Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
MCQ Questions

ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள் 8th Social Science Lesson 18 Questions in Tamil

8th Social Science Lesson 18 Questions in Tamil

18. ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள்

இந்தியாவில் உள்ள நகரங்களை எவ்வாறு வகைப்படுத்தலாம்?

1. பண்டைய கால நகரங்கள் 2. இடைக்கால நகரங்கள்

3. துறைமுக நகரங்கள் 4. நவீன கால நகரங்கள்

A) 1, 2, 3 B) 2, 3, 4 C) 1, 2, 4 D) 1, 3, 4

(குறிப்பு: இந்தியாவில் வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்தே நகரங்கள் செழித்து வளர்ந்தன.)

கீழ்க்கண்டவற்றுள் புகழ்பெற்ற பண்டையக்கால நகரங்கள் எவை?

1. ஹரப்பா 2. மொகஞ்சதாரோ 3. வாரணாசி

4. அலகாபாத் 5. மதுரை

A) அனைத்தும் B) 1, 2, 5 C) 1, 2, 4, 5 D) 1, 2

(குறிப்பு: பண்டைய காலங்களில் மன்னரின் குடியிருப்புப் பகுதிகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நகரங்கள் தோன்றியதோடு, அவற்றின் அமைப்பு வர்த்தகத்திற்கு ஏற்றார்போல் கடல் மற்றும் ஆறுகளை அடைவதற்கு ஏற்றதாக இருந்தது.)

கூற்று 1: இடைக்காலத்தில் பெரும்பாலான நகரங்கள் மாநிலம் மற்றும் நாட்டின் தலைநகரங்களாக வளர்ந்தன.

கூற்று 2: டெல்லி, ஹைதராபாத், ஜெய்ப்பூர், லக்னோ, ஆக்ரா மற்றும் நாக்பூர் ஆகியவை இடைக்கால நகரங்களில் முக்கியமானவை ஆகும்.

A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

B) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

C) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

___________ நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆங்கிலேயர்களின் கொள்கைகள் நகரமயமாக்கலுக்கு எதிராக இருந்தது.

A) 15 B) 16 C) 17 C) 18

(குறிப்பு: பின்னர் ஆங்கிலேயர்கள் பின்பற்றிய பொருளாதாரக் கொள்கைகள் இந்தியாவின் பொருளாதாரத்தை விரைவாக ஒரு காலனித்துவப் பொருளாதாரமாக மாற்றுவதற்கும் நகரங்களின் வளர்ச்சிக்கும் வழிவகுத்தன.)

கூற்று: பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் பழைய உற்பத்தி நகரங்களான டாக்கா, முர்ஷிதாபாத், சூரத் மற்றும் லக்னோ போன்றவை முந்தைய முக்கியத்துவத்தை இழந்தன.

காரணம்: பிரிட்டிஷாரின் ஒரு வழியிலான சுதந்திரமான வர்த்தகத்தின் விளைவாக இந்திய உற்பத்தித் தொழில்கள் அழிக்கப்பட்டன.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று காரணம் இரண்டும் சரி ஆனால் சரியான விளக்கமல்ல

D) கூற்று காரணம் இரண்டும் சரி மற்றும் சரியான விளக்கம்.

(குறிப்பு: பிரிட்டிஷ் ஆட்சியில், பல நூற்றாண்டுகளாக நாகரிக உலகின் சந்தைகளில் கோலோச்சியிருந்த இந்தியாவின் நகர்ப்புற கைவினைத் தொழில்களில் திடீர் சரிவு ஏற்பட்டது.)

இந்தியாவில் இருப்புப் பாதை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு ___________.

A) 1824 B) 1852 C) 1853 D) 1856

(குறிப்பு: இரயில்வே அறிமுகப்படுத்தப்பட்டதன் விளைவாக வர்த்தகப் பாதைகள் திசை திருப்பப்பட்டு ஒவ்வொரு ரயில் நிலையமும் மூலப்பொருள்களை ஏற்றுமதி செய்யும் மையமாக மாறியது.)

தவறான கூற்றைத் தேர்ந்தெடு.

A) இந்திய பொருளாதாரம் காலனிய பொருளாதாரமாக மாறியதால் உற்பத்தியாளர்களின் சந்தையாகவும் தொழிற்சாலைகளுக்கு கச்சாப் பொருட்களை வழங்குமிடமாகவும் மாறியதோடு பல நகரங்களில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் வணிகத்தளத்தை கடுமையாக பாதித்தது.

