Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

ஆங்கிலேய ஆட்சிக்கு தொடக்ககால எதிர்ப்புகள் Online Test 11th History Lesson 13 Tamil

ஆங்கிலேய ஆட்சிக்கு தொடக்ககால எதிர்ப்புகள் Online Test 11th History Lesson 13 Tamil

Congratulations - you have completed ஆங்கிலேய ஆட்சிக்கு தொடக்ககால எதிர்ப்புகள் Online Test 11th History Lesson 13 Tamil. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
  1. ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி பலருடைய ஆட்சிப்பகுதிகளை வெற்றி கொண்டதும் தங்களது எல்லையை விரிவுப்படுத்திக்கொண்டே போனதும் தொடர்ச்சியான பல கிளர்ச்சிகளுக்கு வழிவகுத்தன.
  2. வரலாற்றாசிரியர்கள் இதை முதல் இந்திய சுதந்திரப்போர் என்று குறிப்பிடுகிறார்கள்.
A
(i) சரி
B
(ii) சரி
C
(i) மற்றும் (ii) சரி
D
(i) மற்றும் (ii) தவறு
Question 1 Explanation: 
விளக்கம்: ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி பலருடைய ஆட்சிப்பகுதிகளை வெற்றி கொண்டதும் தங்களது எல்லையை விரிவுப்படுத்திக்கொண்டே போனதும் தொடர்ச்சியான பல கிளர்ச்சிகளுக்கு வழிவகுத்தன. அவர்களால் பதவியிலிருந்து நீக்கப்பட்ட மன்னர்கள் அல்லது அவர்களின் வாரிசுகள், தங்கள் ஆட்சிப்பகுதியிலிருந்து , பாளையக்காரர்கள் ஆகியோரால் இத்தகையை கிளர்ச்சிகள் ஏற்பட்டன. வரலாற்றாசிரியர்கள் இதைத் தொடக்க நிலை எதிர்ப்பு என்று குறிப்பிடுகிறார்கள்.
Question 2
மைசூர் எந்தப் பேரரசின் கீழ் நிலமானிய முறையில் இயங்கிய ஒரு சிறு அரசாக இருந்தது?
A
விஜயநகர்
B
சோழர்
C
சாளுக்கியர்
D
ராஷ்டிரக்கூடர்
Question 2 Explanation: 
விளக்கம்: ஹைதர் அலியின் எழுச்சி: மைசூர், விஜயநகரப் பேரரசின் கீழ் நிலமானிய முறையில் இயங்கிய ஒரு சிறு அரசாக இருந்தது. 1565இல் விஜயநகரப் பேரரசு வீழ்ந்ததற்குப் பிறகு உடையார் வம்சத்தினர் சுதந்திரமான ஆட்சியாளர் ஆயினர்.
Question 3
உடையார் வம்சத்தினரின் தலைநகரம் மைசூரிலிருந்து எங்கு மாற்றப்பட்டது?
A
தஞ்சாவூர்
B
ஸ்ரீரங்கப்பட்டினம்
C
திண்டுக்கல்
D
கோயம்புத்தூர்
Question 3 Explanation: 
விளக்கம்: ராஜா உடையார் 1578இல் அரியணை ஏறினார். 1610இல் தலைநகரம் மைசூரிலிருந்து ஸ்ரீரங்கப்பட்டணத்திற்கு மாற்றப்பட்டது. அப்போதிருந்து உடையார் வம்சத்தினரின் ஆட்சி தொடர்ந்தது.
Question 4
உடையார் அரசின் தளவாய் அல்லது முதன்மை அமைச்சராக நியமிக்கப்பட்டவர்?
A
திப்பு சுல்தான்
B
பாமன்ஷா
C
ஹைதர் அலி
D
ஃபதே முகம்மது
Question 4 Explanation: 
விளக்கம்: 1710இல் தளவாய் அல்லது முதன்மை அமைச்சராக நியமிக்கப்பட்ட ஹைதர் அலி அதிகாரத்தைக் கைப்பற்றும்வரை உடையார்களின் ஆட்சி நீடித்தது.
Question 5
கோலார் பகுதியின் கோட்டைக் காவற்படைத் தளபதியாக (பௌஜ்தார்) இருந்தவர்?
A
திப்பு சுல்தான்
B
பாமன்ஷா
C
ஹைதர் அலி
D
ஃபதே முகம்மது
Question 5 Explanation: 
விளக்கம்: ஹைதர் அலியின் தந்தை ஃபதே முகம்மது கோலார் பகுதியின் கோட்டைக் காவற்படைத் தளபதியாக (பௌஜ்தார்) இருந்தார். அவரது இறப்புக்குப் பின் ஹைதர் அலி தன் தலைமைப்பண்புகள் மூலம் படையின் உயர்பதவிகளை விரைவாக அடைந்தார்.
Question 6
ஃபதே ஹைதர் பகதூர்’ (வீரமும் வெற்றியும் கொண்ட சிங்கம்) என்ற பட்டம் பெற்றவர்?
A
திப்பு சுல்தான்
B
பாமன்ஷா
C
ஹைதர் அலி
D
ஃபதே முகம்மது
Question 6 Explanation: 
விளக்கம்: 1755க்குள் ஹைதர் அலி 100 குதிரைப்படை வீரர்களையும் 2000 காலாட்படை வீரர்களையும் நிர்வகிக்கும் அளவுக்கு அதிகாரம் படைத்த பொறுப்பைப் பெற்றிருந்தார். மைசூரில் இராணுவத்தில் ஏற்பட்ட கிளர்ச்சியை ஒடுக்கினார். மராத்தியர் ஆக்கிரமித்த மைசூர் அரசின் சில பகுதிகளை ஹைதர் மீட்டெடுத்தார். இதற்காக அவர் ‘ ஃபதே ஹைதர் பகதூர்’ (வீரமும் வெற்றியும் கொண்ட சிங்கம்) என்ற பட்டம் பெற்றார்.
Question 7
ஹைதர் ஆங்கிலேயருக்கு எதிராக யாருடன் கூட்டு சேர்ந்தார்?
A
டச்சுக்காரர்
B
டேனியர்கள்
C
பிரெஞ்சுக்காரர்
D
மராத்தியர்
Question 7 Explanation: 
விளக்கம்: 1760இல் ஹைதர் ஆங்கிலேயருக்கு எதிராக புதுச்சேரியில் இருந்த பிரெஞ்சுக்காரர்களுடன் கூட்டு சேர்ந்தார். ஆனால் அவர் தனது சொந்த மண்ணில் மராத்தியரால் உருவாக்கப்பட்ட சதித்திட்டத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. எனினும் ஹைதர் அதை வெற்றிகரமாக முறியடித்தார். அதற்குப் பிறகு அவரே நடைமுறையில் மைசூரின் உண்மையான ஆட்சியாளர் ஆனார்.
Question 8
கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
  1. 1770இல் மைசூர் அரசர் நஞ்சராஜா நஞ்சூட்டிக் கொல்லப்பட்டார்
  2. இந்த நிகழ்வுக்குப் பிறகு உடையார் வம்ச அரசர்கள் பெயரளவிலான ஆட்சியாளர்களாக ஆயினர்.
A
(i) சரி
B
(ii) சரி
C
(i) மற்றும் (ii) சரி
D
(i) மற்றும் (ii) தவறு
Question 8 Explanation: 
விளக்கம்: 1770இல் மைசூர் அரசர் நஞ்சராஜா நஞ்சூட்டிக் கொல்லப்பட்டார். அதில் ஹைதருக்குத் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகம் கிளம்பியது. இந்த நிகழ்வுக்குப் பிறகு உடையார் வம்ச அரசர்கள் பெயரளவிலான ஆட்சியாளர்களாக ஆயினர். ஹைதரே உண்மையான அரச அதிகாரத்துக்கு உரியவர் ஆனார்.
Question 9
  • கூற்று (கூ): கிழக்கிந்தியக் கம்பெனி திவானி உரிமையைப் பெற்ற பிறகு, தனது நிர்வாகத்துக்கு உட்பட்ட பகுதிகளைக் கூடுதல் கவனத்துடன் பாதுகாக்க வேண்டியிருந்தது.
  • காரணம் (கா): கம்பெனி போதுமான வலிமையுடன் இல்லாததால், இந்திய அரசுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவதைத் தவிர்த்து வந்தது.
A
கூற்று சரி; காரணம் கூற்றின் சரியான விளக்கம் ஆகும்.
B
கூற்று சரி; காரணம் தவறு
C
கூற்று மற்றும் காரணம் தவறானவை
D
கூற்று சரி; காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல
Question 9 Explanation: 
விளக்கம்: கிழக்கிந்தியக் கம்பெனி திவானி உரிமையைப் பெற்ற (வங்காளம், பீகார், ஒரிசா ஆகியவற்றில் முகலாய அரசுக்குப் பதிலாக வரி வசூலிக்கும் உரிமை) பிறகு, தனது நிர்வாகத்துக்கு உட்பட்ட பகுதிகளைக் கூடுதல் கவனத்துடன் பாதுகாக்க வேண்டியிருந்தது. கம்பெனி போதுமான வலிமையுடன் இல்லாததால், இந்திய அரசுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவதைத் தவிர்த்து வந்தது.
Question 10
நாடுகளை  சுற்றுவேலிக் கொள்கை மூலம்  அனுமதித்தவர்?
A
டல்ஹவுசி
B
வாரன் ஹேஸ்டிங்ஸ்
C
வெல்லெஸ்லி
D
லிட்டன்
Question 10 Explanation: 
விளக்கம்:ஒரு குறிப்பிட்ட பகுதியில் அதிகாரத்துக்கு உட்பட்ட இடங்களைத் தக்கவைத்துக்கொள்ள இடைப்பட்ட நாடுகளை (buffer states) வாரன் ஹேஸ்டிங்ஸ் சுற்றுவேலிக் கொள்கை மூலம் தொடர்ந்து அனுமதித்தார். எனினும் கம்பெனி கர்நாடக அரசியல் விவகாரங்களினால் ஈர்க்கப்பட்டது. நவாப் பதவிக்காகத் தொடர்ச்சியாக நடைபெற்ற மோதல்களே இதற்குக் காரணம். ஆங்கிலேய வணிகர்கள் இதை இந்திய அரசியலில் நேரடியாகத் தலையிடுவதற்கான ஒரு பெரிய வாய்ப்பாகக் கருதினார்கள். ஆனால் அவர்களின் முயற்சிக்கு ஹைதர் அலி, ஹைதராபாத் நிஜாம் ஆகிய வலிமைமிக்க சக்திகளிடமிருந்து அச்சுறுத்தல்கள் இருந்தன.
Question 11
முதலாம் மைசூர் போர் எந்த ஆண்டு நடைபெற்றது?
A
1767 முதல் 1769 வரை
B
1768 முதல் 1772 வரை
C
1769 முதல் 1774 வரை
D
1775 முதல் 1782 வரை
Question 11 Explanation: 
விளக்கம்: முதலாம் மைசூர் போர் 1767-69: மூன்றாம் கர்நாடகப் போரில் வங்காளத்திலிருந்து படைகளை வழிநடத்திய கர்னல் ஃபோர்டே 1759இல் மசூலிப்பட்டிணத்தைக் கைப்பற்றினார். இது ஜாலாபத் ஜங் உடனான உடன்படிக்கைக்கு வழிவகுத்தது. அவர் ‘வட சர்க்கார்கள்’ என அறியப்படும் கஞ்சம், விசாகப்பட்டினம், கோதாவரி, கிருஷ்ணா, குண்டூர் ஆகிய மாவட்டங்களை ஆங்கிலேயருக்கு விட்டுக்கொடுக்க வேண்டியிருந்தது.
Question 12
வட சர்க்கார்கள் ஆங்கிலேயர் வசம் ஆனதை  அங்கீகரிக்கும்  உடன்படிக்கை எது?
A
அலகாபாத் உடன்படிக்கை
B
பூனா உடன்படிக்கை
C
நாக்பூர் உடன்படிக்கை
D
பேசின் உடன்படிக்கை
Question 12 Explanation: 
விளக்கம்: வட சர்க்கார்கள் ஆங்கிலேயர் வசம் ஆனதை முகலாயப் பேரரசர் 1765இல் அலகாபாத் உடன்படிக்கை மூலம் அங்கீகரித்தார். ஆனால் 1766இல் ஆங்கிலேயர் இப்பகுதியைக் கையகப்படுத்தியபோது பிரச்சனை தோன்றியது.
Question 13
வட சர்க்கார் பகுதிகளை ஆங்கிலேயர் கையகப்படுத்த யாருடன் உடன்படிக்கை செய்து கொண்டனர்?
A
நிஜாம் அலி
B
சௌகத் அலி
C
முகமது அலி
D
பகதூர்ஷா
Question 13 Explanation: 
விளக்கம்: வட சர்க்கார் பகுதிகளை ஆங்கிலேயர் கையகப்படுத்த நிஜாம் அலி எதிர்ப்பு தெரிவிக்காமல் இருக்க வேண்டும் என்றும் அதற்குப் பதிலாக அவருக்கு எதிரிகளிடமிருந்து ஆபத்து வரும்போது ஆங்கிலேயர் உதவிக்கு வருவார்கள் என்றும் ஓர் உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த வாக்குறுதி மூலம் ஹைதர் அலிக்கு எதிராக நிஜாம் அலிக்கு உதவத் தாங்கள் தயாராக இருப்பதை உணர்த்தினார்கள். ஆங்கிலேயர் பின்னாட்களில் பின்பற்றிய துணைப்படைத்திட்டத்துக்கு இந்நடைமுறை காரணியாக அமைந்தது.
Question 14
  • கூற்று (கூ): நிஜாம் அலி ஆங்கிலேயருடன் உடன்படிக்கை செய்துகொண்டாலும், 1767இல் அவருக்கும் ஹைதர் அலிக்கும் இடையே ஓர் புரிந்துணர்வு உடன்பாடு ஏற்பட்டது.
  • காரணம் (கா): எனவே ஆங்கிலேயர் ஹைதருக்கு எதிரான போரை அறிவித்தார்கள்.
A
கூற்று சரி; காரணம் கூற்றின் சரியான விளக்கம் ஆகும்.
B
கூற்று சரி; காரணம் தவறு
C
கூற்று மற்றும் காரணம் தவறானவை
D
கூற்று சரி; காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல
Question 14 Explanation: 
விளக்கம்: நிஜாம் அலி ஆங்கிலேயருடன் உடன்படிக்கை செய்துகொண்டாலும், 1767இல் அவருக்கும் ஹைதர் அலிக்கும் இடையே ஓர் புரிந்துணர்வு உடன்பாடு ஏற்பட்டது. எனவே ஆங்கிலேயர் ஹைதருக்கு எதிரான போரை அறிவித்தார்கள். இது முதலாம் ஆங்கிலேய மைசூர் போர் அல்லது முதலாம் மைசூர் போர் என அறியப்படுகிறது.
Question 15
கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
  1. முதல் மைசூர் போரில்  பம்பாயிலிருந்து வந்த ஆங்கிலேயரின் ஒரு படை மேற்குக்கடற்கரையின் மங்களூரையும் அதைச் சுற்றியிருந்த பிற பகுதிகளையும் கைப்பற்றியது.
  2. பெங்களூரைக் கைப்பற்ற நினைத்த ஆங்கிலேயரின் முயற்சி வெற்றி பெறவில்லை.
A
(i) சரி
B
(ii) சரி
C
(i) மற்றும் (ii) சரி
D
(i) மற்றும் (ii) தவறு
Question 15 Explanation: 
விளக்கம்: முதல் மைசூர் போரில் பம்பாயிலிருந்து வந்த ஆங்கிலேயரின் ஒரு படை மேற்குக்கடற்கரையின் மங்களூரையும் அதைச் சுற்றியிருந்த பிற பகுதிகளையும் கைப்பற்றியது. ஆனால் ஹைதர் இவற்றை மீட்டெடுத்தார். பெங்களூரைக் கைப்பற்ற நினைத்த ஆங்கிலேயரின் முயற்சி வெற்றி பெறவில்லை.
Question 16
கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
  1. 1768இல் ஹைதர் பாராமஹால் (சேலம் மாவட்டம்) மீது திடீர் தாக்குதல் தொடுத்து, கேப்டன் நிக்சனைத் தோற்கடித்துக் கரூரையும் ஈரோட்டையும் கைப்பற்றினார்.
  2. ஹைதரின் தளபதி சாதத்துல்லா கான் மதுரையிலும் திருநெல்வேலியிலும் படையை எந்த எதிர்ப்புமின்றி வழிநடத்திச் சென்றார்.
A
(i) சரி
B
(ii) சரி
C
(i) மற்றும் (ii) சரி
D
(i) மற்றும் (ii) தவறு
Question 16 Explanation: 
விளக்கம்: 1768இல் ஹைதர் பாராமஹால் (சேலம் மாவட்டம்) மீது திடீர் தாக்குதல் தொடுத்து, கேப்டன் நிக்சனைத் தோற்கடித்துக் கரூரையும் ஈரோட்டையும் கைப்பற்றினார். இதற்கிடையே ஹைதரின் தளபதி ஃபசலுல்லா கான் மதுரையிலும் திருநெல்வேலியிலும் படையை எந்த எதிர்ப்புமின்றி வழிநடத்திச் சென்றார். ஹைதர் தஞ்சாவூருக்கும் அங்கிருந்து கடலூருக்கும் முன்னேறிச் சென்றார்.
Question 17
முதல் ஆங்கில மைசூர் போர் எந்த உடன்படிக்கை மூலம் முடிவுக்கு வந்தது?
A
புதுச்சேரி உடன்படிக்கை
B
ஸ்ரீரங்கப்பட்டின உடன்படிக்கை
C
பாரிஸ் உடன்படிக்கை
D
சென்னை உடன்படிக்கை
Question 17 Explanation: 
விளக்கம்: ஆங்கிலேயர் மீதான தாக்குதலை நிறுத்த ஹைதர் விரும்பாவிட்டாலும், மராத்தியர் படையெடுத்து வரக்கூடும் என்ற அச்சுறுத்தல் அவரை ஆங்கிலேயருடன் அமைதி உடன்படிக்கை செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளியது. அவருக்கும் ஆங்கிலேயருக்கும் இடையே சென்னை உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது.
Question 18
கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
  1. ஸ்ரீரங்கப்பட்டின  உடன்படிக்கையின்படி இரு தரப்பும் கைப்பற்றிய பகுதிகளை அவரவரிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும்.
  2. தங்களைத் தற்காத்துக்கொள்ள நடைபெறும் போர்களில் இரு தரப்பும் ஒருவருக்கொருவர் உதவ வேண்டும்.
A
(i) சரி
B
(ii) சரி
C
(i) மற்றும் (ii) சரி
D
(i) மற்றும் (ii) தவறு
Question 18 Explanation: 
விளக்கம்: சென்னை உடன்படிக்கை யில் இருந்த நிபந்தனைகள் வருமாறு: இரு தரப்பும் கைப்பற்றிய பகுதிகளை அவரவரிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும். கரூர் மட்டும் ஹைதரின் வசம் இருக்கும். தங்களைத் தற்காத்துக்கொள்ள நடைபெறும் போர்களில் இரு தரப்பும் ஒருவருக்கொருவர் உதவ வேண்டும். இது மராத்தியருக்கு எதிராக ஆங்கிலேயர் உதவுவதற்கு கடமைப்பட்டவர்கள் என்பதையே குறித்தது. ஆனால் ஹைதருக்கும் மராத்தியருக்கும் எதிரான சண்டையின்போது தேவையான நேரத்தில் ஆங்கிலேயரின் உதவி கிடைக்காததால் ஹைதர் ஆங்கிலேயருக்கு எதிராகத் திரும்பினார்.
Question 19
அமெரிக்கச் சுதந்திரப்போருக்குப் பிறகு அமெரிக்காவுடன் நட்பு உடன்படிக்கை செய்துகொண்ட நாடு/கள்?
A
ஸ்பெயின்
B
பிரான்ஸ்
C
இத்தாலி
D
a) மற்றும் b)
Question 19 Explanation: 
விளக்கம்: இரண்டாம் மைசூர் போரும் (1780) ஹைதரும்: அமெரிக்கச் சுதந்திரப்போருக்குப் பிறகு பிரான்ஸ் அமெரிக்காவுடன் நட்பு உடன்படிக்கை (1778) செய்துகொண்டது. எனவே பிரிட்டன் பிரான்ஸுக்கு எதிரான போரை அறிவித்தது. இதைப் போலவே ஸ்பெயினும் அமெரிக்காவுடன் நட்பு உடன்படிக்கை மேற்கொண்டு, இங்கிலாந்துக்கு எதிராகப் போரில் (1779) இறங்கியபோது இங்கிலாந்து தனிமைப்பட்டது.
Question 20
கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • இந்தியாவில்  பிரெஞ்சுப்படையின் ஆதரவுடன் நிஜாம் அலியும் மராத்தியரும் கைகோத்துச் செயல்பட்ட போக்கு ஆங்கிலேயருக்கு நெருக்கடியை அதிகப்படுத்தியது.
  • ஹைதர் அலி இந்தச் சூழலைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள கர்நாடகத்திற்குப் படையெடுத்தார்.
A
(i) சரி
B
(ii) சரி
C
(i) மற்றும் (ii) சரி
D
(i) மற்றும் (ii) தவறு
Question 20 Explanation: 
விளக்கம்: இந்தியாவில் பிரெஞ்சுப்படையின் ஆதரவுடன் நிஜாம் அலியும் மராத்தியரும் கைகோத்துச் செயல்பட்ட போக்கு ஆங்கிலேயருக்கு நெருக்கடியை அதிகப்படுத்தியது. ஹைதர் அலி இந்தச் சூழலைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள கர்நாடகத்திற்குப் படையெடுத்தார்.
Question 21
ஹெக்டர் மன்றோ தலைமையிலான படையுடன் சேர்ந்து செயல்பட வேண்டியவராக இருந்தவர் யார்?
A
கர்னல் பெய்லி
B
சர் அயர்கூட்
C
கர்னல் ப்ரெய்த்வெயிட்
D
கர்னல் ஹாப்
Question 21 Explanation: 
விளக்கம்: ஹெக்டர் மன்றோ தலைமையிலான படையுடன் சேர்ந்து செயல்பட வேண்டிய கர்னல் பெய்லி ஹைதரின் திடீர்த்தாக்குதலில் கடுமையாகக் காயமுற்றார். இது மன்றோவை சென்னை நோக்கிச் செல்ல வைத்தது. ஹைதர் ஆற்காட்டை க் கைப்பற்றினார் (1780).
Question 22
சென்னை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க வந்தவாசிப் போரில் வெற்றிபெற்றவர் யார்?
A
கர்னல் பெய்லி
B
சர் அயர்கூட்
C
கர்னல் ப்ரெய்த்வெயிட்
D
கர்னல் ஹாப்
Question 22 Explanation: 
விளக்கம்: சென்னை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க வந்தவாசிப் போரில் வெற்றிபெற்ற அயர்கூட் மதராஸைக் கடல்வழியே முற்றுகையிட வங்காளத்திலிருந்து அனுப்பப்பட்டார். ஹைதருக்கு எதிராக வெற்றியை ஈட்டிய கூட் புதுச்சேரியை நோக்கி நகர்ந்தார்.
Question 23
கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
  1. கர்னல் பெய்லி  பரங்கிப்பேட்டையை (Porto Novo) அடைந்து, ஹைதருக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் வெற்றி பெற்றார்.
  2. ஹைதர் அங்கு நடைபெற்ற மோதலில் ஆங்கிலேயரிடம் பிடிபடுவதிலிருந்து நூலிழையில் தப்பினார்.
A
(i) சரி
B
(ii) சரி
C
(i) மற்றும் (ii) சரி
D
(i) மற்றும் (ii) தவறு
Question 23 Explanation: 
விளக்கம்: ஹைதர் தஞ்சாவூர் அரசைத் தன் பிடிக்குள் கொண்டுவந்தார். கூட் பரங்கிப்பேட்டையை (Porto Novo) அடைந்து, ஹைதருக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் வெற்றி பெற்றார். ஹைதர் அங்கு நடைபெற்ற மோதலில் ஆங்கிலேயரிடம் பிடிபடுவதிலிருந்து நூலிழையில் தப்பினார்.
Question 24
ஹைதரின் மகன் திப்பு சுல்தானால்  தோற்கடிக்கப்பட்டு சிறைபிடிக்கப்பட்ட ஆங்கில படைத்தளபதி?
A
கர்னல் பெய்லி
B
சர் அயர்கூட்
C
கர்னல் ப்ரெய்த்வெயிட்
D
கர்னல் ஹாப்
Question 24 Explanation: 
விளக்கம்: ஹைதரின் மகன் திப்பு சுல்தான் கர்னல் ப்ரெய்த்வெயிட்டை கும்பகோணம் அருகே தோற்கடித்துச் சிறைப்பிடித்தார். மைசூர் சுல்தானின் கவனத்தைத் திசைதிருப்புவதற்காக ஜெனரல் மேத்யூஸ் மங்களூரை நோக்கி ஒரு படையெடுப்பை மேற்கொண்டார். இந்த நடவடிக்கை ஆங்கிலேயர் எதிர்பார்த்தபடி திப்பு சுல்தானைக் கர்நாடகத்தை விட்டு மேற்குக்கடற்கரையை நோக்கி நகர வைத்தது.
Question 25
அமெரிக்கச் சுதந்திரப் போரின் முடிவில் கையெழுத்தான உடன்படிக்கை எது?
A
பாரிஸ் உடன்படிக்கை
B
அய்லா சாப்பேல் உடன்படிக்கை
C
லண்டன் உடன்படிக்கை
D
நியூயார்க் உடன்படிக்கை
Question 25 Explanation: 
விளக்கம்: புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஹைதரின் மரணம் (1782), அமெரிக்கச் சுதந்திரப் போரின் முடிவில் கையெழுத்தான பாரிஸ் உடன்படிக்கை (1783), நீண்ட நாட்களுக்கு நீடித்த மங்களூர் முற்றுகை ஆகிய நிகழ்வுகள் திப்பு சுல்தானுக்கு எதிரான ஆங்கிலேயரின் நடவடிக்கைகளுக்கு வலுச் சேர்ப்பதாக இருந்தன.
Question 26
கரூரையும் திண்டுக்கல்லையும் கைப்பற்றிய ஆங்கிலப்படைத்தளபதி?
A
கர்னல் பெய்லி
B
கர்னல் ஃபுல்லர்ட்டன்
C
கர்னல் ப்ரெய்த்வெயிட்
D
கர்னல் லேங்
Question 26 Explanation: 
விளக்கம்: கர்னல் லேங் கரூரையும் திண்டுக்கல்லையும் கைப்பற்றினார். கர்னல் ஃபுல்லர்ட்டன் பாலக்காட்டையும் கோயம்புத்தூரையும் கைப்பற்றினார் . அடுத்ததாக ஸ்ரீரங்கப்பட்டணத்தைக் கைப்பற்றும் நோக்கத்துடன் அவர் முன்னேறி வந்தபோது திப்பு சுல்தான் சமாதானத்துக்கு விருப்பம் தெரிவித்து, முற்றுகையைத் தவிர்த்தார்.
Question 27
மங்களூர் உடன்படிக்கை எந்த ஆண்டு கையெழுத்தானது?
A
1786
B
1782
C
1784விளக்கம்: 1784 மார்ச் மாதத்தில் மங்களூர் உடன்படிக்கை கையெழுத்தானது. அதன்படி, இரு தரப்பினரும் அதுவரை வென்ற பகுதிகளைத் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்றும் போரில் கைதானவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டது.
D
1781
Question 27 Explanation: 
விளக்கம்: 1784 மார்ச் மாதத்தில் மங்களூர் உடன்படிக்கை கையெழுத்தானது. அதன்படி, இரு தரப்பினரும் அதுவரை வென்ற பகுதிகளைத் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்றும் போரில் கைதானவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டது.
Question 28
மூன்றாம் மைசூர்  போர் நடைபெற்றபோது கவர்னர் ஜெனரல் ஆக இருந்தவர்?
