Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும் Notes 9th Social Science

9th Social Science Lesson 9 Notes in Tamil

9. இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும்

சோழர்கள் முதல் மொகலாயர்கள் வரை

அறிமுகம்

  • வரலாற்றை பண்டைய/செவ்வியல் காலம், இடைக்காலம், நவீனகாலம், எனக் காலவரையறை செய்வது ஐரோப்பிய வரலாற்றில் இவ்வாறான சொற்களைப் பயன்படுத்துவது சிரமங்களை ஏற்படுத்தும்.
  • இந்திய வரலாற்றை இவ்வாறாக பல காலக்கட்டங்களாகப் பிரித்து விளக்குவதின் பொருத்தப்பாடு குறித்து வரலாற்று அறிஞர்கள் விவாதித்துள்ளனர்.
  • எடுத்துக்காட்டாக வரலாற்றறிஞர் பர்ட்டன் ஸ்டெய்ப் குப்தப் பேரரசின் காலத்தை விவரிப்பதற்கு செவ்வியல் என்னும் வார்த்தையைப் பயன்படுத்துகிறார்.
  • மேலும் இந்திய வரலாற்றின் இடைக்காலம் கி.பி. 7ஆம் நூற்றாண்டு முதல் (ஹர்ஷ-சாளுக்கியப் பேரரசுகளின் காலம்) 16ஆம் நூற்றாண்டில் மொகலாயப் பேரரசின் தொடக்கம் வரை எனவும் கி.பி. (பொ.ஆ) 16ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. (பொ.ஆ) 18ஆம் நூற்றாண்டு வரை நவீன காலத்தின் தொடக்கம் எனவும் வரையறை செய்கிறார்.
  • இக்காலப் பகுதியில் இந்தியாவின் பலபகுதிகள் முக்கியத்துவம் வாய்ந்த, உறுதியான அரசியல் மாற்றங்களுக்கு உள்ளாயின.
  • இம்மாற்றங்கள் சமூக-பொருளாதார அடிக்கட்டுமானங்களையும் நாட்டின் வளர்ச்சியையும் குறிப்பிடத்தகுந்த அளவிற்கு மாற்றியமைத்தது.
  • வரலாறு என்றால் அரசர்களையும் அவர்களின் வம்சாவளிகளையும், அவர்கள் காலத்து நிகழ்ச்சிகளையும் முக்கியமாகப் போர்கள், படையெடுப்புகளை விவரிப்பது என்பதான நேர்கோட்டு முறை விவரிப்பு என்பதிலிருந்து வரலாற்று அறிஞர்கள் இக்காலத்தில் பெரிதும் விலகினர்.
  • இப்போது வரலாறு என்பது பல அறிவுத்துறைகள் சார்ந்ததாகக் கருதப்பட்டு, சமூகப் பொருளாதார மாற்றங்களும் வரலாற்றின் உள்ளடக்கமாகக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன.
  • இருந்தபோதிலும் அவ்வாறன மாற்றங்கள் அரசியல் கட்டமைப்பில் ஏற்படும் மாற்றங்களோடு தொடர்பில்லாமல் தன்னிச்சையாக நடைபெறுவதில்லை அதுவும் நாம் பார்க்கவுள்ள காலப்பகுதியைப் பொறுத்தமட்டிலும் இது மிகவும் பொருந்தக்கூடியதாகும்.

முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் மாற்றங்கள்

  • முதலாம் இராஜராஜன் காலத்தில் தொடங்கிய சோழப் பேரரசின் விரிவாக்கம் பாண்டிய பல்லவ அரசுகளை மறையச் செய்து வடக்கே ஒரிசா வரை பரவியது.
  • பன்னிரெண்டாம் நூற்றாண்டிலிருந்து பல நூற்றாண்டு காலம் நீடித்த முஸ்லிம்களின் ஆட்சி டெல்லியில் தொடங்கி வட இந்தியா முழுவதும் பரவியது. இஸ்லாம் மதம் இந்தியா முழுவதும் பரவியது.
  • 13ஆம் நூற்றாண்டின் இறுதியில் சோழப் பேரரசின் மறைவைத் தொடர்ந்து அதன் விளைவாக தென்னிந்தியாவில் பல சமயம் சார்ந்த அரசுகள் தோன்றின. இறுதியில் தென்னிந்தியா முழுவதிலும் தனது ஆட்சி அதிகாரத்தை நிறுவிய விஜயநகரப் பேரரசு எழுச்சி பெற்றது. அது தென்னிந்தியாவில் சமயம் சார்ந்த ஆட்சியின் கோட்டையாகக் கருதப்பட்டது.
  • கி.பி.(பொ.ஆ) 1526இல் பாபர் இப்ராஹிம் லோடியை தோற்கடித்ததிலிருந்து வட இந்தியாவில் மொகலாயர் தலைமையில் முஸ்லிம்களின் ஆட்சியை ஒருங்கிணைத்து வலிமைப்படுத்தும் பணி துவங்கியது. மொகலாயப் பேரரசு அதன் புகழின் உச்சத்தில் காபூலிருந்து குஜராத் மற்றும் வங்காளம் வரையிலும் காஷ்மீரத்திலிருந்து தென்னிந்தியா வரையிலும் பரவியிருந்தது.
  • கி.பி. (பொ.ஆ) 1498இல் மேலைக்கடற்கரையில் வந்திறங்கிய போர்ச்சுக்கீசியர்களைத் தொடர்ந்து ஏனைய ஐரோப்பியரும் இந்தியாவிற்கு வருகை புரிந்தனர்.

அரசியல் மாற்றங்கள்

கி.பி. (பொ.ஆ.) 1000 – 1700

அ) வடஇந்தியா : இஸ்லாமின் வருகை

  • முஸ்லிம்கள் ஆட்சி, 12ஆம் நூற்றாண்டின் இறுதியில் முகமது கோரியால் டெல்லியில் நிறுவப்பட்டது. அடுத்து வந்த நூறு ஆண்டுகளுக்கு அந்த ஆட்சியானது இப்பகுதியைவிட்டு வெஏறு எங்கும் பெருமளவில் பரவவில்லை.
  • இதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே முஸ்லிம் வணிகர்களையும் ஆட்சியாளர்களையும் இந்தியர்கள் அறிந்திருந்தனர்.
  • கி.பி. 9ஆம் நூற்றாண்டிலேயே அராபிய வணிகர்கள் மேலைக் கடற்கரைத் தூறைமுகங்களில் குறிப்பாகக் கேரளத் துறைமுகங்களில் வணிகம் செய்தனர்.
  • அதைப்போலவே கி.பி.8ஆம் நூற்றாண்டு முதலாகவே மேற்காசியாவைச் சேர்ந்த முஸ்லிம் படையெடுப்பாளர்கள் குஜராத்திலும் சிந்துவிலும் தங்கள் சுல்தானியங்களை நிறுவி ஆட்சிபுரிந்து வந்தனர்.
  • ஆனால் இத்தொடர்புகள் இந்தியாவின் ஏனைய பகுதிகளில் முஸ்லிம் ஆட்சி நிறுவப்படுவதற்கோ அல்லது இஸ்லாம் பரவுவதற்கோ இட்டுச் செல்லவில்லை.
  • முஸ்லிம் ஆட்சியின் தாக்கம் அலாவுதீன் கில்ஜியின்(கி.பி.(பொ.ஆ.) 1296 – 1316) ஆட்சியின்போது உணரப்பட்டது. ஆட்சியை விரிவுபடுத்துதல் என்பதைக்காட்டிலும் செல்வங்களைக் கவர்ந்து செல்லும் நோக்கத்துடனே தென்னிந்தியாவின் மீது பல படையெடுப்புகளை அவர் மேற்கொண்டார்.
  • தேவகிரி (அவுரங்காபாத்திற்கு அருகில்) அலாவுதீன் கில்ஜியால் கைப்பற்றப்பட்டது. ‘தௌலதாபாத்’ என மறுபெயர் சூட்டப்பெற்ற இந்நகரம் வளர்ந்து வரும் அவருடைய நாட்டின் இரண்டாவது வலிமைமிகுந்த தளமாயிற்று.
  • கி.பி. (பொ.ஆ.) 1300களின் தொடக்கப் பத்தாண்டுகளில் அலாவுதீன் கில்ஜியின் அடிமையும், படைத்தளபதியுமான மாலிக்கபூரின் தலைமையில் தென்னிந்தியப் படையெடுப்பொன்று மேற்கொள்ளப்பட்டது.
  • அலாவுதீன் கில்ஜிக்குப் பின்னர் ஆட்சி பொறுப்பேற்ற துகளக் வம்ச அரசர்களும் தங்கள் படைகளைத் தெற்கு நோக்கி அனுப்பினர். இதன் விளைவாகப் பொதுவால தனிமைப்பட்டிருந்த நாட்டின் தென்பகுதி வடஇந்திய முஸ்லிம் அரசர்களின் சுற்று வட்டத்திற்குள் வந்து சேர்ந்தது.
  • தக்காணத்தின் பலபகுதிகளுக்கு ஆளுநர்கள் நியமிக்கப்பட்டனர். மதுரையில் ஒரு சுல்தானிய ஆட்சியே நிறுவப்பட்டது.
  • முகமதுபின் துக்ளக்கின் ஆட்சியின்போது, தௌலதாபாத்தில் கலகம் வெடித்தது. தன் விளைவாக அலாவுதீன் பாமான்ஷா கி.பி.(பொ.ஆ). 1347இல் பாமினி சுல்தானியத்தை உருவாக்கினார். பிடார் அவ்வரசின் தலைநகரானது.
  • பாமினி சுல்தானியம் சுமார் நூற்றைம்பது ஆண்டு காலம் நிலைத்திருந்தது. அதற்குக் காரணம் மக்களிடையே மதிப்புப் பெற்றிருந்த அரசியல் மேதையும் விசுவாசமிக்க அமைச்சருமான மகமுத் கவான் என்பவரின் சிறந்த நிர்வாகமாகும்.
  • அவருடைய இறப்பிற்குப் பின்னர் பல ஆளுநர்கள் தங்களைச் சுதந்திர அரசர்களாக அறிவித்துக் கொண்டனர்.
  • நூற்றாண்டின் இறுதியில் தக்காணத்தில் ஐந்து சுல்தானியங்கள் உதயமாயின. அவை பிஜப்பூர், கோல்கொண்டா, அகமதுநகர், பிரார், பிடார் ஆகியனவாகும்.
  • இவற்றில் அளவில் பெரியதான பீஜப்பூரும் கோல்கொண்டாவும் பெருமளவு பொருளாதார வளர்ச்சியைப் பெற்றன.
  • வணிகமும் பெருமளவில் விரிவடைந்தது. கி.பி. (பொ.ஆ.) 1660களில் இத்தக்காணச் சுல்தானியங்களை ஔரங்கசீப் கைப்பற்றினார். தெற்கே மெட்ராஸ் (சென்னை) உட்பட அனைத்துப் பகுதிகளும் மொகலாயப் பேரரசின் பகுதிகளாயின.

ஆ) தெற்கில் சோழப் பேரரசு

  • சோழப்பேரரசின் விரிவாக்கம் முதலாம் ராஜராஜன் காலத்தில் தொடங்கியது. பல்லவ அரசு ஏற்கனவே சோழ அரசோடு இணைக்கப்பட்டுவிட்டது.
  • பாண்டிய அரசு சுதந்திர அரசாக இருந்தபோதிலும் சோழர்களுக்குக் கட்டுப்பட்டதாக்வே இருந்தது. முதலாம் ராஜேந்திரன் காலத்தில் சோழப் பேரரசு மேலும் விரிவடைந்தது.
  • தனது படைகளை வடகிழக்கு இந்தியாவில் கங்கை நதிவரை நடத்திச் சென்றார். மேலும் தனது கப்பற்படைகளை ஸ்ரீவிஜய சைலேந்திர அரசுக்கு எதிராகவும் (இந்தோனேசியா) கடாரம் (கேடா) மற்றும் ஸ்ரீலங்காவிற்கு எதிராகவும் அனுப்பிவைத்தார்.
  • இதனால் :கங்கையும், கடாரமும் கொண்ட சோழன்” எனும் பட்டத்தைப் பெற்றார். ஸ்ரீலங்கா சோழப்பேரரசின் ஒரு மாகாணமாக பத்தாண்டுகள் இருந்தது.
  • ராஜேந்திர சோழனின் பேரன் முதலாம் குலோத்துங்கன் காலத்தில் கிழைச் சாளுக்கிய அரசோடு. மேற்கொள்ளப்பட்ட திருமண உறவுகள் மூலம் பேரரசு மேலும் வலுத்தப்பட்டு ஒரிசாவின் எல்லைவரை பரவியது.
  • சோழர்கள் காலத்தில் தென்கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் சீனா உடனான வணிகம் பெருமளவில் விரிவடைந்தது.
  • தமிழ் வணிகர்களோடு ஏற்பட்ட இடைவிடாத தொடர்பினால் இந்தியப் பண்பாடு மற்றும் கலையின் செல்வாக்கு தென்கிழக்கு ஆசியாவில் பரவியது.
  • அதை கம்போடியாவிலுள்ள நேர்த்திமிக்க, மிகப்பிரமாண்டமான அங்கோர்-வாட் கோவில்களில் நாம் பார்க்கலாம்.