B) மன்னர்களின் அதிகாரங்கள் படிப்படியாக சரியத் தொடங்கியதால் அவர்களது ஆட்சியுடன் தொடர்புடைய நகரங்களின் அழிவுக்கு அது வழிவகுத்தது.

C) ஏகாதிபத்திய நகரமாக இருந்த ஆக்ரா 18ஆம் நூற்றாண்டில் பெரும் அழிவை சந்தித்தது.

D) நாட்டின் ஒவ்வொரு மூலைமுடுக்கிலும் சென்றடைய இரயில்வே வழிவகுத்ததால் நாட்டின் கிராமங்களிலுள்ள பாரம்பரிய தொழில்கள் அடியோடு நசிந்தன.

(குறிப்பு: ஏகாதிபத்திய நகரமாக இருந்த ஆக்ரா 19ஆம் நூற்றாண்டின் முதல் காலாண்டில் பெரும் அழிவை சந்தித்தது.)

சரியான இணையைத் தேர்ந்தெடு.

1. மதராஸ் – 1639

2. பம்பாய் – 1661

3. கல்கத்தா – 1680

A) அனைத்தும் சரி

B) 1, 3 சரி

C) 2, 3 சரி

D) 1, 2 சரி

(குறிப்பு: கல்கத்தா நகரம் 1690 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. மேற்கண்ட இடங்கள் அனைத்தும் முன்னர் மீன்பிடித்தல் மற்றும் நெசவு தொழில் செய்யும் கிராமங்களாகும். இங்கு பிரிட்டிஷார் வீடுகள், கடைகள் மற்றும் தேவாலயங்களைக் கட்டியதோடு வணிக மற்றும் நிர்வாக தலைமையகத்தையும் அமைத்தனர்.)

சரியான கூற்றைத் தேர்ந்தெடு.

1. 18 ஆம் நூற்றாண்டின் மையப்பகுதியில் மாற்றத்தின் ஒரு புதிய காலகட்டம் தோன்றியது.

2. 1757 ஆம் ஆண்டு பிளாசிப் போருக்குப் பின்னர் ஆங்கிலேயர்கள் படிப்படியாக அரசியல் ஆதிக்கம் பெற்றதால் ஆங்கில கிழக்கிந்திய நிறுவனத்தின் வர்த்தகம் விரிவடைந்தது.

3. 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கல்கத்தா, பம்பாய் மற்றும் மதராஸ் ஆகியவை பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் மாகாண நகரங்களாக முக்கியத்துவம் பெற்றன.

A) அனைத்தும் சரி

B) 1, 2 சரி

C) 2, 3 சரி

D) 1, 3 சரி

நிர்வாக நோக்கத்திற்காக காலனித்துவ இந்தியா எத்தனை மாகாணங்களாக பிரிக்கப்பட்டன?

A) 2 B) 3 C) 4 D) 5

(குறிப்பு: கல்கத்தா, பம்பாய், மதராஸ் ஆகியவை மூன்று மாகாணங்கள் ஆகும்.)

கீழ்க்கண்ட எவற்றின் காரணமாக 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நகரமயமாக்கலில் புதிய போக்கு தொடங்கியது?

1. சூயஸ் கால்வாய் திறப்பு

2. நீராவிப் போக்குவரத்து அறிமுகம்

3. ரயில்வே சாலைகள் அமைத்தல்

4. துறைமுகங்கள், தொழிற்சாலைகள் வளர்ச்சி

5. நிலக்கரி சுரங்கம்

6. வங்கிப்பணி

A) அனைத்தும் B) 1, 2, 3 C) 2, 3, 5 D) 1, 3, 4, 5

(குறிப்பு: கப்பல் போக்குவரத்து மற்றும் காப்பீடு வளர்ச்சி, தேயிலைத் தோட்டம் போன்ற வர்த்தக பிணைப்புகளில் ஏற்பட்ட மாற்றம் நகர்ப்புற மையங்களின் வளர்ச்சியில் பிரதிபலித்தது.)

அதிக மக்கள் தொகை அடர்த்தியோடு உணவு உற்பத்தியல்லாத தொழில்களில் ஈடுபடுவதும், நன்கு கட்டமைக்கப்பட்ட சூழலில் வாழ்வதுமான பகுதி___________ எனப்படும்.

