MCQ Questions

இடப்பெயர்தல் 9th Social Science Lesson 18 Questions in Tamil

9th Social Science Lesson 18 Questions in Tamil

18. இடப்பெயர்தல்

மக்கள்தொகை மாற்றத்தின் மூன்று கூறுகள் எவை?

1. பிறப்பு 2. இறப்பு

3. இடம்பெயர்தல் 4. பொருளாதார வளர்ச்சி

A) 1, 2, 3 B) 2, 3, 4 C) 1, 3, 4 D) 1, 2, 4

(குறிப்பு: மக்கள்தொகை மாற்றத்தின் மூன்று கூறுகளில் பிறப்பும் இறப்பும் கணக்கிடக்கூடிய வகையில் அமைந்துள்ளவை. அதே சமயத்தில் இடம்பெயர்தல் என்பது கணக்கிடுதல் மற்றும் வரையறைப் படுத்துவதில் அதிகளவிலான சிக்கல்களை உருவாக்குகிறது.)

இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பில் இடப்பெயர்வு ___________ அடிப்படைகளில் கணக்கிடப்படுகிறது.

A) 2 B) 3 C) 4 D) 5

(குறிப்பு: இரண்டு அடிப்படைகள்

பிறப்பிடம் அடிப்படையில்

வாழிடம் அடிப்படையில்)

மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது இருக்கும் இடமும் பிறந்த இடமும் வேறுபட்டிருந்தால் __________ இடப்பெயர்வு என்று அழைக்கப்படுகிறது.

A) பிறப்பிட

B) வாழ்நாள்

C) வாழிட அடிப்படை

D) வியாபார

(குறிப்பு: வாழ்நாள் இடப்பெயர்வு, பிறப்பிடம் அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பில் அடங்கும்.)

கணக்கெடுப்பின் போது இருக்கும் இடமும் கடைசியாக வாழ்ந்த இடமும் வேறுபட்டிருந்தால் __________ இடப்பெயர்வு என அழைக்கப்படுகிறது.

A) பிறப்பிட

B) வாழ்நாள்

C) வாழிட அடிப்படை

D) வியாபார

2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் __________ மக்கள் வாழ்தலின் அடிப்பையில் இடம்பெயர்ந்தவராகக் கணக்கிடப்பட்டுள்ளது.

A) 15 கோடி

B) 26 கோடி

C) 37 கோடி

D) 45 கோடி

(குறிப்பு: 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவின் மொத்த மக்கள்தொகை 121 கோடி ஆகும்.)

2011 கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் மொத்த 7.2 கோடி மக்களில் ___________ மக்கள் இடம்பெயர்ந்தவர் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

A) 1.23 கோடி

B) 3.13 கோடி

C) 3.24 கோடி

D) 4.32 கோடி

(குறிப்பு: அதாவது நாட்டின் இடம்பெயர்வு 37% இருந்த சமயத்தில், தமிழ்நாட்டின் இடம்பெயர்வு உச்சமாக 43% திகழ்ந்தது.)

கூற்று 1: பொதுவாக இடம்பெயர்வு நகரப் பகுதிகளோடு மட்டுமே தொடர்புபடுத்தப்படுகிறது.

கூற்று 2: இந்தியாவிலும் தமிழகத்திலும் இடப்பெயர்வின் பரவல் கிராமப்புறங்களில் இருந்ததைவிட நகர்ப்புறங்களில் மிக அதிகமாகக் காணப்படுகிறது.

A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

(குறிப்பு: இந்தியாவிலும் தமிழகத்திலும் இடப்பெயர்வின் பரவல் நகர்ப்புறங்களில் இருந்ததைவிட கிராமப்புறங்களில் மிக அதிகமாகக் காணப்படுகிறது.)

2011 கணக்கெடுப்பின்படி இந்தியாவில் கிராமப்புற மக்கள் ___________ சதவீதம் இடம்பெயர்ந்தவர்களாக கணக்கிடப்பட்டுள்ளது.

A) 28% B) 37% C) 39% D) 42%

(குறிப்பு: 2011 கணக்கெடுப்பின்படி நகர்ப்புற இந்தியாவில் இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 27% ஆக உள்ளது.)

2011 கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் ___________ சதவீதம் கிராமப்புறங்களில் இடம்பெயர்ந்தவர்கள் ஆவர்.

A) 25% B) 35% C) 41% D) 45%

(குறிப்பு: 2011 கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் 35% நகர்ப்புறங்களில் இடம்பெயர்ந்தவர்கள் ஆவர்.)

