Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Book Back QuestionsTnpsc

இடர்கள் Book Back Questions 8th Social Science Lesson 13

8th Social Science Lesson 13

13] இடர்கள்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

மனித உயிர்கள் மற்றும் உடைமைகளுக்கு அச்சுறுத்தலை உருவாக்கும் இயற்கையான நிகழ்வுகள் இயற்கை இடர்கள் எனப்படும். பேரிடர்களின் எண்ணிக்கை மற்றும் தீவிரம் மனித செயல்களால் அதிகரிக்கிறது. இயற்கையான செயல்பாடுகள் அல்லது நிகழ்வுகள் மட்டுமே இயற்கை இடருக்கான காரணங்கள் அல்ல. மனிதர்கள் இயற்கையைக் கையாளும் தன்மையைப் பொருத்தும் அமைகிறது.

மனித உயிர்கள் மற்றும் உடைமைகளுக்கு அச்சுறுத்தலை உருவாக்கும் இயற்கையான நிகழ்வுகள் இயற்கை இடர்கள் எனப்படும். பேரிடர்களின் எண்ணிக்கை மற்றும் தீவிரம் மனித செயல்களால் அதிகரிக்கிறது. இயற்கையான செயல்பாடுகள் அல்லது நிகழ்வுகள் மட்டுமே இயற்கை இடருக்கான காரணங்கள் அல்ல. மனிதர்கள் இயற்கையைக் கையாளும் தன்மையைப் பொருத்தும் அமைகிறது. பேரிடர் என்பது வரையறுக்கப்பட்ட பகுதியில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் நிகழும் ஒரு அபாயகரமான நிகழ்வாகும். இவை உயிர், மற்றும் உடைமைகளுக்கு பெரும் அழிவை விளைவிப்பதுடன் மற்றவர்களின் உதவியை நாட வேண்டிய தேவை ஏற்படுகிறது. பேரழிவு என்பது மிகப்பெரிய இழப்பினையும் அதிக செலவினத்தையும் உண்டாக்குவதோடு அவற்றிலிருந்து மீள்வதற்கு நீண்ட காலமும் தேவைப்படுகிறது.

தகவல் பேழை: நாட்டின் மூன்றில் ஒரு பங்கு பகுதிகள் வறட்சியினால் பாதிக்கப்படுகின்றன. இது சுமார் 16% நிலப்பரப்பையும் 12% மக்கள் தொகையையும் கடுமையாக பாதிக்கிறது. ஆண்டு மழைப்பொழிவு 60 சென்டி மீட்டருக்கும் குறைவான மழை பெறும் பகுதிகள் இந்தியாவில் வறட்சிக்கு உள்ளாகும் பகுதிகளாகும்.

சுனாமி என்ற வார்த்தை ஜப்பானிய சொல்லான (சு-துறைமுகம்) (நாமி-அலை) என்பதிலிருந்து பெறப்பட்டது. அதாவது (துறைமுக அலை).

இந்திய பெருங்கடல் சுனாமி (2004): 2004இல் இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட சுனாமி டிசம்பர் 26, 2004ஆம் ஆண்டு உள்ளுர் நேரம் காலை 7. 59 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 9. 1 ஆற்றல் கொண்ட நிலநடுக்கம் இந்தோனேஷியாவின் சுமத்ரா கடற்கரையைத் தாக்கியது. இதனால் ஏற்பட்ட சுனாமி 12 நாடுகளைத் தாக்கி 2, 25, 000 உயிர்களைப் பலிவாங்கியதுடன் இந்தோனேஷியா, இலங்கை, இந்தியா, தாய்லாந்து, சோமாலியா, மாலத்தீவுகள் போன்ற நாடுகளில் பெருத்த பொருட்சேதத்தையும் விளைவித்தது.

செர்னோபில் அணு பேரழிவு இடம் (பிரிப்யாட் அருகில்) அதிகாரபூர்வமான சுற்றுலா தலமாகும்.

முன்னர்: செர்னோபில் (அப்போதைய சோவியத் யூனியன்) அணு உலை விபத்து ஏப்ரல் 26, 1986 அன்று நிகழ்ந்தது. 1945இல் ஹிரோஷிமா (ஜப்பான்) மீது வீசப்பட்ட அணுகுண்டை விட 400 மடங்கு அதிகமான கதிர்வீச்சு இதிலிருந்து வெளிப்பட்டது. இந்த விபத்து உலக வரலாற்றில் மிகப் பெரிய அணு விபத்தாக பதிவாகியுள்ளது. இப்பகுதியிலிருந்து 3 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். நிரந்தர மனித குடியேற்றத்திற்கு கடுமையான கட்டுப்பாடுகள் இன்றும் அந்த இடத்தில் பின்பற்றப்படுகிறது.

