அறிவியலில் சட்டம் என்பது மனித நடவடிக்கைகளை வழிநடத்துகிற விதிகளைக் கொண்ட தொகுப்பு ஆகும்.
  • அரசாங்கம் அரசின் விருப்பத்தை சட்டத்தின் வாயிலாக நிறைவேற்றுகிறது.
A
(i) சரி
B
(ii) சரி
C
(i) சரி (ii) தவறு
D
(i) மற்றும் (ii) சரியானவை
Question 9 Explanation: 
அரசியல் அறிவியலில் சட்டம் என்பது மனித நடவடிக்கைகளை வழிநடத்துகிற விதிகளைக் கொண்ட தொகுப்பு ஆகும். அரசின் கடமைகளை அரசாங்கம் செயல்படுத்துகிறது. அதைப் போலவே அரசாங்கம் அரசின் விருப்பத்தை சட்டத்தின் வாயிலாக நிறைவேற்றுகிறது.
Question 10
"நீதி நிர்வாகத்தை செயல்படுத்துவதற்காக அரசு அங்கீகரித்த விதிமுறைகளின் தொகுப்பே சட்டம் ஆகின்றது" என்று கூறியவர்?
A
க்ராப்
B
சல்மாண்டு
C
அரிஸ்டாட்டில்
D
போடின்
Question 10 Explanation: 
நீதி நிர்வாகத்தை செயல்படுத்துவதற்காக அரசு அங்கீகரித்த விதிமுறைகளின் தொகுப்பே சட்டம் ஆகின்றது. – சல்மாண்டு (Salmond)
Question 11
“சட்டம் என்பது விழுமியங்களைச் சார்ந்த தீர்ப்புகளின் வெளிப்பாடு ஆகிறது" என்று கூறியவர்?
A
க்ராப்
B
சல்மாண்டு
C
அரிஸ்டாட்டில்
D
போடின்
Question 11 Explanation: 
‘க்ராப்’(Krabbe) என்ற அறிஞரின் கூற்றின்படி, “சட்டம் என்பது விழுமியங்களைச் சார்ந்த தீர்ப்புகளின் வெளிப்பாடு ஆகிறது. மனித வர்க்கம் விரும்புகின்ற ஒழுங்கமைவு மற்றும் இயற்கையை சார்ந்த நீதிநெறியாகவும் சித்தரிக்கப்படுகிறது”. –க்ராப்’ (Krabbe)
Question 12
"சட்டம் நிலைப்படுத்தப்பட்ட எண்ணங்களாகவும், பழக்க வழக்கங்களாகவும் கருதப்படுகிறது" என்று கூறியவர்?
A
ஹாலந்து
B
சல்மாண்டு
C
உட்ரோ வில்சன்
D
மேக்ஐவர்
Question 12 Explanation: 
அரசாங்கத்தின் சக்தியாலும், அதிகாரத்தாலும் நிலைப்படுத்தப்பட்ட ஒரே சீரான விதிமுறைகளின் அமைப்பிற்கு சட்டம் என்று பொருள். மேலும் இது நிலைப்படுத்தப்பட்ட எண்ணங்களாகவும், பழக்க வழக்கங்களாகவும் கருதப்படுகிறது. – உட்ரோ வில்சன் (Woodrow Wilson).
Question 13
"மனிதர்களின் புற நடவடிக்கைகளுக்காக, இறையாண்மை மிக்க அரசியல் அதிகாரம் மூலம் அமலாக்கம் செய்யப்படும் பொது விதிகளின் தொகுப்பே சட்டமாகும்" என்று கூறியவர்?
A
ஹாலந்து
B
சல்மாண்டு
C
உட்ரோ வில்சன்
D
மேக்ஐவர்
Question 13 Explanation: 
மனிதர்களின் புற நடவடிக்கைகளுக்காக, இறையாண்மை மிக்க அரசியல் அதிகாரம் மூலம் அமலாக்கம் செய்யப்படும் பொது விதிகளின் தொகுப்பே சட்டமாகும் – ஹாலந்து ( Holland)
Question 14
"அரசின் ஆதரவில்லையெனில் ஒரு சட்டம், சட்டமாகவே இருக்க முடியாது." என்று கூறியவர்?
A
ஹாலந்து
B
சல்மாண்டு
C
உட்ரோ வில்சன்
D
மேக்ஐவர்
Question 14 Explanation: 
மேக்ஐவர் (MacIver) என்பாரின் கூற்றுப்படி, “அரசின் ஆதரவில்லையெனில் ஒரு சட்டம், சட்டமாகவே இருக்க முடியாது. சட்டத்தின் நோக்கமானது உறுதியானஅடித்தளங்களை நிறுவவும் மனிதர்களின் மெய் உறுதியை வலிமையாக்கி அதன் மூலம் சமூகத்தின் கட்டமைப்பை மேம்படுத்துவதாகும்.சட்டம் எனும் சொல்லானது அரசியல் அறிவியல் மூலம் மனிதர்களின் நடவடிக்கைகளின் மீது ஆளுகை செய்யவும் அவர்களின் வாழ்வை நெறிமுறைப்படுத்துவதற்குமான விதிமுறைகளின் தொகுப்பாகக் கருதப்படுகிறது.
Question 15
"சட்டம் அரசை உருவாக்குவது அல்ல மாறாக அரசின் அழுத்தமே சட்டத்தை உருவாக்குகிறது" என்று கூறியவர்?
A
ஹாலந்து
B
சல்மாண்டு
C
உட்ரோ வில்சன்
D
ஹாக்கிங்
Question 15 Explanation: 
சட்டம் அரசை உருவாக்குவது அல்ல மாறாக அரசின் அழுத்தமே சட்டத்தை உருவாக்குகிறது. என்று நம்பிக்கையாக ஹாக்கிங் கூறுகிறார்
Question 16
கீழ்க்கண்டவற்றுள் சட்டத்தின் நோக்கம் எது/எவை?
A
அடிப்படை மனித உரிமைகளை பாதுகாத்தல்
B
நியாயத்தை ஊக்குவித்தல்
C
சச்சரவுகளை தீர்த்தல்
D
இவை அனைத்தும்
Question 16 Explanation: 
சட்டத்தின் நோக்கங்கள் யாவை? அடிப்படை மனித உரிமைகளை பாதுகாத்தல் நியாயத்தை ஊக்குவித்தல் சச்சரவுகளை தீர்த்தல் நீதியை ஊக்குவித்தல் ஒழுங்கையும் நிலைத்தன்மையையும் ஏற்படுத்துதல் விரும்பத்தகுந்த சமூக மற்றும் பொருளாதார நடத்தையை ஊக்குவித்தல் பெரும்பான்மை விருப்பத்தை பிரதிநிதித்துவப்படுத்துதல் சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாத்தல்
Question 17
“தனியார் சட்டத்தில் சம்பந்தப்பட்டவர்கள் தனி நபர்களாகவும் அவர்களுக்கு மேலாகவும் இடையேயும் ஒரு பாரபட்சமில்லாத நடுவராக அரசு இருக்கிறது” என்று கூறியவர் யார்?
A
ஹாலந்து
B
சல்மாண்டு
C
உட்ரோ வில்சன்
D
ஹாக்கிங்
Question 17 Explanation: 
தனியார் சட்டங்கள்: குடிமக்களிடையேயான உறவுகளும் அவ்வுறவுகளை கட்டுப்படுத்தும் விதிமுறைகளும் தனியார் சட்டத்தின் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. “தனியார் சட்டத்தில் சம்பந்தப்பட்டவர்கள் தனி நபர்களாகவும் அவர்களுக்கு மேலாகவும் இடையேயும் ஒரு பாரபட்சமில்லாத நடுவராக அரசு இருக்கிறது”. – ஹாலந்து
Question 18
குடிமக்களுக்கும் அரசுக்கும் இடையேயான உறவுகளை முடிவு செய்வது?  
A
தனியார் சட்டம்
B
பொதுச்சட்டம்
C
அரசியலமைப்பு
D
இவை அனைத்தும்
Question 18 Explanation: 
பொதுச்சட்டங்கள்: குடிமக்களுக்கும் அரசுக்கும் இடையேயான உறவுகளை முடிவு செய்வது பொது சட்டமாகும். இவ்வகை சட்டத்தில் அரசு நடுவராகவும் கட்சிக்காரராகவும் பார்க்கப்படுகிறது.
Question 19
அரசை வழி நடத்தக்கூடிய அடிப்படை சட்டங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது
A
தனியார் சட்டம்
B
பொதுச்சட்டம்
C
அரசமைப்பு சட்டங்கள்
D
இவை அனைத்தும்
Question 19 Explanation: 
அரசமைப்பு சட்டங்கள்:அரசை வழி நடத்தக்கூடிய அடிப்படை சட்டங்கள் அரசமைப்பு சட்டங்கள் ஆகும். அரசாங்கத்தின் செயல்பாடுகளை வரையறுத்து தெளிவு படுத்தக்கூடிய சட்டங்களே அரசமைப்பு சட்டங்களாகும். உதாரணத்திற்கு குடியரசுத்தலைவர் தேர்தல் உச்ச நீதி மன்றத்தின் அதிகாரம் மற்றும் பொது சட்டம் சட்டமன்றத்தால் இயற்றப்படக்கூடிய நிரந்தரச் சட்டத்திலிருந்து வேறுபடுகிறது.
Question 20
பின்வருவனவற்றுள் முன் நிகழ்வுகளை அடிப்படையாகக்கொண்டு உருவாவது
A
தனியார் சட்டம்
B
பொதுச்சட்டம்
C
அரசியலமைப்பு
D
சாதாரண சட்டங்கள்
Question 20 Explanation: 
பொதுச்சட்டம் முன் நிகழ்வுகளை அடிப்படையாகக்கொண்டு உருவாவது ஆகும். சட்டமன்றத்தால் இயற்றப்படும் நிரந்தரச்சட்டமானது எழுதப்பட்ட சட்டங்களால் ஆன முறை சார்ந்த ஒன்றாகும். இச்சட்டத்தில் பொது மக்களின் நடவடிக்கைகளை கட்டாயப்படுத்தவோ அல்லது தடை செய்யவோ சட்டங்களும் ஒழுங்கு முறை விதிமுறைகளும் உள்ளன. பொது சட்டமானது நீதிபதிகள் தங்கள் தீர்ப்புகளை முந்தைய தீர்ப்புகளை முன்னுதாரணமாகக்கொண்டு அதனடிப்படையில் வழங்க அனுமதிக்கிறது. செயல்பாடுகள் ஆளுநர் நியமனமுறை போன்றவை அரசமைப்பு தொடர்பான நிகழ்வுகளாகும்.
Question 21
குடிமக்களுடைய சமூக மற்றும் பொருளாதார நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டிருக்கும் எது?
A
நிரந்தர சட்டங்கள்
B
பொதுச்சட்டம்
C
அவசர சட்டம்
D
சாதாரண சட்டங்கள்
Question 21 Explanation: 
அரசாங்கத்தின் செயல்பாடுகளையும் அடிப்படை உரிமைகளையும் அதிகாரங்களையும் பற்றியதாக அல்லாமல் குடிமக்களுடைய சமூக மற்றும் பொருளாதார நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டிருந்ததால் அவை சாதாரண சட்டங்கள் எனப்படும். உதாரணத்திற்கு குழந்தை திருமணங்கள் மது பணத்தின் மீதான தடை போன்றவைகள் சாதாரண சட்டங்களின் கீழ் அமைகிறது.
Question 22
மாநில சட்டமன்றத்தின் மூலமாகவும், நாடாளுமன்றத்தின் மூலமாகவும் இயற்றப்படும் சட்டங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A
நிரந்தர சட்டங்கள்
B
பொதுச்சட்டம்
C
அரசியலமைப்பு
D
சாதாரண சட்டங்கள்
Question 22 Explanation: 
நிரந்தர சட்டங்கள் (Statute Laws) நிரந்தர சட்டங்கள் என்பவை மாநில சட்டமன்றத்தின் மூலமாகவும், நாடாளுமன்றத்தின் மூலமாகவும் இயற்றப்படும் சட்டங்களாகும். மக்களாட்சி நாடுகளில் பெரும்பான்மையான சட்டங்கள் நாடாளுமன்றத்தின் மூலமாகவே இயற்றப்படுகின்றன.
Question 23
அரசினுடைய சட்டங்களின் அடிப்படையில், அரசாங்கத்தின் செயலாட்சி துறை மூலம் இது பிறப்பிக்கப்படுகின்ற சட்டம் எது?
A
நிரந்தர சட்டங்கள்
B
பொதுச்சட்டம்
C
அவசர சட்டம்
D
சாதாரண சட்டங்கள்
Question 23 Explanation: 
அவசர சட்டம் (Ordinance) பொதுவாக அரசினுடைய சட்டங்களின் அடிப்படையில், அரசாங்கத்தின் செயலாட்சி துறை மூலம் இது பிறப்பிக்கப்படுகின்றது. இவ்வகை சட்டம், குறைந்த கால கட்டமே நீடிக்கும். நாடாளுமன்றம் இயங்காத காலங்களிலும், அவசர காலங்களிலும் குடியரசு தலைவர் மூலம் அவசர சட்டம் பிறப்பிக்கப்படும்.
Question 24
இங்கிலாந்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சட்டம் எது?
A
தனியார் சட்டம்
B
பொதுச்சட்டம்
C
அவசர சட்டம்
D
சாதாரண சட்டங்கள்
Question 24 Explanation: 
பொது சட்டங்கள் (Common Laws) பொது சட்டங்களானது மரபுகளையும், பாரம்பரிய பழக்க வழக்கங்களையும் அடிப்படையாக கொண்டது. ஆனால் நிரந்தர சட்டங்களை போல நீதிமன்றங்களால், அமலாக்கம் செய்யக்கூடிய தன்மை உடையதாகும். பொது சட்டங்கள் இங்கிலாந்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சட்டங்கள் ஆகும்.
Question 25
ஆளுகையை முறைப்படுத்துவதற்கான சட்டம் எது?
A
தனியார் சட்டம்
B
பொதுச்சட்டம்
C
அரசியலமைப்பு
D
நிர்வாக சட்டங்கள்
Question 25 Explanation: 
நிர்வாக சட்டங்கள் (Administrative Laws) அரசாங்க பணியாளர்களின் அலுவல் மற்றும் பொறுப்புகளை பற்றி விளக்கமளிப்பதுடன், ஆளுகையை முறைப்படுத்துவதற்கான சட்டம் நிர்வாக சட்டம் எனப்படும்.
Question 26
அரசாங்க அதிகாரிகளின் சலுகைகளை பற்றி விளக்கம் அளிக்க முயலும் சட்டம் எது?
A
தனியார் சட்டம்
B
பொதுச்சட்டம்
C
அரசியலமைப்பு
D
நிர்வாக சட்டங்கள்
Question 26 Explanation: 
தனி மனிதர்களுக்கும், பொதுநிர்வாக அதிகாரிகளுக்கும் இடையே சட்டத்தையும், அதன் செயல்பாட்டையும் பிரித்து நடைமுறைப்படுத்துவது நிர்வாக சட்டமாகும். மேலும் இது அரசாங்க அதிகாரிகளின் சலுகைகளை பற்றி விளக்கம் அளிக்க முயலுகிறது.
Question 27
நிர்வாக சட்டம் பிரபலமாக உள்ள நாடு எது?
A
இந்தியா
B
இங்கிலாந்து
C
அமெரிக்கா
D
பிரான்சு
Question 27 Explanation: 
இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் நிர்வாக சட்டம் பிரபலம் அடையவில்லை. பிரான்ஸ் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் இவை பிரபலமாக உள்ளன. உதாரணத்திற்கு குடிமக்களுக்கும், அரசாங்க அதிகாரிகளுக்கும் இடையே சர்ச்சை ஏற்படும் பட்சத்தில் நிர்வாக நீதிமன்றம், நிர்வாக சட்டத்தின் மூலம் தீர்வு காண்கிறது.
Question 28
நாகரீகமடைந்த நாடுகளுக்கு இடையேயான உறவுமுறைகளையும், நடத்தையையும் நிர்ணயிக்கும் சட்டம் எது?
A
தனியார் சட்டம்
B
பொதுச்சட்டம்
C
பன்னாட்டு சட்டங்கள்
D
நிர்வாக சட்டங்கள்
Question 28 Explanation: 
பன்னாட்டு சட்டங்கள் (International Laws) பன்னாட்டு சூழலில் நாகரீகமடைந்த நாடுகளுக்கு இடையேயான உறவுமுறைகளையும், நடத்தையையும் நிர்ணயிக்கும் சட்டம், பன்னாட்டு சட்டமாகும். பன்னாட்டு உறவுகளை ஒழுங்கு ப டுத்துவத ற்கெ ன் று , தனித்தன்மையுடைய பன்னாட்டு சட்டம் என்ற ஒன்று வழக்கில் இல்லை. ஆனால் ஐக்கிய நாடுகள் சபையும், உலக பொதுமக்களின் கருத்துமே, ஒவ்வொரு நாடும் தங்கள் இறையாண்மையை முழுவதுமாக அனுபவிக்க வழிவகை செய்கின்றது.
Question 29
எந்த சட்டங்களின் பிரிவுகள், தரைவழி, கடல்வழி, ஆகாய வழி என்று நாடுகளுக்கிடையே சர்வதேச எல்லைகளை வரையறுக்கிறது?
A
தனியார் சட்டம்
B
பொதுச்சட்டம்
C
பன்னாட்டு சட்டங்கள்
D
நிர்வாக சட்டங்கள்
Question 29 Explanation: 
மேலும் கடல் எல்லை பாதுகாப்பு சட்டம், வான்எல்லை சட்டம் என்றும் பன்னாட்டு சட்டங்களின் பிரிவுகள், தரைவழி, கடல்வழி, ஆகாய வழி என்று நாடுகளுக்கிடையே சர்வதேச எல்லைகளை வரையறுக்கிறது. வான்எல்லைச் சட்டங்களின் மூலம் ஒரு நாட்டின் ஆகாய விமானம் இன்னொரு நாட்டின் வான் எல்லையில் பறக்கும்போது அனுமதி பெற்ற பிறகே பறக்க வழி செய்கிறது.
Question 30
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றினைத் தேர்ந்தெடு
  • i)பழக்கவழக்கங்களின் மூலமாக பயன்படுத்தப்பட்டு வந்த வழக்காறுகள் யாவும் நாளடைவில் அரசால் அங்கீகரிக்கப்பட்டு சட்டமாகின.
  • ii)பழங்குடிகள் நாளடைவில் அரசுடன் இணைத்துக் கொள்ளப்படும் போது அம்மக்கள் பின்பற்றிய பழக்கவழக்கங்களும் படிப்படியாக சட்டங்களாக்கப்பட்டன.
A
(i) சரி
B
(ii) சரி
C
(i) சரி (ii) தவறு
D
(i) மற்றும் (ii) சரியானவை
Question 30 Explanation: 
வழக்காறுகள் (Customs) சட்ட உருவாக்கத்திற்கு பழக்கவழக்கங்கள் மிகவும் உதவி புரிந்துள்ளன. பழக்கவழக்கங்களின் மூலமாக பயன்படுத்தப்பட்டுவந்த வழக்காறுகள் யாவும் நாளடைவில் அரசால் அங்கீகரிக்கப்பட்டு சட்டமாகின. ஆதிகாலத்திலிருந்து பழங்குடியினரிடையேயான சர்ச்சைகளும், பிரச்சனைகளும் அக்குடியினுடைய தலைவரின் மூலமாக அவர்களின் வழக்காறுகள் மற்றும் மரபுகளின் வழியே தீர்வு காணப்பட்டு வருகிறது. பழங்குடிகள் நாளடைவில் அரசுடன் இணைத்துக் கொள்ளப்படும் போது அம்மக்கள் பின்பற்றிய பழக்கவழக்கங்களும் படிப்படியாக சட்டங்களாக்கப்பட்டன.
Question 31
வழக்காறுகளில் இருந்து பெறப்பட்ட  சட்டத்திற்கு ஒரு முக்கிய உதாரணம் எது?
A
பிரான்சின் பொதுச்சட்டம்
B
இங்கிலாந்து பொதுச்சட்டம்
C
அமெரிக்க பொதுச்சட்டம்
D
இந்தியா பொதுச்சட்டம்
Question 31 Explanation: 
ஒரு நாட்டின் மரபுகளையும், பழக்க வழக்கங்களையும் அரசால் மறுதலிக்க முடிவதில்லை. இன்றளவில் இங்கிலாந்தின், பொது சட்டமானது வழக்காறுகளில் இருந்து பெறப்பட்டது என்பது ஒரு முக்கிய உதாரணமாகும்.
Question 32
இந்திய நாட்டின் மரபுகளையும், பழக்க வழக்கங்களையும் கொண்டு உருவாக்கப்பட்ட சட்டம் எது?
A
காடுகள் பாதுகாப்பு சட்டம்
B
ஜல்லிக்கட்டு சட்டம்
C
நில உச்சவரம்பு சட்டம்
D
காடுகள் வளர்ப்பு சட்டம்
Question 32 Explanation: 
உதாரணத்திற்கு இந்தியாவில் தமிழ் மக்களிடையே ‘ஏறு தழுவுதல் ’ (Bull Taming Sport) என்றபண்பாடு சார்ந்த விளையாட்டானது 2017-ஆம் ஆண்டு ‘ஜல்லிக்கட்டு சட்டம்’ என்ற புதிய சட்டம் உருவாகக் காரணமாக அமைந்தது
Question 33
இந்து மதச் சட்டமானது பெரும்பாலும் எதன் விதிமுறையிலிருந்து பின்பற்றப்பட்டு வருகிறது?
A
ஷரியத்
B
மனு
C
வேதங்கள்
D
அர்த்த சாஸ்திரம்
Question 33 Explanation: 
மதம் (Religion): ஆதிகால சமூகங்கள் பின்பற்றிய மத சம்பிரதாயங்களும் அரசினுடைய, சட்ட உருவாக்கத்தில் பெரிதான பங்கை ஆற்றியுள்ளது. பெரும்பான்மையான நாடுகளில் மதமே சட்டத்தின் அடிப்படையாக அமைந்துள்ளது. இந்து மதச் சட்டமானது பெரும்பாலும் மனுவின் விதிமுறையிலிருந்து பின்பற்றப்பட்டு வருகிறது.