இ) விஜயநகர் மற்றும் தென்னிந்தியா – சோழர்களுக்குப் பின்னர்

  • சோழப் பேரரசின் சரிவு 13ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் தொடங்கியது. கடைசி சோழப் பேரரசர் மூன்றாம் ராஜேந்திரனுக்குப் பின்னர் கி.பி. (பொ.ஆ) 1279இல் சோழப் பேரரசு முற்றிலும் வீழ்ந்தது.
  • இதனைத் தொடர்ந்து இப்பகுதிகளில் பல அதிகார மையங்கள் உருவாயின. இதற்கும் தெற்கே பாண்டிய அரசர்கள் சோழர்கள் காலத்தில் தாங்கள் இழந்த செல்வாக்கையும் புகழையும் மீண்டும் நிலைநிறுத்தும், முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர்.
  • 13ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஜடாவர்மன் சுந்தரபாண்டியனைப் போன்ற அறிவுக் கூர்மையுடைய மன்னர்களால் பாண்டிய நாடு ஆளப்பட்டது.
  • வடக்கே பேலூரையும் பின்னர் ஹளபேடுவையும் தலைநகராகக் கொண்ட ஹொய்சால அரசு அமைந்திருந்தது. இவ்வரசு இன்றைய கர்நாடக மாநிலத்தின் பெரும்பகுதியை உள்ளடக்கியதாய் இருந்தது.
  • காகத்தியர்கள் வாராங்கல்லிலிருந்து (தெலுங்கானா) ஆட்சி செய்தனர். தேவகிரியில் யாதவர்கள் ஆட்சி புரிந்தனர்.
  • 13ஆம் நூற்றாண்டின் இறுதியில் தேவகிரி அலாவுதீன் கில்ஜியின் படையெடுப்பினால் வீழ்ந்தது.
  • தென்னிந்திய அரசுகள் தங்களிடையே அமைதியான ஒத்துழைப்பைக் கொண்டிராத காரணத்தினாலும் அவர்களிடையே ஏற்பட்ட உட்பூசல்களும், போர்களும் மோதல்களும் வீழ்ச்சிக்கு வழிவகுத்தன.
  • விஜயநகர அரசு (பின்னர் பேரரசு) உருவாக்கப்பட்டதே தென்னிந்தியாவின் இடைக்கால வரலாற்றின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த வளர்ச்சியாகும்.
  • சங்கம வம்சத்தின் ஹரிஹரர் மற்றும் புக்கர் ஆகிய இரு சகோதரர்களால் இவ்வரசு நிறுவப்பட்டது. இவர்களே சங்கம வம்சத்தின் முதல் அரசர்கள் அவர்.
  • துங்கபத்ரா நதியின் தென்கரையில் புதிய தலைநகர் ஒண்றை உருவாக்கி அதற்கு விஜயநகரம் (வெற்றியின் நகரம்) எனப் பெயர் சூட்டினர்.
  • கி.பி. (பொ.ஆ) 1336ல் ஹரிஹரர் அரசராக முடிசூட்டப்பெற்றார். சங்கம வம்ச அரசர்கள் விஜயநகரை சுமார் 150 வருடங்கள் அட்சி செய்தனர்.
  • பின்னர் வந்த சாளுவ வம்ச அரசர்கள் குறுகிய காலமே அட்சி புரிந்தனர். இதன் பின்னர் ஆட்சி செய்வர்கள் துளுவ வம்ச அரசர்களாவர். விஜயநகர அரசர்களுள் மாபெரும் அரசரான கிருஷ்ணதேவராயர் இவ்வம்சத்தைச் சேர்ந்தவராவார்.
  • பேரரசாக விரிவடைந்தபோது தெற்கேயிருந்த ஹொய்சாள அரசும் தமிழகப் பகுதியில் இருந்த அரசுகளும் விஜயநகர அரசோடு இணைத்துக்கொண்டன.
  • விஜயநகர அரசர்கள் தொடர்ந்து பாமினி அரசுகளோடும் சமயம் சார்ந்த அரசுகளான கொண்டவீடு மற்றும் ஒரிசாவோடும் தொடர்ந்து போர்கள் செய்து கொண்டிருந்தனர்.
  • இறுதியில் கி.பி. (பொ.ஆ) 1565இல் தலைக்கோட்டைப் போரில் தக்காண சுல்தான்களின் கூட்டுப்படையினர் விஜயநகரைத் தோற்கடித்தனர்.
  • விஜயநகரப் பேரரசர்கள் இதன் பின்னர் தங்கள் தலைநகரைத் தெற்கேயுள்ள பெனுகொண்டாவிற்கும் இறுதியில் திருப்பதி அருகேயுள்ள சந்திரகிரிக்கும் மாற்றினர்.
  • இறுதியாக இப்பேரரசு (அல்லது அதில் மீதிமிருந்த பகுதிகள்) பதினேழாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் வீழ்ச்சியுற்றது.

அரசு : ஒரு அரசரால் அல்லது அரசியால் ஆளம்ப்படும் ஒரு நாடு.

பேரரசு : ஒரு அரசரால் அல்லது அரசியால் ஆளப்படும் பல நாடுகளை கொண்ட நிலப்பரப்பு.

ஈ) மொகலாயர்கள்

கி.பி. (பொ.ஆ) 1526 – 1707

  • மொகலாயப் பேரரசை நிறுவியவர் பாபர் ஆவார். கி.பி. (பொ.ஆ.) 1526ஆம் ஆண்டு பானிபட் போர்க்களத்தில் இப்ராகிம் லோடியை வெற்றி கொண்ட பின்னர் பாபர் இவ்வரசை நிறுவினார்.
  • முதல் ஆறு மொகலாயப் பேரரசர்கள் ‘மாபெரும் மொகலாயர்கள்’ எனக் குறிப்பிடப்படுகின்றனர்.
  • அவர்களில் கடைசி மாபெரும் மொகலாயப் பேரரசர் ஔரங்கசீப் ஆவார்.
  • நாடுகளைப் கைப்பற்றியதன் மூலமும், ராஜஸ்தானத்து சமயம் சார்ந்த அரசுகளோடு நல்லுறவைப் பேணியதின் மூலம் அக்பர் தனது பேரரசை ஒருங்கிணைத்து வலிமைப்படுத்தினார்.
  • ஔரங்கசீப்பிற்குப் பின் மொகலாயப் பேரரசு பலவாறாகப் பிரிந்திருந்தாலும், அதனை கி.பி. (பொ.ஆ) 1857ஆம் ஆண்டு பிரிட்டிஷார் முடிவுக்கு கொண்டு வந்தனர்.
  • மகாராஷ்டிராவில் பதினேழாம் நூற்றாண்டில் ஒரு அதிகார மையம் எழுச்சி பெற்றது. சிவாஜியின் தலைமையில் மராத்தியர்கள் மேற்கு இந்தியப் பகுதிகளில் மொகலாயரின் அதிகாரத்தைப் பெருமளவில் மதிப்பிழக்கச் செய்தனர்.
  • மொகலாயப் பேரசு அதன் உச்சத்தில் இருந்தபோது இந்தியத் துணைக் கண்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவியிருந்தது.
  • கேரளத்தின் தென்மேற்குப்பகுதி, தென் தமிழகப் பகுதிகள் ஆகியவை மட்டுமே மொகலாயரின் நேரடி ஆட்சிக்கு உட்படாத பகுதிகளாக இருந்தன.

எ) ஐரோப்பியரின் வருகை

  • பதினைந்தாம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு ஒரு நேரடி கடல் வழியைக் கண்டறிவதில் ஐரோப்பியர்கள் தீவிரமாய் ஈடுபட்டிருந்தனர்.
  • ஏற்கனவே இருக்கிற, மேற்காசியா மற்றும் மத்தியதரைக்கடல் பகுதிகள் வழியாகச் செல்கிற நிலவழிக்கு மாற்றாக இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
  • இந்தியாவிலிருந்து நடைபெறும் நறுமணப் பொருட்களின் வணிகம் அலெக்ஸாண்டிரியா நகர்வரை முஸ்லிம்களின் கட்டுப்பாட்டின் கீழிருந்தது.
  • இந்தியாவுடன் நேரடித்தொடர்புடைய ஏற்படுத்துக் கொள்வதன் மூலம் ஐரோப்பியர்கள் நறுமணப் பொருட்களின் வணிகத்தை தங்களுடைய நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டு வந்துவிடலாம்.
  • மேலும் அப்பொருட்களைத் தங்களுக்குச் சாதகமான விலையிலும் கொள்முதல் செய்யலாம் என எண்ணினர். கி.பி. (பொ.ஆ) 1498இல் வாஸ்கோடகாமா, தென்னாப்பிரிக்காவின் நன்னம்பிக்கைமுனையைச் சுற்றிக் கொண்டு கேரளக் கடற்கரையை வந்தடைந்தார்.
  • ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் கி.பி. (பொ.ஆ) 1503இல் போர்ச்சுகீசியர்கள் கொச்சியில் தங்கள் முதல் கோட்டையைக் கட்டினர்.
  • கி.பி. (பொ.ஆ) 1510இல் கோவா கைப்பற்றப்பட்டு இந்தியாவில் போர்ச்சுகீசிய அரசின் மையமாக மாறியது. தங்களுடைய கப்பற்படை வலிமையின் காரணமாகப் போர்ச்சுக்கீசியர்களால் கிழக்கு ஆப்பிரிக்காவிற்கும் மலாக்காவுக்கும் இடைப்பட்ட பல துறைமுகங்களைக் கைப்பற்ற முடிகிறது. மேலும் இப்பகுதி முழுவதிலும் நடைபெற்ற கடல்சார் வணிகத்தை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தவும் முடிந்தது.
  • ஏனைய ஐரோப்பிய நாடுகளும் போர்ச்சுகீசியரைப் பின்தொடர்ந்து குறிப்பாக இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகியவை இந்தியாவிற்குள் நுழைந்தன.
  • ஆங்கிலேயர்களும் பிரெஞ்சுக்காரர்களும் தங்கள் அனைத்து நடவடிக்கைகளையும் கிழக்கிந்தியக் கம்பெனிகள் மூலம் மேற்கொண்டனர்.
  • இந்நிறுவனங்கள், தனியார் வர்த்தக நிறுவனங்களாக இருந்தபோதிலும் வலுவான அரசியல் நிகழ்ச்சி நிரலைக் கொண்டிருந்தன.
  • 17ஆம் நூற்றாண்டில் , மொகலாய அரசு வலுவாக இருந்த வரையிலும், இந்த ஐரோப்பிய வர்த்தக நிறுவனங்கள் மொகலாயப் பேரரசில் வணிகம் செய்தன.
  • ஆனால் மொகலாயப் பேரரசின் எல்லைக்குள் தங்களுக்கெனச் சொந்தமான பகுதிகளைப் பெற அவற்றால் இயலவில்லை.
  • இருந்தபோதிலும் தென்னிந்தியாவில் வலுவான அரசுகள் இல்லாததால் ஐரோப்பிய நாடுகளின் வணிக நிறுவனங்கள் தங்களுக்கென்று சொந்தமான வணிகத்தலங்களை ஏற்படுத்திக் கொண்டு அவற்றில் முழு அதிகாரம் செலுத்தின.
  • (எ.கா) புலிகாட் (பழவேற்காடு) மற்றும் நாகப்பட்டினத்தில் டச்சுக்காரர்களும், மெட்ராஸ்-ல் (சென்னை) ஆங்கிலேயர்களும், பாண்டிச்சேரியில் பிரெஞ்சுக்காரர்களும், தரங்கம்பாடியில் டேனியர்களும் நிலை கொண்டனர்.

