Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Book Back QuestionsTnpsc

இடம்பெயர்தல் Book Back Questions 9th Social Science Lesson 30

9th Social Science Lesson 30

30] இடம்பெயர்தல்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

உலகிலேயே மெக்ஸிகோ-அமெரிக்க ஐக்கிய நாடு இடையேயான இடப்பெயர்வு பாதையே 2010ஆம் ஆண்டின் மிகப் பெரிய இடப்பெயர்வுப் பாதையாகும். உலகிலேயே நீண்ட தூரம் இடம்பெயரும் பறவை “ஆர்டிக் டெர்ன்” (Artic tern) பறவையாகும்.

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இந்தியாவின் மக்கள் தொகை.

(அ) 121 கோடி

(ஆ) 221 கோடி

(இ) 102 கோடி

(ஈ) 100 கோடி

2. வெளிகுடியேற்றப் பதிவில் முன்னிலை வகிக்கும் மாவட்டம்

(அ) இராமநாதபுரம்

(ஆ) கோயம்புத்தூர்

(இ) சென்னை

(ஈ) வேலூர்

3. 2015ஆம் ஆண்டில் தமிழ்நாட்டிலிருந்து இடம்பெயர்ந்தவர்களில் கல்வியறிவற்றோரின் சதவீதம்

(அ) 7%

(ஆ) 75%

(இ) 23%

(ஈ) 9%

4. ஏழை மக்கள் இடப்பெயர்வை மேற்கொள்வது

(அ) வாழ்வாதாரத்திற்காக

(ஆ) வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்ள

(இ) சேவைக்காக

(ஈ) அனுபவத்தைப் பெறுவதற்காக

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. ———— மற்றும் ———– அடிப்படையில் இடப்பெயர்வு கணக்கிடப்படுகிறது.

2. மக்களின் நகர்வு, நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் —————– காணப்படுகின்றன.

3. 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கிராமப்புற இந்தியாவில் ————- சதவீத மக்கள் இடம் பெயர்ந்தவர்களாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

4. பெண்கள் அதிக அளவில் இடம் பெயர்வதற்கான காரணம் —————-

5. இடம்பெயர்வு நகர்வு என்பது ————– உள்நகர்வுகளைக் கொண்டதாகும்.

III. பொருத்துக:

1. இடம்பெயர்வு கொள்கை – அ] வேலை

2. பெண் இடம்பெயர்வாளர் – ஆ] வெளி குடியேற்றம் குறைவு

3. சென்னை – இ] வெளி குடியேற்றம் அதிகம்

4. வசதி, வாய்ப்புடைய இடம்பெயர்வாளர் – ஈ] திருமணம்

5. சேலம் – உ] இடம் பெயர்தலின் அளவைக் குறைப்பது

6. ஆண் இடம் பெயர்வாளர் – ஊ] வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக்கொள்ள

விடைகள்:

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. 121 கோடி, 2. சென்னை, 3. 7%, 4. வாழ்வாதாரத்திற்காக

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. பிறப்பிடம், வாழ்விடம், 2. அதிகமாக, 3. 37, 4. திருமணம், 5. பல்வேறுபட்ட

III. பொருத்துக:

1. உ, 2. ஈ, 3. இ, 4. ஊ, 5. ஆ, 6. அ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!