Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
MCQ Questions

இந்திய அரசியலமைப்பு 10th Social Science Lesson 7 Questions in Tamil

10th Social Science Lesson 7 Questions in Tamil

7] இந்திய அரசியலமைப்பு

1. அமைச்சரவை தூதுக்குழு உருவாக்கப்பட்ட ஆண்டு

அ) 1947

ஆ) 1946

இ) 1945

ஈ) 1944

குறிப்பு: அமைச்சரவை தூதுக்குழு திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட இந்திய அரசியல் நிர்ணய சபையால் இந்திய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது.

2. பின்வருவனவற்றில் சரியான கூற்றைத் தேர்ந்தெடு.

(1) அரசியலமைப்பு என்பது ஒரு நாட்டின் அச்சாணி ஆகும்.

(2) ஒரு நாட்டின் நிர்வாகமானது எந்த அடிப்படைக் கொள்கைகளைச் சார்ந்து அமைந்துள்ளது என்பதை பிரதிபலிக்கும் அடிப்படைச்சட்டம் அரசியலமைப்பு ஆகும்.

அ) 1 மட்டும் சரி

ஆ) 2 மட்டும் சரி

இ) 1,2 -ம் சரி

ஈ) ஏதுமில்லை

3. இந்திய நிர்ணய சபையில் மொத்தம் எத்தனை உறுப்பினர்கள் இருந்தனர்?

அ) 389

ஆ) 285

இ) 385

ஈ) 388

குறிப்பு: 292 மாகாணப்பிரதிநிதிகளும், 93 சுதேச அரசுகளின் நியமன உறுப்பினர்களும், பலுச்சிஸ்தான் சார்பில் ஒருவரும், 3 மாகாண முதன்மை ஆணையர்களும் இந்திய நிர்ணய சபையில் உறுப்பினர்களாக இருந்தனர்.

4. இந்திய அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் எப்போது நடைபெற்றது

அ) டிசம்பர் 6, 1946

ஆ) டிசம்பர் 9, 1946

இ) டிசம்பர் 11, 1946

ஈ) டிசம்பர் 13, 1946

குறிப்பு: இந்திய அரசியல் நிர்ணய சபை டிசம்பர் 6, 1946 அன்று உருவாக்கப்பட்டது. இதன் தற்காலிகத் தலைவராக Dr.சச்சிதானந்த சின்ஹா இருந்தார். இவர் இக்கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது மரணமடைந்தார்.

5. அரசியலமைப்பு என்ற கொள்கை தோன்றிய முதல் நாடு

அ) அயர்லாந்து

ஆ) ரஷ்யா

இ) இங்கிலாந்து

ஈ) அமெரிக்க ஐக்கிய நாடுகள்

6. இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின் நிரந்திர தலைவர்

அ) H.C. முகர்ஜி

ஆ) V.T. கிருஷ்ணமாச்சாரி

இ) Dr.இராஜேந்திர பிரசாத்

ஈ) Dr.சச்சிதானந்த சின்ஹா

குறிப்பு: இந்திய அரசியல் நிர்ணய சபையின் துணைத்தலைவர்களாக H.C. முகர்ஜி மற்றும் V.T. கிருஷ்ணமாச்சாரி இருந்தனர்.

7. இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின் முதல் கூட்டத்தொடர் எத்தனை அமர்வுகளாக நடைபெற்றது?

அ) 11

ஆ) 12

இ) 13

ஈ) 14

குறிப்பு: இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின் முதல் கூட்டத்தொடர் 11 அமர்வுகளாக 166 நாட்கள் நடைபெற்றது. இதில் 2473 திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

8. இந்திய அரசியலமைப்பின் சட்டவரைவுக்குழுத் தலைவர்

அ) H.C. முகர்ஜி

ஆ) V.T. கிருஷ்ணமாச்சாரி

இ) Dr.இராஜேந்திர பிரசாத்

ஈ) Dr. B.R. அம்பேத்கர்

குறிப்பு: இந்திய அரசியலமைப்பின் சட்டவரைவுக்குழுத் தலைவர் Dr. B.R. அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியலமைப்புச்சட்டம் உருவாக்கப்பட்டது.

9. இந்திய அரசியலமைப்பு எப்போது ஏற்றுக்கொள்ளப்பட்டது?

அ) டிசம்பர் 6, 1946

ஆ) டிசம்பர் 9, 1946

இ) நவம்பர் 26, 1949

ஈ) ஜனவரி 26, 1950

10. இந்திய அரசியலமைப்பு உருவாக்கப்பட்ட போது எத்தனை அட்டவணைகள், முகவுரை மற்றும் சட்டப்பிரிவுகளைக் கொண்டிருந்தது?

அ) 8 அட்டவணைகள், 22 முகவுரை, 395 சட்டப்பிரிவுகள்

ஆ) 9 அட்டவணைகள், 22 முகவுரை, 396 சட்டப்பிரிவுகள்

இ) 10 அட்டவணைகள், 22 முகவுரை, 397 சட்டப்பிரிவுகள்

ஈ) 11 அட்டவணைகள், 22 முகவுரை, 398 சட்டப்பிரிவுகள்

குறிப்பு: இந்திய அரசியலமைப்பு தற்போது 12 அட்டவணைகள், 25 முகவுரை, 448 சட்டப்பிரிவுகள் கொண்டுள்ளது.

11. இந்திய அரசியலமைப்புச்சட்டம் எந்த பாணியில் எழுதப்பட்டது?