A) கிராமப்புற பகுதி

B) நகர்ப்புற பகுதி

C) துறைமுக வாழ்விடங்கள்

D) மலை வாழிடங்கள்

சரியான இணையைத் தேர்ந்தெடு.

1. புனித ஜார்ஜ் கோட்டை – சென்னை

2. புனித வில்லியம் கோட்டை – கடலூர்

A) அனைத்தும் சரி

B) 1 மட்டும் சரி

C) 2 மட்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு: புனித வில்லியம் கோட்டை – கல்கத்தா)

கீழ்க்கண்டவற்றுள் இராணுவ குடியிருப்பு நகரங்கள் எவை?

1. ஸ்ரீநகர் 2. கான்பூர் 3. டெல்லி 4. லாகூர்

A) 1, 2, 3 B) 2, 3 C) 2, 4 D) 1, 3, 4

கூற்று 1: ஆங்கிலேயர் தங்கள் இராணுவ பலத்தால் இந்திய பகுதிகளையும், அரசியல் அதிகாரத்தையும் கைப்பற்றினர்.

கூற்று 2: ஆங்கிலேயர்களுக்கு வலுவான இராணுவ முகாம்கள் தேவைப்பட்டதால் இராணுவக் குடியிருப்புகளை ஏற்படுத்தினர்.

A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

B) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

C) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

(குறிப்பு: இராணுவ குடியிருப்புகள் முற்றிலும் புதிய நகர்ப்புற மையங்களாக இருந்தன.)

____________ முகலாய பொழுதுபோக்கு மையமாக விளங்கியது.

A) கேதர்நாத்

B) பத்ரிநாத்

C) ஸ்ரீநகர்

D) சிம்லா

(குறிப்பு: பத்ரிநாத், கேதர்நாத் ஆகியவை இந்துசமய மையங்களாக விளங்கின.)

ஆங்கிலேயர்கள் கல்கத்தா மற்றும் டெல்லிக்கு மாற்று தலைநகரங்களாக முறையே ____________ ஐ ஏற்படுத்தினர்.

A) ஸ்ரீநகர், டார்ஜிலிங்

B) டேராடூன், டார்ஜிலிங்

C) டார்ஜிலிங், டேராடூன்

D) டார்ஜிலிங், ஸ்ரீநகர்

(குறிப்பு: குளிர்ந்த காலநிலையிலிருந்து வந்த ஆங்கிலேயர்கள் இந்தியாவில் கோடை காலத்தில் வாழ்வது கடினம் என உணர்ந்தனர். அவர்களுக்கு இந்திய மலைகளின் குளிர்ந்த காலநிலை பாதுகாப்பானதாக மற்றும் நன்மை அளிப்பதாக இருந்தது.)

கூர்க்கர்களுடன் நடைபெற்ற போரின் போது ஆங்கிலேயர்களால் __________ நிறுவப்பட்டது.

A) ஸ்ரீநகர்

B) டார்ஜிலிங்

C) டேராடூன்

D) சிம்லா

(குறிப்பு: கூர்க்கர் போர் 1814 – 16 ஆண்டுகளில் நடைபெற்றது.)

டார்ஜிலிங் பகுதியானது சிக்கிம் ஆட்சியாளர்களிடமிருந்து _________ ஆண்டு கைப்பற்றப்பட்டது.

A) 1828 B) 1830 C) 1834 D) 1835

(குறிப்பு: மலைப்பிரதேசங்கள் சுகாதார மையமாக (படையினர் ஓய்வெடுப்பதற்கும், நோய்களிலிருந்து மீள்வதற்கான இடங்கள்) வளர்ச்சி பெற்றன.)

இரயில்வே நகரங்கள் _________ பகுதிகளில் அமைந்திருந்தன.

A) கடற்கரை

B) பள்ளத்தாக்கு

C) சமவெளி

D) பாலைவனம்

(குறிப்பு: ஆங்கிலேயர்களால் இரயில்வே 1853இல் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு இரயில்வே நகரங்களும் ஒருவகை நகர்ப்புற குடியேற்றங்களாக ஏற்படுத்தப்பட்டன.)

