Book Back QuestionsTnpsc

ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள் Book Back Questions 8th Social Science Lesson 7

8th Social Science Lesson 7

7] ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

ஒரு நகர்ப்புற பகுதி என்பது அதிக மக்கள் தொகை அடர்த்தியோடு உணவு உற்பத்தியல்லாத தொழில்களில் ஈடுபடுவதும் நன்கு கட்டமைக்கப்பட்ட சூழலில் வாழ்வதும் ஆகும்.

கோட்டைக்குள் கடல் நுழைவாயில் வழியாக நுழைந்தால் முதலில் காணப்படும் கட்டடம் தமிழக அரசின் இருக்கையாகும். இந்த சுவராசியமான கட்டடம் 1694 மற்றும் 1732க்கு இடையில் கட்டப்பட்டதோடு இது இந்தியாவில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட மிகப் பழமையான கட்டுமானங்களில் ஒன்று என கூறப்படுகிறது.

கல்கத்தாவில் உள்ள டல்ஹெளசி சதுக்கம் மற்றும் மதராஸில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டை ஆகியவை மத்திய வணிகப் பகுதிக்கு அருகில் இருந்தன. மேலும் பிரம்மாண்டமான கட்டடங்களைக் கொண்டிருந்தன. அவை பிரிட்டிஷ் வகையிலான ரோமானிய பாணிகளில் அமைந்திருந்தன.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. பழங்கால நகரங்கள் எனப்படுவது

(அ) ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோ

(ஆ) டெல்லி மற்றும் ஹைதராபாத்

(இ) பம்பாய் மற்றும் கல்கத்தா

(ஈ) மேற்கண்ட எதுவுமில்லை

2. ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட கடலோர நகரம்/நகரங்கள்.

(அ) சூரத்

(ஆ) கோவா

(இ) பம்பாய்

(ஈ) மேற்கண்ட அனைத்தும்

3. 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடங்கிய நகரமயமாக்கலின் ஒரு புதிய நடைமுறை.

(அ) சூயஸ் கால்வாய் திறப்பு

(ஆ) நீராவிப் போக்குவரத்து அறிமுகம்

(இ) ரயில்வே கட்டுமானம்

(ஈ) மேற்கண்ட அனைத்தும்

4. ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வருகை தந்தது

(அ) வர்த்தகத்திற்காக

(ஆ) தங்கள் சமயத்தைப் பரப்புவதற்காக

(இ) பணி புரிவதற்காக

(ஈ) ஆட்சி செய்வதற்காக

5. புனித ஜார்ஜ் கோட்டை ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட இடம்.

(அ) பம்பாய்

(ஆ) கடலூர்

(இ) மதராஸ்

(ஈ) கல்கத்தா

6. 1744ஆம் ஆண்டு வரை கிழக்கிந்திய கம்பெனியின் முதன்மை குடியிருப்பாக இருந்தது எது?

(அ) புனித வில்லியம் கோட்டை

(ஆ) புனித டேவிட் கோட்டை

(இ) புனித ஜார்ஜ் கோட்டை

(ஈ) இவற்றில் எதுவுமில்லை

கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. இந்தியாவில் இருப்புப் பாதை போக்குவரத்து அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு __________

2. இந்தியாவின் “உள்ளாட்சி அமைப்பின் தந்தை” என்று அழைக்கப்படுபவர் _____________

3. 1919ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டம் மாகாணங்களில் __________ அறிமுகப்படுத்தியது.

4. நகராட்சி உருவாவதற்குப் பொறுப்பாக இருந்தவர் __________

5. __________ இல் பிரான்சிஸ் டே மற்றும் ஆண்ட்ரூ கோகன் ஆகியோர் மதராசபட்டினத்தில் ஒரு தொழிற்சாலை மற்றும் வர்த்தக நிறுவனத்தை நிறுவுவதற்கு அனுமதி பெற்றனர்.

பொருத்துக:

1. பம்பாய் – சமய மையம்

2. இராணுவ குடியிருப்புகள் – மலை வாழிடங்கள்

3. கேதர்நாத் – பண்டைய நகரம்

4. டார்ஜிலிங் – ஏழு தீவு

5. மதுரை – கான்பூர்

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக:

1. இந்தியாவில் வரலாற்றுக்கு முந்தைய காலங்களிலிருந்து நகரங்கள் செழித்து வளர்ந்தன.