அ) உருது

ஆ) பாரசீகம்

இ) இத்தாலி

ஈ) பெர்சியன்

குறிப்பு: பிரேம் பிஹாரி நரேன் ரைஜடா என்பவரால் இந்திய அரசியலமைப்புச்சட்டம் இத்தாலிய பாணியில் அவர் கைப்பட எழுதப்பட்டது.

12. இந்திய அரசியலமைப்பு எப்போது நடைமுறைக்கு வந்தது?

அ) டிசம்பர் 6, 1946

ஆ) டிசம்பர் 9, 1946

இ) நவம்பர் 26, 1949

ஈ) ஜனவரி 26, 1950

குறிப்பு: இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த நாள் குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது.

13. இந்திய அரசியலமைப்பின் தந்தை

அ) காந்தியடிகள்

ஆ) ஜவஹர்லால் நேரு

இ) Dr.இராஜேந்திர பிரசாத்

ஈ) Dr. B.R. அம்பேத்கர்

14. பின்வருவனவற்றில் இந்திய அரசியலமைப்பின் சிறப்புக் கூறுகள் எவை?

அ) உலகிலுள்ள எழுதப்பட்ட, அனைத்து அரசியலமைப்புகளை விட நீளமானது.

ஆ) பல்வேறு நாட்டு அரசியலமைப்புகளிலிருந்து பெறப்பட்ட அரசியலமைப்பு. நெகிழும் மற்றும்

நெகிழாத் தன்மை கொண்டது.

இ) சுதந்திரமான நீதித்துறை, ஒற்றைக் குடியுரிமை, நாடாளுமன்ற முறை, கூட்டாட்சி முறை

அரசாங்கம்

ஈ) மேற்கூறிய அனைத்தும்

15. முகவுரை என்ற சொல் அரசியலமைப்பிற்கு ________ என்பதைக் குறிக்கிறது.

அ) அறிமுகம்

ஆ) முன்னுரை

இ) அட்டவணை

ஈ) அ மற்றும் ஆ சரி

குறிப்பு: தற்போது இந்திய அரசியலமைப்பு 25 முகவுரைகளைக் கொண்டுள்ளது.

16. வரிசைப்படுத்துக.

(அ) ஜனநாயக, சமயச்சார்பற்ற, சமதர்ம, இறையாண்மை மிக்க, குடியரசு

(ஆ) சமயச்சார்பற்ற, இறையாண்மை மிக்க, ஜனநாயக, சமதர்ம, குடியரசு

(இ) இறையாண்மை மிக்க, சமதர்ம, சமயச்சார்பற்ற, ஜனநாயக, குடியரசு

(ஈ) சமதர்ம, சமயச்சார்பற்ற, இறையாண்மை மிக்க, ஜனநாயக, குடியரசு

குறிப்பு: இந்தியா ஒரு இறையாண்மை மிக்க, சமதர்ம, சமயச்சார்பற்ற, ஜனநாயக, குடியரசு என இந்திய அரசியலமைப்பின் முகவுரை கூறுகிறது.

17. அரசியலமைப்பின் திறவுகோல் எது?

அ) சட்டப்பிரிவுகள்

ஆ) முகவுரை

இ) அட்டவணை

ஈ) சரத்துகள்

குறிப்பு: அரசியலமைப்பின் திறவுகோல் முகவுரை எனக் கூறியவர் எர்னஸ்ட் பர்க்கர்

18. ஜவஹர்லால் நேருவின் குறிக்கோள் தீர்மானம் இந்திய அரசியல் நிர்ணய சபையால் எப்போது ஏற்றுக் கொள்ளப்பட்டது?

அ) டிசம்பர் 6, 1946

ஆ) ஜனவரி 22, 1947

இ) நவம்பர் 26, 1949

ஈ) ஜனவரி 26, 1950

குறிப்பு: இந்திய அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஜவஹர்லால் நேருவின் குறிக்கோள் தீர்மானத்தின் அடிப்படையில் இந்திய அரசியலமைப்பின் முகவுரை அமைந்துள்ளது.

19. இந்திய அரசியலமைப்பு முகவுரையில் திருத்தப்பட்ட 3 சொற்கள் எவை?

அ) சமயச்சார்பின்மை, இறையாண்மை, ஜனநாயகம்

ஆ) சமதர்மம், சமயச்சார்பின்மை, ஒருமைப்பாடு

இ) ஜனநாயகம், சமதர்மம், குடியரசு

ஈ) சமதர்மம், ஒருமைப்பாடு, குடியரசு

குறிப்பு:இந்திய மக்களாகிய நாம்” என்ற சொற்களுடன் இந்திய அரசியலமைப்பு முகவுரை தொடங்குகிறது.

20. இந்திய அரசியலமைப்பு முகவுரை எந்த அரசியலமைப்பு சட்டத்திருத்தத்தின்படி திருத்தப்பட்டுள்ளது?

அ) 42வது சட்டத்திருத்தம் – 1976

ஆ) 44வது சட்டத்திருத்தம் – 1978

இ) 86வது சட்டத்திருத்தம் – 2002

ஈ) மேற்கூறிய ஏதுமில்லை

குறிப்பு: இந்திய அரசியலமைப்பு முகவுரை ஒரு முறை திருத்தப்பட்டுள்ளது.

21. எந்த ஆண்டு நடைபெற்ற பிரெஞ்சு புரட்சியின் போது சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், ஆகியன முக்கிய முழக்கங்களாகியன?

அ) 1976

ஆ) 1789

இ) 1897

ஈ) 1896

குறிப்பு: இந்திய அரசியலமைப்பின் முகவுரையில் மேற்கூறியவற்றிற்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.