சரியான இணையைத் தேர்ந்தெடு. (ஆங்கிலேயர் ஆட்சியில் உள்ளாட்சி மன்ற வளர்ச்சியின் நிலைகள்)

1. முதல்கட்டம்: 1688-1882

2. இரண்டாம் கட்டம்: 1882-1920

3. மூன்றாம் கட்டம்: 1920-1942

A) அனைத்தும் சரி

B) 1, 2 சரி

C) 1, 3 சரி

D) 2, 3 சரி

(குறிப்பு: மூன்றாம் கட்டம்: 1920-1950 )

இந்தியாவில் நகராட்சி அரசாங்கம்_________மாநகராட்சி ஏற்படுத்தப்பட்டதன் மூலம் உருவானது.

A) மும்பை

B) கல்கத்தா

C) மதராஸ்

D) டெல்லி

(குறிப்பு: மதராஸ் மாநகராட்சி 1688 ஆம் ஆண்டு ஒரு மேயருடன் ஏற்படுத்தப்பட்டது.)

கிழக்கிந்திய கம்பெனியின் இயக்குநர்களில் ஒருவரான _________ என்பவர் மாநகராட்சி உருவானதற்கு காரணமாக இருந்தார்.

A) மேயோ பிரபு

B) கர்சன் பிரபு

C) சர் ஜோசியா சைல்டு

D) இர்வின் பிரபு

வடமேற்கு எல்லைப்புற மாகாணங்கள், அயோத்தி மற்றும் பம்பாயில் நகராட்சிகள் _________ ஆண்டு சட்டப்படி அமைக்கப்பட்டன.

A) 1833 B) 1845 C) 1850 D) 1859

யாருடைய புகழ்பெற்ற தீர்மானம் உள்ளாட்சி அரசாங்கத்தின் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை வழங்குவதை நோக்கமாக கொண்டிருந்தது.

A) கர்சன் பிரபு

B) இராபர்ட் கிளைவ்

C) மேயோ பிரபு

D) ரிப்பன் பிரபு

(குறிப்பு: 1870 ஆம் ஆண்டு மேயோ பிரபுவின் தீர்மானம் இயற்றப்பட்டது.)

யாருடைய தீர்மானம் ‘உள்ளாட்சி அரசாங்கத்தின் மகாசாசனம்’ என கருதப்படுகிறது?

A) கர்சன் பிரபு

B) இராபர்ட் கிளைவ்

C) மேயோ பிரபு

D) ரிப்பன் பிரபு

(குறிப்பு: உள்ளாட்சி அரசாங்கம் தொடர்பான ரிப்பன் பிரபுவின் தீர்மானம் உள்ளாட்சி அரசாங்கத்தின் வரலாற்றில் ஒரு மைல்கல்லாக விளங்கியது. எனவே ரிப்பன் பிரபு இந்தியாவின் ‘உள்ளாட்சி அமைப்பின் தந்தை’ என்று அழைக்கப்படுகிறார்.)

மூன்று மாகாண நகரங்களில் _________ ஆண்டின் பட்டயச் சட்டம் நகராட்சி நிர்வாகத்தை நிறுவியது.

A) 1793 B) 1813 C) 1833 D) 1853

மாகாண சுயாட்சியை ________ ஆண்டு இந்திய அரசுச் சட்டம் அறிமுகப்படுத்தியது.

A) 1919 B) 1923 C) 1935 D) 1938

(குறிப்பு: மாகாணங்களில் இரட்டை ஆட்சியை 1919 ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டம் அறிமுகப்படுத்தியது.)

_________ நூற்றாண்டின் முடிவில் நாடாளுமன்றத்தின் ஒரு சட்டம் தலைமை ஆளுநருக்கு மாகாண நகரங்களில் அமைதியை ஏற்படுத்த நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரத்தை அளித்தது.

A) 16 B) 17 C) 18 D) 19

(குறிப்பு: மாகாணங்களின் அரசாங்க அமைப்பு பெரிய மாநகராட்சிகள் போல தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், சுதந்திரமான வலிமை பெற்ற நிர்வாக அமைப்பு, கணக்குகளை சரிபார்க்க போதுமான ஏற்பாடுகள், பாதுகாப்பு மற்றும் செயல்திறனுக்கான சட்டப்பூர்வ பாதுகாப்புகள், சுகாதாரம், நீர் வழங்கல் மற்றும் வருவாய் வசூல் போன்ற முக்கிய அம்சங்களைக் கொண்டுள்ளது.)

ஆங்கில கிழக்கிந்திய வணிகக் குழு ___________ ஆண்டு தொடங்கப்பட்டது.

