Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Book Back QuestionsTnpsc

இடைக்காலம் Book Back Questions 9th Social Science Lesson 6

9th Social Science Lesson 6

6] இடைக்காலம்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

சீனப் பெருஞ்சுவர்: கி. மு. (பொ. ஆ. மு) 8 மற்றும் 7ஆம் நூற்றாண்டுகளின் இடைப்பட்ட காலப் பகுதியில் தங்களுக்குள்ளே போரிட்டுக் கொண்டிருந்த சீன அரசுகள், வடக்கேயிருந்து வரும் எதிரிகளிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு சுவர்களை எழுப்பிக் கொண்டன. சின் அரசவம்சத்தின் காலத்தில் தனித்தனியாக இருந்த பல சுவர்கள் இணைக்கப்பட்டன. இதன் விளைவாக கிழக்கிலிருந்து மேற்காக சுமார் 5000 கிலோ மீட்டர் நீளமுடைய பெருஞ்சுவர் உருவானது. இச்சுவர் உலக அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. நாடோடிப் பழங்குடியினர் உள்ளே நுழைய முடியாதவாறு இச்சுவர் தடுத்தது. பின்னர் ஆட்சி புரிந்த பல அரச வம்சத்தினர் காலத்தில் இச்சுவர் விரிவு செய்யப்பட்டு வலுவூட்டப்பட்டது. தற்போது சீனப்பெருஞ்சுவரின் மொத்த நீளம் 6700 கிலோ மீட்டர் ஆகும்.

கி. பி. (பொ. ஆ) 1078இல் சீனா உற்பத்தி செய்த இரும்பு 114, 000 டன்னைத் தாண்டியது (1788இல் இங்கிலாந்து 68, 000 டன்னே உற்பத்தி செய்தது), சீனா, செராமிக் (Ceramics) ஓடுகள் மற்றும் பீங்கான் பொருட்கள் செய்வதிலும் தனித்திறன் பெற்று விளங்கியது. இத்தொழில் நுட்பத்தை அடுத்து வந்த 700 ஆண்டுகள் வரை ஐரோப்பா அறிந்திருக்கவில்லை. வெடிமருந்து 1044லேயே பயன்பாட்டில் இருந்தது. ஐரோப்பாவைக் காட்டிலும் 500 ஆண்டுகளுக்கு முன்பாகவே சீனா அச்சடிக்கப்பட்ட புத்தகங்களைக் கொண்டிருந்தது. (Chris Harman, A People’s History of the World, p. 111)

சன்னி, ஷியா பிரிவுகளின் தோற்றம்: அராபியத் தலைவர்களுக்குள் ஏற்பட்ட சச்சரவுகளே இஸ்லாமின் இருபிரிவுகள் தோன்றக் காரணமாயிற்று. அப்பிரிவுகள் சன்னி மற்றும் ஷியா என்றழைக்கப்பட்டன. சன்னி பிரிவைச் சேர்ந்த இஸ்லாமியர்கள், இஸ்லாமிய நாடுகளின் தலைமையும், நபிகளுக்குப்பின் அப்பொறுப்புக்கு வருவோரும் இஸ்லாமியத்தில் நம்பிக்கையுடைய மக்களின் பிரதிநிதிகளால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்தனர். மாறாக ஷியா பிரிவைச் சேர்ந்தோர் இவ்வரசியல், மத தலைமைப் பொறுப்புகளை ஏற்போர் நபிகள் நாயகத்துடன் ரத்த உறவு கொண்டவர்களாகவும் அல்லது மண உறவு கொண்டவர்களாகவும் இருத்தல் வேண்டும். மற்றவர்களை அனுமதிக்க முடியாது என்ற நிலைபாட்டைக் கொண்டிருந்தனர்.