22. சிட்டிசன் எனும் சொல் சிவிஸ் என்ற இலத்தீன் சொல்லிலிருந்து பெறப்பட்டது. இதன் பொருள் ________

அ) கிராம அரசில் வசிப்பவர்

ஆ) உள்நாட்டில் வசிப்பவர்

இ) வெளிநாட்டில் வசிப்பவர்

ஈ) நகர அரசில் வசிப்பவர்

23. குடியுரிமையைப் பற்றி விவரிக்கும் சட்டப்பிரிவுகள்

அ) சட்டப்பிரிவு – 36–51

ஆ) சட்டப்பிரிவு – 5–11

இ) சட்டப்பிரிவு – 268–293

ஈ) சட்டப்பிரிவு – 343–351

குறிப்பு: இந்திய அரசியலமைப்பின் பகுதி – II சட்டப்பிரிவுகள் 5 லிருந்து 11 வரை குடியுரிமையைப் பற்றி விளக்குகின்றன.

24. குடியுரிமைச்சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு

அ) 1976

ஆ) 2003

இ) 1789

ஈ) 1955

குறிப்பு: குடியுரிமை பெறுதல், குடியுரிமை இழத்தல் ஆகியன பற்றி குடியுரிமைச்சட்டம் விளக்குகிறது.

25. பின்வருவனவற்றுள் தவறான கூற்றைத் தேர்ந்தெடு

(1) குடியுரிமைச்சட்டம் காமன்வெல்த் குடியுரிமையை வழங்கியது. ஆனால் 2003 அரசியலமைப்பு சட்டத்திருத்தத்தின்படி இவ்வுரிமை நீக்கப்பட்டது.

(2) குடியுரிமைச்சட்டம் அரசியலமைப்பு சட்டத்திருத்தத்தால் 5 முறை திருத்தப்பட்டுள்ளது.

(3) இந்திய அரசியலமைப்பு இந்தியா முழுவதும் ஒற்றைக்குடியுரிமையை வழங்குகிறது.

அ) 1 மட்டும்

ஆ) 2 மட்டும்

இ) 3 மட்டும்

ஈ) ஏதுமில்லை

குறிப்பு: குடியுரிமைச்சட்டம் அரசியலமைப்பு சட்டத்திருத்தத்தால் 8 முறை திருத்தப்பட்டுள்ளது.

26. குடியுரிமைச்சட்டம் 1955ன் படி, ஒரு குடிமகன் எத்தனை வழிகளில் குடியுரிமையைப் பெறவும், இழக்கவும் முடியும்?

அ) 5 வழிகளில் பெறுதல், 3 வழிகளில் இழத்தல்

ஆ) 3 வழிகளில் பெறுதல், 5 வழிகளில் இழத்தல்

இ) 4 வழிகளில் பெறுதல், 3 வழிகளில் இழத்தல்

ஈ) 3 வழிகளில் பெறுதல், 4 வழிகளில் இழத்தல்

குறிப்பு: குடியுரிமையைப் பெறுவதற்கான வழிகள் – 1. வம்சாவளி, 2. பிறப்பு, 3. பதிவுசெய்தல், 4. இயல்புரிமை, 5. பிரதேச இணைவு.; குடியுரிமையைப் இழப்பதற்கான காரணங்கள் – 1. துறத்தல், 2. இழத்தல், 3. முடிவுரை செய்தல்

27. இந்தியாவின் மகாசாசனம் என அழைக்கப்படுவது

அ) பகுதி – II

ஆ) பகுதி – III

இ) பகுதி – IV

ஈ) பகுதி – V

குறிப்பு: இந்திய அரசியலமைப்புச்சட்டம் பகுதி – III 12ல் இருந்து 35 வரையுள்ள சட்டப்பிரிவுகள் அடிப்படை உரிமைகள் பற்றிக் கூறுகின்றன.

28. இந்திய அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் எந்த நாட்டு அடிப்படை உரிமைகளின் தாக்கத்தால் உருவாக்கப்பட்டது?

அ) அயர்லாந்து

ஆ) ரஷ்யா

இ) இங்கிலாந்து

ஈ) அமெரிக்க ஐக்கிய நாடுகள்

குறிப்பு: முதலில் இந்திய அரசியலமைப்பு 7 அடிப்படை உரிமைகளை வழங்கியது. தற்போது சொத்துரிமை நீக்கப்பட்டு 6 அடிப்படை உரிமைகள் உள்ளன.

29. கி.பி. 1215ல் இங்கிலாந்து மன்னர் _______ என்பவரால் வெளியிடப்பட்ட உரிமைகள் பட்டயமே மகாசாசனம் எனப்படும்.

அ) முதலாம் ஜான்

ஆ) முதலாம் பிரான்சிஸ்

இ) முதலாம் சேவியர்

ஈ) முதலாம் மார்ட்டின்

குறிப்பு: இதுவே குடிமக்களின் அடிப்படை உரிமைகளுடன் தொடர்புடைய முதலில் எழுதப்பட்ட ஆவணமாகும்.

30. சொத்துரிமை தற்போது எந்தப் பகுதியில் சேர்க்கப்பட்டுள்ளது?

அ) பகுதி X, 200 A

ஆ) பகுதி XII, 300 A

இ) பகுதி XI, 200 A

ஈ) பகுதி X, 200 A

குறிப்பு: 1978 – 44வது சட்டத்திருத்தப்படி, அடிப்படை உரிமைகள் பட்டியலிலிருந்து சொத்துரிமை நீக்கப்பட்டது. இது இந்திய அரசியலமைப்பு பகுதி XII, 300 Aவின் கீழ் ஒரு சட்ட உரிமையாக வைக்கப்பட்டுள்ளது.

