Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Book Back QuestionsTnpsc

ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம் Book Back Questions 9th Social Science Lesson 11

9th Social Science Lesson 11

11] ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

1884-85இல் நடைபெற்ற பெர்லின் மாநாடு, காங்கோ மாநாடு அல்லது மேற்கு ஆப்பிரிக்க மாநாடு எனவும் அறியப்படுகிறது. மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள காங்கோ நதி வடிநிலத்துடன் தொடர்புடைய அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்ப்பதற்காகவே இம்மாநாடு கூடியது. காங்கோ நதியின் வடிநிலத்தைக் கட்டுப்படுத்த தனக்குள்ள உரிமை குறித்து விவாதிப்பதற்காகப் போர்த்துகலின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. பெர்லின் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பொதுச் சட்டம் காங்கோ நதியின் வடிநிலம் பொதுவானதெனவும் அங்கு வணிக கப்பல்களைச் செலுத்துவதற்கான உரிமை அனைத்து நாடுகளுக்கு உண்டு எனவும் பிரகடனப்படுத்தியது.

கர்னல் பென்னிகுயிக்: பென்னிகுயிக் ஓர் இராணுவப் பொறியாளரும், குடிமைப்பணியாளரும், சென்னை மாகாணச் சட்டமன்ற மேலவை உறுப்பினரும் ஆவார். மேற்கு நோக்கி ஓடும் பெரியார் ஆற்றின் நீரை ஓர் அணையைக் கட்டி கிழக்கு நோக்கித் திருப்பினால் வைகை ஆற்றைச் சார்ந்திருக்கும் இலட்சக்கணக்கான புன்செய் நிலங்களைப் பாசன வசதி கொண்டவையாக மாற்ற முடியும் என அவர் முடிவு செய்தார். பென்னிகுயிக்கும் ஏனைய ஆங்கிலேயப் பொறியாளர்களும் இயற்கையின் சீற்றத்தையும் வனவிலங்குகள், விஷ உயிரினங்கள் ஆகியவற்றின் ஆபத்துக்களையும் எதிர்கொண்டு அணையின் கட்டுமானப் பணிகளை மேற்கொண்ட போது இடைவிடாத மழையால் இடையூறுகள் ஏற்பட்டன. ஆங்கிலேய அரசிடமிருந்து போதுமான அளவுக்கு நிதியைப் பெறமுடியாத நிலையில் பென்னிகுயிக் இங்கிலாந்து சென்று தனது குடும்பச் சொத்துக்களை விற்று, அப்பணத்தைக் கொண்டு அணையைக் கட்டி முடித்தார். அணைகட்டும் பணிகள் 1895இல் முடிவுற்றன. முல்லைப் பெரியார் அணை, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்ட வேளாண் நிலங்களுக்குத் தொடர்ந்து பாசன வசதி அளித்து வருகிறது.

ஒப்பந்தக் கூலிமுறை என்பது தண்டனைக்குரிய ஓர் ஒப்பந்த முறையாகும். இவ்வொப்பந்தத்தின்படி ஒப்பந்தக் கூலியான ஒருவர் வேலை செய்ய மறுத்தாலோ, வேலைக்கு வராமல் போனாலோ, அவருடைய முதலாளியின் ஆணைகளுக்குப் பணிய மறுத்தாலோ பணியிடத்தில் காணப்படாவிட்டாலோ அவர் ஊதியம் மறுக்கப்படுதல் அல்லது சிறைத் தண்டனைகளுக்கு உள்ளாவார். 1842-1870 ஆகிய ஆண்டுகளுக்கிடையே மொத்தம் 5, 25, 482 இந்தியர்கள் இங்கிலாந்து, பிரான்சு ஆகியவற்றுக்குச் சொந்தமான காலனிகளில் குடியேறினர். அவர்களில் 3, 51, 401 பேர் மொரீசியசுக்கும், 76, 691 பேர் டிமெராராவுக்கும், 42, 519 பேர் டிரினிடாடுவுக்கும், 15, 169 பேர் ஜமைக்காவுக்கும், 6, 448 பேர் நேட்டாலுக்கும், 15, 005 பேர் ரீயூனியனுக்கும் சென்றனர். ஏனைய பிரெஞ்சு காலனிகளுக்கு 16, 341 பேர் சென்றனர். ஏற்கெனவே மொரீசியஸ் சென்ற 30, 000 நபர்களையும் இலங்கை, மலேசியா ஆகிய இடங்களுக்கு சட்டத்திற்குப் புறம்பாகப் பிரெஞ்சுக் காலனிகளுக்கும் அனுப்பப்பட்டவர்களையும் மேற்சொன்ன புள்ளிவிவரக் கணக்கில் சேர்க்கவில்லை. இவ்வாறாக 1870களில் ஒப்பந்தக் கூலிமுறை, இந்தியத் தொழிலாளர்களைக் கடல் கடந்த காலனிகளுக்கு அனுப்புவது, சட்ட ரீதியாக ஐரோப்பியக் காலனிகளிலுள்ள பெரும் பண்ணைகளுக்கு அடிமை உழைப்பை வழங்கியது.