அரசியல் மாற்றங்களின் தாக்கங்கள்

  • மேற்கூறப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் வளர்ச்சி மாற்றங்கள் இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் நிர்வாக அமைப்புகள், சமூகம் பொருளாதாரம் ஆகியவற்றின் மேல்ன் பரந்துபட்ட தாக்கங்களையும் விளைவுகளையும் ஏற்படுத்தின.
  • சோழர்கள் காலம் தமிழ்நாட்டு வரலாற்றில் செழிப்புமிக்க காலமாகும். இக்காலத்தில் வணிகமும் பொருளாதாரமும் விரிவடைந்தன.
  • நகரமயமாதலும் இவற்றுடன் இணைந்து கொண்டது. சோழர்கள் காலத்தில் நிர்வாக இயந்திரமானது மறுசீரமைக்கப்பட்டது.
  • உள்ளாட்சி நிர்வாகத்தின் அடிப்படை அலகு கிராமம் (ஊர்) ஆகும். அதற்கு அடுத்தவை ஊர்களின் தொகுப்பான ‘நாடு’ மற்றும் ‘கோட்டம்’ (மாவட்டம்) என்பனவாகும்.
  • பிராமணர்களுக்கு மானியமாக வழங்கப்பட்ட வரிவிலக்கு அளிக்கப்பட்ட கிராமங்கள் ‘பிரம்மதேயம்’ என்றறியப்பட்டன.
  • சந்தை கூடுமிடங்களும் சிறுநகரங்களும் ‘நகரம்’ என்றழைக்கப்பட்டன. ஊர், நாடு , பிரம்மதேயம், நகரம் ஆகிய ஒவ்வொன்றும் தனக்கென ஒரு மன்றத்தைக் (சபை) கொண்டிருந்தது.
  • நிலங்களையும் நீர்நிலைகளையும் கோவில்களையும் பராமரித்து மேலாண்மை செய்வது.
  • உள்ளூர் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பது அரசுக்கு செலுத்தப்பட வேண்டிய வரிகளை வசூல் செய்வது ஆகியவை, இம்மன்றங்களின் பொறுப்புகளாகும்.
  • உள்ளாட்சி நிர்வாகம் தொடர்பான அடிப்படை முறைகளில் சோழ அரசு தலையிடவில்லை. அதேசமயம் பல நிர்வாகப் பிரிவுகளை (மண்டலம், வளநாடு) உருவாக்கியதன் மூலம் வருவாய்த்துறை நிர்வாகத்தில் புதுமைகளைப் புகுத்தியது.
  • வேளாண்மை மற்றும் வணிகத் துறைகளில் பல புதிய வரிகள் அறிமுகம் செய்யப்பட்டன.
  • இரண்டாவது குறிப்பிடத்தகுந்த அம்சம், அதிக எண்ணிக்கையில் கோவில்கள் கட்டப்பட்டதாகும்.
  • இது இரண்டு பரிமாணங்களைக் கொண்டிருந்தது. ஒன்று புதிய கோவில்கள் கட்டப்பட்டன. இரண்டாவது ஏற்கனவே உள்ள கோவில்கள் பலமுனைச் செயல்பாடுகளைக் கொண்ட சமூகப் பொருளாதார நிறுவனங்களாக மாறியதாகும்.
  • கோவில்கள் கட்டப்படுவதானது அரசின் வளர்ந்துவரும் பொருளாதாரச் செழிப்பை பிரதிபலிப்பதாய் அமைந்தது. ஏனெனில் கோவில் கட்டுமானமென்பது மிகப்பெரும் செலவினங்களை உள்ளடக்கிய நடவடிக்கையாகும்.
  • கோவில்கள் வழிபாட்டிற்கான இடங்களாக மட்டுமல்லாமல் முக்கிய பொருளாதாரப் பண்புகளைக் கொண்ட நிறுவனங்களாகவும் மாறின.
  • அவை பொருட்களை கொள்முதல் செய்பனவாகவும் மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனமாகவும் நில உடமையாளராகவும் மாறின.
  • டெல்லியில் இஸ்லாமியராட்சி நிறுவப்பட்டது. இந்தியச் சமூகத்தின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தொடக்கத்தில் இஸ்லாம் சமூகப் பதட்டங்களை ஏற்படுத்தவில்லை.
  • எடுத்துக்காட்டாக கேரளக் கடற்கரைப் பகுதிகளில் குடியேறிய அராபிய முஸ்லிம் வணிகர்கள் உள்ளூர்ப் பெண்களை திருமணம் செய்து அமைதியான வாழ்க்கையை மேற்கொண்டனர்.
  • இஸ்லாம் இரு அரசு மதமாக மாறிய போதுதான் சூழ்நிலைகள் மாறின. எதிரிகளின் வழிபாட்டு இடங்களை அழிப்பது என்பது தன்னுடைய அதிகாரத்தை நிலைநாட்டுவதற்காக இடைக்கால அரசர்கள் பின்பற்றிய ஒரு வழிமுறையாகும்.
  • மற்றபடி ஒரு கடவுள் தத்துவத்தை முன்வைக்கும் இஸ்லாம் இந்தியச் சமூகத்தின்மீது பல நேரிடைத் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. ஒரு கலப்புப் பண்பாடு உருவாவதில் இஸ்லாம் அளப்பரிய பங்காற்றியுள்ளது.
  • டெல்லி மற்றும் தக்காணத்திலிருந்த முஸ்லிம் அரசுகள் அராபியாவிலிருந்தும் பாரசீகத்திலிருந்தும் குடிபெயர்பவர்களை இந்தியாவில் குடியேறக் கவர்ந்திழுத்தன.
  • இவ்வாறு குடியேறியவர்கள் இந்நாடுகளில் பல்வேறு பணிகளில் அமர்ந்தனர். அவர்களில் பல முக்கியமானவர்களாகவும் நன்கறியப்பட்ட அரசியல் மேதைகளாகவும் விளங்கினர்.
  • இச்சூழல் இந்தியச் சமூகத்திற்கு மேற்காசியாவோடு நிலையான உறவுகளை மேற்கொள்ள கதவுகளைத் திறந்து வைத்தது. இதன் விளைவாகப் பண்பாட்டு தொழில்நுட்பப் பரிமாற்றங்கள் அரங்கேறின.
  • முஸ்லிம் வணிகர்களும் கைவினைஞர்களும் இந்தியாவுக்கு வடக்கேயிருந்து படையெடுப்புகளின் போது தெற்கே குடிபெயர்ந்தனர். இதனால் சமூகமானது பல் இன மக்களைக் கொண்டதாகவும் கலப்புப் பண்பாட்டுத் தன்மை கொண்டதாகவும் மாறியது.
  • இவ்வாறு ஒரு புதிய கலப்புப் பண்பாடு உருவானதைத் தக்காண சுல்தானியங்களான பீஜப்பூரிலும் கோல்கொண்டாவிலும் மிகத் தெளிவாகவே பார்க்கமுடியும்.
  • இவ்விரு அரசுகளின் சுல்தான்கள் பரந்த மனப்பான்மை கொண்டவர்களாகவும் சமயச்சார்பற்ற பார்வை உடையவர்களாகவும் இருந்தனர்.
  • இக்காலப்பகுதியில் நிகழ்ந்த மற்றுமொரு குறிப்பிடத் தகுந்த வளர்ச்சி முஸ்லிம் சுல்தானியங்களைப் பற்றிய அராபிய பாரசீக வரலாற்றுக் குறிப்புகளாகும்.
  • இபின் பதூதா, அல்பரூனி, பெரிஷ்டா ஆகியோர் நன்கறியப்பட்ட சிறந்த வரலாற்று அறிஞர்கள் ஆவர்.
  • இவ்வரலாற்று அறிஞர்கள் இடைக்கால இந்தியாவின் அரசர்கள் மற்றும் நிகழ்ச்சிகளைப் பற்றிய முக்கியச் செய்திகளை குறிப்பிட்டுள்ளனர்.
  • இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சி குறித்து ஒரு மாற்று வரலாற்றுக் கருத்தை அதுவும் சமகால முஸ்லிம் வரலாற்று அறிஞர்களின் நேரடி அனுபவத்தின் அடிப்படையில் உருவான கருத்தை அவை முன் வைப்பதால் அவை மதிப்புமிக்க வரலாற்றுச் சான்றுகளாகக் கருதப்படுகின்றன.
  • விஜயநகரப் பேரரசு நிறுவப்பட்டதால் தென்னிந்தியாவின் குறிப்பாக தமிழகத்தின் நிர்வாக, சமூக நிறுவனக் கட்டமைப்புகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.
  • ஒருவேளை தொடக்கத்திலிருந்தே வடக்கே பாமினி சுல்தான்களோடு கொண்டிருந்த பகைமையே அதற்கு காரணமாக இருக்கலாம்.
  • அடிப்படையிலேயே விஜயநகர அரசு ஒரு ராணுவத்தன்மை கொண்ட அரசாகவே உருவானது. பேரரசின் ராணுவத்திற்கு இரண்டு வகையான மூலவளங்கள் தேவைப்பட்டன.
  • அவை நிதி ஆதாரமும் படைகளில் பணியாற்றத் தேவையான மனித வளமுமாகும். கைப்பற்றப்பட்ட பகுதிகளின் குறிப்பாகத் தமிழகத்தின் நிர்வாகத்தை மறுசீரமைப்பதின் மூலமே இத்தேவைகள் நிறைவேற்றப்பட்டன.
  • தமிழ்நாட்டின் பல்வேறு மையங்களில் ‘நாயக்’ என்றழைக்கப்பட்ட இராணுவ அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டனர்.
  • அவர்கள் அரசர்களிடமிருந்து நிலங்களை மானியமாகப் பெற்றனர். இவர்களுக்கு அடுத்த நிலையில் பாளையக்காரர்கள் இருந்தனர். இவர்கள் படைகளுக்குத் தேவையான வீரர்களை வழங்கினர். பல கோட்டைகள் கட்டப்பட்டன. அவைகள் பிராமண படைத்தளபதிகளின் கீழிருந்தன.
  • விஜயநகரப் பேரரசுக்கு விசுவாசமான மூன்று முக்கிய நாயக்க அரசுகள் கி.பி.(பொ.ஆ.) 1500க்கும் – கி.பி. (பொ.ஆ) 1550க்கும் இடைப்பட்ட காலத்தில் மதுரை, தஞ்சாவூர், செஞ்சி ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாயின.
  • விஜயநகர அரசசபை சம்பிரதாய முறைகளில் இவர்களுக்குப் பங்கிருந்தது. பதினாறாம் நூற்றாண்டில் தமிழகத்தில் இது ஒரு புதிய அரசியல் ஒழுங்கானது. இம்மூன்று நாயக்க அரசர்களும் ஏனைய நாயக்கத் தளபதிகளும் வலுவான சமயம் சார்ந்த கோவில்களின் ஆதரவாளர்களாய் இருந்தனர்.
  • இவ்வரசர்களின் ஆதரவில் மூன்று தலைநகரங்களும் சிறந்த பண்பாட்டு மையங்களாய் உருக்கொண்டன. நாயக்க அரசர்கள் இலக்கியங்களுக்குக்ம் நிகழ்த்து கலைகளுக்கும் ஆதரவளித்து மேம்படுத்தினர்.
  • நிலங்களிலிருந்து பெறப்பட்ட வருவாயை இந்நாயக்க அரசுகள் வரிப்பணம் என்ற வடிவத்தில் இல்லாமல் கப்பத்தொகையாகப் பேரரசிற்கு அனுப்பி வைத்தனர்.
  • இப்படியாக மையப் பகுதிகளின் குறிப்பாகத் தமிழகத்தின் மூல வளங்கள் இராணுவத் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டன. இப்படியான நிர்வாக முறை, சோழர்கள் காலத்து பரவலாக்கப்பட்ட உள்ளூர் நிர்வாகத்தையும் கோவில்களையும் உள்ளூர் வளங்களையும் மேலாண்மை செய்துவந்த உள்ளாட்சி நிறுவனங்களை அழித்துவிட்டன.
  • தெலுங்கு நாயக்கர்கள் பணியமர்த்தப்பட்டதன் விளைவாக தெலுங்கு மொழி பேசும் மக்கள் வடக்கேயிருந்து தமிழகத்தில் குடியேறினர். அவர்களுள் படைவீரர்கள், விவசாயிகள், கைவினைஞர்கள், பிராமணர்கள் அடங்குவர்.
  • மொகலாயப் பேரரசு வட இந்தியாவின் சமூகத்தையும் பொருளாதாரத்தையும் மாற்றியமைத்தது. அக்பரின் ஆட்சிக் காலத்தில் மொகலாயரின் ஆட்சி என்னும் குடையின் கீழ் ராஜபுத்திர அரசுகளோடு இணைந்து செயல்படும் கொள்கையைப் பின்பற்றியதன் மூலம் அக்பர் மொகலாய அரசை, ஒருங்கிணைத்து வலுவுள்ளதாக்கினார்.
  • இந்துக்களுக்கு எதிரான பாரபட்சம் மிகுந்த நடவடிக்கைகளை நீக்கினார். தோடர்மால் போன்று நிர்வாகிகளை மிக முக்கியமான அரசு நிர்வாகப் பொறுப்புகளில் பணியமர்த்தினார். பேரரசரின் இவ்வாறான முன்முயற்சிகள் அவருக்குப் பெருவாரியான மக்களின் நம்பிக்கையையும் விசுவாசத்தையும் பெற்றுத்தந்தன.
  • பேரரசின் ஆட்சி அதிகாரம் வடஇந்தியா முழுவதும் பரவியிருந்ததால் அனைத்துப் பகுதிகளும் ஒரே மாதிரியான நிர்வாகக் கட்டமைப்பின் கீழ்க் கொண்டுவரப்பட்டன.
  • மாபெரும் பேரரசின் அரசியல் உறுதித்தன்மை பெருமளவிலான பொருளாதார, வணிக வளர்ச்சிக்கு இட்டுச் சென்றது.
  • தனது அதிகாரத்தின் உச்சத்தில் மொகலாயப் பேரரசானது உலகிலேயே மிகப் பெரிய , செல்வச் செழிப்பைக் கொண்ட அதிகாரமிக்க பேரரசுகளுள் ஒன்றாகத் திகழ்ந்தது.
  • ஔரங்கசீப்பின் ஆட்சியின் போது அவர் மீண்டும் பழமைவாத இஸ்லாமிய நிர்வாக நெறிமுறைகளைப் பின்பற்றியதால் ராஜபுத்திர அரசர்களும் இந்துக்களும் அந்நியப்படுத்தப்பட்டனர்.
  • மேலும் பேரரசு ஓர் அளவைத் தாண்டி விரிவடைந்து விட்டதால் தனது ஆட்சியை கட்டுப்படுத்த முடியாமல் தள்ளாடத் துவங்கியது. இத்தகைய காரணங்களால் பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பேரரசு சரியத் தொடங்கியது.
  • வங்காளம், அயோத்தி, ஹைதராபாத், ஆற்காடு போன்ற மொகலாயப் பேரரசின் மாகாண கவனர்கள் ஔரங்கசீப்பின் மறைவுக்குப் பின்னர் சுதந்திர அரசர்களாக மாறினர். இவ்வரசுகள் தனித்தன்மை வாய்ந்த உள்ளூர்ப் பண்பாடுகளின் (லக்னாவி, ஹைதராபாத் உணவுப் பதார்த்தங்களின் சமையல் மூறை உட்பட) மையங்களாக மாறின.
  • இந்தியாவுக்கு ஐரோப்பியரின் வருகையானது இறுதியாக இந்தியாவில் ஆங்கிலேயரின் காலனியாதிக்கம் உருவாவதில் முடிந்தது.
  • ஐரோப்பியரின் வருகையின் தாக்கம் குறித்த விவாதத்தில் இது முதன்மையாகக் கருதப்படுகின்றது. ஆனால் வேறு சில காரணங்களுக்காகவும் ஐரோப்பியரின் வருகை முக்கியமாகதாகக் கருதப்படுகின்றது.
  • இந்தியாவில் ஐரோப்பிய வர்த்தக நிறுவனங்கலின் எண்ணிக்கை பெருகத் தொடங்கியதைத் தொடர்ந்து இந்தியாவிற்கு வரும் ஐரோப்பியப் பயணிகளின் எண்ணிக்கையும் பெருகியது.
  • அவர்கள் இந்தியாவில் தாங்கள் மேற்கொண்ட பயண அனுபவங்கள் மற்றும் இந்திய வாழ்வின் சகல அம்சங்கள் பற்றியும் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்துள்ள வரலாற்றுக் குறிப்புகளை விட்டுச் சென்றுள்ளனர்.
  • இக்குறிப்புகள் பொருளாதாரம், சமூகம், அரசியல் நிகழ்வுகள் மற்றும் இந்திய நிறுவனங்கள் தொடர்பான செய்திகளைத் தரும் சமகாலச் சான்றுகளாகும்.
  • ஐரோப்பியர்கள் நறுமணப் பொருட்களைத் தேடியே முதலில் இந்தியாவிற்கு வந்தனர். ஆனால் வெகுவிரைவில் ஆசிய நாடுகளிடையே நடைபெறும் வணிகத்தில் குறிப்பாகத் துணி உற்பத்தியில் இந்தியா வகித்த முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்டனர்.
  • இதே சமயத்தில் ஐரோப்பியச் சந்தையில் இந்தியத் துணிகளுக்கு எதிர்பாராத மிகப் பெருந்தேவை ஏற்பட்டது.
  • இம்மனோநிலை அடிக்கடி “இந்தியத் துணி மீது மயக்கம்” எனக் குறிக்கப்பட்டது. இச்சூழல் இந்தியாவில் பெருமளவிலான துணி உற்பத்தியின் விரிவாக்கத்திற்கு இட்டுச் சென்றது.
  • இதோடு இணைந்து வணிகப் பயிர்களான பருத்தி, அவுரி மற்றும் ஏனைய சாயப் பொருட்களின் உற்பத்தியும் பெருகியது. இவற்றின் விளைவாக வணிக நடவடிக்கைகள் பெருகின.

