Book Back QuestionsTnpsc

இந்திய அரசமைப்புச் சட்டம் Book Back Questions 6th Social Science Lesson 14

6th Social Science Lesson 14

14] இந்திய அரசமைப்புச் சட்டம்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

அண்ணல் அம்பேத்கர் “இந்திய அரசமைப்புச் சட்டத்தின் தந்தை” என அழைக்கப்படுகிறார்.

அரசமைப்புச் சட்ட வரைவுக் குழுவில் பி. ஆர். அம்பேத்கர், என். கோபாலசாமி. கே. எம். முன்ஷி, சையத் முஹம்மது சதுல்லா, பி. எல். மிட்டர், என். மாதவ ராவ், டி. டி. கே, டி. பி. கேதான் ஆகிய சட்ட வல்லுனர்கள் இடம் பெற்றிருந்தனர். அக்குழுவின் தலைவரான பி. ஆர். அம்பேத்கர் நமது அரசியல் சட்டத்தை உருவாக்கிய முதன்மை வடிவமைப்பாளராகக் கருதப்படுகிறார். நமது அரசியல் சட்டம் உருவானபோது, 395 உறுப்புகள், 22 பகுதிகள் மற்றும் 8 அட்டவணைகள் இடம் பெற்றிருந்தன. தற்போது 448 உறுப்புகள், 25 பகுதிகள் மற்றும் 12 அட்டவணைகள் இடம் பெற்றுள்ளன. அரசமைப்புச் சட்டம் 16. 09. 2016 வரை 101 முறை திருத்தப்பட்டுள்ளது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உண்மைப் பிரதிகள் (இந்தி, ஆங்கிலம்) நாடாளுமன்ற நூலகத்தில் ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பேழையில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. அரசமைப்புத் தினம் கொண்டாடப்படும் நாள் __________

(அ) ஜனவரி 26

(ஆ) ஆகஸ்டு 15

(இ) நவம்பர் 26

(ஈ) டிசம்பர் 9

2. அரசமைப்புச் சட்டத்தை __________ ஆம் ஆண்டு அரசியல் நிர்ணயசபை ஏற்றுக்கொண்டது.

(அ) 1946

(ஆ) 1950

(இ) 1947

(ஈ) 1949

3. அரசமைப்புச் சட்டத்தில் இதுவரை __________ சட்டத்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

(அ) 101

(ஆ) 100

(இ) 78

(ஈ) 46

4. இஃது அடிப்படை உரிமை அன்று ___________

(அ) சுதந்திர உரிமை

(ஆ) சமத்துவ உரிமை

(இ) ஒட்டுரிமை

(ஈ) கல்வி பெறும் உரிமை

5. இந்தியக் குடிமக்களின் வாக்குரிமைக்கான வயது ___________

(அ) 14

(ஆ) 18

(இ) 16

(ஈ) 21

கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. அரசியல் நிர்ணய சபையின் தலைவராக __________ தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் தந்தை என போற்றப்படுபவர் ___________

3. நம் அடிப்படை உரிமைகளை உறுதி செய்யவும் பாதுகாக்கவும் செய்வது _________ ஆகும்.

4. நம் அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாள் ___________

பொருத்துக:

1. சுதந்திர தினம் – அ. நவம்பர் 26

2. குடியரசு தினம் – ஆ. ஏப்ரல் 1

3. இந்திய அரசமைப்பு தினம் – இ. ஆகஸ்டு 15

4. அனைவருக்கும் கல்வி உரிமை – ஈ. ஜனவரி 26

        1   2   3   4

(அ) இ அ ஈ ஆ

(ஆ) இ ஈ அ ஆ

(இ) ஈ ஆ அ இ

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)

1. (நவம்பர் 26) 2. (1949) 3. (101) 4. ஓட்டுரிமை 5. (18)

கோடிட்ட இடங்;களை நிரப்புக: (விடைகள்)

1. டாக்டர். ராஜேந்திர பிரசாத் 2. அண்ணல் அம்பேத்கர் 3. இந்திய அரசியலமைப்புச் சட்டம்

4. (1950 ஜனவரி 26)

பொருத்துக: (விடைகள்)

1. சுதந்திர தினம் – ஆகஸ்டு 15

2. குடியரசு தினம் – ஜனவரி 26

3. இந்திய அரசமைப்பு தினம் – நவம்பர் 26

4. அனைவருக்கும் கல்வி உரிமை – ஏப்ரல் 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!