31. நீதிமன்ற முத்திரையுடன், நீதிமன்றத்தால் வெளியிடப்படும் கட்டளை அல்லது ஆணை

அ) சட்டப்பேராணை

ஆ) அடிப்படை உரிமைகள்

இ) அரசு நெறிமுறைக்கோட்பாடுகள்

ஈ) நீதிப்பேராணை

குறிப்பு: நீதிப்பேராணை சில சட்டங்களை நிறைவேற்றாமல் தடை செய்ய நீதிமன்றத்தால் வெளியிடப்படும் ஆணை ஆகும்.

32. அரசியலமைப்பின் பாதுகாவலன் ________

அ) மாநில சட்டமன்றம்

ஆ) நாடாளுமன்றம்

இ) உச்சநீதிமன்றம்

ஈ) எதுவுமில்லை

குறிப்பு: மக்களின் உரிமைகளைக் காப்பதினால் உச்சநீதிமன்றம் அரசியலமைப்பின் பாதுகாவலன் என்றழைக்கப்படுகிறது.

33. உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் இரண்டும் எத்தனை வகைப்பேராணைகளை வெளியிட அதிகாரம் பெற்றுள்ளன?

அ) 4

ஆ) 5

இ) 6

ஈ) 7

குறிப்பு: உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் இரண்டும் 5 வகைப்பேராணைகளை

வெளியிட அதிகாரம் பெற்றுள்ளன. (1) ஆட்கொணர்வு நீதிப்பேராணை (2) கட்டளையுறுத்தும்

நீதிப்பேராணை (3) தடையுறுத்தும் நீதிப்பேராணை (4) ஆவணக்கேட்பு நீதிப்பேராணை

(5) தகுதிமுறை வினவும் நீதிப்பேராணை

34. இந்திய அரசியலமைப்பின் இதயம் மற்றும் ஆன்மா என்று கூறப்படும் சரத்து

அ) 32

ஆ) 28

இ) 27

ஈ) 26

குறிப்பு: Dr.B.R.அம்பேத்கர் கூற்றுப்படி அரசியலமைப்பு சட்டப்பிரிவு 32, இந்திய அரசியலமைப்பின் இதயம் மற்றும் ஆன்மா ஆகும்.

35. 86-வது அரசியலமைப்பு சட்டத்திருத்தம் எந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்டது?

அ) 2000

ஆ) 2008

இ) 2002

ஈ) 2006

குறிப்பு: மாநில அரசுகள், முன்பருவ மழலையர் கல்வியை 6 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு வழங்க இந்தத்திருத்தம் அறிவுறுத்துகிறது.

36. இந்திய அரசியலமைப்பின் புதுமையான சிறப்பம்சம் எது?

அ) அடிப்படை உரிமைகள்

ஆ) அடிப்படை கடமைகள்

இ) அரசு நெறிமுறைக்கோட்பாடுகள்

ஈ) முகவுரை

குறிப்பு: இந்திய அரசியலமைப்பின் புதுமையான சிறப்பம்சம் இந்திய அரசியலமைப்பின் புதுமையான சிறப்பம்சம் என B.R.அம்பேத்கார் விவரிக்கிறார்.

37. அவசரநிலையின்போது தடை செய்ய முடியாத சட்டப்பிரிவுகள்

அ) 15-16

ஆ) 17-18

இ) 12-13

ஈ) 20-21

குறிப்பு: எந்த சூழ்நிலையிலும், குடியரசுத்தலைவரால் இந்திய அரசியலமைப்புச்சட்டப்பிரிவு 20 மற்றும் 21ன் கீழ் வழங்கப்பட்ட உரிமைகள் தடை செய்ய முடியாது.

38. இந்திய அரசியலமைப்பின் பிரிவு-45 திருத்தப்பட்டு எந்த பிரிவின் கீழ் தொடக்கக்கல்வி அடிப்படை உரிமையாகச் சேர்க்கப்பட்டுள்ளது?

அ) பிரிவு – 21 A

ஆ) பிரிவு – 46

இ) பிரிவு – 21

ஈ) பிரிவு – 22

குறிப்பு: இத்திருத்தம் 2002ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. இது 86-வது அரசியலமைப்பு சட்டத்திருத்தம் ஆகும்.

39. அவசரநிலை அறிவிக்கப்படும் பொழுது உத்திரவாதம் அளிக்கப்பட்ட சுதந்திரம் தாமாகவே நிறுத்தப்படும் சட்டப்பிரிவு

அ) 16

ஆ) 17

இ) 18

ஈ) 19

குறிப்பு: இந்திய அரசியலமைப்பின் சட்டப்பிரிவு- 352ன் கீழ் குடியரசுத்தலைவரால் அவசரநிலை அறிவிக்கப்படும் பொழுது இந்திய அரசியலமைப்பின் சட்டப்பிரிவு-19ன் கீழ் உத்திரவாதம் அளிக்கப்பட்ட சுதந்திரம் தாமாகவே நிறுத்தப்படுகிறது.

40. பொருத்துக.

(1) ஆட்கொணர்வு நீதிப்பேராணை – சட்டத்திற்கு புறம்பாக தகாத முறையில் அரசு

அலுவலகத்தைக் கைப்பற்றுதலை தடை செய்தல்.

(2) கட்டளையுறுத்தும் நீதிப்பேராணை – ஒரு கீழ்நீதிமன்றம் தனது, சட்ட எல்லையைத்

தாண்டி செயல்படுவதைத் தடுத்தல்.