Question 34
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றினைத் தேர்ந்தெடு
  • i)தெய்வீகச் சட்டமானது, மனிதனின் மூலமாக கடவுள் வழங்கிய சட்டங்கள் என்று கருதப்படுகிறது.
  • ii)தெய்வீக சட்டத்தின் ஆதிமூலமாக கடவுளே இருப்பதாகக் கருதப்படுகிறது.
A
(i) சரி
B
(ii) சரி
C
(i) சரி (ii) தவறு
D
(i) மற்றும் (ii) சரியானவை
Question 34 Explanation: 
இஸ்லாமியச் சட்டமானது ஷரியத் சட்டங்களின் மூலத்திலிருந்து பின்பற்றப்படுகிறது. தெய்வீகச் சட்டமானது, மனிதனின் மூலமாக கடவுள் வழங்கிய சட்டங்கள் என்று கருதப்படுகிறது. தெய்வீக சட்டத்தின் ஆதிமூலமாக கடவுளே இருப்பதாகக் கருதப்படுகிறது.
Question 35
கிறித்துவர்களுக்கு, அவர்களின் பரமபிதா முதன் முதலில் அருளிய  கட்டளைகள் எத்தனை?
A
எட்டு
B
பத்து
C
ஏழு
D
இருபது
Question 35 Explanation: 
கிறித்துவர்களுக்கு, அவர்களின் பரமபிதா முதன் முதலில் அருளிய பத்து கட்டளைகளே சட்டத்தின் அடிப்படையாகக் கருதப்படுகிறது.
Question 36
அரசமைப்பின் எந்த பகுதியின் மூலம்  கல்வி மற்றும் பண்பாட்டு உரிமைகளுக்கு உத்திரவாதம் அளிக்கப்பட்டுள்ளது?
A
இரண்டு
B
மூன்று
C
ஏழு
D
ஐந்து
Question 36 Explanation: 
அரசமைப்பின் பகுதி மூன்றில் அடிப்படை உரிமை உறுப்பு 29(1) இல் கல்வி மற்றும் பண்பாட்டு உரிமைகளுக்கு உத்திரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. 2014 இல் உச்ச நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பில் விலங்குகளும் புலன் உணர்வு கொண்டவை ஆதலால் அடிப்படை உரிமை மறுப்பு 29(1) படி வாழும் உரிமையை பெறுகின்றன என்றும் ஆதலால் அவற்றை துன்புறுத்துவதை அனுமதிக்க கூடாது என்றும் தீர்ப்பு கூறியது.இந்த முரண்பாடுகள் இந்த விளையாட்டை முறைப்படுத்துவதில் பல்வேறு விளக்கங்களுக்கு வித்திட்டன.
Question 37
"உண்மையில் முற்கால ரோமானிய சட்டங்கள் பெரும்பாலும், மதநுட்ப விதிகளை விடவும் சற்றே அதிகமாக உள்ளது" என்று கூறியவர்?
A
ஹாலந்து
B
கெட்டல்
C
உட்ரோ வில்சன்
D
ஹாக்கிங்
Question 37 Explanation: 
உண்மையில் முற்கால ரோமானிய சட்டங்கள் பெரும்பாலும், மதநுட்ப விதிகளை விடவும் சற்றே அதிகமாக உள்ளது. அவைகள் பெரும்பாலும் சில மத சூத்திரங்களை முறையாக பின்பற்றுவதன் மூலம் மத உரிமைகளை அடையும் வழி முறைகளாக இருந்தன. - உட்ரோ வில்சன் (Woodrow Wilson)
Question 38
“அரசு என்பது சட்டத்தை உருவாக்க மட்டுமல்லாது, அதனை தெளிவுபடுத்துவதற்காகவும், வழக்காறுகளை செயல்படுத்துவதற்காகவும் உருவாக்கப்பட்டுள்ளது." என்று கூறியவர்?
A
ஹாலந்து
B
கெட்டல்
C
உட்ரோ வில்சன்
D
ஹாக்கிங்
Question 38 Explanation: 
வழக்குமன்றங்களின் முடிவுகள் (Judicial Decisions) கெட்டல்(Gettel) கூற்றின்படி, “அரசு என்பது சட்டத்தை உருவாக்க மட்டுமல்லாது, அதனை தெளிவுபடுத்துவதற்காகவும், வழக்காறுகளை செயல்படுத்துவதற்காகவும் உருவாக்கப்பட்டுள்ளது. நீதித்துறையின் செயல்பாடானது சட்டங்களை தெளிவுபடுத்தவும், சட்டங்களை நடைமுறைப்படுத்துவதுமாக அமைகிறது
Question 39
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றினைத் தேர்ந்தெடு
  • i)நீதிமன்ற தீர்ப்புகள் புதிய  பல சட்டங்களை உருவாக்குவதற்கு மூல ஆதாரமாக அமைகிறது.
  • ii)சில சமயங்களில், உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றங்களின் தீர்ப்புகள் சட்டங்களாக பாவிக்கப்படுகின்றன
A
(i) சரி
B
(ii) சரி
C
(i) சரி (ii) தவறு
D
(i) மற்றும் (ii) சரியானவை
Question 39 Explanation: 
நீதிமன்றங்கள் செயல்படும்போது, அவைகளின் தீர்ப்புகள் புதிய சட்டங்களாக உருவாகின்றன. அதன் பிறகே இவ்வகை சட்டங்கள் அரசு மற்றும் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்படுகின்றன. எனவே, நீதிமன்ற தீர்ப்புகள் இவ்வகையில் புதிய பல சட்டங்களை உருவாக்குவதற்கு மூல ஆதாரமாக அமைகிறது. சில சமயங்களில், உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றங்களின் தீர்ப்புகள் சட்டங்களாக பாவிக்கப்படுகின்றன.
Question 40
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றினைத் தேர்ந்தெடு
  • (i) சட்டங்கள்   சில சமயங்களில் தெளிவற்று சூழ்நிலைக்கு பொருந்தாமல் இருக்கிறது.
  • (ii) அந்தச் சமயங்களில் சம நீதி பங்கிலான கொள்கைகளும், நல்லியல்புகளும், பொது அறிவு அடிப்படையில் பயன்படுத்தப்பட்டு அக்குழப்பமான சூழலுக்கான தீர்வு காணப்படுகிறது.
A
(i) சரி
B
(ii) சரி
C
(i) சரி (ii) தவறு
D
(i) மற்றும் (ii) சரியானவை
Question 40 Explanation: 
சட்டங்கள் எப்போதெல்லாம், தெளிவற்று சூழ்நிலைக்கு பொருந்தாமல் இருக்கிறதோ, அந்தச் சமயங்களில் இந்த சம நீதி பங்கிலான கொள்கைகளும், நல்லியல்புகளும், பொது அறிவு அடிப்படையில் பயன்படுத்தப்பட்டு அக்குழப்பமான சூழலுக்கான தீர்வு காணப்படுகிறது
Question 41
“சமச்சீராக்கம் என்பது அசல் குடிமைச் சட்டத்தோடு இருக்கக்கூடிய விதிமுறை தொகுப்பாகும்" என்று கூறியவர்?
A
ஹாலந்து
B
சர் ஹென்றி மெய்ன்
C
உட்ரோ வில்சன்
D
ஹாக்கிங்
Question 41 Explanation: 
“சமச்சீராக்கம் என்பது அசல் குடிமைச் சட்டத்தோடு இருக்கக்கூடிய விதிமுறை தொகுப்பாகும். நீதியின் அடிப்படையிலும், மரபுகளின் அடிப்பைடையிலும் உருவானதால் இவ்வுறுப்புகள் குடிமைச் சட்டத்தின் பயன்பாடுகளை மீறுமளவிற்கு தலையாய புனிதத் தன்மையைபெற்று விளங்குகின்றன”. - சர் ஹென்றி மெய்ன்.
Question 42
ஆங்கிலேய பொதுச் சட்ட மரபை பின்பற்றும் நாடுகளில் உள்ள சட்ட விதிகளின் தொகுப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A
இயற்கை நீதி
B
பொதுச்சட்டம்
C
சமச்சீராக்கம்
D
மரபு சார் நெறிகள்
Question 42 Explanation: 
ஆங்கிலேய பொதுச் சட்ட மரபை பின்பற்றும் நாடுகளில் உள்ள சட்ட விதிகளின் தொகுப்பிற்கு சமச்சீராக்கம் (Equity) என பெயரிடப்பட்டுள்ளது. இது இயற்கை நீதி என்று சில நேரங்களில் குறிப்பிடப்படுகின்ற ஒன்றை அடைய கடுமையான சட்டங்களையும் கண்டிப்பான அமலாக்கத்தையும் துணையாக கொண்டுள்ளது.
Question 43
இங்கிலாந்து உயர் நீதி மன்றத்தால் மட்டுமே அமல்படுத்த கூடிய விதிகளின் தொகுப்பு எது?
A
இயற்கை நீதி
B
பொதுச்சட்டம்
C
சமச்சீராக்கம்
D
மரபு சார் நெறிகள்
Question 43 Explanation: 
சமச்சீராக்கம் நியாயத்தை நிலைநாட்டுவதாகவும் உள்ளது. சமச்சீராக்கம் என்பது பொதுச் சட்டத்திற்கு துணையாக வர்ணிக்கப்படுகிறது. இது ஆங்கிலேய பொதுச் சட்டத்தில் இடம் பெறாத பகுதிகளையும் ஒன்றிணைத்து அச்சட்ட அமைப்பை ஒரு முழுமையான ஒன்றாக ஆக்குகிறது.   ஆங்கிலேய சட்டத்தின்படி, சமச்சீராக்கம் என்பது இங்கிலாந்து உயர் நீதி மன்றத்தால் மட்டுமே அமல்படுத்த கூடிய விதிகளின் தொகுப்பாகும்
Question 44
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றினைத் தேர்ந்தெடு
  • i)அறிவியல் விளக்கவுரைகள்  சட்ட வல்லுநர்களின் அறிவியல் விளக்கவுரைகள், மற்றுமொரு சட்டமூலமாக விளங்குகின்றன.
  • ii)முதன்முதலில் இத்தகைய அறிவியல் விளக்கவுரைகள் தோன்றியபோது, அனைவரும் அதனை ஒரு வாதமாக மட்டுமே வர்ணித்தார்கள்
A
(i) சரி
B
(ii) சரி
C
(i) சரி (ii) தவறு
D
(i) மற்றும் (ii) சரியானவை
Question 44 Explanation: 
அறிவியல் விளக்கவுரைகள் (Scientific Commentaries) சட்ட வல்லுநர்களின் அறிவியல் விளக்கவுரைகள், மற்றுமொரு சட்டமூலமாக விளங்குகின்றன. முதன்முதலில் இத்தகைய அறிவியல் விளக்கவுரைகள் தோன்றியபோது, அனைவரும் அதனை ஒரு வாதமாக மட்டுமே வர்ணித்தார்கள். நாளடைவில் இதன் சிறப்புத் தன்மையும், அதிகாரமும், நீதி மற்றும் நீதிமன்ற முடிவுகளையும் விட அதிகாரத்துவம் பெற்று விளங்கியது
Question 45
"சட்ட நிபுணர்களின் கருத்துக்கள் பெரும்பாலான நேரங்களில் சட்டமாகவே கருதப்படுகிறது" என்று கூறியவர்?
A
ஹாலந்து
B
கில்கிரிஸ்ட்
C
உட்ரோ வில்சன்
D
அ.அப்பாதுரை
Question 45 Explanation: 
சட்ட நிபுணர்களின் கருத்துக்கள் பெரும்பாலான நேரங்களில் சட்டமாகவே கருதப்படுகிறது. உதாரணத்திற்கு, இங்கிலாந்தில் கோக் மற்றும் ப்ளாக் ஸ்டோனின் விளக்கவுரைகள் (Coke and Blackstone), அமெரிக்காவின் ஸ்டோரி மற்றும் கென்ட் (Story and Kent), இந்தியாவின் விஜ்நானேஸ்வரா மற்றும் அபரார்கா (Vijnaneswaa and Aprarka) ஆகியோரின் விளக்கவுரைகளைக் கூறலாம். - அ. அப்பாதுரை
Question 46
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றினைத் தேர்ந்தெடு
  • i)தற்காலத்தில் பெரும்பான்மையான சட்டங்கள் சட்டமன்றத்தின் மூலமே இயற்றப்படுகிறது.
  • ii)பிற நாட்டு அரசமைப்புகளில் உள்ள சிறந்த அம்சங்களைப் பெற்று அதை தன் சொந்த நாட்டின் நன்மைக்கு பயன்படுத்துவதற்கு சிறந்த உதாரணமாக இந்திய அரசமைப்பு உள்ளது.
A
(i) சரி
B
(ii) சரி
C
(i) சரி (ii) தவறு
D
(i) மற்றும் (ii) சரியானவை
Question 46 Explanation: 
சட்டமன்றம் (Legislature): தற்காலத்தில் பெரும்பான்மையான சட்டங்கள் சட்டமன்றத்தின் மூலமே இயற்றப்படுகிறது. சட்டத்தின் மிக முக்கிய ஆதாரங்களுள் ஒன்றாக இது உள்ளது. பிற நாட்டு அரசமைப்புகளில் உள்ள சிறந்த அம்சங்களைப் பெற்று அதை தன் சொந்த நாட்டின் நன்மைக்கு பயன்படுத்துவதற்கு சிறந்த உதாரணமாக இந்திய அரசமைப்பு உள்ளது
Question 47
"நல்லியல்பு இல்லாத கெட்ட குடிமக்களிடம் இருந்து உருவாவது மோசமான அரசும், மோசமான சட்டங்களுமே ஆகும்" என்று கூறியவர்?
A
ஹாலந்து
B
கில்கிரிஸ்ட்
C
உட்ரோ வில்சன்
D
அ.அப்பாதுரை
Question 47 Explanation: 
“குடிமக்களின் மனங்களிலிருந்து உருவாவது அரசாகும். அவர்கள் நீதிநெறி முகவர்களாவர். அதே சமயம், நல்லியல்பு இல்லாத கெட்ட குடிமக்களிடம் இருந்து உருவாவது மோசமான அரசும், மோசமான சட்டங்களுமே ஆகும்”. - கில்கிரிஸ்ட் (Gilchrist)
Question 48
பின்வருவனவற்றுள் இந்திய அரசாங்க சட்டம் 1935லிருந்து பெறப்பட்டது அல்லாதது எது
A
கூட்டாட்சி முறை
B
ஆளுநர்
C
நீதித்துறையின் பங்கு
D
சட்டத்தின் ஆட்சி
Question 48 Explanation: 
இந்திய அரசமைப்பின் ஆதாரங்கள் (Sources of the Indian Constitution)   இந்திய அரசாங்க சட்டம் 1935 – கூட்டாட்சி முறை, ஆளுநர், நீதித்துறையின் பங்கு, நெருக்கடி நிலை அதிகாரங்கள்.  
Question 49
பின்வருவனவற்றுள் பிரிட்டன் அரசமைப்பிலிருந்து பெறப்பட்டது  எது/ எவை
A
நீதிப்புனராய்வு
B
சுதந்திரமான நீதித்துறை
C
சட்ட உருவாக்கமுறைகள்
D
இவை அனைத்தும்
Question 49 Explanation: 
பிரிட்டன் அரசமைப்பு – சட்ட உருவாக்கமுறைகள், நாடாளுமன்ற அரசாங்கம், சட்டத்தின் ஆட்சி, ஒற்றைக்குடியுரிமை, ஈரவை அரசாங்கம்.  
Question 50
பின்வருவனவற்றுள் அமெரிக்க அரசமைப்பிலிருந்து பெறப்பட்டது  எது?
A
குடியரசுத் தலைவர் பதவி நீக்க நடைமுறை
B
துணைக்குடியரசுத் தலைவரின் பங்கு
C
உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மீதான குற்ற விசாரணை
D
இவை அனைத்தும்
Question 50 Explanation: 
அமெரிக்க அரசமைப்பு – அடிப்படை உரிமைகள், சுதந்திரமான நீதித்துறை, நீதிப்புனராய்வு, குடியரசுத் தலைவர் பதவி நீக்க நடைமுறை, உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மீதான குற்ற விசாரணை, துணைக்குடியரசுத் தலைவரின் பங்கு
Question 51
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றினைத் தேர்ந்தெடு
  • i)சட்டமும், நீதிநெறியும் சமமாக பாவிக்கப்படுகிறது.
  • ii)சட்டத்திற்கும், நீதிநெறிக்கும் உள்ள நல்லுறவை போலவே, சட்டத்திற்கும் அரசிற்கும் இடையே உள்ளது.
A
(i) சரி
B
(ii) சரி
C
(i) சரி (ii) தவறு
D
(i) மற்றும் (ii) சரியானவை
Question 51 Explanation: 
சட்டம் எவ்வாறு அரசுடனும், நீதி நெறியுடனும் தொடர்பு கொண்டுள்ளது? சட்டமும், நீதிநெறியும் சமமாக பாவிக்கப்படுகிறது. நீதிநெறியானது குடிமக்களுக்கு ஒழுக்க விதிகளை போதிக்கிறது. அதேபோல, அரசால் இயற்றப்படுகின்ற சட்டமும் இந்த லட்சியத்தை அடைய பாடுபடுகிறது. மக்களின் நலனை மேம்படுத்தும் ஒரே நோக்கத்துடன் அரசு செயல்படுகிறது. சட்டத்திற்கும், நீதிநெறிக்கும் உள்ள நல்லுறவை போலவே, சட்டத்திற்கும் அரசிற்கும் இடையே உள்ளது.
Question 52
அரசியல் உடற்கூறில் ஏதேனும் ஒரு பகுதி பாதிக்கின்றபோது, ஒட்டுமொத்த உடலும் பாதிப்புறும்” என்று கூறியவர் யார்?
A
அரிஸ்டாட்டில்
B
கில்கிரிஸ்ட்
C
உட்ரோ வில்சன்
D
பிளாட்டோ
Question 52 Explanation: 
“தனிமனிதனின் நல்லொழுக்கத்திற்கு சரிசமமாக இயங்கக்கூடியது நல்லரசாகும். அரசியல் உடற்கூறில் ஏதேனும் ஒரு பகுதி பாதிக்கின்றபோது, ஒட்டுமொத்த உடலும் பாதிப்புறும்”. – பிளாட்டோ (Plato)
Question 53
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றினைத் தேர்ந்தெடு
  • i)நல்லியல்பு அரசு  நற்குடிமக்களை பெற்று சிறந்து விளங்குகிறது.
  • ii)அரசின் உயிர்மூச்சான செயல்பாடாக “நீதி நெறிகள்“ விளங்குகின்றன
A
(i) சரி
B
(ii) சரி
C
(i) சரி (ii) தவறு
D
(i) மற்றும் (ii) சரியானவை
Question 53 Explanation: 
சட்டமும் ஒழுக்கமும் ஒன்றோடு ஒன்று மிகுந்த தொடர்புடையன ஆகும். ஒழுக்க விதிமுறைகள் என்பவை குடிமக்களின் நன்னடத்தைகளுக்கு அடிப்படையாகும். நல்லியல்பு அரசு நற்குடிமக்களை பெற்று சிறந்து விளங்குகிறது. நல்லியல்பற்ற அரசானது, ஒழுக்கம் தவறிய குடிமக்களைப் பெற்று சீரழியும். அரசின் உயிர்மூச்சான செயல்பாடாக “நீதி நெறிகள்“ விளங்குகின்றன.
Question 54
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றினைத் தேர்ந்தெடு
  • நீதிநெறியானது நல்லியல்பு கடமைகளைப் பற்றியது, ஆனால் அரசால் இயற்றப்படும் சட்டமோ சட்டக் கடமைகளை பற்றியதாகும்.
  • தீண்டாமை போன்ற சமூக அவலங்களுக்கெதிராக சட்டங்கள் இருந்தாலும், சாதி, மதம், இனம், வர்க்கம், நிறம் அடிப்படையில் பாகுபாடு காட்டும் கொள்கையானது பாவம் என்பதை அறிய
A
(i) சரி
B
(ii) சரி
C
(i) சரி (ii) தவறு
D
(i) மற்றும் (ii) சரியானவை
Question 54 Explanation: 
நீதிநெறியானது நல்லியல்பு கடமைகளைப் பற்றியது, ஆனால் அரசால் இயற்றப்படும் சட்டமோ சட்டக் கடமைகளை பற்றியதாகும். தீண்டாமையை ஒழிப்பதற்கு இந்திய அரசாங்கம் கடந்த பல ஆண்டுகளாக போராடிக்கொண்டிருக்கிறது. தீண்டாமைக்கு எதிரான பல சட்டங்களையும் இயற்றியுள்ளது. தீண்டாமை போன்ற சமூக அவலங்களுக்கெதிராக சட்டங்கள் இருந்தாலும், சாதி, மதம், இனம், வர்க்கம், நிறம் அடிப்படையில் பாகுபாடு காட்டும் கொள்கையானது பாவம் என்பதை அறிய வேண்டும். மேற்கூறியவைகளின் அடிப்படையில் சமூகத்தில் எழும் இன்னல்களுக்கு அளவே இல்லாததாக இருக்கிறது.
Question 55
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றினைத் தேர்ந்தெடு
  • i)அரசாங்கம் மக்கள் உடல்நிலைக்கும், மனநிலைக்கும் பங்கம் விளைவிக்கும் மது மற்றும் குழந்தை திருமணம் போன்றவற்றை தடுக்கும் பல சட்டங்களை இயற்றி வருகிறது.
  • ii)பொதுவாக மக்களாட்சியில் ஒழுக்க நெறிகளுக்கு எதிரான சட்டம் என்று ஒன்று  உண்டு
A
(i) சரி
B
(ii) சரி
C
i) சரி (ii) தவறு
D
(i) மற்றும் (ii) சரியானவை
Question 55 Explanation: 
அரசாங்கம் மக்கள் உடல்நிலைக்கும், மனநிலைக்கும் பங்கம் விளைவிக்கும் மது மற்றும் குழந்தை திருமணம் போன்றவற்றை தடுக்கும் பல சட்டங்களை இயற்றி வருகிறது. பொதுவாக மக்களாட்சியில் ஒழுக்க நெறிகளுக்கு எதிரான சட்டம் என்று ஒன்று இல்லை.