A) கி.பி. 1597

B) கி.பி. 1600

C) கி.பி. 1602

D) கி.பி. 1604

(குறிப்பு: ஆங்கில கிழக்கிந்திய வணிகக் குழு தொடங்கப்பட்டு பன்னிரெண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மேற்கு கடற்கரையில் சூரத்தில் ஒரு தொழிற்சாலை அமைக்கப்பட்டது.)

மசூலிப்பட்டின கழக உறுப்பினர் மற்றும் ஆர்மகான் தொழிற்சாலையின் தலைவரான பிரான்சிஸ் டே _____________ ஆண்டு ஒரு புதிய குடியேற்றத்திற்கான தளத்தை தேர்ந்தெடுக்கும் நோக்கில் ஒரு ஆய்வு பயணத்தை மேற்கொண்டனர்.

A) 1597 B) 1612 C) 1628 D) 1637

(குறிப்பு: இந்த ஆய்வின் முடிவில் பிரான்சிஸ்டே மதராசப்பட்டினத்தை கண்டறிந்தார்.)

கூவம் நதிக்கும் எழும்பூருக்கும் இடையில் ஒரு சிறு பகுதி நிலத்தை ___________ என்பவர் பிரிட்டிஷாருக்கு வழங்கினார்.

A) பெரி திம்மப்பா

B) ஆன்ட்ரு கோகன்

C) தமர்லா வெங்கடபதி

D) ஆர்மகான்

(குறிப்பு: தமர்லா என்பவர் சந்திரகிரி மன்னரின் பிரதிநிதியாவார். திருப்பதிக்கு மேற்கே 12 கி.மீ தூரத்தில் சந்திரகிரி அமைந்திருந்தது.)

மதராசப்பட்டினத்திற்கான ஒப்பந்த பத்திரம் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் பிரான்சிஸ் டே அவர்களால் ___________ ஆண்டு கையெழுத்திடப்பட்டது.

A) 1637 B) 1638 C) 1639 D) 1640

(குறிப்பு: பிரான்சிஸ் டே உடன் மொழிபெயர்ப்பாளரான பெரிதிம்மப்பா மற்றும் உயர் அலுவலர் ஆண்ட்ரு கோகன் (மசூலிப்பட்டினத் தொழிற்சாலையின் தலைவர்) ஆகியோர் உடனிருந்தனர்.)

பிரான்சிஸ் டே மற்றும் ஆண்ட்ரு கோகன் ஆகியோருக்கு வணிக தளத்துடன் கூடிய தொழிற்சாலைக்கும் மதராசப்பட்டினத்தில் ஒரு கோட்டையை அமைப்பதற்கும் ___________ ஆண்டில் அனுமதி வழங்கப்பட்டது.

A) 1638 B) 1639 C) 1640 D) 1641

(குறிப்பு: இங்கு அமைக்கப்பட்ட கோட்டை குடியிருப்பு பின்னர் புனித ஜார்ஜ் குடியிருப்பு எனப் பெயர் பெற்றது.)

கூற்று 1: புனித ஜார்ஜ் குடியிருப்பு வெள்ளை நகரம் எனவும் குறிப்பிடப்படுகிறது.

கூற்று 2: புனித ஜார்ஜ் குடியிருப்பின் அருகாமையில் உள்ள கிராமங்களில் மக்கள் வசித்த பகுதி கருப்பு நகரம் எனவும் அழைக்கப்பட்டது.

A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

B) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

C) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

(குறிப்பு: மதராஸ் வெள்ளை நகரம் மற்றும் கருப்பு நகரம் எனவும் சேர்த்து அழைக்கப்பட்டது.)

தமர்லா வெங்கடபதி, சந்திரகிரியின் அரசரான ___________ன் கட்டுப்பாட்டில் இருந்தார்.

A) வெங்கடபதி ராயலு

B) ஸ்ரீரங்கராயலு

C) சென்னப்ப நாயக்கர்

D) செல்லமுத்து சேதுபதி

(குறிப்பு: வெங்கடபதியை தொடர்ந்து 1642 இல் ஸ்ரீரங்க ராயலு பதவிக்கு வந்தார்.)

ஸ்ரீரங்கராயலு ஆங்கிலேயருக்கு ___________ ஆண்டு ஸ்ரீரங்கராயபட்டினம் எனும் புதிய மானியத்தை வழங்கினார்.