சமூகம்

அ) சாதி

  • சாதி என்பது இந்தியச் சமூகத்தின் மிகவும் தனித்தன்மை வாய்ந்த (மிகவும் விவாதிக்கப்பட்ட) அம்சமாகும்.
  • முதலாவதாக ‘சாதி’ என்ற வார்த்தை தொடர்பான இரண்டு பரிமாணங்களை நாம் புரிந்து கோள்ள வேண்டும். முதலாவதாக சமய நூல்கலில் குறிப்பிடப்பட்டுள்ள நான்கு சமூகப்பிரிவுகள், ‘வர்ணம்’ என குறிப்பிடப்படுவது.
  • நான்கு வர்ண முறைக்கு வெளியே பெருவாரியான மக்கள் இருந்தனர். இப்படியான வர்ணமுறைக்கு வெளியிருப்போரின் எண்ணிக்கை இடைக்காலத்தில் பெருமளவில் பெருகியது.
  • அதிக அளவிலான காடுகளும் மேய்ச்சல் நிலங்களும் அழிக்கப்பட்டு அவை வேளாண் நிலங்களாக மாற்றப்பட்டபோது அந்நிலங்களில் வாழ்ந்து வந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
  • தங்கள் வாழ்க்கைக்காக அவர்கள் நிலமற்ற தொழிலாளர்களாக வேலை செய்தனர். அவர்களில் பலர் கொத்தடிமைகளாய் நிலத்தோடு உழன்றனர்.
  • நடைமுறையில் சாதி என்பது சிக்கலான, முழுமையாக புரிந்துகொள்ள முடியாத, பொருளாதார மற்றும் சமூகப் பரிமாணங்களும் இணைந்த அம்சமாகவே இருந்துள்ளது.
  • பல்வேறு சாதிகள், செங்குத்துப் படிநிலைகளில் பல்வேறு தரவரிசைகளில் வைக்கப்பட வேண்டும் என்கிற அவசியமில்லை ஒரு குறிப்பிட்ட பணி அல்லது தொழிலை செய்பவர்கள் தங்களைத் தனித்தன்மை வாய்ந்த அல்லது வேறுபாடுகளைக் கொண்ட ஒரு கிளைச் சாதையின் பகுதியாகவே கருதுகிறார்கள்.
  • இவ்வாறான தொழில்கள் சேவையோடு தொடர்புடையதாகவோ அல்லது கைவினைத் தொழில்களான நெசவு, மரவேலை, உலோகப்பணியாகவோ இருக்கலாம்.
  • பெரும்பாலான நகரங்களில் ஒரு குறிப்பிட்ட தொழிலைச் செய்யும் அனைவரும் பெரும்பாலும் தங்களுக்கான ஒதுக்கப்பட்ட குடியிருப்புகளில்தான் வாழ்கின்றனர்.
  • பொதுவாகத் தொழில்கள் என்பன பரம்பரையானதாக இருந்துள்ளது. தொழில்நுட்பமும் உற்பத்திமுறை குறித்த அறிவும் வாய்வழி மரபாக ஒரு சந்ததியிடமிருந்து அடுத்த சந்ததியினருக்குக் கற்பிதம் செய்யப்பட்டுள்ளது.
  • தென்னிந்தியாவில் குறிப்பாகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழில் சார்ந்த சாதிகள் குறித்து நம்மிடம் விரிவான செய்திகள் உள்ளன.
  • தொழில் சார்ந்த இச்சாதியினரை வணிக அமைப்புகள் (guilds) அல்லது குழுக்கள் என்று குறிப்பிடுகின்றனர்.
  • இவை தனிப்பட்ட ஒரு தலைவரின் கீழோ அல்லது ஒரு சிறுகுழுவாக அமையப் பெற்றுள்ள தலைவர்களின் கீழோ செயல்படுகிறது.
  • சாதி சார்ந்த அனைத்து நடவடிக்கைகளும் தலைவராலோ அல்லது தலைமைக் குழுவாலோ தீர்மானிக்கப்படுகிறது.
  • கருத்தியல் ரீதியாக ஒரு குறிப்பிட்ட தொழிலைச் செய்து வருபவர் அத்தொழில் சார்ந்த குழுவில் அல்லது அமைப்பில் உறுப்பினராகச் சேர்ந்து கொள்ளலாம் (ஐரோப்பிய கில்டு முறையில் இருந்ததைப் போல்) ஆனால் நடைமுறையில் ஒரு வெளிநபர் இத்தொழில் சார்ந்த சாதி அமைப்பில் உறுப்பினராக முடியாது.
  • தங்கள் சாதியின் தகுதியை மேம்படுத்திக் கொள்வதே பெரும்பாலான சாதிக் குழுக்களின் முக்கியப் பணியாக இருந்தது.
  • பதினான்காம் நூற்றாண்டுக்குப் பின்னர் இப்போக்கு தெளிவாகத் தெரிந்தது. இக்காலப் பகுதியில் உள்ளூர் வளங்களையும் சமூக உறவுகளையும் கட்டுப்படுத்திய மரபுசார்ந்த உள்ளூர் அமைப்புகள் வலுவிழந்தன.
  • சாதிக் குழுக்கள் உள்ளூர் ஆட்சியாளர்களிடம் மனுக்கள் கொடுத்து உயர்நிலையைக் குறிக்கும் அடையாளங்களாக காலணி அணிதல், குடை வைத்துக் கொள்ளுதல், இறுதிச் சடங்கின்போது சில அலங்காரங்களைச் செய்து கொள்ளுதல் போன்றவற்றிற்கு தங்களுக்கும் அனுமதி வழங்கப்பட வேண்டுமெனக் கோரிக்கை வைத்தனர்.
  • ஒவ்வொரு சாதிக் குழுவும் தங்கள் சாதியின் தோற்றத்தை மெய்ப்பிக்கப் புராணங்கள் சார்ந்த கற்பனை கலந்த வம்சாவளியை உருவாக்கினர்.
  • சமூகப்படி நிலைகளில் உயர்ந்த மதிப்புடைய இடம் வழங்கப்பட வேண்டுமென்ற தங்கள் கோரிக்கையை நியாயப்படுத்த இதைப் பயன்படுத்தினர்.
  • காலின் மெக்கன்சியால் சேகரிக்கப்பட்ட பல கையெழுத்துப் பிரதிகளில் இப்படியான வம்சாவளிகளைக் காணலாம்.
  • ஒரு தனிப்பட்ட, வழக்கத்திற்கு மாறான சாதிமுறை தென்னிந்தியாவின் பெரும்பான்மைப் பகுதிகளில் இருந்துள்ளது. பல சாதிக்குழுக்கள் வலங்கை, இடங்கை என பெரும் பிரிவுகளாகப் பிரிந்தன.
  • சாதிப் படிநிலைகளில் வெவ்வேறு இடங்களை வகித்து வந்த சாதிகளில் வணிகர்கள் நிலவுடைமையாளர்கள் தொழில் செய்யும் சாதிகள் எனத் தொடங்கி விவசாயத் தொழிலாளர்கள் வரை பல சாதிகளும் இவ்விரு பிரிவுகளில் அங்கம் வகித்தன.
  • இப்பிரிவானது தென்னிந்தியா முழுவதும் காணப்பட்டாலும் தமிழகப் பகுதியைச் சேர்ந்த வலங்கை, இடங்கை சாதிகள் குறித்து நம்மிடம் விரிவான செய்திகள் உள்ளன.
  • தமிழகத்தின் ஏனைய பகுதிகளிலும் இவ்விரு பிரிவினரிடையே நடைபெற்ற மோதல்கள் குறித்த தகவல்கள் ஆங்கிலேய ஆவணங்களில் விரிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
  • அடிப்படையில் இவ்விரு பிரிவுகளுக்கிடையே நடந்த மோதல்கள் பெருமளவில் வன்முறை சார்ந்ததாய் இருந்தன.
  • இம்மோதல்கள் பொதுவாக உயர்ந்த சடங்கு ஆச்சாரங்களின் மேல் இரு பிரிவினருமே உரிமை கோரியதால் ஏற்பட்டவை ஆகும்.
  • சாதிப் படிநிலைகளில் உயரிய இடத்தை அடைவதன் மூலம் சமூக மரியாதையை உயர்த்திக் கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் வெளிப்பாடே இம்மோதல்கள் ஆகும்.