பாக்தாத்: “அரேபிய இரவுகளின் நகரம்” என அறியப்பட்ட நகரமாகும். இது அரண்மனைகள், பொதுக்கட்டடங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பெரிய கடைகள், பூங்காக்கள் மற்றும் தோட்டங்களைக் கொண்ட விரிந்து பரந்த நகரமாகும். வணிகர்கள் கிழக்கோடும் மேற்கோடும் பெரும் வணிகத்தைச் செய்தனர். உலகத்தின் பல பகுதிகளிலிருந்து பார்வையாளர்கள் குறிப்பாக படித்த அறிஞர்கள், மாணவர்கள், கலைஞர்கள் பாக்தாத்திற்கு வந்தார்கள்”. – நேரு, உலக சரித்திரம் (Glimpses of World History).

மங்கோலியர்கள் மற்றும் செங்கிஸ்தான்: மங்கோலியர்கள் நாடோடிகள். போர்த்திறன் கொண்ட அவர்கள் செங்கிஸ்கான் எனும் மகத்தான தலைவனை உருவாக்கினார்கள். செங்கிஸ்தான் சிறப்பு மிக்க இராணுவ ஆற்றல் கொண்டவர். மங்கோலியர்கள் ரஷ்யாவை 300 ஆண்டு காலம் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். இதன் காரணமாக இடைக்காலத்தின் இறுதிவரை ஏனைய ஐரோப்பிய நாடுகளைக் காட்டிலும் தொழில்நுட்பங்களில் ரஷ்யா வளர்ச்சியடையாது பின் தங்கியிருந்தது.

திருச்சபை விலக்கம் என்பது ஒரு மனிதன் கிறித்தவனாக இருப்பதால் என்ன உரிமைகளுக்குத் தகுதியானவரோ அவ்வுரிமைகள் அவருக்கு மறுக்கப்படுவதாகும். அவர் திருச்சபைக்குள் புனிதச் சடங்குகளைச் செய்ய முடியாது. இறந்த பின்னர் அவருடைய உடலைத் திருச்சபைக்குச் சொந்தமான கல்லறைத் தோட்டத்தில் புதைக்க முடியாது. மதவிலக்கம் என்பது ஒரு அரசனுடைய குடிமகனுக்கு அவர் பெறத் தகுதியுள்ள சமயம் சார்ந்த பயன்களை மறுப்பதன் மூலம் அந்நபரை அரசனுக்கு எதிராக வெறுப்பு கொள்ளத் தூண்டுவது.

ஃபிப் (fief) என்பது ஒருவருக்கு அவரைவிட மேல் நிலையில் இருக்கும் கோமகனால் வழங்கப்படும் நிலம். நிலத்தைப் பெற்றவர் நிலம் கொடுத்தவருக்கு கைமாறாக சில சேவைகளைச் செய்ய வேண்டும். அது அவருடைய கடமையாகும்.

ஹன்: ரோமானியப் பேரரசின் சரிவுக்கு பிறகு, ஐரோப்பா சிறிய சிறிய ஜெர்மானிய அரசுகளாக சிதறுற்றிருந்த சமயம், ஹன் இனத்தவர்களும் கடுமையான போர்குணமுள்ள மத்திய ஆசிய மக்களும் வடகிழக்கு இந்தியா மீது படையெடுத்தனர். ஸ்கந்த குப்தரால் அவர்கள் முறியடிக்கப்பட்டாலும், அவருடைய மறைவிற்கு பின், இந்தியாவினுள் நுழைந்து, மத்திய இந்தியா முழுதும் குடியேறினர். தோரமானர் மற்றும் மிஹிரகுலர் இருவரும் நன்கு அறியப்பட்ட ஹன் அரசர்கள் ஆவர்கள். இவ்வரசர்கள் புத்த மதத்தவர்களை தண்டித்தனர். புத்த மடாலயங்களை எரித்தனர். ஏறத்தாழ கி. பி. (பொ. ஆ) 528ஆம் ஆண்டு மாளவத்தைச் சார்ந்த யசோதர்மன் மூலமாக ஹன் இனத்தவர்களது ஆட்சி இந்தியாவில் முடிவுக்கு வந்தது.

