Book Back QuestionsTnpsc

இந்தியா – வேளாண்மை Book Back Questions 10th Social Science Lesson 13

10th Social Science Lesson 13

13] இந்தியா – வேளாண்மை

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

மண் சீரழிவு: இந்தியாவில் மண் சீரழிவு என்பது ஒரு முக்கிய பிரச்சனையாக உள்ளது. இந்திய தொலை நுண்ணுணர்வு (IIRS), 2015ஆம் ஆண்டு அறிக்கையின் படி 147 மில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்பு மண் அரிப்பால் பாதிப்படைந்துள்ளது.

இந்திய மண் வகைகள் எதிர்கொள்ளும் சவால்கள்: (1) மண் அரிப்பு (தாள் அரிப்பு, நீரோட்ட மண்ணரிப்பு, நீர் பள்ள மண்ணரிப்பு, பள்ளத்தாக்கு மண்ணரிப்பு). (2) மண் சீரழிவு. (3) நீர் தேங்குதல். (4) உவர்ப்பு மற்றும் காரத்தன்மை. (5) உப்பு படிவுகள் ஆகியனவாகும்.

மண் வளப்பாதுகாப்பும் மண் வள மேலாண்மையும்: (1) காடுகள் உருவாக்கம். (2) அணைகள் மற்றும் குறுக்கணைகள் கட்டுதல். (3) அதிக மேய்ச்சலைத் தடுத்தல். (4) மேம்பட்ட பயிர்ச்சாகுபடி முறைகளைப் பின்பற்றல். சம உயரம் உழுதல், பயிற்சுழற்சி முறை, கரைகள் கட்டுதல், படிக்கட்டு வேளாண்மை, பட்டை பயிரிடல், காற்றெதிர் திசையில் மரங்கள் நடல், நிலைத்த வேளாண் நுட்பத்தையும் மண் மேலாண்மைக்கு உகந்த பாதுகாப்பு முறைகளையும் பின்பற்றுதல்.

பிரதான் மந்திரி கிருஷி சிஞ்சாயி யோஜனா – (PMKY): குறைந்த அளவு நீரில் அதிக மகசூலை பெறுதல் மற்றும் தண்ணீர் பயன்பாட்டை மேம்படுத்த ஏற்படுத்தப்பட்ட திட்டம் ஆகும்.

இந்தியாவில் உள்ள இடப்பெயர்வு வேளாண்மையின் பல்வேறு பெயர்கள்: ஜீம்-அசாம், பொன்னம்-கேரளா, பொடு-ஆந்திரப்பிரதேசம் மற்றும் ஒடிசா, பீவார், மாசன், பென்டா, பீரா-மத்தியப்பிரதேசம்.

இந்தியாவின் முதல் கால்நடை கணக்கெடுப்பு 1919இல் மிகக் குறைந்த பால் பண்ணை கால்நடைகளுடன் எடுக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் கால்நடை கணக்கெடுப்பு எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது? தமிழ்நாடு அரசு மாநில அளவிலான கால்நடை கணக்கெடுப்பை கால்நடை வளர்ப்புத் துறை உதவியுடன் மேற்கொள்கிறது. மாவட்ட அளவிலான கணக்கெடுப்பு மண்டல இணை இயக்குநர் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இக்கணக்கெடுப்புகள் மத்திய அரசின் 1 வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகம், கால்நடை வளர்ப்பு, பால் பண்ணை, மீன்வளத் துறை போன்றவற்றின் வழிகாட்டுதலின் படி மேற்கொள்ளப்படுகிறது.

இந்தியாவின் முக்கிய வேளாண் புரட்சிகள்
புரட்சிகள் உற்பத்திகள்
மஞ்சள்புரட்சி எண்ணெய் வித்துக்கள் (குறிப்பாக கடுகு மற்றும் சூரிய காந்தி)
நீலப்புரட்சி மீன்கள் உற்பத்தி
பழுப்புப் புரட்சி தோல், கோக்கோ, மரபுசாரா உற்பத்தி
தங்க நூலிழைப் புரட்சி சணல் உற்பத்தி
பொன் புரட்சி பழங்கள், தேன் மற்றும் தோட்டக்கலைப்பயிர்
சாம்பல் புரட்சி உரங்கள்
இளஞ்சிவப்பு புரட்சி வெங்காயம், மருந்து பொருள்கள், இறால் உற்பத்தி
பசுமைப்புரட்சி அனைத்து வேளாண் உற்பத்தி
வெள்ளிப்புரட்சி முட்டை மற்றும் கோழிகள்
வெள்ளி இழைப்புரட்சி பருத்தி
சிவப்புப் புரட்சி இறைச்சி உற்பத்தி, தக்காளி உற்பத்தி
வட்டப்புரட்சி உருளைக்கிழங்கு
வெண்மைப்புரட்சி பால் உற்பத்தி

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. ___________ மண்ணில் இரும்பு ஆக்ஸைடு அதிகமாக காணப்படுகிறது.

