Book Back QuestionsTnpsc

இந்தியாவின் சர்வதேச உறவுகள் Book Back Questions 10th Social Science Lesson 22

10th Social Science Lesson 22

22] இந்தியாவின் சர்வதேச உறவுகள்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

சீனாவும் ரஷ்யாவும் அதிக எண்ணிக்கையிலான அண்டை நாடுகளுடன் தனது எல்லையைப் பகிர்ந்து கொள்கினறன.

சிந்துவெளி நாகரிக காலம் முதல் இந்தியாவும் ஆப்கானிஸ்தானும் பன்முகத்தன்மையையும் மிக ஆழமான நட்புறவையும் கொண்டிருந்தன. கனிஷ்கருடைய ஆட்சியின் போது ஏராளமான இந்திய சமய பரப்புக் குழுக்கள் சீனா, மத்திய ஆசியா மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுக்குத் தங்கள் மதத்தைப் பரப்பச் சென்றனர். பலுசிஸ்தான் (தற்காலத்திய பாகிஸ்தானின் எல்லைப்புற மாகாணம்) பகுதியைச் சார்ந்த கான் அப்துல் கபார்கான் இந்திய விடுதலைப் போராட்ட இயக்கத்தின் முக்கியத் தலைவரும் இந்திய தேசிய காங்கிரசின் தீவிர ஆதரவாளரும் ஆவார்.

குரு பத்மசம்பவா எனும் புத்த துறவி இந்தியாவிலிருந்து பூடானுக்குச் சென்றார். அங்கு தனது செல்வாக்கை ஏற்படுத்தி புத்த சமயத்தைப் பரப்பியதன் மூலம் இரு நாட்டு மக்களிடையே பாரம்பரியத்தை உறுதிப்படுத்தினார்.

இந்தியாவிற்குச் சொந்தமான டீன்பிகா (Teen Bigha) என்ற பகுதி மேற்கு வங்காளம் மற்றும் வங்காளதேசத்திற்கு இடையேயான எல்லையில் உள்ளது. குறுகலான இப்பாதை 2011ஆம் ஆண்டு வங்காள தேசத்திற்குச் குத்தகைக்கு விடப்பட்டது.

மக்மகான் எல்லைக்கோடு – இந்தியா, சீனா மற்றும் பூடானின் கிழக்குப் பகுதி ஆகிய பகுதிகளுக்கு இடையேயான எல்லைக்கோடு ஆகும். இது 1914ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் இந்தியா, திபெத் மற்றும் சீனா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. பிரிட்டிஷ் இந்தியாவின் சார்பில் இந்தியாவிற்கான செயலாளர் ஆர்தர் ஹென்றி மக்மகான் இக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.

கட்டுப்பாடுக் கோடு: 1949ஆம் ஆண்டு தீர்மானிக்கப்பட்ட போர் நிறுத்தக் கோடு 1972ஆம் ஆண்டிற்குப் பின்னர் எல்லைக் கட்டுப்பாடுக் கோடு என அழைக்கப்பட்டது. இது 1972ஆம் ஆண்டின் சிம்லா ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்றுக்கொள்ளப்பட்ட எல்லையாகும். இக்கோடு பிரிவினை செய்யப்பட்ட போது ராட்க்ளிஃப் கோடு (RadCliffe Line) என்று அழைக்கப்பட்டது (ராட்க்ளிஃப் என்பவர் எல்லை ஆணையத்தின் தலைவராக இருந்தார்). இக்கோடு தற்போது கட்டுப்பாடுக் கோடு என அழைக்கப்படுகிறது.

அசோகர் புத்த மதத்தைப் பரப்புவதற்காக அவரது மகன் மகிந்தாவையும் மகள் சங்கமித்திரையையும் இலங்ககைக்கு அனுப்பினார். சோழ அரசர்களான முதலாம் இராஜராஜன் மற்றும் முதலாம் இராஜேந்திரன் ஆகியோர் இலங்கையின் வடபகுதியைக் கைப்பற்றினர்.

உலகின் மிகப் பழமையான கடல் வர்த்தக பாதைகளில் ஒன்று சுமேரியாவில் இருந்து பஹ்ரைன் வழியாக மெலுக்கா என்று அழைக்கப்பட்ட சிந்துவெளி நாகரிகம் வரை அமைக்கப்பட்டிருந்தது.

பிரிக்ஸ் (BRICS) என்ற சொல் ஜிம் ஓ’ நீல் (Jim O’Neill) என்ற பிரபலமான பிரிட்டிஷ் பொருளாதார நிபுணரால் உருவாக்கப்பட்டது. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் 2050ஆம் ஆண்டு வாக்கில் ஆறு தொழில் மயமாக்கப்பட்ட நாடுகளைவிட டாலர் மதிப்பில் பெரிய நாடுகளாக உருவாகும் என்றும் கடந்த 300 ஆண்டுகளின் அதிகாரப் போக்கு முற்றிலும் மாறுபடும் என்றும் அவர் கணித்தார்.

