MCQ Questions

இந்தியாவும் உலகமும் 12th Political Science Lesson 9 Questions in Tamil

12th Political Science Lesson 9 Questions in Tamil

9] இந்தியாவும் உலகமும்

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை வடிவமைக்கும் சிற்பியாக இருந்தவர்

A) அம்பேத்கர்

B) ஜவஹர்லால் நேரு

C) இராஜாஜி

D) வல்லபாய் படேல்

(குறிப்பு: புதிய இந்திய தேசத்தின் சமூக-பொருளாதார மேம்பாடு, நவீனமயமாக்குதல், உலக அமைதி, போர் தவிர்ப்பு, பிற நாடுகளின் அமைதியான ஆக்கப்பூர்வமான உறவு, காலனியாதிக்கத்திலிருந்து ஆசிய-ஆப்பிரிக்கா நாடுகளின் விடுதலை, ஐக்கிய நாடுகள் சபையை வலுப்படுத்துவது, பிற நாடுகளின் பொருளாதார ஒத்துழைப்பு ஆகிய இந்தியத் தேவைகளின் அடிப்படையில் நேருவின் அயல்நாட்டுக் கொள்கை உருவாக்கப்பட்டது.)

கூற்று 1: இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில காஷ்மீர் சிக்கலானது தொடர்ந்து அடிப்படை விஷயமாக இருந்து வருகிறது.

கூற்று 2: காஷ்மீர் சிக்கலே தொடர்ச்சியாக நான்கு போர்களுக்கு காரணமாகிறது.

A) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

B) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

C) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

இந்தியா-சீனா ஆகிய இரு நாடுகளுக்கிடையே நேரு மற்றும் சீன பிரதமர் சூ-யென்-லாய் – வுடன் பஞ்சசீல ஒப்பந்தம் ஏற்பட்ட ஆண்டு

A) 1952 B) 1953 C) 1954 D) 1955

(குறிப்பு: பஞ்சசீலக் கொள்கைகள்

இரு நாடுகளும் ஒன்றின் எல்லையை, இறையாண்மையை மற்றொன்று மதிப்பது

ஆக்கிரமிப்பு செய்யாமை

ஒவ்வொருவரின் உள்நாட்டு விவகாரங்களில் மற்றவர் தலையிடாமல் இருத்தல்

தூதரக அளவிலான சமத்துவம் மற்றும் ஒத்துழைப்பு

அமைதியுடன் இணைந்து வாழ்தல்)

கூற்று 1: பாண்டுங் மாநாடு (இந்தோனேசியா) 1955ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை நடைபெற்றது.

கூற்று 2: இதில் 19 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டு அணிசேரா இயக்கம் உருவாக்குவது பற்றி விவாதித்தனர்.

A) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

B) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

C) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

(குறிப்பு: பாண்டுங் மாநாட்டில் 29 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டு அணிசேரா இயக்கம் உருவாக்குவது பற்றி விவாதித்தனர்.)

1961ஆம் ஆண்டு அணிசேரா இயக்கம் தோன்றுவதற்கு காரணமாக இருந்த நிறுவனத் தலைவர்கள்

1. எகிப்தின் கமால் அப்துல் நாசர்

2. கானாவின் குவாமி நிக்ருமா

3. இந்தோனேசியாவின் அகமது சுகர்னோ

4. யூகோஸ்லேவியாவின் ஜோசிப் புரோஸ் டிட்டோ

5. இந்தியாவின் ஜவஹர்லால் நேரு

A) அனைத்தும் B) 1, 2, 4, 5

C) 1, 2, 3, 4 D) 2, 3, 4, 5

(குறிப்பு: 17 ஆண்டுகள் வெளியுறவு விவகாரத்தினை தனது பொறுப்பில் வைத்திருந்த பண்டித ஜவஹர்லால் நேரு (1947-64) பனிப்போரில் சிக்காமல், இந்தியாவுக்கென்று சொந்த வெளியுறவுக் கொள்கைப் பற்றி தெளிவாக இருந்தார். இந்த நிலைப்பாடு 1961ஆம் ஆண்டு அணிசேரா இயக்கம் தோன்றுவதற்கு காரணமாக அமைந்தது.)

கூற்று 1: இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே 1940 ஆம் ஆண்டு தாமஸ் வில்சன் மற்றும் சர் கிரிஜா சங்கர் பாஜ்பாய் ஆகிய தூதர்களை பரிமாறிக் கொள்வது நிகழ்வது.

கூற்று 2: இது டில்லியில் தூதரக அலுவலகத்தை நிறுவுவதற்கு காரணமாகியது.

A) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

B) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

C) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

(குறிப்பு: 1946ஆம் ஆண்டு வரை தொடர்ந்து ஹாரி S. ட்ருமன் என்ற குடியரசுத் தலைவரின் தலைமையின்கீழ்தான் இந்திய-அமெரிக்காவுக்கு இடையே முழுமையான முழுநேர தூதரக உறவுகள் தோன்றியது.)

தவறான இணையைத் தேர்ந்தெடு.

1. UNCIP – இந்தியா பாகிஸ்தானுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம்

2. SEATO – தென்கிழக்கு ஆசிய ஒப்பந்த அமைப்பு

3. CENTO – மத்திய ஒப்பந்த அமைப்பு

A) 1 மட்டும் தவறு

B) 2, 3 தவறு

C) 3 மட்டும் தவறு

D) எதுவுமில்லை

(குறிப்பு: சீட்டோ (SEATO), சென்டோ (CENTO) ஆகியவை அமெரிக்கா வழங்கிய நேச உடன்படிக்கை அமைப்பு ஆகும். இந்தியாவுடன் காஷ்மீர் இணைக்கப்பட்டது தொடர்பான பிரச்சனை 1948ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் விளைவாக UNCIP நிறுவப்பட்டது.)

பொதுச்சட்டம் 480 கீழ் 1954 ஆம் ஆண்டு வேளாண் உற்பத்திப் பொருள்களை இந்தியாவிற்கு வழங்குவதற்கு ______________ ஒப்பந்தங்கள் இந்திய-அமெரிக்கா இடையே கையெழுத்தானது.

A) 2 B) 3 C) 4 D) 5

“டிஜிட்டல் உலகில் இந்தியாவும் அமெரிக்காவும் பக்கத்து நாடுகள் மற்றும் பங்காளிகள்” என்று இந்திய-அமெரிக்கா உறவை பற்றி கூறியவர்

A) நரசிம்மராவ்

B) இந்திராகாந்தி

C) வாஜ்பாய்

D) அப்துல்கலாம்

(குறிப்பு: இந்தியாவிற்கு 2000ஆம் ஆண்டில் அமெரிக்கா அதிபர் கிளிண்டனின் வருகை இந்திய-அமெரிக்கா உறவில் ஒரு புதிய அத்தியாயத்தை மலரச் செய்தது. அதன் பின்பு, அறிவியல் தொழில்நுட்பம், சூழலியல் பாதுகாப்பு, பருவநிலை மாற்றம், கல்வி, எச்.ஐ.வி, சுனாமி மீட்பு போன்றவற்றில் இருநாடுகளும் ஒத்துழைப்புடன் செயல்பட முடிவெடுத்தன.)

