Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Book Back QuestionsTnpsc

இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு Book Back Questions 9th Social Science Lesson 27

9th Social Science Lesson 27

27] இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

இடைக்கால வரலாற்றுக் காலத்தில் இந்தியாவின் டெல்லி சுல்தான் பெரோஸ் ஷா துக்ளக், வேலைவாய்ப்பின்மைச் சிக்கலைத் தீர்ப்பதற்காக “வேலைவாய்ப்பு அலுவலகத்தை” அமைத்தார்.

இரு வேல்பட்டுவில் வேலைவாய்ப்பு: ஒரு கள ஆய்வு. வேலைவாய்ப்பு நிலவரங்களில் ஏற்படும் மாற்றத்தைத் தேசிய அல்லது மாநில அளவில் மட்டும் தான் புரிந்து கொள்ள முடியும் என்றில்லை; கிராமத்தை ஆய்வு செய்வதிலிருந்தும் புரிந்து கொள்ளலாம். இருவேல்பட்டு என்பது தமிழ்நாட்டில், விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமமாகும். இந்தக் கிராமம் 100 ஆண்டுகளுக்கும் அதிகமாக அறிஞர்கள் பலராலும் ஆய்வு செய்யப்பட்டு வந்துள்ளது. இந்த கிராமம் ஸ்லேட்டர் கிராமம் என்றும் கூறப்படும்; ஏனெனில், சென்னைப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றி வந்த கில்பர்ட் ஸ்லேட்டர் என்பவர் முதன் முதலில் தனது மாணவர்களுடன் கள ஆய்வு செய்வதற்காக இந்த கிராமத்திற்கு 1916ஆம் ஆண்டு சென்றார். காலப் போக்கில் பல ஆய்வாளர்கள் கிராமத்தவர்களின் வேலை குறித்து கணக்காய்வு செய்து, கிராமத்திலுள்ள ஒவ்வொருவர் குறித்தும் மேலும் பல விவரங்களைச் சேகரித்துள்ளனர். இந்தக் கிராம வளர்ச்சியின் காரணம் கிராம மக்களிடையே ஆரம்ப சுகாதார நலம், பள்ளிகள் அமைத்தது. பொது விநியோக அமைப்பு ஆகியவற்றின் மீது சமூகப் பாதுகாப்பு விழிப்புணர்வு அரசாங்கம் அவர்களுக்கு ஏற்படுத்தியது காரணமாகும். இந்தக் கிராமம் பல மாறுதல்களுக்கு உட்பட்டுள்ள போதிலும் இன்னமும் அவர்களின் வேலைவாய்ப்புக்கு முக்கியமாக விவசாயத்தையே சார்ந்துள்ளது. பின்வரும் அட்டவணையைப் பாருங்கள். 1981ஆம் ஆண்டில் 100 குடும்பங்களில் 24 குடும்பங்கள் விவசாயமல்லாத வேலைகளில் ஈடுபட்டிருந்ததைக் காணலாம். 2008ஆம் ஆண்டில் விவசாயமல்லாத வேலைகளில் இருந்த குடும்பங்களின் எண்ணிக்கை 41ஆக உயர்ந்துள்ளது. 1981-2008 காலத்தில் விவசாயத்தில் 34% லிருந்து 26% ஆக விவசாயக் கூலிகளாகவும், பயிரிடுவோராகவும் ஈடுபட்டிருந்த குடும்பங்களின் விகிதம் குறைந்துள்ளது.

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. பணியிடத்தைக் கணக்கிடுவதற்கு ————– வயது வரையிலான வயதை கணக்கிடலாம்.

(அ) 12-60

(ஆ) 15-60

(இ) 21-65

(ஈ) 5-14

2. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பல்வேறு துறைகளில் எந்த இறங்கு வரிசை சரியானது?