A) 1643 B) 1644 C) 1645 D) 1646

(குறிப்பு: வெங்கடபதி அவரது தந்தை சென்னப்ப நாயக்கர் பெயரால் ஆங்கிலேயர்களின் புதிய கோட்டை மற்றும் குடியேற்றங்கள் சென்னப்பட்டினம் என்று அழைக்கப்பட வேண்டும் என விரும்பினார். ஆனால் ஆங்கிலேயர் இரண்டு ஐக்கிய நகரங்களையும் மதராசபட்டினம் என்று அழைக்க விரும்பினார்கள்.)

சந்திரகிரியை சேர்ந்த___________அரண்மனையால் பிரான்சிஸ் டேவிற்கு 1639 இல் தொழிற்சாலை கட்டுவதற்காக நிலம் மானியமாக வழங்கப்பட்டது.

A) சென்னப்ப நாயக்கர் மஹால்

B) ராஜா மஹால்

C) ஸ்ரீரங்கா மஹால்

D) வெங்கடபதி மஹால்

(குறிப்பு: இப்பகுதி பின்னர் மதராஸ் என பெயரிடப்பட்டது.)

புனித ஜார்ஜின் தினமான _________அன்று மதராசின் முதல் தொழிற்சாலை கட்டிமுடிக்கப்பட்டது.

A) ஏப்ரல் 14, 1639

B) மே 28, 1640

C) ஏப்ரல் 23, 1640

D) ஏபரல் 12, 1640

(குறிப்பு: இந்த முதல் தொழிற்சாலை புனித ஜார்ஜ் கோட்டை என பெயரிடப்பட்டது.)

புனித ஜார்ஜ் கோட்டை ___________ ஆண்டு வரை கிழக்கிந்திய கம்பெனியின் முதன்மை குடியிருப்பாக இருந்தது.

A) 1762 B) 1764 C) 1768 D) 1774

(குறிப்பு: புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டதற்கு டே மற்றும் கோகன் ஆகிய இருவரும் கூட்டாக பொறுப்பாவார்கள்.)

சரியான கூற்றைத் தேர்ந்தெடு.

1. புனித ஜார்ஜ் கோட்டைக்குள் கடல் நுழைவாயில் வழியாக நுழைந்தால் முதலில் காணப்படும் கட்டடம் தமிழக அரசின் இருக்கையாகும்.

2. இக்கட்டடம் 1690 மற்றும் 1702 க்கு இடையில் கட்டப்பட்டது.

3. இக்கோட்டை இந்தியாவில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட மிகப் பழமையான கட்டுமானங்களில் ஒன்று.

A) அனைத்தும் சரி

B) 1, 2 சரி

C) 2, 3 சரி

D) 1, 3 சரி

(குறிப்பு: தமிழக அரசின் இருக்கை காணப்படும் கட்டடம் 1694 மற்றும் 1732 க்கு இடையில் கட்டப்பட்டதாகும்.)

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் சென்னை மாகாணம் என்பது கீழ்க்கண்ட எந்த பகுதிகளை உள்ளடக்கியது?

1. தமிழ்நாடு 2. லட்சத்தீவு 3. வடக்கு கேரளா

4. ராயலசீமா 5. கடலோர ஆந்திரா 6. கர்நாடக மாவட்டங்கள்

7. தெற்கு ஒரிசா

A) அனைத்தும் B) 1, 3, 4, 5 C) 1, 2, 4, 6 D) 1, 3, 5, 6

கூற்று 1: மும்பையில் உள்ள டல்ஹெளசி சதுக்கம் மற்றும் மதராசில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டை ஆகியவை மத்திய வணிகப்பகுதிக்கு அருகில் இருந்தன.

கூற்று 2: இங்குள்ள கட்டிடங்கள் பிரிட்டிஷ் வகையிலான ரோமானிய பாணிகளில் அமைந்திருந்தன.

A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

B) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

C) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

(குறிப்பு: கல்கத்தாவில் உள்ள டல்ஹெளசி சதுக்கம் மற்றும் மதராசில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டை ஆகியவை மத்திய வணிகப்பகுதிக்கு அருகில் இருந்தன.)

மதராஸ் மாநிலமானது _________ ஆண்டு கொண்டுவரப்பட்ட மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ் ஆந்திரா, கேரளா மற்றும் மைசூர் மாநிலங்களாக அமைக்கப்பட்டது.

A) 1953 B) 1954 C) 1956 D) 1958

(குறிப்பு: 1947ஆம் ஆண்டு சுதந்திரத்திற்குப் பிறகு மதராஸ் மாகாணமானது மதராஸ் மாநிலமாக மாறியது.)

