Book Back QuestionsTnpsc

இந்தியா அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு Book Back Questions 10th Social Science Lesson 11

10th Social Science Lesson 11

11] இந்தியா அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

மேற்கு – கிழக்கு மற்றும் வடக்கு – தெற்கு பரவல். அதிக மற்றும் குறைந்த பரப்பளவுள்ள மாநிலங்கள். சர்வதேச எல்லைகளைக் கொண்டிராத மாநிலங்கள் ஆகியவற்றை கண்டறிக.

ஆந்திரப்பிரதேசத்தின் தலைநகரம் அமராவதி நகர் ஆகும். ஆந்திரப்பிரதேச மறு சீரமைப்புச் சட்டத்தின்படி 2024 வரை ஹைதராபாத் நகரம் ஆந்திர பிரதேசம் மற்றும் தெலங்கானா மாநிலங்களின் தலைநகரமாக இருக்கும்.

ஆரவல்லி மலைத்தொடர் இந்தியாவிலேயே மிகப் பழமையான மடிப்பு மலைத் தொடராகும்.

இமயமலை பல சிகரங்களின் இருப்பிடமாக உள்ளது. உலகிலுள்ள ஏனைய மலைத்தொடர்களைக் காட்டிலும் அதிகமான சிகரங்களைக் கொண்டுள்ளது. உலகிலுள்ள 14 உயரமான சிகரங்களில் 9 சிகரங்களை தன்னகத்தே கொண்டுள்ளது.

காரகோரம் கணவாய் (ஜம்மு-காஷ்மீர்), ஜொஷிலா கணவாய், சிப்கிலா கணவாய் (இமாச்சல பிரதேசம்) பொமிடிலா கணவாய் (அருணாச்சல பிரதேசம்) நாதுலா மற்றும் ஜெலிப்லா கணவாய் (சிக்கிம்) ஆகியன இமயமலையின் முக்கியக் கணவாய்களாகும். பாகிஸ்தானையும், ஆப்கானிஸ்தானையும் இணைக்கும் கைபர் கணவாய் மற்றும் பாகிஸ்தானிலுள்ள போலன் கணவாயும் இந்தியத் துணைக் கண்டத்திலுள்ள முக்கியக் கணவாய்களாகும்.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. இந்தியாவின் வடக்கு தெற்கு பரவல்

(அ) 2500 கி. மீ

(ஆ) 2933 கி. மீ

(இ) 3214 கி. மீ

(ஈ) 2814 கி. மீ

2. பீகாரின் துயரம் என்று அழைக்கப்படும் ஆறு

(அ) நர்மதா

(ஆ) கோதாவரி

(இ) கோசி

(ஈ) தாமோதர்

3. மூன்று பக்கம் நீரால் சூழப்பட்ட பகுதி ____________ என அழைக்கப்படுகிறது.

(அ) கடற்கரை

(ஆ) தீபகற்பம்

(இ) தீவு

(ஈ) நீர்ச்சந்தி

4. பாக் நீர்சந்தி மற்றும் மன்னார் வளைகுடா ___________ ஐ இந்தியாவிடமிருந்து பிரிக்கிறது.

(அ) கோவா

(ஆ) மேற்கு வங்காளம்

(இ) இலங்கை

(ஈ) மாலத்தீவு

5. தென்னிந்தியாவின் மிக உயரமான சிகரம் ___________

(அ) ஊட்டி

(ஆ) ஆனை முடி

(இ) கொடைக்கானல்

(ஈ) ஜின்டா கடா

6. பழைய வண்டல் படிவுகளால் உருவான சமவெளி ___________

(அ) பாபர்

(ஆ) தராய்

(இ) பாங்கர்

(ஈ) காதர்

7. பழவேற்காடு ஏரி ___________ மாநிலங்களுக்கிடையே அமைந்துள்ளது.

(அ) மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா

(ஆ) கர்நாடகா மற்றும் கேரளா

(இ) ஒடிசா மற்றும் ஆந்திரப் பிரதேசம்

(ஈ) தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசம்

பொருத்துக:

1. சாங்போ – கங்கை ஆற்றின் துணை ஆறு

2. யமுனை – இந்தியாவின் உயர்ந்த சிகரம்

3. புதிய வண்டல் படிவுகள் – பிரம்பபுத்திரா

4. காட்வின் ஆஸ்டின் (K2) – தென்கிழக்கு கடற்கரைச் சமவெளி

5. சோழ மண்டலக்கடற்கரை – காதர்

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)

1. (3214 கி. மீ) 2. கோசி 3. தீபகற்பம் 4. இலங்கை 5. ஆனைமுடி

6. பாங்கர் 7. தமிழ்நாடு மற்றும் ஆந்திரபிரதேசம்

பொருத்துக: (விடைகள்)

1. சாங்போ – பிரம்மபுத்திரா

2. யமுனா – கங்கை ஆற்றின் துணை ஆறு

3. புதிய வண்டல் படிவுகள் – காதர்

4. காட்வின் ஆஸ்டின் (K2) – இந்தியாவின் உயர்ந்த சிகரம்

5. சோழ மண்டலக் கடற்கரை – தென்கிழக்கு கடற்கரைச் சமவெளி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!