Book Back QuestionsTnpsc

இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள் Book Back Questions 7th Social Science Lesson 1

7th Social Science Lesson 1

1] இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

ஓளரங்கசீப்பின் அவைக்கள வரலாற்று அறிஞராக இருந்த காஃபிகானின் புகழ் பெற்ற கூற்று உங்களுக்குத் தெரியுமா? “விசுவாசம் உள்ளவராக இருத்தல், லாப நோக்கம் இன்மை, ஆபத்துக்கு அஞ்சாமை, ஒரு தலை பட்சமாக இல்லாதிருத்தல், விருப்பு வெறுப்பின்றி இருத்தல், நண்பருக்கும் அந்நியருக்குமிடையே வேற்றுமை பாராமை, நேர்மையுடன் எழுதுதல் ஆகியவை வரலாற்று ஆசிரியரின் கடமைகள்” என அவர் கூறியுள்ளார்.

சான்றுகளை வகைப்படுத்துதல்: முதல்நிலைச்சான்றுகள், இரண்டாம் நிலைச் சான்றுகள்.

ஒரு ஜிட்டல் 3. 6 வெள்ளி குன்றிமணிகளைக் கொண்டதாகும் 48 ஜிட்டல்கள் 1 வெள்ளி டங்காவுக்குச் சமமாகும்.

தபகத்-அராபியச்சொல்-தலைமுறைகள் அல்லது நூற்றாண்டுகள் என்று பொருள். தஜீக்-பாராசீகச் சொல்-சுயசரிதை எனப்பொருள். தாரிக் அல்லது தாகுயூக்-அராபியச் சொல் – இதன் பொருள் வரலாறு என்பதாகும்.

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. ————— என்பவை பாறைகள், கற்கள், கோவில் சுவர்கள், உலோகங்கள் ஆகியவற்றின் கடினமான மேற்பரப்பின் மீது செதுக்கப்படும் வாசகங்களாகும்.

(அ) காலவரிசையிலான நிகழ்வுப்பதிவுகள்

(ஆ) பயணக்குறிப்புகள்

(இ) நாணயங்கள்

(ஈ) பொறிப்புகள்

2. கோவில்களுக்குக் கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள் ————– ஆகும்.

(அ) வேளாண்வகை

(ஆ) சாலபோகம்

(இ) பிரம்மதேயம்

(ஈ) தேவதானம்

3. ————– களின் காலம் பக்தி இலக்கியங்களின் காலமென அறியப்படுகிறது.

(அ) சோழர்

(ஆ) பாண்டியர்

(இ) ராஜபுத்திரர்

(ஈ) விஜயநகர அரசர்கள்

4. முதல் டெல்லி சுல்தான் பற்றிய தகவல்களைக் கூறும் நூல் ————– ஆகும்.

(அ) அயினி அக்பரி

(ஆ) தாஜ்-உல்-மா-அசிர்

(இ) தசுக்-இ-ஜாஹாங்கீரி

(ஈ) தாரிக்-இ-பெரிஷ்டா

5. அராபியாவில் பிறந்து இந்தியாவிற்கு வந்த மொராக்கோ நாட்டு அறிஞர் —————- ஆவார்.

(அ) மார்க்கோபோலோ

(ஆ) அல்-பரூனி

(இ) டோமிங்கோ பயஸ்

(ஈ) இபன் பதூதா

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. ————– கல்வெட்டு ஒரு பிரம்மதேயக் கிராமத்தின் நிர்வாகம் குறித்து விவரித்துக் கூறுகிறது.

2. தன்னுடைய தங்க நாணயங்கள் மீது பெண் தெய்வமான இலட்சுமியின் உருவத்தைப் பதித்து தன்னுடைய பெயரையும் பொறித்தவர் —————- ஆவார்.

3. ஒரு ————– என்பது 3. 6 வெள்ளி குன்றிமணிகளைக் கொண்டிருந்தது.

4. அடிமை வம்சத்தைச் சேர்ந்த சுல்தான் நஸ்ருதீன் மாமூதுவால் ஆதரிக்கப்பட்டவர் —————- ஆவார்.

5. கி. பி. 1420 இல் விஜயநகருக்கு வருகைபுரிந்த இத்தாலியப் பயணி —————- ஆவார்.

III. பொருத்துக:

அ – ஆ

1. கஜீராகோ – அ) ஒடிசா

2. கொனாரக் – ஆ) ஹம்பி

3. தில்வாரா – இ) மத்தியப்பிரதேசம்

4. விருப்பாக்சா – ஈ) ராஜஸ்தான்

IV. சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக:

1. பள்ளிச்சந்தம் என்பது சமண சமய நிறுவனங்களுக்குக் கொடையாக வழங்கப்பட்ட நிலமாகும்.

2. நாணயங்களிலுள்ள உலோகங்களின் கலவை பேரரசின் அரசியல் நிலை குறித்த தகவல்களை நமக்கு வழங்குகின்றன.

3. தாமிரத்தின் விலை அதிகமாக இருந்ததால் அரசு ஆணைகளையும் அரசவை நிகழ்வுகளையும் பதிவு செய்வதற்கு குறைந்த செலவிலான பனையோலைகளும் காகிதமும் பயன்படுத்தப்பட்டன.

4. டோமிங்கோ பயஸ் எனும் போர்த்துகீசியப்பயணி கி. பி. 1522இல் சோழப்பேரரசுக்கு வருகை புரிந்தார்.

V. பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

1. கூற்று: முகமது கோரி தனது தங்க நாணயங்களில் பெண் தெய்வமான இலட்சுமியின் உருவத்தைப் பதிப்பித்தார்.

காரணம்: இத்துருக்கிய படையெடுப்பாளர் மத விசயங்களில் தாராள மனப்பான்மை கொண்டவராய் இருந்தார்.

(அ) காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே

(ஆ) காரணம் கூற்றக்கான சரியான விளக்கம் இல்லை

(இ) கூற்று தவறு, காரணம் சரி

(ஈ) கூற்று, காரணம் இரண்டுமே தவறு

2. தவறான இணையைக் கண்டறிக:

1. மதுரா விஜயம் – கங்காதேவி

2. அபுல் பாசல் – அயினி அக்பரி

3. இபன் பதூதா – தாகுயூக்-இ-ஹிந்த்

4. அமுக்தமால்யதா – கிருஷ்ணதேவராயர்

3. பொருந்தாததை வட்டமிடுக:

பொறிப்புகள், பயணக்குறிப்புகள், நினைவுச் சின்னங்கள், நாணயங்கள்.

விடைகள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. பொறிப்புகள், 2. தேவதானம், 3. சோழர், 4. தாஜ்-உல்-மா-அசிர், 5. இபன் பதூதா

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. உத்திரமேரூர், 2. முஹம்மது கோரி, 3. ஜிட்டல், 4. மின்கஜ் உஸ் சிராஜ், 5. நிக்கோலோ கோண்டி

III. பொருத்துக:

1. இ, 2. அ, 3. ஈ, 4. ஆ

IV. சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக:

1. சரி, 2. பொருளாதார நிலை, 3. சரி, 4. விஜயநகர பேரரசு

V. பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

1. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே, 2. இபன் பதூதா- தாகுயூக்-இ ஹிந்த், 3. பயணக்குறிப்புகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!