____________ ஆண்டு மதராஸ் அதிகாரப்பூர்வமாக சென்னை என மறுபெயரிடப்பட்டது.

A) 17 ஜூன் 1969

B) 17 ஜூலை 1969

C) 17 ஜூலை 1996

D) 17 ஜூன் 1996

(குறிப்பு: 1969இல் மதராஸ் மாநிலம் தமிழ்நாடு என மறுபெயரிடப்பட்டது.)

பம்பாய் ________ ஆண்டிலிருந்து போர்த்துகீசியர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது.

A) 1524 B) 1529 C) 1532 D) 1534

(குறிப்பு: பம்பாய் ஏழு தீவுகளை கொண்டதாகும்.)

இங்கிலாந்து மன்னர் இரண்டாம் சார்லஸ் போர்த்துகீசிய மன்னரின் சகோதரியை திருமணம் செய்துகொண்டதற்கு பம்பாய் பகுதியை __________இல் சீதனமாகப் பெற்றார்.

A) 1582 B) 1594 C) 1661 D) 1671

(குறிப்பு: இரண்டாம் சார்லஸ் இப்பகுதியை கிழக்கிந்திய வணிகக் குழுவிற்கு குத்தகைக்கு அளித்தார்.)

ஆங்கில கிழக்கிந்திய நிறுவனம் __________ ஆண்டு அதன் தலைமையகத்தை சூரத்திலிருந்து பம்பாய்க்கு மாற்றியது.

A) 1661 B) 1673 C) 1682 D) 1687

ஆங்கில வணிகர்கள் சுதநூதி, கல்கத்தா மற்றும் கோவிந்தபூர் மீது ஜமீன்தாரி உரிமைகளைப் _________ ஆண்டு பெற்றனர்.

A) 1692 B) 1694 C) 1696 D) 1698

(குறிப்பு: ஆங்கில கிழக்கிந்திய நிறுவனம் கல்கத்தாவில் வில்லியம் கோட்டையை நிறுவியது.)

ஆங்கில வணிகர்கள் சுதநூதியில் __________ ஆண்டு ஒரு குடியேற்றத்தை நிறுவினர்.

A) 1688 B) 1690 C) 1692 D) 1698

ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வருகை தந்தது

A) வர்த்தகத்திற்காக

B) தங்கள் சமயத்தைப் பரப்புவதற்காக

C) பணி புரிவதற்காக

D) ஆட்சி செய்வதற்காக

(குறிப்பு: ஐரோப்பியர்களின் வருகை நகரங்களின் வளர்ச்சியில் புதிய மாற்றங்களைக் கொண்டு வந்தது.)

பொருத்துக.

1. பம்பாய் i) சமய மையம்

2. இராணுவ குடியிருப்புகள் ii) மலை வாழிடங்கள்

3. கேதர்நாத் iii) பண்டைய நகரம்

4. டார்ஜிலிங் iv) ஏழு தீவு

5. மதுரை v) கான்பூர்

A) ii i v iv iii

B) iv v i ii iii

C) v iii i ii iv

D) iv i iii ii v

கூற்று: ஆங்கிலேயர்கள் தங்கள் மாற்று தலைநகரங்களை மலைப்பாங்கான பகுதிகளில் அமைத்தனர்.

காரணம்: அவர்கள் இந்தியாவில் கோடைக்காலத்தில் வாழ்வது கடினம் என உணர்ந்தனர்.

A) கூற்று சரி மற்றும் காரணம் தவறு

B) கூற்று தவறு மற்றும் காரணம் சரி

C) கூற்று சரி மற்றும் காரணம் கூற்றை விளக்குகிறது

D) கூற்று சரி மற்றும் காரணம் கூற்றை விளக்கவில்லை

ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட கடலோர நகரம்/நகரங்கள்

A) சூரத்

B) கோவா

C) பம்பாய்

D) மேற்கண்ட அனைத்தும்

(குறிப்பு: ஆங்கிலேயர் காலத்தில் புதிதாக வளர்ச்சிபெற்ற நகரங்கள், மலை நகரங்கள், தொழில் நகரங்கள், நீதிமன்ற நகரங்கள், இருப்புப்பாதை நகரங்கள், இராணுவ குடியிருப்புகள் மற்றும் நிர்வாக நகரங்களாக விளங்கின.)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!