Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Book Back QuestionsTnpsc

அறிவு மலர்ச்சியும், சமூக-அரசியல் மாற்றங்களும் Book Back Questions 9th Social Science Lesson 4

9th Social Science Lesson 4

4] அறிவு மலர்ச்சியும், சமூக-அரசியல் மாற்றங்களும்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

கர்நாடகாவில் உள்ள சிரவண-பெலகொலாவில் உள்ள பாகுபலியின் சிலைதான் (இவர் கோமதீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார்) இந்தியாவில் செதுக்கப்பட்ட மிக உயரமான (57 அடி) சமணச் சிலை இதுவே ஆகும்.

சமணக் காஞ்சி: கி. பி. (பொ. ஆ) ஏழாம் நூற்றாண்டில் தமிழகத்தில் இருந்த முக்கியமான சமயங்களில் சமணமும் ஒன்று. பல்லவ மன்னரான மகேந்திர வர்மன் சமண சமயத்தைச் சார்ந்தவர். அப்பர் என்று அழைக்கப்பட்ட திருநாவுக்கரசரின் தாக்கத்தால் அவர் சைவ சமயத்துக்கு மாறினார். தற்போதைய காஞ்சி நகரத்துக்கு அருகில் சமணக் காஞ்சி அமைந்திருக்கிறது. அங்கே சமணக் கோயில்களை நீங்கள் காணலாம். அவற்றுள் முக்கியமானது திருப்பருத்திக்குன்றம் சமணக் கோயிலாகும். இக்கோயிலின் கூரையில் மகாவீராரின் வாழ்க்கைக் கதை ஓவியமாக வரையப்பட்டுள்ளது.

புத்தரின் நெருக்கமான சீடராக இருந்தவர் ஆனந்தன். அவர் ஒருமுறை புத்தரிடம், “பெண்கள் துறவியாக முடியுமா?” எனக் கேட்டார். அதற்குப் புத்தர், “பெண்கள் உலக இன்பங்களையும் ஆடம்பரங்களையும் துறந்தால், அவர்களும் ஆண்களைப் போல துறவியாக முடியும்; மெய்யறிவையும் அடைய முடியும்” என்றார்.

வட இந்தியா, வடக்கே காபூல் பள்ளத்தாக்கிலிருந்து தெற்கே கோதாவரி வரை பரவியிருந்தது. இங்கு காசி, கோசலம், அங்கம், மகதம், வஜ்ஜி, மல்லா, சேதி, வட்சா, குரு, பாஞ்சாலம், மத்சயம், சூரசேனம், ஆசாகம், அவந்தி, காந்தாரம், காம்போஜம் என்று பதினாறு மஹாஜனபதங்கள் தோன்றின.

ஈரானில் அசிரியப் பேரரசும் இந்தியாவில் மகதப் பேரரசும் உருவாக இரும்புக் கலப்பை சார்ந்த விவசாயம் வழிவகுத்தது.

மொத்தம் உள்ள 33 கல்வெட்டுகளில் 14 முக்கியமான பாறைக் கல்வெட்டுகள், 7 தூண் பிரகடனங்கள், 2 கலிங்கக் கல்வெட்டுகள். இவை போக, சிறு பாறைக் கல்வெட்டுகளும், தூண் பிரகடனங்களும் உண்டு. மௌரியப் பேரரசு பற்றி, குறிப்பாக அசோகரின் தம்ம ஆட்சியைப் பற்றி அறிய இவை மிகவும் நம்பகமான ஆதாரங்களாகத் திகழ்கின்றன.

நான்கு சிங்கங்களைக் கொண்ட நமது தேசியச் சின்னம் சாரநாத்தில் உள்ள அசோகர் தூணை பிரதிபலிக்கும் விதமாகவே தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சந்திரகுப்தரின் அமைச்சரான சாணக்கியர் அர்த்த சாஸ்திரம் என்ற நூலை எழுதினார். இது மௌரிய ஆட்சி நிர்வாகம் பற்றி விரிவாக எடுத்துரைக்கிறது.

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. ஒரு தத்துவப் பிரிவை நிறுவிய ————— எளிமைக்கும் தன்னல மறுப்பிற்கும் உதாரணமாக விளங்கினார்.

(அ) புத்தர்

(ஆ) லாவோட்சே

(இ) கன்ஃபூசியஸ்

(ஈ) ஜொராஸ்டர்

2. மகாவீரரின் போதனைகளால் ஈர்க்கப்பட்ட மகத அரசர் —————

(அ) தனநந்தர்

(ஆ) சந்திர குப்தர்

(இ) பிம்பிசாரர்

(ஈ) சிசுநாகர்

3. வடக்கில் காபூல் பள்ளத்தாக்கிலிருந்து தெற்கில் கோதாவரி வரை பரவியிருந்த வட இந்தியாவின் ———- எனப்பட்ட பதினாறு மாநிலங்களின் அரசுகளின் எழுச்சி ஏற்பட்டது.

(அ) மஹாஜனபதங்கள்

(ஆ) கனசங்கங்கள்

(இ) திராவிடம்

(ஈ) தட்சிணபதா

4. மும்மணிகள் (திரி ரத்னா) என்ற மூன்று கொள்கைகளை போதித்தவர் ———-

(அ) புத்தர்

(ஆ) மகாவீரர்

(இ) லாவோட்சே

(ஈ) கன்ஃபூசியஸ்

5. மௌரிய ஆட்சி அமைப்பு மற்றும் சமூகம் குறித்த செய்திகளைத் தன் குறிப்புகளால் அளித்தவர்.