A
வெல்லெஸ்லி
B
கர்சன்
C
கார்ன் வாலிஸ்
D
வில்லியம் பெண்டிக்
Question 28 Explanation: 
விளக்கம்: மூன்றாம் மைசூர் போர்: 1790-92 இடைப்பட்ட காலத்தில் கார்ன்வாலிஸ் கவர்னர் ஜெனரல் ஆகப் பொறுப்பேற்றார். அவர் திப்பு சுல்தானைப் பழிவாங்கும் விதத்தில் நடந்துகொண்டார். தெற்கில் இரு மிகப்பெரும் சக்திகளாக விளங்கிய ஹைதராபாத் நிஜாமும் மராத்தியரின் கூட்டமைப்பும் ஆங்கிலேயரின் கூட்டாளிகளாக இதில் செயல்பட்டார்கள்.
Question 29
முதல் ஆங்கிலேய மராத்தியப் போருக்குப் பின் மராத்தியர் ஆங்கிலேயருடன்  செய்துகொண்ட உடன்படிக்கை எது?
A
சால்செட் உடன்படிக்கை
B
பேசின் உடன்படிக்கை
C
சால்பை உடன்படிக்கை
D
சூரத் உடன்படிக்கை
Question 29 Explanation: 
விளக்கம்: திப்புவுடனான போருக்குத் தேவைப்பட்ட நிதியாதாரங்களையும் கூடவே தன் படைகளையும் ஹைதராபாத் நிஜாம் ஆங்கிலேயருக்கு வழங்கினார். 1782இல் முதல் ஆங்கிலேய மராத்தியப் போருக்குப் பின் ஆங்கிலேயருடன் சால்பை உடன்படிக்கை செய்துகொண்ட மராத்தியர் ஆங்கிலேயரை ஆதரித்தார்கள். . நிஜாம், மராத்தியர் ஆகிய இரு தரப்பிலிருந்தும் கிடைத்த ஆதரவால் ஆங்கிலேயரின் கை ஓங்கியது.
Question 30
திப்புவின் தூதுக்குழுவை நட்புறவுடன் நடத்திய பிரெஞ்சு அரசர்?
A
பதினாறாம் லூயி
B
பதினைந்தாம் லூயி
C
பதினான்காம் லூயி
D
பதினேழாம் லூயி
Question 30 Explanation: 
விளக்கம்: திப்பு கான்ஸ்டாண்டிநோபிளுக்கும் 1787இல் பாரிஸுக்கும் தூதுக்குழுவை அனுப்பினார். ஆங்கிலேயருக்கு எதிராகத் தன்னை வலுப்படுத்திக்கொள்வதற்காகத் திப்பு இந்த இராஜதந்திர முயற்சிகளை மேற்கொண்டார். பிரெஞ்சு அரசர் பதினாறாம் லூயி தூதுக்குழுவை நட்புறவுடன் நடத்தினாலும், திப்பு எதிர்பார்த்த ஆதரவு குறித்து வெற்று வாக்குறுதியையே அளித்தார்.
Question 31
  • கூற்று (கூ): 1790ல் மூன்றாம் ஆங்கிலேய-மைசூர் போர் தொடங்கியது.
  • காரணம் (கா): பிரிட்டனுடன் நட்பு பாராட்டிய திருவிதாங்கூர் மீதான திப்புவின் தாக்குதலும் கொடுங்களூரைக் கைப்பற்றியதும் கம்பெனி அரசுடனான போருக்கான அறிவிப்பாகவே எடுத்துக்கொள்ளப்பட்டன.
A
கூற்று சரி; காரணம் கூற்றின் சரியான விளக்கம் ஆகும்.
B
கூற்று சரி; காரணம் தவறு
C
கூற்று மற்றும் காரணம் தவறானவை
D
கூற்று சரி; காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல
Question 31 Explanation: 
விளக்கம்: பிரிட்டனுடன் நட்பு பாராட்டிய திருவிதாங்கூர் மீதான திப்புவின் தாக்குதலும் கொடுங்களூரைக் கைப்பற்றியதும் கம்பெனி அரசுடனான போருக்கான அறிவிப்பாகவே எடுத்துக்கொள்ளப்பட்டன. இவ்வாறு மூன்றாம் ஆங்கிலேய-மைசூர் போர் தொடங்கியது.
Question 32
திப்புவின் தளபதி ஹுசைன் அலியைக் கள்ளிக்கோட்டையில் தோற்கடித்த ஆங்கிலப்படைத்தளபதி?
A
கர்னல் பெய்லி
B
கர்னல் ஃபுல்லர்ட்டன்
C
கர்னல் ப்ரெய்த்வெயிட்
D
கர்னல் ஹார்ட்லி
Question 32 Explanation: 
விளக்கம்: கர்னல் ஹார்ட்லி திப்புவின் தளபதி ஹுசைன் அலியைக் கள்ளிக்கோட்டையில் தோற்கடித்தார். இதற்குப் பதிலடியாகத் திப்பு திருவண்ணாமலையைக் கைப்பற்றினார். புதுச்சேரி பிரெஞ்சு ஆளுநரின் ஆதரவைப் பெறுவதற்குத் திப்பு எடுத்த முயற்சி வெற்றிபெறவில்லை.
Question 33
ஸ்ரீரங்கப்பட்டணம் அருகே திப்பு தோற்கடித்த கவர்னர் ஜெனரல்?
A
வெல்லெஸ்லி
B
கர்சன்
C
கார்ன் வாலிஸ்
D
வில்லியம் பெண்டிக்
Question 33 Explanation: 
விளக்கம்: கவர்னர் ஜெனரலான காரன்வாலிஸ் தானே வேலூரிலிருந்து படையெடுத்து வந்து, பெங்களூரை அடைந்தார். வழியில் அவர் திப்புவை எதிர்கொள்ள நேர்ந்தது. ஸ்ரீரங்கப்பட்டணம் அருகே திப்பு தோற்கடிக்கப்பட்டார். படையெடுப்பின்போது தேவைப்படும் பொருட்களின் பற்றாக்குறையால் காரன்வாலில் பின்வாங்க வேண்டியிருந்தது.
Question 34
மூன்றாம் மைசூர்  போரின்போது தக்க தருணத்தில் ஆங்கிலேயருக்குத் தேவையான பொருட்களை வழங்கியவர்கள்?
A
மராத்தியர்
B
வங்காள நவாப்
C
முகலாயர்
D
ராஜபுத்திரர்கள்
Question 34 Explanation: 
விளக்கம்: மூன்றாம் மைசூர் போரின்போது தக்க தருணத்தில் மராத்தியர் ஆங்கிலேயருக்குத் தேவையான பொருட்களை வழங்கினார்கள். கூடுதல் வலிமை பெற்ற ஆங்கிலேயப்படை ஸ்ரீரங்கப்பட்டணத்தை முற்றுகையிட்டது. அதன் கடுமையான தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் திப்பு அமைதி உடன்படிக்கைக்கு அழைப்பு விடுத்தார். உடன்படிக்கையில் கார்ன்வாலிஸ் விதித்த நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டார்.
Question 35
கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
  1. ஸ்ரீரங்கப்பட்டண உடன்படிக்கையின்படி, திப்பு அவருடைய ஆட்சிப்பகுதிகளில் பாதி இடங்களை ஆங்கிலேயருக்குக் கொடுக்க வேண்டும்.
  2. போர் இழப்பீடாக மூன்று கோடி ரூபாய் அளிக்க வேண்டும்
A
(i) சரி
B
(ii) சரி
C
(i) மற்றும் (ii) சரி
D
(i) மற்றும் (ii) தவறு
Question 35 Explanation: 
விளக்கம்: ஸ்ரீரங்கப்பட்டண உடன்படிக்கையின்படி, திப்பு அவருடைய ஆட்சிப்பகுதிகளில் பாதி இடங்களை ஆங்கிலேயருக்குக் கொடுக்க வேண்டும்; போர் இழப்பீடாக மூன்று கோடி ரூபாய் அளிக்க வேண்டும்; அவருடைய மகன்களில் இருவரைப் பிணைக்கைதிகளாக அனுப்பி வைக்க வேண்டும்.
Question 36
ஸ்ரீரங்கப்பட்டண உடன்படிக்கையின்படி திப்பு எந்தப்பகுதியை இழந்தார்?
A
குடகு
B
பாராமஹால்
C
மலபார்
D
திண்டுக்கல்
Question 36 Explanation: 
விளக்கம்: திப்புவிடமிருந்து பெறப்பட்ட பகுதிகளும் இழப்பீட்டுத்தொகையும் சமமாகப் பகிர்ந்துகொள்ளப்பட்டன. ஆங்கிலேயர் மலபார், திண்டுக்கல், பாராமஹால் ஆகிய பகுதிகளைப் பெற்றார்கள். திப்பு குடகுப் பகுதியை இழந்தார். அதன் அரசர் ஆங்கிலேயருக்குக் கீழ்ப்படிய வேண்டிய சிற்றரசர் ஆனார். திப்புவின் அதிகாரம் பெருமளவுக்குக் குறைக்கப்பட்டது.
Question 37
கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
  1. சென்னையில் பிணைக்கைதிகளாகயிருந்த திப்புவின் மகன்கள் அனைத்து நிபந்தனைகளும் நிறைவேற்றப்பட்ட பிறகு ஸ்ரீரங்கப்பட்டணத்துக்கு 1794 ஆம் ஆண்டு மே 29 அன்று திருப்பியனுப்பி வைக்கப்பட்டார்கள்.
  2. சென்னை  உடன்படிக்கை மூலம் ஏற்பட்ட அவமானத்தையும் பொருளாதார இழப்பையும் திப்புவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
A
(i) சரி
B
(ii) சரி
C
(i) மற்றும் (ii) சரி
D
(i) மற்றும் (ii) தவறு
Question 37 Explanation: 
விளக்கம்: சென்னையில் பிணைக்கைதிகளாகயிருந்த திப்புவின் மகன்கள் அனைத்து நிபந்தனைகளும் நிறைவேற்றப்பட்ட பிறகு ஸ்ரீரங்கப்பட்டணத்துக்கு 1794 ஆம் ஆண்டு மே 29 அன்று திருப்பியனுப்பி வைக்கப்பட்டார்கள். இந்த உடன்படிக்கை மூலம் ஏற்பட்ட அவமானத்தையும் பொருளாதார இழப்பையும் திப்புவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
Question 38
கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
  1. மைசூர் அரசர் ஒன்பதாம் சாமராஜ் 1796இல் இறந்தார்.
  2. பிரான்ஸிடமிருந்து உதவி கிடைத்த பிறகு திப்பு ஆங்கிலேயர் மீதான போர் குறித்து அறிவிப்பார் என்பதே மாலரிக்கின் அறிவிப்பாகும்.
A
(i) சரி
B
(ii) சரி
C
(i) மற்றும் (ii) சரி
D
(i) மற்றும் (ii) தவறு
Question 38 Explanation: 
விளக்கம்: மைசூர் அரசர் ஒன்பதாம் சாமராஜ் 1796இல் இறந்தார். அடுத்த அரசரை நியமிக்கும் முறையான வழக்கத்தைத் திப்பு பின்பற்றவில்லை. அவர் இந்தத் தீர்மானத்துக்கு வந்த அதே நேரத்தில், பிரெஞ்சு காலனி ஆதிக்கத்துக்கு உட்பட்டிருந்த மொரீஷியஸின் கவர்னர் மாலரிக் ஓர் அறிவிப்பை வெளியிட்டார். பிரான்ஸிடமிருந்து உதவி கிடைத்த பிறகு திப்பு ஆங்கிலேயர் மீதான போர் குறித்து அறிவிப்பார் என்பதே மாலரிக்கின் அறிவிப்பாகும்.
Question 39
நான்காம் மைசூர் போர் ஏற்பட்டதற்கான  காரணங்கள்?
  • ⅰ) திப்பு 1798 ஜுலையில் பிரான்சு ஆட்சியை நிர்வகித்த இயக்குநரகத்துடன் மேற்கொண்ட கடிதத் தொடர்புகள்
  • ⅱ) நெப்போலியனுடன்  மேற்கொண்ட கடிதத் தொடர்புகள்
  • ⅲ) வெல்லெஸ்லியுடனான கடிதத்தொடர்பில் காட்டிய நழுவல்
A
ⅰ), ⅱ), ⅲ)
B
ⅰ), ⅱ)
C
ⅱ), ⅲ)
D
ⅰ), ⅲ)
Question 39 Explanation: 
விளக்கம்: திப்பு 1798 ஜுலையில் பிரான்சு ஆட்சியை நிர்வகித்த இயக்குநரகத்துடனும் அதற்குப் பிறகு அங்கு ஆட்சியைப் பிடித்த நெப்போலியனுடனும் மேற்கொண்ட கடிதத் தொடர்புகள், அவர் வெல்லெஸ்லியுடனான கடிதத்தொடர்பில் காட்டிய நழுவல் ஆகியவை ஆங்கிலேயரை மீண்டும் திப்புவுக்கு எதிரான போரை அறிவிக்கச் செய்தன.
Question 40
கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
  1. 1796இல் திப்பு பாரிஸுக்கு மீண்டும் தூதர்களை அனுப்பினார்.
  2. 1797இல் திப்புவை மொரிஷியஸிலிருந்து வந்த ஒரு பிரெஞ்சு தூதர் சந்தித்து, பிரான்சின் ஆதரவை உறுதிப்படுத்தினார்.
A
(i) சரி
B
(ii) சரி
C
(i) மற்றும் (ii) சரி
D
(i) மற்றும் (ii) தவறு
Question 40 Explanation: 
விளக்கம்: நான்காம் மைசூர் போர் 1799: திப்பு தனது படையையும் நிதியாதாரங்களையும் வலுப்படுத்துவதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார். 1796இல் பாரிஸுக்கு மீண்டும் தூதர்களை அனுப்பினார். 1797இல் அவரை மொரிஷியஸிலிருந்து வந்த ஒரு பிரெஞ்சு தூதர் சந்தித்து, பிரான்சின் ஆதரவை உறுதிப்படுத்தினார்.
Question 41
பிரான்சில் இருப்பதைப் போல  ஜேக்கோபியர் கழகம் எங்கு தொடங்கப்பட்டது?
A
ஸ்ரீரங்கப்பபட்டணம்
B
மைசூர்
C
திண்டுக்கல்
D
பாரமகால்
Question 41 Explanation: 
விளக்கம்: பிரான்சில் இருப்பதைப் போல ஸ்ரீரங்கப்பட்டணத்திலும் ஜேக்கோபியர் கழகம் தொடங்கப்பட்டது. இது பிரெஞ்சுப்புரட்சியின்போது நிறுவப்பட்டு, பின்னர் ஆட்சி அதிகாரத்துக்கு வந்த புரட்சிகர அமைப்பாகும். மைசூர் சுல்தானுக்கும் பிரெஞ்சு அரசுக்குமான நல்லுறவைத் தெரிவிக்கும் விதத்தில் பிரெஞ்சு குடியரசின் கொடி ஏற்றப்பட்டது.
Question 42
நான்காம் ஆங்கிலேய-மைசூர் போரின்போது கவர்னர் ஜெனரல் ஆக இருந்தவர்?
A
வெல்லெஸ்லி
B
காரன்வாலிஸ்
C
வில்லியம் பெண்டிக்
D
வாரன் ஹேஸ்டிங்ஸ்
Question 42 Explanation: 
விளக்கம்: பிரான்சுடன் திப்பு ஏற்படுத்திக்கொண்ட கூட்டணியால் கோபமுற்ற புதிய கவர்னர் ஜெனரலான வெல்லெஸ்லி துணைப்படைத்திட்டத்தின் கீழ் மைசூரில் ஆங்கிலேயப் படை ஒன்றை நிரந்தரமாக வைத்திருக்க வேண்டும் என வலியுறுத்தினார். திப்பு இதை ஏற்கவில்லை. ஆங்கிலேயர் நான்காம் ஆங்கிலேய-மைசூர் போரை 1799இல் அறிவித்தனர்.
Question 43
நான்காம் மைசூர் போரின்போது ஸ்ரீரங்கப்பட்டணத்தினை கைப்பற்றியவர்?
A
கர்னல் பெய்லி
B
கர்னல் ஃபுல்லர்ட்டன்
C
கர்னல் ப்ரெய்த்வெயிட்
D
ஜெனரல் டேவிட் பெய்ர்டு
Question 43 Explanation: 
விளக்கம்: ஜெனரல் டேவிட் பெய்ர்டு ஸ்ரீரங்கப்பட்டணத்தின் மீது திடீர் தாக்குதல் தொடுத்துக் கைப்பற்றினார். அமைதி உடன்படிக்கைக்கான திப்புவின் வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டது. இறுதி மோதலில் காயமுற்ற திப்பு ஓர் ஐரோப்பியப் படைவீரனால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
Question 44
திப்புவின் மகன்கள் முதலில்  எங்கு சிறைவைக்கப்பட்டார்கள்?
A
கல்கத்தா
B
வேலூர்
C
திண்டுக்கல்
D
ஸ்ரீரங்கப்பட்டணம்
Question 44 Explanation: 
விளக்கம்: திப்புவை அகற்றியதும் உடையார் வம்சத்தினரை மீண்டும் ஆட்சியில் அமர்த்தியதும் தென்னிந்தியாவில் கம்பெனி ஆட்சியின் உண்மையான தொடக்கமாக அமைந்தன. திப்புவின் மகன்கள் முதலில் வேலூரில் சிறைவைக்கப்பட்டார்கள்.
Question 45
திப்புவின் மகன்கள் வேலூர் கிளர்ச்சிக்குப் பிறகு எங்கு மாற்றப்பட்டார்கள்?
A
கல்கத்தா
B
வேலூர்
C
திண்டுக்கல்
D
ஸ்ரீரங்கப்பட்டினம்
Question 45 Explanation: 
விளக்கம்: 1806இல் வேலூர் கிளர்ச்சிக்குப் பிறகு கல்கத்தாவுக்கு மாற்றப்பட்டார்கள். இவ்வாறு ஆங்கிலேயருக்கு எதிரான மைசூர் சுல்தான்களின் வீரம் செறிந்த மோதல்கள் முடிவுக்கு வந்தன.
Question 46
விஜயநகரப்பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு, அரசப்பிரதிநிதியாக மதுரைக்கு வந்தவர்?
A
கோபால நாயக்கர்
B
நாகம நாயக்கர்
C
விஜய ரங்க சொக்கநாதர்
D
திருமலை நாயக்கர்
Question 46 Explanation: 
விளக்கம்: விஜயநகரப்பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு, அரசப்பிரதிநிதியாக மதுரைக்கு வந்த நாகம நாயக்கரும் அவருடைய மகன் விஸ்வநாத நாயக்கரும் மதுரை, திருநெல்வேலி ஆகியவற்றின் சுதந்திரமான ஆட்சியாளர்களா கத் தங்களை உறுதிப்படுத்திக்கொண்டனர்.
Question 47
யாருடைய வழிகாட்டுதலின் கீழ் முன்னாள் பாண்டியப் பேரரசின் அனைத்து சிற்றரசுகளும் வகைப்படுத்தப்பட்டு பாளையங்களாக மாற்றப்பட்டன?
A
அரியநாதர்
B
நாகம நாயக்கர்
C
விஜய ரங்க சொக்கநாதர்
D
திருமலை நாயக்கர்
Question 47 Explanation: 
விளக்கம்: தளவாய் அரியநாயக முதலியாரின் திறமையான வழிகாட்டுதலின் கீழ் முன்னாள் பாண்டியப் பேரரசின் அனைத்து சிற்றரசுகளும் வகைப்படுத்தப்பட்டு, 72 பாளையங்களாக மாற்றப்பட்டன.
Question 48
மதுரையைச் சுற்றி வலிமை மிகுந்த ஒரு கோட்டையை எழுப்பிய நாயக்கர்?
A
அரியநாதர்
B
நாகம நாயக்கர்
C
விஸ்வ நாத நாயக்கர்
D
திருமலை நாயக்கர்
Question 48 Explanation: 
விளக்கம்: விஸ்வநாத நாயக்கர் மதுரையைச் சுற்றி வலிமை மிகுந்த ஒரு கோட்டையை எழுப்பினார். அதில் 72 அரண்கள் இருந்தன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு தலைமையின் கீழ் இருந்தன.
Question 49
எந்தப்பகுதியை ஆட்சி செய்த மன்னர்களால் பாளையக்காரர்  முறை பின்பற்றப்பட்டு வந்தது?
A
கல்யாணி
B
துவார சமுத்திரம்
C
வாரங்கல்
D
வாதாபி
Question 49 Explanation: 
விளக்கம்: பாளையக்காரர் முறை 1530களில் தோன்றியது. வாராங்கலை ஆண்டுவந்த காகதிய அரசில் இந்த முறை பின்பற்றப்பட்டு வந்ததாக கருதப்படுகிறது. அரசருக்குத் தேவையானபோது போரில் வீரர்களுடன் பங்கேற்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஒரு பாசறையையும் பெரும் நிலப்பரப்பையும் வைத்திருப்பவரையே பாளையக்காரர் என்ற சொல் குறிக்கிறது.
Question 50
கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
  1. பாளையக்காரர்  முறை தோன்றுவதற்கு முன்னால், சேர்வைக்காரர்களும் தலையாரிகளும் காவல் பணிகளுக்காக வரி வசூலித்து வந்தனர்.
  2. பாளைய முறை அறிமுகமான பிறகு, பாளையக்காரர்கள் சேர்வைக்காரர்கள், தலையாரிகளைத் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தார்கள்.
A
(i) சரி
B
(ii) சரி
C
(i) மற்றும் (ii) சரி
D
(i) மற்றும் (ii) தவறு
Question 50 Explanation: 
விளக்கம்: பாளையக்காரர் முறை தோன்றுவதற்கு முன்னால், சேர்வைக்காரர்களும் தலையாரிகளும் காவல் பணிகளுக்காக வரி வசூலித்து வந்தனர். பாளைய முறை அறிமுகமான பிறகு, பாளையக்காரர்கள் சேர்வைக்காரர்கள், தலையாரிகளைத் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தார்கள்.
Question 51
  • கூற்று (கூ): பாளையக்காரர் அரசருக்கு தேவையானபோது படைவீரர்களை அனுப்புவதற்கும் பாளையத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்கும் கடமைப்பட்டவர்.
  • காரணம் (கா): இந்தக் கடமைகளையும் பிற பணிகளையும் செய்வதற்குத் தேவையான நிதியாதாரத்தைப் பெற சில கிராமங்கள் அவருக்கு வழங்கப்பட்டிருந்தன.
A
கூற்று சரி; காரணம் கூற்றின் சரியான விளக்கம் ஆகும்.
B
கூற்று சரி; காரணம் தவறு
C
கூற்று மற்றும் காரணம் தவறானவை
D
கூற்று சரி; காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல
Question 51 Explanation: 
விளக்கம்: பாளையக்காரர் அரசருக்கு ஆண்டுதோறும் குறிப்பிட்ட தொகையைக் கப்பமாகச் செலுத்துவதற்கும் தேவையானபோது படைவீரர்களை அனுப்புவதற்கும் பாளையத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்கும் கடமைப்பட்டவர். இந்தக் கடமைகளையும் பிற பணிகளையும் செய்வதற்குத் தேவையான நிதியாதாரத்தைப் பெற சில கிராமங்கள் அவருக்கு வழங்கப்பட்டிருந்தன. அக்கிராமங்களில் அவர் வரிவிதித்து நிதி திரட்டினார்.
Question 52
கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
  1. கூடுதலாகப் பல பட்டங்களும் சிறப்புரிமைகளும் பாளையக்காரர்களுக்கு வழங்கப்பட்டன.
  2. பாளையத்துக்கு உட்பட்ட பகுதியில் குடிமையியல் பிரச்னைகளில் மட்டும் விசாரணை நடத்தி நீதி வழங்கும் அதிகாரமும் அவருக்கு உண்டு.
A
(i) சரி
B
(ii) சரி
C
(i) மற்றும் (ii) சரி
D
(i) மற்றும் (ii) தவறு
Question 52 Explanation: 
விளக்கம்: கூடுதலாகப் பல பட்டங்களும் சிறப்புரிமைகளும் பாளையக்காரர்களுக்கு வழங்கப்பட்டன. பாளையத்துக்கு உட்பட்ட பகுதியில் குடிமையியல் பிரச்னைகளிலும் குற்றவியல் பிரச்னைகளிலும் விசாரணை நடத்தி நீதி வழங்கும் அதிகாரமும் அவருக்கு உண்டு.
Question 53
பாளையங்கள் பூகோளரீதியாகப் பரவியிருந்ததன் அடிப்படையில் எத்தனையாக பிரிக்கலாம்?
A
இரண்டு
B
மூன்று
C
நான்கு
D
ஐந்து
Question 53 Explanation: 
விளக்கம்: பாளையங்கள் பூகோளரீதியாகப் பரவியிருந்ததன் அடிப்படையில் மேற்குப் பாளையங்கள், கிழக்குப் பாளையங்கள் எனப் பிரிக்கலாம். மறவர் குறுநில மன்னர்களிடமிருந்த பாளையங்கள் பெரும்பாலும் திருநெல்வேலியின் மேற்குப்பகுதியில் அமைந்திருந்தன. கிழக்குப் பகுதியில் உள்ள கரிசல் நிலப்பரப்புகளில் தெலுங்கு பேசுவோர் குடியேறியிருந்தார்கள். அவை நாயக்கர் பாளையக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருந்தன.
Question 54
கிழக்கிந்திய கம்பெனி படையில் இந்திய வீரர்களுக்குத் தலைவராக நியமிக்கப்பட்டவர்?
A
கங்காதர்ராவ்
B
கான்சாகிப்
C
நானா சாகிப்
D
மாபூஸ்கான்
Question 54 Explanation: 
விளக்கம்: தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கிராமங்களை அடகு வைத்து ஏராளமாகக் கடன் வாங்கியிருந்த ஆற்காடு நவாப் அங்கெல்லாம் நிலவரி வசூல்செய்யும் உரிமையை கம்பெனிக்கு அளித்தார். கான் சாகிப் என்று அழைக்கப்பட்ட யூசுப்கான் கிழக்கிந்திய கம்பெனி படையில் இந்திய வீரர்களுக்குத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
Question 55
கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
  1. யூசுப்கானுக்குப் படைத் தலைமையுடன் வரி வசூலிக்கும் பொறுப்பும் வழங்கப்பட்டது.
  2. ஆற்காடு நவாபின் வேண்டுகோளின்படி, 1755இல் அவருக்கு உதவி செய்ய 500 ஐரோப்பியரும் 200 சிப்பாய்களும் அடங்கிய படை மதுரை, திருநெல்வேலி பகுதிகளுக்குள் நுழைய உத்தரவிடப்பட்டது.
A
(i) சரி
B
(ii) சரி
C
(i) மற்றும் (ii) சரி
D
(i) மற்றும் (ii) தவறு
Question 55 Explanation: 
விளக்கம்: கான் சாகிப்புக்குப் படைத் தலைமையுடன் வரி வசூலிக்கும் பொறுப்பும் வழங்கப்பட்டது. ஆற்காடு நவாபின் வேண்டுகோளின்படி, 1755இல் அவருக்கு உதவி செய்ய 500 ஐரோப்பியரும் 200 சிப்பாய்களும் அடங்கிய படை மதுரை, திருநெல்வேலி பகுதிகளுக்குள் நுழைய உத்தரவிடப்பட்டது. பாளையக்காரர்களின் அதிகாரத்தில் கம்பெனி நிர்வாகத்தின் குறுக்கீடு கடுமையான எதிர்ப்பை ஏற்படுத்தியது.
Question 56
நெற்கட்டும் செவல் கோட்டை மீது திடீர் தாக்குதல் தொடுக்க யாருக்கு  உத்தரவு வந்தது?
A
கர்னல் பெய்லி
B
கர்னல் ஃபுல்லர்ட்டன்
C
கர்னல் ப்ரெய்த்வெயிட்
D
கர்னல் ஹெரான்
Question 56 Explanation: 
விளக்கம்: ஹெரான் ஊர் திரும்பும் வழியில் நெற்கட்டும் செவல் கோட்டை மீது திடீர் தாக்குதல் தொடுக்க உத்தரவு வந்தது. அந்தப் பாளையத்தை ஆட்சி செய்த புலித்தேவர் மேற்குப் பாளையக்காரர்களிடையே பெரும் செல்வாக்கு பெற்றிருந்தார். பீரங்கி உள்ளிட்டவற்றின் பற்றாக்குறை, படைவீரர்களுக்கு ஊதியம் கொடுக்க வேண்டிய தேவை ஆகிய காரணங்களால் ஹெரானின் தாக்குதல் கைவிடப்பட்டது. அவரது படை மதுரைக்குத் திரும்பியது.