Question 56
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றினைத் தேர்ந்தெடு
  1. மனித உரிமைகள் என்பவை உரிமைகளில் மிகவும் உயர்ந்த மற்றும் தார்மீக அடிப்படையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
  2. மனித உரிமைகள்  உள்நாட்டு அளவிலும், சர்வதேச அளவிலும் சட்டங்கள் மற்றும் ஒப்பந்தங்கள் மூலமாக ஆதரவளிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது.
A
(i) சரி
B
(ii) சரி
C
(i) சரி (ii) தவறு
D
(i) மற்றும் (ii) சரியானவை
Question 56 Explanation: 
விளக்கம்: ஒப்பந்தம் மூலம் பெறும் உரிமைகள் (Contractual Rights): இவ்வகையான உரிமைகள் என்பது தனி மனிதனுக்கு ஒரு குறிப்பிட்ட நிகழ்வில் வழங்கப்படுகிற வாக்குறுதிகள் அல்லது ஒப்பந்தங்கள் வாயிலாக தோற்றுவிக்கப்படுகிறது. இது ஒரு குறிப்பிட்ட சூழலில் தனி மனிதர்களுக்கு வழங்கப்படும் உறுதிகள் மற்றும் அதன் செயலாக்கங்களும் ஆகும். இதற்கு உதாரணமாக கூறவேண்டுமானால் பொருட்களை வாங்கும் உரிமை, சேவை பெறும் உரிமை, பொருள் அல்லது சேவையை விற்கும் உரிமை ஆகியவற்றினைக் குறிப்பிடலாம்.
Question 57
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றினைத் தேர்ந்தெடு
  1. மனித உரிமைகள் என்பவை உரிமைகளில் மிகவும் உயர்ந்த மற்றும் தார்மீக அடிப்படையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
  2. மனித உரிமைகள்  உள்நாட்டு அளவிலும், சர்வதேச அளவிலும் சட்டங்கள் மற்றும் ஒப்பந்தங்கள் மூலமாக ஆதரவளிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது.
A
(i) சரி
B
(ii) சரி
C
(i) சரி (ii) தவறு
D
(i) மற்றும் (ii) சரியானவை
Question 57 Explanation: 
விளக்கம்: மனித உரிமைகள் (Human Rights): மனித உரிமைகள் என்பவை உரிமைகளில் மிகவும் உயர்ந்து இருப்பதாகும். இவை தார்மீக அடிப்படையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இது உலகளவிலான மனித குலத்தின் நல்லியல்பில் உள்ளதாகும். இது உள்நாட்டு அளவிலும், சர்வதேச அளவிலும் சட்டங்கள் மற்றும் ஒப்பந்தங்கள் மூலமாக ஆதரவளிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது.
Question 58
"சட்டமானது பொதுக்கருத்தை பிரதிபலிப்பதோடு நல்லியல்புகளின் மேம்பாட்டிற்கான குறியீடாகவும் விளங்குகிறது" என்று கூறியவர் யார்?
A
அரிஸ்டாட்டில்
B
கில்கிரிஸ்ட்
C
உட்ரோ வில்சன்
D
மேக்ஐவர்
Question 58 Explanation: 
நீதிநெறிகள் என்பவை அரசிற்கு அத்தியாவசியமான நிபந்தனையாக விளங்குகிறது. சட்டமும், அரசும் பொதுமக்கள் கருத்தை உருவாக்கவும் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும் தொடர்ந்து முயற்சிகள் எடுத்துக்கொண்டிருக்கின்றன. சட்டமானது பொதுக்கருத்தை பிரதிபலிப்பதோடு நல்லியல்புகளின் மேம்பாட்டிற்கான குறியீடாகவும் விளங்குகிறது. - மேக்ஐவர் (MacIver)
Question 59
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றினைத் தேர்ந்தெடு
  1. எந்த ஒரு மனிதனும் கைது செய்யப்படும் போது அதற்கான காரணத்தை அவனுக்கு தெரிவிக்காமல் காவலில் வைக்கக் கூடாது.
  2. கைது செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள்ளாக நீதிமன்றத்தின் முன்பாக ஆஜர்படுத்தப்பட வேண்டும்.
A
(i) சரி
B
(ii) சரி
C
(i) சரி (ii) தவறு
D
(i) மற்றும் (ii) சரியானவை
Question 59 Explanation: 
விளக்கம்: வாழும் உரிமை மற்றும் தனிநபர் சுதந்திரம் (Right to Life and Personal Liberty) எந்த ஒரு குடிமகனுக்கும் தனிநபர் சுதந்திரம் மறுக்கப்பட கூடாது. அதாவது எந்த ஒரு மனிதனும் கைது செய்யப்படும் போது அதற்கான காரணத்தை அவனுக்கு தெரிவிக்காமல் காவலில் வைக்கக் கூடாது. மேலும் அவர் தனது சார்பாக வாதாட ஒரு வழக்குறைஞரை தேர்தெடுத்து கொள்ளும் உரிமை வழங்கப்பட வேண்டும். அவர் கைது செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள்ளாக நீதிமன்றத்தின் முன்பாக ஆஜர்படுத்தப்பட வேண்டும்.
Question 60
அரசின் சட்டங்கள் என்பவை நீதிநெறியிலான சமூகத்தை உருவாக்குவதாகும்“என்று கூறியவர் யார்?
A
அரிஸ்டாட்டில்
B
மாக்கியவல்லி
C
வில்சன்
D
மேக்ஐவர்
Question 60 Explanation: 
“அரசின் சட்டங்கள் என்பவை நீதிநெறியிலான சமூகத்தை உருவாக்குவதாகும்“ வில்சன், “அரசின் சட்டங்கள் என்பவை நீதிநெறியிலான சமூகத்தை உருவாக்குவதாகும்“ என்று தெளிவாக தெரிவித்துள்ளார். இதனாலேயே சட்டத்தை உருவாக்கும் இறையாண்மையானது, சட்டத்திற்கும், நீதிநெறிக்கும் ஒரு நெருங்கிய உறவை ஏற்படுத்த விழைகிறது.
Question 61
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றினைத் தேர்ந்தெடு
  1. தடுப்புக் காவல் என்பது காலத்தின் கட்டாயத்தினால் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவரின் செயலை தடுப்பதற்கானதாகும்.
  2. தடுப்பு காவல் என்பது ஒருவர் சட்டம் மற்றும் ஒழுங்கை அச்சுறுத்தும் வகையிலும், தேசப்பாதுகாப்பு மற்றும் அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதையும் தடுப்பதற்காக அரசால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை ஆகும்.
A
(i) சரி
B
(ii) சரி
C
(i) சரி (ii) தவறு
D
(i) மற்றும் (ii) சரியானவை
Question 61 Explanation: 
விளக்கம்: தடுப்புக் காவல் (Preventive Detention): தடுப்புக் காவல் என்பது காலத்தின் கட்டாயத்தினால் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவரின் செயலை தடுப்பதற்கானதாகும். தடுப்பு காவல் என்பது ஒருவர் சட்டம் மற்றும் ஒழுங்கை அச்சுறுத்தும் வகையிலும், தேசப்பாதுகாப்பு மற்றும் அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதையும் தடுப்பதற்காக அரசால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை ஆகும். இதற்காக அந்த நபரைக் கைது செய்யவோ அல்லது காவலில் வைக்கவோ அரசாங்கத்திற்கு அதிகாரம் உள்ளது.
Question 62
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றினைத் தேர்ந்தெடு
  1. எந்த குடிமகனும் அரசு நடத்தும் அல்லது அரசின் நிதியுதவி பெறும் கல்வி நிறுவனங்களில் கல்விபெறுவதற்கு உரிமையுண்டு என்பதனை மறுக்க இயலாது.
  2. டிமக்கள் தாங்கள் விரும்பும் பள்ளிகள் அல்லது கல்லூரிகளில் கல்வி கற்கும் உரிமை உள்ளது.
A
(i) சரி
B
(ii) சரி
C
(i) சரி (ii) தவறு
D
(i) மற்றும் (ii) சரியானவை
Question 62 Explanation: 
விளக்கம்: எந்த குடிமகனும் அரசு நடத்தும் அல்லது அரசின் நிதியுதவி பெறும் கல்வி நிறுவனங்களில் கல்விபெறுவதற்கு உரிமையுண்டு என்பதனை மறுக்க இயலாது. இந்த உரிமையை சாதி, மதம், இனம், பாலினம், நம்பிக்கை போன்றவற்றைக் காரணம் காட்டி மறுக்க இயலாது. குடிமக்கள் தாங்கள் விரும்பும் பள்ளிகள் அல்லது கல்லூரிகளில் கல்வி கற்றும் உரிமை உள்ளது.
Question 63
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றினைத் தேர்ந்தெடு
  1. எந்த ஒரு கல்வி நிறுவனமாவது இந்த அடிப்படையில் பாகுபாடு காட்டுமாயின் அரசின் நிதி உதவி அந்தக் கல்வி நிறுவனத்திற்கு மறுக்கப்படும்.
  2. சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் எவ்விதமான கல்வி முறையை பின்பற்ற வேண்டும் என்பதனை அரசு வலியுறுத்த முடியாது.
A
(i) சரி
B
(ii) சரி
C
(i) சரி (ii) தவறு
D
(i) மற்றும் (ii) சரியானவை
Question 63 Explanation: 
விளக்கம்:எந்த ஒரு கல்வி நிறுவனமாவது இந்த அடிப்படையில் பாகுபாடு காட்டுமாயின் அரசின் நிதி உதவி அந்தக் கல்வி நிறுவனத்திற்கு மறுக்கப்படும். மேலும் இந்த சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் எவ்விதமான கல்வி முறையை பின்பற்ற வேண்டும் என்பதனை அரசு வலியுறுத்த முடியாது. அந்தக் கல்வி நிறுவனங்களை அவரவர்களது பண்பாட்டினை பாதுகாக்கும் வகையில் செயலாற்ற அனுமதிக்க வேண்டும்.
Question 64
ஒரு குடிமகன் தனது உரிமையை பாதுகாத்து கொள்வதற்கு உச்ச நீதிமன்றத்தினை அணுகுவதற்கு வழி வகை  செய்யும் அரசமைப்பு உறுப்பு எது?
A
32
B
224
C
226
D
31
Question 64 Explanation: 
விளக்கம்: அரசமைப்பு சட்ட பரிகார உரிமைகள் (Right to Constitutional Remedies) ஒரு குடிமகன் தனது உரிமையை பாதுகாத்து கொள்வதற்கு உச்ச நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்றத்தினை அணுகுவதற்கு இந்த உரிமை வழி வகை செய்கின்றது. அரசமைப்பின் உறுப்பு 32-இன்படி உச்ச நீதிமன்றம் பரிகாரம் செய்யலாம்.
Question 65
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றினைத் தேர்ந்தெடு
  • i)அரசு சட்டங்களை அமலாக்கம் செய்கிறது, சட்டத்தின் கட்டளைகளையும், கட்டுப்பாடுகளையும் மீறுபவர்கள் சட்டத்தினால் தண்டிக்கப்படுகிறார்கள்.
  • ii)சமூக விதிகளையும், சமூக நீதிநெறிகளையும் மதியாதவர்களுக்கும் எதிராக நடப்பவர்களுக்கும் சமூக புறகணிப்பு என்பதே மாபெரும் தண்டனையாக அமைகிறது.
A
(i) சரி
B
(ii) சரி
C
(i) சரி (ii) தவறு
D
(i) மற்றும் (ii) சரியானவை
Question 65 Explanation: 
சட்டத்திற்கும் நீதிநெறிக்கும் உள்ள வேறுபாடுகள் (The Distinction between Law and Morality):   அரசு சட்டங்களை அமலாக்கம் செய்கிறது, சட்டத்தின் கட்டளைகளையும், கட்டுப்பாடுகளையும் மீறுபவர்கள் சட்டத்தினால் தண்டிக்கப்படுகிறார்கள்.   சமூக விதிகளையும், சமூக நீதிநெறிகளையும் மதியாதவர்களுக்கும் எதிராக நடப்பவர்களுக்கும் சமூக புறக்கணிப்பு என்பதே மாபெரும் தண்டனையாக அமைகிறது.
Question 66
ஒரு குடிமகன் தனது உரிமையை பாதுகாத்து கொள்வதற்கு உயர் நீதிமன்றத்தினை அணுகுவதற்கு வழி வகை  செய்யும் அரசமைப்பு உறுப்பு எது?
A
32
B
224
C
226
D
31
Question 66 Explanation: 
விளக்கம்: அதுவே அரசமைப்புச் சட்ட உறுப்பு 226-இன்படி உயர்நீதிமன்றம் பரிகாரம் செய்கின்றது.
Question 67
நீதி மன்றம் பிறப்பிக்கும் நீதி பேராண்மைகள் எத்தனை வகைப்படும்?
A
நான்கு
B
ஆறு
C
ஐந்து
D
ஏழு
Question 67 Explanation: 
விளக்கம்: இதற்காக நீதிமன்றம் நீதிப்பேராணைகளை பிறப்பிக்கிறது. இவைகள், ஐந்து வகைப்படும்.   ஆட்கொணர்வு நீதிப் பேராணை (Writ of Habeas Corpus)   கட்டளை நீதிப் பேராணை (Writ of Mandamus)   சான்றாய்வு நீதிப் பேராணை (Writ of Certiorari) தகுதி வினவும் நீதிப் பேராணை (Writ of Quo Warranto) தடைநீதிப் பேராணை அல்லது தடை உத்தரவு (Writ of Prohibition or Injunction) ஆகவே அடிப்படை உரிமைகள் என்பது தனிமனித உரிமைகள் மற்றும் சுதந்திரத்தை பாதுகாக்கின்ற கருவியாக நம் நாட்டில் பயன்படுகிறது. அந்த வகையில் அடிப்படை உரிமைகளை செயல்படுத்தும்போது, மக்களாட்சி அடிப்படையிலான வாழ்க்கை முறையும் அதன் அடிப்படைக்கொள்கைகளான சமத்துவம் மற்றும் நீதியையும் சமூகத்தில் நிலைநிறுத்துகிறது. அடிப்படை உரிமைகள் நம் நாட்டின் சுதந்திரத்தில் ஒரு மைல்கல் ஆகும். இது வழக்கு விசாரணை மற்றும் பெருந்துன்பத்திற்குப் பிறகு நமக்கு கிடைத்துள்ளதாகும்.
Question 68
தகவல் உரிமை சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
A
2005
B
2006
C
2007
D
2008
Question 68 Explanation: 
விளக்கம்: தகவல் உரிமை சட்டம் 2005-இல் வழி வகை செய்து அரசாங்கத்திடம் மக்கள் தகவல்கள் கேட்பதனை சட்டப்பூர்வமாக்கியுள்ளது. இந்தச்சட்டமானது அரசாங்கங்களை வெளிப்படைத் தன்மை கொண்டதாகவும், குடிமக்களுக்கு பொறுப்புணர்வு கொண்டதாகவும் மாற்றியுள்ளது. இதன் மூலமாக அரசின் நடவடிக்கைகளை தகவலறிந்த குடிமக்கள் எளிதாகக் கண்காணிக்க முடியும். இதனால் அரசாங்கம் மக்களுக்கு கடமைப்பட்டதாக மாற்றப்பட்டுள்ளது.
Question 69
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றினைத் தேர்ந்தெடு
  • i)நீதிநெறி என்பது மனிதர்களின் அக மற்றும் புற நடவடிக்கைகள் தொடர்புடையதாகும்.
  • ii)சட்டமோ மனிதர்களின் புற நடவடிக்கைகளுடன் மட்டுமே தொடர்புடையதாகும்.
A
(i) சரி
B
(ii) சரி
C
(i) சரி (ii) தவறு
D
(i) மற்றும் (ii) சரியானவை
Question 69 Explanation: 
நீதிநெறி என்பது மனிதர்களின் அக மற்றும் புற நடவடிக்கைகள் தொடர்புடையதாகும். ஆனால் சட்டமோ மனிதர்களின் புற நடவடிக்கைகளுடன் மட்டுமே தொடர்புடையதாகும். இதனாலேயே மனிதர்கள் தங்கள் புற நடவடிக்கைகளின் மூலம் சட்டத்தை மீறும்போது, தண்டிக்கப்படுகிறார்கள்.   ஒரு நபர் திருட்டோ அல்லது கொலையோ அல்லது வழிப்பறியோ செய்யும்பட்சத்தில் மட்டுமே தண்டிக்கப்படுகிறார்
Question 70
தனியுரிமையைப் பாதுகாப்பதற்கு  வழிவகை செய்துள்ள அரசமைப்பின் உறுப்பு எது?
A
21
B
20
C
22
D
19
Question 70 Explanation: 
விளக்கம்: தனியுரிமை (Right to Privacy): இந்திய மக்கள் கண்டிப்பாக தனி மனித வாழ்வின் மதிப்பு மிக்க அம்சங்களான வாழ்க்கை, சுதந்திரம் மற்றும் விடுதலையை யாரிடமும் ஒப்படைக்க வேண்டியதில்லை. அரசிடம் தனி மனிதனின் அனைத்து உரிமைகளை சமர்ப்பிக்க வேண்டியதில்லை. தனியுரிமை என்பது மனிதனின் மாண்புடன் ஒன்றிணைந்ததாகும். தனியுரிமையைப் பாதுகாப்பதற்கு அரசமைப்பின் உறுப்பு 21-இல் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது வாழ்வுரிமை மற்றும் தனிநபர் சுதந்திரத்தின் உள்ளார்ந்த பகுதியாகும். இந்த உரிமைகள் அரசமைப்பின் பகுதி – III-இல் இடம் பெற்றுள்ளது.
Question 71
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றினைத் தேர்ந்தெடு
  1. மாற்றுப்பாலினத்தவர் காலங்களைக் கடந்தும் அனைத்து பண்பாடுகள், இனம் மற்றும் அனைத்து வகுப்புகளிலும் இருக்கிறார்கள்.
  2. ‘இரண்டாம் பாலினம்’ என்று அழைக்கப்படுகின்றனர்.
A
(i) சரி
B
(ii) சரி
C
(i) சரி (ii) தவறு
D
(i) மற்றும் (ii) சரியானவை
Question 71 Explanation: 
விளக்கம்: மாற்றுப்பாலினத்தவரின் உரிமைகள் (Rights of Transgenders) மாற்றுப்பாலினத்தவர் என்போர் எந்த வயதினராகவும், சாதாரணமாக ஆண், அல்லது பெண் போன்றும் இருப்பார்கள். ஆனால் அவர்கள் தங்களது குணாதிசயங்களில் ஆடவர் அல்லது மகளிரிடமிருந்து மாறுபட்டு காணப்படுவார்கள். அவர்கள் காலங்களைக் கடந்தும் அனைத்து பண்பாடுகள், இனம் மற்றும் அனைத்து வகுப்புகளிலும் இருக்கிறார்கள். வெகு சமீப காலங்களில்தான் அவர்களின் பிரச்சனைகள் பேசப்படுகின்றன. அவர்கள் இப்போது ‘மூன்றாம் பாலினம்’ என்று அழைக்கப்படுகின்றனர்.
Question 72
ஒழுக்கமற்ற செயல்கள் கூட அரசிற்கு நன்மை பயக்குமெனில் அது சட்டபூர்வமானது தான் என்று கூறியவர் யார்?
A
J.M. கோட்சீ
B
மாக்கியவல்லி
C
வில்சன்
D
மேக்ஐவர்
Question 72 Explanation: 
ஒரு நபர் சமூகத்தில் பொய் கூறினாலோ அல்லது ஏமாற்றினாலோ அதே சட்டத்தினால் தண்டிக்கப்படுகிறார்.   பொய் கூறுவதும், பிறருக்கு கண்டனம் தெரிவிப்பதும், விசுவாசமற்று இருப்பதும் பாவங்களாக கருதப்படுகின்றதே ஒழிய குற்றங்களாக அல்ல. ஒழுக்கமற்ற செயல்கள் கூட அரசிற்கு நன்மை பயக்குமெனில் அது சட்டபூர்வமானது தான் என்று மாக்கியவல்லி கூறுகிறார்.
Question 73
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றினைத் தேர்ந்தெடு
  1. மாற்றுப்பாலினத்தவரின் பாலின அடையாளத்தினை சட்ட பூர்வமாக அங்கீகரிக்கும்படி உச்சநீதிமன்றமானது மத்திய – மாநில அரசுகளுக்கு ஓர் உத்தரவை வழங்கியுள்ளது.
  2. மற்றவர்களுக்கு அளிக்கப்பட்ட அனைத்து அடிப்படை உரிமைகளையும் மாற்றுப்பாலினத்தவர்க்கு வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.
A
(i) சரி
B
(ii) சரி
C
(i) சரி (ii) தவறு
D
(i) மற்றும் (ii) சரியானவை
Question 73 Explanation: 
விளக்கம்: உச்சநீதிமன்றமானது மத்திய – மாநில அரசுகளுக்கு ஓர் உத்தரவை வழங்கியுள்ளது. அதில் மாற்றுப்பாலினத்தவரின் பாலின அடையாளத்தினை சட்ட பூர்வமாக அங்கீகரிக்கும்படி கூறியுள்ளது. இவர்களுக்கும் மற்றவர்களுக்கு அளிக்கப்பட்ட அனைத்து அடிப்படை உரிமைகளையும் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. இவர்கள் பொது நலம் மற்றும் சுகாதாரம், சமூக - பொருளாதார உரிமைகளாகிய அனைத்தும் பெறும் உரிமையுடையவர்கள் ஆவர்.
Question 74
அரசின் நேரடி வழிகாட்டி நெறிமுறைகள் இந்திய அரசமைப்பின் எந்தப் பகுதியில் இடம் பெற்றுள்ளது?
A
நான்கு
B
ஐந்து
C
ஆறு
D
மூன்று
Question 74 Explanation: 
விளக்கம்: அரசின் நேரடி வழிகாட்டி நெறிமுறைகள் இந்திய அரசமைப்பின் பகுதி நான்கில் இடம் பெற்றுள்ளது. இதில் அரசியல், சமூக, பொருளாதார திட்டங்களை உள்ளடக்கி அரசுக்கு வழிகாட்டக்கூடிய பல மக்கள் நலக்கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன. இந்த நெறிமுறைக் கோட்பாடானது மனித நலன் சார்ந்த சமதர்ம நோக்கினைக் கொண்ட ஒரு செயல் திட்டத்தை உருவாக்கிக் கொடுத்துள்ளது. அரசின் நேரடி வழிகாட்டி நெறிமுறைகளில் போதிய அளவிற்கு தற்போதைய அரசாங்கங்களுக்கு நேரடி வழிகாட்டி நெறிமுறைகள் கூறப்பட்டுள்ளன.