தவறான இணையைத் தேர்ந்தெடு. (இந்திய-அமெரிக்கா உறவுகள்)

A) பிரதமர் நேரு அமெரிக்க ஐக்கிய நாடுகள் செல்லுதல் – 1949

B) அமெரிக்க அதிபர் கார்ட்டர் இந்தியாவிற்கு வருகை தருதல் – 1978

C) ஆற்றல் பாதுகாப்பு பேச்சுவார்த்தை – 2005

D) இந்தியா, அமெரிக்கா புதிய ராணுவ கட்டமைப்பில் கையெழுத்திடுதல்-2001

(குறிப்பு: இந்தியா, அமெரிக்கா புதிய ராணுவ கட்டமைப்பில் கையெழுத்திடுதல்-2005)

இந்தியாவின் அணு ஆயுத சோதனையின் காரணமாக 1998ஆம் பொருளாதார தடையை விதித்த அமெரிக்கா ______________ ஆண்டு தடையை நீக்கியது.

A) 1999 B) 2000 C) 2001 D) 2002

தவறான இணையைத் தேர்ந்தெடு. (இந்திய-அமெரிக்கா உறவுகள்)

A) அணு ஒப்பந்தம் – 2005

B) பொருளாதார மற்றும் நிதி ஒத்துழைப்பு – 2006

C) இந்தியா, அமெரிக்கா பாதுகாப்பு முதல் பேச்சுவார்த்தை துவங்குதல் – 2010

D) ஐ.நா பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினராகும் இந்தியாவின் முயற்சிக்கு ஒபாமா ஆதரவு – 2010

(குறிப்பு: பொருளாதார மற்றும் நிதி ஒத்துழைப்பு – 2010)

பொருத்துக. (இந்தியா-அமெரிக்கா உறவுகள்)

1. அமெரிக்கா, இந்தியா வலைதளப் பாதுகாப்பு ஒப்பந்தம் i) 2011

2. ஒபாமா இந்தியாவிற்கு இரண்டாவது முறையாக

வருதல் மற்றும் உறவை மேம்படுத்துதல் ii) 2015

3. இந்தியா ஒரு முக்கியமான ராணுவ

கூட்டாளியாக ஒபாமா அங்கீகரித்தல் iii) 2016

4. இந்தியாவின் சிறப்பு வர்த்தக தகுதியை

டிரம்ப் முடிவுக்கு கொண்டு வந்தது iv) 2019

A) ii iii iv i

B) i iii ii iv

C) i ii iii iv

D) iv iii ii i

கூற்று 1: 1945ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அட்லாண்டிக் சாசனம் மூலம் ஐக்கிய நாடுகள் அமைப்பு தோன்றியது.

கூற்று 2: பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை மீறி கார்கில் போரில் ஈடுபட்டபோது அமெரிக்கா அதை கண்டித்து இந்தியாவின் நிலைக்கு ஆதரவளித்தது.

A) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

B) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

C) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு ______________இல் மேற்கொண்ட சோவியத் ஒன்றியத்தின் பயணம், சோவித்தின் பிரதமர் நிகிதா குருஷேவின் இந்திய பயணத்திற்கு வழிவகுத்தது.

A) 1955 பிப்ரவரி

B) 1955 ஏப்ரல்

C) 1955 ஜூன்

D) 1955 டிசம்பர்

(குறிப்பு: சோவித்தின் பிரதமர் நிகிதா குருஷேவின் 1955ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியாவிற்கு வருகை புரிந்தார்.)

1971ஆம் ஆண்டு இந்தியா-சோவியத் நாடுகள் கீழ்க்கண்ட எந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டன?

1. அமைதி 2. நட்புறவு 3. தகவல் தொழில்நுட்பம்

4. வர்த்தகம் 5. ஒத்துழைப்பு

A) 1, 2, 4, 5 B) 1, 3, 4, 5

C) 1, 2, 4 D) 1, 2, 5

(குறிப்பு: 1971ஆம் ஆண்டு இந்திய-பாகிஸ்தான் போரின் போது, சோவியத் ஒன்றியம், இந்தியாவிற்கு ஆதரவாக உறுதியான நடவடிக்கை எடுக்க, ஏற்கெனவே அமெரிக்கா தனது 7வது கடற்படைப் பிரிவை வங்காள விரிகுடா கடற்பகுதிக்கு அனுப்பியிருந்த நிலையில் அது இந்தியாவிற்கு எதிராக இருக்குமானால் அதனை எதிர்கொள்ள தனது போர் கப்பல்களை இந்திய பெருங்கடற் பகுதிக்கு அனுப்பி வைத்தது.)

கூற்று 1: 1891 ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியுடன், இந்தியாவிற்கும் புதிதாக ஏற்பட்ட ரஷ்யாவிற்கும் இடையேயான இருதரப்பு உறவுகள் ஒரு நிச்சயமற்ற தன்மைக்கு சென்றது.

கூற்று 2: சோவியத் ஒன்றியம் என்ற அரசு இல்லாமல் போய்விட்டதால் 1971ஆம் ஆண்டு செய்து கொண்ட உடன்படிக்கை செயலிழந்து போனது.

A) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

B) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

C) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

ரஷ்ய அதிபர் போரிஸ் எல்ட்சின் தனது ______________ ஆம் ஆண்டு இந்திய வருகையின் போது 1971ஆம் ஆண்டு செய்து கொண்ட உடன்படிக்கையை மீண்டும் தூண்டிவிடும் விதமாக புதிய நட்பு உடன்படிக்கையில் கையெழுத்திட்டார்.

A) 1991 B) 1992 C) 1993 D) 1994

(குறிப்பு: இந்த புதிய உடன்படிக்கையில், பழைய உடன்படிக்கையின் அடிப்படைத்தன்மை மாற்றியமைக்கப்பட்டு அமைதிக்கு அச்சுறுத்தல் வரும்பொழுது, ஆலோசனையும் ஒருங்கிணைப்பு மட்டும் இருப்பதாக செய்யப்பட்டது.)

இந்தியாவை ஒரு “இயற்கை கூட்டாளி” என்று கூறியவர்

A) ஜோசப் ஸ்டாலின்

B) போரீஸ் பெல்ட்சின்

C) விளாடிமிர் புடின்

D) நிகிதா குருசேவ்

விளாடிமிர் புடின் ரஷ்யாவின் அதிபராக பொறுப்பேற்றப் பிறகு இந்தியாவுடன் “இராணுவம் சார்ந்த நட்புறவு பிரகடனத்தில்” கையெழுத்திட்ட ஆண்டு

A) 2000 B) 2005 C) 2010 D) 2012

(குறிப்பு: 2010ஆம் ஆண்டு இந்த பிரகடனமானது சிறப்பான ராணுவம் சார்ந்த நட்புறவு பிரகடனத்தை அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்றது.)

பங்களாதேஷில் கூட்டு அணுக்கரு உலை உருவாக்கும் திட்டம் மற்றும் வியட்நாமில் எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்ந்தெடுக்கும் திட்டங்கள் போன்றவற்றை செயற்படுத்தும் நாடுகள்

A) பங்களாதேஷ், இந்தியா

B) வியட்நாம், இந்தியா

C) அமெரிக்கா, இந்தியா

D) ரஷ்யா, இந்தியா

(குறிப்பு: அணு ஆற்றல், வர்த்தகம், எண்ணெய் மற்றும் எரிவாயு, விண்வெளித்திட்டம், அறிவியல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் இந்தியா மற்றும் இரஷ்யா ஆழமான ஒத்துழைப்பைக் கொண்டிருக்கின்றன.)