Question 57
கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
  1. புலித்தேவரும் பிற பாளையக்காரர்களும் கூட்டாக, சிறப்பான திட்டமிடலுடன் காட்டிய எதிர்ப்பு ஆங்கிலேயரைத் திருநெல்வேலி விவகாரங்களில் நேரடியாகத் தலையிட வைத்தது.
  2. 1756இலிருந்து 1763 வரைக்கும், திருவிதாங்கூரிலிருந்து கிடைத்த சீரான ஆதரவுடன், புலித்தேவர் தலைமையிலான பாளையக்காரர்கள் ஆற்காடு நவாபுக்கு எதிரான கிளர்ச்சியில் நீடித்து நின்றார்கள்.
A
(i) சரி
B
(ii) சரி
C
(i) மற்றும் (ii) சரி
D
(i) மற்றும் (ii) தவறு
Question 57 Explanation: 
விளக்கம்: புலித்தேவரும் பிற பாளையக்காரர்களும் கூட்டாக, சிறப்பான திட்டமிடலுடன் காட்டிய எதிர்ப்பு ஆங்கிலேயரைத் திருநெல்வேலி விவகாரங்களில் நேரடியாகத் தலையிட வைத்தது. 1756இலிருந்து 1763 வரைக்கும், திருவிதாங்கூரிலிருந்து கிடைத்த சீரான ஆதரவுடன், புலித்தேவர் தலைமையிலான பாளையக்காரர்கள் ஆற்காடு நவாபுக்கு எதிரான கிளர்ச்சியில் நீடித்து நின்றார்கள்.
Question 58
1761 இல் நெற்கட்டும் செவல், வாசுதேவநல்லூர், பனையூர் ஆகிய இடங்களில் இருந்த முக்கியமான கோட்டைகள் யாருடைய வசமாயின?
A
யூசுப்கான்
B
மாபூஸ்கான்
C
புலித்தேவர்
D
கட்டபொம்மன்
Question 58 Explanation: 
விளக்கம்: யூசுப் கான் நெற்கட்டும் செவல் கோட்டையை இடிக்கும் நோக்கத்துடன் தாக்குதலை நடத்தினார். இது ஏறத்தாழ இரு மாதங்கள் நீடித்தது. 1761 மே 16இல் நெற்கட்டும் செவல், வாசுதேவநல்லூர், பனையூர் ஆகிய இடங்களில் இருந்த முக்கியமான கோட்டைகள் யூசுப் கான் வசமாயின.
Question 59
  • கூற்று (கூ): கம்பெனியால் அனுப்பப்பட்ட யூசுப் கான் திருச்சிராப்பள்ளியிலிருந்து பீரங்கிகளும் வெடிமருந்துகளும் வந்துசேரும் வரை புலித்தேவரைத் தாக்கத் துணியவில்லை.
  • காரணம் (கா): பிரெஞ்சுக்காரர், ஹைதர் அலி, மராத்தியர் ஆகியோருடன் ஆங்கிலேயர் போர்களில் ஈடுபட்டுவந்ததால், 1760 செப்டம்பரில்தான் பீரங்கிகள் வந்துசேர்ந்தன.
A
கூற்று சரி; காரணம் கூற்றின் சரியான விளக்கம் ஆகும்.
B
கூற்று சரி; காரணம் தவறு
C
கூற்று மற்றும் காரணம் தவறானவை
D
கூற்று சரி; காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல
Question 59 Explanation: 
விளக்கம்:கம்பெனியால் அனுப்பப்பட்ட யூசுப் கான் திருச்சிராப்பள்ளியிலிருந்து பீரங்கிகளும் வெடிமருந்துகளும் வந்துசேரும் வரை புலித்தேவரைத் தாக்கத் துணியவில்லை. பிரெஞ்சுக்காரர், ஹைதர் அலி, மராத்தியர் ஆகியோருடன் ஆங்கிலேயர் போர்களில் ஈடுபட்டுவந்ததால், 1760 செப்டம்பரில்தான் பீரங்கிகள் வந்துசேர்ந்தன.
Question 60
யூசுப் கான் துரோகக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு தூக்கிலிடப்பட்ட ஆண்டு?
A
1764
B
1763
C
1765
D
1762
Question 60 Explanation: 
விளக்கம்: கம்பெனி நிர்வாகத்துக்குத் தெரிவிக்காமல் பாளையக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்த யூசுப் கான் துரோகக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, 1764இல் தூக்கிலிடப்பட்டார்.
Question 61
  • கூற்று (கூ): திருவிதாங்கூர், சேற்றூர், ஊற்றுமலை, சுரண்டை ஆகிய பாளையங்களைச் சேர்ந்தவர்கள் ஆங்கிலேய அணிக்கு மாறினர்.
  • காரணம் (கா): பிரெஞ்சுக்காரர்களிடமிருந்து உதவிகள் வரமுடியாத காரணத்தால், பாளையக்காரர்களின் ஒற்றுமை குலையத் தொடங்கியது.
A
கூற்று சரி; காரணம் கூற்றின் சரியான விளக்கம் ஆகும்.
B
கூற்று சரி; காரணம் தவறு
C
கூற்று மற்றும் காரணம் தவறானவை
D
கூற்று சரி; காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல
Question 61 Explanation: 
விளக்கம்:புதுச்சேரியை ஆங்கிலேயர் கைப்பற்றியதால் பிரெஞ்சுக்காரர்களின் தலையீடு இல்லாமல் ஆனது. பிரெஞ்சுக்காரர்களிடமிருந்து உதவிகள் வரமுடியாத காரணத்தால், பாளையக்காரர்களின் ஒற்றுமை குலையத் தொடங்கியது. திருவிதாங்கூர், சேற்றூர், ஊற்றுமலை, சுரண்டை ஆகிய பாளையங்களைச் சேர்ந்தவர்கள் ஆங்கிலேய அணிக்கு மாறினர்.
Question 62
களக்காட்டில் நடைபெற்ற போரில் யாருடைய படை தோற்றது?
A
யூசுப்கான்
B
மாபூஸ்கான்
C
புலித்தேவர்
D
கட்டபொம்மன்
Question 62 Explanation: 
விளக்கம்: மாபூஸ்கான் தன் படையினரைக் களக்காட்டுக்கு அருகே நிறுத்திவைப்பதற்கு முன்பே திருவிதாங்கூரிலிருந்து வந்த 2000 வீரர்கள் புலித்தேவர் படையுடன் சேர்ந்துகொண்டார்கள். களக்காட்டில் நடைபெற்ற போரில் மாபுஸ்கானின் படை தோற்றது.
Question 63
கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
  1. ஆற்காடு நவாப் மாபுஸ்கானுக்குக் கூடுதல் படைப்பிரிவை அனுப்பினார்.
  2. கர்நாடகத்திலிருந்து குதிரைப்படையினரும், காலாட்படை வீரர்களும் வந்ததால் மாபுஸ்கானின் படைபலம் அதிகரித்தது.
A
(i) சரி
B
(ii) சரி
C
(i) மற்றும் (ii) சரி
D
(i) மற்றும் (ii) தவறு
Question 63 Explanation: 
விளக்கம்: இன்னொரு பக்கம் ஆற்காடு நவாப் மாபுஸ்கானுக்குக் கூடுதல் படைப்பிரிவை அனுப்பினார். நவாபின் வலுப்படுத்தப்பட்ட படை திருநெல்வேலியை நோக்கிப் பயணித்தது. கம்பெனியைச் சேர்ந்த 1000 வீரர்களுடன், நவாப் மூலம் கூடுதலாக அனுப்பி வைக்கப்பட்ட 600 வீரர்களும் இப்போது மாபுஸ்கானிடம் இருந்தார்கள். கூடவே, கர்நாடகத்திலிருந்து குதிரைப்படையினரும், காலாட்படை வீரர்களும் வந்ததால் மாபுஸ்கானின் படைபலம் அதிகரித்தது.
Question 64
எந்த ஊர் திரும்பத் தரப்படும் என்ற வாக்குறுதி மூலமாகப் புலித்தேவர் திருவிதாங்கூரின் ஆட்சியாளரையும் தன் கூட்டமைப்பில் சேர்த்திருந்தார்?
A
முதுமலை
B
களக்காடு
C
உடுமலை
D
சங்ககிரி
Question 64 Explanation: 
விளக்கம்: ஊற்றுமலை, சுரண்டை, தலைவன்கோட்டை, நடுவக்குறிச்சி, சிங்கம்பட்டி, ஊர்க்காடு, சேத்தூர், கொல்லம்கொண்டான், வடகரை ஆகிய பாளையங்களின் ஆட்சியாளர்களும் புலித்தேவரின் கூட்டமைப்பில் சேர்ந்தனர். திருவிதாங்கூருக்குக் களக்காடு திரும்பத் தரப்படும் என்ற வாக்குறுதி மூலமாகப் புலித்தேவர் திருவிதாங்கூரின் ஆட்சியாளரையும் தன் கூட்டமைப்பில் சேர்த்திருந்தார்.
Question 65
நவாப் சந்தா சாகிப்பின் பிரதிநிதிகளுள் அல்லாதவர்?
A
மாபூஸ்கான்
B
மியானா
C
முடிமய்யா
D
நபிகான்
Question 65 Explanation: 
விளக்கம்: நவாப் சந்தா சாகிப்பின் பிரதிநிதிகளான மியானா, முடிமய்யா, நபிகான் கட்டக் ஆகிய பதான் இனத்தைச் சேர்ந்த அதிகாரிகள் மதுரையையும் திருநெல்வேலியையும் கண்காணித்து வந்தனர். அவர்கள் ஆற்காடு நவாப் முகமது அலிக்கு எதிராகத் தமிழ்ப் பாளையக்காரர்களை ஆதரித்தனர். அவர்களுடன் புலித்தேவருக்கு நெருக்கமான உறவு இருந்தது.
Question 66
மதுரை, திருநெல்வேலி பகுதிகளில் நவாபின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டவர்?
A
யாகூப் கான்
B
கான்சாகிப்
C
நானா சாகிப்
D
மாபூஸ்கான்
Question 66 Explanation: 
விளக்கம்:மாபுஸ்கான் (ஆற்காடு நவாபின் மூத்த அண்ணன்) இந்தப் பகுதிகளில் நவாபின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார். மாபுஸ்கான் கர்னல் ஹெரானுடன் திருநெல்வேலிக்கு படையெடுத்துச் சென்றார். அவர்கள் மதுரையை எளிதாகக் கைப்பற்றினர். பாஞ்சாலக்குறிச்சி பாளையத்தை ஆட்சி செய்த கட்டபொம்மனின் அதிகாரத்தைக் குறைப்பதற்காகச் சிறப்புக்குழு அனுப்பி வைக்கப்பட்டு, பிறகு அது திரும்ப வரவழைக்கப்பட்டது.
Question 67
நெற்கட்டும் செவல் கோட்டையை முற்றுகையிட்டு 1767இல் கைப்பற்றியவர்?
A
கர்னல் பெய்லி
B
கர்னல் ஃபுல்லர்ட்டன்
C
கேப்டன் கேம்பெல்
D
கர்னல் ஹெரான்
Question 67 Explanation: 
விளக்கம்: கோட்டைகளை யூசூப் கான் கைப்பற்றிய பிறகு, எங்கோ தஞ்சம் புகுந்த புலித்தேவர் தனது பாளையத்துக்குத் திரும்பி, மீண்டும் ஆங்கிலேயருக்கு எதிராகப் பாளையக்காரர்களைத் திரட்டத் தொடங்கினார். இம்முறை ஆங்கிலேயர் அனுப்பிய கேப்டன் கேம்பெல் நெற்கட்டும் செவல் கோட்டையை முற்றுகையிட்டு 1767இல் கைப்பற்றினார். புலித்தேவனின் இறுதிநாட்கள் குறித்த செய்திகள் கிடைக்கப்பெறவில்லை.
Question 68
மருதநாயகம் பிள்ளை  எங்கிருக்கும்போது இசுலாம் சமயத்தைத் தழுவினார்?
A
புதுச்சேரி
B
சென்னை
C
திண்டுக்கல்
D
திருச்சி
Question 68 Explanation: 
விளக்கம்: யூசுப் கானின் இயற்பெயர் மருதநாயகம் பிள்ளை. அவர் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். புதுச்சேரியில் இருந்தபோது, இசுலாம் சமயத்தைத் தழுவினார். 1752இல் கிளைவ் தலைமையிலான கம்பெனிப் படையில் சேர்ந்த யூசுப் கான் 1752-54இல் நடைபெற்ற திருச்சிராப்பள்ளி முற்றுகையில் பங்கேற்றார்.
Question 69
ஹைதர் அலியைத் தோற்கடித்து  சோழவந்தானைக் கைப்பற்றியவர்?
A
யூசுப்கான்
B
மாபூஸ்கான்
C
ஹெரான்
D
அயற்கூட
Question 69 Explanation: 
விளக்கம்: ஆற்காடு நவாபுக்குச் சொந்தமானதாக இருந்தாலும், கம்பெனி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருந்த மதுரை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களுக்கு 1756 முதல் 1761 வரை ஆளுநராக யூசுப்கான் பொறுப்பு வகித்தார். யூசுப்கான் ஹைதர் அலியைத் தோற்கடித்து, சோழவந்தானைக் கைப்பற்றினார்.
Question 70
லாலியின் மதராஸ் முற்றுகையின்போது யாருடைய  பங்களிப்பு சிறப்பானதாக இருந்தது?
A
யூசுப்கான்
B
மாபூஸ்கான்
C
ஹெரான்
D
அயற்கூட
Question 70 Explanation: 
விளக்கம்: லாலியின் மதராஸ் முற்றுகை (1758-59) யின்போது யூசுப்கானின் பங்களிப்பு சிறப்பானதாக இருந்தது. அவர் நிர்வாகப்பொறுப்பில் இருந்தபோது மதுரையில் நெசவுத்தொழிலை ஊக்குவித்தார். மதுரை கோயில்களில் வழிபாடு நடத்துவதற்குக் குறிப்பிட்ட தொகையை வழங்கினார். மதகுருக்கள் வசமிருந்த கோயில் நிலங்களை மீட்டெடுத்தார். ஆங்கிலேயர் அவரை ஆற்காடு நவாபுக்கு பணிசெய்ய ஆணையிட்டதால், அவர் கிளர்ச்சியில் இறங்கினார்.
Question 71
இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களாக இன்று அறியப்படும் பகுதியை ஆட்சி புரிந்தவர்கள்?
A
பாளையக்காரர்கள்
B
சேதுபதி மன்னர்கள்
C
உடையார்கள்
D
நாயக்கர்கள்
Question 71 Explanation: 
விளக்கம்: இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களாக இன்று அறியப்படும் பகுதியைச் சேதுபதி மன்னர்கள் ஆட்சி செலுத்தினர். வேலு நாச்சியார் இராமநாதபுரம் அரசரான செல்லமுத்து சேதுபதியின் மகள் ஆவார். அவர் சிவகங்கை அரசரான முத்துவடுகர் பெரியஉடையாரை மணந்தார். அவர்களுக்கு வெள்ளச்சி நாச்சியார் என்ற மகள் இருந்தார்.
Question 72
ஹைதர் அலியின் பாதுகாப்பில்  வேலு நாச்சியார் எத்தனை ஆண்டு காலம் இருந்தார்?
A
ஐந்து
B
பத்து
C
எட்டு
D
ஒன்பது
Question 72 Explanation: 
விளக்கம்: வேலு நாச்சியாரின் கணவர் நவாபின் படைகளால் கொல்லப்பட்டதும், அவர் தன் மகளுடன் தப்பித்து, திண்டுக்கல் அருகே விருப்பாச்சியில் ஹைதர் அலியின் பாதுகாப்பில் எட்டு ஆண்டு காலம் இருந்தார். இக்காலகட்டத்தில் வேலு நாச்சியார் ஒரு படையைக் கட்டமைத்தார்.
Question 73
வேலு நாச்சியார் எந்த ஆண்டு ஆங்கிலேயருடன் போரிட்டு வென்றார்?
A
1782
B
1784
C
1780
D
1781
Question 73 Explanation: 
விளக்கம்: ஆங்கிலேயரைத் தாக்கும் நோக்கத்துடன் கோபால நாயக்கர், ஹைதர் அலி ஆகியோருடன் கூட்டணி அமைத்தார். 1780இல் இவ்விருவரின் துணையோடு ஆங்கிலேயருடன் போரிட்டு வென்றார்.
Question 74
கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
  1. வேலு நாச்சியார் ஒரு பெண்கள் படையை உருவாக்கியிருந்தார்.
  2. நாச்சியாரின் படையில் இருந்த குயிலி தன் மீது நெருப்பு வைத்துக்கொண்டு, ஆங்கிலேயரின் வெடிமருந்து கிடங்கில் நுழைந்து அதை அழித்தார்.
A
(i) சரி
B
(ii) சரி
C
(i) மற்றும் (ii) சரி
D
(i) மற்றும் (ii) தவறு
Question 74 Explanation: 
விளக்கம்: வேலு நாச்சியார் ஒரு பெண்கள் படையை உருவாக்கியிருந்தார். அவர் ஆங்கிலேயரின் வெடிமருந்துக்கிடங்குகளைக் கண்டுபிடிப்பதற்குத் தன் உளவாளிகளைப் பயன்படுத்தினார். நாச்சியாரின் படையில் இருந்த குயிலி தன் மீது நெருப்பு வைத்துக்கொண்டு, ஆங்கிலேயரின் வெடிமருந்து கிடங்கில் நுழைந்து அதை அழித்தார்.
Question 75
கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
  1. நாச்சியாரின் படையிலிருந்த இன்னொரு உளவாளி அவரால் தத்தெடுக்கப்பட்ட உடையாள் ஆவார்.
  2. இவர் ஆங்கிலேயரின் ஓர் ஆயுதக்கிடங்கை வெடிக்கச் செய்வதற்காகத் தன்னையே அழித்துக்கொண்டார்.
A
(i) சரி
B
(ii) சரி
C
(i) மற்றும் (ii) சரி
D
(i) மற்றும் (ii) தவறு
Question 75 Explanation: 
விளக்கம்: நாச்சியாரின் படையிலிருந்த இன்னொரு உளவாளி அவரால் தத்தெடுக்கப்பட்ட உடையாள் ஆவார். இவர் ஆங்கிலேயரின் ஓர் ஆயுதக்கிடங்கை வெடிக்கச் செய்வதற்காகத் தன்னையே அழித்துக்கொண்டார்.
Question 76
சிவகங்கையை மீண்டும் கைப்பற்றிய நாச்சியார் யாருடைய துணையுடன் இராணியாக முடிசூடினார்?
A
மருது சகோதரர்
B
வேங்கண் பெரிய உடைய தேவர்
C
கோபால நாயக்கர்
D
முத்து ரங்கர்
Question 76 Explanation: 
விளக்கம்: ஆற்காடு நவாப் வேலு நாச்சியாருடைய படை முன்னேறி வருவதைத் தடுக்கப் பல தடைகளை ஏற்படுத்தினார். எனினும் நாச்சியார் அனைத்துத் தடைகளையும் வெற்றிகரமாக எதிர்கொண்டு சிவகங்கைக்குள் நுழைந்தார். ஆற்காடு நவாப் தோற்கடிக்கப்பட்டு, சிறைவைக்கப்பட்டார். சிவகங்கையை மீண்டும் கைப்பற்றிய நாச்சியார் மருது சகோதரர்களின் துணையுடன் இராணியாக முடிசூடினார்.
Question 77
ஆங்கிலேயரின் சமரச உடன்பாட்டின்படி சிவகங்கை அரசர் ஆனவர்?
A
பெரிய மருது
B
வேங்கண் பெரிய உடைய தேவர்
C
ஊமை துரை
D
வெள்ளைத்துரை
Question 77 Explanation: 
விளக்கம்: சின்ன மருது நாச்சியாரின் ஆலோசகராகவும் பெரிய மருது படைத் தளபதியாகவும் நியமிக்கப்பட்டனர். 1783இல் ஆங்கிலேயர் சிவகங்கைக்கு மீண்டும் படையெடுத்து வந்தனர். இம்முறை மருது பாண்டியர் சில இராஜதந்திர நடவடிக்கைகளால் சிவகங்கையின் பாதுகாப்பை உறுதிசெய்தனர். பிற்காலத்தில் ஆங்கிலேயரின் சமரச உடன்பாட்டின்படி வேங்கண் பெரிய உடைய தேவர் சிவகங்கை அரசர் ஆனார்.
Question 78
வேலு நாச்சியார் நோயுற்று  இறந்த ஆண்டு எது?
A
1790
B
1794
C
1793
D
1796
Question 78 Explanation: 
விளக்கம்: 1790இல் இவருக்கு மணம் முடித்துவைக்கப்பட்ட வெள்ளச்சி நாச்சியார் சந்தேகத்துக்கிடமான முறையில் இறந்தார். வேலு நாச்சியார் நோயுற்று 1796இல் இறந்தார்.
Question 79
வீரபாண்டிய கட்ட பொம்மன் ஆட்சி செய்த பகுதி எது?
A
நெற்கட்டும் செவல்
B
பாஞ்சாலங்குறிச்சி
C
சிறுவயல்
D
காளையார் கோவில்
Question 79 Explanation: 
விளக்கம்: வேலு நா ச்சியார் ராமநாதபுரத்திலு ம் சிவக ங்கை யி லு ம் ஆங்கிலேயருக்கு சவாலாக இருந்தபோது, வீரபாண்டிய கட்டபொம்மனின் எதிர்ப்பு வளர்ந்துகொண்டிருந்தது. கட்டபொம்மன் ஓட்டப்பிடாரத்துக்கு அருகில் உள்ள பாஞ்சாலங்குறிச்சியை ஆட்சி செய்த நாயக்கர் பாளையக்காரர் ஆவார்.
Question 80
கட்டபொம்மனின் தாத்தா ஜெகவீர கட்டபொம்மன் யாருடைய  காலத்தில் குறுநிலமன்னராக இருந்தார்?
A
கர்னல் பெய்லி
B
கர்னல் ஃபுல்லர்ட்டன்
C
கர்னல் லேங்
D
கர்னல் ஹெரான்
Question 80 Explanation: 
விளக்கம்: இவர் 1761இல் பிறந்தார். கட்டபொம்மன் நாயக்கர் என்பது அவரது குடும்பப் பட்டமாகும். கட்டபொம்மனின் தாத்தா ஜெகவீர கட்டபொம்மன் கர்னல் ஹெரான் காலத்தில் குறுநிலமன்னராக இருந்தார். வீரபாண்டிய கட்டபொம்மன் தனது 30ஆம் வயதில் பாஞ்சாலங்குறிச்சி பாளையத்துக்குப் பொறுப்பேற்றார்.
Question 81
கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
  1. 1798 மே 31 வரை பாஞ்சாலங்குறிச்சி பாளையம் கம்பெனிக்குக் கட்டாது வைத்திருந்த கப்பத்தொகை 3310 பகோடாக்கள் (வராகன்).
  2. 1798 செப்டம்பர் மாதத்துக்கான கப்பமும் செலுத்தப்படாததால், கலெக்டர் ஜாக்சன் வீரபாண்டிய கட்டபொம்மனுக்குக் கடிதம் அனுப்பினார்.
A
(i) சரி
B
(ii) சரி
C
(i) மற்றும் (ii) சரி
D
(i) மற்றும் (ii) தவறு
Question 81 Explanation: 
விளக்கம்: கம்பெனிக்கும் தென்சீமை பாளையத்தாருக்கும் தொடர்ந்து மோதல் இருந்ததால், கம்பெனிக்கு அவர்கள் கப்பம் செலுத்துவது ஒரு பிரச்னையாகவே நீடித்தது. 1798 மே 31 வரை பாஞ்சாலங்குறிச்சி பாளையம் கம்பெனிக்குக் கட்டாது வைத்திருந்த கப்பத்தொகை 3310 பகோடாக்கள் (வராகன்). 1798 செப்டம்பர் மாதத்துக்கான கப்பமும் செலுத்தப்படாததால், கலெக்டர் ஜாக்சன் அவருக்கே உரிய ஆணவத்துடன் வீரபாண்டிய கட்டபொம்மனுக்குக் கடிதம் அனுப்பினார்.
Question 82
திப்புசுல்தான் ஆட்சியில் மைசூரில் ஒரு பகோடா எத்தனை ரூபாய்க்குச் சமமாகக் கொள்ளப்பட்டது?
A
மூன்றரை ரூபாய்
B
நான்கரை ரூபாய்
C
இரண்டரை ரூபாய்
D
மூன்று ரூபாய்
Question 82 Explanation: 
விளக்கம்: விஜயநகரத்தில் அறிமுகமான தங்க நாணயம் பகோடா எனப்பட்டது. ஐரோப்பிய வணிகர்கள் இந்தியாவுக்கு வந்த காலகட்டத்தில் இப்பணம் செல்வாக்கு பெற்று விளங்கியது. திப்புசுல்தான் ஆட்சியில் மைசூரில் ஒரு பகோடா மூன்றரை ரூபாய்க்குச் சமமாகக் கொள்ளப்பட்டது.
Question 83
'பகோடா மரத்தை உலுக்குதல்’ என்ற சொலவடை எந்த நாட்டு மக்களிடையே நிலவியது?
A
போலந்து
B
பிரான்ஸ்
C
இங்கிலாந்து
D
டென்மார்க்
Question 83 Explanation: 
விளக்கம்: ‘பகோடா மரத்தை உலுக்குதல்’ என்ற சொலவடை இங்கிலாந்து மக்களிடையே நிலவியது. ஒருவரை அதிர்ஷ்டசாலி ஆக்கும் வாய்ப்புகள் இந்தியாவில் குவிந்து கிடக்கின்றன என்ற ஐரோப்பியர்களின் அக்கால மனநிலையை இதன் மூலம் நாம் உணரலாம். தமிழில் இதனை வராகன் என்பர்.
Question 84
  • கூற்று (கூ): கலெக்டர் ஜாக்சன் வீரபாண்டிய கட்டபொம்மனைத் தண்டிக்கும் நோக்குடன் ஒரு படையை அனுப்ப விரும்பினாலும், சென்னை நிர்வாகம் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.
  • காரணம் (கா): திருநெல்வேலியிருந்த படை வீரர்களை மைசூரில் திப்பு சுல்தானுக்கு எதிராகப் போரிடுவதற்காகக் கம்பெனி ஏற்கனவே அனுப்பியிருந்தது.
A
கூற்று சரி; காரணம் கூற்றின் சரியான விளக்கம் ஆகும்.
B
கூற்று சரி; காரணம் தவறு
C
கூற்று மற்றும் காரணம் தவறானவை
D
கூற்று சரி; காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல
Question 84 Explanation: 
விளக்கம்:நாட்டில் கடுமையான வறட்சி ஏற்பட்டதால், வரி வசூலிப்பது மிகக்கடினமான வேலை ஆனது. கலெக்டர் ஜாக்சன் வீரபாண்டிய கட்டபொம்மனைத் தண்டிக்கும் நோக்குடன் ஒரு படையை அனுப்ப விரும்பினாலும், சென்னை நிர்வாகம் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. திருநெல்வேலியிருந்த படை வீரர்களை மைசூரில் திப்பு சுல்தானுக்கு எதிராகப் போரிடுவதற்காகக் கம்பெனி ஏற்கனவே அனுப்பியிருந்தது. இந்த நிலையில் மிகவும் தொலைவிலிருந்த தெற்குப்பகுதியில் போர் செய்வது ஆபத்து எனக் கம்பெனி கருதியது.
Question 85
கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
  1. சென்னை நிர்வாகம்  பிரச்னையில் தொடர்புடைய பாளையக்காரரை இராமநாதபுரத்துக்கு வரவழைத்து, கலந்தாலோசனை செய்யும்படி கலெக்டருக்கு உத்தரவிட்டது.
