Book Back QuestionsTnpsc

அளவீடு Book Back Questions 9th Science Lesson 1

9th Science Lesson 1

1] அளவீடு

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

நமக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரம் ஆல்ஃபா சென்டாரி (alpha centauri). சூரியனிலிருந்து 1.34 விண்ணியல் ஆரத்தொலைவில் இது உள்ளது. இரவு நேரங்களில் நமது வெறும் கண்ணிற்குத் தெரியும் நட்சத்திரங்கள் சூரியனிலிருந்து 500 விண்ணியல் ஆரத் தொலைவிற்குள் உள்ளன.

1 ml நீரின் நிறை = 1g; 1 l நீரின் நிறை = 1 kg (மற்ற திரவங்களின் நிறை அவற்றின் அடர்த்தியைப் பொறுத்து மாறுபடுகின்றன).

கணக்கீடு 1: முதன்மை அளவுகோலின் அளவு 89 செ.மீ வெர்னியர் ஒன்றிப்பு 4 மற்றும் நேர் சுழிப்பிழை 0.05 செ.மீ எனில், சரியான அளவைக் கணக்கிடு.

தீர்வு: சரியான அளவு = 8 + (4 x 0.01) – 0.05 = 8 + 0.04 – 0.05 = 8 – 0.01 = 7.99 செ.மீ

கணக்கீடு 2: வெர்னியர் கோலின் அளவீடு 8 மி.மீ, வெர்னியர் ஒன்றிப்பு 4 மற்றும் எதிர்சுழிப்பிழை – 0.2 மி.மீ எனில், சரியான அளவைக் கணக்கிடு.

தீர்வு: சரியான அளவு = 8 + (4 x 0.1) – (-0.2) = 8 + 0.4 – 0.2 = 8 + 0.6 = 8.6 மி.மீ

ஒரு முட்டையின் ஓடானது அந்த முட்டையின் எடையில் 12% ஆகும். ஒரு நீலத் திமிங்கலத்தின் எடை 30 யானைகளின் எடைக்குச் சமம். அதன் நீளம் மூன்று பேருந்துகளின் நீளத்திற்குச் சமம்.

கணக்கீடு 3: பூமியில் ஒரு மனிதனின் நிறை 50 கி.கி. எனில் அவரின் எடை எவ்வளவு?

தீர்வு: ஒரு மனிதனின் நிறை = 50 கிகி. ஏடை (w) mg = 50 x 9.8 = 490 நியூட்டன்

சரியான விடையைத் தேர்ந்தெடு:

1. சரியான ஒன்றைத் தேர்ந்தெடு

(அ) மி.மீ < செ.மீ < மீ < கி.மீ

(ஆ) மி.மீ > செ.மீ > மீ > கி.மீ

(இ) கி.மீ < மீ < செ.மீ < மி.மீ

(ஈ) மி.மீ > மீ > செ.மீ > கி.மீ

2. அளவுகோல், அளவிடும் நாடா மற்றும் மீட்டர் அளவுகோல் ஆகியவை கீழ்க்கண்ட எந்த அளவை அளவிடப் பயன்படுகின்றன?

(அ) நிறை

(ஆ) எடை

(இ) காலம்

(ஈ) நீளம்

3. ஒரு மெட்ரிக் டன் என்பது

(அ) 100 குவின்டால்

(ஆ) 10 குவின்டால்

(இ) 1/10 குவின்டால்

(ஈ) 1/100 குவின்டால்

4. கீழ்க்கண்டவற்றுள் எது நிறையைஅளவிடும் கருவியல்ல?

(அ) சுருள் தராசு

(ஆ) பொதுத் தராசு

(இ) இயற்பியல் தராசு

(ஈ) எண்ணியல் தராசு

கோடிட்ட இடங்களை நிரப்பு:

1. ___________ ன் அலகு மீட்டர் ஆகும்.

2. 1 கி.கி. அரிசியினை அளவிட __________ தராசு பயன்படுகிறது.

3. கிரிக்கெட் பந்தின் தடிமனை அளவிடப் பயன்படுவது __________ கருவியாகும்.

4. மெல்லிய கம்பியின் ஆரத்தைஅளவிட __________ பயன்படுகிறது.

5. இயற்பியல் தராசைப் பயன்படுத்தி அளவிடக் கூடிய துல்லியமான நிறை ___________ ஆகும்

சரியா? தவறா? தவறெனில் திருத்துக:

1. மின்னோட்டத்தின் SI அலகு கிலோகிராம்.

2. கிலோமீட்டர் என்பது ஒரு SI அலகுமுறை.