2011ஆம் ஆண்டு இந்தியாவில் இடம்பெயர்ந்தவர்களின் ஒட்டுமொத்தக் கணக்கில் பெண்களின் இடப்பெயர்வு சதவீதம்

A) 45% B) 48% C) 51% D) 53%

(குறிப்பு: 2011 கணக்கெடுப்பின்படி இந்தியாவில், ஆண்களில் 23% இடம்பெயர்ந்தவர்களாக இருக்கின்றனர்.)

2011 கணக்கெடுப்பின்படி தமிழகத்தில், ஆண்களில் ____________ சதவீத பேர் இடம்பெயர்ந்தவர்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

A) 25% B) 35% C) 45% D) 52%

(குறிப்பு: 2011 கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் 52% பெண்கள் இடம்பெயர்ந்தவர்கள் ஆவர்.)

கூற்று 1: இந்தியாவில் 70% பெண்களும் தமிழ்நாட்டில் 51% பெண்களும் அவர்களது இடப்பெயர்விற்கான காரணமாகத் திருமணத்தை குறிப்பிடுகின்றனர்.

கூற்று 2: இந்தியாவிலும் தமிழகத்திலும் திருமணமும் திருமணம் சார்ந்த இடப்பெயர்வும் பெண்களின் அதிக அளவிலான இடப்பெயர்வுக்கு முக்கிய காரணமாக விளங்குகிறது.

A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

(குறிப்பு: இடப்பெயர்வு பெரும்பாலும் பெண்களை விட ஆண்களோடு மட்டுமே தொடர்புபடுத்தப்படுகிறது. ஆனால் தரவுகளை வைத்து ஆராயும்போது மிக அதிக சதவிகித இடப்பெயர்வு ஆண்களை விட பெண்களில் மட்டுமே காணப்படுகிறது.)

2011ல் இந்தியாவில் 28% ஆண்களும் தமிழகத்தில் __________ ஆண்களும் இடப்பெயர்வுக்கான முக்கிய காரணமாக வேலையை குறிப்பிடுகின்றனர்.

A) 25% B) 26% C) 27% D) 28%

(குறிப்பு: வேலையும் வேலைவாய்ப்பும் ஆண்களுக்கு இடையில் இடப்பெயர்விற்கான உந்து சக்தியாக விளங்குகிறது.)

2011 கணக்கெடுப்பின் படி தமிழ்நாட்டில் ஐந்து பேரில் ________இடம்பெயர்ந்தவராக உள்ளனர்.

A) ஒருவர்

B) இருவர்

C) மூவர்

D) ஐவர்

(குறிப்பு: கிராமப்புற பகுதிகளிலும் பெண்களுக்கு மத்தியில் இடப்பெயர்வு மிக அதிக அளவில் காணப்படுகிறது.)

2015ஆம் ஆண்டு தன்னார்வளர்கள் மேற்கொண்ட ஆய்வின் படி தமிழ்நாட்டின் மொத்த இடப்பெயர்வாளர்களில் __________ சதவிகிதப் பேர் தமிழ்நாட்டிலிருந்து வெளி-நாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

A) 52% B) 62% C) 65% D) 68%

(குறிப்பு: 35% பேர் நம் நாட்டிற்குள்ளேயே இடம்பெயர்ந்துள்ளனர்.)

தமிழகத்தில் ________ மாவட்டம் அதிக எண்ணிக்கையிலான வெளி குடியேற்றப் பதிவில் முன்னிலை வகிக்கின்றது.

A) கோயம்புத்தூர்

B) திருச்சி

C) சென்னை

D) இராமநாதபுரம்

(குறிப்பு: சென்னையைத் தொடர்ந்து கோயம்புத்தூர், இராமநாதபுரம் மற்றும் திருச்சி மாவட்டங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.)

கீழ்க்கண்ட எந்த மாவட்டங்கள் மிகக்குறைந்த அளவிலான வெளி-குடியேற்ற எண்ணிக்கையைப் பதிவு செய்துள்ளன?

1. கடலூர் 2. கரூர் 3. திருவண்ணாமலை

4. வேலூர் 5. நாமக்கல் 6. சேலம்

A) அனைத்தும் B) 1, 2, 5

C) 3, 4, 5, 6 D) 1, 2, 5, 6

(குறிப்பு: திண்டுக்கல், கிருஷ்ணகிரி, நீலகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களும் மிகக்குறைந்த அளவிலான வெளி-குடியேற்ற எண்ணிக்கையைப் பதிவு செய்துள்ளன.)