  2. 1798 ஆகஸ்ட் 18 அன்று ஜாக்சன் இருவாரங்களுக்குள் தன்னை இராமநாதபுரத்துக்கு வந்து சந்திக்கும்படி வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு உத்தரவிட்டார்.
A
(i) சரி
B
(ii) சரி
C
(i) மற்றும் (ii) சரி
D
(i) மற்றும் (ii) தவறு
Question 85 Explanation: 
விளக்கம்: சென்னை நிர்வாகம் பிரச்னையில் தொடர்புடைய பாளையக்காரரை இராமநாதபுரத்துக்கு வரவழைத்து, கலந்தாலோசனை செய்யும்படி கலெக்டருக்கு உத்தரவிட்டது. அதன்படி, 1798 ஆகஸ்ட் 18 அன்று ஜாக்சன் இருவாரங்களுக்குள் தன்னை இராமநாதபுரத்துக்கு வந்து சந்திக்கும்படி வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு உத்தரவு பிறப்பித்துவிட்டு, தி ரு நெல்வேலி சுற்றுப்பயணத்தைத் துவக்கினார்.
Question 86
வீர பாண்டிய கட்டபொம்மனுக்கு கலெக்டரை எங்கு சந்திக்க முடியும் என அறிவுறுத்தப்பட்டது?
A
திருநெல்வேலி
B
இராமநாதபுரம்
C
சிவகங்கை
D
மதுரை
Question 86 Explanation: 
விளக்கம்: பாளையக்காரர்களிடமிருந்து கப்பம் வசூலிப்பதற்காகச் சொக்கம்பட்டி, சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆகிய இடங்களில் அவர் தங்கியிருந்தபோது வீரபாண்டியக் கட்டபொம்மன் அவரைச் சந்திக்க முயன்றார். ஆனால் இராமநாதபுரத்தில்தான் கலெக்டரைச் சந்திக்க முடியும் என அவருக்கு அறிவுறுத்தப்பட்டது.
Question 87
கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
  1. கட்டபொம்மன் 23 நாட்களில் 400 மைல் தூரம் பயணித்த கலெக்டரைச் சளைக்காமல் பின்தொடர்ந்து, செப்டம்பர் 19ஆம் நாள் திருநெல்வேலியை அடைந்தார்.
  2. கட்டபொம்மன் சரியாக நடந்துகொண்டதாகவும் இதன் மூலம் அவர் தன்னை அழிவிலிருந்து காத்துக்கொண்டதாகவும் ஜாக்சன் திருப்தியுடன் கூறினார்.
A
(i) சரி
B
(ii) சரி
C
(i) மற்றும் (ii) சரி
D
(i) மற்றும் (ii) தவறு
Question 87 Explanation: 
விளக்கம்: அவமதிப்பையும் மீறி, கட்டபொம்மன் 23 நாட்களில் 400 மைல் தூரம் பயணித்த கலெக்டரைச் சளைக்காமல் பின்தொடர்ந்து, செப்டம்பர் 19ஆம் நாள் இராமநாதபுரத்தை அடைந்தார். கலெக்டரைச் சந்திப்பதற்கான வாய்ப்பு அன்றே தரப்பட்டது. கட்டபொம்மன் சரியாக நடந்துகொண்டதாகவும் இதன் மூலம் அவர் தன்னை அழிவிலிருந்து காத்துக்கொண்டதாகவும் ஜாக்சன் திருப்தியுடன் கூறினார்.
Question 88
கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
  1. கட்டபொம்மன் கப்பத்தொகையில் பெரும்பகுதியைச் செலுத்திவிட்டதையும் 1080 வராகன் மட்டுமே பாக்கி இருப்பதையும் ஜாக்சன் அறிந்துகொண்டார்.
  2. சந்திப்பின்போது ஆணவக்குணம் கொண்ட ஜாக்சன் முன்னால் கட்டபொம்மனும் அவருடைய அமைச்சர் சிவசுப்பிரமணிய பிள்ளையும் நின்றபடி உரையாட வேண்டியிருந்தது.
A
(i) சரி
B
(ii) சரி
C
(i) மற்றும் (ii) சரி
D
(i) மற்றும் (ii) தவறு
Question 88 Explanation: 
விளக்கம்: கட்டபொம்மன் கம்பெனிக்குச் செலுத்த வேண்டிய கப்பத்தொகையில் பெரும்பகுதியைச் செலுத்திவிட்டதையும் 1080 வராகன் மட்டுமே பாக்கி இருப்பதையும் கணக்குகளைச் சரிபார்த்து அவர் அறிந்துகொண்டார். இந்தச் சந்திப்பின்போது ஆணவக்குணம் கொண்ட ஜாக்சன் முன்னால் கட்டபொம்மனும் அவருடைய அமைச்சர் சிவசுப்பிரமணிய பிள்ளையும் நின்றபடி உரையாட வேண்டியிருந்தது.
Question 89
ஜாக்சன் சந்திப்பின்போது கட்டபொம்மன் தரப்பில்  கைது செய்யப்பட்டவர்?
A
சிவசுப்பிரமணிய பிள்ளை
B
சிவசுந்தரம் பிள்ளை
C
சிங்காரம் பிள்ளை
D
ஊமைத்துரை
Question 89 Explanation: 
விளக்கம்: சந்திப்பின் இறுதியில் ஜாக்சன் இருவரையும் இராமநாதபுரம் கோட்டையில் தங்கும்படி கூறினார். அங்கு திடீரென வந்த வீரர்கள் கட்டபொம்மனைக் கைது செய்யவே வந்திருந்தார்கள் என்பது வெளிப்படையாகவே தெரிந்தது. கட்டபொம்மனும் அமைச்சரும் தப்ப முயன்றனர். கோட்டைவாசலில் நடந்த மோதலில் லெப்டினெண்ட் க்ளார்க் உள்ளிட்ட சிலர் கொல்லப்பட்டார்கள். சிவசுப்பிரமணிய பிள்ளை கைது செய்யப்பட்டடா ர். கட்டபொம்மன் மட்டுமே தப்ப முடிந்தது.
Question 90
கம்பெனி நிர்வாகத்திடம் கட்டபொம்மன் சரணடையும்படி அறிவிப்பு வெளியிட்டவர்?
A
தாமஸ் மன்றோ
B
ஹெக்டர் மன்றோ
C
எட்வர்டு கிளைவ்
D
ஜாக்சன்
Question 90 Explanation: 
விளக்கம்:பாஞ்சாலங்குறிச்சிக்குத் திரும்பிய கட்டபொம்மன் தன்னிடம் ஜாக்சன் நடந்துகொண்ட முறையே இராமநாதபுரத்தில் நடந்த மோதலுக்குக் காரணம் என்று சென்னை கவுன்சிலுக்குக் கடிதம் அனுப்பினார். இதற்கிடையே ஆளுநர் எட்வர்டு கிளைவ் கம்பெனி நிர்வாகத்திடம் கட்டபொம்மன் சரணடையும்படி அறிவிப்பு வெளியிட்டார். இவ்வாறு கட்டபொம்மன் சரணடைந்தால் நேர்மையான விசாரணை நடைபெறும் என்றும் இதற்கு உடன்படாவிட்டால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
Question 91
ஜாக்சன் பணிநீக்கம் செய்யப்பட்டவுடன்  புதிய கலெக்டராக நியமிக்கப்பட்டவர்?
A
லூஷிங்டன்
B
எட்வார்ட் கிளைவ்
C
ஸ்டெர்லிங்
D
ஹெரான்
Question 91 Explanation: 
விளக்கம்: கட்டபொம்மன் கம்பெனி விசாரணைக்குழுவிடம் நேரில் சென்று விளக்கம் அளித்தார். கலகக் குற்றச்சாட்டுகளிலிருந்து கட்டபொம்மனை விடுவித்த குழு, கலெக்டர் நடந்துகொண்ட விதத்துக்காக அவரைக் கண்டித்தது. லூஷிங்டன் புதிய கலெக்டராக நியமிக்கப்பட்டார். இறுதியில் ஜாக்சன் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
Question 92
மருது பாண்டியர்கள் ______________________ இணைந்து ஆங்கிலேயருக்கு எதிரான கூட்டமைப்பை உருவாக்கும் முயற்சியில் இருந்தார்கள்?
A
கோபால நாயக்கர்
B
யாதுல் நாயக்கர்
C
a மற்றும் b)
D
சிவகிரி பாளையக்காரர்
Question 92 Explanation: 
விளக்கம்:கட்டபொம்மன் தனது பிரச்சனை இன்னும் தீரவில்லை என்ற கொதிப்புடன்தான் இருந்தார். இந்தச் சூழலில் மருது பாண்டியர்கள் திண்டுக்கல் கோபால நாயக்கருடனும் ஆனைமலை யாதுல் நாயக்கருடனும் இணைந்து ஆங்கிலேயருக்கு எதிரான கூட்டமைப்பை உருவாக்கும் முயற்சியில் இருந்தார்கள். இதே விருப்பத்துடன் இருந்த கட்டபொம்மனும் மருது பாண்டியரும் நெருக்கமானார்கள்.
Question 93
மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் வலுவான அரண்களுடன் மிகப் பாதுகாப்பாக இருந்த கோட்டை எது?
A
நெற்கட்டும் செவல்
B
மலைக்கோட்டை
C
காளையார் கோவில்
D
சிவகிரிக்கோட்டை
Question 93 Explanation: 
விளக்கம்: கட்ட பொம்மன் சிவகிரி பாளையக்காரருடனும் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டார். பாஞ்சாலங்குறிச்சி திறந்த சமவெளிப்பகுதியில் எளிதாகத் தாக்குதலுக்குள்ளாகும் விதத்தில் அமைந்திருந்தது. சிவகிரிக்கோட்டை மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் வலுவான அரண்களுடன் மிகப் பாதுகாப்பாக தாக்குதல், எதிரிகளிடமிருந்து பாதுகாத்துக்கொள்ளுதல் ஆகிய இரு நடவடிக்கைகளுக்கும் பொருத்தமானதாக இருந்தது.
Question 94
கட்டபொம்மனின் நிலையைப் பலப்படுத்துவதற்காகச் சென்ற  சிவகிரி பாளையக்காரரின் மகன்?
A
செங்கணான்
B
வீரபாண்டியன்
C
சோழ வேழன்
D
பொதிய வெற்பன்
Question 94 Explanation: 
விளக்கம்: கட்டபொ ம்மனின் நிலையைப் பலப்படுத்துவதற்காகச் சிவகிரி பாளையக்காரரின் மகன் வீரபாண்டியன் தன் வீரர்களுடனும் கூட்டணியில் இருந்த பிற தலைவர்களுடனும் தளவாய் குமாரசாமி நாயக்கரின் தலைமையில் மேற்கு நோக்கி அணிவகுத்துச் சென்றார். சிவகிரிபாளையம் கம்பெனிக்குக் கட்டுப்பட்டதாக இருந்ததால், வீரபாண்டியனின் இந்நடவடிக்கையை சென்னைக் கம்பெனி அரசு தனக்கு விடுக்கப்பட்ட சவாலாகக் கருதி தாக்குதலுக்கு உத்தரவிட்டது.
Question 95
கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
  1. 1798 மே மாதத்தில் வெல்லெஸ்லி பிரபு திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், மதுரை ஆகிய இடங்களில் இருந்த படைகளை் திருநெல்வேலிக்கு அனுப்ப உத்தரவு பிறப்பித்தார்.
  2. மேஜர் பானர்மேன் அதிக ஆற்றல் கொண்ட போர்த்தளவாடங்களுடன் படைகளை வழிநடத்தினார்.
A
i சரி
B
ii சரி
C
i மற்றும் (ii) சரி
D
i மற்றும் (ii) தவறு
Question 95 Explanation: 
விளக்கம்: 1799 மே மாதத்தில் வெல்லெஸ்லி பிரபு திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், மதுரை ஆகிய இடங்களில் இருந்த படைகளை் திருநெல்வேலிக்கு அனுப்ப உத்தரவு பிறப்பித்தார். திருவனந்தபுரம் அரசரின் படையும் ஆங்கிலேயருடன் இணைந்தது. மேஜர் பானர்மேன் அதிக ஆற்றல் கொண்ட போர்த்தளவாடங்களுடன் படைகளை வழிநடத்தினார்.
Question 96
கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
  1. 1799 ஜூன் 1 அன்று கட்டபொம்மன் 500 ஆட்களுடன் சிவகங்கைக்குச் சென்றார்.
  2. பழையனாறு என்ற இடத்தில் மருதுவுடன் தீவிர ஆலோசனை நடத்தினார்.
A
i சரி
B
ii சரி
C
i மற்றும் (ii) சரி
D
i மற்றும் (ii) தவறு
Question 96 Explanation: 
விளக்கம்: 1799 ஜூன் 1 அன்று கட்டபொம்மன் 500 ஆட்களுடன் சிவகங்கைக்குச் சென்றார். பழையனாறு என்ற இடத்தில் மருதுவுடன் தீவிர ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, சிவகங்கையிலிருந்து ஆயுதம் தரித்து வந்த 500 பேருடன் கட்டபொம்மன் பாஞ்சாலங்குறிச்சிக்குத் திரும்பினார்.
Question 97
கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
  1. நாகலாபுரம், மன்னர்கோட்டை, பாவாலி, கோலார்பட்டி, செந்நல்குடி ஆகிய பாளையங்களின் தலைவர்கள் மருது சகோதரர்களின் முயற்சியால் ஏற்கனவே ஒன்று சேர்ந்திருந்தார்கள்.
  2. கட்டபொம்மன் தன் செல்வாக்கையும் நிதியாதாரங்களையும் முன்னிறுத்தி, இந்த அணியில் சேர்ந்து அதன் தலைவர் ஆனார்.
A
i சரி
B
ii சரி
C
i மற்றும் (ii) சரி
D
i மற்றும் (ii) தவறு
Question 97 Explanation: 
விளக்கம்: நாகலாபுரம், மன்னர்கோட்டை, பாவாலி, கோலார்பட்டி, செந்நல்குடி ஆகிய பாளையங்களின் தலைவர்கள் மருது சகோதரர்களின் முயற்சியால் ஏற்கனவே ஒன்று சேர்ந்திருந்தார்கள். அவர்கள் கம்பெனியின் ஆட்சிப்பகுதிகளிலிருந்த சில குறிப்பிட்ட கிராமங்களில் வரி வசூலிக்கும் உரிமையை உறுதிப்படுத்தி இருந்தார்கள். கட்டபொம்மன் தன் செல்வாக்கையும் நிதியாதாரங்களையும் முன்னிறுத்தி, இந்த அணியில் சேர்ந்து அதன் தலைவர் ஆனார். இக்கூட்டமைப்பை ஏற்படுத்த சாப்டூர், ஏழாயிரம்பண்ணை, காடல்குடி, குளத்தூர் ஆகியவற்றின் பாளையக்காரர்களையும் அதில் சேரும்படி வலியுறுத்தினார்.
Question 98
பானர்மேன் தன்னைக் கட்டபொம்மன் எங்கு சந்திக்கும்படி இறுதி எச்சரிக்கை விடுத்தார்?
A
திருநெல்வேலி
B
திருச்சி
C
பாளையங்கோட்டை
D
ராமநாதபுரம்
Question 98 Explanation: 
விளக்கம்: 1799 செப்டம்பர், 1 அன்று மேஜர் பானர்மேன் தன்னைக் கட்டபொம்மன் பாளையங்கோட்டையில் சந்திக்கும்படி இறுதி எச்சரிக்கை விடுத்தார். கட்டபொம்மன் சந்திப்பைத் தவிர்த்ததால், பானர்மேன் போர் தொடுக்க முடிவெடுத்தார். செப்டம்பர் 5ஆம் நாள் கம்பெனி படை பாஞ்சாலங்குறிச்சியைச் சென்றடைந்தது.
Question 99
கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
  1. கட்டபொம்மனின் கோட்டை 500 அடி நீளத்திலும் 300 அடி அகலத்திலும் முழுவதும் மண்ணில் கட்டப்பட்டிருந்தது.
  2. கட்டபொம்மனின் வீரர்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டன.
A
i சரி
B
ii சரி
C
i மற்றும் (ii) சரி
D
i மற்றும் (ii) தவறு
Question 99 Explanation: 
விளக்கம்: கட்டபொம்மனின் கோட்டை 500 அடி நீளத்திலும் 300 அடி அகலத்திலும் முழுவதும் மண்ணில் கட்டப்பட்டிருந்தது. ஆங்கிலேயப்படை கோட்டையின் தகவல்தொடர்புக்கான வழிகளைத் துண்டித்தது. கட்டபொம்மனின் வீரர்கள் கம்பீரத்துடனும் வீரத்துடனும் போரிட்டார்கள். அவர்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டன.
Question 100
கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
  1. 1799 செப்டம்பர், 16 அன்று ஆங்கிலேயருக்குக் கூடுதல் வலு சேர்ப்பதற்கான உதவிகள் பாளையங்கோட்டையிலிருந்து வந்து சேர்ந்தன.
  2. கட்டபொம்மனின் கோட்டைக்கான காவற்படை வெளியேறி காடல்குடியை அடைந்தது.
A
i சரி
B
ii சரி
C
i மற்றும் (ii) சரி
D
i மற்றும் (ii) தவறு
Question 100 Explanation: 
விளக்கம்: கம்பெனிப் படைக்குக் கூடுதல் எண்ணிக்கையில் வீரர்கள் தேவைப்பட்டனர். 1799 செப்டம்பர், 16 அன்று ஆங்கிலேயருக்குக் கூடுதல் வலு சேர்ப்பதற்கான உதவிகள் பாளையங்கோட்டையிலிருந்து வந்து சேர்ந்தன. அவர்களின் தொடர்ச்சியான தாக்குதலால் சுவர்கள் உடைந்து கோட்டை பலவீனம் அடைந்ததால், கோட்டைக்கான காவற்படை வெளியேறி காடல்குடியை அடைந்தது.
Question 101
எங்கு நடந்த மோதலில் கட்டபொம்மனின் அமைச்சர் சிவசுப்பிரமணிய பிள்ளை பிடித்துவைக்கப்பட்டார்?
A
கோலார்பட்டி
B
களக்காடு
C
காளையார் கோவில்
D
காடல்குடி
Question 101 Explanation: 
விளக்கம்: கோலார்பட்டியில் நடந்த மோதலில் கட்டபொம்மனின் அமைச்சர் சிவசுப்பிரமணிய பிள்ளை பிடித்துவைக்கப்பட்டார். நாலாபுறமும் எதிர்ப்பைக் காட்டிய தலைவர்களுக்குரிய பிற பாதுகாப்பு அரண்கள் அனைத்தும் ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டுக்கு வந்தன. ஆங்கிலேயப்படையைக் கண்டதும், மேற்குப் பாளையத்தாரும் சரணடைந்தனர்.
Question 102
விஜய ரகுநாத தொண்டைமான் எங்கு கட்டபொம்மனைப் பிடித்து ஆங்கிலேயரிடம் ஒப்படைத்தார்?
A
களப்பூர் காடு
B
களக்காடு
C
காளையார் கோவில்
D
காடல்குடி
Question 102 Explanation: 
விளக்கம்:புதுக்கோட்டை மன்னர் விஜய ரகுநாத தொண்டைமான் களப்பூர் காட்டிலிருந்த கட்டபொம்மனைப் பிடித்து, ஆங்கிலேயரிடம் ஒப்படைத்தார். கட்டபொம்மனின் ஆதரவாளர்கள் மருது சகோதரர்கள், கோபால நாயக்கர் ஆகியோருடன் இணைவதற்குச் சிவகங்கைக்கும் திண்டுக்கல் மலைக் குன்றுகளுக்கு ம் விரைந்தனர்.
Question 103
கட்டபொம்மனைக் கயத்தாறு என்னுமிடத்தில் பாளையக்காரர்கள் கூடியிருந்த அவையில் விசாரணை செய்தவர்?
A
கர்னல் ஹெரான்
B
எட்வர்ட் கிளைவ்
C
பானர்மேன்
D
கேம்ப் பெல்
Question 103 Explanation: 
விளக்கம்: 1799 அக்டோபர் 16 அன்று பானர்மேன் கட்டபொம்மனைக் கயத்தாறு என்னுமிடத்தில் பாளையக்காரர்கள் கூடியிருந்த அவையில் விசாரணை செய்தார். அது கேலிக்கூத்தான விசாரணையாகவே இருந்தது. கட்டபொம்மன் மரணத்தைப் பற்றிக் கவலைப்படாமல், தன் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஒத்துக்கொண்டார்.
Question 104
கட்டபொம்மன் கயத்தாறு பழைய கோட்டைக்கு அருகில் தூக்கிலிடப்பட்ட நாள்?
A
அக்டோபர் 17
B
அக்டோபர் 16
C
அக்டோபர் 12
D
அக்டோபர் 26
Question 104 Explanation: 
விளக்கம்:அவர் சிவகிரிக்கு எதிராக ஆயுதந்தரித்த வீரர்களை அனுப்பியதையும் பாஞ்சாலங்குறிச்சிப் போரில் ஆங்கிலேயப்படைகளுக்கு எதிராகப் போரிட்டதையும் ஒத்துக்கொண்டார். அக்டோபர் 17ஆம் நாளில் கட்டபொம்மன் கயத்தாறு பழைய கோட்டைக்கு அருகில் தூக்கிலிடப்பட்டார். கட்டபொம்மனுடைய வீரச்செயல்களைக் கருப்பொருளாகக் கொண்ட நாட்டுப்புறப்பாடல்கள் மக்களிடையே அவரது நினைவை இன்றுவரை உயிர்ப்புடன் வைத்துள்ளன.
Question 105
ஸ்தலக்காவல், தேசக்காவல் ஆகியவற்றுக்கான உரிமைகளை கம்பெனிக்குக் கொடுத்தவர்?
A
ஆற்காடு நவாப்
B
மாபூஸ்கான்
C
யூசுப் கான்
D
ஹைதர் அலி
Question 105 Explanation: 
விளக்கம்: ஆற்காடு நவாப் 1772ஆம் ஆண்டு உடன்படிக்கை மூலம் ஸ்தலக்காவல், தேசக்காவல் ஆகியவற்றுக்கான உரிமைகளை கம்பெனிக்குக் கொடுத்திருந்தார். இது பாளையக்காரர்கள், பாளையக்காரர்கள் அல்லாதோர் ஆகிய இரு தரப்பினரின் ஆட்சிப்பகுதிகளிலுமிருந்த காவல் தலைவர்களைப் பாதித்தது. அதிருப்தியடைந்த காவல்காரர்களும் அவர்களின் தலைவர்களும் நவாபுக்கும் கம்பெனிக்கும் எதிராகப் பாளையக்காரர்களுடன் சேர்ந்தார்கள்.
Question 106
சின்ன மருதுவும் பெரிய மருதுவும் யாரை சிவகங்கையின் இராணியாக அறிவித்தனர்?
A
வேலு நாச்சியார்
B
தாமரை நாச்சியார்
C
உடையாள்
D
வெள்ளச்சி நாச்சியார்
Question 106 Explanation: 
விளக்கம்:சிவகங்கை பெரிய உடைய தேவர், நவாப் படைக்கு எதிரான சண்டையில் உயிரிழந்ததால் நிர்வாகப் பொறுப்பை எடுத்துக்கொண்ட சின்ன மருதுவும் பெரிய மருதுவும் நவாப் படையை வெளியேற்றினார்கள். பெரிய உடைய தேவர், வேலு நாச்சியார் ஆகியோரின் மகளான வெள்ளச்சி நாச்சியாரை சிவகங்கையின் இராணியாக அறிவித்தனர். அவர்கள் அமைச்சர் பொறுப்புகளை ஏற்றனர்.
Question 107
கிளர்ச்சியாளர்கள் கூடுமிடமாகவும் அவர்களது அடையாளமாகவும் இருந்தது எது?
A
நெற்கட்டும் செவல்
B
காளையார் கோவில்
C
பாஞ்சாலங்குறிச்சி
D
களக்காடு
Question 107 Explanation: 
விளக்கம்:அன்றைய சிவகங்கைக் காட்டின் நடுவில் இருந்த காளையார்கோவில், கிளர்ச்சியாளர்கள் கூடுமிடமாகவும் அவர்களது அடையாளமாகவும் இருந்தது. வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டதும், அவருடைய சகோதரர் ஊமைத்துரை கமுதியைச் சென்றடைந்தார். அங்கிருந்து அவரைச் சின்ன மருது சிவகங்கையின் தலைநகரான சிறுவயலுக்கு அழைத்துச் சென்றார்.
Question 108
இராமநாதபுரத்தின்  கிளர்ச்சியாளர்கள் யாரைத் தங்கள் ஆட்சியாளராக அறிவித்தனர்.
A
முத்துக்கருப்பத் தேவர்
B
முத்துராமலிங்கத் தேவர்
C
பெரிய உடையார் தேவர்
D
வேங்கண்மாண் தேவர்
Question 108 Explanation: 
விளக்கம்:நவாப் முகமது அலி முத்துராமலிங்கத் தேவரைச் சிறையிலிருந்து விடுவித்து, அவரை இராமநாதபுரத்தின் சேதுபதியாக முடிசூட்டினார். ஆனால் கிளர்ச்சியாளர்கள் முத்துக்கருப்பத் தேவரைத் தங்கள் ஆட்சியாளராக அறிவித்தனர். மேலும் அரசின் தெற்குப் பதியையும் வடக்குப் பகுதியையும் ஆக்கிரமித்தனர். கிளர்ச்சியாளர்களின் வீரர்கள் மதுரைக்குள்ளும் நுழைந்தனர்.
Question 109
ஊமைத்துரை தன் ஆதரவாளர்களுடன் மதுரையில் உள்ள  எந்த  பகுதியைக் கைப்பற்றினார்?
A
கமுதி
B
பாஞ்சாலங்குறிச்சி
C
பழையநாடு
D
சிறுவயல்
Question 109 Explanation: 
விளக்கம்: ஜூலையில் ஊமைத்துரை தன் ஆதரவாளர்களுடன் மதுரையில் உள்ள பழையநாடு என்னும் பகுதியைக் கைப்பற்றினார். 1801இல் சின்ன மருதுவின் மகன் செவத்த தம்பியின் தலைமையில் சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய இரு பகுதிகளைச் சேர்ந்த படைகளும் இணைந்து, கடற்கரை வழியாகத் தஞ்சாவூர் நோக்கி அணிவகுத்துச் சென்றன.
Question 110
தஞ்சாவூரில் இருந்த பாதிக்கப்பட்ட விவசாயிகள் யாருடைய படையில் சேர்ந்தனர்?
A
செவத்த தம்பி
B
ஊமைத்துரை
C
துரைசாமி
D
வெள்ளைத்துரை
Question 110 Explanation: 
விளக்கம்: தஞ்சாவூரில் இருந்த பாதிக்கப்பட்ட விவசாயிகளும் செவத்த தம்பியின் படையில் சேர்ந்தனர். தஞ்சாவூர் ஸ்தானிகர் ஆக இருந்த கேப்டன் வில்லியம் ப்ளாக்பர்ன் படைகளைத் திரட்டி, மாங்குடி அருகே செவத்த தம்பியை வென்றார். தஞ்சாவூர் ராஜா சரபோஜி ஆங்கிலேயருக்குத் துணையாக நின்றார். இருப்பினும் வீரர்கள் ஆங்கிலேயர் படை பின் தொடர்தலிலிருந்து தப்பித்து, கடந்து சென்ற பகுதிகளை எல்லாம் அழித்து நாசமாக்கி சென்றனர்.
Question 111
சிவகங்கையின் ஆட்சியாளராகக் கம்பெனியால் அங்கீகரிக்கப்பட்டவர்?
