Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Book Back QuestionsTnpsc

அளவீட்டியல் Book Back Questions 8th Science Lesson 1

8th Science Lesson 1

1] அளவீட்டியல்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

CGS, MKS மற்றும் SI அலகு முறைகள் மெட்ரிக் அலகு முறை வகையைச் சார்ந்தவை. ஆனால் FPS அலகுமுறை மெட்ரிக் அலகுமுறை அல்ல. இது ஆங்கில இயற்பியலாளர்கள் பயன்படுத்திய அலகு முறை ஆகும்.

செவ்வாய் கோளின் காலநிலை பற்றிய தகவல்களைச் சேகரிப்பதற்காக 1998ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், அமெரிக்காவின் தேசிய வானியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (National Aeronautics and Space Administration – NASA) ‘Mars Climate Orbiter’ எனும் சுற்றுக்கலத்தை அங்கு அனுப்பியது. ஒன்பது மாதங்களுக்குப் பிறகு, செவ்வாய் கோளை நெருங்கி வந்தபோது, சுற்றுக்கலமானது 1999, செப்டம்பர் 23 அன்று கண்ணிற்குப் புலப்படாமல் மறைந்து போனது. கொலராடோவில் இருந்த விண்கலம் செலுத்தும் குழுவிற்கும், கலிஃபோர்னியாவில் இருந்த பணி வழிநடத்தும் குழுவிற்கும் இடையேயான தகவல் பரிமாற்றத்தில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக சுற்றுக்காலக் கணக்கீட்டில் பிழை ஏற்பட்டது என்று அறிக்கை வெளியானது. இப்பணியில் ஈடுபட்ட இரு குழுக்களில், ஒரு குழு ஆங்கிலேய FPS அலகு முறையையும் மற்றொரு குழு MKS அலகு முறையையும் பயன்படுத்தி கணக்கீடு செய்துள்ளனர். இதனால் சுமார் 125 மில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டது.

6.023 x 1023 எனும் எண் அவோகேட்ரா எண் என்றும் வழங்கப்படுகிறது.

1995ஆம் ஆண்டு வரை தளக் கோணம் மற்றும் திண்மக் கோணம் ஆகியவை துணை அளவுகள் என தனியாக வகைப்படுத்தப்பட்டிருந்தன. 1995ஆம் ஆண்டில் இவை வழி அளவுகள் பட்டியலில் சேர்க்கப்பட்டன.

கிரீன்விச் சராசரி நேரம்(GMT): இது இங்கிலாந்து நாட்டின் லண்டன் மாநகருக்கு அருகில், கிரீன்விச் என்னுமிடத்தில் உள்ள இராயல் வானியல் ஆய்வு மையத்தின் (Royal Astronomical Obervatory) நேரமாகும். இது 0o தீர்க்கக் கோட்டில் கணக்கிடப்படுகிறது. புவியானது 15o இடைவெளியில் அமைந்த தீர்க்கக் கோடுகளின் அடிப்படையில் 24 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவை நேர மண்டலங்கள் (Time Zones) என்று அழைக்கப்படுகின்றன. அடுத்தடுத்த இரண்டு நேர மண்டலங்களுக்கு இடையே உள்ள காலஇடைவெளி 1 மணி நேரம் ஆகும்.

இந்திய திட்ட நேரம் (IST): இந்தியாவின் உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மிர்சாபூர் (Mirzapur) எனும் இடத்தின் வழியாகச் செல்லும் தீர்க்கக் கோட்டை ஆதாரமாகக் கொண்டு இந்திய திட்ட நேரம் கணக்கிடப்படுகிறது. இக்கோடானது 82.5o (கிழக்கு) தீர்க்கக் கோட்டில் அமைந்துள்ளது. IST கிரீன்விச் சராசரி நேரம் + 5.30 மணி

I. சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக

1. கீழ்க்கண்டவற்றுள் எது ஆங்கிலேய அலகீட்டு முறையாகும்.

அ) CGS

ஆ) MKS

இ) FPS

ஈ)SI

2. மின்னோட்டம் என்பது _________ அளவு ஆகும்.