(அ) முதன்மை துறை, இரண்டாம் துறை, சார்புத் துறை

(ஆ) முதன்மைத் துறை, சார்புத் துறை, இரண்டாம் துறை

(இ) சார்புத் துறை, இரண்டாம் துறை, முதன்மைத் துறை

(ஈ) இரண்டாம் துறை, சார்புத் துறை, முதன்மைத் துறை

3. பின்வரும் துறைகளில் இந்தியாவில் மிகப்பெரிய வேலைவாய்ப்புத் துறை எது?

(அ) முதன்மைத்துறை

(ஆ) இரண்டாம் துறை

(இ) சார்புத் துறை

(ஈ) பொதுத்துறை

4. பின்வருவனவற்றுள் எது முதன்மைத் துறை சார்ந்ததல்ல?

(அ) வேளாண்மை

(ஆ) உற்பத்தி

(இ) சுரங்கத் தொழில்

(ஈ) மீன்பிடித் தொழில்

5. பின்வருவனவற்றுள் எது இரண்டாம் துறையை சார்ந்ததல்ல?

(அ) கட்டுமானம்

(ஆ) உற்பத்தி

(இ) சிறுதொழில்

(ஈ) காடுகள்

6. மூன்றாம் துறையில் அடங்குவது

(அ) போக்குவரத்து

(ஆ) காப்பீடு

(இ) வங்கியல்

(ஈ) அனைத்தும்

7. எந்த துறையில் தொழிலமைப்பு முறை சேர்க்கப்படவில்லை?

(அ) முதன்மைத் துறை

(ஈ) இரண்டாம் துறை

(இ) சார்புத் துறை

(ஈ) தனியார் துறை

8. பொருத்துக:

பட்டியல் – I பட்டியல் – II

1. வேளாண்மை, காடுகள் மீன்பிடிப்பு மற்றும் சுரங்கம் – ஒழுங்கமைக்கப்படாத துறை

2. உற்பத்தி, மின்உற்பத்தி எரிவாயு மற்றும் குடிநீர் விநியோகம் – சார்புத் துறை

3. வாணிபம், போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு – இரண்டாம் துறை

4. குழுமப் பதிவற்ற நிறுவனங்கள் மற்றும் வீட்டுத் தொழில்கள் – முதன்மைத் துறை

அ ஆ இ ஈ

(அ) 1 2 3 4

(ஆ) 4 3 2 1

(இ) 2 3 1 4

(ஈ) 3 2 4 1

9. எந்த டெல்லி சுல்தான் வேலையின்மை பிரச்சனையை தீர்க்க “வேலை வாய்ப்பு அலுவலகத்தை” அமைத்தார்?

(அ) முகமது பின் துக்ளக்

(ஆ) அலாவுதீன் கில்ஜி

(இ) ஃபெரோஷ் ஷா துக்ளக்

(ஈ) பால்பன்

10. ———– துறை பதிவு செய்யப்பட்டு மற்றும் அரசு விதிகளை பின்பற்றுகிறது.

(அ) வேளாண்மை

(ஆ) ஒழுங்கமைக்கப்பட்ட

(இ) ஒழுங்கமைக்கப்படாத

(ஈ) தனியார்

11. ————— துறை வேலை பாதுகாப்பு மற்றும் அதிக ஊதியம் வழங்குகிறது.

(அ) பொதுத் துறை

(ஆ) ஒழுங்கமைக்கப்பட்டத் துறை

(இ) ஒழுங்கமைக்கப்படாத துறை

(ஈ) தனியார் துறை

12. பொருந்தாத ஒன்றைக் கண்டறிக:

(அ) வங்கியியல்

(ஆ) ரயில்வே

(இ) காப்பீடு

(ஈ) சிறுதொழில்

13. பொதுத்துறை மற்றும் தனியார் துறை என்று எதன் அடிப்படையில் வகைப்படுத்தபடுகிறது?