A
முத்துக்கருப்பத் தேவர்
B
முத்துராமலிங்கத் தேவர்
C
ஒய்யாத்தேவர்
D
வேங்கண்மாண் தேவர்
Question 111 Explanation: 
விளக்கம்:தென்னிந்தியக் கிளர்ச்சி (1801): திப்புவையும் கட்டபொம்மனையும் ஆங்கிலேயர் வென்ற பின்னர், அவர்களின் படைகள் பல்வேறு முனைகளிலிருந்து திரும்பி இராமநாதபுரத்திலும் சிவகங்கையிலும் கிளர்ச்சியாளர்களை எதிர்கொள்ள முடிந்தது. சிவகங்கையின் முன்னாள் ஆட்சியாளரின் வழித்தோன்றல் படமாத்தூர் ஒய்யாத்தேவரின் ஆதரவையும் கிழக்கிந்தியக் கம்பெனி பெற முடிந்தது. அவர் சிவகங்கையின் ஆட்சியாளராகக் கம்பெனியால் அங்கீகரிக்கப்பட்டார். இந்தப் பிரித்தாளும் தந்திரம் அரசரின் ஆதரவாளர்களிடையே பிளவை ஏற்படுத்தி, இறுதியில் கிளர்ச்சியாளர்களை மனந்தளர வைத்தது.
Question 112
கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
  1. 1801 மே மாதத்தில் அக்னியு தலைமையிலான ஒரு படைப்பிரிவு தன் நடவடிக்கைகளைத் துவக்கியது.
  2. அக்னியு தலைமையிலான  படை மானாமதுரை, பார்த்திபனூர் வழியாகப் பயணித்து, கிளர்ச்சியாளர்கள் வசமிருந்த பரமக்குடி அரண்களை ஆக்கிரமித்தது.
A
i சரி
B
ii சரி
C
i மற்றும் (ii) சரி
D
i மற்றும் (ii) தவறு
Question 112 Explanation: 
விளக்கம்: 1801 மே மாதத்தில் அக்னியு தலைமையிலான ஒரு படைப்பிரிவு தன் நடவடிக்கைகளைத் துவக்கியது. இப்படை மானாமதுரை, பார்த்திபனூர் வழியாகப் பயணித்து, கிளர்ச்சியாளர்கள் வசமிருந்த பரமக்குடி அரண்களை ஆக்கிரமித்தது. மோதலின்போது இரு தரப்பிலும் பெரும் சேதம் ஏற்பட்டது. ஆனால் கிளர்ச்சியாளர்களின் அடங்காத எதிர்ப்பும் மருது சகோதரர்களின் வீரம் செறிந்த சண்டைகளும் ஆங்கிலேயரின் நடவடிக்கையை மிகவும் கடினமாக்கியது. முடிவில், ஆங்கிலேயரின் படை வலிமையும் தளபதிகளின் திறமையுமே வெற்றி பெற்றன.
Question 113
புரட்சியாளர்களை ஆங்கிலேயர் கைது செய்த இடத்துடன் பொருத்துக.
  1. மருது பாண்டியர்         -1. சிங்கம்புணரி
  2. செவத்தையா              - 2. வத்தலகுண்டு
  3. துரைசாமி                      - 3. மதுரை
A
1, 2, 3
B
2, 3, 1
C
3, 2, 1,
D
2, 1, 3
Question 113 Explanation: 
விளக்கம்: ஆங்கிலேயர் ஊமைத்துரையைக் கைது செய்ததைத் தொடர்ந்து, மருது பாண்டியரைச் சிங்கம்புணரி குன்றுகளிலும் செவத்தையாவை வத்தலகுண்டு பகுதியிலும் வெள்ளை மருதின் மகன் துரைசாமியை மதுரைக்கு அருகிலும் கைது செய்தனர்.
Question 114
மருது சகோதரர்கள் எங்கு தூக்கிலிடப்பட்டனர்?
A
திருப்பத்தூர்
B
பாஞ்சாலங்குறிச்சி
C
சங்ககிரி
D
கயத்தாறு
Question 114 Explanation: 
விளக்கம்:சின்ன மருதுவும் அவருடைய சகோதரர் வெள்ளை மருதுவும் 1801 அக்டோபர் 24இல் திருப்பத்தூரில் தூக்கிலிடப்பட்டனர்.
Question 115
ஊமைத்துரையும் செவத்தையாவும் எங்கு  கொண்டு செல்லப்பட்டு  கொல்லப்பட்டார்கள்?
A
திருப்பத்தூர்
B
பாஞ்சாலங்குறிச்சி
C
சங்ககிரி
D
கயத்தாறு
Question 115 Explanation: 
விளக்கம்: ஊமைத்துரையும் செவத்தையாவும் அவர்களின் ஆதரவாளர்கள் பலரும் பாஞ்சாலங்குறிச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டு 1801 நவம்பர் 16ஆம் நாள் தலை துண்டிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்கள். 73 கிளர்ச்சியாளர்கள் 1802 ஏப்ரல் மாதத்தில் மலேயாவில் பினாங்குக்கு நாடு கடத்தப்பட்டார்கள்.
Question 116
கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
  1. சேலம், கோயம்புத்தூர், கரூர், திண்டுக்கல் ஆகியவை அடங்கிய கொங்குநாடு, மதுரை நாயக்கர் அரசின் ஒரு பகுதியாக இருந்தது.
  2. மூன்றாம், நான்காம் மைசூர் போர்களின் விளைவாகக் கொங்குப் பகுதி முழுதும் ஆங்கிலேயர் வசமாயின.
A
i சரி
B
ii சரி
C
i மற்றும் (ii) சரி
D
i மற்றும் (ii) தவறு
Question 116 Explanation: 
விளக்கம்: சேலம், கோயம்புத்தூர், கரூர், திண்டுக்கல் ஆகியவை அடங்கிய கொங்குநாடு, மதுரை நாயக்கர் அரசின் ஒரு பகுதியாக இருந்தது. அதை மைசூர் உடையார்கள் கைப்பற்றித் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்கள். உடையார்களின் வீழ்ச்சிக்குப் பிறகு மைசூருடன் இந்த ஆட்சிப்பகுதிகள் மைசூர் சுல்தான்களால் கட்டுப்படுத்தப்பட்டன. மூன்றாம், நான்காம் மைசூர் போர்களின் விளைவாகக் கொங்குப் பகுதி முழுதும் ஆங்கிலேயர் வசமாயின.
Question 117
தீரன் சின்னமலைக்கு பயிற்சி அளித்தவர்கள் யாவர்?
A
திப்பு
B
பிரெஞ்சுக்காரர்கள்
C
மருது சகோதரர்கள்
D
a மற்றும் b)
Question 117 Explanation: 
விளக்கம்: தீரன் சின்னமலை ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியை எதிர்த்துப் போரிட்ட கொங்குநாட்டுப் பாளையக்காரர் ஆவார். இவர் பிரெஞ்சுக்காரர்களாலும் திப்புவாலும் பயிற்சியளிக்கப்பட்ட பாளையக்காரர்களில் ஒருவர்.
Question 118
  • கூற்று (கூ): சின்னமலை தன் திட்டத்தை மாற்றிக்கொண்டு, திட்டமிட்டதற்கு ஒரு நாள் முன்னதாகவே கோட்டையைத் தாக்கினார்.
  • காரணம் (கா): தனது படையை வலுவூட்டுவதற்குத் தேவையான உதவிகளை மருது சகோதரர்களிடமிருந்து பெறுவதைக் கம்பெனி தடுத்துவிட்டதால் சின்னமலையின் திட்டங்கள் பலிக்கவில்லை.
A
கூற்று சரி; காரணம் கூற்றின் சரியான விளக்கம் ஆகும்.
B
கூற்று சரி; காரணம் தவறு
C
கூற்று மற்றும் காரணம் தவறானவை
D
கூற்று சரி; காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல
Question 118 Explanation: 
விளக்கம்:தனது படையை வலுவூட்டுவதற்குத் தேவையான உதவிகளை மருது சகோதரர்களிடமிருந்து பெறுவதைக் கம்பெனி தடுத்துவிட்டதால் சின்னமலையின் திட்டங்கள் பலிக்கவில்லை. அவரும் தன் திட்டத்தை மாற்றிக்கொண்டு, திட்டமிட்டதற்கு ஒரு நாள் முன்னதாகவே கோட்டையைத் தாக்கினார். கம்பெனிப் படை 49 பேரைத் தூக்கிலிடுவதற்கு இது வழிவகுத்தது.
Question 119
தீரன் சின்னமலை  ஆங்கிலேயரால் எப்போது தூக்கிலிடப்பட்டார்?
A
1805 ஜூலை 31
B
1805 ஜூன் 31
C
1804 ஜூலை 31
D
1804 ஜூன் 31
Question 119 Explanation: 
விளக்கம்:சின்னமலை ஆங்கிலேயரிடம் சிக்காமல் தப்பினார். 1800இலிருந்து அவர் தூக்கிலிடப்பட்ட 1805 ஜூலை 31 வரை கம்பெனிக்கு எதிராகப் போராடிக்கொண்டே இருந்தார்.
Question 120
கீழ்க்கண்டவற்றுள் சின்னமலையின் போர்களில் முக்கியமானவை?
A
காவிரிக்கரையில் நடைபெற்ற 1801 போர்
B
1802ஆம் ஆண்டு ஓடநிலையில் நடந்த போர்
C
1804இல் நடந்த அரச்சலூர் போர்
D
மேற்கண்ட அனைத்தும்
Question 120 Explanation: 
விளக்கம்: சி ன்னமலையின் போர்களில் முக்கியமானவை மூன்று: காவிரிக்கரையில் நடைபெற்ற 1801 போர், 1802ஆம் ஆண்டு ஓடநிலையில் நடந்த போர்; 1804இல் நடந்த அரச்சலூர் போர் ஆகும்.
Question 121
சின்னமலையின் இறுதிப் போர் எந்த ஆண்டு  நடைபெற்றது?
A
1805
B
1806
C
1803
D
1804
Question 121 Explanation: 
விளக்கம்: சின்னமலையின் இறுதிப் போர் 1805இல் நடைபெற்றதாகும். இப்போரில் சின்னமலை அவருடைய சமையல்காரரால் துரோகம் இழைக்கப்பட்டார். தீரன் சின்னமலை சிவகிரி கோட்டையில் தூக்கிலிடப்பட்டார்.
Question 122
  • கூற்று (கூ): 1806ஆம் ஆண்டில்  வேலூர் புரட்சி ஏற்பட்டது.
  • காரணம் (கா): அரியணையை இழந்த அரசர்கள், குறுநில மன்னர்கள் ஆகியோரின் சந்ததியினர் ஆங்கிலேய ஆட்சி சுமத்திய அடிமைத்தளையைத் தகர்க்கத் தொடர்ந்து பல முயற்சிகளை மேற்கொண்டனர்.
A
கூற்று சரி; காரணம் கூற்றின் சரியான விளக்கம் ஆகும்.
B
கூற்று சரி; காரணம் தவறு
C
கூற்று மற்றும் காரணம் தவறானவை
D
கூற்று சரி; காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல
Question 122 Explanation: 
விளக்கம்: அரியணையை இழந்த அரசர்கள், குறுநில மன்னர்கள் ஆகியோரின் சந்ததியினர் ஆங்கிலேய ஆட்சி சுமத்திய அடிமைத்தளையைத் தகர்க்கத் தொடர்ந்து பல முயற்சிகளை மேற்கொண்டனர். அவற்றின் மொத்த விளைவுதான் 1806ஆம் ஆண்டில் ஏற்பட்ட வேலூர் புரட்சி ஆகும்.
Question 123
மருது சகோதரர்களின் கிளர்ச்சி ஒடுக்கப்பட்ட பின்னர் அவர்கள் எப்பகுதியை மையமாகக் கொண்டு செயல்பட்டனர்?
A
ஸ்ரீரங்கப்பட்டணம்
B
களக்காடு
C
பாளையங்கோட்டை
D
வேலூர்
Question 123 Explanation: 
விளக்கம்: மருது சகோதரர்களின் கிளர்ச்சி ஒடுக்கப்பட்ட பின்னர், அவர்கள் வேலூரை மையமாகக் கொண்டு செயல்பட்டனர். எண்ணிக்கையில் 3000க்குக் குறையாத திப்பு சுல்தானின் விசுவாசிகள் வேலூரிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் குடியேறியிருந்ததால், ஆங்கிலேய எதிர்ப்புக்கூட்டமைப்பின் அமைப்பாளர்கள் அங்கு தங்கள் இரகசிய நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டனர்.
Question 124
  • கூற்று (கூ): வேலூர் கோட்டை தென்னிந்தியாவின் புரட்சியாளர்கள் சந்தித்துக்கொள்ளுமிடமாக ஆனது.
  • காரணம் (கா): பாதிக்கப்பட்ட பலரை வேலூர் கோட்டையின் படைமுகாம் உள்ளடக்கியிருந்தது.
A
கூற்று சரி; காரணம் கூற்றின் சரியான விளக்கம் ஆகும்.
B
கூற்று சரி; காரணம் தவறு
C
கூற்று மற்றும் காரணம் தவறானவை
D
கூற்று சரி; காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல
Question 124 Explanation: 
விளக்கம்: ஆங்கிலேயரால் பதவியோ, சொத்தோ பறிக்கப்பட்டவர்கள், கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் வறுமையின் கோரப்பிடியில் சிக்கியிருந்னர். இதுபோல் பாதிக்கப்பட்ட பலரை வேலூர் கோட்டையின் படைமுகாம் உள்ளடக்கியிருந்தது. இவ்வாறு வேலூர் கோட்டை தென்னிந்தியாவின் புரட்சியாளர்கள் சந்தித்துக்கொள்ளுமிடமாக ஆனது.
Question 125
கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
  1. சிப்பாய்களும் வேலூருக்கு இடம்பெயர்ந்தவர்களும் கோட்டையில் அடிக்கடி கூடித் தீவிரமாகக் கலந்தாலோசித்தனர்.
  2. திப்பு மகன்களின் பிரதிநிதிகளும் பங்கேற்று வந்தனர்.
A
i சரி
B
ii சரி
C
i மற்றும் (ii) சரி
D
i மற்றும் (ii) தவறு
Question 125 Explanation: 
விளக்கம்: சிப்பாய்களும் வேலூருக்கு இடம்பெயர்ந்தவர்களும் கோட்டையில் அடிக்கடி கூடித் தீவிரமாகக் கலந்தாலோசித்தனர். அவற்றில் திப்பு மகன்களின் பிரதிநிதிகளும் பங்கேற்று வந்தனர்.
Question 126
கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
  1. சிப்பாய்கள் சாதி அல்லது மதத்தின் அடையாளமாகத் தங்களது நெற்றியில் அணிந்த அனைத்து விதமான குறியீடுகளும் தடை செய்யப்பட்டன.
  2. சிப்பாய்கள் தங்கள் மீசையை ஒரே மாதிரியான முறைக்குப் பொருந்தும்படி வெட்டுவதற்கு அறிவுறுத்தப்பட்டனர்.
A
i சரி
B
ii சரி
C
i மற்றும் (ii) சரி
D
i மற்றும் (ii) தவறு
Question 126 Explanation: 
விளக்கம்: இடைப்பட்ட காலத்தில் ஆங்கிலேயர் தங்கள் படையில் உள்ள சிப்பாய்ப்பிரிவில் சில புதுமைகளை நடைமுறைக்குக் கொண்டுவந்தார்கள். சிப்பாய்கள் சாதி அல்லது மதத்தின் அடையாளமாகத் தங்களது நெற்றியில் அணிந்த அனைத்து விதமான குறியீடுகளும் தடை செய்யப்பட்டன. சிப்பாய்கள் தங்கள் மீசையை ஒரே மாதிரியான முறைக்குப் பொருந்தும்படி வெட்டுவதற்கு அறிவுறுத்தப்பட்டனர்.
Question 127
சின்னமலை  ஆங்கிலேயரின் கோட்டை மீது தாக்குதல் நடத்த இருந்தபோது யாருடைய உதவியைப் பெற முயன்றார்?
A
மருது பாண்டியர்
B
திப்பு
C
பிரெஞ்சுக்காரர்
D
b) மற்றும் c)
Question 127 Explanation: 
விளக்கம்:சின்னமலை கோயம்புத்தூரில் இருந்த ஆங்கிலேயரின் கோட்டை மீது தாக்குதல் நடத்தும் முயற்சியில் (1800) இருந்தபோது, மருது பாண்டியரின் உதவியைப் பெற முயன்றார். கம்பெனியுடன் போரிடுவதற்காக விருபாட்சி கோபால நாயக்கர், பரமத்திவேலூர் அப்பச்சிக் கவுண்டர், சேலம் ஆத்தூர் ஜோனி ஜான் கஹன், பெருந்துறை குமராள் வெள்ளை, ஈரோடு வாரணவாசி ஆகியோருடன் கூட்டணி சேர்ந்தார்.
Question 128
சிப்பாய்களுக்கான ஒரு புதிய தலைப்பாகையை வடிவமைத்து, தனது நேரடிக் கண்காணிப்பில் அதனை அறிமுகம் செய்தவர்?
A
பானர் மேன்
B
வில்லியம் பெண்டிக்
C
மார்க்குயிஸ் ஹேஸ்டிங்ஸ்
D
அக்னியு
Question 128 Explanation: 
விளக்கம்: துணை ஜெனரல் அக்னியு சிப்பாய்களுக்கான ஒரு புதிய தலைப்பாகையை வடிவமைத்து, தனது நேரடிக் கண்காணிப்பில் அதனை அறிமுகம் செய்தார்.
Question 129
இந்தியர்களின் பார்வையில் புதியவகை  தலைப்பாகையில் இடம்பெற்றிருந்த அருவருக்கத்தக்க அம்சம் எது?
A
ரிப்பன்
B
குஞ்சம்
C
a மற்றும் b)
D
சிலுவை
Question 129 Explanation: 
விளக்கம்: இந்தியர்களின் பார்வை யி ல், இந்தத் தலைப்பாகையில் இடம்பெற்றிருந்த அருவருக்கத்தக்க அம்சம், அதன் மீதிருந்த ரிப்பன் மற்றும் குஞ்சம் ஆகும். இது மிருகத் தோலில் செய்யப்பட்டிருந்தது. பன்றித்தோல் முஸ்லீம்களுக்கு வெறுப்பூட்டும் பொருள் ஆகும். இந்துக்கள் பசுத்தோலில் செய்யப்பட்ட எந்தப் பொருளையும் விலக்க வேண்டியதாகக் கருதினர். இந்த மாற்றங்களுக்கான எதிர்ப்பை இந்தியர்களிடையே இன்னும் அதிகரிக்கச் செய்யும் வகையில், சிப்பாய்கள் அணியும் சீருடையின் முன்பக்கம் சிலுவை பொறிக்கப்பட்டிருந்தது.
Question 130
கிளர்ச்சியாளர்களில் லட்சுமிபாய் மிகச் சிறந்த தைரியம் மிக்க தலைவரென லட்சுமிபாயைப் பற்றி  குறிப்பிட்டவர்?
A
ஹென்றி லாரன்ஸ்
B
ஜான் நிக்கல்சன்
C
ஹக் ரோஸ்
D
ஹென்றி ஹேவ்லக்
Question 130 Explanation: 
விளக்கம்:கிளர்ச்சியாளர்களில் லட்சுமிபாய் மிகச் சிறந்த தைரியம் மிக்க தலைவரென லட்சுமிபாயைப் பற்றி ரோஸ் குறிப்பிட்டுள்ளார்.
Question 131
கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
  1. முதல் எதிர்ப்பு 1806 மே மாதத்தில் நிகழ்ந்தது.
  2. வேலூரிலிருந்த 4ஆம் ரெஜிமெண்ட்டின் 2ஆம் படைப்பிரிவு வீரர்கள் புதிய தலைப்பாகையை அணிய மறுத்தனர்.
A
(i) சரி
B
(ii) சரி
C
(i) மற்றும் (ii) சரி
D
(i) மற்றும் (ii) தவறு
Question 131 Explanation: 
விளக்கம்: முதல் எதிர்ப்பு 1806 மே மாதத்தில் நிகழ்ந்தது. வேலூரிலிருந்த 4ஆம் ரெஜிமெண்ட்டின் 2ஆம் படைப்பிரிவு வீரர்கள் புதிய தலைப்பாகையை அணிய மறுத்தனர். இந்தப் பிரச்னை படைமுகாமின் தளபதியான கவர்னர் ஃபேன்கோர்ட்டுக்குத் தெரிவிக்கப்பட்டது. அவர் கிளர்ச்சியாளர்களை உடனிருந்து கண்காணிக்கும்படி 19ஆம் குதிரைப்படைப்பிரிவுக்கு உத்தரவிட்டார். இவர்கள் மீதான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது.
Question 132
கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
  1. 4ஆம் ரெஜிமெண்ட்டின் 2ஆம் படைப்பிரிவுக்குப் பதிலாக வாலாஜாபாத்திலிருந்த 23ஆம் ரெஜிமெண்ட்டின் 2ஆம் படைப்பிரிவு பொறுப்பை ஏற்றது.
  2. தலைமையின் உத்தரவை எதிர்த்தமைக்காகப் படையின் கீழ்நிலைப் பொறுப்பிலிருந்த 21 வீரர்கள் இராணுவ நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டார்கள்.
A
(i) சரி
B
(ii) சரி
C
(i) மற்றும் (ii) சரி
D
(i) மற்றும் (ii) தவறு
Question 132 Explanation: 
விளக்கம்: 4ஆம் ரெஜிமெண்ட்டின் 2ஆம் படைப்பிரிவுக்குப் பதிலாக வாலாஜாபாத்திலிருந்த 23ஆம் ரெஜிமெண்ட்டின் 2ஆம் படைப்பிரிவு பொறுப்பை ஏற்றது. தலைமையின் உத்தரவை எதிர்த்தமைக்காகப் படையின் கீழ்நிலைப் பொறுப்பிலிருந்த 21 வீரர்கள் இராணுவ நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டார்கள். அவர்களில் 10 முஸ்லீம்களும் 11 இந்துக்களும் இருந்தார்கள். நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றும்பொருட்டு இரு வீரர் (ஒரு முஸ்லீம், ஒரு இந்து)களுக்குத் தலா 900 கசையடிகள் கொடுக்கப்பட்டு, அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டார்கள்.
Question 133
புதிய தலைப்பாகையை அணிவதற்கு விருப்பமில்லாத உணர்வு வீரர்களிடையே மிக பலவீனமாக இருப்பதாக நம்பியவர்?
A
ஹென்றி லாரன்ஸ்
B
ஜான் நிக்கல்சன்
C
அக்னியூ
D
வில்லியம் பெண்டிங்க்
Question 133 Explanation: 
விளக்கம்: இந்திய வீரர்களிடமிருந்து கிளம்பிய எதிர்ப்புகளை மீறி, அவர்களின் மனக்குறைகளைப் பொருட்படுத்தாமல் அரசு தான் முன்வைத்த மாற்றங்களைச் செயல்படுத்த முடிவெடுத்தது. ‘புதிய தலைப்பாகையை அணிவதற்கு விருப்பமில்லாத உணர்வு வீரர்களிடையே மிக பலவீனமாக இருப்பதாக’வே கவர்னர் வில்லியம் பெண்டிங்க் நம்பினார்.
Question 134
கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
  1. வேலூர் கோட்டையில் 1806 ஜூலை 9ஆம் நாள் இரவின்போது பணியிலிருந்த இராணுவ அதிகாரிகள் வழக்கத்துக்கு மாறாக எதையும் கவனிக்கவில்லை என முதலில் கூறப்பட்டது.
  2. அன்றைக்குப் பொறுப்பிலிருந்த ஆங்கிலேய அதிகாரி தனக்குப் பதிலாக ஜமேதார் ஷேக் காசிம் என்ற இந்திய அதிகாரியை அனுப்பினார் என்று பின்னர் தெரிய வந்தது
A
(i) சரி
B
(ii) சரி
C
(i) மற்றும் (ii) சரி
D
(i) மற்றும் (ii) தவறு
Question 134 Explanation: 
விளக்கம்: வேலூர் கோட்டையில் 1806 ஜூலை 9ஆம் நாள் இரவின்போது பணியிலிருந்த இராணுவ அதிகாரிகள் வழக்கத்துக்கு மாறாக எதையும் கவனிக்கவில்லை என முதலில் கூறப்பட்டது. எனினும், அன்றைக்குப் பொறுப்பிலிருந்த ஆங்கிலேய அதிகாரி பார்வையிடும் தனது வேலையை அன்று செய்யவில்லை என்றும் தனக்குப் பதிலாக ஜமேதார் ஷேக் காசிம் என்ற இந்திய அதிகாரியை அனுப்பினார் என்றும் பின்னர் தெரிய வந்தது. வேலூர் புரட்சிக்குப் பிறகு, அவர் முதன்மைக் குற்றவாளிகளில் ஒருவராக அடையாளம் காணப்பட்டார்.
Question 135
கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
  1. ஜுலை 11 அதிகாலையில் பயிற்சியில் கலந்துகொள்ள வேண்டிய படைப்பிரிவின் தலைவர்கள் ஜுலை 10 ஆம் நாள் இரவே கோட்டையில் தூங்குவதற்கு அதைச் சாக்காகப் பயன்படுத்தினர்.
  2. துணை இராணுவ அதிகாரி கோட்டைக்குள் பாதுகாவலர்களாகத் தன்னால் இயன்றவரை தன்னுடைய ஆதரவாளர்களையே நியமித்தார்.
A
(i) சரி
B
(ii) சரி
C
(i) மற்றும் (ii) சரி
D
(i) மற்றும் (ii) தவறு
Question 135 Explanation: 
விளக்கம்: ஜுலை 10 அதிகாலையில் பயிற்சியில் கலந்துகொள்ள வேண்டிய படைப்பிரிவின் தலைவர்கள் ஜுலை 9 ஆம் நாள் இரவே கோட்டையில் தூங்குவதற்கு அதைச் சாக்காகப் பயன்படுத்தினர். இந்தத் துணை இராணுவ அதிகாரி கோட்டைக்குள் பாதுகாவலர்களாகத் தன்னால் இயன்றவரை தன்னுடைய ஆதரவாளர்களையே நியமித்தார்.
Question 136
வேலூர் புரட்சியில் முக்கியப் பங்கு வகித்ததாகக் கருதப்படுபவர்?
A
ஜமாலுதீன்
B
ஷேக் காசிம்
C
அப்துல்லா
D
அமீர்
Question 136 Explanation: 
விளக்கம்: வேலூர் புரட்சியில் முக்கியப் பங்கு வகித்ததாகக் கருதப்படுபவர் ஜமாலுதீன் ஆவார். இவர் திப்புக் குடும்பத்தின் 12 இளவரசர்களில் ஒருவர். அவர் ஷேக் காசிம் போன்ற இந்திய அதிகாரிகளிடமும் வீரர்களிடமும் இரகசியப் பேச்சுவார்த்தைகளின்போது, அவர்கள் வேலூர் கோட்டையை எட்டு நாட்களுக்குத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்படியும் அதற்குள் 10 ஆயிரம் ஆதரவாளர்கள் உதவிக்கு வந்து விடுவார்கள் என்றும் கூறி வந்தார்.
Question 137
திப்புவின் முன்னாள் அமைச்சர் என்று  ஜமாலுதீனால் குறிப்பிடப்பட்டவர்?
A
புர்னியா
B
ஷேக் காசிம்
C
ஷேக் பகதூர்
D
திரிம்பக்க்ஷி
Question 137 Explanation: 
விளக்கம்: உரிமை பறிக்கப்பட்ட பாளையக்காரர்களின் உதவியைக் கேட்டு அவர்களுக்குக் கடிதம் எழுதப்பட்டுள்ளதையும் ஜமாலுதீன் தெரிவித்தார். திப்பு சுல்தானிடம் பணிபுரிந்த ஏராளமான அதிகாரிகள் திப்புவின் முன்னாள் அமைச்சரான புர்னியாவுடன் தொடர்பில் இருப்பதாகவும் அவர்கள் தக்க நேரத்தில் கைகொடுப்பார்கள் என்றும் ஜமாலுதீன் கூறினார்.
Question 138
வேலூர் கோட்டையில் ஏற்பட்ட புரட்சி முதலில் யாருக்கு  தெரிவிக்கப்பட்டது?