அ) அடிப்படை

ஆ) துணை நிலை

இ) வழி

ஈ) தொழில் சார்ந்த

3. வெப்பநிலையின் SI அலகு _________

அ) செல்சியஸ்

ஆ) ஃபாரன்ஹீட்

இ) கெல்வின்

ஈ) ஆம்பியர்

4. பொருளின் அளவு என்பது

அ) அணுக்களின் எண்ணிக்கைக்கு நேர்த்தகவில் இருக்கும்

ஆ) அணுக்களின் எண்ணிக்கைக்கு எதிர்த்தகவில் இருக்கும்

இ) அணுக்களின் எண்ணிக்கையின் இருமடிக்கு நேர்த்தகவில் இருக்கும்

ஈ) அணுக்களின் எண்ணிக்கையின் இருமடிக்கு எதிர்த்தகவில் இருக்கும்

5. ஒளிச்செறிவு என்பது _________ யின் ஒளிச்செறிவாகும்.

அ) லேசர் ஒளி

ஆ) புற ஊதாக் கதிரின் ஒளி

இ) கண்ணுறு ஒளி

ஈ) அகச்சிவப்புக் கதிரின் ஒளி

6. SI அலகு என்பது

அ) பன்னாட்டு அலகு முறை

ஆ) ஒருங்கிணைந்த அலகு முறை

இ) பன்னாட்டு குறியீட்டு முறை

ஈ) ஒருங்கிணைந்த குறியீட்டு முறை

7. அளவிடப்பட்ட இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அளவீட்டு மதிப்புகளின்

நெருக்கமானது _________ என அழைக்கப்படுகிறது.

அ) துல்லியத்தன்மை

ஆ) துல்லியத்தன்மையின் நுட்பம்

இ) பிழை

ஈ) தோராயம்

8. அடிப்படை அளவுகள் தவிர்த்த பிற அளவுகள் _________

அ) துணை அளவுகள்

ஆ) வழி அளவுகள்

இ) தொழில்முறை அளவுகள்

ஈ) ஆற்றல் அளவுகள்

9. கீழ்க்கண்ட எந்தக் கூற்று தோராயம் பற்றிய தவறான கூற்றாகும்.

அ) தோராயம் என்பது துல்லியமான மதிப்பைத் தரும்

ஆ) தோராயம் என்பது கணக்கிடுதலை எளிமையாக்குகிறது.

இ) தோராயம் என்பது குறைவான அளவுத் தகவல்கள் கிடைக்கும்போது பயனுள்ளதாக அமைகிறது.

ஈ) தோராயம் என்பது உண்மையான மதிப்புக்கு நெருக்கமான மதிப்பினைத் தருகிறது.

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1.திண்மக்கோணம் _________ என்ற அலகில் அளக்கப்படுகிறது.

2. _________ இயற்பியல் அளவுகளுக்கான பொதுவான அளவீட்டின் தேவையை உணர்ந்து, அதற்கான அங்கீகாரத்தை வழங்கியது.

3. ஒரு பொருளின் குளிர்ச்சி அல்லது வெப்பத்தின் அளவானது _________ என அழைக்கப்படுகிறது.

4. மின்னோட்டத்தினை அளவிடப் பயன்படும் கருவி _________ ஆகும்.

5. _________ என்பது 6.023 x 10+23 அணுக்கள் அல்லது மூலக்கூறுகளைக் கொண்டுள்ளது.

6. ஓரலகுப் பரப்பில் ஓரலகு _________ இல் வெளியிடப்படும் கண்ணுறு ஒளியின் அளவே ஒளிச்செறிவாகும்.

7. குவார்ட்ஸ் கடிகாரங்கள் _________ அலைவுகளைப் பயன்படுத்திச் செயல்படுகின்றன.

8. அளவீடுகளின் நிலையற்றத்தன்மை _________ என அழைக்கப்படுகிறது.

9. அளவிடப்பட்ட மதிப்புகளின் நெருங்கியத் தன்மையே _________ ஆகும்.

10. இரண்டு நேர்க்கோடுகளின் குறுக்கீட்டினால் _________ உருவாகிறது.