வாஸ்கோடாகாமா எனும் போர்ச்சுகீசிய மாலுமி இந்தியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையேயான கடல் வழியை கண்டறிந்த ஆண்டு

A) 1497 B) 1498 C) 1499 D) 1500

(குறிப்பு: இந்த கண்டுபிடிப்பு இந்தியாவில் ஐரோப்பாவுக்கிடையே நேரடி வர்த்தகத்தை தொடங்கி வைத்தது.)

தவறான கூற்றைத் தேர்ந்தெடு.

1. ப்ரெக்சிட் என்பது இங்கிலாந்து ஆனது ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதாகும்.

2. 2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23ஆம் தேதி நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் 51.9% வாக்குப்பதிவு, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கு சாதகமாக பதிவானது.

3. லிஸ்பன் உடன்படிக்கையின் 50வது சட்ட உறுப்பானது, முன்வைத்த இரண்டு ஆண்டு காலக்கெடு நிகழ்வு முறை மார்ச் 29, 2019ஆம் ஆண்டு இங்கிலாந்து வெளியேறுவதுடன் முடிவடைகிறது.

4. மார்ச் 21, 2019ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றிய சபை, இங்கிலாந்தின் கோரிக்கையை ஏற்று, வெளியேறும் கெடுவை ஏப்ரல் 12, 2019 வரை நீட்டிக்க ஒத்துக்கொண்டது.

A) 2 மட்டும் தவறு

B) 4 மட்டும் தவறு

C) 3 மட்டும் தவறு

D) எதுவுமில்லை

இந்தியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையே வர்த்தகத்தை கடந்து காணப்படும் பொதுவான நலன்கள் எவை?

1. பருவநிலை மாற்றத்தைத் தடுத்தல்

2. ஈரான் அணுக்கரு ஒப்பந்தத்தைப் பராமரித்தல்

3. அணு ஆற்றல், கல்வி மற்றும் தொழில்நுட்பத்தில் ஒத்துழைப்பு

A) அனைத்தும்

B) 1, 2

C) 2, 3

D) 1, 3

(குறிப்பு: ஐரோப்பிய ஒன்றியமானது 2018-19ஆம் ஆண்டு 104.3 பில்லியன் வர்த்தகத்துடன் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டணியாக இருந்தது.)

கூற்று 1: 1991ஆம் ஆண்டு இந்தியா தாராளமயத்தைத் துவக்கி வைக்கும் வரை வர்த்தகம், தொழில்நுட்பம், கல்வி ஆகியவற்றில் இந்தியா குறைந்த அளவிலே ஐரோப்பிய நாடுகளுடன் பொருளாதார உறவுகளில் ஈடுபட்டிருந்தது.

கூற்று 2: 1994 ஆம் ஆண்டு இந்திய-ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் ஒத்துழைப்பு உடன்படிக்கை கையெழுத்தானது.

A) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

B) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

C) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

(குறிப்பு: 1994 ஆம் ஆண்டு இந்திய-ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் ஒத்துழைப்பு உடன்படிக்கையானது, இந்தியாவை உலகத்தில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் உறவை ஏற்படுத்திக் கொண்ட நாடு என்று முதல் அடையாளத்தை பெற்றுத்தந்தது.)

இந்தியாவை குறிக்கும் சீன வார்த்தையான ‘டென்ஜிக்கு’ என்பதன் பொருள்

A) இறைவனின் உறைவிடம்

B) கல்வியின் உறைவிடம்

C) சொர்க்கத்தின் உறைவிடம்

D) செல்வங்களின் உறைவிடம்

(குறிப்பு: ஜப்பான் நாட்டை சேர்ந்த அறிஞர்கள் இந்தியாவில் உள்ள நாளந்தா பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்துள்ளனர். அதில் மிகவும் புகழ்பெற்றவர் “டென்ஜிக்கு டோக்குபி” என்ற பயணி ஆவார்.)

இந்திய ஜப்பான் கழகம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு

A) 1901 B) 1902 C) 1903 D) 1904

(குறிப்பு: இதற்கு முன்பான அரசியல் பரிமாற்ற உறவு மெய்ஜி சகாப்தத்தின் போது நிகழ்ந்தது.)

ஜப்பானோடு நெருங்கிய தொடர்புடைய நபர்களில் தவறானது

A) சுவாமி விவேகானந்தர்

B) குருதேவ் ரவீந்திரநாத் தாகூர்

C) ஜே.ஆர்.டி.டாட்டா

D) வல்லபாய் படேல்

(குறிப்பு: தற்காலத்தில் ஜப்பானோடு நெருங்கிய தொடர்புடைய நபர்கள் சுவாமி விவேகானந்தர், குருதேவ் ரவீந்திரநாத் தாகூர், ஜே.ஆர்.டி.டாட்டா, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மற்றும் நீதிபதி ராதா பினோத் பால் ஆகியோர் ஆவர்.)

இந்தியா ஜப்பான் இரு நாடுகளுக்கிடையிலான தூதரக உறவுகளானது இரண்டாம் உலகப் போருக்கு பிறகு, ______________ ஆண்டு இந்தியாவுடன் ஜப்பான் செய்து கொண்ட அமைதி உடன்படிக்கையுடன் தொடங்கியது.

A) 1950 B) 1951 C) 1952 D) 1953

(குறிப்பு: 1951ஆம் ஆண்டு டில்லியில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு அழைப்பு விடுத்ததன் மூலம் தூதரக உறவை ஏற்படுத்திக் கொண்ட முதல் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.)

ஜப்பானிய பிரதமர் யோஷிரோ மோரி இந்தியாவிற்கு வருகை புரிந்த ஆண்டு

A) 1998 B) 1999 C) 2000 D) 2001

(குறிப்பு: யோஷிரோ மோரியின் வருகைக்கு பின் பொருளாதாரம், வர்த்தகம், நிதிச்சேவை, சுகாதாரம், சாலைப் போக்குவரத்து, கல்வி, கப்பல் என்ற பல துறைகளிலும் ஒத்துழைக்க அதிகாரிகள் கொண்ட குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன.)

கூற்று 1: ஜப்பான் பிரதமர் மோரியும், இந்திய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயும் “ஜப்பானுக்கும்-இந்தியாவுக்கும் இடையில் உலகளாவிய ஒத்துழைப்பு” நிறுவ முடிவு செய்தனர்.

கூற்று 2: ஏப்ரல் 2005இல் பிரதமர் யோஷீரோ மோரியின் இந்திய வருகைக்குப் பின்னர், இந்திய-ஜப்பான் ஆண்டு உச்சி மாநாடு கூட்டங்கள் அந்தந்த தலைநகரங்களில் நடத்தப்பட்டன.

A) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

B) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

C) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

(குறிப்பு: ஏப்ரல் 2005இல் பிரதமர் ஜூனிச்சிரோ கொய்சுமியின் இந்திய வருகைக்குப் பின்னர், இந்திய-ஜப்பான் ஆண்டு உச்சி மாநாடு கூட்டங்கள் அந்தந்த தலைநகரங்களில் நடத்தப்பட்டன.)