A
கார்ப்பரல் பியர்சி
B
மேஜர் ஆர்ம்ஸ்ட்ராங்
C
கர்னல் கில்லஸ்பி
D
வில்லியம் பெண்டிங்க்
Question 138 Explanation: 
விளக்கம்: வேலூர்க் கோட்டையில் ஜூலை 10ஆம் நாள் காலை 2 மணிக்கு முதன்மை பாதுகாப்புத்தளத்திலிருந்த காவலாளியிடமிருந்து கார்ப்பரல் பியர்சிக்கு ஒரு செய்தி தெரிவிக்கப்பட்டது. படைவீரர் குடியிருப்புக்கு அருகில் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது என்பதே அச்செய்தி. பியர்சி பதில் நடவடிக்கையில் இறங்கும் முன்னரே, சிப்பாய்கள் ஆங்கிலேயப் பாதுகாவலர்கள் மீதும், படைவீரர் குடியிருப்பு, அதிகாரிகள் குடியிருப்பு ஆகியவற்றின் மீதும் ஏறக்குறைய ஒரே நேரத்தில் தாக்குதல் தொடுத்தனர். பியர்சியும் கடுமையான காயங்களுக்கு உள்ளானார்.
Question 139
வேலூர் புரட்சி தொடர்பான பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
  1. ஐரோப்பிய அதிகாரிகளின் குடியிருப்புகளைக் கண்காணித்து, வெளியே வரும் எவரையும் சுடுவதற்குத் தனிப்படைப்பிரிவு நியமிக்கப்பட்டது.
  2. கிளர்ச்சியாளர்கள் படுக்கைகளில் பாதுகாப்பின்றி உறங்கிக்கொண்டிருந்த ஐரோப்பியரைச் சன்னல் வழியாக எளிதில் சுட முடிந்தது.
A
(i) சரி
B
(ii) சரி
C
(i) மற்றும் (ii) சரி
D
(i) மற்றும் (ii) தவறு
Question 139 Explanation: 
விளக்கம்: ஐரோப்பியக் குடியிருப்புகளில் கோடை வெக்கையைச் சமாளிக்கக் கதவுகள் இரவிலும் திறந்து வைக்கப்பட்டிருந்தன. கிளர்ச்சியாளர்கள் படுக்கைகளில் பாதுகாப்பின்றி உறங்கிக்கொண்டிருந்த ஐரோப்பியரைச் சன்னல் வழியாக எளிதில் சுட முடிந்தது. ஐரோப்பியக் குடியிருப்புக்குத் தீ வைக்கப்பட்டது. ஐரோப்பிய அதிகாரிகளின் குடியிருப்புகளைக் கண்காணித்து, வெளியே வரும் எவரையும் சுடுவதற்குத் தனிப்படைப்பிரிவு நியமிக்கப்பட்டது.
Question 140
வேலூர் புரட்சி தொடர்பான பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.
  1. வெடிமருந்துகளும் துப்பாக்கி ரவைகளும் சேமித்து வைக்கப்பட்டிருந்த கிடங்கை முதலாம் ரெஜிமெண்ட்டின் ஒரு பிரிவு தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது.
  2. ஒரு குழு குடியிருப்புகளில் உள்ள ஐரோப்பியரைக் கொல்வதற்குத் தொடர்ந்து கண்காணிப்பில் இருந்தது.
A
(i) சரி
B
(ii) சரி
C
(i) மற்றும் (ii) சரி
D
(i) மற்றும் (ii) தவறு
Question 140 Explanation: 
விளக்கம்: வெடிமருந்துகளும் துப்பாக்கி ரவைகளும் சேமித்து வைக்கப்பட்டிருந்த கிடங்கை முதலாம் ரெஜிமெண்ட்டின் ஒரு பிரிவு தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது. அதே ரெஜிமெண்ட்டிலிருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரு குழு குடியிருப்புகளில் உள்ள ஐரோப்பியரைக் கொல்வதற்குத் தொடர்ந்து கண்காணிப்பில் இருந்தது. ஏராளமான ஐரோப்பிய ஒழுங்குமுறை நடத்துனர்களுடன், 13 அதிகாரிகள் கொல்லப்பட்டனர். இராணுவக்குடியிருப்பில் 82 கீழ்நிலை இராணுவ வீரர்கள் இறந்தார்கள். 91 பேர் காயமடைந்தனர்.
Question 141
வேலூர் புரட்சி தொடர்பான பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
  1. உள்ளூர் வீரர்கள் அடங்கிய 16ஆம் காலாட்படையைச் சேர்ந்த மேஜர் ஆர்ம்ஸ்ட்ராங் துப்பாக்கிச் சத்தம் கேட்டபோது கோட்டைக்கு வெளியே பல்லக்கில் சென்று கொண்டிருந்தார்.
  2. பாதுகாப்பு அரணிலிருந்து சரமாரியாகப் பொழிந்த குண்டுமழை உடனடியாக அவரது உயிரைப் பறித்தது.
A
(i) சரி
B
(ii) சரி
C
(i) மற்றும் (ii) சரி
D
(i) மற்றும் (ii) தவறு
Question 141 Explanation: 
விளக்கம்: உள்ளூர் வீரர்கள் அடங்கிய 16ஆம் காலாட்படையைச் சேர்ந்த மேஜர் ஆர்ம்ஸ்ட்ராங் துப்பாக்கிச் சத்தம் கேட்டபோது கோட்டைக்கு வெளியே பல்லக்கில் சென்று கொண்டிருந்தார். அவர் பல்லக்கிலிருந்து இறங்கி, கோட்டையின் சரிவான பகுதிக்குச் சென்று விசாரித்தார். அதற்குப் பதில் போல் பாதுகாப்பு அரணிலிருந்து சரமாரியாகப் பொழிந்த குண்டுமழை உடனடியாக அவரது உயிரைப் பறித்தது.
Question 142
வேலூர் கலகத்தின்போது ஆற்காட்டில் குதிரைப்படை முகாமுக்குப் பொறுப்பு வகித்தவர்?
A
கில்லஸ்பி
B
கோட்ஸ்
C
மேஜர் ஆர்ம்ஸ்ட்ராங்
D
ஸ்டீவன்சன்
Question 142 Explanation: 
விளக்கம்: கோட்டைக்கு வெளியே பணியிலிருந்த மேஜர் கோட்ஸ் கிளர்ச்சியைப் பற்றிக் கேள்விப்பட்டு கோட்டைக்குள் நுழைய முயன்றார். அவரால் உள்ளே செல்ல முடியாததால், ஆற்காட்டில் குதிரைப்படை முகாமுக்குப் பொறுப்பு வகித்த கில்லஸ்பிக்குக் கடிதம் எழுதி, அதைக் கேப்டன் ஸ்டீவன்சன் என்பவரிடம் கொடுத்தனுப்பினார். அந்தக் கடிதம் வேலூரிலிருந்து 25 கி.மீ தொலைவில் இருந்த ஆற்காட்டுக்குக் காலை 6 மணி அளவில் சென்றடைந்தது.
Question 143
தன்னைப் பின்தொடர்ந்து வரும்படி கர்னல் கென்னடியிடம் அறிவுறுத்திவிட்டு வேலூர் கோட்டையை நோக்கி புறப்பட்டு சென்றவர்?
A
கில்லஸ்பி
B
கோட்ஸ்
C
மேஜர் ஆர்ம்ஸ்ட்ராங்
D
ஸ்டீவன்சன்
Question 143 Explanation: 
விளக்கம்: கர்னல் கில்லஸ்பி உடனே வேலூருக்குப் புறப்பட்டார். தன்னுடன் கேப்டன் யங் தலைமையில் 19ஆம் குதிரைப்படையைச் சேர்ந்த ஒரு பிரிவையும் லெப்டினெண்ட் உட் ஹவுஸ் தலைமையில் அதற்குத் துணைநிற்கும் 7ஆம் குதிரைப்படையிலிருந்து ஒரு வலுவான பிரிவையும் அழைத்துச் சென்றார். அவர் குதிரைப்படையில் மீதமுள்ள வீரர்களுடன் தன்னைப் பின்தொடர்ந்து வரும்படி கர்னல் கென்னடியிடம் அறிவுறுத்திவிட்டு, ஆற்காடு படைமுகாமைப் பாதுகாக்கவும் தன்னுடன் தகவல்தொடர்பில் இருக்கவும் ஒரு தனிப்பிரிவை விட்டுச்சென்றார்.
Question 144
வேலூர் புரட்சி தொடர்பான பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
  1. கில்லஸ்பி தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடந்துகொண்டிருந்ததால், பீரங்கிகள் தங்கள் பாதுகாப்புக்கு வந்துசேரும்வரை காத்திருக்க முடிவு செய்தார்.
  2. ஆற்காட்டிலிருந்து பின்தொடர்ந்து வந்த மேஜர் ஆர்ம்ஸ்ட்ராங் தலைமையிலான குதிரைப்படை 10 மணி அளவில் வந்துசேர்ந்தது
A
(i) சரி
B
(ii) சரி
C
(i) மற்றும் (ii) சரி
D
(i) மற்றும் (ii) தவறு
Question 144 Explanation: 
விளக்கம்: வேலூர் கோட்டைக்குக் காலை 9 மணிக்கு வந்தடைந்த கில்லஸ்பி தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடந்துகொண்டிருந்ததால், பீரங்கிகள் தங்கள் பாதுகாப்புக்கு வந்துசேரும்வரை காத்திருக்க முடிவு செய்தார். விரைவிலேயே ஆற்காட்டிலிருந்து பின்தொடர்ந்து வந்த கென்னடி தலைமையிலான குதிரைப்படை 10 மணி அளவில் வந்துசேர்ந்தது.
Question 145
யாருடைய தலைமையில் கோட்டையின் வெளிவாசல் கதவு தகர்க்கப்பட்டது?
A
கில்லஸ்பி
B
ஸ்கெல்ட்டன்
C
மேஜர் ஆர்ம்ஸ்ட்ராங்
D
ப்ளாகிஸ்டன்
Question 145 Explanation: 
விளக்கம்: லெப்டினெண்ட் ப்ளாகிஸ்டன் தலைமையில் 19ஆம் குதிரைப்படையின் பீரங்கியால் கோட்டையின் வெளிவாசல் கதவு தகர்க்கப்பட்டது. கேப்டன் ஸ்கெல்ட்டன் தலைமையிலான குதிரைப்படையின் ஒரு பிரிவு கோட்டைக்குள் நுழைந்தது. கில்லஸ்பியின் வீரர்கள் கடுமையான துப்பாக்கிச்சூட்டை எதிர்கொண்டனர். தொடர்ந்து நடைபெற்ற தாக்குதலில் கர்னல் கில்லஸ்பியும் காயங்களுக்கு உள்ளானார்.
Question 146
வேலூர் புரட்சி தொடர்பான பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
  1. கோட்டையின் திட்டிவாசல் மூலம் கிடைத்த குறுகலான பாதை வழியே தப்பியோடிய சிப்பாய்களைப் பின்தொடர்ந்து சென்று பிடிக்க முடிவெடுக்கப்பட்டது.
  2. கிளர்ச்சியில் ஈடுபட்ட சிப்பாய்கள் பின்வாங்கினார்கள்.
A
(i) சரி
B
(ii) சரி
C
(i) மற்றும் (ii) சரி
D
(i) மற்றும் (ii) தவறு
Question 146 Explanation: 
விளக்கம்: கிளர்ச்சியில் ஈடுபட்ட சிப்பாய்கள் பின்வாங்கினார்கள். நூற்றுக்கணக்கானவர்கள் கோட்டையின் சுவர்கள் மீது ஏறித் தப்பித்தனர் அல்லது ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு கருணைக்காகக் கெஞ்சினர். குதிரைப்படைப்பிரிவுகள் அனைத்தும் அணிவகுப்பு மைதானத்தில் ஒன்றுகூடின. கோட்டையின் திட்டிவாசல் மூலம் கிடைத்த குறுகலான பாதை வழியே தப்பியோடிய சிப்பாய்களைப் பின்தொடர்ந்து சென்று பிடிக்க முடிவெடுக்கப்பட்டது.
Question 147
கில்லஸ்பியின் ஆட்கள் கிளர்ச்சிக்குத் திட்டம் தீட்டிய திப்புவின் மகன்களைப் பழிவாங்க விரும்புவதை எதிர்த்தவர்?
A
கில்லஸ்பி
B
ஸ்கெல்ட்டன்
C
மேஜர் ஆர்ம்ஸ்ட்ராங்
D
கர்னல் மர்ரியாட்
Question 147 Explanation: 
விளக்கம்: தப்பியோடிய சிப்பாய்களை வழிமறித்துப் பிடிக்கச் சில உள்ளூர் குதிரைக்காரர்களுடன் ஒரு குதிரைப்படைப்பிரிவு கிளம்பியது. கோட்டையின் அனைத்துக் கட்டிடங்களிலும் தேடுதல் வேட்டை நடந்தது. அங்கு ஒளிந்திருந்த கிளர்ச்சியாளர்கள் இரக்கமின்றிக் கொல்லப்பட்டார்கள். கில்லஸ்பியின் ஆட்கள் கிளர்ச்சிக்குத் திட்டம் தீட்டிய திப்புவின் மகன்களைப் பழிவாங்க விரும்பினார்கள். ஆனால் லெப்டினெண்ட் கர்னல் மர்ரியாட் இதை எதிர்த்தார்.
Question 148
வேலூர் புரட்சியின்போது 800க்கும் மேற்பட்ட உடல்கள் கோட்டையிலிருந்து வெளியே எடுத்துச் செல்லப்பட்டதாக கூறியவர்?
A
ஜே. வில்சன்
B
ஜே. பிளாக்கிஸ்டன்
C
கர்னல் ஹர்கோர்ட்
D
ஸ்கெல்ட்டன்
Question 148 Explanation: 
விளக்கம்: கில்லஸ்பியின் வன்கொடுமைகளை நேரில் பார்த்த ஜே. பிளாக்கிஸ்டன், 800க்கும் மேற்பட்ட உடல்கள் கோட்டையிலிருந்து வெளியே எடுத்துச் செல்லப்பட்டதாக கூறுகிறார். டபிள்யூ. ஜே. வில்சனின் மதிப்பீட்டின்படி கிளர்ச்சியில் பங்கேற்றதற்காக 378 பேர் சிறை வைக்கப்பட்டனர். 516 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டாலும் சிறைத் தண்டனை விதிக்கப்படவில்லை. விசாரணைக்குழுவிடம் அளிக்கப்பட்ட வாக்குமூலங்களின்படி, இராணுவ நீதிமன்றம் சில தனிப்பட்ட நபர்களுக்கு மரண தண்டனை விதித்தது. சிலரை நாடு கடத்தியது. இத்தண்டனைகள் வேலூர் பொறுப்பதிகாரியால் 1806 செப்டம்பர் 23 அன்று நிறைவேற்றப்பட்டது.
Question 149
முதலாம் ரெஜிமெண்ட்டின் முதல் படைப்பிரிவில்  பீரங்கி முனையில் கட்டிச் சுடப்பட்டவர்கள்?
A
1 ஹவில்தார், 1 நாயக்
B
1 நாயக், 4 சிப்பாய்கள்
C
1 ஜமேதார், 4 சிப்பாய்கள்
D
3 ஹவில்தார்கள்
Question 149 Explanation: 
விளக்கம்: முதலாம் ரெஜிமெண்ட்டின் முதல் படைப்பிரிவு பீரங்கி முனையில் கட்டிச் சுடப்பட்டவர்கள் – 1 ஹவில்தார், 1 நாயக் சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் – 1 நாயக், 4 சிப்பாய்கள் தூக்கிலிடப்பட்டவர்கள் – 1 ஜமேதார், 4 சிப்பாய்கள் நாடு கடத்தப்பட்டவர்கள் – 3 ஹவில்தார்கள், 2 நாயக்குகள், 1 சிப்பாய் 23ஆம் ரெஜிமெண்ட்டின் 2ஆம் படைப்பிரிவு பீரங்கி வாயில் கட்டிச் சுடப்பட்டவர்கள் – 2 சுபேதார்கள், 2 லஸ்கார்கள் தூக்கிலிடப்பட்டவர்கள் – 2 ஹவில்தார்கள், 1 நாயக்
Question 150
வேலூர் புரட்சி தொடர்பான பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
  1. கர்னல் ஹர்கோர்ட் வேலூர் கோட்டையை 15 நிமிடங்களுக்குள் ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாகக் கூறப்படுகிறது.
  2. கர்னல் கில்லஸ்பி (வாலஜாபாத் படைக்குப் பொறுப்பு வகித்தவர்) ஜூலை 11இல் வேலூர் படையின் தற்காலிகப் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
A
(i) சரி
B
(ii) சரி
C
(i) மற்றும் (ii) சரி
D
(i) மற்றும் (ii) தவறு
Question 150 Explanation: 
விளக்கம்: கர்னல் கில்லஸ்பி வேலூர் கோட்டையை 15 நிமிடங்களுக்குள் ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாகக் கூறப்படுகிறது. கர்னல் ஹர்கோர்ட் (வாலஜாபாத் படைக்குப் பொறுப்பு வகித்தவர்) ஜூலை 11இல் வேலூர் படையின் தற்காலிகப் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
Question 151
வேலூர் படைமுகாமின் பொறுப்பாளராகப் பதவியேற்று, இராணுவச் சட்ட ஆட்சியை அமல்படுத்தியவர்?
A
கில்லஸ்பி
B
ஸ்கெல்ட்டன்
C
மேஜர் ஆர்ம்ஸ்ட்ராங்
D
ஹர்கோர்ட்
Question 151 Explanation: 
விளக்கம்: ஜூலை 13இல் ஹர்கோர்ட் படைமுகாமின் பொறுப்பாளராகப் பதவியேற்று, இராணுவச் சட்ட ஆட்சியை அமல்படுத்தினார். கர்னல் கில்லஸ்பியின் விரைவான, சிறந்த திட்டமிடலுடன் கூடிய நடவடிக்கையே, கோட்டையை ச் சில நாட்களுக்குள் கைப்பற்றி, அடுத்ததாக மைசூரிலிருந்து வரவிருந்த 50 ஆயிரம் வீரர்களின் ஆதரவைப் பெறுவதற்குத் திட்டமிட்ட கிளர்ச்சியாளர்களின் கூட்டணிக்கு முற்றுப்புள்ளி வைத்ததாகக் கருதப்படுகிறது.
Question 152
வேலூர் புரட்சி தொடர்பான பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
  1. படைவீரர்கள் எதிர்ப்பு தெரிவித்த அருவருப்பான மாற்றங்கள் திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டன
  2. விசாரணைக் குழுவின் கூற்றுப்படி, மைசூர் இளவரசர்கள் கிளர்ச்சிக்கு உடந்தையாக இருந்தார்கள் என்பது நிறுவப்படாததால், அவர்களைக் கல்கத்தாவுக்கு அனுப்பிவைக்கும்படி உத்தரவிடப்பட்டது.
A
(i) சரி
B
(ii) சரி
C
(i) மற்றும் (ii) சரி
D
(i) மற்றும் (ii) தவறு
Question 152 Explanation: 
விளக்கம்: படைவீரர்கள் எதிர்ப்பு தெரிவித்த அருவருப்பான மாற்றங்கள் திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டன. விசாரணைக் குழுவின் கூற்றுப்படி, மைசூர் இளவரசர்கள் கிளர்ச்சிக்கு உடந்தையாக இருந்தார்கள் என்பது நிறுவப்படாததால், அவர்களைக் கல்கத்தாவுக்கு அனுப்பிவைக்கும்படி உத்தரவிடப்பட்டது. உயர்மட்டத் தீர்ப்பாயங்கள் கவர்னர், தலைமைப் படைத்தளபதி, துணை உதவி ஜெனரல் ஆகியோரை இந்தக் குளறுபடிக்குப் பொறுப்பாக்கி. அவர்களைத் திரும்ப அழைத்துக்கொள்ள உத்தரவிட்டன.
Question 153
  • கூற்று (கூ): . 1857ஆம் ஆண்டு நடைபெற்ற பெரும் கிளர்ச்சிக்கான அனைத்து முன்னறிகுறிகளும் வேலூர் கிளர்ச்சியில் இருந்தன.
  • காரணம் (கா): பெருங்கிளர்ச்சியில் இடம்பெற்ற கொழுப்பு தடவபட்ட தோட்டாக்கள் என்ற சொல்லுக்கு மாற்றாக வேலூர் நிகழ்வில் இடம்பெற்ற பாட்ஜ் என்பதையும் பகதூர் ஷா, நானா சாகிப் ஆகியோருக்கு மாற்றாக மைசூர் இளவரசர்களையும் நம்மால் பொருத்திப் பார்க்க முடியும்.
A
கூற்று சரி; காரணம் கூற்றின் சரியான விளக்கம் ஆகும்.
B
கூற்று சரி; காரணம் தவறு
C
கூற்று மற்றும் காரணம் தவறானவை
D
கூற்று சரி; காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல
Question 153 Explanation: 
விளக்கம்: வேலூர் நிகழ்வின் தாக்கம் ஹைதராபாத், வாலஜாபாத், பெங்களூர், நந்திதுர்கம், பாளையங்கோட்டை, பெல்லாரி, சங்கரிதுர்கம் ஆகிய இடங்களிலும் பரவியது. 1857ஆம் ஆண்டு நடைபெற்ற பெரும் கிளர்ச்சிக்கான அனைத்து முன்னறிகுறிகளும் வேலூர் கிளர்ச்சியில் இருந்தன. பெருங்கிளர்ச்சியில் இடம்பெற்ற கொழுப்பு தடவபட்ட தோட்டாக்கள் என்ற சொல்லுக்கு மாற்றாக வேலூர் நிகழ்வில் இடம்பெற்ற பாட்ஜ் என்பதையும் பகதூர் ஷா, நானா சாகிப் ஆகியோருக்கு மாற்றாக மைசூர் இளவரசர்களையும் நம்மால் பொருத்திப் பார்க்க முடியும்.
Question 154
பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
  1. கம்பெனி அரசாங்கத்தின் நில உரிமையும் வருவாய் ஈட்டும் முறையும் இந்தியக் கிராமியச் சமூகத்தை மிகக் கடுமையாகப் பாதித்தன.
  2. விவசாயிகள் அவர்களுக்கு அதிகளவிலான வருவாய் இலக்கை நிர்ணயித்து, அநியாயமாக அதை வசூலித்த ஒப்பந்ததாரர்களாலும் கம்பெனி அதிகாரிகளாலும் நசுக்கப்பட்டனர்.
A
(i) சரி
B
(ii) சரி
C
(i) மற்றும் (ii) சரி
D
(i) மற்றும் (ii) தவறு
Question 154 Explanation: 
விளக்கம்: பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் கம்பெனி அரசாங்கத்தின் நில உரிமையும் வருவாய் ஈட்டும் முறையும் இந்தியக் கிராமியச் சமூகத்தை மிகக் கடுமையாகப் பாதித்தன. விவசாயிகளை அதற்கு முன்னில்லாத அளவுக்கு வருத்தியது. வருவாய் ஈட்டும் வேளாண்முறையின் தொடக்க காலத்தில் விவசாயிகள் அவர்களுக்கு அதிகளவிலான வருவாய் இலக்கை நிர்ணயித்து, அநியாயமாக அதை வசூலித்த ஒப்பந்ததாரர்களாலும் கம்பெனி அதிகாரிகளாலும் நசுக்கப்பட்டனர்.
Question 155
விவசாயிகளின்  கோரிக்கை செவிசாய்க்கப்படாமல் போனபோது அவர்கள் எந்தெந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்?
A
விவசாயிகள் உள்ளூர் கச்சேரி (வருவாய் வசூலிக்கும் அலுவலகம்)களைத் தாக்கினார்கள்.
B
தானியச் சேகரிப்புக்கிடங்குகளைக் கொள்ளையடித்தார்கள்.
C
வரியைச் செலுத்த மறுத்தார்கள்.
D
மேற்கண்ட அனைத்தும்
Question 155 Explanation: 
விளக்கம்: விவசாயிகளின் பிரச்னைக்குத் தீர்வு காணும்படி விவசாயிகள் தொடக்கத்தில் கம்பெனி அரசாங்கத்துக்குப் புகார் அனுப்பினார்கள். ஆனால் அவர்களின் கோரிக்கை செவிசாய்க்கப்படாமல் போனபோது, அவர்கள் அணி திரண்டு, நேரடி நடவடிக்கையில் இறங்கினர். விவசாயிகள் உள்ளூர் கச்சேரி (வருவாய் வசூலிக்கும் அலுவலகம்)களைத் தாக்கினார்கள்; தானியச் சேகரிப்புக்கிடங்குகளைக் கொள்ளையடித்தார்கள்; வரியைச் செலுத்த மறுத்தார்கள்.
Question 156
1840களிலும் 1850களிலும் செயல்பட்ட விவசாயிகள் இயக்கம் என்னவாக வெளிப்பட்டது?
A
முண்டா கிளர்ச்சி
B
கோல் கிளர்ச்சி
C
சந்தால் கிளர்ச்சி
D
மலபார் கிளர்ச்சி
Question 156 Explanation: 
விளக்கம்: 1840களிலும் 1850களிலும் செயல்பட்ட விவசாயிகள் இயக்கம் மலபார் கிளர்ச்சியாக வெளிப்பட்டது. இப்பகுதியில் குடியேறி, மலபார் பெண்களைத் திருமணம் செய்துகொண்ட அரபு வணிகர்களின் சந்ததியினர் (மாப்பிள்ளைகள்) ஆவர்.
Question 157
பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
  1. அரபு வணிகர்களின் சந்ததியினர் (அ)  மாப்பிள்ளைமார்கள் படிப்படியாக விவசாயத்தைச் சார்ந்தவர்களாகி, நிலத்தை வாடகைக்கு எடுத்து விவசாயம் செய்வோராகவும் மாறினர்.
  2. 1792இல் ஆங்கிலேயர் மலபாரைத் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தபோது, அவர்கள் நில உடைமை விவகாரங்களைச் சீரமைக்க முடிவெடுத்தார்கள்.
A
(i) சரி
B
(ii) சரி
C
(i) மற்றும் (ii) சரி
D
(i) மற்றும் (ii) தவறு
Question 157 Explanation: 
விளக்கம்: அரபு வணிகர்களின் சந்ததியினர் (அ) மாப்பிள்ளைமார்கள் படிப்படியாக விவசாயத்தைச் சார்ந்தவர்களாகி, நிலத்தை வாடகைக்கு எடுத்து விவசாயம் செய்வோராகவும் நிலமற்ற உழைப்பாளர்களாகவும் சில்லறை வணிகர்களாகவும் மீனவர்களாகவும் மாறினர். 1792இல் ஆங்கிலேயர் மலபாரைத் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தபோது, அவர்கள் நில உடைமை விவகாரங்களைச் சீரமைக்க முடிவெடுத்தார்கள்.
Question 158
நில உடைமை விவகாரங்கள் சீரமைப்பு தொடர்பான பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
  1. நிலத்துக்கான தனிநபர் உரிமையாளர் முறையை உருவாக்குவது அவர்கள் கொண்டுவந்த மாற்றமாகும்.
  2. ஆங்கிலேயர் கொண்டுவந்த புதிய முறை ஜன்மிகளை நிலத்தின் முழு உரிமையாளர்களாக்கி, குத்தகை விவசாயிகளை வெளியேற்றும் அதிகாரத்தையும் கொடுத்தது.
A
(i) சரி
B
(ii) சரி
C
(i) மற்றும் (ii) சரி
D
(i) மற்றும் (ii) தவறு
Question 158 Explanation: 
விளக்கம்: நிலத்துக்கான தனிநபர் உரிமையாளர் முறையை உருவாக்குவது அவர்கள் கொண்டுவந்த மாற்றமாகும். மை பெற்றவர்), கனம்தார் (கனம் என்ற உரிமை பெற்றவர்), விவசாயி ஆகியோர் சரிசமமாகப் பகிர்வதற்கு வாய்ப்பளித்தது. ஆங்கிலேயர் கொண்டுவந்த புதிய முறை ஜன்மிகளை நிலத்தின் முழு உரிமையாளர்களாக்கி, குத்தகை விவசாயிகளை வெளியேற்றும் அதிகாரத்தையும் கொடுத்தது. இந்த நடைமுறை அதற்கு முன்பு இல்லாததாகும்.
Question 159

விவசாயிகளை வறுமையின் உச்சத்தில் வாழும் நிலைக்குத் தள்ளியது எது/எவை?