ஆ) மதம்

  • இடைக்காலத்தில் ஏற்பட்ட பக்தி இயக்கத்தின் காரணமாக பல்வேறு சிந்தாந்தாங்கள் உருவாயின.
  • வித்யாராண்யர் போன்ற குருக்களின் அல்லது சமயத் தலைவர்களின் பெயரில் மடங்கள் நிறுவப்பட்டன. தமிழகத்தில் சைவ சிந்தாந்தம், கர்நாடகத்தில் வீர சைவம் போன்ற சைவ இயக்கங்களும் உருவாயின.
  • மகாராஷ்டிரத்தில் விதோபாவின் பக்தர்களால் உருவாக்கப்பட்ட “வர்க்கரி சம்பிரதயா” என்னும் இயக்கம் 14ஆம் நூற்றாண்டில் எழுச்சி பெற்றது.
  • இந்தியாவில் பௌத்தத்தின் செல்வாக்கு மங்கியது. சங்கரர் மற்றும் ராமானுஜர் மேற்கொண்ட வலுவான பக்தி இயக்க புத்துயிர்ப்பின் விளைவாக சமணமதம் இந்தியாவின் பலபகுதிகளில் தனது பிடிப்பை இழந்தது.
  • இருந்தபோதிலும் குஜராத் மற்றும் மார்வார் பகுதிகளில் குறிப்பாக வணிகச் சமூகங்களிடையே சமனம் செழித்தோங்கியது.
  • இஸ்லாமி சுல்தானியரின் ஆட்சி எல்லைப் பகுதி தென்னிந்தியாவரை விரிவுபட்டதால் இஸ்லாம் நாடு முழுவதும் பரவியது.
  • கிறித்தவ மதத்தைப் பொறுத்தமட்டிலும் எண்ணிக்கையில் குறைவான சில கிறித்தவக் குழுக்கள் தாங்கள் ஏசுவின் சீடர்களில் ஒருவரான புனித தாமஸ் என்பவரால் கேரளாவில் கிறித்தவ சமயத்திற்கு மாற்றப்பட்டதாக உரிமை கொண்டாடினர். ஆனால் போர்ச்சுகீசியர்கள் கேரளாவிற்கு வந்து பின்னர் கோவாவில் நிலை கொண்டபோது கிறித்தவ மதம் வேர் கொண்டது.
  • கோவாவிலேயே உள்ளூர் மக்கள் கிறித்தவ மதத்திற்கு மதம்மார அதுவும் காரணமானது மேலும் சமய நீதிமன்றங்களின் அடக்குமுறையின் கீழ் வற்புறுத்தப்பட்டனர்.
  • மற்றொருபுறத்தில் ஏசுசபையைச் சார்ந்த சமயப் பரப்பாளர்கள் வேறுபகுதிகளில் குறிப்பாக பாண்டிய நாட்டின் கடற்கரை பகுதிகளில் பரதவ சமூக மக்களிடையே சமயப் பரப்புப் பணிகளில் ஈடுபட்டனர். அவர்களின் நன்கறியப்பட்டவர் புனித பிரான்சிஸ் சேவியர் ஆவார்.
  • இவர் தூத்துக்குடிப் பகுதியில் வாழும் பரதவ சமூக (மீன் பிடிக்கும் சமூகம்) மக்கள் கீறித்தவ மதத்திற்கு மாறுவதற்கு கருவியாக இருந்தவராவார். மற்றொருவர் மதுரையில் செயல்பட்ட ராபர்ட் டி நொபிலி ஆவார்.
  • சீக்கிய மதம் பதினைந்து மற்றும் பதினாறாம் நூற்றாண்டுகளில் வடஇந்தியாவில் வாழ்ந்த குருநானக் என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது.
  • பேரரசர் ஔரங்கசீப் மேற்கொண்ட கடுமையான அடக்குமுறையையும் மீறி சீக்கிய மதம் வலுவாக வளர்ச்சியடைந்தது.
  • ஆகவே பதினெட்டாம் நூற்றாண்டி தொடக்கத்தில் இந்தியா முழுவதும் பல மதங்கள் ஒரே நேரத்தில் இருந்துள்ளன. யூதர்களும், ஜொராஸ்டிரியர்களும் (பார்சிகள்) இந்தியாவிற்கு குடிபெயர்ந்தபோது அந்நிய மதங்களும் இந்தியாவிற்குள் வந்தன.
  • பார்சிகள் குஜராத்திலும் யூதர்கள் கேரளத்திலும் குடியேறினர். சூரத் துறைமுகத்திலும், ஆங்கிலேயர் காலத்தில் பம்பாயிலும் பார்சி இன வணிகர்களே பணம்படைத்த முக்கியத்துவம் வாய்ந்த வணிகர்களாய் இருந்தனர்.

பண்பாடு

இலக்கியம், கலை, கட்டடக்கலை

  • சோழர்களின் காலம் குறிப்பிடத்தகுந்த பண்பாட்டு நடவடிக்கைகளின் ஒரு சகாப்தமாகும். இந்த நூற்றாண்டுகளில்தான் முக்கியமான இலக்கியங்கள் எழுதப்பட்டன.
  • மிக நன்கறியப்பட்ட செவ்வியல் புலவரான கம்பர் தமிழில் இராமாயணத்தை எழுதி, அதை முறைப்படி ஸ்ரீரங்கம் கோவிலில் அரங்கேற்றம் செய்தார்.
  • இதைப்போலவே சேக்கிழாரின் பெரியபுராணமும் சிதம்பரம் கோவிலில் அரங்கேற்றம் செய்யப்பட்டது. கலிங்கத்துப் பரணியும், மூவருலாவும் ஏனைய சிறந்த படைப்புகளாகும்.
  • மிகப்பெரும் சமயத் தத்துவ ஆய்வு நூல்களாக சங்கர-பாஷ்யம் மற்றும் ஸ்ரீபாஷ்யம் ஆகியவை எழுதப்பட்டதும் இக்காலத்தில்தான்.
  • சோழர்களின் பெரும் சிறப்பு வாய்ந்த கட்டடக் கலையை தஞ்சாவூர் பெரிய கோவிலிலும் கங்கை கொண்ட சோழபுரத்திலும், தாராசுரத்திலும் நாம் காணலாம். இவை ஒரு சில எடுத்துக்கட்டுகளே.
  • கோவில் சுவர்களிலும் தூண்களிலும் கல் சிற்பங்கள் செதுக்கப்பட்டன. பேரழகும் கலைநுட்பமும் பொருந்திய செப்புச் சிலைகள் மெழுகுஅச்சு (lostwax) முறையில் வார்க்கப்பட்டன.
  • பிரபஞ்ச நடனமாடும் நடராஜர் (சிவன்) சிலை சோழர்கால செப்புச்சிலைகளில் மிகவும் புகழ் பெற்றதாகும்.
  • இஸ்லாமியர் ஆட்சி நிறுவப்பட்டதிலிருந்து ஒரு தனித்தன்மை வாய்ந்த இஸ்லாமியப் பண்பாட்டு மரபு இந்தியாவில் வளர்ச்சி பெற்றது.
  • முஸ்லிம் சுல்தான்கள் டெல்லியிலும் தங்கள் ஆட்சிக்கு உட்பட்ட தென்னிந்தியப் பகுதிகளிலும் பல கோட்டைகளையும் மசூதிகளையும், கல்லறைகளையும் ஏனைய நினைவுச் சின்னங்களையும் கட்டினர்.
  • குறிப்பாக மொகலாயர் காலமானது இந்தியாவின் பண்பாட்டு வரலாற்றில் ஒளிமிக்க காலமாகும்.
  • மொகலாய மன்னர்கள் கலை வளர்ச்சிக்குப் பெரிதும் ஆதரவளிக்கும் புரவலர்களாய்த் திகழ்ந்தனர்.
  • ஷாஜகானாபாத் (டெல்லி), பதேபூர் சிக்ரி ஆகிய முழுமையான நகரங்களையும் தோட்டங்களையும் மசூதிகளையும் கோட்டைகளையும் கட்டி எழுப்பிய மொகலாயர்கள் அவற்றுடன் சேர்த்து எண்ணற்ற நினைவுச் சின்னங்களையும் விட்டுச் சென்றுள்ளனர்.
  • நகர்ப்புறம் சார்ந்த செல்வந்தர்கள் மற்றும் அரச குடும்பத்தைச் சேர்ந்தோரின் ஆதரவோடு அலங்காரக் கலைகளான குறிப்பாக விலைமதிப்பில்லா அரிய கற்கள், ஓரளவு அரிய கற்கள், ஓரளவு அரிய நவரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட தங்க நகைகளைச் செய்யும் கலை செழிப்புற்றது.
  • ஓவியக்கலையும் மொகலாயர் காலத்தில் செழித்து வளர்ந்தது. நுண்ணிய ஓவியங்கள் என்றழைக்கப்படும் இவை நூல்களில் இடம் பெற்றுள்ளன.
  • தனி ஓவியங்கள் செருகேடுகளில் (Albums) இடம்பெற்றன. பெருமளவிலான இலக்கியங்கள் இக்காலத்தில் உருவாயின.
  • குறிப்பாகப் பாராசீக மொழியிலும் எழுதப்பட்டாலும், உருது, இந்தி மற்றும் ஏனைய வட்டார மொழிகளிலும் இலக்கியங்கள் எழுதப்பட்டன.
  • குறிப்பிட்டு சொல்லப்பட வேண்டியது ஒவ்வொரு அரசரைப் பற்றிய அனைத்து விபரங்களும் அடங்கிய வரலாற்று நூல்கள் பாரசீக மொழியில் எழுதப்பட்டன.
  • நிகழ்த்துக் கலைகளில் ஒன்றான இந்துஸ்தானி இசையில் தான்சேன் புகழ்பெற்று விளங்கினார். இதன் மூலம் இக்கலைக்கு அக்பர் அளித்த ஆதரவை அறியலாம்.
  • தென்னிந்தியாவிலும் விஜயநகர அரசர்கலும் அவர்களுடைய போர்த் தளபதிகளும் கோவில் கட்டுமானங்களுக்கு பெரும் ஆதரவு நல்கினர். பல புதிய கோவில்கள் அவர்களால் கட்டப்பட்டன.
  • ஏற்கனவே இருக்கின்ற கோவில்களில் விரிவான அளவில் கல நுணுக்கங்களோடு செதுக்கப்பட்ட பல தூண்களைக் கொண்ட பெரிய மண்டபங்களும் ஓய்வுக் கூடங்களும் கட்டப்பட்டன.
  • கலை வரலாற்று அறிஞர்கள் விஜநகர காலத்து கோவில் சிற்பங்களின் தனித்தன்மை வாய்ந்த பாணியைச் சுட்டுக் காட்டுகின்றனர்.
  • கோவில்களில் நுழைவாயில்களில் மிக நுபமான வகையில் சிற்பங்கள் செதுக்கப்பட்ட மிக உயர்ந்த கம்பீரமான கோபுரங்கள் விஜயநகர அரசர்கள் காலத்தில் எழுதப்பட்டன. கோவில் சுவர்கள் வண்ண ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டன.
  • விஜயநகர நாயக்க அரசர்களின் ஆதரவில் பெருமளவிலான இலக்கியங்கள் குறிப்பாக சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட இலக்கியங்கள் உருவாயின.
  • அரச குடும்ப ஆதரவில் தெலுங்கு இலக்கியம் செழிப்பூற்றது. சமயக் கருத்துக்களை உள்ளடக்கமாகக் கொண்ட பல நூல்கள் இக்காலத்தில் எழுதப்பட்டன.
  • பிரபந்தம் எனப்படும் ஒரு புதிய வகைத் தமிழ் இலக்கியம் இக்காலத்தில் உருவானது.
  • காப்பிய நூலான சிலப்பதிகாரத்திற்கும் திருக்குறளுக்கும் இக்காலத்தில்தான் மிகச் சிறந்த உரைநூல்கள் எழுதப்பட்டன.
  • இக்காலத்தில் வாழ்ந்த கோவிந்த தீட்சிதரின் மகன் வேங்கட மகி கர்நாடக இசைக்குரிய ராகங்களை வகைப்படுத்தினார்.

