Book Back QuestionsTnpsc

இந்திய அரசியலமைப்பு Book Back Questions 10th Social Science Lesson 18

10th Social Science Lesson 18

18] இந்திய அரசியலமைப்பு

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

பிரேம் பெஹாரி நரேன் ரைஜடா என்பவரால் இந்திய அரசியலமைப்புச் சட்டம் இத்தாலிய பாணியில், அவரது கைப்பட எழுதப்பட்டது.

1789ஆம் ஆண்டு பிரெஞ்சு புரட்சியின் போது சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியன முக்கிய முழக்கங்களாயின. இந்திய அரசியலமைப்பின் முகவுரையில் இவற்றிற்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.

I. சமத்துவ உரிமை: பிரிவு 14 – சட்டத்தின் முன் அனைவரும் சமம்; பிரிவு 15 – மதம், இனம், சாதி, பாலினம் மற்றும் பிறப்பிடம் இவற்றின் அடிப்படையில் பாகுபடுத்துவதைத் தடை செய்தல்; பிரிவு 16 – பொது வேலைவாய்ப்புகளில் சமவாய்ப்பளித்தல்; பிரிவு 17 – தீண்டாமையை ஒழித்தல்; பிரிவு 18 – இராணுவ மற்றும் கல்விசார் பட்டங்களைத் தவிர மற்ற பட்டங்களை நீக்குதல்.

II. சுதந்திர உரிமை: பிரிவு 19 – பேச்சுரிமை, கருத்து தெரிவிக்கும் உரிமை, அமைதியான முறையில் கூட்டம் கூடுவதற்கு உரிமை, சங்கங்கள், அமைப்புகள் தொடங்க உரிமை, இந்திய நாட்டிற்குள் விரும்பிய இடத்தில் வசிக்கும் மற்றும் தொழில் செய்யும் உரிமை; பிரிவு 20 – குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களுக்கான உரிமை மற்றும் தண்டனைகளிலிருந்து பாதுகாப்பு பெறும் உரிமை; பிரிவு 21 – வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்திற்குப் பாதுகாப்பு பெறும் உரிமை; பிரிவு 21 – தொடக்கக் கல்வி பெறும் உரிமை; பிரிவு 22 – சில வழக்குகளில் கைது செய்து, தடுப்புக் காவலில் வைப்பதற்கெதிரான பாதுகாப்பு உரிமை.

III. சுரண்டலுக்கெதிரான உரிமை: பிரிவு 23 – கட்டாய வேலை, கொத்தடிமை முறை மற்றும் மனிதத் தன்மையற்ற வியாபாரத்தைத் தடுத்தல்; பிரிவு 24 – தொழிற்சாலைகள் மற்றும் ஆபத்தான இடங்களில் குழந்தைத் தொழிலாளர் முறையைத் தடுத்தல்.

IV. சமயசார்பு உரிமை: பிரிவு 25 – எந்த ஒரு சமயத்தினை ஏற்கவும், பின்பற்றவும், பரப்பவும் உரிமை; பிரிவு 26 – சமய விவகாரங்களை நிர்வகிக்கும் உரிமை; பிரிவு 27 – எந்தவொரு மதத்தையும் பரப்புவதற்காக வரி செலுத்துவதற்கெதிரான சுதந்திரம்; பிரிவு 28 – மதம் சார்ந்த கல்வி நிறுவனங்களில் நடைபெறும் வழிபாடு மற்றும் அறிவுரை நிகழ்வுகளில் கலந்து கொள்ளாமலிருக்க உரிமை.

V. கல்வி, கலாச்சார உரிமை: பிரிவு 29 – சிறுபான்மையினரின் எழுத்து, மொழி, மற்றும் கலாச்சாரப் பாதுகாப்பு; பிரிவு 30 – சிறுபான்மையினரின் கல்வி நிறுவனங்களை நிறுவி, நிர்வகிக்கும் உரிமை.

VI. அரசியலமைப்புக்குட்பட்டு தீர்வு காணும் உரிமை: பிரிவு 32 – தனிப்பட்டவரின், அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படும் போது, நீதிமன்றத்தை அணுகி உரிமையைப் பெறுதல்.

1978ஆம் ஆண்டு, 44வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தப்படி, அடிப்படை உரிமைகள் பட்டியலிலிருந்து சொத்துரிமை (பிரிவு 31) நீக்கபட்டது. இது இந்திய அரசியலமைப்புச் சட்டம் பகுதி XII, பிரிவு 300 A வின் கீழ் ஒரு சட்ட உரிமையாக வைக்கப்பட்டுள்ளது.