(அ) பணியாளர்களின் எண்ணிக்கை

(ஆ) இயற்கை வளங்கள்/பொருளாதார செயல்முறை

(இ) நிறுவனங்களின் உரிமை

(ஈ) வேலைவாய்ப்பின் நிலை

14. கூற்று (A): ஒழுங்குபடுத்தப்படாத துறையின் பொருளாதார பண்பு என்பது வீட்டினுள் உற்பத்தி நடவடிக்கை மற்றும் சிறுதொழில் செய்வதாகும்.

காரணம் (R): இங்கு குறைவான ஊதியமும் மற்றும் வேலைகள் முறையாக வழங்கப்படுவதில்லை.

(அ) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது மற்றும் (R), (A)வை விளக்குகிறது.

(ஆ) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது (R), (A)வை விளக்கவில்லை.

(இ) (A) சரியானது மற்றும் (R) தவறானது.

(ஈ) (A) தவறானது மற்றும் (R) சரியானது.

15. தொழிலாளர்களைப் பணியமர்த்துபவர்களாகவும், அவர்கள் பணிக்கான வெகுமதிகளைச் செலுத்தும் நபர்களாகவும் உள்ளவர்கள்.

(அ) ஊழியர்

(ஆ) முதலாளி

(இ) உழைப்பாளி

(ஈ) பாதுகாவலர்

16. தமிழ் நாட்டில் ————– துறையில் அதிக நபர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

(அ) வேளாண்மை

(ஆ) உற்பத்தி

(இ) வங்கியல்

(ஈ) சிறுதொழில்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. —————- துறையில் வேலைவாய்ப்புகள் நிலையான மற்றும் முறையானவை அல்ல.

2. பொருளாதார நடவடிக்கைகள் ————— மற்றும் ————- துறைகளாக வகைப்படுத்தப்படுகின்றன.

3. —————- எப்போதும் இந்தியாவின் வளர்ச்சிக் கொள்கையில் ஒரு முக்கிய உறுப்பாக இடம் பெற்றுள்ளது.

4. வேலைவாய்ப்பு முறை மாற்றத்திற்கான காரணம் —————-

5. இந்தியாவில் வேலைவாய்ப்பின் தன்மை —————–

6. —————–ன் பொருளாதாரம் என்பது நாட்டு மக்களின் எண்ணிக்கை, உழைக்கும் மற்றும் உழைக்கும் திறன் பெற்றவர்களைக் குறிக்கும்.

7. பொதுத்துறை என்பது —————–

III. பொருத்துக:

1. பொதுத்துறை – அ] வங்கியல்

2. தனியார் துறை – ஆ] கோழி வளர்ப்பு

3. முதன்மைத் துறை – இ] இலாப நோக்கம்

4. சார்புத் துறை – ஈ] சேவை நோக்கம்

விடைகள்:

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. 15-60, 2. சார்புத் துறை, இரண்டாம் துறை, முதன்மைத் துறை, 3. முதன்மைத்துறை, 4. உற்பத்தி, 5. காடுகள், 6. அனைத்தும், 7. தனியார் துறை, 8. 4, 3, 2, 1, 9. ஃபெரோஷ் ஷா துக்ளக், 10. ஒழுங்கமைக்கப்பட்ட, 11. ஒழுங்கமைக்கப்பட்டத் துறை, 12. சிறுதொழில், 13. நிறுவனங்களின் உரிமை, 14. (A) மற்றும் (R) இரண்டும் சரியானது (R), (A)வை விளக்கவில்லை, 15. முதலாளி, 16. வேளாண்மை

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. ஒழுங்கமைக்கப்படாத, 2. பொது, தனியார், 3. வேலைவாய்ப்பு, 4. மக்களின்’வாழ்க்கைமுறை, 5. பல பரிணாமங்களை கொண்டது, 6. உழைப்பாளர் குழுவின், 7. அரசு நிர்வாகம் செய்யும் நிறுவனம்

III. பொருத்துக:

1. ஈ, 2. இ, 3. ஆ, 4. அ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!