____________ல் பிரதமர் மன்மோகன் சிங் ஜப்பானுக்கு வருகை புரிந்தபோது, இந்திய-ஜப்பான் உறவு “உலகளாவிய இராணுவம் சார்ந்த ஒத்துழைப்பு”க்கு உயர்த்தப்பட்டது.

A) 2005 டிசம்பர்

B) 2006 பிப்ரவரி

C) 2006 ஏப்ரல்

D) 2006 டிசம்பர்

இந்திய பிரதமர் ________________அக்டோபர் 2008 ஆம் ஆண்டு ஜப்பானுக்கு அரசு முறைப் பயணமாக சென்றபோது இரு நாட்டு தலைவர்களும் இரு நாடுகளுக்கிடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பிற்கான பிரகடனத்தை வெளியிட்டனர்.

A) அடல் பிஹாரி வாஜ்பாய்

B) மன்மோகன் சிங்

C) நரேந்திர மோடி

D) ராஜீவ் காந்தி

(குறிப்பு: ஜப்பான் பாதுகாப்பு உறவு கொண்ட நாடுகளுள் இந்தியா மூன்றாவது நாடாகும். இதர நாடுகள் அமெரிக்காவும், ஆஸ்திரேலியாவும் ஆகும்.)

இந்தியாவில் ஜப்பான் நாட்டு நிறுவனங்கள் சந்தித்து வரும் சிக்கல்களை தீர்ப்பதற்காக, “One Stop” எனப்படும் ஒரே இடத்தில் அனைத்தும் கிடைக்கும் படியான ஏற்பாட்டை செய்வதற்கு “Japan Plus” என்ற அலுவலகத்தை மத்திய வணிகத்துறை அமைச்சகம் ஏற்படுத்திய ஆண்டு

A) 2008 B) 2010 C) 2012 D) 2014

2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் டில்லி-மும்பை பெருவழித்தடம் (DMIC) மற்றும் சென்னை-பெங்களூரு பெருவழித்தடம் (CBIC) ஆகியவற்றைச் சுற்றி_____________ஜப்பான் நிறுவனங்களைக் கொண்ட நகரங்களை நிறுவ ஜப்பானும் இந்தியாவும் ஏற்றுக்கொண்டன.

A) 8 B) 10 C) 11 D) 14

(குறிப்பு: ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபே, டிசம்பர் 2015 மற்றும் நவம்பர் 2016இல் ஜப்பான் தொழில் நகரத்திற்கான சிறப்பு ஊக்கத் தொகுப்பை அளிப்பதற்கான முடிவை இந்தியா விரைந்து எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.)

சரியானக் கூற்றைத் தேர்ந்தெடு.

1. 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஜப்பான் பிரதமர் இந்தியாவிற்கு வருகை தந்தபொழுது “ஷின்கான்சென்” என்ற கட்டமைப்பை அறிமுகப்படுத்த இந்தியா முடிவெடுத்தது.

2. ஜப்பானின் “ஷின்கான்சென்” அமைப்பு என்பது உலகளவில் இருக்கும் பாதுகாப்பு மற்றும் துல்லியம் என்ற வகையில் அதிவிரைவுக் கொண்ட ஜப்பானின் ரயில்வே போக்குவரத்து ஆகும்.

3. ஜப்பானும் இந்தியாவும் 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் இதற்கானப் பணிகளைத் தொடங்கி விட வேண்டும், கட்டுமானப் பணிகள் 2018 இல் துவங்கும், ரயில்களின் இயக்கம் 2023ஆம் ஆண்டில் துவங்கும் என்பதை உறுதிப்படுத்தின.

A) அனைத்தும் சரி

B) 1, 2 சரி

C) 2, 3 சரி

D) 1, 3 சரி

ஜப்பானின் ஒத்துழைப்பால் அலுவலர் மேம்பாட்டு உதவி பயன்பாட்டின் மூலம் மிகவும் வெற்றிகரமாக பயனடைந்த திட்டம்

A) சென்னை மெட்ரோ ரயில் சேவை

B) பெங்களூரு மெட்ரோ ரயில் சேவை

C) டெல்லி மெட்ரோ ரயில் சேவை

D) அலகாபாத் மெட்ரோ ரயில் சேவை

(குறிப்பு: கடந்த பத்தாண்டுகளில், ஜப்பான் வழங்கும் அதிகாரப்பூர்வ மேம்பாட்டு உதவி பெரும் மிகப்பெரிய நாடு இந்தியா. அலுவலர் மேம்பாட்டு உதவி என்பது ஜப்பான் நாடு வளரும் நாடுகளுக்கு அதிகாரப்பூர்வமாக வழங்கும் பொருளாதார நல மேம்பாட்டுத் திட்டமாகும்.)

இந்தியா-ஜப்பான் இருதரப்பு வர்த்தகம் 2018ஆம் ஆண்டு_____________ என்ற அளவை எட்டியது.

A) 12.15 பில்லியன் டாலர்

B) 15.17 பில்லியன் டாலர்

C) 18.12 பில்லியன் டாலர்

D) 19.15 பில்லியன் டாலர்

(குறிப்பு: இதே காலக்கட்டத்தில் ஜப்பானில் இருந்து இந்தியாவிற்கான ஏற்றுமதி 10.97 பில்லியன் டாலராக இருந்தது, இறக்குமதியானது 4.74 பில்லியன் டாலராக இருந்தது.)

கீழ்க்கண்டவற்றுள் இந்தியாவிலிருந்து ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருள்கள் எவை?

1. பெட்ரோலியப் பொருட்கள்

2. வேதிப்பொருள்கள்

3. சேர்மங்கள்

4. உலோகம் அல்லாத தாதுக்கள்

5. மின் மற்றும் தயாரிப்பு பொருள்கள்

A) அனைத்தும்

B) 2, 3, 4, 5

C) 1, 2, 4, 5

D) 1, 3, 4, 5

(குறிப்பு: உலோகத் தாதுக்கள் மற்றும் உலோகத் தாதுக்களின் எச்சங்கள், துணி இழை, நெய்யப்பட்ட ஆடை மற்றும் இயந்திரத் தளவாடங்கள் போன்றவைகளும் இந்தியாவிலிருந்து ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.)

கீழ்க்கண்டவற்றுள் இந்தியா ஜப்பானிடம் இருந்து இறக்குமதி செய்யும் பொருள்கள் எவை?

1. இயந்திரத் தளவாடங்கள்

2. போக்குவரத்து சாதனங்கள்

3. இரும்பு மற்றும் எஃகு மின்னணு பொருள்கள்

4. கரிம வேதிப்பொருள்கள்

5. இயந்திரக் கருவிகள்

A) 2, 3, 4, 5 B) 1, 3, 4, 5

C) 1, 2, 4, 5 D) அனைத்தும்

2017ஆம் ஆண்டு கோடைக்காலத்தில் உற்பத்திக்கான இந்திய-ஜப்பான் நிறுவனமானது எத்தனை மாநிலங்களில் துவங்கப்பட்டது?

A) 2 B) 3 C) 4 D) 5

(குறிப்பு: குஜராத், கர்நாடகா, ராஜஸ்தான் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் உற்பத்திக்கான இந்திய-ஜப்பான் நிறுவனம் துவங்கப்பட்டது.)