III. சரியா? தவறா? என எழுதுக.

1. SI அலகு முறை என்பது மெட்ரிக் அலகு முறையாகும்.

2. ஓர் அமைப்பில் உள்ள துகள்களின் மொத்த இயக்க ஆற்றலின் அளவே வெப்பநிலை ஆகும்.

3. நீரின் உறைநிலைப் புள்ளியானது வெப்பநிலைமானியில் மேல்நிலைப் புள்ளியாகக் (UFP) குறிக்கப்படுகிறது.

4. 4. ஒரு நிமிடத்தில் செல்லும் மின்னூட்டத்தின் அளவு ஒரு கூலும் எனில் அது ஓர் ஆம்பியர் என அழைக்கப்படுகிறது.

5. பொருளில் அடங்கியுள்ள துகள்களின் எண்ணிக்கையே பொருளின் அளவாகும்.

6. மெழுகுவர்த்தியிலிருந்து வெளியாகும் ஒளிச்செறிவின் தோராயமான மதிப்பு ஒரு கேண்டிலாவிற்குச் சமமாகும்.

7. கூம்பின் உச்சி ஏற்படுத்தும் கோணம் தளக்கோணத்திற்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.

8. குவார்ட்ஸ் கடிகாரங்கள் GPS கருவிகளில் பயன்படுகிறது.

9. மின்புலச் செறிவினைக் குறிப்பிட ‘கேண்டிலா’ என்ற அலகு பயன்படுகிறது.

10. 4.582 எண்ணின் முழுமையாக்கப்பட்ட மதிப்பு 4.58

IV. பொருத்துக.

தொகுதி அ தொகுதி ஆ

1] வெப்பநிலை – அ. உண்மையானமதிப்பின் நெருங்கிய அளவு

2] தளக்கோணம் – ஆ. குளிர்ச்சி மற்றும் வெப்பத்தின் அளவு

3] திண்மக் கோணம் – இ. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அளவீடுகளின் நெருங்கியத் தன்மை

4] துல்லியத் தன்மை – ஈ. மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட தளங்களின் குறுக்கீட்டினால் ஏற்படும் கோணம்

5] நுட்பம் – உ. இரண்டு தளங்களின் குறுக்கீட்டினால்

ஏற்படும்கோணம்

V. காரணம் மற்றும் கூற்று

1. கூற்று : SI அலகுமுறை அளவீடுகளுக்கான மிகச் சரியான முறையாகும்.

காரணம்: வெப்பநிலைக்கான SI அலகு கெல்வின்.

அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கம் தருகிறது.

ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கமன்று.

இ) கூற்று சரியானது. ஆனால் காரணம் சரியன்று.

ஈ) கூற்று தவறானது. ஆனால், காரணம் சரியானது.

2. கூற்று : மின்னோட்டம், பொருளின் அளவு, ஒளிச்செறிவு ஆகியவை இயற்பியலில் அடிப்படை அளவீடுகளாகும்.

காரணம்: அவை ஒன்று மற்றொன்றோடு சார்புடையதன்று.

அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கம் தருகிறது.

ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கமன்று.

இ) கூற்று சரியானது. ஆனால் காரணம் சரியன்று.

ஈ) கூற்று தவறானது. ஆனால், காரணம் சரியானது.

3. கூற்று : கடிகாரத்தின் வினாடி முள்ளின் மீச்சிற்றளவு ஒரு வினாடியாகும்.

காரணம்: மீச்சிற்றளவு என்பது ஒரு கருவியால் துல்லியமாக அளவிடப்படும் மிகப்பெரிய அளவீடாகும்.

அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கம் தருகிறது.

ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கமன்று.

இ) கூற்று சரியானது. ஆனால் காரணம் சரியன்று.

ஈ) கூற்று தவறானது. ஆனால், காரணம் சரியானது.

4. கூற்று : அவகாட்ரோ எண் என்பது ஒரு மோல் பொருளில் உள்ள அணுக்களின் எண்ணிக்கையாகும்.

காரணம்: அவகாட்ரோ எண் ஒரு மாறிலி ஆகும்.

அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கம் தருகிறது.

ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கமன்று.