தமிழகத்தில் வெளிநாடுகளில் குடியேறுபவர்களில் _________ சதவிகிதம் பேர் சிங்கப்பூரை தேர்வு செய்துள்ளனர்.

A) 13% B) 16% C) 18% D) 20%

(குறிப்பு: மலேசியா, குவைத், ஓமன், கத்தார், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகியவை இடம்பெயர்வாளர்கள் சேரும் நாடுகளாக 2015ஆம் ஆண்டு ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.)

சரியான இணையைத் தேர்ந்தெடு. (வெளிநாடுகளில் குடியேறுபவர்களின் சதவிகிதம்)

1. ஐக்கிய அரபு எமிரேட் – 18%

2. சவுதி அரேபியா – 26%

3. ஐக்கிய அமெரிக்க நாடுகள் – 13%

A) அனைத்தும் சரி

B) 1, 3 சரி

C) 2, 3 சரி

D) 1, 2 சரி

(குறிப்பு: சவுதி அரேபியா – 16%.)

சர்வதேச நாடுகளில் குடியேறுபவர்களில் _________ சதவிகிதம் பேர் பெண்களாக உள்ளனர்.

A) 8% B) 10% C) 15% D) 18%

(குறிப்பு: சர்வதேச நாடுகளில் குடியேறுபவர்களில் 85% பேர் ஆண்களாக உள்ளனர்.)

தவறான இணையைத் தேர்ந்தெடு.(2015ஆம் ஆண்டில் தமிழ்நாட்டிலிருந்து குடியேறுபவர்களின் கல்வித்தகுதி)

A) கல்வி அறிவு அற்றவர்கள் – 7%

B) பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் – 30%

C) பன்னிரண்டாம் வகுப்பு வரை முடித்தவர்கள் – 8%

D) தொழிற்பயிற்சி பெற்றவர்கள் – 15%

(குறிப்பு: பன்னிரண்டாம் வகுப்பு வரை முடித்தவர்கள் – 10%)

சரியான இணையைத் தேர்ந்தெடு.(2015ஆம் ஆண்டில் தமிழ்நாட்டிலிருந்து குடியேறுபவர்களின் கல்வித்தகுதி)

1. பட்டப்படிப்பு படித்தவர்கள் – 11%

2. தொழிற்கல்வி முடித்தவர்கள் – 12%

3. முதுகலை பட்டதாரிகள் – 11%

A) அனைத்தும் சரி

B) 1, 2 சரி

C) 2, 3 சரி

D) 1, 3 சரி

(குறிப்பு: இடம்பெயர்ந்தவர்கள் மிகவும் திறமை வாய்ந்த வேலைகளிலும், சாதாரணமாகச் செய்யக்கூடிய வேலைகளிலும், நடுத்தரமான வேலைகளிலும் ஈடுபடுகின்றனர்.)

கூற்று 1: ஒரு சமுதாயத்தில் ஏற்படும் இடப்பெயர்வின் தன்மை மற்றும் அதன் அளவினை, அச்சமுதாயம் அடைந்த வளர்ச்சியின் போக்கைக் கொண்டே தீர்மானிக்கப்படுகிறது.

கூற்று 2: பொருளாதாரத்தில் விவசாயம் மற்றும் தொழில்துறைகளால் ஏற்பட்டிருக்கக்கூடிய வளர்ச்சியின் வீதங்கள் மற்றும் அதன் அளவுகோலைக் கொண்டே இடப்பெயர்வின் வடிவங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன.

A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

(குறிப்பு: இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் விவசாயம் மற்றும் தொழில் துறையில் கடந்த ஆண்டுகளில் வளர்ச்சி ஏற்பட்டு இருந்தபோதிலும் இவ்வளர்ச்சியானது சொத்து மற்றும் வருமானப் பகிர்வில் உள்ள ஏற்றத்தாழ்வுகளைச் சமன் செய்யும் விதமாக அமையவில்லை.)

பொருத்துக.

1. வேலை i) 14.7%

2. தொழில் ii) 1.2%

3. கல்வி iii) 3%

4. திருமணம் iv) 43.8%

5. பிறப்பிற்கு பிறகு இடம்பெயர்தல் v) 6.7%

A) ii iii iv v i

B) iii iv ii i v

C) v iv iii ii i

D) i ii iii iv v

உலகிலேயே ____________ இடையேயான இடப்பெயர்வு பாதையே 2010 ஆம் ஆண்டின் மிகப்பெரிய இடப்பெயர்வுப் பாதையாகும்.