Question 75
அரசு நடைமுறைப்படுத்தி ஆணுக்கும், பெண்ணுக்கும் சரிசமமான வாழ்வாதாரங்களை உருவாக்கித் தர வேண்டும் என கூறுவது?
A
அடிப்படை உரிமைகள்
B
அடிப்படை கடமைகள்
C
அரசு நெறிமுறை கோட்பாடுகள்
D
இவை அனைத்தும்
Question 75 Explanation: 
விளக்கம்: அரசு நடைமுறைப்படுத்தி ஆணுக்கும், பெண்ணுக்கும் சரிசமமான வாழ்வாதாரங்களை உருவாக்கித் தர வேண்டும் என இச்சட்டம் கூறுகிறது. இது ஆணுக்கும், பெண்ணுக்கும் சரிசமமான ஊதியத்தை வழங்குகின்றது. இந்த நேரடி வழிகாட்டி நெறிமுறையில் உள்ள கொள்கையின்படி அனைவருக்கும், போதிய ஓய்வு, வாழ்க்கை தரம், மற்றும் சமூக, பண்பாட்டு வாய்ப்புகள் போன்றவை உறுதி செய்யப்படுகின்றன.
Question 76
யாருடைய கூற்றுப்படி மதுவிலக்கு அமல்படுத்தப்பட வேண்டும் என இந்திய அரசமைப்பு சட்டம் கூறுகிறது?
A
அம்பேத்கார்
B
காந்தி
C
எம்.என்.ராய்
D
ராஜாஜி
Question 76 Explanation: 
விளக்கம்: அரசின் வழிகாட்டி நெறிமுறைகளில் காந்தியக் கொள்கைகள் இடம் பெற்றுள்ளன. அவற்றின்படி குடிசைத் தொழில்கள் தனிநபரின் அடிப்படையிலோ அல்லது கூட்டுறவு அடிப்படையிலோ கிராமப்புற பகுதிகளில் ஊக்குவிக்கப்பட வேண்டும் என கூறுகிறது. மேலும் காந்திய கூற்றுப்படி மதுவிலக்கு அமல்படுத்தப்பட வேண்டும் என கூறுகிறது.
Question 77
சுரண்டலுக்கு எதிரான உரிமை வழங்கும் அரசமைப்பு உறுப்பு எது?
A
உறுப்புகள் 14 - 18
B
உறுப்புகள் 23 - 24
C
உறுப்புகள் 25 - 28
D
உறுப்பு 32
Question 77 Explanation: 
விளக்கம்: அரசின் நேரடி வழிகாட்டி நெறிமுறைகளில் இடம் பெற்றுள்ள சுதந்திர மக்களாட்சி கொள்கையின்படி அனைவருக்கும் ‘பொது குடிமைச் சட்டம்’ கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இது மேலும் 6 வயது முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இலவச கட்டாய கல்வி வழங்க வேண்டுமெனவும் கூறுகிறது. இது இப்பொழுது அடிப்படை உரிமைகளில் சேர்க்கப்பட்டுள்ளது. குழந்தைகள் உடல் ரீதியாக சித்திரவதை அல்லது மன உளைச்சலுக்கு உள்ளாவதை தடை செய்கிறது.
Question 78
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றினைத் தேர்ந்தெடு
  • i)மக்களாட்சி நடைமுறையில், தங்களின் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதன் மூலம் மக்கள் அரசியலில் பங்கேற்பதுதான், மக்களாட்சியை வலிமையுள்ளதாக மாற்றுகின்றது.
  • ii)மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்ட மன்றமானது மக்களின் விருப்பத்தை பிரதிபலிக்கின்றது.
A
(i) சரி
B
(ii) சரி
C
(i) சரி (ii) தவறு
D
(i) மற்றும் (ii) சரியானவை
Question 78 Explanation: 
பொதுக்கருத்தும், சட்டமும் ஒன்றுக்கொன்று எவ்வாறு தொடர்புடையவை? மக்களாட்சி நடைமுறையில், தங்களின் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதன் மூலம் மக்கள் அரசியலில் பங்கேற்பதுதான், மக்களாட்சியை வலிமையுள்ளதாக மாற்றுகின்றது. சட்ட உருவாக்கத்தில் மக்கள் நேரடியாக பங்கு பெறவில்லையென்றாலும், சட்ட மன்றத்தின் பிரதிநிதிகளை அவர்களே தேர்ந்தெடுக்கின்றார்கள். வாக்காளர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்வதற்காகவும், திருப்திபடுத்துவதற்காகவும் இப்பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இவ்வாறு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்ட மன்றமானது மக்களின் விருப்பத்தை பிரதிபலிக்கின்றது
Question 79
அரசமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கடமைகளை ஒருவர் நிறைவேற்றுவதற்கான பிணைப்பாக விளங்குவது எது?
A
அடிப்படை உரிமைகள்
B
அடிப்படை கடமைகள்
C
அரசு நெறிமுறை கோட்பாடுகள்
D
அரசியல் கடப்பாடுகள்
Question 79 Explanation: 
விளக்கம்: அரசியல் கடப்பாடுகள் என்பது அரசமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கடமைகளை ஒருவர் நிறைவேற்றுவதற்கான பிணைப்பாக விளங்குகிறது. ஒவ்வொரு தனி மனிதனும் தன் சுய நலத்திற்காகவும், சமுதாய நலத்திற்காகவும் அரசமைப்புச் சட்ட உறுப்புகள் மற்றும் ஒழுங்குமுறைகளை பின்பற்றுகிறான். அரசாங்கம் எப்படி குடிமக்களுக்கு பொறுப்பானதோ, அதே போன்று குடிமக்களும் அரசாங்கத்திற்கு பொறுப்பானவர்கள் ஆவர். ஒரு அரசு சீரிய முறையில் இயங்குவது அரசாங்க அமைப்புகளின் சீரிய இயக்கத்தை சார்ந்தாகும்.
Question 80
“அரசியல் கடப்பாடு என்பது ஓர் ஆளுகைக்கு உட்பட்டோருக்கு இறையாண்மை மிக்க ஆள்வோரிடம் உள்ள கடப்பாடு, குடிமகனுக்கு அரசிடம் உள்ள கடப்பாடு, சக மனிதர்க்கு ஆற்ற வேண்டிய கடப்பாடு போன்றவைகளாகும்" என்று கூறியவர்?
A
அரிஸ்டாட்டில்
B
ஹியூம்
C
ஐசையா பெர்லின்
D
டி.எச்.கீரின்
Question 80 Explanation: 
விளக்கம்: ‘அரசியல்’ என்ற வார்த்தை, அரசாங்க நிர்வாகம் மற்றும் கொள்கைகள் தொடர்புடையதாகும். அரசியல் முறைமையின் கட்டமைப்பு உருவாக்கப்பட்ட பின்னர் அதிகாரங்களின் எல்லைகள் கண்டறியப்படுகின்றன. டி.எச்.கிரீன்(T.H.Green) என்பவரின் கூற்றுபடி “அரசியல் கடப்பாடு என்பது ஓர் ஆளுகைக்கு உட்பட்டோருக்கு இறையாண்மை மிக்க ஆள்வோரிடம் உள்ள கடப்பாடு, குடிமகனுக்கு அரசிடம் உள்ள கடப்பாடு, சக மனிதர்க்கு ஆற்ற வேண்டிய கடப்பாடு போன்றவைகளாகும். இதனை அரசியல் உயர் பதவியில் இருப்பவர்கள் நடைமுறைபடுத்துகிறார்கள்”.
Question 81
தற்கால அரசானது, நீதிநெறி, மதம் மற்றும் இயற்கை சட்டத்தின் லட்சியவாத அடிப்படையில் நீடிக்கிறது என்று கூறியவர் யார்?
A
J.M. கோட்சீ
B
மாக்கியவல்லி
C
வில்சன்
D
மேக்ஐவர்
Question 81 Explanation: 
தற்கால அரசானது, நீதிநெறி, மதம் மற்றும் இயற்கை சட்டத்தின் லட்சியவாத அடிப்படையில் நீடிக்கிறது எனலாம். அதே சமயத்தில் அரசு, தனது சுய பாதுகாப்பிற்காக மேற்குறிப்பிட்ட ஒன்றையோ அல்லது அனைத்தையுமோ மீறுகிறது. - J.M. கோட்சீ
Question 82
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றினைத் தேர்ந்தெடு
  1. அரசியல் கடப்பாடு என்பது எங்கும் நிறைந்திருக்கக்கூடிய தற்கால தேசிய அரசில் ஒவ்வொரு மனிதனும் செய்ய வேண்டியதாகும்.
  2. அரசியல் கடப்பாடுகள் மூன்று முக்கிய அம்சங்களை உள்ளடக்கியதாகும்.
A
(i) சரி
B
(ii) சரி
C
(i) சரி (ii) தவறு
D
(i) மற்றும் (ii) சரியானவை
Question 82 Explanation: 
விளக்கம்: அரசியல் கடப்பாடு மற்றும் அரசியல் அதிகாரத்துவம் (Political Obligation and Political Authority) ஒரு அரசு, அரசியல் அதிகாரத்துவம் கொண்டு இருந்தால் அதனால் கீழ்படியாதவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தமுடியும். உதாரணமாக அரசால் வரி விதிக்கப்படுகிறது எனில் வரி செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வரி வசூல் செய்ய அரசால் முடியும். எனினும் அரசு அவ்வாறு செய்ய வில்லை என்றால் கூட குடிமகன் தார்மீக அடிப்படையில் அரசின் சட்டத்தினை மதித்து அதற்கு கீழ்ப்படிய வேண்டும். எனவே அரசியல் கடப்பாடு என்பது எங்கும் நிறைந்திருக்கக்கூடிய தற்கால தேசிய அரசில் ஒவ்வொரு மனிதனும் செய்ய வேண்டியதாகும். அரசியல் கடப்பாடுகள் மூன்று முக்கிய அம்சங்களை உள்ளடக்கியதாகும்.
Question 83
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றினைத் தேர்ந்தெடு
  1. ஒருவருடைய அரசியல் கடப்பாடு என்பது குறிப்பிட்ட வகையில் அவர்களின் குடியுரிமையுடன் சம்மந்தப்பட்டது.
  2. குடியுரிமை இல்லாத வெளிநாட்டவர்களுக்கு அரசியல் வழங்கப்படவில்லை, ஆனால் அவர்களுக்குச் சட்டப்படியாக கடப்பாடுகள் மற்றும் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.
A
(i) சரி
B
(ii) சரி
C
(i) சரி (ii) தவறு
D
(i) மற்றும் (ii) சரியானவை
Question 83 Explanation: 
விளக்கம்: அடையாளம் காண கூடிய அதிகாரத்திடம் அரசியல் கடப்பாடுகளை காண்பித்தல் ஒருவரை தன்னுடைய அரசியல் கடப்பாடுகளை செய்ய வைக்கவோ அல்லது செய்யாமல் விலகி இருப்பவர்களை ஆணைகள் வழங்கி அதனைச் செய்ய வைக்கக்வோகூடிய அதிகாரம் இந்த அடையாளம் காணக்கூடியவர்களிடம் வழங்கப்பட்டு இருக்கிறது. ஒருவருடைய அரசியல் கடப்பாடு என்பது குறிப்பிட்ட வகையில் அவர்களின் குடியுரிமையுடன் சம்மந்தப்பட்டது. ஏனெனில் குடியுரிமை இல்லாத வெளிநாட்டவர்களுக்கு அரசியல் வழங்கப்படவில்லை. ஆனால் அவர்களுக்குச் சட்டப்படியாக கடப்பாடுகள் மற்றும் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.
Question 84
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றினைத் தேர்ந்தெடு
  1. மக்கள் சட்டத்தினை தேர்ந்தெடுத்து மதிக்க முடியாது.
  2. அடிப்படை பணிகள் அனைத்தும் அரசியல் கடப்பாடுகளாகக் கருதப்படுகின்றன.
A
(i) சரி
B
(ii) சரி
C
(i) சரி (ii) தவறு
D
(i) மற்றும் (ii) சரியானவை
Question 84 Explanation: 
விளக்கம்: எதுவரை அரசியல் கடப்பாடுகளைஆற்ற வேண்டும்? அரசு தனது சட்டத்தினை நடைமுறைப்படுத்தி அதன் அடிப்படையில் தனக்கு கீழ் உள்ள குடிமக்களிடமிருந்து சில குறைந்தபட்ச கடப்பாடுகளை எதிர்பார்க்கிறது. அதாவது மக்கள் சட்டத்தினை தேர்ந்தெடுத்து மதிக்க முடியாது. ஆனால் அனைத்து சட்டத்தினையும் மதிக்க வேண்டும். உதாரணமாக வாக்களித்தல், இராணுவ பணிகள் ஆகியவற்றினைக் கூறலாம். இதனை போன்று அடிப்படை பணிகள் அனைத்தும் அரசியல் கடப்பாடுகளாகக் கருதப்படுகின்றன. இவைகளை கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும். இதில் தேர்ந்தெடுத்தல் என்பது இருக்கக்கூடாது.
Question 85
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றினைத் தேர்ந்தெடு
  1. 16-ஆம் நூற்றாண்டுக்கு முன்பு அரசியல் கடப்பாடு என்பது கடவுளின் விருப்பமாகக் கருதப்பட்டது.
  2. எந்த மனிதனையும் கட்டாயப்படுத்தி வேலை வாங்க கூடாது. மாறாக தன்னார்வ அடிப்படையில் தாமாக முன்வந்து கடமைகளை செய்ய மக்கள் முன்வர வேண்டும் இவை அவர்களின் முறைப்படியாக அமைந்த கடப்பாடுகளாகும்.
A
(i) சரி
B
(ii) சரி
C
(i) சரி (ii) தவறு
D
(i) மற்றும் (ii) சரியானவை
Question 85 Explanation: 
விளக்கம்: அரசியல் கடப்பாடுகளின் அடிப்படை (The Basis of Political Obligations) அரசியல் கடப்பாடுகள் 16-ஆம் நூற்றாண்டுக்கு பிறகே உத்வேகம் பெற தொடங்கியது எனலாம். அதற்கு முன்பு அரசியல் கடப்பாடு என்பது கடவுளின் விருப்பமாகக் கருதப்பட்டது. ஆனால் தற்காலத்தில் அரசியல் கோட்பாடுகள் அந்த விளக்கத்தில் இருந்து வேறுபடுகின்றன. இந்த கோட்பாடுகள் கூறுவது என்னவென்றால் எந்த மனிதனையும் கட்டாயப்படுத்தி வேலை வாங்க கூடாது. மாறாக தன்னார்வ அடிப்படையில் தாமாக முன்வந்து கடமைகளை செய்ய மக்கள் முன்வர வேண்டும் இவை அவர்களின் முறைப்படியாக அமைந்த கடப்பாடுகளாகும். மக்கள் ஏன் அவ்வாறு நினைக்கிறார்கள் என்று தெரியுமா? இதற்கு சுய விருப்பம் மற்றும் அரசின் அடிப்படைக் கடமைகளை உணர்தல் ஆகியவை காரணங்களாகும்.
Question 86
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றினைத் தேர்ந்தெடு
  1. அரசு மக்களுக்கு உடல் சார்ந்த பாதுகாப்பு வழங்குகிறது.
  2. மக்கள் இயற்கையாகவே அரசியல் கடப்பாடுகளுக்குப் பொறுப்பானவர்களாக உள்ளனர்.
A
(i) சரி
B
(ii) சரி
C
(i) சரி (ii) தவறு
D
(i) மற்றும் (ii) சரியானவை
Question 86 Explanation: 
விளக்கம்: அரசு மக்களுக்கு உடல் சார்ந்த பாதுகாப்பு வழங்குகிறது. மக்களுக்கு நீதி கிடைப்பதும் அதன் விளைவாக மகிழ்ச்சியாய் இருப்பதற்கும் காரணம் அரசினால் செயல்படுத்தப்படும் அரசியல் அதிகாரம்தான் என்றும், அது இல்லை என்றால் மகிழ்ச்சியும், நீதியும் தங்களுக்குக் கிடைக்காது என்பதும் அவர்களுக்கு நன்கு தெரியும். ஆதலால் மக்கள் இயற்கையாகவே அரசியல் கடப்பாடுகளுக்குப் பொறுப்பானவர்களாக உள்ளனர்.
Question 87
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றினைத் தேர்ந்தெடு
  1. அரசியல் ஆர்வம் கொள்வதும், சமூகப் பணி செய்தலும் விரும்பத்தக்கதாக உள்ளது.
  2. பொதுப்பணி செய்பவர்களுக்கு நாணயம் மற்றும் நேர்மை ஆகியவை இன்றியமையாத அம்சங்களாகும்.
A
(i) சரி
B
(ii) சரி
C
(i) சரி (ii) தவறு
D
(i) மற்றும் (ii) சரியானவை
Question 87 Explanation: 
விளக்கம்: அரசியல் கடப்பாட்டின் இயல்புகள் (Features Political Obligations):   அரசியல் ஆர்வம் கொள்வதும், சமூகப் பணி செய்தலும் விரும்பத்தக்கதாக உள்ளது.   பொதுப்பணி செய்பவர்களுக்கு நாணயம் மற்றும் நேர்மை ஆகியவை இன்றியமையாத அம்சங்களாகும்.   சட்டபூர்வ தன்மை மற்றும் திறனை மேம்படுத்துதல் ஆகியவை இருக்க வேண்டும்.   குடிமக்கள் தங்களது காப்பாளரை பாதுகாக்கின்ற பொறுப்பினைக் கொண்டுள்ளனர்.
Question 88
பின்வருவனவற்றுள் நீதி நெறி சார்ந்த கடப்பாடுகள் எது/எவை?
A
வீட்டிற்கு வரும் விருந்தினரை உபசரித்தல்
B
ஏழைகளுக்கு உதவுதல்
C
வயதான பெற்றோரை பேணுதல்
D
இவை அனைத்தும்
Question 88 Explanation: 
விளக்கம்: நீதிநெறி கடப்பாடு (Moral Obligation) வீட்டிற்கு வரும் விருந்தினரை உபசரிக்கிறீர்களா? ஏழைகளுக்கு உதவுகிறீர்களா? வயதான பெற்றோரை பேணுகிறீர்களா? இவை உங்களின் நீதி நெறி சார்ந்த கடப்பாடுகள் ஆகும். இது சமூகத்தில் சட்டத்தின் படி நடைபெறுவதில்லை. மேலும் இவற்றை நீங்கள் நிறைவேற்றவில்லை என்றால் உங்களுக்கு சட்டப்படியான தண்டனை எதுவும் கிடையாது. ஆனாலும் நன்நெறி மற்றும் நீதிநெறி கொள்கைகளின்படியும் உனது மனிதாபிமான உள்ளுணர்வுபடியும், செயலாற்ற வேண்டும்.
Question 89
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றினைத் தேர்ந்தெடு  
  • க்களின் கருத்தை அடிப்படையாகக் கொண்டே மக்களாட்சியில் சட்டங்கள் உருவாக்கப்படுகின்றன.
  • மக்கள் தங்கள் அதிருப்தியையும், கோபத்தையும் அமைதியான போராட்டங்களின் மூலமாக அரசுக்கு வெளிப்படுத்துகிறார்கள்
A
(i) சரி
B
(ii) சரி
C
(i) சரி (ii) தவறு
D
(i) மற்றும் (ii) சரியானவை
Question 89 Explanation: 
மக்களின் கருத்தை அடிப்படையாகக் கொண்டே மக்களாட்சியில் சட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. மக்கள் தங்கள் அதிருப்தியையும், கோபத்தையும் அமைதியான போராட்டங்களின் மூலமாக அரசுக்கு வெளிப்படுத்துகிறார்கள். மக்களின் பொதுநலனும், சமூக மேம்பாடும், பொதுக் கருத்தின் இரு கண்களாகும்.
Question 90
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றினைத் தேர்ந்தெடு
  1. நம் நாடு மக்கள் நல அரசு கொள்கையைக் கொண்ட நாடாகும்.
  2. அரசாங்கமானது நாட்டிற்கு உள் கட்டமைப்பு, வசதிகளை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்து வது சட்டப்படியான கடப்பாடு.
A
(i) சரி
B
(ii) சரி
C
(i) சரி (ii) தவறு
D
(i) மற்றும் (ii) சரியானவை
Question 90 Explanation: 
விளக்கம்: சட்டப்படியான கடப்பாடு (Legal Obligation) : நம் நாடு மக்கள் நல அரசு கொள்கையைக் கொண்ட நாடாகும். இதில் அரசாங்கமானது நாட்டிற்கு உள் கட்டமைப்பு, வசதிகளை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. சாலை வசதி, சுகாதார மையங்கள், மருத்துவம், கல்வி, போன்றவற்றை வழங்குவது அரசின் கடமை என்பதற்கான சில உதாரணங்களாகும்.
Question 91
பின்வருவனவற்றுள் நேர்மறைக் கடப்பாட்டிற்கான உதாரணம் எது/எவை?
A
வரி செலுத்துதல்
B
நாட்டின் பாதுகாப்பு பணியில் ஈடுபடுதல்
C
அரசுப்பணியில் ஈடுபடுதல்
D
a) மற்றும் b)
Question 91 Explanation: 
விளக்கம்: நேர்மறை கடப்பாடு (Positive Obligation) அரசு சில விதிமுறைகளை உருவாக்கி செயல்படுத்துகிறது. அவற்றை நம்மால் கீழ்ப்படியாமல் இருக்க முடியாது. இவற்றைத்தான் நேர்மறை கடப்பாடு என்று கூறுகிறோம். நேர்மறைக் கடப்பாட்டிற்கு சில உதாரணங்களைச் சிந்திக்க முடியுமா? உதாரணமாக வரி செலுத்துதல், நாட்டின் பாதுகாப்பு பணியில் ஈடுபடுதல் போன்றவைகளைக் கூறலாம். இவை நேர்மறை கடப்பாட்டின் சில உதாரணங்களாகும்.