2002ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட, 86வது அரசயிலமைப்புச் சட்டத்திருத்தத்தின்படி, இந்திய அரசியலமைப்பின் பிரிவு 45 திருத்தப்பட்டு, பிரிவு 21A வின் கீழ் தொடக்கக்கல்வி, அடிப்படை உரிமையாகச் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தத் திருத்தம், மாநில அரசுகள் முன்பருவ மழலையர் கல்வியை (Early Childhood Care and Education – ECCE) 6 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு வழங்க அறிவுறுத்துகிறது.

தற்போது அதிகாரப் பகிர்வு என்பது மத்திய அரசு பட்டியலில் 100 துறைகள், மாநில அரசு பட்டியலில் 61 துறைகள், மற்றும் இரண்டுக்கும் பொதுவான பொதுப்பட்டியலில் 52 துறைகள் என்றும் மாற்றப்பட்டுள்ளது. 1976ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட 42வது அரசியலமைப்பு சட்டத்திருத்தம் மாநிலப்பட்டியலில் இருந்து 5 துறைகளை, பொதுப் பட்டியலுக்கு மாற்றியது. அவை கல்வி, காடுகள், எடைகள் மற்றும் அளவுகள், பறவைகள் மற்றும் வனவிலங்குகள் பாதுகாப்பு, மற்றும் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற அமைப்புகளைத் தவிர பிற நீதிமன்றங்களின் நீதி நிர்வாகம் ஆகியனவாகும்.

1969இல் மத்திய-மாநில அரசுகளின் உறவுகள் குறித்து முழுவதும் ஆராய தமிழக அரசு டாக்டர். P. V. இராஜமன்னார் தலைமையின் கீழ் மூவர் குழு ஒன்றை நியமித்தது.

2004ஆம் ஆண்டு இந்திய அரசு “செம்மொழிகள்” எனும் புதிய வகைப்பாட்டினை ஏற்படுத்த தீர்மானித்தது. அதன்படி 6 மொழிகள் செம்மொழி தகுதியை பெற்றுள்ளன. அவை தமிழ் (2004), சமஸ்கிருதம் (2005), தெலுங்கு (2008), கன்னடம் (2008), மலையாளம் (2013) மற்றும் ஒடியா (2014).

அரசியலமைப்பின் 42வது சட்டத்திருத்தம் “குறு அரசியலமைப்பு” என அறியப்படுகிறது.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. கீழ்காணும் வரிசையில் “முகவுரை” பற்றிய சரியான தொடர் எது?

(அ) குடியரசு, ஜனநாயக, சமயச் சார்பற்ற, சமதர்ம, இறையாண்மை.

(ஆ) இறையாண்மை, சமதர்ம, சமயச்சார்பற்ற, குடியரசு, ஜனநாயக.

(இ) இறையாண்மை, குடியரசு, சமயச் சார்பற்ற, சமதர்ம, ஜனநாயக.

(ஈ) இணையாண்மை, சமதர்ம, சமயச் சார்பற்ற, ஜனநாயக, குடியரசு.

2. இந்திய அரசியலமைப்பின் முகவுரை எத்தனை முறை திருத்தப்பட்டது?

(அ) ஒரு முறை

(ஆ) இரு முறை

(இ) மூன்று முறை

(ஈ) எப்பொழுதும் இல்லை

3. ஒரு வெளிநாட்டவர், கீழ்க்காணும் எதன் மூலம் இந்திய குடியுரிமை பெறமுடியும்?

(அ) வம்சாவளி

(ஆ) பதிவு

(இ) இயல்புரிமை

(ஈ) மேற்கண்ட அனைத்தும்

4. மாறுபட்ட ஒன்றைக் கண்டுபிடி.

(அ) சமத்துவ உரிமை

(ஆ) சுரண்டலுக்கெதிரான உரிமை

(இ) சொத்துரிமை

(ஈ) கல்வி மற்றும் கலாச்சார உரிமை

5. கீழ்க்காண்பவற்றில் ஒன்று, அடிப்படை உரிமையைப் பயன்படுத்துவதற்கு உதாரணம் இல்லை.

(அ) கர்நாடகாவிலிருந்து கேரளா பண்ணைகளில் வேலையாட்கள் பணி செய்தல்

(ஆ) கிறத்துவ சமயக்குழு, தொடர்ச்சியாக, பள்ளிகளை அமைத்தல்.

(இ) ஆண், பெண் இருபாலரும் அரசுப்பணிகளுக்கு சம ஊதியம் பெறுதல்.