A
மிகையாக மதிப்பிடுதல்
B
சட்டத்துக்குப் புறம்பான வரிகளைச் சுமத்துவது
C
நீதிமன்றமும் காவல்துறையும் நில உரிமையாளருக்கு மட்டுமே ஆதரவாக நடந்துகொள்வது
D
மேற்கண்ட அனைத்தும்
Question 159 Explanation: 
விளக்கம்: புதிய நிலவுடைமை முறை விவசாயிகளை மிகவும் பாதித்தது. இவற்றுடன், மிகையாக மதிப்பிடுதல், சட்டத்துக்குப் புறம்பான வரிகளைச் சுமத்துவது, நீதிமன்றமும் காவல்துறையும் நில உரிமையாளருக்கு மட்டுமே ஆதரவாக நடந்துகொள்வது ஆகியவை விவசாயிகளை வறுமையின் உச்சத்தில் வாழும் நிலைக்குத் தள்ளியது. தாங்க ள் நசுக்கப்படுவதை ச் சகித்துக்கொள்ள முடியாத விவசாயிகள் எதிர்வினை புரிந்த நிகழ்வுகள் மலபாரில் பத்தொன்பதாம் நூற்றாண்டு முழுதும் நடந்தன.
Question 160
பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
  1. 1849 ஆகஸ்ட் மாதத்தில் மஞ்சேரியிலும், 1851 ஆகஸ்ட் மாதத்தில் குளத்தூரிலும் 1852 ஜனவரி மாதத்தில்  மட்டனூரிலும் நிகழ்ந்த கிளர்ச்சிகள் மிகவும் தீவிரமானவையாகும்.
  2. அமைதியை ஏற்படுத்த ஆங்கிலேயர் கையாண்ட அடக்குமுறை நடவடிக்கைகள் பத்து வருடம் நீடித்தது.
A
(i) சரி
B
(ii) சரி
C
(i) மற்றும் (ii) சரி
D
(i) மற்றும் (ii) தவறு
Question 160 Explanation: 
விளக்கம்: அவற்றில் 1849 ஆகஸ்ட் மாதத்தில் மஞ்சேரியிலும், 1851 ஆகஸ்ட் மாதத்தில் குளத்தூரிலும் (இந்த இரு இடங்களும் தெற்கு மலபாரில் உள்ளவை) 1852 ஜனவரி மாதத்தில் வடக்கில் உள்ள மட்டனூரிலும் நிகழ்ந்த கிளர்ச்சிகள் மிகவும் தீவிரமானவையாகும். ஆங்கிலேய ஆயுதப்படைகள் கிளர்ச்சியை அடக்க அனுப்பப்பட்டன. இங்கெல்லாம் அமைதியை ஏற்படுத்த ஆங்கிலேயர் கையாண்ட அடக்குமுறை நடவடிக்கைகள் இருபது ஆண்டுகளுக்கு மேல் நீடித்தன.
Question 161
பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
  1. மாப்பிள்ளைகள் 1870இல் மீண்டும் எழுச்சி பெற்றனர்.
  2. 1857க்கு முந்தைய இந்தியாவில் நடைபெற்றவற்றில் சில கிளர்ச்சிகள் பழங்குடியினரால் நடத்தப்பட்டன.
A
(i) சரி
B
(ii) சரி
C
(i) மற்றும் (ii) சரி
D
(i) மற்றும் (ii) தவறு
Question 161 Explanation: 
விளக்கம்: ஆனால் மாப்பிள்ளைகள் 1870இல் மீண்டும் எழுச்சி பெற்றனர். மீண்டும் கிளர்ச்சிகள் நடந்தன. 1857க்கு முந்தைய இந்தியாவில் நடைபெற்றவற்றில் சில கிளர்ச்சிகள் பழங்குடியினரால் நடத்தப்பட்டன. உள்ளூர் வளங்கள் மீதான அவர்களின் தன்னாட்சியும் கட்டுப்பாடும் ஆங்கிலேய ஆட்சியாலும் பழங்குடி அல்லாதவரின் வருகையாலும் பாதிக்கப்பட்டதே இதற்குக் காரணமாகும். இப்பழங்குடிகள் இந்தியாவின் பெரும்பகுதிக்குப் பரவி, 19ஆம் நூற்றாண்டில் நூற்றுக்கணக்கான தீவிர மோதல்களையும் கிளர்ச்சிகளையும் ஏற்படுத்தினார்கள்.
Question 162
கோல்களின் கிளர்ச்சி எந்த ஆண்டு நடைபெற்றது?
A
1831-33
B
1855-56
C
1831-33
D
1831-32
Question 162 Explanation: 
விளக்கம்: கோல்களின் கிளர்ச்சி (1831-32) கோல் (Kol) என்ற பழங்குடி இனத்தினர் பீகாரிலும் ஒரிசாவிலும் சோட்டா நாக்பூர், சிங்பும் ஆகிய பகுதிகளில் வாழ்ந்தனர். சோட்டா நாக்பூர் ராஜா பல கிராமங்களைப் பழங்குடி அல்லாதோருக்குக் குத்தகைக்கு விட்டதே கோல்களின் கிளர்ச்சிக்கு உடனடிக்காரணமாகும்.
Question 163
பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
  1. சோன்பூர், தமர் ஆகிய பகுதிகளில் வசித்த கோல்கள் திக்காடர்களுக்கு (வரி வசூலிப்போர்) எதிரான கிளர்ச்சியை நடத்துவதற்கு முதல் முயற்சியை எடுத்தனர்.
  2. வெளியாருடைய சொத்துகளைத் தாக்குவதை இவர்களின் கிளர்ச்சி உள்ளடக்கியிருந்தது.
A
(i) சரி
B
(ii) சரி
C
(i) மற்றும் (ii) சரி
D
(i) மற்றும் (ii) தவறு
Question 163 Explanation: 
விளக்கம்: சோன்பூர், தமர் ஆகிய பகுதிகளில் வசித்த கோல்கள் திக்காடர்களுக்கு (வரி வசூலிப்போர்) எதிரான கிளர்ச்சியை நடத்துவதற்கு முதல் முயற்சியை எடுத்தனர். வெளியாருடைய சொத்துகளைத் தாக்குவதை இவர்களின் கிளர்ச்சி உள்ளடக்கியிருந்தது. கோல்கள் உயிர்ச்சேதம் ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை.
Question 164
கோல் கிளர்ச்சியில் முக்கிய வழிமுறைகளாக இருந்தவை?
A
உயிர்ச்சேதம்
B
கொள்ளையடிப்பது
C
சொத்துகளுக்குத் தீவைப்பது
D
b மற்றும் c)
Question 164 Explanation: 
விளக்கம்: கொள்ளையடிப்பதும் சொத்துகளுக்குத் தீவைப்பதும் அவர்களது கிளர்ச்சியில் முக்கிய வழிமுறைகளாக இருந்தன. 1831 டிசம்பர் 20ஆம் நாளில் சோட்டா நாக்பூரில் உள்ள சோனிப்பூர் பர்கானா எழுநூறு கிளர்ச்சியாளர்கள் அடங்கிய குழுவால் தாக்கப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்டது. 1832 ஜனவரி 26க்குள் கோல்கள் சோட்டா நாக்பூர் முழுவதையும் தங்கள் ஆளுகைக்குள் கொண்டு வந்துவிட்டார்கள். இவர்களின் கிளர்ச்சி ஆங்கிலேயருக்கு எதிரான ஒரு போருடன் முடிவுக்கு வந்தது.
Question 165
மிகத் தீவிரமாக ஒரு குறுகிய பரப்புக்குள் நடந்த சண்டையில் கொல்லப்பட்ட கோல் கிளர்ச்சியின் தலைவர்?
A
புத்த பகத்
B
பகத்கான்
C
பிர்சா
D
பிந்த்ராய் மன்கி
Question 165 Explanation: 
விளக்கம்: மிகத் தீவிரமாக ஒரு குறுகிய பரப்புக்குள் நடந்த சண்டையில் கோல் கிளர்ச்சியின் தலைவரான புத்த பகத் கொல்லப்பட்டார். துண்டிக்கப்பட்ட அவரது தலையை ஆட்சியாளர்களிடம் ஒப்படைப்பதற்காக அதிகாரிகள், இராணுவ வீரர்கள் ஆகியோரிடையே ஓராயிரம் ரூபாய் விநியோகிக்கப்பட்டது.
Question 166
கோல் கிளர்ச்சிக்குத் தூண்டுகோலாக இருந்தவர்?
A
புத்த பகத்
B
பகத்கான்
C
பிர்சா
D
பிந்த்ராய் மன்கி
Question 166 Explanation: 
விளக்கம்: கிளர்ச்சிக்குத் தூண்டுகோலாக இருந்த பிந்த்ராய் மன்கி 1832 மார்ச் 19ஆம் நாள் சரணடைந்ததும், கோல்களின் போராட்டம் ஒரு துயரமான முடிவுக்கு வந்தது.
Question 167
சந்தால் கிளர்ச்சி எந்த ஆண்டு நடைபெற்றது?
A
1831-33
B
1855-56
C
1831-33
D
1853-57
Question 167 Explanation: 
விளக்கம்: சந்தால் கிளர்ச்சி (1855-56): பழங்குடிகளான சந்தால்கள் வங்காளம், பீகார், ஒரிசா ஆகிய மாநிலங்களில் உள்ள பல்வேறு காட்டுப்பகுதிகளில் அங்கங்கே பரவியிருந்தபடி வாழ்ந்தார்கள். மஞ்சி என்றும் அவர்கள் அறியப்பட்டார்கள்.
Question 168
சந்தால்கள் எந்த  குன்றுகளைச் சுற்றியுள்ள பகுதியைத் திருத்தி அதை  சந்தால்களின் நிலம் என்று அழைத்தார்கள்?
A
ராஜ்மகல் குன்று
B
பார மஹால் குன்று
C
தேவகிரி குன்று
D
மகேந்திர கிரி
Question 168 Explanation: 
விளக்கம்: தங்களின் தாய்மண்ணிலிருந்து துரத்தப்பட்ட சந்தால்கள் ராஜ்மகல் குன்றுகளைச் சுற்றியுள்ள பகுதியைத் திருத்தி, அதை டாமின்–இ-கோ (சந்தால்களின் நிலம்) என்று அழைத்தார்கள்.
Question 169
பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
  1. சந்தால்கள் உள்ளூர் காவல்துறையினராலும் அப்பகுதிகளில் தொடர்வண்டிப்பாதை அமைப்பதில் ஈடுபட்ட ஐரோப்பிய அதிகாரிகளாலும் அடக்குமுறைக்குள்ளானார்கள்.
  2. பழங்குடி நிலங்கள் சந்தால் அல்லாத ஜமீன்தார்களுக்கும் வட்டிக்கடைக்காரர்களுக்கும் குத்தகைக்கு விடப்பட்டது.
A
(i) சரி
B
(ii) சரி
C
(i) மற்றும் (ii) சரி
D
(i) மற்றும் (ii) தவறு
Question 169 Explanation: 
விளக்கம்: பழங்குடி நிலங்கள் சந்தால் அல்லாத ஜமீன்தார்களுக்கும் வட்டிக்கடைக்காரர்களுக்கும் குத்தகைக்கு விடப்பட்டதால், சந்தால்கள் படிப்படியாகக் கையறுநிலையில் வாழ வேண்டிய நெருக்கடிக்குத் தள்ளப்பட்டார்கள். இத்துடன், உள்ளூர் காவல்துறையினராலும் அப்பகுதிகளில் தொடர்வண்டிப்பாதை அமைப்பதில் ஈடுபட்ட ஐரோப்பிய அதிகாரிகளாலும் அடக்குமுறைக்குள்ளானார்கள். டிக்குகளின் (வெளியிலிருந்து வந்தோர்) இத்தகைய ஊடுருவல் சந்தால் சமூகத்தை நிலை தடுமாறச் செய்தது. இது அவர்கள் இழந்த பகுதியை மீட்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட வைத்தது.
Question 170
பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
  1. 1855 ஜூலையில் சந்தால்கள் ஜமீன்தார்களுக்கும் அரசாங்கத்துக்கும் விடுத்த இறுதி எச்சரிக்கையை செவி மடுத்தனர்.
  2. சந்தால்களின் கிளர்ச்சி தம்மை ஒடுக்குபவர்களான ஜமீன்தார்கள், வட்டிக்கடைக்கரார்கள், அரசாங்கம் ஆகிய மூன்று தரப்பினரின் புனிதமற்ற கூட்டுக்கு எதிரானது என்று அவர்கள் குறிப்பிட்டார்கள்.
A
(i) சரி
B
(ii) சரி
C
(i) மற்றும் (ii) சரி
D
(i) மற்றும் (ii) தவறு
Question 170 Explanation: 
விளக்கம்: 1855 ஜூலையில் சந்தால்கள் ஜமீன்தார்களுக்கும் அரசாங்கத்துக்கும் விடுத்த இறுதி எச்சரிக்கை செவிமடுக்காமல் போனவுடன், ஆயிரக்கணக்கிலான சந்தால்கள் வில்லும் அம்பும் ஏந்திக்கொண்டு வெளிப்படையான கிளர்ச்சியைத் துவக்கினார்கள். தமது கிளர்ச்சி தம்மை ஒடுக்குபவர்களான ஜமீன்தார்கள், வட்டிக்கடைக்கரார்கள், அரசாங்கம் ஆகிய மூன்று தரப்பினரின் புனிதமற்ற கூட்டுக்கு எதிரானது என்று அவர்கள் குறிப்பிட்டார்கள்.
Question 171
அதிகாரத்துக்கு உரிமைகோரும் அடையாளத்துக்கான ஆடை எந்த நிறத்தால் ஆனது?
A
நீலம்
B
சிவப்பு
C
பச்சை
D
கருப்பு
Question 171 Explanation: 
விளக்கம்: மகேஷ்பூர் போரில் மஞ்சிகளில் பெரும்பாலானவர்கள் சிவப்பு நிற உடையை அணிந்திருந்தார்கள். பின்னாட்களில் இது அதிகாரத்துக்கு உரிமைகோரும் அடையாளத்துக்கான ஆடை ஆனது. கிளர்ச்சியின் முதல் வாரத்தில் பத்து பேர் அடங்கிய ஒரு குழு மோங்கபர்ரா என்னும் கிராமத்தைத் தாக்கித் தீக்கிரையாக்கியது. கிளர்ச்சியாளர்களில் பெண்களும் இருந்தார்கள்.
Question 172
தொடக்கத்தில் சந்தால்களின் தலைவராக இருந்தவர்?
A
சித்தோ
B
கானு
C
புத்த பகத்
D
பிர்சா
Question 172 Explanation: 
விளக்கம்: தொடக்கத்தில் சித்தோ சந்தால்களின் தலைவராக இருந்தார். அவர் கைது செய்யப்பட்ட பின்னர் கானு கிளர்ச்சியை நடத்தினார். கிளர்ச்சியின் பிற்பகுதியில் விவசாயிகளும் சேர்ந்துகொண்டார்கள்.
Question 173
பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
  1. ஆயிரக்கணக்கான விவசாயிகள் சார்லஸ் மசேக் அவுரித் தொழிற்சாலையைத் தாக்கிக் கொள்ளையடித்தார்கள்.
  2. இராணுவம் குவிக்கப்பட்டு, சந்தால் கிராமங்கள் பழிக்குப் பழியாக ஒன்றன் பின் ஒன்றாகத் தீக்கிரையாக்கப்பட்டன.
A
(i) சரி
B
(ii) சரி
C
(i) மற்றும் (ii) சரி
D
(i) மற்றும் (ii) தவறு
Question 173 Explanation: 
விளக்கம்: ஆயிரக்கணக்கான விவசாயிகள் சார்லஸ் மசேக் அவுரித் தொழிற்சாலையைத் தாக்கிக் கொள்ளையடித்தார்கள். இதன் விளைவாக, கிளர்ச்சியை ஒடுக்க ஆங்கிலேயர் தரப்பிலிருந்து மிருகத்தனமான நடவடிக்கைகள் தொடங்கின. இராணுவம் குவிக்கப்பட்டு, சந்தால் கிராமங்கள் பழிக்குப் பழியாக ஒன்றன் பின் ஒன்றாகத் தீக்கிரையாக்கப்பட்டன. ஒரு கணக்கீட்டின்படி, கிளர்ச்சி இறுதியாக ஒடுக்கப்படும் முன்பு, 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் பேர் வரையான கிளர்ச்சியாளர்களில் 15 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரம் பேர் வரை கொல்லப்பட்டார்கள் எனத் தெரிகிறது.
Question 174
முண்டாக்களின் கிளர்ச்சி  எந்த காலகட்டத்தில் நடைபெற்றது?
A
1899-1900
B
1897-1898
C
1899-1905
D
1891-1900
Question 174 Explanation: 
விளக்கம்:பிர்சா முண்டா வழிநடத்திய முண்டாக்களின் கிளர்ச்சி (உல்குலன்) 1899-1900 காலகட்டத்தில் நடைபெற்றது. முண்டாக்கள் பீகார் பகுதியில் முக்கியத்துவம் வாய்ந்த பழங்குடிகள் ஆவர். ஆங்கிலேயரின் ஆட்சியில் அவர்களின் பொதுநில உரிமை முறை அழிக்கப்பட்டது.
Question 175
ஆங்கிலேயரை விரட்டிவிட்டு முண்டாக்களின் ஆட்சியை நிறுவ வந்த புனிதத்தூதர் என தன்னை அழைத்துக்கொண்டவர்?
A
சித்தோ
B
கானு
C
பிர்சா
D
புத்தக பகத்
Question 175 Explanation: 
விளக்கம்: முண்டாக்களுக்குச் சொந்தமான நிலங்களை ஜாகீர்தார்களும் திக்காடர்களும் (பெரும் விவசாயி) வட்டிக்கடைக்காரர்களும் பறித்துக்கொண்டனர். பிர்சா முண்டா குத்தகைக்குப் பயிரிடும் விவசாயிகளின் குடும்பத்தில் 1874இல் பிறந்தார். ஆங்கிலேயரை விரட்டிவிட்டு, முண்டாக்களின் ஆட்சியை நிறுவ வந்த புனிதத்தூதர் என அவர் தன்னை அழைத்துக்கொண்டார்.
Question 176
முண்டா இனத்தைச் சேர்ந்த விவசாயிகள் ஜமீன்தார்களுக்கு வாடகை செலுத்த வேண்டாம் என  வலியுறுத்தியவர்?
A
சித்தோ
B
கானு
C
பிர்சா முண்டா
D
புத்தக பகத்
Question 176 Explanation: 
விளக்கம்: பழங்குடிகளின் நிலங்களைப் பழங்குடி அல்லாதோர் ஆக்கிரமிப்பதை இவரது தலமையில் முண்டாக்கள் எதிர்த்தார்கள். முண்டா இனத்தைச் சேர்ந்த விவசாயிகள் ஜமீன்தார்களுக்கு வாடகை செலுத்த வேண்டாம் என பிர்சா முண்டா வலியுறுத்தினார்.
Question 177
பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
  1. சித்தோ சோட்டா நாக்பூர் பகுதியில் கிளர்ச்சியைத் துவக்கினார்.
  2. சாயில் ரகப் என்னுமிடத்தில் முண்டா சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் கண்மூடித்தனமாகக் கொல்லப்பட்டார்கள்
A
(i) சரி
B
(ii) சரி
C
(i) மற்றும் (ii) சரி
D
(i) மற்றும் (ii) தவறு
Question 177 Explanation: 
விளக்கம்: பிர்சா முண்டா சோட்டா நாக்பூர் பகுதியில் கிளர்ச்சியைத் துவக்கினார். சாயில் ரகப் என்னுமிடத்தில் முண்டா சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் கண்மூடித்தனமாகக் கொல்லப்பட்டார்கள். சாயில் ரகப் படுகொலை பிர்சா ஆதரவாளர்களைத் தடுத்து நிறுத்தவில்லை.
Question 178
பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
  1. ஆங்கிலேய அதிகாரிகள் பிர்சாவைக் கைது செய்ய உத்தரவு பிறப்பித்ததுடன், அவரைப் பிடித்துத் தருபவர்களுக்குப் பரிசளிப்பதாகவும் அறிவித்தார்கள்.
  2. ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்ட பிர்சா 1905ஆம் ஆண்டு ஜூன் 9ஆம் நாளில் தியாகி ஆனார்.
A
(i) சரி
B
(ii) சரி
C
(i) மற்றும் (ii) சரி
D
(i) மற்றும் (ii) தவறு
Question 178 Explanation: 
விளக்கம்: ஆங்கிலேய அதிகாரிகள் பிர்சாவைக் கைது செய்ய உத்தரவு பிறப்பித்ததுடன், அவரைப் பிடித்துத் தருபவர்களுக்குப் பரிசளிப்பதாகவும் அறிவித்தார்கள். இத்தனைக்குப் பிறகும் போராட்டத்தில் பெண்களின் பங்களிப்பு தொடர்வதைக் காண முடிகிறது. ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்ட பிர்சா 1900ஆம் ஆண்டு ஜூன் 9ஆம் நாளில் தியாகி ஆனார். அவருடைய பெயர் தொடர்ந்து அப்பகுதியின் மலைவாழ் மக்களை ஈர்ப்பதாக உள்ளது.
Question 179
1857ஆம் ஆண்டு பெருங்கிளர்ச்சி ஆங்கில ஏகாதிபத்திய வரலாற்றாசிரியர்களால் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A
இராணுவக் கலகம்
B
இராணுவ வீரர்களின் கோபத்தின் வெளிப்பாடு
C
a மற்றும் b)
D
முதல் இந்திய சுதந்திரப்போர்
Question 179 Explanation: 
விளக்கம்: 1857ஆம் ஆண்டு பெருங்கிளர்ச்சி ஆங்கிலேய, இந்திய வரலாற்று அறிஞர்களிடையே பெரும் விவாதத்திற்குரிய பொருளாக உள்ளது. ஆங்கில ஏகாதிபத்திய வரலாற்றாசிரியர்கள் இவ்வெழுச்சியை இராணுவக் கலகம் என்றும் இராணுவ வீரர்களின் கோபத்தின் வெளிப்பாடு என்று கூறி சாதாரணமாகப் புறந்தள்ளுகின்றனர்.
Question 180
“ஒரு இராணுவ வீரர்களின் கலகம் . . . விரைவாக தனது குணாதியத்தை மாற்றிக் கொண்டு தேசீய எழுச்சியாக மாறியது” என்று 1857 பெருங்கிளர்ச்சி குறித்து குறிப்பிடுபவர்?
A
எட்வர்டு ஜான் தாம்சன்
B
வில்லியம் பெண்டிங்க்
C
கர்னல் கீன்
D
கர்னல் மல்லீசன்
Question 180 Explanation: 
விளக்கம்:வங்காளப் படையின் ஆங்கிலத் தளபதியான கர்னல் மல்லீசன் “The Making of the Bengal Army” வங்காளப்படையின் உருவாக்கம் எனும் சிறு ஏட்டில் “ஒரு இராணுவ வீரர்களின் கலகம் . . . விரைவாக தனது குணாதியத்தை மாற்றிக் கொண்டு தேசீய எழுச்சியாக மாறியது” என்று குறிப்பிடுகிறார்.
Question 181
பெருங்கிளர்ச்சிக்குக் காரணமாகச் செயல்பட்ட பல விஷயங்களை முன்வைப்பவர்?
A
எட்வர்டு ஜான் தாம்சன்
B
வில்லியம் பெண்டிங்க்
C
கர்னல் கீன்
D
கர்னல் மல்லீசன்
Question 181 Explanation: 
விளக்கம்: வரலாற்றறிஞர் கீன் (Keen) இக்கிளர்ச்சிக்குக் காரணமாகச் செயல்பட்ட பல விஷயங்களை முன்வைக்கிறார். டல்ஹௌசியின் இணைப்புக் கொள்கைகளாலும் சீர்திருத்த வேகத்தாலும் பாதிப்புக்குள்ளான இளவரசர்கள், இராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்களின் குமுறல்கள் என ஏற்கனவே குவித்து வைக்கப்பட்டிருந்த எரிபொருளை கொழுப்பு தடவப்பட்ட தோட்டாக்கள் தீப்பொறியை ஏற்படுத்திப் பற்றி எரியச் செய்தன.
Question 182
“பெருமளவில் உண்மையான விடுதலைப் போராட்டம்” என பெருங்கிளர்ச்சி குறித்து கூறியவர்?
A
எட்வர்டு ஜான் தாம்சன்
B
வில்லியம் பெண்டிங்க்
C
கர்னல் கீன்
D
கர்னல் மல்லீசன்
Question 182 Explanation: 
விளக்கம்: எட்வர்டு ஜான் தாம்சன் இந்நிகழ்வை “பெருமளவில் உண்மையான விடுதலைப் போராட்டம்” என விளக்கியுள்ளார்.
Question 183
1909இல் வெளியான சாவர்கரின் புத்தகம் எது?
A
சிப்பாய்க்கலகம்
B
இராணுவப்புரட்சி
C
முதல் இந்திய சுதந்திரப்போர்
D
பெருங்கிளர்ச்சி
Question 183 Explanation: 
விளக்கம்: ஆங்கிலம் படித்த மத்தியதர மக்கள் இவ்வெழுச்சியில் எந்த ஒரு பங்கையும் வகிக்காவிட்டாலும் தேசிய வரலாற்றிஞர்கள் இவ்வெழுச்சியை இந்தியாவின் முதல் விடுதலைப் போர் என்றே கூறுகின்றனர்.1909இல் வெளியான சாவர்கரின் The War of IndianIndependence (இந்திய விடுதலைப் போர்) எனும் தனது நூலில் ஆங்கிலேயரால் இதுவரை வெறும் இராணுவப் புரட்சியே என்று வர்ணிக்கப்பட்ட இந்நிகழ்வு உண்மையில் அமெரிக்க சுதந்திரப் போரைப் போன்ற ஒரு விடுதலைப் போரே என வாதிடுகின்றனர்.
Question 184
குத்தகை இல்லாத நிலங்களை வைத்திருப்போர் பற்றி விசாரிக்க இனாம் கமிஷனை எந்த அரசு அமைத்தது?
A
பம்பாய் அரசு
B
சென்னை அரசு
C
கல்கத்தா அரசு
D
டெல்லி அரசு
Question 184 Explanation: 
விளக்கம்:டல்ஹௌசி வாரிசு உரிமை இழப்புக் கொள்கையின் மூலமாக அவத்தையும் ஜான்சியையும் இணைத்ததும், கடைசி பேஷ்வாவின் சுவீகார மகனான நானா சாகிபை அவமானகரமாக நடத்தியதும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தின. முறையான உரிமம் இல்லாமல், குத்தகை இல்லாத நிலங்களை வைத்திருப்போர் பற்றி விசாரிக்க பம்பாய் அரசு அமைத்த இனாம் கமிஷனின் (1852) அறிக்கையின்படி 21,000க்கும் மேற்பட்ட தோட்டங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Question 185
பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
  1. இணைக்கப்பட்ட பகுதிகளில் குறிப்பாக அவத்தில் மேற்கொள்ளப்பட்ட நிலவருவாய் ஏற்பாடுகள் தாலுக்தாரின் நலன்களுக்குப் பாதகமாக அமைந்ததால் அவர்கள் ஆங்கிலேயருக்கு எதிராகத் திரும்பினர்.
  2. டல்ஹௌசி தன்னுடைய விரிவாக்கக் கொள்கையின் மூலமாக பெருவாரியான மக்களுக்குத் துன்பத்தை விளைவித்தார்.
A
(i) சரி
B
(ii) சரி
C
(i) மற்றும் (ii) சரி
D
(i) மற்றும் (ii) தவறு
Question 185 Explanation: 
விளக்கம்: இணைக்கப்பட்ட பகுதிகளில் குறிப்பாக அவத்தில் மேற்கொள்ளப்பட்ட நிலவருவாய் ஏற்பாடுகள் தாலுக்தாரின் நலன்களுக்குப் பாதகமாக அமைந்ததால் அவர்கள் ஆங்கிலேயருக்கு எதிராகத் திரும்பினர். மேலும் அவத்தில் அரச குடும்பத்தின் ஆதரவை நம்பியிருந்த ஆயிரக் கணக்கான மக்களும், விலையுயர்ந்த ஆடைகள், அலங்கரிக்கப்பட்ட காலணிகள், அதிக விலையுள்ள நகைகள் ஆகியவற்றைத் தயாரிப்போரும் வாழ்விழந்தனர். இவ்வாறு டல்ஹௌசி தன்னுடைய விரிவாக்கக் கொள்கையின் மூலமாக பெருவாரியான மக்களுக்குத் துன்பத்தை விளைவித்தார்.