(3) தடையுறுத்தும் நீதிப்பேராணை – சட்டத்திற்கு புறம்பாக ஒருவர் கைது

செய்யப்படுவதிலிருந்து பாதுகாத்தல்.

(4) ஆவணக்கேட்பு நீதிப்பேராணை – மனுதாரர் சட்ட உதவியுடன் தனது மனு

தொடர்பான பணியினைச் சம்பந்தப்பட்ட

துறையிலிருந்து நிறைவேற்றிக் கொள்ளுதல்.

(5) தகுதிமுறை வினவும் நீதிப்பேராணை – உயர்நீதிமன்றம், ஆவணங்களை நியாயமான

பரிசீலனைக்கு தனக்கோ அல்லது உரிய அதிகாரிக்கோ அனுப்பச் செய்ய கீழ்நீதிமன்றங்களுக்கு இடும் ஆணை.

அ) 5 3 1 2 4

ஆ) 5 4 3 1 2

இ) 5 2 1 4 3

ஈ) 4 1 2 3 5

41. பின்வரும் கூற்றுகளில் அரசு நெறியுறுத்தும் கோட்பாடுகள் பற்றி தவறானவை எவை?
(1) நாட்டின் நிர்வாகத்திற்கு அவசியமானது. ஒரு அரசு சட்டத்தை இயற்றும் போது இந்தக் கொள்கைகளை கவனத்தில் கொள்ள வேண்டும். சமுதாய நலன் தருவதே இதன் நோக்கம்.

(2) இந்திய அரசியலமைப்புச்சட்டம் பகுதி IV சட்டப்பிரிவு- 36ல் இருந்து 51 வரை தரப்பட்டுள்ளது.

(3) பொருளடக்கம் மற்றும் வழிகாட்டுதல் அடிப்படையில் இரண்டு பெரும்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

அ) 1 மட்டும்

ஆ) 2 மட்டும்

இ) 3 மட்டும்

ஈ) ஏதுமில்லை

குறிப்பு: பொருளடக்கம் மற்றும் வழிகாட்டுதல் அடிப்படையில் அரசு நெறியுறுத்தும் கோட்பாடுகள் சமதர்ம, காந்திய, தாராள அறிவு சார்ந்தவை என மூன்று பெரும்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

42. அரசு நெறிமுறையுறுத்தும் கோட்பாடுகள் எந்த நாட்டிலிருந்து பெறப்பட்டது?

அ) அயர்லாந்து

ஆ) ரஷ்யா

இ) இங்கிலாந்து

ஈ) அமெரிக்க ஐக்கிய நாடுகள்

குறிப்பு: அரசு நெறிமுறையுறுத்தும் கோட்பாடுகள் என்பவை அரசுக்கு வெறும் அறிவுறுத்தல்களே ஆகும்.

43. அடிப்படைக் கடமைகள் பற்றி ஆய்வு மேற்கொண்ட குழு

அ) ஸ்வரன் சிங் குழு

ஆ) P.V. இராஜமன்னார் குழு

இ) M.M. பூஞ்சி குழு

ஈ) D.S.கோத்தாரி குழு

குறிப்பு: 1976ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி சர்தார் ஸ்வரன் சிங் கமிட்டியை அமைத்து அடிப்படைக் கடமைகள் பற்றி ஆராய பரிந்துரை செய்தது.

44. இந்திய அரசியலமைப்பில் அடிப்படைக் கடமைகள் எந்த நாட்டிலிருந்து பெறப்பட்டவை?

அ) அயர்லாந்து

ஆ) முன்னாள் சோவியத் யூனியன்

இ) இங்கிலாந்து

ஈ) அமெரிக்க ஐக்கிய நாடுகள்

45. 42வது அரசியலமைப்புச்சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்ட ஆண்டு

அ) 1967

ஆ) 1976

இ) 1969

ஈ) 1996

குறிப்பு: 1976ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட 42வது அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்தில் குடிமக்களின் பொறுப்புகள் சில சேர்க்கப்பட்டன. இவை குடிமக்களின் கடமைகள் என்றழைக்கப்பட்டன.

46. 1976ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட 42வது அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் அரசியலமைப்பின் எந்தப் பகுதியைச் சார்ந்தது?

அ) பகுதி – IV

ஆ) பகுதி – IV-A

இ) பகுதி – III

ஈ) பகுதி – V

குறிப்பு: 1976ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட 42வது அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் அரசியலமைப்பின் பகுதி – IV-A என்ற ஒரு புதிய பகுதியைச் சார்ந்தது.

47. குடிமக்களின் அடிப்படைக் கடமைகளைப் பற்றி கூறும் சரத்து

அ) சரத்து 268

ஆ) சரத்து 293

இ) சரத்து 51A

ஈ) சரத்து 14A

குறிப்பு: குடிமக்களின் அடிப்படைக் கடமைகளைப் பற்றி கூறும் சரத்து 51A மட்டும் பகுதி – IV-Aன் கீழ் அமைந்துள்ளது.

48. 6 முதல் 14 வயது வரையுள்ள குழந்தைகள் அனைவருக்கும் கல்வி பெறும் வாய்ப்புகளை வழங்கும் அடிப்படைக்கடமை

அ) 8வது அடிப்படைக்கடமை

ஆ) 9வது அடிப்படைக்கடமை

இ) 10வது அடிப்படைக்கடமை

ஈ) 11வது அடிப்படைக்கடமை

குறிப்பு: 2002 ஆம் ஆண்டு 11வது அடிப்படைக்கடமை முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது.