பொருளாதாரம்

அ) வேளாண்மை

  • இந்தியா அடிப்படையில் ஒரு விவசாய நாடாக இருந்தது. மக்கள் தொகையில் பெரும்பாலோர் கிராமப்புறங்களில் வசித்து வந்தனர்.
  • வேளாண்மையைத் தங்கள் வாழ்வாதாரமாகக் கொண்டிருந்தனர். இந்தியாவில் வடஇந்தியா தென்னிந்தியா ஆகிய இரண்டு பகுதிகளிலும் வேளாண்மை பெருமளவில் நீர்ப்பாசப வசதிகளைச் சார்ந்திருந்தது.
  • மழை மற்றும் நதிகளைத் தொடர்ந்து கால்வாய்களும் கிணறுகளும் நீராதாரங்களாக இருந்தன. அதிக அளவில் நீர் கிடைப்பதற்காக அரசுகள் கால்வாய் கட்டும் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டன.
  • பத்தொன்பதாம் நூற்றாண்டுக்கு முன்னர் இந்தியா ந்றிந்திருந்த மிகப்பெரிய வலைப்பின்னலைப் போன்ற கால்வாய்கள் 14ஆம் நூற்றாண்டில் பெரோஸ் துக்ளக்கால் டெல்லி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கால்வாய்களே ஆகும்.
  • ஏரிகள் குளங்கள் மற்றும் ஏனைய நீர்நிலைகள் நீரை வெளியேற்ற உதவும் மதகுகளோடு கட்டப்பட்டதாலும், தடுப்பணைகள் கட்டப்பட்டதாலும் வேளாண்மை செய்வதற்கு அதிக அளவில் நீர் கிடைத்தது.
  • விவசாயிகள் கிணறுகளை வெட்டிக் கொள்ள ஊக்கப்படுத்தப்பட்டனர்.
  • நீரை மேலே கொண்டுவர நீர் இறைக்குமுறை பயன்படுத்தப்பட்டது. வட இந்தியாவில் கீணறுகளிலிருந்து நீர் இறைக்க ‘பாரசீகச் சக்கரம்’ பயன்படுத்தப்பட்டது.
  • தமிழ்நாட்டின் சோழ அரசர்கள் நீர்ப்பாசனத்திற்காக காவேரி நதியின் கிளை ஆறுகளை இணைத்து வலைப்பின்னலைப் போன்ற கால்வாய்களை அமைத்தனர். நீராதாரத்தை அதிகப்படுத்த ஏரிகளும் குளங்கலும் வெட்டப்பட்டன.
  • இந்திய வேளாண்மையின் மிக முக்கியமான அம்சம், அதிக எண்ணிக்கையில் பல்வகைப்பட்ட பயிர்கள் பயிர்செய்யப்பட்டமைதான்.
  • இக்காலகட்டத்தில் உலகின் ஏனைய நாடுகளின் விவசாயிகளோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் இந்திய விவசாயிகள் அதிக எண்ணிக்கையிலான பயிர்களைப் பற்றிய அறிவைப் பெற்றிருந்தனர்.
  • எண்ணை வித்துக்கள், அவரை வகைகள் ஆகியவைகளோடு அரிசி, கோதுமை, திணை வகைகள் போன்ற பல்வகை உணவுதானியங்களும் விளைவிக்கப்பட்ட.
  • பொதுவான உணவு தானியப் பயிர்களுக்கு மேலாக தென்னிந்தியாவில் பிராந்தியத் தனித்தன்மையோடு மிளகு, இலவங்கம், நறுமணப் பொருள்கள், தென்னை போன்றவை பயிர் செய்யப்பட்டன.
  • பொதுவாக வெவ்வெஏறு பருவகாலங்களில் இருபோக சாகுபடிகள் செய்யப்பட்டன. இது மண்ணின் உற்பத்தி சக்தயைப் பாதுகாத்தது.
  • ஐரோப்பொஇயருடைய வருகைக்குப் பின்னர் சோளமும் புகையிலையும் புதிய பயிர்களாக அறிமுகமாயின.
  • பப்பாளி, அன்னாசி, கொய்யா, முந்திரிப்பருப்பு போன்ற புதிய பழ வகைகளும் தோட்டப்பயிர்களும் அறிமுகமாயின.
  • அவை மேலை நாடுகளிலிருந்து குறிப்பாக அமெரிக்காவிலிருந்து வந்தவையாகும்.
  • உருளைக்கிழங்கு, மிளகாய், தக்காளி போன்றவையும் இந்திய உணவோடு இரண்டறக் கலந்துவிட்டன.
  • மல்பெரி பட்டுப்பூச்சிகளை வளர்த்து பட்டு உற்பத்தி செய்யும் முறை பதினான்கு பதினைந்தாம் நூற்றாண்டுகளில் அறிமுகமானது.
  • ஏழாம் நூற்றாண்டில் உலகிலேயே அதிக அலவிலான பட்டு உற்பத்தி செய்யும் பகுதியாக வங்காளம் திகழ்ந்துள்ளது. இவைகளுக்கு மேலாக ஏனைய வகைப்பட்டுகளும் (தசார் வகை) உற்பத்தி செய்யப்பட்டன.
  • வட இந்திய வேளாண்மை பற்றியும் சாகுபடியின் அளவு பற்றியும் அதிகமான புள்ளி விவரச் சான்றுகள் உள்ளன.
  • 13 மற்றும் 14ஆம் நூற்றாண்டுகள் மற்றும் பதினாறாம் நூற்றாண்டு தொடர்பான புள்ளி விபரங்கள், ஒரு குறிப்பிட்ட அளவிலான நிலத்தின் உற்பத்தித்திறன் 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் இருந்ததைக் காட்டிலும் அதிகம் இருந்ததாக சுட்டிக் காட்டுகின்றன.
  • முந்தைய நூற்றாண்டுகளில் நிலத்தின் மீதான மக்கள் தொகை அழுத்தம் குறைவு என்பது உண்மை.
  • எனவே இப்போதைய அளவைக் காட்டிலும் தலை உற்பத்தி அளவு அதிகம் இருந்துள்ளது என்று வாதிக்கலாம்.
  • எப்படியிருந்த போதிலும் வட இந்தியாவிலும் தென்னிந்தியாவிலும் வேளாண்மை செய்வதற்குப் பெருமளவிலான நிலங்கள் கிடைத்ததைப் புள்ளி விபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
  • அரசர்களின் அதிகமான வரிவசூலுக்கு எதிராக கிராமபுற மக்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறி வேறு பகுதிகளில் குடியேறினர். இவ்வுண்மை அடிக்கடி விளக்கப்பட்டுள்ளது.
  • விஜயநகரப் பேரரசின் சரிவுக்குப் பின்னர் மக்கள் தமிழகத்தின் மேற்கிலும் தெற்கிலும் உள்ள வறண்ட கரிசல் நிலப்பகுதிகளில் குடியேறி அவ்விடங்களில் விவசாயம் செய்யத் தொடங்கினர்.
  • விவசாயிகளின் பொருளாதார நிலையை பொறுத்தமட்டிலும் பெரும்பாலான விவசாயிகள் ஏழ்மை நிலையில் இருந்தனர்.
  • உயிர் பிழைத்திருப்பதற்குத் தேவையான அடிமட்டப் பொருளாதார நிலையில் அவர்கள் இருந்தனர்.
  • 17ஆம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் ஏழை விவசாயிகள் தங்களையும் தங்கள் குடும்பத்தாரையும் அடிமைகளாக விற்ற நிகழ்வுகள் பல நடைபெற்றுள்ளன.
  • டச்சு கிழக்கிந்தியக் கம்பெனியின் கப்பல் பயணிகள் பட்டியலில் அடிமைகளான ஆண்கள் மற்றும் பெண்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
  • இவர்கள் இந்தோனேசியாவில் நறுமணப் பொருட்களை விளைவிக்கும் தீவுகளிலுள்ள தோட்டங்களில் வேலை செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஆ) விவசாயம் அல்லாத உற்பத்தி

  • இந்தியப் பொருளாதாரம் பிரதானமாக வேளாண்மை சார்ந்ததாக இருந்தபோதிலும் பதினேழாம் நூற்றாண்டின் இறுதிவரை உலக அளவில் பெருமளவில் பொருள் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருந்துள்ளது.
  • வேளாண்மை சாராத பொருள் உற்பத்தி என்பது பக்குவப்படுத்தப்பட்ட வேளாண் பண்டங்களையும் குறிப்பதாகும்.
  • சர்க்கரை, எண்ணை, துணிகள் ஆகிய பதப்படுத்தப்பட்ட வேளாண் பண்டங்கள் என்ற வகையின் கீழ் வருபவை.
  • உலோகப்பொருட்கள், நவரத்தினக்கற்கள் , பொன் ஆபரணங்கள் , கப்பல் கட்டுமானம், அலங்கார மர, தோல் பொருட்கள் ஆகியவை கைவினை உற்பத்தி பொருள் பட்டியலில் இடம்பெறுவனவாகும். இவைகளைத் தவிர ஏராளமான சிறு பொருட்களும் உற்பத்தி செய்யப்பட்டன.
  • சந்தையின் இயல்பைப் பொறுத்தே உற்பத்தி திட்டமிடப்பட்டது. உற்பத்தியில் பெரும்பகுதி கிராம அல்லது கிராமப் பகுதிகளின் உள்ளூர் பயன்பாட்டைக் கருத்தில் கொண்டே செய்யப்பட்டது.
  • இப்பொருட்கள் அடிப்படைப் பயன்பாட்டுப் பொருட்களான மட்பாண்டங்கள், உலோகத் தட்டுகள், கலப்பை போன்ற கருவிகள் மரத்தால் செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் முரட்டுத் துணிவகைகளாகவும் இருந்தன.
  • இப்பொருட்கள் வணிகச் சுற்றுக்குள் இடம் பெறவில்லை. உற்பத்தியாளரே தனது உற்பத்திப் பொருட்களைச் சந்தையில் விற்றார். செலாவணி பெரும்பாலும் பண்ட மாற்று முறையாகவே இருந்திருக்கக் கூடும்.
  • பொருளாதார வார்த்தைகளில் எது முக்கியமானதாக இருந்ததென்றால் தனித்திறன் பெற்ற தொழிலாளர்களால் நகர்ப்புறம் சார்ந்த மேட்டுக்குடி மக்கள் மற்றும் கிராமப்புற செல்வந்தர்களுக்கு அதிகம் தேவைப்படும் பொருட்களைச் சிறப்புடன் உற்பத்தி செய்வதாகும்.
  • இவ்வுற்பத்தி வெளிச் சந்தையை மனதில் கோண்டு செய்யப்படுவதாகும். இவ்வகை பொருள் உற்பத்தி மையங்கள் பெரும்பாலும் நகர்ப்புறங்களில் அல்லது நகரங்களின் அருகேயுள்ள கிராமப்புறங்களில் அமைந்திருந்தன.
  • கைவினைஞர்கள் தனியாகவோ அல்லது குடும்ப உறுப்பினர்களுடனோ வீட்டிலிருந்தோ அல்லது தொழிற்கூடத்திலோ வேலை செய்தனர்.
  • மொகலாய அரசில் மிகப்பெரிய தொழிற் கூடங்கள் ‘கர்கானா’ என்ற பெயரில் பல கைவினைஞர்களை பணியிலமர்த்தி செயல்பட்டுள்ளன.