OPEC இலச்சினை: இது 1969ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒரு சர்வதேச வடிவமைப்புப் போட்டியின் மூலம் இச்சின்னமானது தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆஸ்திரிய வடிவமைப்பாளர் ஸ்வோபோடா இதை வடிவமைத்து போட்டியில் வென்றார். இது இந்த அமைப்பினுடைய பெயரின் வெவ்வேறு எழுத்துக்களை (OPEC) ஒரு வட்டமான வடிவமைப்பில் காணலாம்.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. மக்மகான் எல்லைக்கோடு எந்த இரு நாடுகளுக்கும் இடையே உள்ள எல்லை ஆகும்?

(அ) பர்மா-இந்தியா

(ஆ) இந்தியா-நேபாளம்

(இ) இந்தியா-சீனா

(ஈ) இந்தியா-பூடான்

2. இந்தியா பின்வருவனவற்றுள் எந்த அமைப்பில் உறுப்பினராக இல்லை?

(1) ஜி 20

(2) ஏசியான் (ASEAN)

(3) சார்க் (SAARC)

(4) பிரிக்ஸ் (BRICS)

(அ) 2 மட்டும்

(ஆ) 2 மற்றும் 4

(இ) 2, 4 மற்றும் 1

(ஈ) 1, 2 மற்றும் 3

3. ஒபெக் (OPEC) என்பது

(அ) சர்வதேச காப்பீட்டு நிறுவனம்

(ஆ) ஒரு சர்வதேச விளையாட்டுக் கழகம்

(இ) எண்ணெய் ஏற்றுமதி நிறுவனங்களின் அமைப்பு

(ஈ) ஒரு சர்வதேச நிறுவனம்

4. இந்தியா தனது மிக நீண்ட நில எல்லையை எந்த நாட்டோடு பகிர்ந்து கொள்கிறது?

(அ) வங்காளதேசம்

(ஆ) மியான்மர்

(இ) ஆப்கானிஸ்தான்

(ஈ) சீனா

5. பின்வருவனவற்றைப் பொருத்தி கீழே கொடுக்கப்பட்ட குறியீடுகளிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

(i) சல்மா அணை – 1. வங்காளதேசம்

(ii) பராக்கா ஒப்பந்தம் – 2. நேபாளம்

(iii) சுக்கா நீர்மின்சக்தி திட்டம் – 3. ஆப்கானிஸ்தான்

(iv) சாரதா கூட்டு மின்சக்தித் திட்டம் – 4. பூடான்

(அ) 3 1 4 2

(ஆ) 3 1 2 4

(இ) 3 4 1 2

(ஈ) 4 3 2 1

6. எத்தனை நாடுகள் இந்தியாவுடன் தன் எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன?

(அ) 5

(ஆ) 6

(இ) 7

(ஈ) 8

7. எந்த இரண்டு தீவுநாடுகள் இந்தியாவின் அண்டை நாடுகள் ஆகும்?

(அ) இலங்கை மற்றும் அந்தமான் தீவுகள்

(ஆ) மாலத்தீவு மற்றும் லட்சத் தீவுகள்

(இ) மாலத்தீவு மற்றும் நிக்கோபார் தீவு

(ஈ) இலங்கை மற்றும் மாலத்தீவு

8. எந்த இந்திய மாநிலம் மூன்று நாடுகளால் சூழப்பட்டுள்ளது?

(அ) அருணாச்சலப்பிரதேசம்

(ஆ) மேகாலயா

(இ) மிசோரம்

(ஈ) சிக்கிம்

9. எத்தனை மாநிலங்கள் நேபாளத்துடன் தங்கள் எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன?

(அ) 5

(ஆ) 4

(இ) 3

(ஈ) 2

10. சுதந்திரமடைந்த பாகிஸ்தானுக்கான எல்லைகளை வகுத்தவர்

(அ) மவுண்ட்பேட்டன் பிரபு

(ஆ) சர் சிரில் ராட்க்ளிஃப்

(இ) கிளமன்ட் அட்லி

(ஈ) மேற்கூறிய ஒருவருமில்லை

கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. இமயமலையில் உள்ள ஒரு சிறிய முடியாட்சி நாடு __________ ஆகும்

2. இந்தியா, தென்கிழக்காசியாவிற்குள் செல்வதற்கான ஒரு நுழைவு வாயிலாக __________ இருக்கிறது.

3. இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான இடைப்படு நாடு ____________ ஆகும்.

4. இந்தியாவிற்குச் சொந்தமான __________ என்ற பகுதி மேற்கு வங்காளம் – வங்காளதேச எல்லையில் அமைந்துள்ளது

5. இடிமின்னல் நிலம் என்று அறியப்படும் நாடு __________ ஆகும்.

6. இந்தியாவும் இலங்கையும் ___________ ஆல் பிரிக்கப்படுகின்றன.