2. பிளாசிப்போருக்குப் பின்னர் ஆங்கிலேயர்கள் அரசியல் ஆதிக்கம் பெற்றனர்.

3. புனித வில்லியம் கோட்டை சென்னையில் அமைந்துள்ளது.

4. குடியிருப்புகளில் இராணுவ வீரர்கள் வாழத் தொடங்கினர்.

5. மதராஸ் 1998இல் அதிகாரப்பூர்வமாக சென்னை என மறு பெயரிடப்பட்டது.

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

1. கூற்று: இந்தியா பிரிட்டனின் வேளாண்மை குடியேற்றமாக மாறியது.

காரணம்: பிரிட்டிஷாரின் ஒரு வழியிலான சுதந்திரமான வர்த்தகக் கொள்கை மற்றும் தொழிற்துறை புரட்சி இந்திய உள்நாட்டு தொழில்களை அழித்தன.

(அ) கூற்று சரி மற்றும் காரணம் தவறு

(ஆ) கூற்று தவறு மற்றும் காரணம் சரி

(இ) கூற்று சரி மற்றும் காரணம் கூற்றை விளக்குகிறது

(ஈ) கூற்று சரி மற்றும் காரணம் கூற்றை விளக்கவில்லை

2. பின்வரும் எந்த அறிக்கை/அறிக்கைகள் உண்மையற்றவை?

i) ஸ்ரீரங்க ராயலு ஆங்கிலேயர்களுக்கு மதராசபட்டணத்தை மானியமாக வழங்கினார்.

ii) டே மற்றும் கோகன் ஆகிய இருவரும் புனித ஜார்ஜ் கோட்டை கட்டியதற்கு பொறுப்பானவர்கள்.

iii) 1969ஆம் ஆண்டில் மெட்ராஸ் மாநிலம் தமிழ்நாடு என மறுபெயரிடப்பட்டது.

(அ) i மட்டும்

(ஆ) i மற்றும் ii

(இ) ii மற்றும் iii

(ஈ) iii மட்டும்

3. கூற்று: ஆங்கிலேயர்கள் தங்கள் மாற்று தலைநகரங்களை மலைப்பாங்கான பகுதிகளில் அமைத்தனர்.

காரணம்: அவர்கள் இந்தியாவில் கோடைக்காலத்தில் வாழ்வது கடினம் என உணர்ந்தனர்.

(அ) கூற்று சரி மற்றும் காரணம் தவறு

(ஆ) கூற்று தவறு மற்றும் காரணம் சரி

(இ) கூற்று சரி மற்றும் காரணம் கூற்றை விளக்குகிறது

(ஈ) கூற்று சரி மற்றும் காரணம் கூற்றை விளக்கவில்லை

1. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)

1. ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோ 2. மேற்கண்ட அனைத்தும் 3. மேற்கண்ட அனைத்தும்

4. வர்த்தகத்திற்காக 5. மதராஸ் 6. புனித ஜார்ஜ் கோட்டை

கோடிட்ட இடங்களை நிரப்புக: (விடைகள்)

1. (1853) 2. ரிப்பன் 3. இரட்டை ஆட்சி 4. சர் ஜோசியா சைல்டு 5. (1639)

பொருத்துக: (விடைகள்)

1. பம்பாய் – ஏழு தீவு

2. இராணுவ குடியிருப்புகள் – கான்பூர்

3. கேதர்நாத் – சமய மையம்

4. டார்ஜிலிங் – மலை வாழிடங்கள்

5. மதுரை – பண்டைய நகரம்

சரியா தவறா எனக் குறிப்பிடுக: (விடைகள்)

1. சரி

2. சரி

3. தவறு

சரியான விடை: புனித வில்லியம் கோட்டை வங்காளத்தில் அமைந்துள்ளது.

4. சரி

5. தவறு

சரியான விடை: மதராஸ் 1996 ஜீலை 17 இல் அதிகாரப்பூர்வமாக சென்னை என மறுபெயரிடப்பட்டது.

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றைத் தேர்வு செய்க:

1. கூற்று சரி மற்றும் காரணம் கூற்றை விளக்குகிறது.

2. i மட்டும்

3. கூற்று சரி மற்றும் காரணம் கூற்றை விளக்குகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!