Question 92
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றினைத் தேர்ந்தெடு
  1. அரசால் தடுக்கப்பட்ட எந்தவொரு செயலையும் ஒரு குடிமகன் செய்யாமல் இருப்பதே எதிர்மறை கடப்பாடு ஆகும்.
  2. குற்றம் செய்தல் என்பதே ஓர் எதிர்மறைக் கடப்பாடாகும்.
A
(i) சரி
B
(ii) சரி
C
(i) சரி (ii) தவறு
D
(i) மற்றும் (ii) சரியானவை
Question 92 Explanation: 
விளக்கம்: எதிர்மறை கடப்பாடு (Negative Obligation): எதிர்மறை கடப்பாடுகள் என்பது நேர்மறை கடப்பாடுக்கு எதிரானதாகும். அரசால் தடைசெய்யப்பட்ட ஓர் செயலை செய்வதற்கு எந்த ஒரு தனி நபருக்கும் சட்டத்தின் படி அனுமதி இல்லை. அத்தகைய செயலுக்கு தண்டனை உண்டு. தற்பொழுது எதிர்மறைக் கடப்பாட்டிற்கான சில உதாரணங்களைச் சிந்திக்கவும். உதாரணத்திற்கு மது அருந்திவிட்டு சிலர் ஒழுங்கற்ற முறையில் நடந்து கொள்வதை பார்த்திருக்கிறாயா? மேலும், சிலர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுகின்றனர். அதனால் பல பாதிப்புகள் குடும்பத்திற்கும் ஏற்படுகிறது. அதனால் பல பாதிப்புகள் ஏற்படுகிறது. இவ்வாறு அரசால் தடுக்கப்பட்ட எந்தவொரு செயலையும் ஒரு குடிமகன் செய்யாமல் இருப்பதே எதிர்மறை கடப்பாடு ஆகும். குற்றம் செய்தல் என்பதே ஓர் எதிர்மறைக் கடப்பாடாகும். நீங்கள் எதிர்மறைக் கடப்பாட்டினைப் புரிந்து கொண்டீர்கள் என நம்புவோம்.
Question 93
"சட்ட மனசாட்சி மற்றும் நீதிநெறி மனசாட்சி என்ற இரு வேறு மனசாட்சிகள் ஒன்றோடு ஒன்று எப்போதும் ஒத்துவராதவைகளாகும்." என்று கூறியவர் யார்
A
J.M. கோட்சீ
B
மாக்கியவல்லி
C
மார்டின் லூதர்கிங்
D
மேக்ஐவர்
Question 93 Explanation: 
நீதிநெறி கடமைகளை மறுதலிப்பதும், சட்டக் கடமை களை நீதிநெறிகளை முற்றிலும் நாசமாக்குகிறது. சட்ட மனசாட்சி மற்றும் நீதிநெறி மனசாட்சி என்ற இரு வேறு மனசாட்சிகள் ஒன்றோடு ஒன்று எப்போதும் ஒத்துவராதவைகளாகும். – மேக் ஐவர் (MacIver)
Question 94
பின்வருவனவற்றுள் அரசுக்கு ஆற்ற வேண்டிய கட்டுப்பாடு/கள் எது/எவை?
A
தேர்தல் நேரத்தில் வாக்களித்தல்
B
சகோதர / சகோதரிக்கு கற்பித்தல்
C
அரசுக்கு வரி செலுத்துதல்
D
இவை அனைத்தும்
Question 94 Explanation: 
விளக்கம்: நீங்கள் அரசுக்கு ஆற்ற வேண்டிய கடப்பாடுகள் எவை?   நண்பர்களுடன் விளையாடுதல்   தேர்தல் நேரத்தில் வாக்களித்தல் சகோதர / சகோதரிக்கு கற்பித்தல் அரசுக்கு வரி செலுத்துதல்   பொது பணியில் சேருதல் அவசர காலத்தில் இராணுவத்தில் பணிபுரிதல்.
Question 95
“சட்டமும், ஒழுங்கும் நீதியை நிலைநாட்டுவதற்காக இயங்குகிறது. இதை செய்ய தவறும்பட்சத்தில், சமூக வளர்ச்சியை தடுக்கும் ஆபத்தான தடுப்பு அணைகளாக இவை மாறுகின்றன” என்று கூறியவர் யார்?
A
J.M. கோட்சீ
B
மாக்கியவல்லி
C
மார்டின் லூதர்கிங்
D
மேக்ஐவர்
Question 95 Explanation: 
சட்டமும், ஒழுங்கும் நீதியை நிலைநாட்டுவதற்காக இயங்குகிறது. இதை செய்ய தவறும்பட்சத்தில், சமூக வளர்ச்சியை தடுக்கும் ஆபத்தான தடுப்பு அணைகளாக இவை மாறுகின்றன. -மார்டின் லூதர்கிங் ஜீனியர்
Question 96
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றினைத் தேர்ந்தெடு
  1. ‘நீராவி உருளைச் சட்ட மன்றம் என்ற கருத்தாக்கம் ஒன்று உண்டு.
  2. அதன்படி எந்த ஒரு சட்டமும் நல்லது செய்யவில்லை எனில் அதனை மாற்றிவிட வேண்டும்.
A
(i) சரி
B
(ii) சரி
C
(i) சரி (ii) தவறு
D
(i) மற்றும் (ii) சரியானவை
Question 96 Explanation: 
விளக்கம்: அரசமைப்புச் சட்டம் கூறும் முக்கிய கடப்பாடுகள்: அரசமைப்புச் சட்டம் என்பது அரசுக்கு அடிப்படை சட்ட புத்தகமாக கருதப்படுகிறது. எனவே அதில் உள்ள விதி முறைகளை மக்கள் பின்பற்றி நடப்பார்கள் என்பது பொதுவான எதிர்பார்ப்பு ஆகும். அந்த அரசமைப்புச் சட்டம் சிறப்பாக இயங்க மக்களின் ஒத்துழைப்பு அவசியம் ஆகும், ‘சட்டம் என்பது வழி, அதன் வழியாக முடிவை எட்டலாம். அதுவே முடிவாக அமையாது’, ‘நீராவி உருளைச் சட்ட மன்றம் என்ற கருத்தாக்கம் ஒன்று உண்டு. அதன்படி எந்த ஒரு சட்டமும் நல்லது செய்யவில்லை எனில் அதனை மாற்றிவிட வேண்டும்.
Question 97
“சட்டமும், ஒழுங்கும் நீதியை நிலைநாட்டுவதற்காக இயங்குகிறது. இதை செய்ய தவறும்பட்சத்தில், சமூக வளர்ச்சியை தடுக்கும் ஆபத்தான தடுப்பு அணைகளாக இவை மாறுகின்றன” என்று கூறியவர் யார்?
A
J.M. கோட்சீ
B
மாக்கியவல்லி
C
மார்டின் லூதர்கிங்
D
மேக்ஐவர்
Question 97 Explanation: 
சட்டமும், ஒழுங்கும் நீதியை நிலைநாட்டுவதற்காக இயங்குகிறது. இதை செய்ய தவறும்பட்சத்தில், சமூக வளர்ச்சியை தடுக்கும் ஆபத்தான தடுப்பு அணைகளாக இவை மாறுகின்றன. -மார்டின் லூதர்கிங் ஜீனியர்
Question 98
மார்க்சின் கோட்பாடு எத்தனை   நிலைகளாகப் பிரிக்கப்படுகிறது?
A
மூன்று
B
நான்கு
C
ஐந்து
D
ஆறு
Question 98 Explanation: 
விளக்கம்: மார்க்சின் கோட்பாடு (Marxian Theory) மார்க்சின் கோட்பாடு பிற கோட்பாடுகளில் இருந்து மாறுபட்டதாகும். அது மூன்று நிலைகளாகப் பிரிக்கப்படுகிறது.
Question 99
மனிதன் முழுவதும் அரசியல் கடப்பாடுகளின்றி இருப்பதை கூறும் நிலை எது?
A
புரட்சிக்கு முந்தைய நிலை
B
புரட்சிக்கு பிந்தைய நிலை
C
புரட்சிக்கால நிலை
D
a) மற்றும் b)
Question 99 Explanation: 
விளக்கம்: புரட்சிக்கு முந்தையநிலை: இந்நிலையில் மனிதன் முழுவதும் அரசியல் கடப்பாடுகளின்றி இருப்பதை கூறுகிறது.
Question 100
அரசியல் கடப்பாடு இல்லாத நிலையில் இருந்து மேம்பட்டு முழுவதுமாக அரசியல் கடப்பாட்டுக்கு உட்படுகின்ற நிலைக்கு மாறுவதைப் பற்றியது எது?
A
புரட்சிக்கு முந்தைய நிலை
B
புரட்சிக்கு பிந்தைய நிலை
C
புரட்சிக்கால நிலை
D
a) மற்றும் b)
Question 100 Explanation: 
விளக்கம்: புரட்சிக்கால நிலை: இது மாற்றம் ஏற்படும் நிலையாகும். அதாவது முற்றிலும் அரசியல் கடப்பாடு இல்லாத நிலையில் இருந்து மேம்பட்டு முழுவதுமாக அரசியல் கடப்பாட்டுக்கு உட்படுகின்ற நிலைக்கு மாறுவதைப் பற்றியது, இந்த புரட்சிக்கால நிலையாகும்.
Question 101
முழுவதுமான அரசியல் கடப்பாடுகளில் இருந்து சமூக மேம்பாட்டிற்கு மாறும் நிலை எது?
A
புரட்சிக்கு முந்தைய நிலை
B
புரட்சிக்கு பிந்தைய நிலை
C
புரட்சிக்கால நிலை
D
a) மற்றும் b)
Question 101 Explanation: 
விளக்கம்: புரட்சிக்குப் பிந்தையநிலை: இந்த நிலையானது முழுவதுமான அரசியல் கடப்பாடுகளில் இருந்து சமூக மேம்பாட்டிற்கு மாறும் நிலை பற்றியதாகும். மார்க்சிய அரசியல் கோட்பாடு கூறுவது என்னவென்றால் அரசு என்பது பாட்டாளி வர்க்கத்தினர் ஆளும் அமைப்பு ஆகும். வெற்றிகரமான புரட்சியின் மூலமாக முதலாளித்துவ அரசு மாற்றப்பட்டு சமதர்ம முறைமை உருவாக்கப்படுவதுடன் இதில் அரசுகள் படிப்படியாக உதிர்ந்து போகும். எனினும் இக்கோட்பாடு மனிதன் அரசிடம் கெஞ்சிப் பணிகிறான் என்ற நிலையினை உருவாக்குவதால் தர்க்கத்தின் அடிப்படையில் பொருத்தமற்றதாகிறது.
Question 102
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றினைத் தேர்ந்தெடு
  1. தண்டனை கிடைக்கும் என்ற பயத்தின் காரணமாகவே தனிமனிதர்கள் தங்களின் பணிகளைச் செய்கிறார்கள்.
  2. அரசு தனது அதிகார வலிமையைப் பயன்படுத்தியே மனிதனை முறைமைக்குத் தக்கவாறு விதிகளை பின்பற்றவைக்கின்றது
A
(i) சரி
B
(ii) சரி
C
(i) சரி (ii) தவறு
D
(i) மற்றும் (ii) சரியானவை
Question 102 Explanation: 
விளக்கம்: நமது கடமைகளை ஒழுங்காகச் செய்யாத போது பயம் வருகிறது. அதே போன்று தண்டனை கிடைக்கும் என்ற பயத்தின் காரணமாகவே தனிமனிதர்கள் தங்களின் பணிகளைச் செய்கிறார்கள். வேறு வழியில் கூற வேண்டுமெனில், அரசு தனது அதிகார வலிமையைப் பயன்படுத்தியே மனிதனை முறைமைக்குத் தக்கவாறு விதிகளை பின்பற்றவைக்கின்றது.
Question 103
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றினைத் தேர்ந்தெடு
  • i)மக்களாட்சியும், குடியுரிமையும் எப்போதும் ஒரே நேர்கோட்டில் செல்லக்கூடியது ஆகும்.
  • ii)மக்களாட்சி என்பது அரசியல் கட்சிகள், தேர்தல் முறைமைகள், சட்டத்தின் ஆட்சி போன்றவைகளிலும், குடியுரிமை என்பது தனிமனிதர்களிடத்தும் முக்கிய கவனம் செலுத்துகின்றன.
A
(i) சரி
B
(ii) சரி
C
(i) சரி (ii) தவறு
D
(i) மற்றும் (ii) சரியானவை
Question 103 Explanation: 
குடியுரிமை: அரசியல் கோட்பாட்டில், குடியுரிமை என்பது குடிமக்களுக்கான சட்டப்பூர்வமான அங்கீகாரம் மட்டுமல்லாது, நெறிமுறை நல்லியல்பிற்கு இணங்க, அரசியல் செயல்பாடுகளில் முழுமையாகவும், சமமாகவும் பங்கேற்கின்ற உரிமையையும் அனைத்து குடிமக்களுக்கும் அளிப்பதாகும். மக்களாட்சியும், குடியுரிமையும் எப்போதும் ஒரே நேர்கோட்டில் செல்லக்கூடியது ஆகும். மக்களாட்சி என்பது அரசியல் கட்சிகள், தேர்தல் முறைமைகள், சட்டத்தின் ஆட்சி போன்றவைகளிலும், குடியுரிமை என்பது தனிமனிதர்களிடத்தும் முக்கிய கவனம் செலுத்துகின்றன.
Question 104
உரிமை என்பதை வரையறை செய்யும்போது நேர்மறை சுதந்திரம் மற்றும் எதிர்மறை சுதந்திரம் என்பவை பற்றி குறிப்பிடுபவர் யார்?
A
அரிஸ்டாட்டில்
B
ஹியூம்
C
ஐசையா பெர்லின்
D
டி.எச்.கீரின்
Question 104 Explanation: 
விளக்கம்: ஐசையா பெர்லின் (Isaiah Berlin) உரிமை என்பதை வரையறை செய்யும்போது நேர்மறை சுதந்திரம் மற்றும் எதிர்மறை சுதந்திரம் என்பவை பற்றி குறிப்பிடுகின்றார். நேர்மறை சுதந்திரம் என்பது பேச்சுரிமை பற்றியதாகும். உதாரணமாக ஒருவர் தன்னுடைய கருத்தை பொது வெளியில் அச்சமின்றிக் தெரிவிப்பதாகும். எதிர்மறை சுதந்திரம் என்பது உடல் சார்ந்த தலையீடு இல்லாமல் ஒருவர் சுதரந்திரமாக இருப்பதாகும்.
Question 105
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றினைத் தேர்ந்தெடு
  1. உங்களின் வீட்டினை மாற்றியமைக்கவோ அல்லது இடிக்கவோ அதற்கு உரிய அனுமதியை அதற்கென அதிகாரம் பெற்ற அரசின் அமைப்பிடம் பெற வேண்டும்.
  2. வரிகளற்ற சில சொத்து பரிமாற்றங்கள் அரசினால் தடை செய்யப்பட்டுள்ளது அல்லது தண்டணைக்குரிய வரிவிதிப்பிற்குரியதாகும்.
A
(i) சரி
B
(ii) சரி
C
(i) சரி (ii) தவறு
D
(i) மற்றும் (ii) சரியானவை
Question 105 Explanation: 
விளக்கம்: உரிமையாளர் என்ற முறையில் உங்களின் வீட்டினை நீங்கள் உபயோகித்து கொள்ளலாம். ஆனால் அதனை மாற்றியமைக்கவோ அல்லது இடிக்கவோ அதற்கு உரிய அனுமதியை அதற்கென அதிகாரம் பெற்ற அரசின் அமைப்பிடம் பெற வேண்டும்.   சொத்துக்களை மற்றவர்களுக்கு மாற்றம் செய்வதற்கு நீங்கள் விரும்பினால் அரசுக்கு சில வரிகளை நீங்கள் செலுத்த வேண்டும். வரிகளற்ற சில சொத்து பரிமாற்றங்கள் அரசினால் தடை செய்யப்பட்டுள்ளது அல்லது தண்டணைக்குரிய வரிவிதிப்பிற்குரியதாகும். உதாரணமாக அன்பளிப்பு வரி அல்லது முதலீடு மாற்ற வரியைக் குறிப்பிடலாம்.
Question 106
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றினைத் தேர்ந்தெடு
  1. சொத்துக்கள் பலவகைப்படும் அவை பொதுச்சொத்து, அரசுச்சொத்து, அரசாங்கச்சொத்து, என வகைப்படுத்தப் பட்டுள்ளன.
  2. போக்குவரத்து, இரயில்வேதுறை, போன்றவை பொதுச் சொத்துக்களாகும்.
A
(i) சரி
B
(ii) சரி
C
(i) சரி (ii) தவறு
D
(i) மற்றும் (ii) சரியானவை
Question 106 Explanation: 
விளக்கம்: சொத்துக்கள் பலவகைப்படும் அவை பொதுச்சொத்து, அரசுச்சொத்து, அரசாங்கச்சொத்து, என வகைப்படுத்தப் பட்டுள்ளன. உதாரணமாக போக்குவரத்து, இரயில்வேதுறை, போன்றவை பொதுச் சொத்துக்களாகும்.
Question 107
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றினைத் தேர்ந்தெடு
  • i)குடியுரிமையானது ஒவ்வொரு நாட்டிற்கும் வேறுபட்டதாக இருக்கிறது.
  • ii)தற்கால அரசுகளில், குடியுரிமையானது, குடிமக்களுக்கான உரிமைகள் மட்டுமல்லாது மக்கள் அரசுக்கு ஆற்றவேண்டிய கடமைகளையும் உள்ளடக்கியதாக காணப்படுகிறது.
A
(i) சரி
B
(ii) சரி
C
(i) சரி (ii) தவறு
D
(i) மற்றும் (ii) சரியானவை
Question 107 Explanation: 
குடியுரிமையானது ஒவ்வொரு நாட்டிற்கும் வேறுபட்டதாக இருக்கிறது. தற்கால அரசுகளில், குடியுரிமையானது, குடிமக்களுக்கான உரிமைகள் மட்டுமல்லாது மக்கள் அரசுக்கு ஆற்றவேண்டிய கடமைகளையும் உள்ளடக்கியதாக காணப்படுகிறது.
Question 108
யாருடைய கூற்றுப்படி "அரசாங்கத்தின் முக்கிய பணி என்பது குடிமக்களின் உரிமைகளை காப்பதுடன், அமைதியான முறையில் தங்களின் சொத்துக்களை அனுபவிக்கும் நிலையினை உருவாக்கி அவர்களை மகிழ்ச்சியுடன் வாழ செய்வதாகும்"?
A
அரிஸ்டாட்டில்
B
ஹியூம்
C
லாக்
D
டி.எச்.கீரின்
Question 108 Explanation: 
விளக்கம்: லாக் மற்றும் பயன்பாட்டு வாதத்தினரின் நியாயவாதம் (Locke and the Utilitarian Justification): லாக்கின் கூற்றுப்படி அரசாங்கத்தின் முக்கிய பணி என்பது குடிமக்களின் உரிமைகளை காப்பதுடன், அமைதியான முறையில் தங்களின் சொத்துக்களை அனுபவிக்கும் நிலையினை உருவாக்கி அவர்களை மகிழ்ச்சியுடன் வாழ செய்வதாகும். மனித இனம் வாழ்வதற்கு சொத்து அடிப்படைத் தேவை ஆகும். பொதுவாக மனிதர்கள் ஒவ்வொரு தருணத்தைப் பற்றியும் திட்டமிடுவதில்லை. ஆனால் அதே மனிதன் தனது எதிர்கால பொருளாதார பாதுகாப்பிற்காக திட்டமிடுகிறான்.
Question 109
"சொத்து என்பது மக்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியை தருவது என்பது உறுதியாகும்” என்பது யார் கூற்று?
A
சேமிப்பு வாதம்
B
லாக் வாதம்
C
பயன்பாட்டு வாதம்
D
a) மற்றும் b)
Question 109 Explanation: 
விளக்கம்: மக்களுக்கு பாதுகாப்பு என்பது மிக முக்கியமானதாகும். அதுவே தனிமனிதனுக்கு மகிழ்ச்சி மற்றும் அமைதியை அளிக்கக் கூடியதாகும். இதனையே பயன்பாட்டு வாதம் கீழ்க்கண்டவாறு கூறுகிறது. “சொத்துரிமை என்பது தனிநபர்க்குத் தேவையானது. அதுவே அவனுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கையைக் கொடுக்கிறது. எந்தவொரு அரசாங்கமும் மக்களுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கையை அளிக்க நினைத்தால், முதலில் மக்களின் சொத்துரிமைக்குத் தகுந்த பாதுகாப்பு அளித்து உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். எந்த ஒரு அரசும் சொத்துக்களை மக்களிடம் இருந்து பறிக்கக் கூடாது. சொத்து என்பது மக்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியை தருவது என்பது உறுதியாகும்”.
Question 110
சமூக நலக் கொள்கையின் முக்கியக் கூறுகளாக இருப்பது/இருப்பவை எது/எவை?
A
சொத்து வரிவிதிப்பு
B
அடிப்படை தொழிற்துறையில் மாறுதல்
C
பொது மக்களின் அடிப்படை வசதிகளான சுகாதாரம்
D
இவை அனைத்தும்
Question 110 Explanation: 
விளக்கம்: இருபதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட மேம்பாடுகள் இரண்டாம் உலகப் போருக்குபின் பெரும்பாலான வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள், சமூக நலக் கொள்கையை பின் பற்றுகின்றன. அக்கொள்கையின் முக்கியக் கூறுகளாக இருப்பது சொத்து வரிவிதிப்பு, அடிப்படை தொழிற்துறையில் மாறுதல், பொது மக்களின் அடிப்படை வசதிகளான சுகாதாரம், கல்வி போன்ற அரசு கட்டுப்பாட்டில் உள்ளவை போன்றவைகளாகும்.
Question 111
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றினைத் தேர்ந்தெடு
  • i)இயற்கையான குடிமக்கள் என்பது இம்மண்ணில் பிறந்ததன் மூலமாக இயற்கையாக அந்த குடியுரிமையை அடைவது ஆகும்.
  • ii)ஆனால் இயற்கையாதலான குடிமக்கள் என்போர் பின்னர் குடியுரிமையைப் பெற்றவர்களாவர்.