பாரசீகத்துடனான சாளுக்கியர்களின் (பாதாமி மற்றும் வாதாபியை உட்கொண்ட) உறவுமுறை: சாளுக்கியா (Chalukya): பாரசீகத்தில் அமையப் பெற்ற சசாநித் வம்சமும் சாளுக்கிய அரசும் சமகால அரசுகளாகும். சீன வம்சத்தில் டாங் என்ற அரசருடன், சசாநித் வம்சத்தின் கடைசி அரசரான இரண்டாம் குசரவ் நல்ல உறவு முறையைக் கொண்டிருந்தார். மேலும் சாளுக்கிய அரசர் இரண்டாம் புலிகேசியின் தூதுவர்களையும் பகிர்ந்து கொண்டார். மாகாராஷ்டிரத்தை உள்ளடக்கிய சாளுக்கிய அரசின் தலைநகர் பாதாமியாகும். யுவான் சுவாங் சாளுக்கியர்களின் வீரத்தைப் புகழ்ந்து கூறும்பொழுது “அவர்கள் நன்றி உணர்வு மிக்கவர்களாகவும், போரில் ஈடுபடுவதை பெருமையாகவும், குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்குபவர்களாகவும் திகழ்ந்தார்கள்” என்கிறார்.

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. —————- ஜப்பானின் பூர்வீக மதம் ஆகும்.

(அ) ஷின்டோ

(ஆ) கன்பியூசியானிசம்

(இ) தாவோயிசம்

(ஈ) அனிமிசம்

2. ———– என்பதன் பொருள் பெரும் பெயர் என்பதாகும்.

(அ) டய்ம்யாஸ்

(ஆ) சோகன்

(இ) பியுஜிவாரா

(ஈ) தொகுகவா

3. ஸ்பெயினைக் கைப்பற்றிய அராபிய தளபதி ————-

(அ) தாரிக்

(ஆ) அலாரிக்

(இ) சலாடின்

(ஈ) முகமது என்னும் வெற்றியாளர்

4. ஹருன்-அல் ரஷித் என்பவர் —————ன் திறமையான அரசர்.

(அ) அப்பாசித்து வம்சம்

(ஆ) உமையது வம்சம்

(இ) சசானிய வம்சம்

(ஈ) மங்கோலிய வம்சம்

5. நிலப்பிரப்புத்துவம் —————- மையமாகக் கொண்டது.

(அ) அண்டியிருத்தலை

(ஆ) அடிமைத்தனத்தை

(இ) வேளாண் கொத்தடிமையை

(ஈ) நிலத்தை

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. —————- என்பவர்கள் ஜப்பானின் பூர்வ குடிகள் ஆவர்.

2. ————– என்பது ஜப்பானின் முந்தையப் பெயர் ஆகும்.

3. ————— என்பது மெதினாவின் முந்தையப் பெயர் ஆகும்.

4. வடக்குப் பகுதியில் இருந்த சீனர்களுக்கு பண்பாட்டில் பின் தங்கிய ————— மக்கள் அச்சுறுத்தலைக் கொடுத்தனர்.

5. உதுமானியர் மேலாண்மையை பால்கன் பகுதியில் நிறுவியவர் —————- ஆவார்.

III. பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

1. (i) செங்கிஸ்கான் ஒரு மத சகிப்புத்தன்மை இல்லாதவர்.

(ii) மங்கோலியர் ஜெருசலேமை அழித்தனர்.

(iii) உதுமானியப் பேரரசை, சிலுவைப் போர்கள் வலுவிழக்கச் செய்தன.

(iv) போப்பாண்டவர் கிரிகோரி, நான்காம் ஹென்றியை, மதவிலக்கம் என்னும் ஆயுதத்தைப் பயன்படுத்தி, பதவி விலகச் செய்தார்.

