Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Book Back QuestionsTnpsc

இந்தியா – மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம் Book Back Questions 10th Social Science Lesson 15

10th Social Science Lesson 15

15] இந்தியா – மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

இந்தியாவின் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு 1872ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. முழுமையான முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு 1881ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. நாட்டின் 15வது மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011ஆம் ஆண்டு நடைபெற்றது.

ஷெர்சா சூர் தன்னுடைய பேரரசை பலப்படுத்தவும் ஒருங்கிணைக்கவும் சாஹி (ராயல்) சாலையை சிந்து பள்ளத்தாக்கிலிருந்து மேற்கு வங்காளத்தில் உள்ள சோனார் பள்ளத்தாக்கு வரை அமைத்தார். கொல்கத்தாவிலிருந்து பெஷாவர் வரை உள்ள இச்சாலை ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கிராண்ட் ட்ரங்க் சாலை என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தற்போது இச்சாலை அமிர்தரசிலிருந்து கொல்கத்தா வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதல் புறநகர் இரயில் போக்குவரத்து மும்பையில் 1925இல் தொடங்கப்பட்டது. காத்திமன் (GATHIMAN) அதிவிரைவு வண்டி இந்தியாவின் மிக அதிக வேக இரயில் வண்டி ஆகும். இந்த இரயில் வண்டி புதுடெல்லியையும் ஆக்ராவையும் இணைக்கிறது.

மேகலாயா மாநிலத்தில் இரயில் போக்குவரத்து இல்லை.

இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) 1995இல் நிறுவப்பட்டது. இது தரைவழி போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தன்னாட்சி பெற்ற அமைப்பாகும்.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. மக்கள் தொகையின் பல்வேறு அம்சங்கள் பற்றிய அறிவியல் பூர்வமான படிப்பு ____________

(அ) வரைபடவியல்

(ஈ) மக்களியல்

(ஈ) மானுடவியல்

(ஈ) கல்வெட்டியல்

2. __________ போக்குவரத்து நேரடியாக உற்பத்தியாளரையும் நுகர்வோரையும் இணைக்கிறது.

(அ) இரயில்வே

(ஆ) சாலை

(இ) வான்வழி

(ஈ) நீர்வழி

3. இந்தியாவில் தங்க நாற்கரச் சாலையின் நீளம்

(அ) 5846 கி. மீ

(ஆ) 5942 கி. மீ

(இ) 5630 கி. மீ

(ஈ) 5800 கி. மீ

4. தேசிய தொலையுணர்வு மையம் அமைந்துள்ள இடம் ____________

(அ) பெங்களுரு

(ஆ) சென்னை

(இ) புது டெல்லி

(ஈ) ஹைதராபாத்

5. எளிதில் செல்ல முடியாத பகுதிகளுக்கு பயன்படும் போக்குவரத்து

(அ) சாலைப்போக்குவரத்து

(ஆ) இரயில் போக்குவரத்து

(இ) வான்வழிப் போக்குவரத்து

(ஈ) நீர்வழிப் போக்குவரத்து

6. கீழ்க்கண்டவற்றில் எவை வானுலங்கு ஊர்தியுடன் (ஹெலிகாப்டர்) தொடர்புடையது?

(அ) ஏர் இந்திய

(ஆ) இந்தியன் ஏர்லைன்ஸ்

(இ) வாயுதூத்

(ஈ) பவன்ஹான்ஸ்

7. இந்தியாவின் முக்கிய இறக்குமதி பொருள்

(அ) சிமெண்ட்

(ஆ) ஆபரணங்கள்

(இ) தேயிலை

(ஈ) பெட்ரோலியம்

பொருத்துக:

1. எல்லைபுறச் சாலை – செயற்கைக்கோள் தகவல் தொடர்பு

2. INSAT (இன்சாட்) – நகரமயமாக்கலின் தாக்கம்

3. மேசகான் கப்பல் கட்டும் தளம் – 1990

4. புறநகரப் பரவல் – மும்பை

5. கொங்கண் இரயில்வே – 1960 ஹைதராபாத்

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)

1. மக்களியல் 2. சாலை 3. (5846 கி. மீ) 4. ஹைதராபாத்

5. வான்வழிப் போக்குவரத்து 6. பவன்ஹான்ஸ் 7. பெட்ரோலியம்

பொருத்துக: (விடைகள்)

1. எல்லைபுறச் சாலை – 1960 ஹைதராபாத்

2. INSAT (இன்சாட்) – செயற்கைகோள் தகவல் தொடர்பு

3. மேசகான் கப்பல்கட்டும் தளம் – மும்பை

4. கொங்கண இரயில்வே – 1990

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!