A
(i) சரி
B
(ii) சரி
C
(i) சரி (ii) தவறு
D
(i) மற்றும் (ii) சரியானவை
Question 111 Explanation: 
நீங்கள் இயற்கை குடியுரிமை (Natural Citizenship) உடையவரா அல்லது தங்கியிருத்தல், திருமணம் போன்றவற்றால் தகுதி ஆக்கப்பட்டு பெறப்படும் (Naturalized Citizenship) குடியுரிமையைவேண்டி பெற்றவரா? இவ்விரண்டிற்கும் வித்தியாசம் யாவை? இயற்கையான குடிமக்கள் என்பது இம்மண்ணில் பிறந்ததன் மூலமாக இயற்கையாக அந்த குடியுரிமையை அடைவது ஆகும். ஆனால் இயற்கையாதலான குடிமக்கள் என்போர் பின்னர் குடியுரிமையைப் பெற்றவர்களாவர்.
Question 112
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றினைத் தேர்ந்தெடு
  1. 21-ஆம் நூற்றாண்டில் பெண்களில் ஆற்றலாதல் துவங்கியவுடன் சம உரிமைக் கோரிக்கை பெண்களால் முன் வைக்கப்பட்டது.
  2. பெண்ணியவாதிகள் கூறுவது என்ன என்றால் பெண்களின் இன்றைய அடிமை நிலைக்கு காரணம் அவர்களுக்கு வருவாய், நிலம் போன்ற ஆதாரங்கள் மறுக்கப்படுவதாகும்.
A
(i) சரி
B
(ii) சரி
C
(i) சரி (ii) தவறு
D
(i) மற்றும் (ii) சரியானவை
Question 112 Explanation: 
விளக்கம்: பெண்ணியவாதிகளின் கண்ணோட்டம் (Feminist Perspectives): 21-ஆம் நூற்றாண்டில் பெண்களில் ஆற்றலாதல் துவங்கியவுடன் சம உரிமைக் கோரிக்கை பெண்களால் முன் வைக்கப்பட்டது. இந்த பெண்ணியவாதிகள் கூறுவது என்ன என்றால் பெண்களின் இன்றைய அடிமை நிலைக்கு காரணம் அவர்களுக்கு வருவாய், நிலம் போன்ற ஆதாரங்கள் மறுக்கப்படுவதாகும். சொத்து உரிமைகள் முழுவதும் ஆண்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு அவர்களால் கட்டுப்படுத்தப்படுவதால் பெண்கள் ஆண்களை சார்ந்தே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது, இந்தத் சார்பு நிலைதான் பெண்கள் தங்களது உரிமைகளையும், சொத்து உரிமையையும் கோருவதற்கு காரணமாக அமைந்து இருக்கின்றது.
Question 113
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றினைத் தேர்ந்தெடு
  1. 1976-ஆம் ஆண்டு 44-வது அரசமைப்பு சட்ட திருத்தம் மூலம் சொத்துரிமை நீக்கம் மேற்கொள்ளப்பட்டது
  2. சொத்துரிமை என்பது விதி 300 (A) யில் சாதாரண உரிமையாக வழங்கப்பட்டுள்ளது.
A
(i) சரி
B
(ii) சரி
C
(i) சரி (ii) தவறு
D
(i) மற்றும் (ii) சரியானவை
Question 113 Explanation: 
விளக்கம்: இந்திய அரசமைப்பு சொத்து உரிமையை அடிப்படை உரிமையில் இருந்து நீக்கியது. 1977-ஆம் ஆண்டு 44-வது அரசமைப்பு சட்ட திருத்தம் மூலம் சொத்துரிமை நீக்கம் மேற்கொள்ளப்பட்டது எனினும் சொத்துரிமை என்பது விதி 300 (A) யில் சாதாரண உரிமையாக வழங்கப்பட்டுள்ளது. இதன்படி சட்டத்தினால் வழங்கப்பட்ட யாருடைய சொத்துரிமையையும் மறுக்க இயலாது என கூறப்பட்டுள்ளது. ஆகவே சொத்துரிமை தற்பொழுது சட்ட அங்கீகாரம் உள்ளதாக விளங்குகிறது.
Question 114
யாருடைய கூற்றுபடி, குடியுரிமை என்பது பிறப்பிடம், குடும்பம், பரம்பரை மற்றும் பண்பாட்டைச் சார்ந்து அமைவதாகும்?
A
அரிஸ்டாட்டில்
B
மாக்கியவல்லி
C
கன்பூசியஸ்
D
ஸ்டாயிக்குகள்
Question 114 Explanation: 
அரிஸ்டாட்டிலின் கூற்றுபடி, குடியுரிமை என்பது பிறப்பிடம், குடும்பம், பரம்பரை மற்றும் பண்பாட்டைச் சார்ந்து அமைவதாகும்.
Question 115
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றினைத் தேர்ந்தெடு
  1. தேசியக்குடியுரிமை என்பது நாம் குடியிருக்கும் நாட்டின் அரசாங்கம் நமக்களிக்கும் பாதுகாப்பும் உரிமையாகும்.
  2. உலக குடியுரிமை என்பது தேசிய எல்லைகளை கடந்த குடியுரிமையாகும்.
A
(i) சரி
B
(ii) சரி
C
(i) சரி (ii) தவறு
D
(i) மற்றும் (ii) சரியானவை
Question 115 Explanation: 
விளக்கம்: தேசியக்குடியுரிமை என்பது நாம் குடியிருக்கும் நாட்டின் அரசாங்கம் நமக்களிக்கும் பாதுகாப்பும் உரிமையாகும். ஆனாலும் அரசிற்கு தீர்க்கக்கூடிய பிரச்சனைகள் பல இருப்பதால் தனிமனித உரிமைகள் அவர்களுக்கு வழங்கப்பட்டு சட்டத்தினால் உத்திரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. உலக குடியுரிமை என்பது தேசிய எல்லைகளை கடந்த குடியுரிமையாகும். இவ்வுரிமையானது பலதரப்பட்ட மக்களும், நாடுகளும் சேர்ந்த கூட்டுறவு நடவடிக்கையை வலியுறுத்துகிறது.இதனால் குடியுரிமை என்பது பல்வேறுபட்ட சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை தீர்க்கக்கூடியதாக அமைகிறது.மேலும் உலகளாவிய குடியுரிமை உலக நாடுகளின் ஒற்றுமையையும் கூட்டுறவின் வலிமையையும் பறைசாற்றுகிறது.
Question 116
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றினைத் தேர்ந்தெடு
  1. புறக்கணிப்பு, சுரண்டல், கொடூரம், சச்சரவுகள் ஆகியவைகளிடமிருந்து பாதுகாத்தல் உரிமை குழந்தைகளுக்கானது.
  2. ஒருவருக்கொருவர் தாக்குதல் மற்றும் துன்புறுத்தல் நடத்திக்கொள்ளாமல் இருத்தல் குழந்தைகளுக்கான பொறுப்புகளுள் ஒன்று
A
(i) சரி
B
(ii) சரி
C
(i) சரி (ii) தவறு
D
(i) மற்றும் (ii) சரியானவை
Question 116 Explanation: 
விளக்கம்: புறக்கணிப்பு, சுரண்டல், கொடூரம், சச்சரவுகள் ஆகியவைகளிடமிருந்து பாதுகாத்தல் உரிமை, வீடு, பள்ளி மற்றும் அவர்கள் போகும் இடங்களெல்லாம் சுத்தமான சூழல் அமைதல் உரிமை, கல்வி பெறும் உரிமை, சுதந்திரமான மத வழிபாடு மற்றும் சிந்தனை உரிமை.ஒருவருக்கொருவர் தாக்குதல் மற்றும் துன்புறுத்தல் நடத்திக்கொள்ளாமல் இருத்தல், செல்லும் இடங்களில்லெல்லாம் சுற்றுச்சூழல் மாசுபடாமல் பார்த்துக்கொள்ளுதல், தங்களால் எவ்வளவு கற்றுக்கொள்ள முடியுமோ அதனைக்கற்றுக்கொண்டு மற்றவர்களும் கற்றுக்கொள்ள உதவுதல், தங்களின் வீடு பள்ளி மற்றும் எங்கெங்கு இருக்கிறார்களோ அந்த இடங்களை சுத்தமான சூழலாக வைத்துக்கொள்ளுதல், ஆகியன.
Question 117
வளர்ச்சியடைந்த பெருநகரங்களில் வசிப்பவர்களுக்கே குடியிரிமை வழங்கப்பட வேண்டும் என்பது யாருடைய கருத்தாகும்?
A
அரிஸ்டாட்டில்
B
மாக்கியவல்லி
C
கன்பூசியஸ்
D
ஸ்டாயிக்குகள்
Question 117 Explanation: 
ஸ்டாயிக்குகளின் (Stoics)’ கருத்து வளர்ச்சியடைந்த பெருநகரங்களில் வசிப்பவர்களுக்கே குடியிரிமை வழங்கப்பட வேண்டும் என்பதாகும்.
Question 118
உரிமைகள் மசோதா  1791 ஆம் ஆண்டு எந்த நாட்டில்  நடைமுறைப்படுத்தப்பட்டது.
A
ஆப்பிரிக்கா
B
அமெரிக்கா
C
ஜப்பான்
D
இங்கிலாந்து
Question 118 Explanation: 
விளக்கம்: உரிமைகள் மசோதா என்பது அமெரிக்காவில் டிசம்பர் 15 இல் 1791 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. இது தனிமனித உரிமைகளின் உத்திரவாதங்களை மிகுந்த வலிமையுடன் மத்திய மற்றும் மாநில அரசுகளால் கருத்திணைவு அடிப்படையில் செயல்படுத்த வழிவகை செய்தது.
Question 119
உரிமைகள் மசோதாவை அறிமுகப்படுத்தியவர் யார்?
A
சல்மான்ட்
B
கிரிஸ்டின்
C
கிரிச்
D
ஜேம்ஸ் மேடிசன்
Question 119 Explanation: 
விளக்கம்: ஜேம்ஸ் மேடிசன் இந்த உரிமைகள் மசோதாவை அறிமுகப்படுத்தினார்.இது அவர் 1766 இல் வெளியிட்ட புகழ்பெற்ற வெர்ஜீனியா மனித உரிமைகள் பிரகடனத்தின் அடிப்படையில் அமைந்தது.
Question 120
பொது நலத்தை சீரமைத்து அதில் அனைவரும் தங்கள் நலனிற்காகவும், இணக்கத் சூழலுக்காகவும் பாடுபடவேண்டும் என்பது யாருடைய கருத்தாகும்"?
A
அரிஸ்டாட்டில்
B
மாக்கியவல்லி
C
கன்பூசியஸ்
D
ஸ்டாயிக்குகள்
Question 120 Explanation: 
கன்பூசியசின் (Confusius) கருத்து பொது நலத்தை சீரமைத்து அதில் அனைவரும் தங்கள் நலனிற்காகவும், இணக்கத் சூழலுக்காகவும் பாடுபடவேண்டும் என்பதாகும். இந்தியாவிலும் இதே போன்று வசுதேவக் குடும்பகம் (Vasudeva Kudumbakam) (ஒரே உலகம், ஒரே குடும்பம்) என்பது ஒரு நல்லியல்பு கருத்தாக்கமாக காணப்படுகிறது.
Question 121
உரிமைகள் மசோதா என்பது இங்கிலாந்தின் மகாசாசனம் மற்றும் ஆங்கில உரிமைகள் மசோதா(1689) ஆகியவற்றிலிருந்து பெறப்பட்டது?
A
ஆங்கில உரிமைகள் மசோதா
B
இங்கிலாந்தின் மகாசாசனம்
C
a) மற்றும் b)
D
அமெரிக்க உரிமைகள் சாசனம்
Question 121 Explanation: 
விளக்கம்: உரிமைகள் மசோதா என்பது இங்கிலாந்தின் மகாசாசனம் மற்றும் ஆங்கில உரிமைகள் மசோதா(1689) ஆகியவற்றிலிருந்து பெறப்பட்டது.இது காலனி ஆதிக்க எதிர்ப்பு போராட்டத்தினால் மன்னர் மற்றும் நாடாளுமன்றம் போன்றவற்றின் ஆதிக்கத்திற்கு எதிராக உருவாக்கப்பட்டது ஆகும்.அமெரிக்க உரிமைகள் சாசனம் அந்த நாட்டின் சட்டம் மற்றும் அரசாங்கத்தில் மையப்பங்கு வகிப்பதாகும். சுதந்திரம் மற்றும் பண்பாட்டின் அடிப்படை சின்னமாகவும் இது விளங்குகிறது.
Question 122
அரசமைப்பு நிர்ணய சபையானது அரசமைப்பு வரைவு குழுவை எப்போது உருவாக்கியது?
A
1947, ஆகஸ்ட் 29
B
1948, ஆகஸ்ட் 30
C
1947, ஆகஸ்ட் 25
D
1946, ஆகஸ்ட் 22
Question 122 Explanation: 
விளக்கம்: 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29 ஆம் நாள் அரசமைப்பு நிர்ணய சபையானது அரசமைப்பு வரைவு குழுவை உருவாக்கி அதற்கு தலைவராக டாக்டர் அம்பேத்காரை நியமனம் செய்தது.அதில் தோராயமாக 7635 சட்ட திருத்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு அதில் 2437 மசோதாக்கள் எடுத்துக்கொள்ளப்பட்டன.
Question 123
எத்தனையாவது அரசமைப்பு நிர்ணய சபையின் கூட்டத்தொடரில் இராஜேந்திர பிரசாத் முதலாவது இந்திய குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
A
பதினான்கு
B
பன்னிரெண்டு
C
பதினைந்து
D
பதினெட்டு
Question 123 Explanation: 
விளக்கம்: 1950 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் தேதி பன்னிரெண்டாவது அரசமைப்பு நிர்ணய சபையின் கூட்டத்தொடரில் இராஜேந்திர பிரசாத் முதலாவது இந்திய குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் பிறகு அரசமைப்பு நிர்ணய சபையின் சட்ட மற்றும் அரசியல் வல்லுநர்கள் அரசமைப்பு கூட்டத்தினை அதிகாரப்பூர்வ பிரதிகளில் கையெழுத்திட்டனர்.
Question 124
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றினைத் தேர்ந்தெடு
  • i)கிரேக்க மற்றும் ரோமானிய குடியரசுகளில் முக்கியத்துவம் பெற்ற குடியுரிமை என்பது நிலப்பிரபுத்துவ காலங்களில் முற்றிலுமாக மறைந்தது.
  • ii)பண்டைய ஏதென்சின், நகர அரசில் குடியுரிமை என்பது அரசின் கடமைகளில் பங்கேற்பதாக அறியப்பட்டது.
A
(i) சரி
B
(ii) சரி
C
i) சரி (ii) தவறு
D
(i) மற்றும் (ii) சரியானவை
Question 124 Explanation: 
குடியுரிமை மற்றும் நகரஅரசு (Citizenship and City-State): கிரேக்க மற்றும் ரோமானிய குடியரசுகளில் முக்கியத்துவம் பெற்ற குடியுரிமை என்பது நிலப்பிரபுத்துவ காலங்களில் முற்றிலுமாக மறைந்தது. மறுபடியும், மறுமலர்ச்சி காலக்கட்டத்தில் மனிதத்தன்மையின் விரும்பத்தக்க பகுதியாக குடியுரிமை மலர்ந்தது. பண்டைய ஏதென்சின், நகர அரசில் குடியுரிமை என்பது அரசின் கடமைகளில் பங்கேற்பதாக அறியப்பட்டது.
Question 125
அரசமைப்பு நிர்ணய சபையானது இந்திய அரசமைப்புச்சட்டத்தினை வரையறை செய்ய எவ்வளவு காலம் ஆனது?
A
2 ஆண்டுகள் 11 மாதங்கள் 20 நாட்கள்
B
2 ஆண்டுகள் 10 மாதங்கள் 20 நாட்கள்
C
2 ஆண்டுகள் 11 மாதங்கள் 10 நாட்கள்
D
2 ஆண்டுகள் 10 மாதங்கள் 11 நாட்கள்
Question 125 Explanation: 
விளக்கம்: அரசமைப்பு நிர்ணய சபையானது இந்திய அரசமைப்புச்சட்டத்தினை வரையறை செய்ய 2 ஆண்டுகள் 11 மாதங்கள் 20 நாட்கள் ஆனது.
Question 126
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றினைத் தேர்ந்தெடு
  1. இந்திய அரசமைப்பின் சட்டப்பகுதி 3 இல் அடிப்படை உரிமைகள் உள்ளன.
  2. இந்திய அரசமைப்பு சட்டமானது அதன் உரை மற்றும் பரப்பெல்லையில் மிகப்பெரியதாகும்.
A
(i) சரி
B
(ii) சரி
C
(i) சரி (ii) தவறு
D
(i) மற்றும் (ii) சரியானவை
Question 126 Explanation: 
விளக்கம்: இந்திய அரசமைப்பின் சட்டப்பகுதி 3 இல் அடிப்படை உரிமைகள் உள்ளன. இந்த பகுதியில் நாட்டினுடைய மக்களாட்சி முறையின் அடிப்படை கூறுகளைப்பற்றி விரிவாக விளக்கப்பட்டுள்ளது. இந்திய அரசமைப்பு சட்டமானது அதன் உரை மற்றும் பரப்பெல்லையில் மிகப்பெரியதாகும். அடிப்படை உரிமைகள் பற்றி மிக நுண்ணிய கருத்துகளை உள்ளடக்கியதாக உள்ள காரணத்தினால் தான் அது அளவிலும் பெரியதாக உள்ளது.
Question 127
"ஒவ்வொரு மனிதனும் அரசியல் விலங்கு" என்று கூறியவர் யார்?
A
அரிஸ்டாட்டில்
B
மாக்கியவல்லி
C
கன்பூசியஸ்
D
பிளாட்டோ
Question 127 Explanation: 
குடியுரிமை என்பதை அரிஸ்டாட்டில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதினார். ஏனெனில் லட்சிய அரசு என்பது சட்டத்தின் அடிப்படையிலான, சட்டத்தை மதிக்கும் குடிமக்களாலேயே சாத்தியப்படும் எனக் கருதினார். அவர் மேலும் கூறுகையில், ஒவ்வொரு மனிதனும் அரசியல் விலங்கு என்றும், நகர அரசில் மட்டுமே அவன் முழுமையடைவான் என்றும் கூறுகிறார். எனவே அரசியல் பதவிகளை விரும்புவது இயற்கை என்கிறார்
Question 128
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றினைத் தேர்ந்தெடு
  1. சமத்துவ உரிமை என்பது சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற உத்திரவாதத்தை அளிக்கிறது.
  2. மாநிலங்கள் மற்றும் ஒன்றிய பிரதேசங்களில் உள்ள மக்கள் அனைவருக்கும் சமமான பனி வாய்ப்பினை வழங்குகிறது.
A
(i) சரி
B
(ii) சரி
C
(i) சரி (ii) தவறு
D
(i) மற்றும் (ii) சரியானவை
Question 128 Explanation: 
விளக்கம்: சமத்துவ உரிமை என்பது சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற உத்திரவாதத்தை அளிக்கிறது.இது சாதி, மதம், மொழி, இனம், பாலினம், ஆகியவற்றிலான பாகுபாட்டை தடை செய்கிறது. மேலும் பொது இடங்களுக்கு செல்வதற்குள்ள பாகுபாட்டையும் தடைசெய்கிறது. அனைவருக்கும் கோவில்கள், உணவகங்கள், விடுதிகள், மற்றும் பொதுவான கேளிக்கை இடங்கள், ஆகியவற்றிற்கு அனைவரும் செல்ல அனுமதிக்கிறது. இது மேலும் மாநிலங்கள் மற்றும் ஒன்றிய பிரதேசங்களில் உள்ள மக்கள் அனைவருக்கும் சமமான பனி வாய்ப்பினை வழங்குகிறது. இது தீண்டாமையை எந்த வடிவத்தில் இருந்தாலும் தடை செய்வதுடன் இதனை பெரும் குற்றமாக கருதுகிறது.
Question 129
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றினைத் தேர்ந்தெடு
  1. சுதந்திரம் மற்றும் சமத்துவம் இரண்டுமே மக்களாட்சிக்கு தேவையான அடிப்படை உரிமைகள் ஆகும்.
  2. தாங்கள் விரும்பக்கூடிய எந்த தொழிலையும் செய்ய அனுமதிக்கிறது.
A
(i) சரி
B
(ii) சரி
C
(i) சரி (ii) தவறு
D
(i) மற்றும் (ii) சரியானவை
Question 129 Explanation: 
விளக்கம்: சுதந்திரம் மற்றும் சமத்துவம் இரண்டுமே மக்களாட்சிக்கு தேவையான அடிப்படை உரிமைகள் ஆகும். இது பின்வரும் உரிமைகளை குடிமக்களுக்கு அளிக்கிறது.சுதந்திரமான பேச்சு, கருத்துரிமை, ஆயுதமின்றி பொது இடங்களில் கூடும் உரிமை, சங்கம் அமைக்கும் உரிமை, நாடு முழுவதும் சுதந்திரமாக உலவுகின்ற உரிமை, போன்றவற்றை வழங்குகிறது. இவ்வுறுப்பு தாங்கள் விரும்பக்கூடிய எந்த தொழிலையும் செய்ய அனுமதிக்கிறது.
Question 130
"கடமைகள் மற்றும் உரிமைகள் இரண்டையும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாதவை" என்று கூறியவர் யார்?
A
சல்மான்ட்
B
கிரிஸ்டின்
C
நேரு
D
காந்தியடிகள்
Question 130 Explanation: 
விளக்கம்: கடமைகள் மற்றும் உரிமைகள் இரண்டையும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாதவை. பின் உள்ள உரிமைகள் வழங்கும் சலுகைகள்தான் தனது கடமைகளை ஒருவர் செய்வதற்கு காரணமாகிறது. -மகாத்மா காந்தி
Question 131
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றினைத் தேர்ந்தெடு
  1. ஆட்கடத்தல் செய்தல் என்பது மனிதர்களை விற்பதும் வாங்குவதும் அவர்களை அடிமைபோல் நடத்துவதும் ஆகும்.