49. மத்திய மாநில அரசுகளின் உறவுகள் குறித்து முழுவதும் ஆராய தமிழக அரசு நியமித்த குழு

அ) ஸ்வரன் சிங் குழு

ஆ) P.V. இராஜமன்னார் குழு

இ) M.M. பூஞ்சி குழு

ஈ) D.S.கோத்தாரி குழு

குறிப்பு: 1969ல் மத்திய மாநில அரசுகளின் உறவுகள் குறித்து ஆராய Dr. P.V. இராஜமன்னார் தலைமையின் கீழ் மூவர் குழு ஒன்றை அமைத்தது.

50. பின்வரும் கூற்றுகளில் சரியானவை எவை?

(1) இந்திய அரசியலமைப்பின் 7வது அட்டவணை மத்திய-மாநில அரசுகளுக்கிடையேயான அதிகாரப்பகிர்வினைப் பற்றிக் கூறுகிறது.

(2) மத்திய அரசுக்கும், மாநில அரசுக்குமிடையே பொதுப்பட்டியலில் உள்ள துறைகள் குறித்து சட்டமியற்றும் பொழுது முரண்பாடு ஏற்பட்டால், மத்திய அரசு இயற்றும் சட்டமே இறுதியானது.

அ) 1 மட்டும்

ஆ) 2 மட்டும்

இ) 1,2 சரி

ஈ) ஏதுமில்லை

51. இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு ________ன் கீழ் குடியரசுத்தலைவரால் நியமனம் செய்யப்பட்ட நிதிக்குழு பரிந்துரையின் அடிப்படையில், மத்திய மாநில அரசுகளுக்கிடையே வசூலிக்கப்பட்ட வரிகள் பிரித்துக் கொள்ளப்படுகின்றன.

அ) 268 – 293

ஆ) 352

இ) 360

ஈ) 280

52. பொருத்துக.

(1) மத்தியப்பட்டியல் – 47 அதிகாரம்

(2) மாநிலப்பட்டியல் – 97 அதிகாரம்

(3) பொதுப்பட்டியல் – 66 அதிகாரம்

அ) 3 1 2

ஆ) 2 1 3

இ) 2 3 1

ஈ) 3 2 1

குறிப்பு: தற்போது மத்தியப்பட்டியலில் 100 துறைகளும், மாநிலப்பட்டியலில் 61 துறைகளும், பொதுப்பட்டியலில் 52 துறைகள் என்று மாற்றப்பட்டுள்ளது.

53. மாநிலப்பட்டியலில் இருந்து 5 துறைகளை பொதுப்பட்டியலுக்கு மாற்றிய அரசியலமைப்பு சட்டத்திருத்தம்

அ) 42

ஆ) 35

இ) 36

ஈ) 45

குறிப்பு: 1976ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட 42வது அரசியலமைப்பு சட்டத்திருத்தம் மாநிலப்பட்டியலில் இருந்து 5 துறைகளை பொதுப்பட்டியலுக்கு மாற்றியது. மாற்றப்பட்ட 5 துறைகள்: 1) கல்வி 2) காடுகள் 3) எடைகள் மற்றும் அளவுகள் 4) பறவைகள் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு 5) உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற அமைப்புகளைத் தவிர பிற நீதிமன்றங்களின் நிர்வாகம்.

54. மத்திய-மாநில அரசுகளின் நிதி சார்ந்த உறவுகளைப் பற்றிக் கூறும் சட்டப்பிரிவு

அ) 343 – 351

ஆ) 352

இ) 360

ஈ) 268 – 293

குறிப்பு: இந்திய அரசியலமைப்புச்சட்டம் பகுதி XII, சட்டப்பிரிவு 268 – 293 மத்திய-மாநில அரசுகளின் நிதி சார்ந்த உறவுகளைப் பற்றிக் கூறுகிறது.

55. சர்க்காரியா குழு அமைக்கப்பட்ட ஆண்டு

அ) 1983

ஆ) 1984

இ) 1985

ஈ) 1986

குறிப்பு: மத்திய – மாநில அரசுகளின் உறவினை விசாரிக்க முன்னாள் பிரதமர் திருமதி. இந்திராகாந்தி அவர்கள் 1983ம் ஆண்டு சர்க்காரியா குழுவினை நியமித்தார்.

55. மத்திய அரசு சர்க்காரியா குழுவின் பரிந்துரைகளில் எத்தனை பரிந்துரைகளை செயல்படுத்தியது?

அ) 160

ஆ) 190

இ) 140

ஈ) 180

குறிப்பு: சர்க்காரியா குழுவின் 247 பரிந்துரைகளில் 180 பரிந்துரைகளை மத்திய அரசு செயல்படுத்தியது. அவற்றுள் மிக முக்கியமானது 1990-ல் அமைக்கப்பட்ட மாநிலங்களுக்கிடையேயான குழு ஆகும்.

56. அலுவலக மொழிகள் திருத்தச்சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு

அ) 1983

ஆ) 1964

இ) 1967

ஈ) 1986

குறிப்பு: அலுவலக மொழியாக ஆங்கிலம் காலவரையின்றி தொடரலாம் என்று 1967ம் ஆண்டு அலுவலக மொழிகள் திருத்தச்சட்டம் அறிவித்தது. அலுவலக மொழிகள் சட்டம் 1963-ல் இயற்றப்பட்டது.