இ) துணி உற்பத்தி

  • உற்பத்தி செய்யப்பட்ட அனைத்து வகைத் துணிகளும் பருத்தி இழைகளால் நெய்யப்பட்டவை ஆகும்.
  • வங்காளத்திலும் குஜராத்திலும் பட்டுத் துணிகள் உற்பத்தி செய்யப்பட்டன. இந்தியாவின் ஒவ்வொரு பகுதியும் பல எண்ணிக்கைகளில் உயர்ந்த குறிப்பிட்ட பயன்பாட்டிர்குரிய பருத்தி இழைத் துணிகளை முரடான துணிவகை முதல் மிக நேர்த்தியான துணிவகைகள் வரை உற்பத்தி செய்தன. இவை அனைத்தும் வெளிச் சந்தைக்காக உற்பத்தி செய்யப்பட்டவை ஆகும்.
  • சாயங்களைப் பொறுத்தமட்டிலும் தாவரங்களிலிருந்து பெறப்பட்ட சாயங்களே பயன்படுத்தப்பட்டன. பருத்தி இழை இரண்டு இயற்கையான சாதகங்களைப் பெற்றிருந்தது. பெரும்பாலும் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் பருத்தி பயிரிடப்பட்டதால், அடிப்படையான மூலப்பொருள் எளிதாகக் கிடைத்தது.
  • இரண்டாவதாக தாவரச் சாயங்களைப் பயன்படுத்தி இழைகளின் மேல் நிரந்தரமாக வர்ணம் ஏற்றும் தொழில்நுட்பம் இந்தியர்களுக்கு ஆரம்ப காலங்களிலேயே தெரிந்திருந்தது.
  • துணிகளைப் பதனம் செய்யாவிடில் சாயங்கள் அவற்றின் மேல் ஒட்டாது. அதற்காக முதலில் துணிகளின் மேல் வேதியியல் பொருட்களைப் பயன்படுத்தி ஒரு மேற்பூச்சு பூசும் நுட்பத்தை இந்தியர்கள் அறிந்திருந்தனர் இந்நுட்பத்தை வேறு உலக நாடுகள் அறிந்திருக்கவில்லை.
  • அவுரி இந்தியாவில் பயிரிடப்பட்ட முக்கியமான சாயப் பயிராகும். இதைத்தவிர ஏனைய சாயப் பயிர்களும் (சிவப்பு வர்ணத்திற்காக பயன்படுத்தப்பட்ட சாய் என்னும் தாவரத்தின் வேர்).
  • சாயத் தயாரிப்புக்குத் தேவையான மரங்களும் அரக்கு போன்ற பிசின்களும் இறக்குமதி செய்யப்பட்டன.
  • இவைகளைத் தவிர மலர்கள், பழங்கள் மற்றும் மஞ்சள் போன்ற பொருட்களைப் பல விகிதக்களில் கலந்து பலவகைப்பட்ட வர்ணங்கள் தயாரிக்கப்பட்டன.
  • துணி உற்பத்தியானது நூல் நூற்றல், நெய்தல், சாயமேற்றுதல், அச்சிடுதல் என பல நிலைகளையும் ஒவ்வொரு நிலைக்கும் தேவைப்படும் நிபுணத்துவம் கொண்ட கைவினைஞர்களையும் கொண்டதாய் இருந்தது.
  • ஒவ்வொரு நிலையும் ஒரு தனித்துவமிக்க தொழிலாகும். நூல் நூற்றல் பாரம்பரியமாகப் பெண்களால் வீடுகளியே செய்யப்பட்டன.
  • ஆசியச் சந்தையில் இந்தியத் துணிகளுக்கு பெரும் தேவை இருந்தது. இந்தியாவிலிருந்து பதினேழாம் நூற்றாண்டில் அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்ட பொருளும் துணிகளேயாகும்.
  • இந்தியத் துணிகளைக் கொடுத்து அதற்கு மாற்றாக நறுமணப் பொருட்களை இந்தோனியத் தீவுகலிலிருந்து பெறுவது மிகவும் லாபகரமானது என்பதை டச்சுக்காரர்களும் ஆங்கிலேயரும் உணர்ந்தனர்.
  • ஐரோப்பியச் சந்தையில் தனிப்பட்ட பயன்பாட்டுக்கும் வீடுகளை அலங்கரிப்பதற்கு பயன்பட்ட மஸ்லின், சின்ட் போன்ற துணிரகங்களுக்கும் பெரும் தேவை ஏற்பட்டது.
  • இதனால் இந்தியத் துணிகளுக்கான தேவை திடீரென அதிகரித்தது. இது வேளாண்துறையின் மேல் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்.