  2. நம் நாட்டில் சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்டு தவறாகப் பயன்படுத்தப்படும் இலட்சக்கணக்கானோர் சமூகத்தின் அடித்தட்டு மக்களே ஆவர்.
A
(i) சரி
B
(ii) சரி
C
(i) சரி (ii) தவறு
D
(i) மற்றும் (ii) சரியானவை
Question 131 Explanation: 
விளக்கம்: நம் நாட்டில் இலட்சக்கணக்கானோர் சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்டு தவறாகப் பயன்படுத்தப்படுகிறார்கள். இவர்கள் அனைவரும் சமூகத்தின் அடித்தட்டு மக்களே ஆவர். தற்போதைய நிலையில் ஆட்கடத்தல் என்பது மனிதர்களுக்கு எதிரான மிகவும் ஆபத்தான சுரண்டலாக திகழ்கிறது. ஆட்கடத்தல் செய்தல் என்பது மனிதர்களை விற்பதும் வாங்குவதும் அவர்களை அடிமைபோல் நடத்துவதும் ஆகும்.
Question 132
குடியுரிமை என்பது குடிமக்களையும், வேற்றுநாட்டவர்களையும் மட்டுமல்லாது பிறநாட்டு அடிமைகளையும் உள்ளடக்கியதாக ஓர் ஆட்சியில் காணப்படுவதாக விளக்குபவர் யார்?
A
அரிஸ்டாட்டில்
B
மாக்கியவல்லி
C
கன்பூசியஸ்
D
பிளாட்டோ
Question 132 Explanation: 
மேலும், அரிஸ்டாட்டில் குடியுரிமை என்பது குடிமக்களையும், வேற்றுநாட்டவர்களையும் மட்டுமல்லாது பிறநாட்டு அடிமைகளையும் உள்ளடக்கியதாக ஓர் ஆட்சியில் காணப்படுவதாக விளக்குகிறார். ஒரு நாட்டின் குடிமகன் என்பவன் சட்டத்துறை, நீதித்துறை தொடர்பான அலுவல்கள் மட்டுமல்லாமல் அரசமைப்பின்படி அரசியல் உரிமைகளையும், அனுபவிக்கும் உரிமை பெற்றவனாக விளங்குகின்றான்.
Question 133
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றினைத் தேர்ந்தெடு
  1. ஆட்கடத்தல் செய்தல் மற்றும் கட்டாயப்படுத்தி பிச்சையெடுக்க வைத்தல் ஆகியவை கட்டாயப்பணி செய்ய வைத்தலின் வடிவங்களாகும்.
  2. அரசமைப்புச்சட்டத்திலேயே அரசு சுரண்டலுக்கு எதிரான உரிமையை வழங்கியுள்ளது.
A
(i) சரி
B
(ii) சரி
C
(i) சரி (ii) தவறு
D
(i) மற்றும் (ii) சரியானவை
Question 133 Explanation: 
விளக்கம்: இது மட்டுமன்றி குழந்தைத்தொழிலாளர் முறையும் சுரண்டலின் மற்றுமொரு பகுதியாகும். இக்குழந்தைகள் ஊதியமின்றி பணி செய்ய கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். இந்தக்காரணத்தினால்தான் அரசமைப்புச்சட்டத்திலேயே அரசு சுரண்டலுக்கு எதிரான உரிமையை வழங்கியுள்ளது. இதன்படி ஆட்கடத்தல் செய்தல் மற்றும் கட்டாயப்படுத்தி பிச்சையெடுக்க வைத்தல் ஆகியவை கட்டாயப்பணி செய்ய வைத்தலின் வடிவங்களாகும். மேலும் இது 14 வயதிற்குட்பட்ட சிறுவர்களை தொழிற்சாலைகள், சுரங்கங்கள், அல்லது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் எத்தொழிலிலும் ஈடுபட வைப்பதை தடை செய்கிறது.
Question 134
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றினைத் தேர்ந்தெடு
  1. மத சுதந்திர உரிமைகள்: இந்தியாவில் அனைத்து மக்களும் தங்கள் மதம் மற்றும் நம்பிக்கையினை தேர்ந்தெடுத்து அதன் வழி செல்லும் உரிமையை அரசமைப்புச்சட்டம் வழங்கியுள்ளது.
  2. அனைவரும் தங்கள் மதத்தின்படி வழிபடுவதுடன் பரப்புரையும் செய்யலாம்.
A
(i) சரி
B
(ii) சரி
C
(i) சரி (ii) தவறு
D
(i) மற்றும் (ii) சரியானவை
Question 134 Explanation: 
விளக்கம்: மத சுதந்திர உரிமைகள்: இந்தியாவில் அனைத்து மக்களும் தங்கள் மதம் மற்றும் நம்பிக்கையினை தேர்ந்தெடுத்து அதன் வழி செல்லும் உரிமையை அரசமைப்புச்சட்டம் வழங்கியுள்ளது. இதன் மூலமாக அனைவரும் தங்கள் மதத்தின்படி வழிபடுவதுடன் பரப்புரையும் செய்யலாம். இந்த உரிமைகள் மதத்தில் சமூகம் மற்றும் தனிப்பட்ட அம்சங்களைக் கொண்டதுடன் நாட்டின் குடிமக்கள் அனைவரும் இதனை அனுபவித்து வருகிறார்கள்.
Question 135
யாருடைய கருத்தின்படி, குடியுரிமை மூன்று வகைப்படுகிறது?
A
அரிஸ்டாட்டில்
B
மாக்கியவல்லி
C
மார்ஷல்
D
பிளாட்டோ
Question 135 Explanation: 
மார்ஷலின் பகுப்பாய்வு (Marshall’s Analysis) சுதந்திர சமூக மக்களாட்சிவாதியான மார்ஷல், குடியுரிமையையும், சமூக நிலைமைகளையும், முதலாளித்துவ அடிப்படையில் ஆராய்கிறார். அவரது கருத்தின்படி, குடியுரிமை மூன்று வகைப்படுகிறது. அவை குடிமை, அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த குடியுரிமைகளாகும்
Question 136
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றினைத் தேர்ந்தெடு
  1. அரசமைப்பின் உறுப்பு 26 இன் படி ஒவ்வொருவரும் மத விவகாரங்களின் அடிப்படையில் சேவை புரிவதற்காக நிறுவனங்களை உருவாக்கலாம்.
  2. பொது ஒழுங்கு, நீதி நெறிமுறைகள் மற்றும் சுகாதார வரையறைகளுக்கு உட்பட்டு அவர்களுடைய அச்செயல்பாடுகள் அமைய வேண்டும் என்றும் கூறுகிறது.
A
(i) சரி
B
(ii) சரி
C
(i) சரி (ii) தவறு
D
(i) மற்றும் (ii) சரியானவை
Question 136 Explanation: 
விளக்கம்: மத சுதந்திரத்திற்கான உரிமை அனைவருக்கும் அளித்துள்ள உத்திரவாதம் என்னவென்றால் அனைவரும் தங்களது சுய விருப்பத்தின்படி அவர்களுக்கு ஏற்புடைய மதத்தினை தழுவுதல், பின்பற்றுதல் மற்றும் அதனை பரப்பலாம் என்றும், மேலும் பொது ஒழுங்கு, நீதி நெறிமுறைகள் மற்றும் சுகாதார வரையறைகளுக்கு உட்பட்டு அவர்களுடைய அச்செயல்பாடுகள் அமைய வேண்டும் என்றும் கூறுகிறது. அரசமைப்பின் உறுப்பு 26 இன் படி ஒவ்வொருவரும் மத விவகாரங்களின் அடிப்படையில் சேவை புரிவதற்காக நிறுவனங்களை உருவாக்கி அதற்கென அசையும் மற்றும் அசையா சொத்துக்களை உரிமையாக்கி சட்டத்தின் அடிப்படையில் நிர்வகிப்பதாகும்.
Question 137
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றினைத் தேர்ந்தெடு
  1. முற்காலத்தில் மக்கள் நினைத்தது என்னவென்றால் அரசினை கடவுள் படைத்தார் என்றும் அரசர் கடவுளின் பிரதிநிதியாவார் என்றும் அவர்கள் நம்பினார்கள்.
  2. இக்கோட்பாடு முற்காலத்திலும் இடைக்காலத்திலும் புகழ்பெற்று இருந்தாலும் தற்காலத்தில் இந்தக்கோட்பாடுக்கு இடமில்லை.
A
(i) சரி
B
(ii) சரி
C
(i) சரி (ii) தவறு
D
(i) மற்றும் (ii) சரியானவை
Question 137 Explanation: 
தெய்வீகக்கோட்பாடு: முற்காலத்தில் மக்கள் நினைத்தது என்னவென்றால் அரசினை கடவுள் படைத்தார் என்றும் அரசர் கடவுளின் பிரதிநிதியாவார் என்றும் அவர்கள் நம்பினார்கள். இக்கோட்பாடு முற்காலத்திலும் இடைக்காலத்திலும் புகழ்பெற்று இருந்தாலும் தற்காலத்தில் இந்தக்கோட்பாடுக்கு இடமில்லை.
Question 138
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றினைத் தேர்ந்தெடு
  • i)சட்டத்தின் ஆட்சியில், குடியுரிமை என்பது ஒரு தனித்துவம் பெற்ற அம்சமாக விளங்குகிறது.
  • ii)ஒரு குடிமகனாக, நமக்கு அரசியல் தொடர்பான முடிவெடுக்கும் முறைமையில் பங்குபெறுவதற்கு முழு உரிமை உண்டு.
A
(i) சரி
B
(ii) சரி
C
i) சரி (ii) தவறு
D
(i) மற்றும் (ii) சரியானவை
Question 138 Explanation: 
அனைத்து தனிமனிதர்களுக்கும் சுதந்திரம் என்பது குடிமை விவகாரங்களில் தேவைப்படுகிற ஒரு முக்கியமான அம்சமாகும். சட்டத்தின் ஆட்சியில், குடியுரிமை என்பது ஒரு தனித்துவம் பெற்ற அம்சமாக விளங்குகிறது. ஒரு குடிமகனாக, நமக்கு அரசியல் தொடர்பான முடிவெடுக்கும் முறைமையில் பங்குபெறுவதற்கு முழு உரிமை உண்டு. இது அரசியல் வகைப்பாட்டில் பிரதிபலிக்கிறது
Question 139
பின்வருபவர்களுள் ஒப்புதல் கோட்பாட்டினை நியாயப்படுத்துவோர் யாவர்?
A
ஹாப்ஸ்
B
லாக்
C
ரூசோ
D
இவர்கள் அனைவரும்
Question 139 Explanation: 
விளக்கம்: ஒப்புதல் கோட்பாடு : இந்த கோட்பாடு முன்மொழிவது என்னவென்றால் அரசின் அதிகாரம் அனைத்தும் மக்களின் ஒப்புதல் அடிப்படையிலானதாகும். ஹாப்ஸ், லாக், ரூசோ போன்றோர் இந்த கோட்பாட்டினை நியாயப்படுத்துவதுடன் அரசின் அதிகாரம் மக்களின் அடிப்படையிலேயே அமைகிறது என்று கூறுகிறார்கள். ஆனாலும் பிற்காலத்தில் இது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஏனெனில் அரசு என்பது செயற்கையாக உருவாக்கப்பட்ட அமைப்பு என்று கூறப்பட்டதால் இக்கோட்பாடு நிராகரிக்கப்பட்டது.
Question 140
"அரசியல் அதிகாரத்துவத்தின் மதிப்பு என்பது வழக்கமான உரிமைகள் எனும் கொள்கையின் அடிப்படையில் அமைகிறது" என்று கூறும் கோட்பாடு எது?
A
தெய்வீகக்கோட்பாடு
B
பரிந்துரைக்கோட்பாடு
C
ஒப்புதல் கோட்பாடு
D
இலட்சியவாத கோட்பாடு
Question 140 Explanation: 
விளக்கம்: பரிந்துரைக்கோட்பாடு: இக்கோட்பாடு கூறுவது என்னவென்றால் அரசியல் அதிகாரத்துவத்தின் மதிப்பு என்பது வழக்கமான உரிமைகள் எனும் கொள்கையின் அடிப்படையில் அமைகிறது என்பதாகும். இக்கோட்பாடானது அரசியல் நிறுவனங்கள் என்பவை பழங்காலந்தொட்டு அமைந்து இருந்தன என்று கூறுகிறது. இக்கருத்தினை எட்மண்ட் பர்க்கும் ஆதரிக்கிறார். ஆனாலும் காலப்போக்கில் இது செயல் இழந்து போனதற்கு காரணம் அளவுக்கு அதிகமாக நன்கு கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறைகளை வலியுறுத்தியதாகும்.
Question 141
மனிதன் மற்றும் அரசு ஆகிய இரண்டும் தனித்தனியான குணக்கூறுகள் கொண்டவை என்று குறிப்பிடும் கோட்பாடு எது?
A
தெய்வீகக்கோட்பாடு
B
பரிந்துரைக்கோட்பாடு
C
ஒப்புதல் கோட்பாடு
D
இலட்சியவாத கோட்பாடு
Question 141 Explanation: 
விளக்கம்: இலட்சியவாத கோட்பாடு: இக்கோட்பாடு மனிதன் மற்றும் அரசு ஆகிய இரண்டும் தனித்தனியான குணக்கூறுகள் கொண்டவை என்று குறிப்பிடுகிறது. மனிதன் என்பவன் அரசியல் மற்றும் பகுத்தறிவினால் உருவானவன் என்றும் அரசு என்பது சுயசார்புடைய சமூக அமைப்பு என்றும் கூறுகிறது. மேலும் இலட்சியவாத கோட்பாடு கூறுவது என்னவென்றால் மனிதன் தன் அதிகாரத்தை அரசிடம் இருந்து மட்டுமே பெறுகிறான் எனும்போது அவன் அரசிடம் இருந்து மாறுபடுகின்ற அதிகாரத்தை இழக்கிறான் என்பதே சரியானது ஆகும். எனினும் இக்கோட்பாட்டின் கூறுகள் மனிதனால் புரிந்துகொள்ள முடியாத அளவிற்கு கற்பனையாக உள்ளது. இலட்சியவாத கோட்பாடு: இக்கோட்பாடு மனிதன் மற்றும் அரசு ஆகிய இரண்டும் தனித்தனியான குணக்கூறுகள் கொண்டவை என்று குறிப்பிடுகிறது. மனிதன் என்பவன் அரசியல் மற்றும் பகுத்தறிவினால் உருவானவன் என்றும் அரசு என்பது சுயசார்புடைய சமூக அமைப்பு என்றும் கூறுகிறது.
Question 142
“எவர் ஒருவருக்கு விவாதங்களிலும் அரசின் நீதி நிர்வாக அமைப்பிலும் பங்கேற்க அதிகாரம் இருக்கிறதோ அவரே குடிமகன் ஆவர்” என்று கூறியவர் யார்?
A
அரிஸ்டாட்டில்
B
கில்கிரிஸ்ட்
C
உட்ரோ வில்சன்
D
பிளாட்டோ
Question 142 Explanation: 
அரிஸ்டாட்டிலின் வரையறையின்படி “எவர் ஒருவருக்கு விவாதங்களிலும் அரசின் நீதி நிர்வாக அமைப்பிலும் பங்கேற்க அதிகாரம் இருக்கிறதோ அவரே குடிமகன் ஆவர்”. கிரேக்கர்கள் மக்களாட்சியின் கீழ் வாழும் பேறுபெற்றவர்கள். அவர்களின் அரசாங்கம் சாதாரண மக்களால் உருவாக்கப்பட்டது. அவர்கள் தங்கள் பேச்சு உரிமையின் மூலமாக மிகப்பெரிய பேச்சு சுதந்திரத்தை பெற்றிருந்தனர்.
Question 143
பின்வரும் எக்கோட்பாட்டின் கூறுகள் மனிதனால் புரிந்துகொள்ள முடியாத அளவிற்கு கற்பனையாக உள்ளது?
A
தெய்வீகக்கோட்பாடு
B
பரிந்துரைக்கோட்பாடு
C
ஒப்புதல் கோட்பாடு
D
இலட்சியவாத கோட்பாடு
Question 143 Explanation: 
விளக்கம்: மேலும் இலட்சியவாத கோட்பாடு கூறுவது என்னவென்றால் மனிதன் தன் அதிகாரத்தை அரசிடம் இருந்து மட்டுமே பெறுகிறான் எனும்போது அவன் அரசிடம் இருந்து மாறுபடுகின்ற அதிகாரத்தை இழக்கிறான் என்பதே சரியானது ஆகும். எனினும் இக்கோட்பாட்டின் கூறுகள் மனிதனால் புரிந்துகொள்ள முடியாத அளவிற்கு கற்பனையாக உள்ளது.
Question 144
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றினைத் தேர்ந்தெடு
  1. மனித இனம் அமைதியையும் ஒழுங்கினையும் விரும்புவது பொதுவான கொள்கையாகும்.
  2. சட்டத்திற்கு கீழ்ப்படித்தலையும் மனிதர்கள் விரும்பியே ஏற்றுக்கொள்கின்றனர்.
A
(i) சரி
B
(ii) சரி
C
(i) சரி (ii) தவறு
D
(i) மற்றும் (ii) சரியானவை
Question 144 Explanation: 
விளக்கம்: சமூக ஒழுங்கின்மை மற்றும் அமைப்பெதிர்வாதம் பற்றிய பயம்: மனித இனம் அமைதியையும் ஒழுங்கினையும் விரும்புவது பொதுவான கொள்கையாகும். சட்டத்திற்கு கீழ்ப்படித்தலையும் மனிதர்கள் விரும்பியே ஏற்றுக்கொள்கின்றனர்.அவ்வாறு சட்டத்திற்கு கீழ்ப்படியாதவர்களை மனிதன் தனித்து பார்க்கிறான்.
Question 145
அனைத்து வகை மனிதர்களுக்கும் இருக்க வேண்டிய மூன்று பண்புகள் குறித்து கூறுபவர்?
A
அரிஸ்டாட்டில்
B
கில்கிரிஸ்ட்
C
உட்ரோ வில்சன்
D
பிளாட்டோ
Question 145 Explanation: 
குடியுரிமை மற்றும் கல்வி (Citizenship and Education): இப்பிரிவில், கல்விக்கும், குடியுரிமைக்கும் உண்டான தொடர்பை பல்வேறு தத்துவஞானிகளின் கருத்துகள் வாயிலாக பார்க்கலாம். அரிஸ்டாட்டிலின் கூற்றின்படி, அனைத்து வகை மனிதர்களுக்கும் மூன்று பண்புகள் மிகவும் முக்கியம் வாய்ந்ததாகும்.   அரசமைப்பிடம் விசுவாசம்.   கடமைகளில் அதிகபட்ச திறனுடன் இருத்தல்.   நல்லியல்பு மற்றும் நீதி வழுவாமை
Question 146
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றினைத் தேர்ந்தெடு
  1. அரசியல் கடப்பாடு என்பது தேசிய அளவில் சிறந்த முறைமையை நிர்வகிக்க அவசியமாகிறது.
  2. ஒவ்வொருவரும் அரசிடமிருந்து சிறந்த கைம்மாறினை எதிர்பார்த்தால் சட்டத்தினை மதித்து கீழ்ப்படிய வேண்டும்.
A
(i) சரி
B
(ii) சரி
C
(i) சரி (ii) தவறு
D
(i) மற்றும் (ii) சரியானவை
Question 146 Explanation: 
விளக்கம்: மரபுகள் மற்றும் பழக்க வழக்கங்கள்: நாம் அனைவரும் துணிவு, நேர்மை, வீரம், ஒழுக்கம், கீழ்ப்படிதல், போன்ற நல்லொழுக்கங்களை பழக்கங்களாகவே பின்பற்றி வருகிறோம். இது நமக்கு மரபு சார்ந்த விழுமியங்களில் ஏற்பட்டதாகும். இதே போன்று நாட்டில் குடிமக்கள் நல்மரபுகளை நிறுவ விரும்புவதுடன் அரசுக்கு கீழ்ப்படிதல் போன்ற செயல்களும் பழக்கமாகின்றன. ஆகவே அரசியல் கடப்பாடு என்பது தேசிய அளவில் சிறந்த முறைமையை நிர்வகிக்க அவசியமாகிறது. ஒவ்வொருவரும் அரசிடமிருந்து சிறந்த கைம்மாறினை எதிர்பார்த்தால் சட்டத்தினை மதித்து கீழ்ப்படிய வேண்டும்.
Question 147
பண்பாடு மற்றும் கல்வி உரிமை வழங்கும் அரசமைப்பு உறுப்பு எது?
A
உறுப்புகள் 14 - 18
B
உறுப்புகள் 23 - 24
C
உறுப்புகள் 25 - 28
D
உறுப்புகள் 29 - 30
Question 147 Explanation: 
விளக்கம்: உறுப்புகள் 29 – 30: பண்பாடு மற்றும் கல்வி உரிமை உறுப்பு 32: அரசமைப்பு சட்ட பரிகார உரிமை உறுப்புகள் 25 - 28 : மத சுதந்திரத்திற்கான உரிமை உறுப்புகள் 19 - 22 : சுதந்திர உரிமை
Question 148
"கல்வியே நாட்டில் நிலவும் ஊழலுக்கும், நிலைத்தன்மையற்ற அரசியலுக்குமான தீர்வாக கருதப்படுகிறது" என்று கூறியவர் யார்?
A
அரிஸ்டாட்டில்
B
கில்கிரிஸ்ட்
C
உட்ரோ வில்சன்
D
பிளாட்டோ
Question 148 Explanation: 
மக்களாட்சி நாடானது, அரசியல் மற்றும் பொருளாதார சமத்துவத்தை எப்போதும் நிலைநாட்டுகிறது. இதனால் நல்லியல்பு கொண்ட மனிதனுக்கும், நல்ல குடிமகனுக்குமான அடையாளம் எளிதில் காணப்படுகிறது. பிளாட்டோவின் கருத்துப்படி, கல்வியே நாட்டில் நிலவும் ஊழலுக்கும், நிலைத்தன்மையற்ற அரசியலுக்குமான தீர்வாக கருதப்படுகிறது. இதனால், அப்பெருமகனார், கல்வியானது பயனள்ளதாகவும், பொறுப்புள்ளதாகவும் அமைய வேண்டும் என கூறுகிறார்
Question 149
"ஓர், நாட்டின் குடிமக்களுக்கு, தங்களது நாட்டின் சக குடிமக்களின் அணுகுமுறை, எதிர்பார்ப்பு ஆகியவை பற்றிய அறிவு வேண்டும்"எனக் கூறுபவர் யாவர்
A
அரிஸ்டாட்டில்
B
ஹியூம்
C
ரூசோ
D
மேற்கண்ட அனைவரும்
Question 149 Explanation: 
அரிஸ்டாட்டில்(Aristotle),ஹியூம்(Hume), மற்றும் ரூசோ(Rousseau), ஆகியோரின் கூற்றுப்படி ஓர், நாட்டின் குடிமக்களுக்கு, தங்களது நாட்டின் சக குடிமக்களின் அணுகுமுறை, எதிர்பார்ப்பு ஆகியவை பற்றிய அறிவு வேண்டும் என கூறுகின்றனர்.