57. அலுவலக மொழிகள் பற்றி விளக்கும் சட்டப்பிரிவுகள்

அ) 352

ஆ) 343 – 351

ஆ) 352

இ) 360

குறிப்பு: அரசியலமைப்பு சட்டப்பகுதி XVIIல் 343 – 351 வரையுள்ள சட்டப்பிரிவுகள் அலுவலக மொழிகள் பற்றி விளக்குகின்றன.

58. அலுவலக மொழிகள் எத்தனை தலைப்புகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன?

அ) 3

ஆ) 4

ஆ) 5

இ) 6

குறிப்பு: 1. யூனியன் பிரதேச மொழிகள் 2. வட்டார மொழிகள் 3. நீதித்துறை மொழிகள்

4. சட்டம் மற்றும் சிறப்பு வழிகாட்டு மொழிகள்

59. முதலாவது மொழிக்குழு அமைக்கப்பட்ட ஆண்டு

அ) 1955

ஆ) 1964

இ) 1967

ஈ) 1986

குறிப்பு: முதலாவது மொழிக்குழு 1956-ல் தனது அறிக்கையை சமர்ப்பித்தது.

60. மொழி பற்றிக் கூறும் அரசியலமைப்பு அட்டவணை

அ) 8

ஆ) 18

இ) 28

ஈ) 38

குறிப்பு: தொடக்கத்தில் 14 மொழிகள் அரசியலமைப்பின் 8வது அட்டவணையில் அங்கீகரிக்கப்பட்டு இருந்தன. தற்போது 22 மொழிகள் உள்ளன.

61. பொருத்துக.

செம்மொழி தகுதி பெற்ற மொழிகள் ஆண்டு

  1. தமிழ் – 2014
  2. சமஸ்கிருதம் – 2013
  3. தெலுங்கு, கன்னடம் – 2005
  4. மலையாளம் – 2008
  5. ஒடியா – 2004

அ) 5 2 3 4 1

ஆ) 5 4 2 3 1

இ) 4 3 5 2 1

ஈ) 3 4 5 1 2

குறிப்பு: இந்திய அரசு செம்மொழிகள் எனும் புதிய வகைப்பாட்டினை ஏற்படுத்த 2004ம் ஆண்டு தீர்மானித்தது. இதன்படி, 6 மொழிகள் செம்மொழித் தகுதியைப் பெற்றுள்ளன.

62. போர், வெளிநாட்டினர் ஆக்கிரமிப்பு, ஆயுதமேந்திய கிளர்ச்சி, உடனடி ஆபத்து, அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அவசர நிலையை அறிவிக்கும் அதிகாரம் பெற்றவர்

அ) பிரதமர்

ஆ) குடியரசுத்தலைவர்

இ) துணைக்குடியரசுத்தலைவர்

ஈ) உச்சநீதிமன்ற நீதிபதி

குறிப்பு: அரசியலமைப்பு சட்டப்பிரிவு 352ன் கீழ் குடியரசுத்தலைவர் அவசர நிலையை அறிவிக்கலாம்.

63. அவசரகால ஏற்பாடுகள் எத்தனை பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றன?

அ) 2

ஆ) 3

இ) 4

ஈ) 5

குறிப்பு: 1. தேசிய அவசரநிலை (சட்டப்பிரிவு – 352), 2. மாநில அவசரநிலை (சட்டப்பிரிவு – 356), 3. நிதி சார்ந்த அவசரநிலை (சட்டப்பிரிவு – 360)

64. போர் அல்லது வெளிநாட்டினர் ஆக்கிரமிப்பு காரணமாக அறிவிக்கப்படும் அவசரநிலை

அ) தேசிய அவசரநிலை

ஆ) மாநில அவசரநிலை

இ) வெளிப்புற அவசரநிலை

ஈ) நிதி சார்ந்த அவசரநிலை

குறிப்பு: ஆயுதமேந்திய கிளர்ச்சி காரணமாக அறிவிக்கப்படும் அவசரநிலை உள்நாட்டு அவசரநிலை ஆகும்.

65. அவசரநிலைகள் ஏற்பட்ட ஆண்டுகள்

அ) 1962

ஆ) 1971

இ) 1975

ஈ) மேற்கூறிய மூன்றும்

குறிப்பு: 1962 – இந்தியா-சீனாப்போர்; 1971 மற்றும் 1975 – இந்தியா-பாகிஸ்தான் போர்

66. மாநில அவசரநிலையை குடியரசுத்தலைவர் எந்த சட்டப்பிரிவின் கீழ் அறிவிக்கிறார்?

அ) 352

ஆ) 360

இ) 356

ஈ) 368

குறிப்பு: ஒரு மாநிலத்தில், மாநில அரசால் கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்படும்பொழுது அரசியலமைப்பின் விதிகளுக்கேற்ப ஆளுநர் அறிக்கை அளிக்கும்பொழுது, குடியரசுத்தலைவர் சட்டப்பிரிவு 356ன் கீழ் அவசரநிலையை அறிவிக்கலாம். அவசரநிலையின் அதிகபட்ச காலம் 3 ஆண்டுகள்.

67. இந்தியாவில் முதன்முறையாக அவசரநிலை எந்த மாநிலத்தில் குடியரசுத்தலைவரால் நடைமுறைப்படுத்தப்பட்டது?

அ) தமிழ்நாடு

ஆ) கேரளா

இ) ஆந்திரா

ஈ) பஞ்சாப்

குறிப்பு: இந்தியாவில் முதன்முறையாக அவசரநிலை 1951ல் பஞ்சாப் மாநிலத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டது.

68. நிதி சார்ந்த அவசரநிலை எந்த சட்டப்பிரிவின் கீழ் பிறப்பிக்கப்படுகிறது?