(ஈ) பெற்றோர்களின் பூர்வீக சொத்துகள் அவர்களது பிள்ளைகளுக்குச் செல்லுதல்

6. பின்வருவனவற்றுள் எந்த உரிமை டாக்டர். B. R. அம்பேத்கர் அவர்களால் “இந்திய அரசியலமைப்பின் இதயம் மற்றும் ஆன்மா” என விவரிக்கப்பட்டது?

(அ) சம உரிமை

(ஆ) சமத்துவ உரிமை

(இ) அரசியலமைப்புக்குட்பட்டு தீர்வு காணும் உரிமை

(ஈ) சொத்துரிமை

7. அடிப்படை உரிமைகள் எவ்வாறு நிறுத்தி வைக்கப்பட முடியும்?

(அ) உச்ச நீதி மன்றம் விரும்பினால்

(ஆ) பிரதம மந்திரியின் ஆணையினால்

(இ) தேசிய அவசர நிலையின் போது குடியரசு தலைவரின் ஆணையினால்

(ஈ) மேற்கண்ட அனைத்தும்

8. நமது அடிப்படை கடமைகளை _________ இடமிருந்து பெற்றோம்.

(அ) அமெரிக்க அரசியலமைப்பு

(ஆ) கனடா அரசியலமைப்பு

(இ) ரஷ்யா அரசியலமைப்பு

(ஈ) ஐரிஷ் அரசியலமைப்பு

9. எந்த பிரிவின் கீழ் நிதிநிலை அவசர நிலையை அறிவிக்க முடியும்?

(அ) சட்டப்பிரிவு 352

(ஆ) சட்டப்பிரிவு 356

(இ) சட்டப்பிரிவு 360

(ஈ) சட்டப்பிரிவு 368

10. எந்தக் குழுக்கள்/கமிஷன்கள் மத்திய-மாநில உறவுகள் பற்றி பரிந்துரை செய்தன?

1. சர்க்காரியா குழு 2. ராஜமன்னார் குழு 3. M. N. வெங்கடாசலையா குழு

கிழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடு:

(அ) 1, 2 & 3

(ஆ) 1 & 2

(இ) 1 & 3

(ஈ) 2 & 3

கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. முதன் முதலில் அரசியலமைப்பு எனும் கொள்கை __________ ல் தோன்றியது.

2. அரசியல் நிர்ணய சபையின் தற்காலிக தலைவராக __________ தேர்ந்தெடுக்கப்பட்டார்.

3. இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் மற்றும் ஆண்டு __________

4. __________ பேராணைகள் சட்டப்பிரிவு 32இல் குறிப்பிடப்படுகின்றன.

5. இந்திய குடிமக்களுக்கு அடிப்படை கடமைகள் __________ பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ளன.

பொருத்துக:

1. குடியரிமைச் சட்டம் – ஜவகர்லால் நேரு

2. முகவுரை – 42வது அரசியலமைப்புச் சட்டத்திருத்தம்

3. குறு அரசியலமைப்பு – 1955

4. செம்மொழி – 1962

5. தேசிய அவசரநிலை – தமிழ்

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)

1. இறையாண்மை, சமதர்ம, சமயச் சார்பற்ற, ஜனநாயக, குடியரசு 2. ஒரு முறை

3. இயல்புரிமை 4. சொத்துரிமை

5. பெற்றோர்களின் பூர்வீக சொத்துகள் அவர்களது பிள்ளைகளுக்குச் செல்லுதல்

6. அரசியலமைப்புக்குட்பட்டு தீர்வு காணும் உரிமை

7. தேசிய அவசரநிலையின் போது குடியரசு தலைவரின் ஆணையினால் 8. ரஷ்யா அரசியலமைப்பு

9. சட்டப்பிரிவு 360 10. (1 & 2)

கோடிட்ட இடங்களை நிரப்புக: (விடைகள்)

1. அமெரிக்க ஐக்கிய நாடுகளில் 2. டாக்டர் சச்சிதானந்தா சின்கா 3. (1949 நவம்பர் 26)

4. நீதிப் 5. (51A)

பொருத்துக: (விடைகள்)

1. குடியுரிமைச் சட்டம் – 1955

2. முகவுரை – ஜவகர்லால் நேரு

3. குறு அரசியலமைப்பு – 42வது அரசியலமைப்புச் சட்டத்திருத்தம்

4. செம்மொழி – தமிழ்

5. தேசிய அவசரநிலை – 1962

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!