Question 150
முதியோர் பராமரிப்பு மற்றும் நலன் சார்ந்த சட்டம் குறித்த பின்வரும் கூற்றுகளில் சரியான ஒன்றைத் தேர்ந்தெடு.
  1. இச்சட்டத்தின்படி, வழக்கறிஞர்கள், தீர்ப்பாயத்தின் முன் எவருக்காவும் வாதாட இயலாது.
  2. முதியோர் நலனைப் பாதுகாக்கும் பொறுப்பில் இருக்கக்கூடிய யாரேனும் நன்கறிந்தே அவர்களை கைவிடும்பட்சத்தில், `5,000 அபராதமோ அல்லது மூன்று மாதம் சிறை தண்டனையோ அல்லது மேற்கூறிய இரண்டு தண்டனையுமோ வழக்கப்படலாம்.
A
(i) சரி
B
(ii) சரி
C
(i) சரி (ii) தவறு
D
(i) மற்றும் (ii) சரியானவை
Question 150 Explanation: 
விளக்கம்: இச்சட்டத்தின்படி, வழக்கறிஞர்கள், தீர்ப்பாயத்தின் முன் எவருக்காவும் வாதாட இயலாது.   முதியோர் நலனைப் பாதுகாக்கும் பொறுப்பில் இருக்கக்கூடிய யாரேனும் நன்கறிந்தே அவர்களை கைவிடும்பட்சத்தில், `5,000 அபராதமோ அல்லது மூன்று மாதம் சிறை தண்டனையோ அல்லது மேற்கூறிய இரண்டு தண்டனையுமோ வழக்கப்படலாம்.
Question 151
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றினைத் தேர்ந்தெடு
  1. உரிமைகள் என்ற வார்த்தை நம்முடைய நீதிநெறி, சட்டம் மற்றும் அரசியல் சொல்லகராதியில் பல நுற்றாண்டுகளாக இடம் பெற்றுள்ளது.
  2. நீதிநெறி, சட்டம், அரசியல் ஆகிய அனைத்தும் ஒன்றாக இணைந்து உருவானதே மனித உரிமைகள் ஆகும்.
A
(i) சரி
B
(ii) சரி
C
(i) சரி (ii) தவறு
D
(i) மற்றும் (ii) சரியானவை
Question 151 Explanation: 
விளக்கம்: உரிமைகள் என்ற வார்த்தை நம்முடைய நீதிநெறி, சட்டம் மற்றும் அரசியல் சொல்லகராதியில் பல நுற்றாண்டுகளாக இடம் பெற்றுள்ளதை நாம் காண்கிறோம். உரிமைகள் என்பது பொதுவாக உலகில் காணப்படுவது, மேலே உள்ள நீதிநெறி, சட்டம், அரசியல் ஆகிய அனைத்தும் ஒன்றாக இணைந்து உருவானதே மனித உரிமைகள் ஆகும்.
Question 152
  • கூற்று: மனித உரிமைகள் இன்றியமையாதவையாக நவீன காலத்தில் அமைந்துள்ளன.
  • காரணம்: மனித உரிமைகள் அரசமைப்பிலும், பன்னாட்டு மனித உரிமை பிரகடனங்களிலும் இடம் பெற்று இருப்பது காரணம் ஆகும்.
A
கூற்று சரி; காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல.
B
கூற்று தவறு; காரணம் தவறு.
C
கூற்று சரி; காரணம் கூற்றின் சரியான விளக்கம் ஆகும்.
D
கூற்று தவறு; காரணம் சரி.
Question 152 Explanation: 
விளக்கம்: மனித உரிமைகள் இன்றியமையாதவையாக நவீன காலத்தில் அமைந்துள்ளதற்கு அது அரசமைப்பிலும், பன்னாட்டு மனித உரிமை பிரகடனங்களிலும் இடம் பெற்று இருப்பது காரணம் ஆகும். மனித இனத்தில் பிறந்த அனைவரும் மனிதனாக பிறந்ததற்கான அடிப்படையில் மனித உரிமைகளை கொண்டு இருக்கின்றார்கள். இந்த அடிப்படையில் அனைத்து மனிதர்களும் சாதி, மத, இன, வகுப்பு வேறுபாடுகளைக் கடந்து நீதிநெறியிலான சமத்துவத்தின் அடிப்படையில் மனித உரிமைகளைப் பெறுகிறார்கள்.
Question 153
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றினைத் தேர்ந்தெடு
  1. மக்கள் தங்களின் உரிமைகளைப் பெற்று அனுபவிக்கும் போது மட்டுமே அவர்களின் ஆளுமைத் திறன் மேம்பட்டு சமுதாயத்திற்கு சிறந்த பங்களிப்பினை மேற்கொள்வர்.
  2. உரிமை என்பது பொதுமக்களின் விருப்பக் கோரிக்கைகள் ஆகும்.
A
(i) சரி
B
(ii) சரி
C
(i) சரி (ii) தவறு
D
(i) மற்றும் (ii) சரியானவை
Question 153 Explanation: 
விளக்கம்: சமூக வாழ்க்கையில் உரிமைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவை இல்லாமல் எந்த ஒரு மனிதனும் பொதுவாக தமது சுயத்தை சிறப்பாக உணர முடியாது. மக்கள் தங்களின் உரிமைகளைப் பெற்று அனுபவிக்கும் போது மட்டுமே அவர்களின் ஆளுமைத் திறன் மேம்பட்டு சமுதாயத்திற்கு சிறந்த பங்களிப்பினை மேற்கொள்வர். உரிமை என்பது பொதுமக்களின் விருப்பக் கோரிக்கைகள் ஆகும். ஒவ்வொரு பண்பாட்டிலும் இத்தகைய கோரிக்கைகள் சமூகத்தினால் அங்கீகரிக்கப்பட்டு வளர்ச்சிக்கு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகின்றது. அதனால் தான் அரசுகள் இவற்றை நடைமுறைபடுத்துகின்றன.
Question 154
"நீதிநெறியிலானவனாக மனிதனின் பணியை நிறைவேற்றுவதற்குத் தகுந்த அதிகாரங்களே உரிமையாகும்" என்று கூறியவர் யார்?
A
அரிஸ்டாட்டில்
B
ஹியூம்
C
ஐசையா பெர்லின்
D
டி.எச்.கீரின்
Question 154 Explanation: 
விளக்கம்: நீதிநெறியிலானவனாக மனிதனின் பணியை நிறைவேற்றுவதற்குத் தகுந்த அதிகாரங்களே உரிமையாகும். - டி.எச்.கீரின்
Question 155
a)குடிமக்களுக்கு அரசியலில் பங்கு பெறவும் உள்ளாட்சி அரசாங்க b)நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் கல்வி அதிகமாக தேவைப்படுகிறது" எனக் கூறுபவர் கள்  யாவர்?
A
J.S.மில்
B
அலெக்ஸ் டோக்யூவில்லி
C
ரூசோ
D
a) மற்றும் b)
Question 155 Explanation: 
J.S.மில்(J.S.Mill), மற்றும் அலெக்ஸ் டோக்யூவில்லி(TocqueVille), ஆகியோர் மேலே குறிப்பிட்டதற்கு மாறாக குடிமக்களுக்கு அரசியலில் பங்கு பெறவும் உள்ளாட்சி அரசாங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தன்னார்வ மற்றும் நீதி கடமைகள் ஆற்றவும் சங்கங்களை நிர்வகிக்கவும் கல்வி அதிகமாக தேவைப்படுகிறது" என கூறுகிறார்கள்.
Question 156
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றினைத் தேர்ந்தெடு
  1. உரிமைகள் என்பது மக்களின் பகுத்தறிவு மற்றும் தார்மீக கோரிக்கைகள் ஆகும்.
  2. உரிமை என்பது மதம், சாதி, இனம், பாலினம் என்று பாராமல், அனைவருக்கும் கிடைக்க கூடியது.
A
(i) சரி
B
(ii) சரி
C
(i) சரி (ii) தவறு
D
(i) மற்றும் (ii) சரியானவை
Question 156 Explanation: 
விளக்கம்: இயல்புகள்  உரிமைகள் என்பது மக்களின் பகுத்தறிவு மற்றும் தார்மீக கோரிக்கைகள் ஆகும். இது அவர்களுடைய சமூக மேம்பாட்டிற்கு முக்கியமானதாக அமைந்துள்ளது.   உரிமை என்பது மதம், சாதி, இனம், பாலினம் என்று பாராமல், அனைவருக்கும் கிடைக்க கூடியது.
Question 157
வயதான பெற்றோர், முதியோர் பராமரிப்பு மற்றும் நலன் சார்ந்த சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
A
2007
B
2008
C
2008
D
2002
Question 157 Explanation: 
வயதான பெற்றோர், முதியோர் பராமரிப்பு மற்றும் நலன் சார்ந்த சட்டம் (MWPSC Act) 2007-ல், முதியவர்கள் மற்றும் பெற்றோர் நலனுக்காக இயற்றப்பட்டது . இச்சட்டத்தின் படி.... முதியோருக்கு துரிதமாகவும், பயனுள்ளதாகவுமான நிவாரணத்தை வழங்க “பராமரிப்பு தீர்ப்பாயத்தினை” (Maintenance Tribunal) நிறுவியது.  
Question 158
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றினைத் தேர்ந்தெடு
  1. உரிமைகள் அனைத்தும் நீதி மன்றத்தில் வழக்கிட்டு பெறக்கூடியது ஆகும்.
  2. உரிமைகளை பாதுகாப்பது மற்றும் நடைமுறைபடுத்துவது அரசின் சட்டங்கள் ஆகும்.
A
(i) சரி
B
(ii) சரி
C
(i) சரி (ii) தவறு
D
(i) மற்றும் (ii) சரியானவை
Question 158 Explanation: 
விளக்கம்:   உரிமைகள் மற்றும் கடமைகள் இவ்விரண்டும் ஒன்றோடு ஒன்று இணைந்ததாகும். “கடமைகள் இல்லை என்றால் உரிமைகள் இல்லை”. “நான் சில உரிமைகளை பெற்றிருக்கிறேன் என்றால் சமுதாயத்தில் பிறருடைய உரிமைகளை மதிக்க நான் கடமைப்பட்டுள்ளேன்” என்று உணர்ந்து கொள்ள வேண்டும்.   உரிமைகள் அனைத்தும் நீதி மன்றத்தில் வழக்கிட்டு பெறக்கூடியது ஆகும்.   உரிமைகளை பாதுகாப்பது மற்றும் நடைமுறைபடுத்துவது அரசின் சட்டங்கள் ஆகும். மேலும் மக்களின் உரிமைகளை பாதுகாப்பது அரசின் கடமை ஆகும்.
Question 159
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றினைத் தேர்ந்தெடு
  1. உரிமைகள் மற்றும் பொறுப்புகள் இவை இரண்டும் பிரிக்கமுடியாதவை ஆகும்
  2. உரிமைகள் என்பது ஒரு மனிதன் தனது அன்றாட பல்வேறு பொறுப்புகளை செய்வதற்கு உறுதுணையாக நிற்கின்றது.
A
(i) சரி
B
(ii) சரி
C
(i) சரி (ii) தவறு
D
(i) மற்றும் (ii) சரியானவை
Question 159 Explanation: 
விளக்கம்: உரிமைகள் மற்றும் பொறுப்புகள் இவை இரண்டும் பிரிக்கமுடியாதவை ஆகும். உலகில் பிறக்கும் மனிதர்கள் அனைவருக்கும் அதிகமான பொறுப்புகளும் கூடவே பிறக்கின்றன. அவர்களுக்கு அதனால் இயற்கையாகவே போதுமான உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. உரிமைகள் என்பது ஒரு மனிதன் தனது அன்றாட பல்வேறு பொறுப்புகளை செய்வதற்கு உறுதுணையாக நிற்கின்றது.
Question 160
இந்தியக்குடிமக்களின் கடமை மற்றும் பொறுப்புகள் எதனை உள்ளடக்கியது? உங்களது கடமை, பொறுப்புகள் என்னென்ன?
A
இந்தியாவின் ஒற்றுமையும், இறையாண்மையும் பாதுகாத்தல்
B
இந்தியாவின் இயற்கை வளங்களை பாதுகாத்தல்
C
அனைவரிடத்திலும் சகோதரத்துவத்தையும், நல்லிணக்கத்தையும் பராமரித்தல்.
D
இவை அனைத்தும்
Question 160 Explanation: 
விளக்கம்: இந்தியாவின் ஒற்றுமையும், இறையாண்மையும் பாதுகாத்தல்.   பொது சொத்தை பாதுகாத்தல்.   இந்தியாவின் இயற்கை வளங்களை பாதுகாத்தல். (உதாரணமாக வன விலங்குகள், ஏரிகள், குளங்கள், காடுகள், ஆறுகள்)   சாதி, இனம், நிறம் மற்றும் பொருளாதார நிலைமைகளைக் கடந்து அனைவரிடத்திலும் சகோதரத்துவத்தையும், நல்லிணக்கத்தையும் பராமரித்தல்.   இந்தியாவின் பண்பாட்டையும், சமூக நல்லிணக்கத்தையும் பாதுகாத்தல்.   தேசியக்கொடி மற்றும் தேசியகீதம் போன்றவற்றுக்கு மரியாதை செலுத்துதல்.
Question 161
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றினைத் தேர்ந்தெடு
  • i)வயதான பெற்றோர், முதியோர் பராமரிப்பு மற்றும் நலன் சார்ந்த சட்டத்தின்படி, பராமரிப்பு என்பது உணவு, உடுத்த உடை, இருப்பிடம் மற்றும் மருத்துவ சிகிச்சையையும் உள்ளடக்கியது ஆகும்.
  • ii)இச்சட்டத்தின் ஒரே நிபந்தனையாக, எவரெல்லாம் தன் சொந்த வருமானத்திலும், உடைமையின் மூலமும் தன்னை பராமரிக்க இயலாதவர்களாக இருக்கிறார்களோ அவர்கள் இப்பராமரிப்பின் கீழ் உட்படுவார்கள்
A
(i) சரி
B
(ii) சரி
C
(i) சரி (ii) தவறு
D
(i) மற்றும் (ii) சரியானவை
Question 161 Explanation: 
வயதான பெற்றோர், முதியோர் பராமரிப்பு மற்றும் நலன் சார்ந்த சட்டத்தின்படி, பராமரிப்பு என்பது உணவு, உடுத்த உடை, இருப்பிடம் மற்றும் மருத்துவ சிகிச்சையையும் உள்ளடக்கியது ஆகும்.   இச்சட்டத்தின் ஒரே நிபந்தனையாக, எவரெல்லாம் தன் சொந்த வருமானத்திலும், உடைமையின் மூலமும் தன்னை பராமரிக்க இயலாதவர்களாக இருக்கிறார்களோ அவர்கள் இப்பராமரிப்பின் கீழ் உட்படுவார்கள்
Question 162
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றினைத் தேர்ந்தெடு
  1. இயற்கை உரிமைகள்  மனித இயல்பு மற்றும் பகுத்தறிவின் ஒரு பகுதியாகும்.
  2. “இயற்கை உரிமை” என்பது நேர்மையை அடிப்படையாகக் கொண்ட சிறந்த செயலையும், தூய ஆத்மா, சரியான செயல்பாடுகள் மற்றும் அரசின் சிறந்த ஆட்சி என குறிப்பிடப்பட்டுள்ளது.
A
(i) சரி
B
(ii) சரி
C
(i) சரி (ii) தவறு
D
(i) மற்றும் (ii) சரியானவை
Question 162 Explanation: 
விளக்கம்: இயற்கை உரிமைகள் (Natural Rights): இந்த வகையான உரிமைகள் மனித இயல்பு மற்றும் பகுத்தறிவின் ஒரு பகுதியாகும். இதனை பற்றி அரசியல் கோட்பாடுகள் கூறுவது என்னவென்றால் ஒவ்வொரு மனிதனும் சில அடிப்படை உரிமைகளைப் பெற்றுள்ளான். இதனை அரசாங்கங்கள் கூட மறுக்க இயலாது. மரபுவழி அரசியல் தத்துவத்தில் “இயற்கை உரிமை” என்பது நேர்மையை அடிப்படையாகக் கொண்ட சிறந்த செயலையும், தூய ஆத்மா, சரியான செயல்பாடுகள் மற்றும் அரசின் சிறந்த ஆட்சி என குறிப்பிடப்பட்டுள்ளது.
Question 163
அறநெறியின் படி மக்களை முழுமையாக வழி நடத்தி செல்லும் உரிமை எது? a) சட்ட உரிமைகள்
A
சட்ட உரிமைகள்
B
குடிமை உரிமைகள்
C
நீதிநெறி உரிமைகள்
D
இயற்கை உரிமைகள்
Question 163 Explanation: 
விளக்கம்: நீதிநெறி உரிமைகள் (Moral Rights) நீதிநெறி உரிமை என்பது நன்னடத்தை, மரியாதை, நல்லொழுக்கம் ஆகியன பற்றியது ஆகும். இது அறநெறியின் படி மக்களை முழுமையாக வழி நடத்தி செல்கின்றது.
Question 164
சட்ட உரிமைகள் எத்தனை  வகைப்படும்?
A
இரண்டு
B
ஐந்து
C
மூன்று
D
நான்கு
Question 164 Explanation: 
விளக்கம்: சட்ட உரிமைகள் (Legal Rights) சட்ட உரிமைகள் என்பது நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் சமமாகக் கிடைக்க ௯டிய ஒன்றாகும். இதில் எவ்வித பாகுபாடும் இன்றி பின்பற்றப்படுகிறது. சட்ட உரிமைகள் என்பது அரசினால் ஏற்று கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட விதிமுறைகள் ஆகும். சட்ட உரிமைகள் என்பது மூன்று வகைப்படும்.
Question 165
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றினைத் தேர்ந்தெடு
  1. குடிமை உரிமைகள் ஓர் மனிதன் சமூகத்தில் நாகரிகமான வாழ்க்கையை வாழ்வதற்கு அடிப்படை உரிமைகளை வழங்குகிறது.
  2. உயிர் வாழுகின்ற உரிமை, சுதந்திரம், மற்றும் சமத்துவம் ஆகிய குடிமை உரிமைகளை அரசு நிலைநாட்டி பாதுகாக்கிறது
A
(i) சரி
B
(ii) சரி
C
(i) சரி (ii) தவறு
D
(i) மற்றும் (ii) சரியானவை
Question 165 Explanation: 
விளக்கம்: குடிமை உரிமைகள் (Civil Rights): இந்த வகையான உரிமைகள் ஓர் மனிதன் சமூகத்தில் நாகரிகமான வாழ்க்கையை வாழ்வதற்கு அடிப்படை உரிமைகளை வழங்குகிறது. இது அரசினால் பாதுக்காக்கப்படுகிறது. அதாவது உயிர் வாழுகின்ற உரிமை, சுதந்திரம், மற்றும் சமத்துவம் ஆகிய குடிமை உரிமைகளை அரசு நிலைநாட்டி பாதுகாக்கிறது.
Question 166
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றினைத் தேர்ந்தெடு
  1. மக்கள் தங்களது நன்னடத்தையின் மூலம் அரசியல் நடவடிக்கைகளில் பங்கேற்பதற்கு வழிவகை செய்வது அரசியல் உரிமைகள் ஆகும்.
  2. இது வாக்களிக்கும் உரிமை, தேர்ந்தெடுக்கப்படும் உரிமை, பொதுப் பதவி வகிக்கும் உரிமை போன்றவை ஆகும்.
A
(i) சரி
B
(ii) சரி
C
(i) சரி (ii) தவறு
D
(i) மற்றும் (ii) சரியானவை
Question 166 Explanation: 
விளக்கம்: அரசியல் உரிமைகள் (Political Rights) : மக்கள் தங்களது நன்னடத்தையின் மூலம் அரசியல் நடவடிக்கைகளில் பங்கேற்பதற்கு வழிவகை செய்வது அரசியல் உரிமைகள் ஆகும். இது வாக்களிக்கும் உரிமை, தேர்ந்தெடுக்கப்படும் உரிமை, பொதுப் பதவி வகிக்கும் உரிமை போன்றவை ஆகும்.
Question 167
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றினைத் தேர்ந்தெடு
  1. பொருளாதார உரிமைகள்  தனிமனிதனுக்கு பொருளாதார பாதுகாப்பு அளிப்பதாகும்.
  2. பொருளாதார உரிமை என்பது ஒருவருக்கு வேலைவாய்ப்பு உரிமை, தகுந்த பாதுகாப்பு உரிமை, சமூக பாதுகாப்புரிமை ஆகியவற்றினை அளிப்பது போன்றவை ஆகும்.
A
(i) சரி
B
(ii) சரி
C
(i) சரி (ii) தவறு
D
(i) மற்றும் (ii) சரியானவை
Question 167 Explanation: 
விளக்கம்: பொருளாதார உரிமைகள் (Economic Rights) இந்த உரிமைகள் தனிமனிதனுக்கு பொருளாதார பாதுகாப்பு அளிப்பதாகும். இதன் மூலம் மக்கள் தங்களது குடிமை மற்றும் அரசியல் உரிமைகளைப் பயன்படுத்த அதிகாரம் அளிக்கப்படுகிறது. பொருளாதார உரிமை என்பது ஒருவருக்கு வேலைவாய்ப்பு உரிமை, தகுந்த பாதுகாப்பு உரிமை, சமூக பாதுகாப்புரிமை ஆகியவற்றினை அளிப்பது போன்றவை ஆகும்.
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 167 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!