1962ஆம் ஆண்டு போர் எந்த இரு நாடுகளுக்கிடையே நடைபெற்றது

A) இந்திய-சீனா

B) இந்திய-ரஷ்யா

C) இந்திய-இலங்கை

D) இந்திய-பாகிஸ்தான்

“ஜப்பானியர்களால் வழங்கப்பட்ட பாடப்பிரிவுகள்” (JEC-Japanese Endowed Courses) என்ற பொறியியல் கல்லூரிகளில் வழங்கும் பாடத்திட்டம் முதன்முறையாக ______________ மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

A) குஜராத்

B) கர்நாடகா

C) தமிழ்நாடு

D) ஆந்திரா

2012ஆம் ஆண்டு வரை இந்திய-ஜப்பான் இடையேயான தூதரக உறவு நிறுவப்பட்டு ____________ ஆண்டுகள் நிறைவு செய்துள்ளது.

A) 40 B) 50 C) 60 D) 70

பொருத்துக. (இந்திய-ஜப்பான் இடையேயான இருதரப்பு உடன்படிக்கைகளும் ஒப்பந்தங்களும்)

1. அமைதி உடன்படிக்கை i) 1960

2. வான்வழி சேவைக்கான

ஒப்பந்தம் ii) 1958

3. கலாச்சார ஒப்பந்தம் iii) 1957

4. வணிக ஒப்பந்தம் iv) 1956

5. இரட்டை வரிவிதிப்பு நடவடிக்கைக்

கூட்டம் v) 1952

A) i ii iii iv v

B) ii i iv iii v

C) v ii iv i iii

D) v iv iii ii i

தவறான இணையைத் தேர்ந்தெடு. (இந்திய-ஜப்பான் இடையேயான இருதரப்பு உடன்படிக்கைகளும் ஒப்பந்தங்களும்)

A) அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் ஒத்துழைப்பு ஒப்பந்தம் – 1985

B) இந்திய-ஜப்பான் விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் – 2011

C) இந்திய-ஜப்பான் இடையேயான சமூகப் பாதுகாப்பு ஒப்பந்தம் 2012 மற்றும் 2013

D) இந்திய-ஜப்பான் இடையேயான ராணுவ தளவாட மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றம் தொடர்புடைய ஒப்பந்தம் – 2015

(குறிப்பு: இந்திய-ஜப்பான் இடையேயான சமூகப் பாதுகாப்பு ஒப்பந்தம் 2012 மற்றும் 2016.)

இந்திய-ஜப்பான் இடையேயான வகைப்படுத்தப்பட்ட ராணுவத் தகவல்களைப் பாதுகாப்பது தொடர்பான நடவடிக்கைகளுக்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட ஆண்டு

A) 2013 B) 2014 C) 2015 D) 2016

கூற்று 1: 1857 ஆம் ஆண்டு அமெரிக்காவிடமிருந்து சுதந்திரம் பெற்ற முதல் ஆப்பிரிக்க நாடு லைபிரியா ஆகும்.

கூற்று 2: காலனிய எஜமானர்களிடமிருந்து, கடைசியாக 1977 ஆம் ஆண்டு பிரான்சிடம் இருந்து விடுதலையடைந்த ஆப்பிரிக்கா நாடு டிஜிபெளட்டி ஆகும்.

A) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

B) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

C) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

ஒரு குறிப்பான இனப் பின்னணியை கொண்டோர், தங்களுடைய சொந்த மண்ணை விட்டு வெகுதொலைவு சென்று ஒரு சமூகத்தை ஏற்படுத்திக் கொள்வதைக் குறிக்கும் வார்த்தை

A) எரித்ரோஸ்போரா

B) டயாஸ்போரா

C) பைரோஎரித்ரின்

D) பையோஸ்போரா

(குறிப்பு: டயாஸ்போரா என்பதற்கு புலம்பெயர்ந்த (அ) வெளிநாடு வாழ்வோர் என்று பொருள்.)

சரியானக் கூற்றைத் தேர்ந்தெடு.

1. ஆங்கிலேயர்கள் பல இந்திய தொழிலாளர்களைச் சர்க்கரை இரப்பர் மற்றும் பணப் பயிர்களை விளைவிப்பதற்காக, ஆப்பிரிக்க-கரீபியன் தீவுகளுக்கும், மலேசியா மற்றும் இலங்கைக்கும் கப்பலில் ஏற்றி அனுப்பினர்.

2. காலனி காலத்தில் மட்டும் 7,69,437 இந்தியர்கள் மொரீசியஸ், தென் ஆப்பிரிக்கா, ரீயூனியன் தீவுகள், செஷல்ஸ் மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கா பகுதிகளுக்கு குடியேறினர்.

3. தென் ஆப்பிரிக்காவில் இருக்கும் டர்பன் நகரம் 13 இலட்சம் இந்தியர்களின் வீடாக உள்ளது.

A) அனைத்தும் சரி

B) 1, 2 சரி

C) 2, 3 சரி

D) 1, 3 சரி

(குறிப்பு: டர்பன் நகரம் தான் இந்தியாவிற்கு வெளியே இருக்கும் மிகப்பெரிய இந்திய நகரமாகும். இதனை தொடர்ந்து மொரீசியஸ் மற்றும் ரீயூனியன் தீவுகள் இந்த வரிசையில் வருகின்றன.)

இந்திய-ஆப்பிரிக்கா மன்றங்களின் உச்சிமாநாடு _____________ ஆண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகின்றது.

A) 2006 B) 2007 C) 2008 D) 2009

(குறிப்பு: இந்த மாநாடு ஆப்பிரிக்கா அரசுகளுடன் இந்தியா அதிகாரப்பூர்வமாக உறவை ஏற்படுத்திக் கொள்ளும் தளமாக அமைந்துள்ளது.)

ஆப்பிரிக்காவிற்கு இந்தியா ஏற்றுமதி செய்யும் கலாச்சாரப் பொருள்

A) ஆடைகள்

B) ஓவியங்கள்

C) இசை

D) சினிமா

(குறிப்பு: நைஜீரியா போன்ற நாடுகளில் இந்தியர்கள் குறைவாக இருந்தாலும் இந்திய திரைப் படங்களுக்கு வரவேற்புள்ள நாடாகும்.)

ஆசிய-ஆப்பிரிக்கா வளர்ச்சி பெரு வழித்தடத்திற்கான பார்வை பற்றிய ஆவணத்தை ஆப்பிரிக்கா வளர்ச்சி வங்கி கூட்டத்தில் இந்தியா வெளியிட்ட ஆண்டு

A) 2014 B) 2015 C) 2016 D) 2017

(குறிப்பு: ஆசிய-ஆப்பிரிக்கா வளர்ச்சி பெரு வழித்தடத்தின் நோக்கமானது, இந்திய-ஜப்பான் இணைப்பின் மூலம் ஆப்பிரிக்காவின் உள்கட்டமைப்பு மற்றும் எண்முறை அடிப்படையிலான தொடர்பை வளர்த்தெடுத்தல் என்பனவாகும்.)

ஆசிய ஆப்பிரிக்கா வளர்ச்சி பெரு வழித்தடத்தின் தூண்களாக கருதப்படுபவை எவை?

1. கொள்திறன் மற்றும் செயல் திறன் ஆகியவற்றை உயர்த்துதல்.

2. தரமான உள்கட்டமைப்பு மற்றும் நிறுவன ரீதியான இணைப்பு நடவடிக்கை.

3. மேம்பாடு மற்றும் ஒத்துழைப்பு திட்டங்கள்.