இ) கூற்று சரியானது. ஆனால் காரணம் சரியன்று.

ஈ) கூற்று தவறானது. ஆனால், காரணம் சரியானது.

5. கூற்று : திண்மக் கோணத்தின் அலகு ரேடியன்.

காரணம்: ஒரு ரேடியன் என்பது வட்டத்தின் மையத்திலிருந்து வரையப்படும் ஆரத்தின் நீளமானது கடக்கும் கோண அளவாகும்.

அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கம் தருகிறது.

ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கமன்று.

இ) கூற்று சரியானது. ஆனால் காரணம் சரியன்று.

ஈ) கூற்று தவறானது. ஆனால், காரணம் சரியானது.

VI. ஓரிரு வார்த்தைகளில் விடையளிக்க.

1. FPS முறையில் நிறையின் அலகு என்ன?

2. SI முறையில் உள்ள அடிப்படை அளவுகள் எத்தனை?

3. வெப்பநிலையை அளக்க உதவும் கருவியின் பெயரினைத் தருக.

4. ஃபாரன்ஹீட் வெப்பநிலைமானியில் உள்ள ‘கீழ்நிலைப்புள்ளி’ வெப்பநிலையின்(Lower Fixed Point Temperature) மதிப்பு என்ன?

5. ஒளிசெறிவின் SI அலகு என்ன?

6. அவகாட்ரோ எண்ணின் மதிப்பு என்ன?

7. அணுக்கடிகாரங்களில் பயன்படும் அலைவுகளின் வகை என்ன?

8. காட்சிப்படுத்துதலின் (Display) அடிப்படையில் வகைப்படுத்தப்படும் கடிகாரங்களின் பெயர்களைக் குறிப்பிடுக.

9. கடிகாரத்தில் ஒரு மணிநேரத்தில் நிமிடமுள் எத்தனை முறை சுற்றிவரும்?

10. ஒரு நிமிட நேரத்தில் எத்தனை மணிகள் உள்ளன?

விடைகள்:

I. சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக

1. FPS, 2. அடிப்படை, 3. கெல்வின், 4. அணுக்களின் எண்ணிக்கைக்கு நேர்த்தகவில் இருக்கும், 5. கண்ணுறு ஒளி, 6. பன்னாட்டு அலகு முறை, 7. துல்லியத்தன்மையின் நுட்பம், 8. வழி அளவுகள், 9. தோராயம் என்பது துல்லியமான மதிப்பைத் தரும்.

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. ஸ்ட்ரேடியன், 2. அறிவியல் அறிஞர்கள், 3. வெப்பநிலை, 4. அம்மீட்டர், 5. ஒரு மோல், 6. திண்மக் கோணம், 7. மின்னனு அலைவுகள், 8. பிழைகள், 9. நுட்பம், 10. தளக்கோணம்.

III. சரியா? தவறா? என எழுதுக.

1. சரி, 2. சராசரி இயக்க ஆற்றல், 3. கீழ்நிலைப் புள்ளி, 4. விநாடியில், 5. சரி, 6. சரி, 7. சரி, 8. அணுக்கடிகாரங்கள், 9. ஒளிச்செறிவு, 10. சரி

IV. பொருத்துக.

1. ஆ, 2. உ, 3. ஈ, 4.அ, 5. இ

V. காரணம் மற்றும் கூற்று

1. கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கமன்று.

2. கூற்று சரியானது. ஆனால் காரணம் சரியன்று.

3. கூற்று சரியானது. ஆனால் காரணம் சரியன்று.

4. கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கம் தருகிறது.

5. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியன்று.

VI. ஓரிரு வார்த்தைகளில் விடையளிக்க.

1. பவுண்ட், 2. ஏழு, 3. வெப்பநிலைமானி, 4. 32°F, 5. கேண்டிலா, 6. 6.023 × 1023, 7. அணுவினுள் ஏற்படும் அதிர்வெண்கள், 8. ஒப்புமைவகைக் கடிகாரங்கள், எண்ணிலக்க வகைக் கடிகாரங்கள், 9. ஒரு முறை, 10. 60 மணி நேரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!