அ) 352

ஆ) 360

இ) 356

ஈ) 368

குறிப்பு: நிதிநிலைத்தன்மை, இந்தியாவின் கடன்தன்மை மற்றும் இந்தியாவின் பகுதிகள் ஆபத்தில் இருந்தால் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 360ன் கீழ் குடியரசுத்தலைவர் நிதி சார்ந்த அவசரநிலையை பிறப்பிக்கலாம்.

69. அரசியலமைப்பினை சட்டத்திருத்தம் செய்வதில் பின்பற்றப்படும் முறைகளைப் பற்றிக் கூறும் சட்டப்பகுதி

அ) பகுதி XX

ஆ) பகுதி X

இ) பகுதி XI

ஈ) பகுதி XII

குறிப்பு: அரசியலமைப்பின் சட்டம் பகுதி XXல் 368 வது சட்டப்பிரிவு, அரசியலமைப்பினை சட்டத்திருத்தம் செய்வதில் பின்பற்றப்படும் முறைகள் மற்றும் திருத்தம் செய்வதில் நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள் பற்றித் தெரிவிக்கிறது.

70. பின்வருவனவற்றில் சரியான கூற்றைத் தேர்ந்தெடு

(1) நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு அவையிலும், அவையின் ஒட்டுமொத்த உறுப்பினர்களில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் மற்றும் அவைக்கு வந்து வாக்களித்தவர்களில் 3ல் 2பங்குக்கு குறையாமல் மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்தால் மட்டுமே குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட வேண்டும்.

(2) நாடாளுமன்றத்தால் மட்டுமே அரசியலமைப்பு சட்டத்திருத்தத்தைக் கொண்டு வர முடியும். மாநில சட்ட மன்றத்தால் அரசியலைமைப்பில் எந்தவொரு சட்டத்திருத்தத்தையும் கொண்டு வர முடியாது.

(3) அரசியலமைப்பு சட்டத்திருத்தம் ’’அமெண்ட்மென்ட்’’ (Amendment) எனும் சொல் மாற்றம், மேம்படுத்துதல் மற்றும் சிறு மாறுதல் என்பதை குறிக்கிறது.

அ) 1 மட்டும்

ஆ) 2 மட்டும்

இ) 3 மட்டும்

ஈ) அனைத்தும் சரி

71. அரசியலமைப்புச் சட்ட செயல்பாட்டிற்கான தேசிய சீராய்வு ஆணையம் அமைக்கப்பட்ட ஆண்டு

அ) 1999

ஆ) 2000

இ) 2001

ஈ) 2002

குறிப்பு: 2000ம் ஆண்டில் இந்திய அரசு ஒரு தீர்மானத்தின் படி திரு. M.N.வெங்கடாசலய்யா தலைமையில் அரசியலமைப்புச் சட்ட செயல்பாட்டிற்கான தேசிய சீராய்வு ஆணையம் ஒன்றை அமைத்தது.

72. அரசியலமைப்பின் சட்டத்திருத்தம் சிறிய அரசியலமைப்பு எனப்படுவது

அ) 42 வது

ஆ) 43 வது

இ) 44 வது

ஈ) 45 வது

குறிப்பு: 1976ம் ஆண்டு 42 வது அரசியலமைப்பின் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது.

73. M.M.பூஞ்சி தலைமையில் அரசின் பல்வேறு நிலைகள் அவற்றிற்கிடையேயான தொடர்பு (ம) பங்களிப்புகள் குறித்துப் புதிய நோக்கத்தோடு ஆராய எந்த ஆண்டு அமைக்கப்பட்டது

அ) 1999

ஆ) 2000

இ) 2001

ஈ) 2002

குறிப்பு: அரசின் பல்வேறு நிலைகள் அவற்றிற்கிடையேயான தொடர்பு (ம) பங்களிப்புகள் குறித்துப் புதிய நோக்கத்தோடு ஆராய ஏப்ரல் 2007ம் ஆண்டு மூன்று உறுப்பினர்களைக் கொண்ட M.M.பூஞ்சி தலைமையில் அப்போதைய அரசு ஓர் ஆணையத்தை அமைத்தது.

74. தனிப்பட்டவரின் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படும்போது நீதிமன்றத்தை அணுகி உரிமையைப் பெறுதல் எந்த சட்டப்பிரிவின் கீழ் வருகிறது?

அ) பிரிவு – 29

ஆ) பிரிவு – 30

இ) பிரிவு – 31

ஈ) பிரிவு – 32

குறிப்பு: பிரிவு – 32 அரசியலமைப்பிற்குட்பட்டு தீர்வு காணும் உரிமை ஆகும்.

75. பொருத்துக

(1) சட்டத்தின் முன் அனைவரும் சமம் – பிரிவு – 18

(2) மதம், இனம், சாதி இவற்றின் அடிப்படையில்

பாகுபடுத்துவதைத் தடை செய்தல் – பிரிவு – 16

(3) பொது வேலை வாய்ப்புகளில் சம வாய்ப்பளித்தல் – பிரிவு – 17

(4) தீண்டாமையை ஒழித்தல் – பிரிவு – 15

(5) இராணுவ மற்றும் கல்விசார் பட்டங்களைத் தவிர

மற்ற பட்டங்களை நீக்குதல் – பிரிவு – 14

அ) 4 2 3 1 5

ஆ) 5 3 2 1 3

இ) 5 3 4 2 1

ஈ) 4 5 2 1 3

குறிப்பு: பிரிவு 14– 18 சமத்துவ உரிமை ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!