(அ) வண்டல்

(ஆ) கரிசல்

(இ) செம்மண்

(ஈ) உவர் மண்

2. எந்த நிறுவனம் இந்தியாவில் உள்ள மண் வகைகளை 8 பெரும் பிரிவுகளாகப் பிரித்துள்ளது?

(அ) இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம்

(ஆ) இந்திய வானியல் துறை

(இ) இந்திய மண் அறிவியல் நிறுவனம்

(ஈ) இந்திய மண் ஆய்வு நிறுவனம்

3. ஆறுகளின் மூலம் உருவாகும் மண்

(அ) செம்மண்

(ஆ) கரிசல் மண்

(இ) பாலைமண்

(ஈ) வண்டல் மண்

4. இந்தியாவின் உயரமான புவிஈர்ப்பு அணை

(அ) ஹிராகுட் அணை

(ஆ) பக்ராநங்கல் அணை

(இ) மேட்டூர் அணை

(ஈ) நாகர்ஜீனா சாகர் அணை

5. ___________ என்பது ஒரு வாணிகப்பயிர்.

(அ) பருத்தி

(ஆ) கோதுமை

(இ) அரிசி

(ஈ) மக்காச்சேளம்

6. கரிசல் மண் __________ எனவும் அழைக்கப்படுகிறது.

(இ) வறண்ட மண்

(ஆ) உவர் மண்

(இ) மலை மண்

(ஈ) பருத்தி மண்

7. உலகிலேயே மிக நீளமான அணை ____________

(அ) மேட்டூர் அணை

(ஆ) கோசி அணை

(இ) ஹிராகுட் அணை

(ஈ) பக்ராநங்கல் அணை

8. இந்தியாவில் தங்க இழைப்பயிர் என அழைக்கப்படுவது _____________

(அ) பருத்தி

(ஆ) கோதுமை

(இ) சணல்

(ஈ) புகையிலை

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

1. கூற்று: பழங்கள் காய்வகைகள் மற்றும் பூக்கள் பயிரிடலில் ஈடுபடுவது தோட்டக்கலைத் துறையாகும்.

காரணம்: உலகளவில் இந்தியா மா, வாழை மற்றும் சிட்ரஸ் பழவகை உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது.

(அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.

(ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல.

(இ) கூற்று சரி, காரணம் தவறு

(ஈ) கூற்று தவறு, காரணம் சரி

2. கூற்று: வண்டல் மண் ஆறுகளின் மூலம் அரிக்கப்பட்டு படியவைக்கப்பட்ட, மக்கிய பொருட்களால் ஆன ஒன்று.

காரணம்: நெல் மற்றும் கோதுமை வண்டல் மண்ணில் நன்கு வளரும்

(அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, கூற்று காரணத்திற்கான சரியான விளக்கம்.

(ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, கூற்றுக்கான காரணம் சரியான விளக்கமல்ல.

(இ) கூற்று சரி, காரணம் தவறு

(ஈ) கூற்று தவறு, காரணம் சரி

பொருந்தாததைத் தேர்ந்தெடுக்கவும்

1.

(அ) கோதுமை

(ஆ) நெல்

(இ) திணை வகைகள்

(ஈ) காபி

2.

(அ) காதர்

(ஆ) பாங்கர்

(இ) வண்டல் மண்

(ஈ) கரிசல் மண்

3.

(அ) வெள்ளப்பெருக்கு கால்வாய்

(ஆ) வற்றாத கால்வாய்

(இ) ஏரிப்பாசனம்

(ஈ) கால்வாய்

பொருத்துக:

1. இந்தியாவின் சர்க்கரை கிண்ணம் – மகாநதி

2. காபி – தங்கப் புரட்சி

3. டெகிரி அணை – கர்நாடகா

4. ஹிராகுட் – உத்திரப்பிரதேசம் மற்றும் பீகார்

5. தோட்டக் கலை – இந்தியாவின் உயரமான அணை

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)

1. செம்மண் 2. இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் 3. வண்டல் மண்

4. பக்ராநங்கல் அணை 5. பருத்தி 6. பருத்தி மண் 7. ஹிராகுட் அணை 8. சணல்

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றைத் தேர்வு செய்க:

1. கூற்று சரி, காரணம் தவறு

2. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, கூற்றுக்கான காரணம் சரியான விளக்கமல்ல.

பொருந்தாததைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)

1. காபி 2. கரிசல் மண் 3. ஏரிப்பாசனம்

பொருத்துக: (விடைகள்)

1. இந்தியாவின் சர்க்கரை கிண்ணம் – உத்திரப்பிரதேசம் மற்றும் பீகார்

2. காபி – கர்நாடகா

3. டெகிரி அணை – இந்தியாவின் உயரமான அணை

4. ஹிராகுட் – மகாநதி

5. தோட்டக்கலை – தங்கப் புரட்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!