(அ) i சரி

(ஆ) ii சரி

(இ) ii மற்றும் iii சரியானவை

(ஈ) iv சரி

2. (i) மங்குகான் என்பவர் சீனாவின் ஆளுநர்.

(ii) சீனாவில் இருந்த மங்கோலிய அரச சபை மார்க்கோபோலோவின் நன்மதிப்பைப் பெற்றது.

(iii) “சிகப்புத் தலைப்பாகை” என்ற அமைப்பின் தலைவராக இருந்தவர் ஹங் சாவோ.

(iv) மங்கோலியர்கள் சீனாவில் தங்களது ஆட்சியை யுவான் வம்சம் என்ற பெயரில் நிறுவினர்.

(அ) i சரி

(ஆ) ii சரி

(இ) ii மற்றும் iv சரியானவை

(ஈ) iv சரி

3. (i) போயங் மற்றும் சங்-ஆன் ஆகியவை சுங் வம்சத்தால் கட்டப்பட்டது.

(ii) விவசாயிகளின் எழுச்சி, சாங் வம்சம் அழிய வழிகோலியது.

(iii) செல்ஜீக் துருக்கியர் என்பவர் தார்த்தாரியர் என்னும் பழங்குடியினர் ஆவார்.

(iv) மங்கோலியர்கள், ஜப்பானில் தங்களது ஆட்சியை யுவான் வம்சம் என்ற பெயரில் நிறுவினர்.

(அ) i சரி

(ஆ) ii சரி

(இ) iii சரி

(ஈ) iv சரி

4. கூற்று (கூ): பௌத்த மதம் இந்தியாவில் இருந்து சீனாவிற்குச் சென்றது.

காரணம் (கா): சீனாவில் தொடக்காலத்தில் குடியேறிய இந்தியர்கள் பௌத்த மதத்தை பின்பற்றியவர்கள்.

(அ) கூற்று சரி; காரணம் தவறு

(ஆ) கூற்றும் காரணமும் தவறு

(இ) கூற்றும் காரணமும் சரியானவை

(ஈ) கூற்று தவறு; காரணம் கூற்றுக்கு தொடர்பற்றது.

5. கூற்று (கூ): ஜெருசலேமை துருக்கியர் கைப்பற்றிக் கொண்டது சிலுவைப் போருக்குக் காரணமானது.

காரணம் (கா): ஜெருசலேமிற்கு புனிதப் பயணம் மேற்கொள்ள ஐரோப்பிய கிறித்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

(அ) கூற்று சரி; காரணம் கூற்றுக்கான விளக்கம் அல்ல.

(ஆ) கூற்றும் காரணமும் சரி

(இ) கூற்றும் காரணமும் தவறு

(ஈ) கூற்று சரி; காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்.

IV. பொருத்துக:

1. சிகப்பு தலைப்பாகைகள் – அ] காமகுரா

2. செல்ஜீக் துருக்கியர்கள் – ஆ] இரண்டாம் முகமது

3. முதல் சோகுனேட் – இ] அரேபிய இரவுகளின் நகரம்

4. பாக்தாத் – ஈ] சூ யுவான் சங்

5. கான்ஸ்டாண்டிநோபிள் கைப்பற்றப்படல் – உ] மத்திய ஆசியா

விடைகள்:

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. ஷின்டோ, 2. டய்ம்யாஸ், 3. தாரிக், 4. அப்பாசித்து வம்சம், 5. அண்டியிருத்தலை

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. அய்னஸ், 2. யமட்டோ, 3. எத்ரிப், 4. மங்கோலியர்கள், 5. இரண்டாம் முஹமது

III. பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

1. iv சரி, 2. ii மற்றும் iv சரியானவை, 3. அனைத்தும் தவறானவை, 4. கூற்று சரி; காரணம் தவறு, 5. கூற்றும் காரணமும் சரி

IV. பொருத்துக:

1. ஈ, 2. உ, 3. அ, 4. இ, 5. ஆ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!