Question 186
பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
  1. ஆங்கிலேயருக்கு முன்னர் இருந்த இந்திய அரசுகள் விளைந்த நிலங்களுக்கு மட்டுமே வரி வசூலித்தனர்.
  2. ஆங்கிலேயர் நிலவருவாயை வரியாகக் கருதாமல் வாடகையாகக் கருதினர்.
A
(i) சரி
B
(ii) சரி
C
(i) மற்றும் (ii) சரி
D
(i) மற்றும் (ii) தவறு
Question 186 Explanation: 
விளக்கம்: அநியாயமான நிலவருவாய் முறை இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட நிலவருவாய் ஏற்பாடுகளில் இருந்ததைக் காட்டிலும் தற்போது நிலவரி மிக அதிகமாக இருந்தது. ஆங்கிலேயருக்கு முன்னர் இருந்த இந்திய அரசுகள் விளைந்த நிலங்களுக்கு மட்டுமே வரி வசூலித்தனர். ஆங்கிலேயர் நிலவருவாயை வரியாகக் கருதாமல் வாடகையாகக் கருதினர். இதன்படி நிலத்தில் விவசாயம் செய்தாலும் செய்யாவிட்டாலும் அதே அளவு வரி வசூலிக்கப்பட்டது.
Question 187
பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
  1. பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதல் பாதியில் விவசாயப் பண்டங்களின் விலைகள் கடுமையாக வீழ்ச்சியுற்றன.
  2. காலனியரசு கடனைக் குறைக்கவோ நிவாரணம் வழங்கவோ முன்வராத சூழலில் சிறு விவசாயிகளும் குத்தகைதாரர்களும் சொல்லொணாத் துயரங்களுக்கு உள்ளாயினர்.
A
(i) சரி
B
(ii) சரி
C
(i) மற்றும் (ii) சரி
D
(i) மற்றும் (ii) தவறு
Question 187 Explanation: 
விளக்கம்: பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதல் பாதியில் விவசாயப் பண்டங்களின் விலைகள் கடுமையாக வீழ்ச்சியுற்றன. காலனியரசு கடனைக் குறைக்கவோ நிவாரணம் வழங்கவோ முன்வராத சூழலில் சிறு விவசாயிகளும் குத்தகைதாரர்களும் சொல்லொணாத் துயரங்களுக்கு உள்ளாயினர்.
Question 188
பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
  1. நீதிமன்றங்களில் பொதுப்பணித் தேர்வுகளில் பாரசீக மொழியின் பயன்பாடு ஒழிக்கப்பட்டது.
  2. அரசுப் பணியில் முஸ்லீம்கள் சேர்வதற்கான வாய்ப்புகளைக் குறைத்தது.
A
(i) சரி
B
(ii) சரி
C
(i) மற்றும் (ii) சரி
D
(i) மற்றும் (ii) தவறு
Question 188 Explanation: 
விளக்கம்: ஆங்கில மொழியும் மேலைக்கல்வியும் முஸ்லீம் அறிவுஜீவிகளை முக்கியமற்றவர்களாக ஆக்கியது. நீதிமன்றங்களில் பொதுப்பணித் தேர்வுகளில் பாரசீக மொழியின் பயன்பாடு ஒழிக்கப்பட்டது அரசுப் பணியில் முஸ்லீம்கள் சேர்வதற்கான வாய்ப்புகளைக் குறைத்தது.
Question 189
எந்த ஆண்டு இயற்றப்பட்ட சட்டம் வங்காளப் படையில் உயர் ஜாதியினரும் சேர்ந்துகொள்ள வழிவகை செய்தது?
A
1856
B
1843
C
1857
D
1858
Question 189 Explanation: 
விளக்கம்: மத உணர்வுகள்: 1856ஆம் ஆண்டு சட்டமானது வங்காளப் படையில் உயர் ஜாதியினரும் சேர்ந்துகொள்ள வழிவகை செய்தது. சாதிப்பற்றை, கைவிட்டு அவர்கள் படைகளில் சேரவேண்டும் அல்லது இராணுவத்தில் சேர்ந்து பணியாற்றி முன்னேறும் வாய்ப்பைக் கைவிட வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.
Question 190
லெக்ஸ் லோசி (Lex Loci Act) சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
A
1856
B
1850
C
1855
D
1858
Question 190 Explanation: 
விளக்கம்: மேலும் சதிஒழிப்புச் சட்டம், விதவை மறுமணத்தை சட்டபூர்வமாக்கியது, பெண் குழந்தைகள் கொல்லப்படுவதற்கு எதிரான சட்டம் ஆகியவை சமய நம்பிக்கைகளில் ஆங்கில அரசு தலையிடுவதாகக் கருதப்பட்டது. 1850இல்இயற்றப்பட்ட லெக்ஸ் லோசி (Lex Loci Act) சட்டம் கிறித்தவர்களாக மதம் மாறியவர்களுக்கும் மூதாதையரின் சொத்துக்களில் உரிய பங்கினைப் பெறும் உரிமையை அளித்தது. இது வைதீக இந்துக்களிடையே வெறுப்பை ஏற்படுத்தியது.
Question 191
பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
  1. துப்பாக்கித் தோட்டாக்களில் பசுவின் கொழுப்பும் பன்றியின் கொழுப்பும் தடவப்பட்டுள்ளது என்ற செய்தி பரவியபோது இந்து முஸ்லீம் படைவீரர்களின் மத உணர்வுகள் புண்பட்டன.
  2. இத்தோட்டாக்களை புதிதாக அறிமுகமான என்பீல்டு துப்பாக்கிகளுக்குள் செலுத்துவதற்கு முன்பாக அதைப் படை வீரர்கள் கடிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டது.
A
(i) சரி
B
(ii) சரி
C
(i) மற்றும் (ii) சரி
D
(i) மற்றும் (ii) தவறு
Question 191 Explanation: 
விளக்கம்: துப்பாக்கித் தோட்டாக்களில் பசுவின் கொழுப்பும் பன்றியின் கொழுப்பும் தடவப்பட்டுள்ளது என்ற செய்தி பரவியபோது இந்து முஸ்லீம் படைவீரர்களின் மத உணர்வுகள் புண்பட்டன. இத்தோட்டாக்களை புதிதாக அறிமுகமான என்பீல்டு துப்பாக்கிகளுக்குள் செலுத்துவதற்கு முன்பாக அதைப் படை வீரர்கள் கடிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டது. இது கிறித்தவ மதத்திற்கு மாற்றம் செய்யும் முயற்சியாக கருதப்பட்டது.
Question 192
பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
  1. கொழுப்பு தடவிய தோட்டா பிரச்சனை கிளர்ச்சி எனும் வெடிமருந்தில் வைக்கப்பட்ட தீப்பொறியாகும்.
  2. பதவி பறிக்கப்பட்ட அனைவரும் இவ்வெழுச்சியைத் தங்கள் குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளும் வாய்ப்பாகக் கருதினர்.
A
(i) சரி
B
(ii) சரி
C
(i) மற்றும் (ii) சரி
D
(i) மற்றும் (ii) தவறு
Question 192 Explanation: 
விளக்கம்: அனைத்து விதத்திலும் 1857 ஆம் ஆண்டு, பெருங்கிளர்ச்சி கனிந்த ஆண்டாகும். கொழுப்பு தடவிய தோட்டா பிரச்சனை கிளர்ச்சி எனும் வெடிமருந்தில் வைக்கப்பட்ட தீப்பொறியாகும். பதவி பறிக்கப்பட்ட அதிருப்தி கொண்ட ராஜாக்கள், ராணிகள், ஜமீன்தார்கள், குத்தகைதாரர்கள் கைவினைஞர்கள், தொழிலாளர்கள், முஸ்லீம் அறிவு ஜீவிகள், இந்து பண்டிதர்கள், குருமார்கள் ஆகிய அனைவரும் இவ்வெழுச்சியைத் தங்கள் குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளும் வாய்ப்பாகக் கருதினர்.
Question 193
1857 ஆம் ஆண்டின் பெருங் கிளர்ச்சி எங்கு நடைபெற்ற  இராணுவக் கலகமாக தொடங்கியது?
A
பரக்பூர்
B
மீரட்
C
டெல்லி
D
மிர்சாபூர்
Question 193 Explanation: 
விளக்கம்: பெருங்கிளர்ச்சியின் போக்கு: இப்பெருங் கிளர்ச்சி கல்கத்தாவுக்கு அருகேயுள்ள பரக்பூரில் இராணுவக் கலகமாகவே தொடங்கியது. மங்கள் பாண்டே தனது இராணுவ மேலதிகாரியை சுட்டுக் கொன்றார். தொடர்ந்து அங்கு இராணுவக் கலகம் வெடித்தது. அடுத்த மாதம் மீரட் நகரில் தோட்டாக்களைப் பெற வேண்டிய 90 வீரர்களில் ஐவர் மட்டுமே உத்தரவுக்கு அடிபணிந்தனர்.
Question 194
கிளர்ச்சியாளர்கள் யாரை  பேரரசராகப் பிரகடனம் செய்தனர்?
A
முதலாம் பகதூர்ஷா
B
இரண்டாம் அக்பர்
C
இரண்டாம் பகதூர்ஷா
D
இரண்டாம் ஆலம்கீர்
Question 194 Explanation: 
விளக்கம்:மே மாதம் 10 ஆம் நாளில் மூன்று ரெஜிமெண்டுகளைச் சேர்ந்த சிப்பாய்கள் கிளர்ச்சியில் இறங்கி தங்கள் உயர் அதிகாரிகளைக் கொன்று, சிறையில் அடைக்கப்பட்டிருந்த வீரர்களை விடுதலை செய்தனர். மறுநாள் தில்லியை அடைந்த அவர்கள் ஐரோப்பியர் பலரைக் கொன்று நகரைக் கைப்பற்றினர் கிளர்ச்சியாளர்கள் இரண்டாம் பகதூர்ஷாவை பேரரசராகப் பிரகடனம் செய்தனர்.
Question 195
தன்னைப் பேரரசருடைய வைஸ்ராயாக அறிவித்துக் கொண்டவர்?
A
குன்வர் சிங்
B
கான் இ கான்
C
கான் பகதூர் கான்
D
தாந்தியா தோப்
Question 195 Explanation: 
விளக்கம்: ஜுன் மாதத்தில் கிளர்ச்சி ரோகில்கண்ட் பகுதிக்குப் பரவியது. ஒட்டுமொத்த கிராமப்புறமும் கிளர்ச்சியில் ஈடுபட்டது. கான் பகதூர் கான் தன்னைப் பேரரசருடைய வைஸ்ராயாக அறிவித்துக் கொண்டார். புந்தேல்கண்ட் பகுதியும் ஆற்றிடைப்பகுதி முழுவதும் ஆங்கிலேயருக்கு எதிராக ஆயுதம் ஏந்தியது. ஜான்சியில் ஐரோப்பியர் கொல்லப்பட்டு 22 வயதான லட்சுமிபாய் அரியணை ஏற்றப்பட்டார்.
Question 196
கான்பூரில் கிளர்ச்சிக்குத் தலைமை தாங்கியவர் யார்?
A
குன்வர் சிங்
B
நானா சாகிப்
C
ஹஸ்ரத் பேகம்
D
தாந்தியா தோப்
Question 196 Explanation: 
விளக்கம்:கான்பூரில் நானா சாகிப் கிளர்ச்சிக்குத் தலைமை தாங்கினார். பெண்களும் குழந்தைகளும் உட்பட சுமார் 125 ஆங்கிலேயர்களும் ஆங்கில அதிகாரிகளும் கொல்லப்பட்டு அவர்களது உடல்கள் ஒரு கிணற்றுக்குள் வீசப்பட்டன. கான்பூர் படுகொலை என்றறியப்பட்ட இந்நிகழ்வு ஆங்கிலேயரைக் கோபம் கொள்ளச் செய்தது.
Question 197
கான்பூர் படுகொலையில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கொடூரமான முறையில் பழி தீர்த்தவர்?
A
நீல்
B
ஹூக் ரோஸ்
C
ஹேவ்லக்
D
ஹென்றி லாரன்ஸ்
Question 197 Explanation: 
விளக்கம்: நிலைமைகளை எதிர்கொள்ள அனுப்பப்பட்ட தளபதி ஹென்றி ஹேவ்லக் படுகொலைக்கு மறுநாளே நானா சாகிப்பைத் தோற்கடித்தார். ஆங்கில இராணுவ அதிகாரி நீல் கொடூரமான பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டார். படுகொலைக்குக் காரணமானவர்கள் எனக் கருதப்பட்டோர் அனைவரும் கொல்லப்பட்டனர்.
Question 198
தாந்தியா தோபே கான்பூரைக் கைப்பற்றிய பின் அது விரைவில் யாரால் மீட்கப்பட்டது?
A
கார்ப்பரல் பியர்சி
B
மேஜர் ஆர்ம்ஸ்ட்ராங்
C
ஹேவ்லக்
D
காம்ப்பெல்
Question 198 Explanation: 
விளக்கம்:நவம்பர் மாத இறுதியில் தாந்தியா தோபே கான்பூரைக் கைப்பற்றினார். ஆனால் அது விரைவில் காம்ப்பெல் என்பவரால் மீட்கப்பட்டது.
Question 199
லக்னோ ஆளுநர் மாளிகை யாரால் பாதுகாக்கப்பட்டது?
A
ஹேவ்லக்
B
மேஜர் ஆர்ம்ஸ்ட்ராங்
C
ஹென்றி லாரன்ஸ்
D
காம்ப்பெல்
Question 199 Explanation: 
விளக்கம்: ஹென்றி லாரன்சால் பாதுகாக்கப்பட்ட லக்னோ ஆளுநர் மாளிகை கிளர்ச்சியாளர்களின் வசமானது. நானா சாகிப்பை ஹேவ்லக் தோற்கடித்த பின்னர் லக்னோவைக் கைப்பற்ற விரைந்தார். ஆனால் அவர் திரும்ப நேர்ந்தது.
Question 200
புரட்சியாளர்களிடமிருந்து டெல்லியை கைப்பற்றிய ஆங்கிலத்தளபதி?
A
ஜான் நிக்கல்சன்
B
ஜான் லாரன்ஸ்
C
ஹென்றி லாரன்ஸ்
D
காம்ப்பெல்
Question 200 Explanation: 
விளக்கம்: ஜுலை மாத இறுதியில் ஜான் லாரன்ஸால் தில்லிக்கு அனுப்பப்பட்ட ஜான் நிக்கல்சன் அதைக் கைப்பற்றுவதில் வெற்றி பெற்றார்.
Question 201
பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
  1. அவத்தில் மட்டும் தாலுக்தார்களும் விவசாயிளுடன் பங்கு கொண்டதால் கிளர்ச்சி நீடித்தது.
  2. தாலுக்தார்களில் பலர் அவத் நவாபின் விசுவாசிகளாவர்.
A
(i) சரி
B
(ii) சரி
C
(i) மற்றும் (ii) சரி
D
(i) மற்றும் (ii) தவறு
Question 201 Explanation: 
விளக்கம்: அவத்தில் மட்டும் தாலுக்தார்களும் விவசாயிளுடன் பங்கு கொண்டதால் கிளர்ச்சி நீடித்தது. தாலுக்தார்களில் பலர் அவத் நவாபின் விசுவாசிகளாவர். ஆகவே அவர்கள் லக்னோவில் பேகம் ஹஸ்ரத் மஹாலோடு (நவாப் வஜித் அலியின் மனைவி) சேர்ந்து ஆங்கிலேயரை எதிர்த்தனர். பெரும்பாலான வீரர்கள் விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். ஆதலால் விவசாயிகள் பாதிக்கப்பட்டபோது இவர்களும் பாதிப்புக்குள்ளாயினர்.
Question 202
நீண்ட காலத்திற்கு வங்காளப்படைகளுக்கு நாற்றங்காலாக இருந்தது எது?
A
டெல்லி
B
மீரட்
C
அவத்
D
கான்பூர்
Question 202 Explanation: 
விளக்கம்: நீண்ட காலத்திற்கு வங்காளப்படைகளுக்கு அவத் நாற்றங்காலாக இருந்தது. அவத்தை சேர்ந்த வீரர்கள் குறைந்த ஊதியம் குறித்தும் விடுமுறை பெறுவதிலுள்ள இடர்ப்பாடுகள் பற்றியும் புகார் செய்தனர். அவர்கள் அனைவரும் பேகம் ஹஸ்ரத் மஹாலின் பின் அணி திரண்டனர். ராஜா ஜெய்லால் சிங்கின் தலைமையில் அவர்கள் ஆங்கிலேயருக்கு எதிராகப் போரிட்டு லக்னோவைக் கைப்பற்றினர்.
Question 203
நீல் எங்கு நடைபெற்ற தெருச் சண்டையில் சுட்டுக் கொல்லப்பட்டார்?
A
லக்னோ
B
மீரட்
C
டெல்லி
D
கான்பூர்
Question 203 Explanation: 
விளக்கம்: ஹஸ்ரத் மஹால் தன் மகன் பிர்ஜிஸ் கத்ராவை அவத்தின் அரசராக அறிவித்தார். கான்பூரில் பழிதீர்த்துக் கொண்ட நீல் லக்னோவில் தெருச் சண்டையில் சுட்டுக் கொல்லப்பட்டார். 1858 மார்ச் மாதத்தில்தான் லக்னோவை ஆங்கிலேயரால் கைப்பற்ற முடிந்தது.
Question 204
நீல் சிலை இந்தியாவில் எங்கு வைக்கப்பட்டிருந்தது?
A
மும்பை
B
கல்கத்தா
C
டெல்லி
D
சென்னை
Question 204 Explanation: 
விளக்கம்: சென்னை மௌன்ட் ரோட்டில் வைக்கப்பட்டிருந்த நீல் சிலை இந்திய தேசியவாதிகளைக் கோபம் கொள்ளச் செய்தது. அதை அப்புறப்படுத்த காங்கிரஸ் சத்தியாக்கிரகம் செய்தது. ராஜாஜியின் காங்கிரஸ் அமைச்சரவை (1937-39) இச்சிலையை அகற்றி சென்னை அருங்காட்சியகத்தில் வைத்தது.
Question 205
பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
  1. ஹக் ரோஸ் ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் ஜான்சியை முற்றுகையிட்டு தாந்தியா தோபேயைத் தோற்கடித்தார்.
  2. லட்சுமிபாய் துணிச்சலுடன் போரிட்டு குவாலியரைக் கைப்பற்றினார்.
A
(i) சரி
B
(ii) சரி
C
(i) மற்றும் (ii) சரி
D
(i) மற்றும் (ii) தவறு
Question 205 Explanation: 
விளக்கம்: ஹக் ரோஸ் ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் ஜான்சியை முற்றுகையிட்டு தாந்தியா தோபேயைத் தோற்கடித்தார். இருந்தபோதிலும் லட்சுமிபாய் துணிச்சலுடன் போரிட்டு குவாலியரைக் கைப்பற்றினார். ஆங்கிலேயருக்கு ஆதரவான குவாலியர் அரசர் சிந்தியா தப்பியோடினார். ரோஸ் தன்னுடைய படைகளோடு லட்சுமிபாயுடன் நேரடியாக மோதினார். வியப்பூட்டும் வகையில் லட்சுமிபாய் போரில் பங்கேற்று வீரமரணமடைந்தார்.
Question 206
பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
  1. 1858இல் கானிங் இராணுவப் புரட்சி ஒடுக்கப்பட்டுஅமைதி மீட்கப்பட்டதாக அறிவித்தார்.
  2. தாந்தியா தோபே கைது செய்யப்பட்டு 1858 ஏப்ரல் மாதம் கொல்லப்பட்டார்.
A
(i) சரி
B
(ii) சரி
C
(i) மற்றும் (ii) சரி
D
(i) மற்றும் (ii) தவறு
Question 206 Explanation: 
விளக்கம்: குவாலியர் விரைவில் மீட்கப்பட்டது. 1858இல் கானிங் இராணுவப் புரட்சி ஒடுக்கப்பட்டுஅமைதி மீட்கப்பட்டதாக அறிவித்தார். தாந்தியா தோபே கைது செய்யப்பட்டு 1858 ஏப்ரல் மாதம் கொல்லப்பட்டார்.
Question 207
இரண்டாம் பகதூர்ஷா எந்த நாட்டுக்கு நாடு கடத்தப்பட்டார்?
A
இலங்கை
B
நேபாளம்
C
மியான்மர்
D
வங்காள தேசம்
Question 207 Explanation: 
விளக்கம்: இரண்டாம் பகதூர்ஷா செப்டம்பர் 1857இல் கைது செய்யப்பட்டு குற்றவாளி என அறிவிக்கப்பட்டு ரங்கூனுக்கு (மியான்மர்) நாடு கடத்தப்பட்டார். அங்கேயே அவர் நவம்பர் 1862 இல் தனது 87வது வயதில் மரணமடைந்தார். அவருடைய இறப்போடு முகலாய அரசவம்சம் முடிவுக்கு வந்தது.
Question 208
இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரல் மற்றும் முதல் வைஸ்ராய் யார்?
A
வெல்லெஸ்லி
B
வில்லியம் பெண்டிங்க்
C
வாரன் ஹேஸ்டிங்ஸ்
D
கானிங்
Question 208 Explanation: 
விளக்கம்:பெருங்கிளர்ச்சியின் விளைவுகள் அலகாபாத்தில் 1858 நவம்பர் 1இல் அரசு தர்பார் கூட்டப்பட்டது. விக்டோரியா ராணி வெளியிட்ட பிரகடனம் தர்பார் மண்டபத்தில் கானிங்பிரபுவால் வாசிக்கப்பட்டது. அவரே இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரலும் முதல் வைஸ்ராயுமாவார்.
Question 209
அரசு செயலருக்கு உதவி செய்யும் இந்தியா கவுன்சிலில் எத்தனை உறுப்பினர்கள் இடம் பெற்றிருப்பர்?
A
பதினாறு
B
பத்து
C
ஐந்து
D
பதினைந்து
Question 209 Explanation: 
விளக்கம்: இதன் பின்னர் இந்தியா ஆங்கிலேய முடியரசின் பெயரால் அரசுச் செயலர் மூலம் ஆளப்படும். பதினைந்து உறுப்பினர்களைக் கொண்ட இந்தியா கவுன்சில் எனும் அமைப்பு அரசு செயலருக்கு உதவி செய்யும். இதன் விளைவாகக் கிழக்கிந்தியக் கம்பெனியின் இயக்குநர் குழுவும், கட்டுப்பாட்டுக் குழுவும் ஒழிக்கப்பட்டன. ஆங்கிலேய முடியரசும் நாடாளுமன்றமும் அரசியல் அமைப்பின் அடிப்படையில் இந்தியாவை ஆளும் பொறுப்பை ஏற்றுக் கொள்வர். கிழக்கிந்தியக் கம்பெனியின் படை கலைக்கப்பட்டு இங்கிலாந்து அரசின் படைகளோடு இணைக்கப்படும்.
Question 210
விக்டோரியா  பிரகடனம் தொடர்பான பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.
  1. ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி இந்திய அரசர்களோடு மேற்கொண்ட உடன்படிக்கைகளை இப்பிரகடனம் ஏற்றுக் கொண்டது.
  2. இந்தியாவில் உள்ள ஆங்கிலேயருக்குச் சொந்தமான பகுதிகளை மேலும் விரிவுபடுத்தும் நோக்கம் இல்லை எனவும் அறிவித்தது.
A
(i) சரி
B
(ii) சரி
C
(i) மற்றும் (ii) சரி
D
(i) மற்றும் (ii) தவறு
Question 210 Explanation: 
விளக்கம்: ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி இந்திய அரசர்களோடு மேற்கொண்ட உடன்படிக்கைகளை இப்பிரகடனம் ஏற்றுக் கொண்டது. அவர்களின் உரிமைகளையும் கண்ணியத்தையும் கௌரவத்தையும் மதிப்பதாகவும் உறுதியளித்தது. மேலும் இந்தியாவில் உள்ள ஆங்கிலேயருக்குச் சொந்தமான பகுதிகளை மேலும் விரிவுபடுத்தும் நோக்கம் இல்லை எனவும் அறிவித்தது.
Question 211
எந்த ஆண்டு அமைக்கப்படும் சட்ட மன்றத்தில் இந்தியப் பிரதிநிதிகள் நியமிக்கப்படுவர் என விக்டோரியா பிரகடனம் கூறியது?
A
1861
B
1864
C
1865
D
1867
Question 211 Explanation: 
விளக்கம்:1853ஆம் ஆண்டு சட்டமன்றம் ஐரோப்பியர்களை மட்டுமே உறுப்பினர்களாக கொண்டிருந்ததால் அவர்கள் இந்தியரின் கருத்துக்களைத் தெரிந்துகொள்ள அக்கறை இல்லாமல் இருந்ததே இச்சிக்கலுக்கு காரணம் என்று கூறிய அறிக்கை 1861இல் அமைக்கப்படும் சட்ட மன்றத்தில் இந்தியப் பிரதிநிதிகள் நியமிக்கப்படுவர் எனக் கூறியது.
Question 212
விக்டோரியா  பிரகடனம் தொடர்பான பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.
  1. வாரிசு உரிமை இழப்புக் கொள்கையும் இணைப்புக் கொள்கையும் கைவிடப்படும்.
  2. ஆங்கிலேயரை நேரடியாகக் கொன்ற கிளர்ச்சியாளர்களைச் தவிர மீதமுள்ள கிளர்ச்சியாளர் அனைவருக்கு ம் பொதுமன்னிப்பு வழங்கப்படும்.
A
(i) சரி
B
(ii) சரி
C
(i) மற்றும் (ii) சரி
D
(i) மற்றும் (ii) தவறு
Question 212 Explanation: 
விளக்கம்: வாரிசு உரிமை இழப்புக் கொள்கையும் இணைப்புக் கொள்கையும் கைவிடப்படும். ஆங்கிலேயரை நேரடியாகக் கொன்ற கிளர்ச்சியாளர்களைச் தவிர மீதமுள்ள கிளர்ச்சியாளர் அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்கப்படும். கல்வி, பொதுப்பணித் திட்டங்கள் (சாலைகள் இருப்புப்பாதை, தந்தி, நீர்ப்பாசனம்) ஆகியவை முடுக்கிவிடப்படும்.
Question 213
பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.
  1. மேற்கத்தியமயமான ஆங்கிலக் கல்வி பயின்ற நடுத்தர வர்க்கம் தேசிய சிந்தனைகளோடு உருவானது
  2. இந்தியச் சமூகத்தின் மரபுசார்ந்த கட்டமைப்பு உடையத் துவங்கியது.
A
(i) சரி
B
(ii) சரி
C
(i) மற்றும் (ii) சரி
D
(i) மற்றும் (ii) தவறு
Question 213 Explanation: 
விளக்கம்: கடந்த காலம் மீண்டும் வரும் எனும் நம்பிக்கை மங்கியது. இந்தியச் சமூகத்தின் மரபுசார்ந்த கட்டமைப்பு உடையத் துவங்கியது. மேற்கத்தியமயமான ஆங்கிலக் கல்வி பயின்ற நடுத்தர வர்க்கம் தேசிய சிந்தனைகளோடு உருவானது.
Question 214
பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.
  1. முகலாயப் பேரரசர் இரண்டாம் பகதூர்ஷா சிறைக் கைதியானார்.
  2. அவருடைய இரண்டு மகன்களும் பேரனும் கல்கத்தாவில் சிறை வைக்கப்பட்டனர்.
A
(i) சரி
B
(ii) சரி
C
(i) மற்றும் (ii) சரி
D
(i) மற்றும் (ii) தவறு
Question 214 Explanation: 
விளக்கம்: முகலாயப் பேரரசர் இரண்டாம் பகதூர்ஷா சிறைக் கைதியானார். அவருடைய இரண்டு மகன்களும் பேரனும் சரணடைந்த பின் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 214 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!