A) இந்தியா – சீனா

B) மியான்மர் – வங்காளதேசம்

C) மெக்ஸிகோ – அமெரிக்க ஐக்கிய நாடு

D) அமெரிக்கா – கனடா

இடம்பெயர்தலின் அளவு மற்றும் தன்மை ஆகியவை கீழ்க்கண்ட எவற்றை சார்ந்துள்ளன?

1. இடப்பெயர்தல் துவங்கும் இடத்தில் மக்கள் அனுபவிக்கும் அழுத்தம் மற்றும் விருப்பங்கள்

2. இடப்பெயர்தல் துவங்குமிடத்தில் மக்களின் நகர்வு மீது திணிக்கப்படும் கட்டுப்பாடுகள்

3. சேருமிடத்தில் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் மற்றும் அவை குறித்த தகவல்கள்.

4. குடியேற்றச் செலவு.

A) அனைத்தும்

B) 1, 2, 3

C) 2, 3, 4

D) 1, 3, 4

(குறிப்பு: இந்தியா போன்ற வளர்ச்சியடையும் பொருளாதார சமூகத்தில் காணப்படும் இடப்பெயர்வுகளை வளர்ச்சிப் போக்குகளால் உருவாகியுள்ள பொருளாதார, சமூக மற்றும் இடம் சார்ந்த ஏற்றத்தாழ்வுகள் தீர்மானிக்கின்றன.)

கீழ்க்கண்டவற்றுள் இடம்பெயர்தலின் அளவை குறைப்பதற்கான வழிகள் எவை?

1. கிராமப்புறங்களின் மீது தலையீட்டின் கவனம் இருத்தல் வேண்டும்.

2. ஏழ்மை மற்றும் பாதுகாப்பற்ற தன்மையை குறைக்கும் விதமான கிராம வளர்ச்சித்திட்டங்கள் அதிக அளவிலான இடம்பெயர்தலை குறைப்பதற்கு உதவியாக அமையும்.

A) இரண்டும் சரி

B) 1 மட்டும் சரி

C) 2 மட்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு: அதிக அளவிலான இடப்பெயர்தல் கிராமப்புறத்தில் காணப்படும் வறுமை மற்றும் பாதுகாப்பற்ற தன்மையினைப் பிரதிபலிக்கிறது.)

உலகிலேயே நீண்ட தூரம் இடம்பெயரும் பறவை ____________.

A) ஆர்டிக் ஸ்க்வா

B) கார்மோரன்ட்

C) ஆர்டிக் டெர்ன்

D) காமன் ஈடர்

ஏழை மக்கள் இடப்பெயர்வை மேற்கொள்வது

A) வாழ்வாதாரத்திற்காக

B) வாழ்க்கை தரத்தை மேம்படுத்திக் கொள்ள

C) சேவைக்காக

D) அனுபவத்தைப் பெறுவதற்காக

(குறிப்பு: வசதி வாய்ப்புடைய மக்கள் தங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்ள இடம்பெயர்கின்றனர்.)

பொருத்துக.

1. இடம்பெயர்வு கொள்கை i) வேலை

2. பெண் இடப்பெயராளர் ii) வெளி குடியேற்றம் குறைவு

3. சென்னை iii) வெளி குடியேற்றம் அதிகம்

4. சேலம் iv) இடம்பெயர்தலின் அளவை குறைப்பது

5. ஆண் இடப்பெயராளர் v) திருமணம்

A) ii iii iv v i

B) iv v iii ii i

C) v iv iii ii i

D) i ii iii iv v

கூற்று 1: பிறப்பிடம் மற்றும் வாழிடம் அடிப்படையில் இடப்பெயர்வு கணக்கிடப்படுகிறது.

கூற்று 2: இடப்பெயர்வு நகர்வு பல்வேறு வகைப்பட்ட உள் நகர்வுகளைக் கொண்டதாக அமைகிறது.

A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

(குறிப்பு: நிலப்பரப்பு சார்ந்து நோக்கும்போது, நகர்ப்புறமானாலும் கிராமப்புறமானாலும் வளர்ச்சி அடைந்த நிலப்பகுதிகளில் குவியும் தன்மை உடையவர்கள் இடம்பெயர்ந்தவர்கள் ஆவர்.)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!