தற்பொழுது: தற்போது உக்ரைன் மற்றும் பெலாரசைக் கொண்ட இப்பகுதியில் விபத்து நடந்து 33 ஆண்டுகளுக்கு பிறகு ஏராளமான விலங்குகள் மற்றும் இருநூற்றுக்கும் அதிகமான பறவை இனங்கள் வகிக்கின்றன. 2016ஆம் ஆண்டு உக்ரைன் நாடு “கதிர் இயக்கவியல் சார் மற்றும் சுற்றுச்சூழல் உயிர்கோளப்பெட்டகம்” என அந்நாட்டு அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

பேரழிவை உருவாக்கக் கூடிய புதிய ஆயுதமாக இயற்கை வளர்ந்து வருகிறது. நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா? பெரும் சுற்றுச்சூழல் பேரழிவு காரணமாக இந்தியாவில் 2017ஆம் ஆண்டு வரையிலான 10 ஆண்டுகளில் சுமார் 22, 000 பேர் இறந்துள்ளனர். கடந்த 20 ஆண்டுகளில் (1998-2017) உலகில் சுமார் 5 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் மோசமான வானிலை நிகழ்வுகளால் இறந்துள்ளனர். இது ஜெர்மன்-வாட்ச் என்ற தனியார் அமைப்பு வெளியிட்டுள்ள உலகளாவிய காலநிலை இடர் குறியீட்டு அறிக்கையில் இவை கூறப்பட்டுள்ளது.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. காற்றில் உள்ள நைட்ரஜன் சதவீதம் ___________

(அ) 78. 09%

(ஆ) 74. 08%

(இ) 80. 07%

(ஈ) 76. 63%

2. இந்தியப் பெருங்கடலில் சுனாமி ___________ ஆம் ஆண்டில் ஏற்பட்டது.

(அ) 1990

(ஆ) 2004

(இ) 2005

(ஈ) 2008

3. சுனாமி என்ற சொல் ___________ மொழியிலிருந்து பெறப்பட்டது.

(அ) ஹிந்தி

(ஆ) பிரெஞ்சு

(இ) ஜப்பானிய

(ஈ) ஜெர்மன்

4. புவி மேற்பரப்பு நீருக்கு ___________ எடுத்துக்காட்டாகும்.

(அ) ஆர்டீசியன் கிணறு

(ஆ) நிலத்தடி நீர்

(இ) அடி பரப்பு நீர்

(ஈ) ஏரிகள்

5. பருவமழை பொய்ப்பின் காரணமாக ___________ ஏற்படுகிறது.

(அ) ஆவி சுருங்குதல்

(ஆ) வறட்சி

(இ) ஆவியாதல்

(ஈ) மழைப்பொழிவு

கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. இடர்கள் ___________ க்கு வழிவகுக்கிறது.

2. நிலச்சரிவு ____________ இடருக்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.

3. இடர்கள் தோன்றுவதன் அடிப்படையில் இடர்களை ___________ வகைகளாகப் பிரிக்கலாம்.

4. தீவிரவாதம் ____________ இடருக்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.

5. நைட்ரஜன் ஆக்சைடுகள் மனிதர்களைப் பாதிக்கும் ___________ மாசுபடுத்திகளாகும்.

6. செர்னோபில் அணு விபத்து ____________ ஆண்டில் நடைபெற்றது.

பொருத்துக:

பட்டியல் 1 – பட்டியல் 2

1. முதல்நிலை மாசுபடுத்திகள் – தீவிரவாதம்

2. அபாயகர கழிவுகள் – சுனாமி

3. நில அதிர்வு – காலாவதியான மருந்துகள்

4. வானிலையியல் வறட்சி – சல்பர் ஆக்சைடுகள்

5. மனிதனால் தூண்டப்பட்ட இடர் – மழைப்பொழிவு குறைதல்

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)

1. (78. 09 %) 2. (2004) 3. ஜப்பானிய 4. ஏரிகள் 5. வறட்சி

கோடிட்ட இடங்களை நிரப்புக: (விடைகள்)

1. அழிவிற்கு 2. இயற்கை 3. எட்டு 4. முதன்மை 5. ஏப்ரல் 26, 1986

பொருத்துக: (விடைகள்)

1. முதல்நிலை மாசுபடுத்திகள் – சல்பர் ஆக்சைடுகள்

2. அபாயகர கழிவுகள் – காலாவதியான மருந்துகள்

3. நில அதிர்வு – சுனாமி

4. வானிலையியல் வறட்சி – மழைப்பொழிவு குறைதல்

5. மனிதனால் தூண்டப்பட்ட இடர் – தீவிரவாதம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!