பிரிட்டிஷ் இந்தியாவில் பஞ்சங்கள்: 1770ஆம் ஆண்டு வங்காளப் பஞ்சம் மிகப் பெருமளவில் ஒரு கோடி மக்களின் அல்லது ஏறத்தாழ வங்காள மக்கட் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினரின் உயிரைக் குடித்தது. இவ்வாறு தான் ஆங்கிலேயரது ஆட்சி இந்தியாவில் தொடங்கியது. இதைப் போலவே ஆங்கிலேயரது ஆட்சி முடியும் தருவாயில் 1943இல் வங்காளத்தில் ஏற்பட்ட பஞ்சம் முப்பது இலட்சம் மக்களைப் பலி கொண்டது. 1998இல் நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் ஒரு சிறுவனாகக் கொல்கத்தாவின் வீதிகளில் பஞ்சத்தால் மனிதர்கள் செத்து மடிந்ததைப் பார்த்தார். அது குறித்து அவர் வழக்கமான ஆய்வுப்பாதையிலிருந்து விலகிப் புதிய பரிமாணத்தில் ஆய்வு செய்துள்ளார்.

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. பிரான்ஸிஸ் லைட் ————– பற்றி ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.

(அ) நறுமணத் தீவுகள்

(ஆ) ஜாவா தீவு

(இ) பினாங்குத் தீவு

(ஈ) மலாக்கா

2. 1896இல் ————– நாடுகள் ஒருங்கிணைக்கப்பட்டு மலாய் ஐக்கிய நாடுகள் உருவாக்கப்பட்டது.

(அ) நான்கு

(ஆ) ஐந்து

(இ) மூன்று

(ஈ) ஆறு

3. இந்தோ-சீனாவில் —————- மட்டுமே பிரான்சின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியாகும்.

(அ) ஆனம்

(ஆ) டோங்கிங்

(இ) கம்போடியா

(ஈ) கொச்சின்-சீனா

4. ————– பகுதியில் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டதானது பெருமளவிலான ஆங்கிலேய சுரங்கத் தொழில் செய்வோர் ஜோகன்னஸ்பர்க்கிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் குடியேற வழி வகுத்தது.

(அ) டிரான்ஸ்வால்

(ஆ) ஆரஞ்சு சுதந்திர நாடு

(இ) கேப் காலனி

(ஈ) ரொடீஷியா

5. இந்தியாவுடன் வணிக உறவை நிறுவிக் கொண்ட முதல் ஐரோப்பிய நாட்டினர் —————

(அ) போர்த்துகீசியர்

(ஆ) பிரெஞ்சுக்காரர்

(இ) டேனிஷார்

(ஈ) டச்சுக்காரர்

6. ஓப்பந்தக் கூலி முறையானது ஒரு வகை —————–

(அ) ஒப்பந்தத் தொழிலாளர் முறை

(ஆ) அடிமைத்தனம்

(இ) கடனுக்கான அடிமை ஒப்பந்தம்

(ஈ) கொத்தடிமை

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. —————– மாநாடு ஆப்பிரிக்காவை ஐரோப்பிய நாடுகளின் செல்வாக்கு மண்டலங்களாகப் பிரித்துக்கொள்வது எனத் தீர்மானித்தது.

2. வங்காளம், பீகார், ஒரிசா ஆகிய பகுதிகளின் ஜமீன்தார்களோடு மேற்கொள்ளப்பட்ட தீர்வு ————— என்றழைக்கப்படுகிறது.