4. மக்களுக்கிடையேயான ஒத்துழைப்பு

5. இந்தியா, ஜப்பான் இடையிலான வணிக மேம்பாடு

A) அனைத்தும் B) 1, 2, 4, 5

C) 1, 2, 3, 4 D) 2, 3, 4, 5

தவறான இணையைத் தேர்ந்தெடு.

1. 1961 – நேரு மெக்சிகோ பயணம்

2. 1968 – இந்திரா காந்தி எட்டு இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளுக்கு பயணம்

A) 1 மட்டும் தவறு

B) 2 மட்டும் தவறு

C) இரண்டும் தவறு

D) இரண்டும் சரி

(குறிப்பு: 1991ஆம் ஆண்டு வரை சோசலிச பொருளாதாரமாக இருந்த வரை, இந்தியா இலத்தீன் அமெரிக்கா கரீபியன் நாடுகளுடன் பொருளாதார உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளவில்லை.)

BRICS எனப்படும் அமைப்பு உருவாக்கப்பட்ட ஆண்டு

A) 2004 B) 2005 C) 2006 D) 2007

(குறிப்பு: பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகியவை பிரிக்சின் உறுப்பு நாடுகள் ஆகும்.)

2014ஆம் ஆண்டு ______________ல் நடந்த பிரிக்ஸ் உச்சிமாநாடு, இந்தியாவை இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளோடு பேச்சுவார்த்தை நடத்த வகை செய்தது.

A) பிரேசில்

B) ரஷ்யா

C) சீனா

D) தென்ஆப்பிரிக்கா

(குறிப்பு: ஏறத்தாழ 620 மில்லியன் மக்கள்தொகை மற்றும் வளங்கள் அதிகம் கொண்ட நிலமான இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகள், இந்தியாவிற்கு உலகளாவிய அளவில் தனது தடத்தைப் பதிப்பதற்கு பெரும் வாய்ப்புகளைத் தருகிறது.)

சார்க் அமைப்பானது _____________ அன்று டாக்கா நகரில் சார்க் சாசனச் சட்டத்தில் கையெழுத்திட்டதின் மூலம் நிறுவப்பட்டது.

A) 1984 அக்டோபர் 5

B) 1984 டிசம்பர் 8

C) 1985 அக்டோபர் 5

D) 1985 டிசம்பர் 8

(குறிப்பு: சார்க் அமைப்பானது பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாடு, மக்கள் நலன் மற்றும் தெற்காசிய நாடுகளுக்கிடையே நெருக்கமாக வரலாற்று மற்றும் பண்பாட்டு தொடர்பை வளர்த்தெடுக்க உருவாக்கப்பட்டது.)

கீழ்க்கண்டவற்றுள் சார்க் அமைப்பில் உறுப்பினர் அல்லாத நாடு எது?

A) ஆப்கானிஸ்தான்

B) பாகிஸ்தான்

C) இலங்கை

D) கஜகஸ்தான்

(குறிப்பு: சார்க் அமைப்பின் உறுப்பு நாடுகள்-ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூடான், நேபாளம், இந்தியா, மாலத்தீவு, பாகிஸ்தான் மற்றும் இலங்கை.)

சார்க் அமைப்பின் செயலகமானது 1987ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17ஆம் நாள்____________நகரில் நிறுவப்பட்டது.

A) டெல்லி

B) நியூயார்க்

C) காத்மாண்டு

D) திம்பு

சார்க் அமைப்பின் நோக்கங்ளில் சரியானதைத் தேர்ந்தெடு.

1. தெற்காசிய மக்களின் நலன்களை வளர்த்தெடுத்தல் மற்றும் அவர்களின் தரமான வாழ்வை உயர்த்துதல்.

2. சார்க் மண்டலத்தில் பொருளாதார வளர்ச்சியை, சமூக முன்னேற்றம் மற்றும் கலாச்சார மேம்பாட்டை முடுக்கிவிடுதல் மற்றும் ஒவ்வொரு தனிநபருக்கும் கண்ணியத்துடன் வாழவும் மற்றும் அவர்களின் முழுமையான ஆற்றலை உணரவும் வாய்ப்பளிப்பது.

3. தெற்காசிய நாடுகளுக்கு இடையே கூட்டு சுயநம்பிக்கை வளர்த்தெடுப்பதும், வலிமைப்படுத்துவதும்.

4. பரஸ்பர நம்பிக்கைக்கு பங்களிப்பது, ஒருவருடைய பிரச்சனைகளை ஒருவர் புரிந்துகொள்வது, மதிப்பளிப்பது.

A) அனைத்தும் சரி

B) 1, 2, 3 சரி

C) 2, 3, 4 சரி

D) 1, 3, 4 சரி

சார்க் குறித்த கூற்றுகளில் தவறானதை தேர்ந்தெடு.

A) அமைப்பு வடிவத்தில் சார்க் அமைப்பானது நான்கு அடுக்கு நிறுவனத்தை கொண்டிருக்கிறது.

B) அனைத்து தெற்காசிய நாடுகளின் தலைவர்களும் உறுப்பினர்கள் ஆவர்.

C) இதன் உறுப்பினர்கள் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை சந்திப்பர்.

D) சார்க் நாடுகளின் வெளியுறவுச் செயலாளர்கள் நிலைக்குழுவின் உறுப்பினர்களாக இருப்பர்.

(குறிப்பு: சார்க் அமைப்பின் உறுப்பினர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சந்திப்பர்.)

சார்க் அமைப்பில் தற்போது வரை _____________ உச்சி மாநாடுகள் உறுப்பு நாடுகளால் நடத்தப்பட்டுள்ளன.

A) 16 B) 17 C) 18 D) 19

கூற்று 1: தெற்காசிய பகுதிகளில் வளர்ந்து கொண்டிருக்கும் பொருளாதார நிலமைகளில், சார்க் உறுப்பினர் நாடுகள், தெற்காசிய தடையில்லா வர்த்தக பகுதிகளாக உருவாக்கிக் கொண்டது.

கூற்று 2: இந்த ஒப்பந்தம் 2006ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது.

A) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

B) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

C) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

(குறிப்பு: தெற்காசிய தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தின் முதன்மையான நோக்கமானது, தெற்காசிய பகுதியில் உள்ள வளரும் நாடுகளுக்கு சிறப்பான மற்றும் சார்பு தன்மையுடன் நடத்த வேண்டியது அவசியம் என்பதை அங்கீகரிக்க வேண்டும் மற்றும் இப்பகுதி அனைத்தும் வளர்ச்சி பெறுவதற்கான கொள்கைகளை உருவாக்க வேண்டும் என்பதாகும்.)

இந்தோ-பசிபிக் பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்கொள்வதற்காக நான்கு தரப்பு பாதுகாப்பு பேச்சுவார்த்தை (QUAD) நடைமுறைக்கு வந்த ஆண்டு

A) 2003 B) 2007 C) 2012 D) 2017

(குறிப்பு: QUAD 2017ஆம் ஆண்டில் மறுஆய்வு செய்யப்பட்டது.)

கூற்று 1: இந்தோ-பசிபிக் பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்கொள்வதற்காக, இந்தியா, அமெரிக்கா, மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் அமைப்புசாரா வழிமுறை மூலம் இணைந்து கூட்டாக செயல்படுவது என விளக்கமளிக்கப்படுவது QUAD எனப்படும்

கூற்று 2: QUAD கருத்தானது உண்மையில் ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபேயைச் சாரும்.

A) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

B) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

C) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு (ASEAN) தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரத்தில் நிறுவப்பட்ட ஆண்டு

A) 1965 ஆகஸ்ட் 8

B) 1965 அக்டோபர் 18

C) 1967 ஆகஸ்ட் 8

D) 1967 அக்டோபர் 8

(குறிப்பு: ஆசியான் அமைப்பு கையெழுத்திடப்பட்டு புகழ்பெற்ற பாங்காக் பிரகடனம் என்று அழைக்கப்பட்டது.)

ஆசியான் அமைப்பின் நிறுவன தலைவர்களாக திகழும் நாடுகள் எவை?

1. இந்தோனேசியா 2. மலேசியா 3. பிலிப்பைன்ஸ்

4. சிங்கப்பூர் 5. தாய்லாந்து 6. இந்தியா

A) 1, 2, 3, 5 B) 2, 3, 4, 5, 6

C) 1, 2, 3, 5, 6 D) 1, 2, 3, 4, 5

(குறிப்பு: ASEAN கூட்டமைப்பு கிழக்காசிய பகுதியில் மண்டல பொருளாதார ஒத்துழைப்பை ஒருங்கிணைக்கும் அமைப்பாகும்.)

ஆசியான் அமைப்பில் தற்போது ________________ உறுப்பு நாடுகள் உள்ளன.

A) 8 B) 10 C) 12 D) 14

(குறிப்பு: ஆசியான் அமைப்பின் உறுப்பு நாடுகளாக முறையே புருனே தருசாலம் 1984 ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் நாளும், வியட்நாம் 1995 ஆம் ஆண்டு ஜூலை 28ஆம் நாளும், லாவோஸ் மற்றும் மியான்மர் ஆகியவை 1997 ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் நாளும், கம்போடியா 1999ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதியும் இணைந்து கொண்டன.)

ஆசிய மறு உறுதி துவக்கச் சட்டம் (ARIA) குறித்த கூற்றுகளில் சரியானதை தேர்ந்தெடு.

1. இந்த புதிய சட்டமானது, தென் சீனா கடல் பகுதியில் சீனா செய்துவரும் சட்டவிரோதக் கட்டுமானம் மற்றும் செயற்கையாக ராணுவமயமாக்கல் மற்றும் அச்சுறுத்தும் பொருளாதார நடவடிக்கைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அதிகாரம் அளிக்கிறது.

2. இதன் நோக்கம் இந்திய-பசிபிக் பகுதியில் அமெரிக்காவின் ராணுவ பாதுகாப்பு, இதன் பொருளாதார நலன் அதன் மதிப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்ற பன்முகத்தன்மை.

3. அமெரிக்காவினுடைய ராணுவம் சார்ந்த நட்புறவு நாடுகளின் ஒத்துழைப்பை உயர்த்துவதற்கு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு 1.5 பில்லியன் டாலர் ஒதுக்கீடு செய்தது.

A) அனைத்தும் சரி

B) 1, 2 சரி

C) 2, 3 சரி

D) 1, 3 சரி

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா என்பதன் சுருங்கிய வார்த்தையான BRICS என்பது ____________ ஆண்டு “கோல்டுமேன் சாஸ்” என்ற அமைப்பை சார்ந்த “ஜிம் ஓ நீல்” என்பவரால் உருவாக்கப்பட்டது.

A) 2001 B) 2004 C) 2006 D) 2008

(குறிப்பு: ஜிம் ஓ நீல் அடுத்த 2050 ஆம் ஆண்டுக்குள் பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் “டாலர்” என்ற வகையில் மிகவும் தொழில் ரீதியாக வளர்ச்சி அடைந்த ஆறு நாடுகளைக் காட்டிலும் பெரிய நாடாக இருக்கும் என்றும் இது கடந்த 300 ஆண்டுகால “வல்லரசு” என்ற அடிப்படை இயக்கத்தையே முழுவதுமாக மாற்றி அமைக்க போகிறது என்று கணித்தார்.)

புதிய வளர்ச்சி வங்கியினை நிறுவிய அமைப்பு

A) ASEAN

B) SAARC

C) BRICS

D) ARIA

(குறிப்பு: புதிய வளர்ச்சி வங்கி 2015ஆம் ஆண்டு ஜூலை 7 அன்று பிரிக்ஸ் நாடுகளில் மற்றும் இதர வளரும் நாடுகளில் உள்கட்டமைப்பு மற்றும் நீடித்த வளர்ச்சி ஆகியவற்றுக்காக வளங்களை திருடுவதை தனது கருத்தாக கொண்டு இயங்குவதற்கு வந்தது.)

கூற்று 1: “அவசர கால நிதியிருப்பு ஒப்பந்தம்” என்பது பிரிக்ஸ் அமைப்பு ஏற்படுத்திய முயற்சியாகும். இது பிரிக்ஸ் நாடுகள் நிதி நெருக்கடிக்கு உள்ளாகும் போது நிதி பாதுகாப்புக் கருவியாகப் பயன்படுகிறது.

கூற்று 2: தற்சமயம் வெளிநாடு வாழ் இந்தியர்கள் எண்ணிக்கை கிட்டத்தட்ட 30 மில்லியன் இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. இதில் NRI எனப்படும் இந்தியாவில் வசிக்காத இந்தியர்கள் மற்றும் இந்தியாவை பூர்வீகமாக கொண்டு உலகெங்கும் பரவி இருப்போரையும் உள்ளடக்கியதாகும்.

A) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

B) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

C) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

ஏதோ ஒரு காரணத்திற்காக இந்திய குடிமக்கள் கால வரையறையின்றி வெளிநாடுகளில் வசிக்கும் குடிமக்கள் ________________ என வகைப்படுத்தப்படுகின்றனர்.

A) இந்திய வம்சாவழியினர்

B) வெளிநாடு வாழ் இந்தியர்

C) அரசற்ற இந்திய வம்சாவழியினர்

D) அகதிகள்

(குறிப்பு:

இந்திய வம்சாவழியினர் (PlO) – இவர்கள் வெளிநாட்டு இந்தியர்கள் என்று வகைப்படுத்தப்படுகின்றனர். அங்கேயே குடியுரிமை பெற்று, அங்கேயே நிரந்தரமாக தங்கி விடுவோரை குறிக்கும்.

அரசற்ற இந்திய வம்சாவழியினர் (SPIO) – இவர்கள் அரசற்ற இந்திய வம்சாவழியினர், இவர்களிடம் தாங்கள் இந்தியர்கள் என்பதற்கு போதுமான ஆதாரங்களை கொண்ட ஆவணங்கள் வைத்து இருக்காதவர்கள் ஆவர்.))

ராஜீவ்காந்தி அவர்களால் வெளிநாடு வாழ்வோருக்கான துறையை நிறுவுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட ஆண்டு

A) 1979 B) 1982 C) 1984 D) 1986

(குறிப்பு: இந்தியா விடுதலை அடைந்த காலகட்டத்தில், பிரதமர் ஜவஹர்லால் நேரு புலம்பெயர் இந்தியர் இந்தியர்களிடம் இருந்து “மிகவும் விலகியிருக்க கூடிய வகையில் தீவிரக் கொள்கையினை பின்பற்றினார்.”)