ஈ) வணிகம்

  • மிகப்பெரும் உற்பத்தித் துறையானது முக்கியமாக சொந்தப் பயன்பாட்டிற்காக அல்லாமல் பறிமாற்றத்திற்காகவே பொருட்களை உற்பத்தி செய்தது. ஆகவே பொருள்களைச் சந்தைப்படுத்துவதற்காக இந்தியா விரிவான சந்தையைப் பெற்றிருந்தது.
  • கிராமமே பொருள் உற்பத்தியின் அடிப்படை நிலவியல் அலகாக இருந்தது. முக்கியமாகப் பிழைப்புக்கான பொருளாதார நிலையே நிலவியது.
  • செலாவணி என்பது பண்டமாற்றமாகவே இருந்தது. இதற்கு அடுத்த நிலையில், உற்பத்தியாளர் (வேளாண்மை அல்லது வேளாண்மை அல்லாத) உபரியை உற்பத்தி செய்து அதை அவரே அவர் வாழ்கின்ற பகுதியில் கூடும் வாரச்சந்தையில் விற்பனை செய்தார்.
  • இதைவிடவும் அதிகம் மேம்பட்ட நிலையில் உற்பத்தியாளர் விற்பனை செய்வதிலிருந்து துண்டிக்கப்பட்டு அப்பொறுப்பை வணிக இடைத்தரகர்கள் மேற்கொண்டனர்.
  • இம்மூன்று வகையான சந்தைகளும் இந்தியாவில் ஒரே நேரத்தில் ஏறுமுக வரிசையில் பறிமாற்றச் சுற்றில் செயல்பட்டன.
  • கடைகளோடும் கடைவீதிகளோடும் நகரங்கள் எப்போதும் முக்கிய வணிக மையங்களாகச் செயல்பட்டன. இந்நகரங்கள் நாட்டின் ஏனைய பகுதிகளோடு பல சாலைகலால் இணைக்கப்பட்டிருந்ததால் அவைகள் பிராந்தியங்களுக்கிடையே நடைபெறும் வணிகத்தில் இடைநிலை முனையங்களாகச் செயல்பட்டன.
  • இத்தரைவழி வணிகத்தோடு நாட்டின் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரைப் பகுதி வணிகத்தில் சிறு கப்பல்களும் படகுகளும் பயன்படுத்தப்பட்டன.
  • ஊர் ஊராகச் சென்று வணிகம் செய்வோர் பொதுவாக பஞ்சாரா என்றழைக்கப்பட்ட நாடோடிச் சமூகத்தினர் படையெடுத்து சென்று போரிடும் படைகளுக்குத் தேவையான பொருட்களை சுமந்து சென்று விற்றனர்.
  • நாட்டின் முக்கியத் துறைமுகங்கள் (சூரத், மசூலிப்பட்டினம், கோழிக்கோடு) கடல்சார் வணிக முனையங்களாகவும் பன்னாட்டு வணிக முனையங்களாகவும் செயல்பட்டன.
  • இந்தியப்பெருங்கடலின் குறுக்காக, கிழக்கே சீனா முதல் மேற்கே ஆப்பிரிக்கா வரை விரிந்து பரந்திருந்த கடல் வணிகம் நூற்றாண்டுகளுக்கு செழித்தோங்கியது.
  • இந்தியா இக்கடல் வணிகத்தின் ஒறுங்கிணைந்த பகுதியாக இருந்தது. நிலவியல் ரீதியாக இந்தியப்பெருங்கடலின் நடுவே இந்தியா அமைந்திருப்பதே இதற்குக் காரணமாகும்.
  • 17ஆம் நூற்றாண்டு வரை சீனக்கப்பல்கள் கேரளக் கடற்கரையைத் தாண்டி வர எப்போதாவது முயன்றன. அதுபோல மேற்கே இருந்து வரும் கப்பல்கள் மலாக்காவைத் தாண்டி (மலேசியாவில் உள்ளது) கிழக்கே வருவதில்லை.
  • ஆகவே மலாக்கா, கோழிக்கோடு போன்ற துறைமுகங்கள் சிறப்புவாய்ந்த இப்பிராந்திய வணிகத்தில் இடைநிலை முனையங்களாக அல்லது பொருள் வைக்கும் இடங்களாகச் செயல்பட்டன.
  • 17ஆம் நூற்றாண்டில் குஜராத்தில் சூரத், கோல்கொண்டா ஆந்திராவில் மசூலிப்பட்டிணம் வங்காளத்தில் சிட்டகாங், சோழமண்டலக் கடற்கரையில் புலிக்காட் (பழவேற்காடு) நாகப்பட்டிணம் கேரளக் கடற்கரையில் கோழிக்கோடு ஆகியன ஆசிய வணிகத்தின் முக்கியத் துறைமுகங்களாகும்.
  • துணி, மிளகு, விலைமதிப்புமிக்க நவரத்தினக்கற்கல் சற்றே விலைமதிப்புக் குறைந்த நவரத்தினக் கற்கள்-முக்கியமாக வைரம் அதுவும் இந்தியாவில் மட்டுமே கிடைக்கக் கூடிய வைரம் ஆகியவற்றை ஏற்றுமதி செய்ததில் இந்தியாவும் ஒரு முக்கிய ஏற்றுமதி செய்ததில் இந்தியாவும் ஒரு முக்கிய ஏற்றுமதி நாடாக இருந்ததது.
  • மேலும் ஒட்டு மொத்த ஆசியப் பகுதியில் பெருமளவில் தேவைப்பட்ட இரும்பையும் எஃகையும் ஏற்றுமதி செய்த நாடுகளில் இந்தியா முக்கியமான ஒன்றாகும்.
  • பல்வகைப்பட்ட ஏற்றுமதிகளை மதிப்பீடு செய்ய டச்சுக் கிழக்கிந்தியக் கம்பெனியின் சரக்குப்பட்டியலை நாம் ஒரு சான்றாகக் கொண்டால் இந்தியாவின் ஒட்டு மொத்த ஏற்றுமதில் 90% விழுக்காடுகள் துணியாகவே இருக்கும்.
  • சீனாவிலிருந்து ஏனைய கீழ்திசை நாடுகளிலிருந்தும் பட்டு, சீன செராமிக் ஓடுகள், தங்கம், நறுமணப் பொருட்கள், நறுமண மரங்கள், கற்பூரம் ஆகியவை இறக்குமதி செய்யப்பட்டன.
  • பட்டு, மருந்து வகைகள், சாய மரங்கள் சர்க்கரை ஆகியன பாரசீகத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முக்கியப் பொருட்களாகும்.
  • தங்கம், தந்தம் ஆகியவை ஆப்பிரிக்காவிலிருந்து பெறப்பட்டன. அடிமைகளும் ஆப்பிரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டனர்.
  • 14ஆம் நூற்றாண்டு வரை தென்னிந்தியாவில் வணிகக் கூட்டு நிறுவனங்களே [வணிகர்களின் குழுக்கள், (Guild)] பன்னாட்டு வணிகத்தில் ஈடுபட்டிருந்தன. அவைகளில் இரண்டு நன்கறியப்பட்டவை.
  • ஐநூற்றுவர். இவர்கள் ஐஹோலைத் தலைநகராகக் கொண்டவர்கள்.
  • மணிக்கிராமத்தார். இவ்வமைப்புகள் பல்வேறு வணிகக் குழுக்களையும் நகரம் என்ற அமைப்பைச் சேர்ந்த கூட்டு நிறுவனங்களையும் உள்ளடக்கியதாகும்.
  • 13ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் இதுவரை கோவில் நிர்வாகத்தை மேலாண்மை செய்து வந்த கிராமங்கள் மற்றும் நகரங்களைச் சேர்ந்த உள்ளூர் அமைப்புகள் வலுவிழந்தன.
  • இச்சூழலில் இப்பொறுப்புக்களை தங்கள் வசம் எடுத்துக் கொண்ட இவ்வணிகக் குழுவினர், தங்கள் உறுப்பினர்களிடமிருந்து பெற்று வந்த வரியை உயர்த்தி கோவில்களுக்குக் கொடையாக வழங்கினர்.
  • 15ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் இவ்வணிகக் குழுக்களைப் பற்றிய குறிப்புகளில்லை, தனிப்பட்ட பணம் படைத்த வணிகர்கள் கடல் வணிகத்தை தங்கள் வசமாக்கிக் கொண்டனர்.
  • இந்தியா முழுவதும் நடைபெற்ற வணிகத்தை மேலாண்மை செய்யவும் , முறைப்படுத்தவும் இணைந்து பணியாற்றக் கூடிய பெரும் எண்ணிக்கையிலான வணிகர்கள் தேவைப்பட்டனர்.
  • இப்பொழுது இருப்பது போல் வணிகர்கள் பல்வேறு மட்டங்களில் செயல்பட்டனர். மிகச் சிறிய வியாபாரிகளும், பெட்டிக்கடைக்காரர்களும் இருந்தனர்.
  • ஒரு பொருளை மட்டும் விற்கும் வணிகர்கள் இருந்தனர். இடைத்தரகர்கள் இருந்தனர். இது போன்ற வரிசையின் உச்சியில் பணம்படைத்த, அதிகாரம்மிக்க ஏற்றுமதி இறக்குமதியில் ஈடுபட்டிருந்த பெரு வணிகர்கள் இருந்தனர்.
  • இவர்கள் தாங்கள் ஏற்றுமதி செய்யும் வணிகப் பொருட்களைக் குறிப்பாகத் துணியையும் ஏனைய பொருட்களையும் உள்நாட்டுப் பகுதிகளிலிருந்து கொள்முதல் செய்வதற்கு உள்ளூர் வணிகர்களையும் தரகர்களையும் பணியில் அமர்த்தினர்.
  • இவ்வாறான மிகப்பெரிய அளவிலான வணிகம் நிதி மற்றும் வங்கிச் சேவைகள் கிடைத்தால்தான் செயல்படமுடியும்.
  • வங்கியாளர்களும் பணம் மாற்றுவோரும் பெரு நகரங்களில் செயல்பட்டனர். உறுதிமொழிப் பத்திரங்களும் உண்டிகளும் (இன்றைய காசோலை, பணவரைவு போன்றவை) நகரங்களிடையே பணப்பரிமாற்றத்திற்காகப் பயன்படுத்தப்பட்டன,
  • பணம்படைத்த வணிகர்கல் வெளிநாட்டுத் துறைமுகங்களில் தங்கள் முகவர்களை (பெரும்பாலும் தங்கள் உறவினர்களை) நியமித்திருந்தனர்.
  • பாராசீக வளைகுடாவிலும் செங்கடலிலும் இருந்த அனைத்து துறைமுகங்களிலும் குஜராத்தைச் சேர்ந்த வணிகர்கள் இருந்தனர்.
  • இதைப்போலவே சோழ மண்டல வணிகர்கள் மலாக்கா, பர்மா, தாய்லாந்து ஆகிய நாடுகளிலுள்ள துறைமுகங்களில் செயல்பட்டனர்.
  • மேற்குறிப்பட்ட பணம்படைத்த செல்வாக்கு மிக்க வனிகர்களின் சேவைகள் இல்லாமல் இந்தியாவில் தங்களால் செயல்படமுடியாது என்பதை ஐரோப்பிய வணிக நிறுவனங்கள் உணர்ந்தன.
  • ஆகவே இந்நிறுவனங்கள் இந்திய வணிகர்களோடு தங்களுக்குத் தேவையான பொருட்களைப் பெற்றுத்தரவும் தாங்கள் ஐரோப்பாவிலிருந்து இறக்குமதி செய்தவற்றை விற்றுத்தரவும் ஒப்பந்தங்களை மேற்கொண்டன.
  • ஐரோப்பிய வணிக நிறுவனங்கள் ஏற்படுத்திக் கொடுத்த வணிக வாய்ப்புகளைப் பயன்படுத்தி இந்திய வணிகர்கள் பயனடைந்தனர். ஆனால் இந்தச் சமன்பாடு 18ஆம் நூற்றாண்டிலிருந்து மாறத் துவங்கியது.
  • ஒப்பந்த அடிப்படையில் இந்திய வணிகர்கள் ஐரோப்பியர்களுக்குத் தேவையான துணி மற்றும் ஏனைய பொருட்களை விநியோகித்து வந்தனர்.
  • ஆனால் ஒரு கட்டத்தில் தேவைப்பட்ட அளவிற்கு பொருளுற்பத்தி செய்யத் தேவையான உள்ளூர் ஆதாரங்கள் இல்லாமல் போனது. இதே நேரத்தில் அரசியல் குழப்பத்தின் காரணமாக அனைத்துப் பொருளாதார நடவடிகைக்களும் சீர் குலைந்தன.
  • இதன் விளைவாகப் பெரும்பாலுமான வணிகர்கள் வறியவர்கள் ஆயினர். வணிகச் சமூகத்தின் பொருளாதார ஆற்றல் குறைந்தது.

நகரமயமாதல்

  • இடைக்காலத்தில் இந்தியாவிற்கு வருகை தந்த வெளிநாட்டுப் பயணிகள் பல்வேறு அளவுகளில் நகரங்களும் சிறுநகரங்களும் சந்தை நகரங்களும் இந்தியா முழுவதும் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளனர்.
  • ஆனாலும் இந்தியா அடிப்படையில், கிராமியத் தன்மை கொண்டதாகவே இருந்தது. மொத்த மக்கள் தொகையோடு ஒப்பிடுகையில் நகர்ப்புறங்களில் வாழ்ந்த மக்கள் தொகை கூறைவாகவே இருந்தது.
  • இருந்தாலும் அதனுடைய பொருளாதார, பண்பாட்டு முக்கியத்துவம் அதனுடைய வடிவத்தைக் காட்டிலும் சிறப்பாகவே இருந்தது.

நகரமயமாக்களை இயக்கிய காரணிகள் யாவை:

  • நகரங்களும் சிறுநகரங்களும் தங்களின் வெவ்வேறான பொருளாதாரப் பங்கினைப் பூர்த்தி செய்தன. பெரிய நகரங்கள் பொருள் உற்பத்தி, சந்தை, நிதி மற்றும் வங்கிச்சேவைகள் ஆகியவற்றின் மையக்களாகத் திகழ்ந்தன.
  • அவைகள் விரிவான அளவில் வலைப்பின்னலைப்போல் அமைக்கப்பட்டிருந்த போக்குவரத்துச் சாலைகள் சந்திக்கின்ற இடங்களில் அமைந்திருந்தன,.
  • இச்சாலைகள் இந்நகரங்களை நாட்டின் ஏனைய பகுதிகளோடு இணைத்தன. சிறுநகரங்கள் உள்ளூர் சந்தை மையங்களாக செயல்பட்டு அருகேயிருந்த கிராம உட்பகுதிகளை இணைத்தன.
  • நாட்டின் தலைநகரங்களும் (எடுத்துக்காட்டாக டெல்லி, ஆக்ரா) பிராந்திய நகரங்களும் (பாட்னா, அகமதாபாத், லக்னோ) அரசியல் மற்றும் நிர்வாக மையங்களாகச் செயல்பட்டன.
  • முக்கியப் புனிதத்தலங்களான பனாரஸ் போன்றவையும் நகரங்களாக வளர்ச்சி அடைந்தன.
  • ஏனெனில் பக்தர்களின் தொடர் வருகை அங்கே ஒரு சந்தையை உருவாக்க அது உற்பத்தியையும் வணிகத்தையும் ஊக்குவித்தது.
  • தென்னிந்தியாவில் முக்கியமாகத் தமிழகத்தில் நகரமயமாதலும் கோவில்களும் கைகோர்த்து நடந்தன,
  • கோவில்கள் பெரிய அளவிலான பொருளாதார மையங்களாகின. பல்வகைப்பட்ட பொருட்களும் சேவைகளும் அவற்றின் செயல்பாட்டிற்குத் தேவைப்பட்டன.
  • தங்களுடைய மதம் சார்ந்த சேவை நடவடிக்கைகள், மடப்பள்ளி மற்றும் ஏனைய பணிகளுக்காக அதிக எண்ணிக்கையில் மக்களை வேலையில் அமர்த்திக் கொண்டன.
  • கோவில்களுக்கு வழிபட வரும் பக்தர்களுக்கு பல பொருட்களும் சேவைகளும் தேவைப்பட்டதால் கோவில் நகரங்கள் சந்தை மையங்களாகின.
  • விஜயநகர அரசர்கள் காலத்தில் தமிழ்நாடு முழுவதிலும் அதிக எண்ணிக்கையில் கோவில்கள் எழுப்பப்பட்டபோது நகரமயமாதலின் போக்கு மேலும் அதிகரித்தது.
  • இவ்விடத்தில் ஒரு செய்தியை நாம் கட்டாயம் நினைவில் கொள்ள வேண்டும். நகர்ப்புறங்களுக்கும் கிராமப்புறங்களுக்கும் இடையேயுள்ள வேறுபாடுகள் இன்றிருப்பதைப் போல இடைக்காலத்தில் இல்லை.
  • பெரும்பாலான நகர மையங்கள் கிராமப்புறப் பண்புகளைக் கொண்டிருந்தன. நகரங்களுக்குள்ளேயே பயிர்களுடன் கூடிய வேளாண் நிலங்களை சாதாரணமாகக் காணமுடிந்தது.
  • வட இந்தியாவிலும் தென்னிந்தியாவிலும் இடைக்காலத்தில் பெரும்பாலான பெரிய நகரங்களும், வணிக மையங்களும், கால ஓட்டத்தில் தங்கள் முக்கியத்துவத்தை இழந்துவிட்டாலும், இன்றும் இருப்பதை காண்பது மனதிற்கு மகிழ்ச்சியளிக்கிறது.

முடிவுரை

இந்திய வரலாற்றில் எழுநூற்றுக்கும் மேற்பட்ட ஆண்டுகளை உள்ளடக்கிய இடைக்காலம் அரசியல் பரப்பில் மாபெரும் மாற்றங்கள் நடந்த காலப்பகுதியாகும். அம்மாற்றங்கள் நாட்டின் சமூகப் பொருளாதாரத்தளங்களிலும் மாற்றங்களை ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!