3. ஆங்கிலேயரின் முக்கிய வருவாயாக திகழ்ந்தது —————– ஆகும்.

4. தமிழ் மொழி பேசப்பட்ட பகுதிகளில் ————— வட்டிக்கு கடன் கொடுக்கும் தொழிலில் இருந்தனர்.

III. பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

1. (i) 19ஆம் நூற்றாண்டின் கடைசிக் காலாண்டுப் பகுதிவரை சகாராவுக்குத் தெற்கேயிருந்த ஆப்பிரிக்கா வெளியுலகுக்கு தெரியாமல் இருந்தது.

(ii) 1864ஆம் ஆண்டில் கோல்டு கோஸ்டில் அமைந்துள்ள கடற்கரைப் பகுதி நாடுகள் இங்கிலாந்தின் காலனிகளாயின.

(iii) 500 ஆண்டு காலத்திற்கும் மேலாக ஸ்பெயின் பிலிப்பைன்ஸை ஆட்சி செய்தது.

(iv) ஓடிசா பஞ்சம் 78-1876இல் நடைபெற்றது.

(அ) i சரி

(ஆ) ii சரி

(இ) ii மற்றும் iii சரி

(ஈ) iv சரி

2. (i) 1640இல் பிரெஞ்சுக்காரர்கள் ஜாவாவையும் சுமத்ராவையும் கைப்பற்றினர்.

(ii) மலாக்காவைக் கைப்பற்றியதின் மூலம் ஆங்கிலக் குடியேற்றங்களைக் கைப்பற்றும் பணியை டச்சுக்காரர் தொடங்கினர்.

(iii) காங்கோ ஆற்றின் வடிநிலத் தீரத்தோடு தொடர்புடைய அனைத்துப் பிரச்சனைகளையும் பேசித் தீர்ப்பதற்காகவே பெர்லின் மாநாடு கூடியது.

(iv) சுல்தான் ஜான்ஜிபாரின் பகுதிகள் பிரான்சு மற்றும் ஜெர்மனியின் செல்வாக்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டன.

(அ) i சரி

(ஆ) i மற்றும் ii சரி

(இ) iii சரி

(ஈ) iv சரி

3. கூற்று: சென்னை மகாணத்தில் 1876-1878 ஆண்டுகளில் நிலவிய பஞ்சத்திற்கு முன்னர் பெரும் வறட்சி நிலவியது.

காரணம்: காலனியரசு உணவுதானிய வணிகத்தில் தலையிடாக் கொள்கையைப் பின்பற்றியது.

(அ) கூற்று சரி, காரணம் தவறு

(ஆ) கூற்று, காரணம் இரண்டுமே தவறு

(இ) கூற்று சரி, காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கமல்ல

(ஈ) கூற்று சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்

4. கூற்று: பெர்லின் மாநாடு இரண்டாம் லியோபோல்டை சுதந்திர காங்கோ நாட்டில் ஆட்சி செய்ய அனுமதி வழங்கியது.

காரணம்: பெல்ஜியம் அரசர் இரண்டாம் லியோபோல்டு காங்கோவின் மீது அக்கறை கொண்டிருந்தார்.

(அ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்

(ஆ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல

(இ) கூற்று சரி, காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கமல்ல

(ஈ) கூற்று தவறு, காரணம் சரி

IV. பொருத்துக:

1. லியோபோல்டு – அ] எத்தியோப்பியா

2. மெனிலிக் – ஆ] வியட்நாம்

3. சிசல் ரோடெஸ் – இ] பெல்ஜியம்

4. வங்காளப் பஞ்சம் – ஈ] கேப் காலனி

5. போ தெய் – உ] 1770

விடைகள்:

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. பினாங்குத் தீவு, 2. நான்கு, 3. கொச்சின்-சீனா, 4. டிரான்ஸ்வால், 5. போர்த்துகீசியர், 6. கடனுக்கான அடிமை ஒப்பந்தம்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. பெர்லின் குடியேற்ற’நாட்டு, 2. நிலையான நிலவரித் திட்டம், 3. நிலவரி, 4. நாட்டு கோட்டைச் செட்டியார்

III. பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

1. i சரி, 2. iii சரி, 3. கூற்று சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம், 4. கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.

IV. பொருத்துக:

1. இ, 2. அ, 3. ஈ, 4. உ, 5. ஆ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!