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

1. இந்தியா மற்றும் மியான்மரின் கலடன் போக்குவரத்துத் திட்டம் பின் வரும் போக்குவரத்து முறைகளில் எந்த முறையில் அமைக்கப்பட்டுள்ளது?

1. சாலை

2. ரயில்வழி

3. கப்பல்

4. உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து

கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைப் பயன்படுத்தி சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

(அ) 1, 2 மற்றும் 3

(ஆ) 1, 3 மற்றும் 4

(இ) 2, 3 மற்றும் 4

(ஈ) 1, 2, 3 மற்றும் 4

2. கூற்று: இந்தியாவும் பிரான்சும் சர்வதேச சூரிய சக்திக் கூட்டணியைத் (International Solar Alliance) தொடங்கியுள்ளன.

காரணம்: இது கடகரேகை மற்றும் மகரரேகை ஆகியவற்றுக்கு இடையேயான நாடுகளைச் சூரிய ஆற்றலுக்கான ஒத்துழைப்பில் ஒன்றிணைப்பதற்காகும்.

(அ) கூற்று சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்

(ஆ) கூற்று சரி, காரணம் கூற்றிற்கான சரியான விள்கமல்ல

(இ) கூற்று தவறு; காரணம் சரி

(ஈ) கூற்று, காரணம் இரண்டும் தவறு

3. பின்வரும் கூற்றுகளில் எது/எவை உண்மையானவை?

(1) இந்திய பண்பாட்டு உறுவுகளுக்கான குழு, டக்கா பல்கலைக்கழகத்தில் “தாகூர் இருக்கை” ஏற்படுத்த வழிவகை செய்துள்ளது.

(2) மேற்கத்திய நாடுகளுக்கான இந்தியாவின் நுழைவு வாயில் மியான்மர் ஆகும்.

(3) நேபாளம், பூடான் ஆகியவை நிலப்பகுதிகளால் சூழப்பட்ட நாடுகளாகும்.

(4) இந்தியாவின் நாளந்தா பல்கலைக்கழகத் திட்டத்தின் ஒரு பங்குதாரர் நாடு இலங்கையாகும்.

(அ) 1, 2 மற்றும் 3

(ஆ) 2, 3 மற்றும் 4

(இ) 1, 3 மற்றும் 4

(ஈ) 1, 2 மற்றும் 4

4. கூற்று: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் ஒபெக் (OPEC) ஆர்வம் காட்டியுள்ளது.

காரணம்: தேவையான எண்ணெய் வளங்கள் இல்லாததால் இந்தியா விவசாயம் மற்றும் தொழில்துறை உற்பத்தியில் கவனம் செலுத்துகிறது.

(அ) கூற்று சரி, காரணம் கூற்றை விளக்குகிறது

(ஆ) கூற்று தவறு, காரணம் சரி

(இ) கூற்று காரணம் இரண்டும் சரி

(ஈ) கூற்று காரணம் இரண்டும் தவறு

பொருத்துக:

1. பிராண்டிக்ஸ் (Brandix) – வியன்னா

2. தகவல் தொடர்பப இணக்கத்தன்மை மற்றும்

பாதுகாப்பு ஒப்பந்தம் (COMCASA) – ஜப்பான்

3. ஷிங்கன்சென் – ஷாங்காய்

4. பிரிக்ஸ் (BRICS) – அமெரிக்க ஐக்கிய நாடுகள்

5. ஒபெக் (OPEC) – விசாகப்பட்டினத்தின் ஆடை நகரம்

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும் (விடைகள்)

1. இந்தியா – சீனா 2. (2 மட்டும்) 3. எண்ணெய் ஏற்றுமதி நிறுவனங்களின் அமைப்பு

4. வங்காளதேசம் 5. (3 1 4 2) 6. (7) 7. இலங்கை மற்றும் மாலத்தீவுகள்

8. சிக்கிம் 9. (5) 10. சர் சிரில் ராட்க்ளிஃப்

கோடிட்ட இடங்களை நிரப்புக: (விடைகள்)

1. பூடான் 2. மியான்மர் 3. நேபாளம் 4. டீன்பிகா 5. பூடான் 6. பாக்நீர்ச்சந்தி

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றைத் தேர்வு செய்க:

1. 1 3 மற்றும் 4

2. கூற்று சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.

3. 1 3 மற்றும் 4

4. கூற்று, காரணம் இரண்டும் சரி

பொருத்துக: (விடைகள்)

1. பிராண்டிக்ஸ் (Brandix) – விசாகப்பட்டிணத்தின் ஆடை நகரம்

2. தகவல்தொடர்பு இணக்கத்தன்மை

மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தம் (COMCASA) – அமெரிக்க ஐக்கிய நாடுகள்

3. ஷிங்கன்சென் – ஜப்பான்

4. பிரிக்ஸ் (BRICS) – ஷாங்காய்

5. ஒபெக் (OPEC) – வியன்னா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!