புலம்பெயர்ந்த இந்தியர்களுக்கான “பிரவாசி பாரதிய திவாஸ்” என்ற அமைப்பு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு

A) 2000 B) 2001 C) 2002 D) 2003

(குறிப்பு: அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையின் போது “பிரவாசி பாரதிய திவாஸ்” என்ற அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது.)

பிரவாசி பாரதிய திவாஸ் தினக் கொண்டாட்டமானது ஒவ்வொரு ஆண்டும் _____________ நாள் கொண்டாடப்படுகிறது.

A) ஜனவரி 6

B) ஜனவரி 8

C) ஜனவரி 9

D) ஜனவரி 12

(குறிப்பு: மகாத்மா காந்தி தென் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்பிய நாளை (ஜனவரி 9) குறிக்கும் விதமாக “பிரவாசி பாரதிய திவாஸ்” தினம் கொண்டாடப்படுகிறது.)

புலம் பெயர்ந்த தமிழர்கள் உலகம் முழுவதும் ______________ நாடுகளில் பரவி இருக்கின்றனர்.

A) 30 B) 35 C) 40 D) 50

(குறிப்பு: புலம்பெயர்ந்த தமிழர்கள் என்போர் தங்களது மூதாதையர்களின் சொந்த நாடான தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் இலங்கையில் இருந்து குடியேற்றம் பெற்றவர்களை குறிக்கும் சொல்லாகும்.)

இந்தியா நிறுவன உறுப்பினராக இருப்பது

A) ஐக்கிய நாடுகள் அவை

B) ஆசியான்

C) OAC

D) OPEC

தமிழ் அலுவல் மொழிகளாக உள்ள நாடுகள் எவை?

A) கனடா, இலங்கை

B) சிங்கப்பூர், இலங்கை

C) கியூபா, கனடா

D) கனடா, சிங்கப்பூர்

(குறிப்பு: தமிழ் சிறுபான்மை மொழியாக உள்ள நாடுகள் கனடா, மலேசியா, மொரிஷியஸ், க்ஷெல்ஸ், தென் ஆப்பிரிக்கா, ரீயூனியன் மற்றும் பிரான்ஸ் ஆகியவைகளாகும்.)

விவேகானந்தர் இல்லம் குறித்த கூற்றுகளில் தவறானதை தேர்ந்தெடு.

1. விவேகானந்தர் இல்லம் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ளது. இது ஒரு காலத்தில் ஐஸ் ஹவுஸ் என்று அழைக்கப்பட்டது.

2. இந்த இல்லமானது, 1840 ஆம் ஆண்டு “டியூடர் ஐஸ்” என்ற நிறுவனம், அமெரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்ட பனிக்கட்டிகளை சேமித்து வைக்கும் இடமாக பயன்படுத்தப்பட்டது.

A) இரண்டும் சரி

B) 1 மட்டும் சரி

C) 2 மட்டும் சரி

D) இரண்டும் தவறு

123 உடன்படிக்கையில் கையெழுத்திட்ட நாடுகள்

A) இந்திய-ரஷ்யா

B) இந்திய-அமெரிக்கா

C) இந்திய-பாகிஸ்தான்

D) இவை அனைத்தும்

(குறிப்பு: இந்திய குடியரசுக்கும்-அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கும் இடையே கையெழுத்திடப்பட்ட இந்திய-அமெரிக்கா ராணுவம் சாரா அணு ஒப்பந்தம் அல்லது இந்திய-அமெரிக்கா அணு ஒப்பந்தமே 123 உடன்படிக்கை என்றழைக்கப்படுகிறது. இதற்கான அடிப்படை கட்டமைப்பு வேலைக்காக 2005ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18ஆம் தேதி அன்று கையெழுத்திடப்பட்டது.)

இந்திய-அமெரிக்கா இடையே ராணுவம் சாரா அணு உலை எரிபொருள் மற்றும் தொழில்நுட்பத்தை பரிமாறிக் கொள்வது ஆகியவை உள்ளடங்கிய ஒப்பந்தத்திற்கு அமெரிக்க மேலவை செனட் ஒப்புதல் அளித்த நாள்

A) 2006 ஏப்ரல் 1

B) 2007 அக்டோபர் 1

C) 2008 ஏப்ரல் 1

D) 2008 அக்டோபர் 1

இந்திய-சோவியத் அமைதி, நட்புறவு மற்றும் ஒத்துழைப்பு உடன்படிக்கையானது கையெழுத்திடப்பட்ட நாள்

A) 1961 ஆகஸ்ட் 9

B) 1965 அக்டோபர் 9

C) 1971 ஆகஸ்ட் 9

D) 1978 அக்டோபர் 9

(குறிப்பு: இந்திய-சோவியத் அமைதி, நட்புறவு மற்றும் ஒத்துழைப்பு உடன்படிக்கை

இரு நாடுகளுக்கிடையே நிலவும் நட்புறவுகளை விரிவாக்கம் செய்ய விருப்பம் தெரிவிப்பது.

தேசத்தின் நலன்களை எட்டக்கூடியதாகவும், ஆசியாவிலும், உலகம் முழுவதும் நீடித்த அமைதி நிலவவும், நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை மேலும் வளர்த்தெடுப்பதுமான நடவடிக்கைகளை எடுத்தல்.

சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை மேம்படுத்தி தக்கவைக்க உறுதியேற்றுக் கொள்ளுதல், சர்வதேச பதட்டத்தை தனித்தல் மற்றும் காலனியாதிக்கத்தின் அனைத்து அடையாளங்களையும் இறுதியாக இல்லாமல் செய்தல்.

ஐக்கிய நாடுகள் சபை சாசனத்திற்கு கீழ்படிவது எனும் உறுதியை மறு உறுதிப்படுத்துவது ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது.

இன்று உலகத்தில் உள்ள சர்வதேச பிரச்சனைகள் அனைத்தையும் ஒத்துழைப்பின் மூலமே தீர்க்க முடியும், போரால் அல்ல என்பதை ஏற்றுக் கொள்ள வைப்பது.)

எஸ்-400 வான்வழி பாதுகாப்பு முறைக்கான வர்த்தகத்தில் கையெழுத்திட்ட நாடுகள்

A) இந்திய-அமெரிக்கா

B) இந்திய-ஜப்பான்

C) இந்திய-சீனா

D) இந்திய-ரஷ்யா

(குறிப்பு: இந்த வான்பாதுகாப்பு ஏற்பாடானது 2020ஆம் ஆண்டிற்குள் வழங்கப்பட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எஸ்-400 டிரையம்ஃப் என்பது மேம்பட்ட தரையில் இருந்து வானிற்கு சென்று தாக்கும் ஏவுகணை அமைப்பு முறை ஆகும். இதனை உருவாக்கியது “அல்மாஸ் ஆண்டே” என்ற ரஷ்ய அரசு நிறுவனமாகும்.)

எஸ்-400 ஏவுகணையின் தாக்கும் திறன் ______________ கிலோ மீட்டர் தொலைவு ஆகும்.

A) 250 B) 500 C) 750 D) 1000

(குறிப்பு: S-400 ஏவுகணையின் சிறப்பு தாக்கும் திறனை 400 கிலோ மீட்டர் தூரம் வரை அதிகப்படுத்த முடியும்.)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!