3. அன்றாட வாழ்வில், நாம் நிறை என்ற பதத்திற்குப் பதிலாக எடை என்ற பதத்தைப் பயன்படுத்துகிறோம்.

4. இயற்பியல் தராசு, பொதுத் தராசை விடத் துல்லியமானது. அது மில்லிகிராம் அளவிற்கு நிறையைத் துல்லியமாக அளவிடப்படுகிறது.

5. ஒரு டிகிரி செல்சியஸ் என்பது 1 K இடைவெளி ஆகும். பூஜ்ஜியம் டிகிரி செல்சியஸ் என்பது 273.15 K.

6. வெர்னியர் அளவியின் உதவியால் 0.1 மி.மீ அளவிற்கும், திருகு அளவியின் உதவியால் 0.01 மி.மீ அளவிற்கும் துல்லியமாக அளவிடமுடியும்.

பொருத்துக:

1.

இயற்பியல் அளவு SI அலகு

அ) நீளம் – 1. கெல்வின்

ஆ) நிறை – 2. மீட்டர்

இ) காலம் – 3. கிலோகிராம்

ஈ) வெப்பநிலை – 4. விநாடி

2.

கருவி அளவிடப்படும் பொருள்

அ) திருகு அளவி – 1. காய்கறிகள்

ஆ) வெர்னியர் அளவி – 2. நாணயம்

இ) சாதாரணத்தராசு – 3. தங்க நகைகள்

ஈ) மின்னணுத்தராசு – 4. கிரிக்கெட் பந்து

கூற்று மற்றும் காரணம் வகை வினாக்கள்:

பின்வருமாறு விடையளி:

அ) A மற்றும் R இரண்டும் சரி. ஆனால் R என்பது சரியான விளக்கம் அல்ல.

ஆ) A மற்றும் R இரண்டும் சரி. மேலும் R என்பது சரியான விளக்கம்

இ) A சரி ஆனால் R தவறு

ஈ) A தவறு ஆனால் R சரி

1. கூற்று (A): ஒரு பையின் நிறை 10 கி.கி. என்பது அறிவியல் பூர்வமாக சரியான வெளிப்படுத்துதல் ஆகும்.

காரணம் (R): அன்றாட வாழ்வில் நாம் நிறை என்ற வார்த்தைக்குப் பதிலாக எடை என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறோம்.

2. கூற்று (A): 0o C = 273.16 K. நாம் அதை முழு எண்ணாக 273 K என எடுத்துக் கொள்கிறோம்.

காரணம் (R): செல்சியஸ் அளவை கெல்வின் அளவிற்கு மாற்றும்போது 273 ஐக் கூட்டினால் போதுமானது.

3. கூற்று (A): இரண்டு வான் பொருட்களுக்கு இடையே உள்ள தொலைவு ஒளி ஆண்டு என்ற அலகினால் அளக்கப்படுகிறது.

காரணம் (R): ஒளியானது தொடர்ந்து ஒரு ஆண்டு செல்லக்கூடிய தொலைவு ஓர் ஒளி ஆண்டு எனப்படும்.

சரியான விடையைத் தேர்ந்தெடு: (விடைகள்)

1. மி.மீ < செ.மீ < மீ < கி.மீ 2. நீளம் 3. (10 குவிண்டால்) 4. சுருள் தராசு

கோடிட்ட இடங்களை நிரப்புக: (விடைகள்)

1. நீளம் 2. பொதுத்தராசு 3. வெர்னியர் அளவி 4. திருகு அளவி 5. (1 மி.கி)

சரியா? தவறா? தவறெனில் திருத்துக: (விடைகள்)

1. தவறு

சரியான விடை: மின்னோட்டத்தின் SI அலகு ஆம்பியர்.

2. சரி

3. சரி

4. சரி

5. சரி

6. சரி

பொருத்துக: (விடைகள்)

1.

1. நீளம் – மீட்டர்

2. நிறை – கிலோகிராம்

3. காலம் – வினாடி

4. வெப்பநிலை – கெல்வின்

2.

1. திருகு அளவி – நாணயம்

2. வெர்னியர் அளவி – கிரிக்கெட் பந்து

3. சாதாரணத்தராசு – காய்கறிகள்

4. மின்னணுத்தராசு – தங்க நகைகள்

கூற்று மற்றும் காரணம் வகை: (விடைகள்)

1. A மற்றும் R இரண்டும் சரி ஆனால் R என்பது சரியான விளக்கம் அல்ல

2. A மற்றும் R இரண்டும் சரி ஆனால் R என்பது சரியான விளக்கம் அல்ல

3. A தவறு ஆனால் R சரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!