(அ) மார்க்கோ போலோ

(ஆ) ஃபாஹியான்

(இ) மெகஸ்தனிஸ்

(ஈ) செல்யூகஸ்

6. (i) மகத அரசர்களின் கீழ் இருந்து மகாமாத்ரேயர்கள் அமைச்சர்களுக்குச் செயலாளர்களாகச் செயல்பட்டார்கள்.

(ii) மெகஸ்தனிஸ் எழுதிய “இண்டிகா” என்னும் வரலாற்றுக் குறிப்பு மௌரிய ஆட்சி அமைப்பு மற்றும் சமூகம் குறித்த ஆவணமாக விளங்குகிறது.

(iii) ஒரு பேரரசைக் கட்டமைக்க நந்தர் செய்த முயற்சியை, மௌரிய அரசை உருவாக்கிய அசோகர் தடுத்து நிறுத்தினார்.

(iv) மரபுகளின்படி, சந்திரகுப்தர் அவரது வாழ்வின் இறுதியில் புத்த சமயத்தின் தீவிரமான ஆதரவாளராக இருந்தார்.

(அ) i சரி

(ஆ) ii சரி

(இ) i மற்றும் ii சரி

(ஈ) iii மற்றும் iv சரி

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. வெவ்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த, பிரார்த்தனைகளும் மரபுவழிக் கதைகளும் அடங்கிய புனித இலக்கியத் தொகுப்பு ———– ஆகும்.

2. கங்கைச் சமவெளியில் —————- வேளாண்மைக்கு மாடுகளின் தேவை அவசியமானது.

3. ————— தீர்த்தங்கரர்களின் நீண்ட மரபில் வந்தவர் என்றும் 24வது மற்றும் கடைசி தீர்த்தங்கரர் என்றும் சமணர்கள் நம்புகிறார்கள்.

4. புத்தருக்கு ஞானோதயம் ஏற்பட்ட இடத்தில் கட்டப்பட்டுள்ள மஹாபோதி கோயில் இன்றும் ————இல் உள்ளது.

5. மௌரியப் பேரரசைப் பற்றியும் குறிப்பாக அசோகரின் தர்மம் சார்ந்த ஆட்சியைப் பற்றியும் அறிந்து கொள்ள —————– பாறைக் குறிப்புகள் பெரிதும் உதவுகின்றன.

III. பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

1. அ) வெண்கலக் கருவிகளின் வரவால் கங்கை ஆற்றங்கரையில் இருந்த அடர்த்தியான காடுகளை அகற்றுவது எளிதானது.

ஆ) அசிவிகம் மேற்கு இந்தியாவில் சிறு அளவில் பரவியிருந்தது.

இ) குறிப்பிட்ட இனக்குழுக்கள் ஆதிக்கம் செலுத்திய நிலத்தொகுதிகள் மௌரியர்களும் முற்பட்ட அரசுகள் எனப்பட்டன.

ஈ) இலக்கியங்களில் குறிப்பிடப்படும் அரசுகளில் காசி, கோசலம், மகதம் ஆகியவை வலிமை படைத்தவையாக இருந்தன.

2. அ) மகதத்தின் முதல் முக்கியமான அரசன் அஜாதசத்ரு.

ஆ) நிர்வாகத்துக்கான ஒரு விரிவான கட்டமைப்பை உருவாக்குவதில் பிம்பிசாரர் வெற்றிகரமாகச் செயல்பட்டார்.

இ) வட இந்தியாவில் ஆட்சி செய்த சத்ரியர் அல்லாத அரச வம்சங்களில் முதலாமவர்கள் மௌரியர்களாகும்.

ஈ) ஒரு பேரரசுக்கான கட்டமைப்பை உருவாக்க நந்தர் மேற்கொண்ட முயற்சியை அசோகர் தடுத்து நிறுத்தினார்.

IV. பொருத்துக:

1. எண் வழிப்பாதை – அ] மிக உயரமான சமணச்சிலை

2. பாகுபலி – ஆ] அரசியல் அறநெறிகளின் சட்டத்தொகுப்பு

3. வசந்த மற்றும் இலையுதிர் கால வரலாற்றுப் பதிவேடு – இ] சட்டங்களும்புராணக்கதைகளும் அடங்கிய புனிதஇலக்கியம்

4. ஜெண்ட் அவெஸ்தா – ஈ] முதல் தீர்த்தங்கரர்

5. ரிஷபா – உ] தூய மனநிலையை அடைவதற்கான பாதை

விடைகள்:

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. புத்தர், 2. பிம்பிசாரர், 3. மஹாஜனபதங்கள், 4. மகாவீரர், 5. மெகஸ்தனிஸ், 6. ) ii சரி

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. ஜெண்ட் அவெஸ்தா, 2. இரும்பு-கலப்பை, 3. மகாவீரர், 4. புத்தகயா, 5. அசோகரின்

III. பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

1. இலக்கியங்களில் குறிப்பிடப்படும் அரசுகளில் காசி, கோசலம், மகதம் ஆகியவை வலிமை படைத்தவையாக இருந்தன, 2. நிர்வாகத்துக்கான ஒரு விரிவான கட்டமைப்பை உருவாக்குவதில் பிம்பிசாரர் வெற்றிகரமாகச் செயல்பட்டார்.

IV. பொருத்துக:

1. உ, 2. அ, 3. ஆ, 4. இ, 5. ஈ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!