Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
MCQ Questions

இந்திய நீதித்துறை 12th Political Science Lesson 4 Questions in Tamil

12th Political Science Lesson 4 Questions in Tamil

4] இந்திய நீதித்துறை

கீழ்க்கண்டவற்றுள் அரசாங்கத்தின் மூன்று உறுப்புகள் எவை?

1. சட்டமன்றம் 2. ஆட்சித்துறை

3. நீதித்துறை 4. உள்ளாட்சித் துறை

A) 1, 2, 3 B) 2, 3, 4 C) 1, 3, 4 D) 2, 3, 4

(குறிப்பு: நீதித்துறையானது சட்டங்களுக்கு விளக்கம் அளிப்பதையும், அரசமைப்பை பாதுகாப்பதையும் பணியாகக் கொண்டிருக்கிறது.)

மேட்டுப்பாளையத்தில் மூன்று கல்லூரி மாணவர்களுக்கு பிணையாக திருக்குறள் ஒப்புவிக்க வேண்டுமென்று நிபந்தனை விதித்து நீதிமன்றம் எப்போது உத்தரவிட்டது?

A) ஜனவரி 2018

B) மார்ச் 2018

C) பிப்ரவரி 2019

D) அக்டோபர் 2019

(குறிப்பு: ஒரு நபர் மீது தாக்குதல் நடத்தியதாக மூன்று கல்லூரி மாணவர்களுக்கு மேட்டுபாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, அவர்கள் சார்பில் பிணைக் கோரப்பட்டது. பிணையின் நிபந்தனையாக அப்பகுதி அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளி தமிழாசிரியர் முன்பு தினமும் 100 திருக்குறள்களை ஒப்புவிக்க வேண்டுமென்று நீதிபதி கூறினார். இவ்வாறு தொடர்ந்து 10 நாட்கள் திருக்குறள் ஒப்புவித்தப் பின்பு இறுதி நாளில் அந்த மாணாக்கர்களுக்கு சான்றிதழ் வழங்கும்படியும் நீதிபதி அப்போது உத்தரவிட்டார்.)

பள்ளிப் பாடத்திட்டத்தில் திருக்குறளின் 133 அதிகாரங்களில் 108 அதிகாரங்கள் சேர்க்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறைக்கு மதுரைக்கிளை உத்தரவிட்ட ஆண்டு

A) 2016 B) 2017 C) 2018 D) 2019

(குறிப்பு: இந்த உத்தரவின் மூலம் 2017 – 18 கல்வியாண்டிலிருந்து மாணவர்கள் 1050 திருக்குறள்களையும் கற்கும் வகையில் தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பிப்பதது.)

தவறானக் கூற்றைத் தேர்ந்தெடு.

A) வேதகாலத்தின் போது (குலபா (அ) குலபாடோ), குடும்பத்தலைவனின் அதிகாரமானது மன்னர் வழி குறுக்கீடுகளிலிருந்து பாதுகாக்கப்பட்டிருந்தது.

B) கிராமா, தோபா, வைசியா, ஜனம் மற்றும் கனம் போன்ற குலவகைப்பட்ட மற்றும் இனக்குழு அமைப்புகளின் நீதித்துறைகள் அரசரின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கின.

C) பண்டைய இந்திய முடியாட்சிகளில் நீதித்துறை அதிகாரத்தில் அரசரே உயர்நிலையில் இருந்தார்.

D) கிராமப்புறங்களில் பெரும்பாலான வழக்குகள் சாதி அமைப்புகள் அல்லது உள்ளாட்சி நிர்வாக அமைப்புகளின் சட்டத்திட்டங்களின் மூலமாகவே தீர்க்கப்பட்டு வந்தன.

(குறிப்பு: கிராமா, தோபா, வைசியா, ஜனம் மற்றும் கனம் போன்ற குலவகைப்பட்ட மற்றும் இனக்குழு அமைப்புகள் தன்னாட்சி பெற்றுத் திகழ்ந்தன.)

கூற்று 1: பண்டைய கால அரசுகள் பிராமணர்களின் தாக்கத்தின் கீழ் வந்த பின்னர், ஸ்மிருதிகள் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு, தண்டனைகள் வழங்கப்பட்டன.

கூற்று 2: ஸ்மிருதிகளில் நாரதர் ஸ்மிருதி அடிப்படையாக இருந்தது.

A) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

B) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

C) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

(குறிப்பு: பண்டைய காலத்தில் மனுஸ்மிருதி, நாரதர் ஸ்மிருதி, யக்ருவாக்கியர் ஸ்மிருதி போன்றவை இருந்தன. அவற்றுள் மனுஸ்மிருதி அடிப்படையாக இருந்தது.)

“உச்ச நீதிமன்றம், அனைத்து இந்திய நீதிமன்றமாகும், கட்சி அரசியலில் இருந்தும், அரசியல் கோட்பாடுகளில் இருந்தும் உறுதியாக தனித்து நிற்கும். அது அரசுகள் மாறுவதைக் குறித்து அக்கறை கொள்வதில்லை. நீதிமன்றமானது, அந்த நேரத்தில் நடைமுறையில் இருக்கும் சட்டத்தின்படி, நிற்கிறது. அனைவரின் மீதும் பரிவு, நன்மதிப்பு கொண்டுள்ளது. எனினும் அது யாருடனும் அணி சேர்வது இல்லை.” என்று கூறியவர்

A) பி.ஆர். அம்பேத்கர்

B) திரு.ஹரிலால் ஜெ. கனியா

C) சர் ஹரி சிங் கோர்

D) கே.ஜி. பாலகிருஷ்ணன்

(குறிப்பு: இந்தியாவின் முதல் தலைமை நீதிபதி மாண்புமிகு திரு ஹரிலால் ஜே. கனியா ஆவார்.)

தவறான கூற்றைத் தேர்ந்தெடு.

1. அர்த்தசாஸ்திரம் குற்றங்கள் நிகழ்வதை கட்டுப்படுத்துவது என்ற பெயரில் அளவுக்கு அதிகமான தண்டனைகளைப் பரிந்துரைத்தன.

2. ஸ்மிருதிகள் பெண்களை கீழ்நிலை மனிதர்களாகவே நடத்தியது.

3. பல்லவர், பாண்டிய, சோழர் கால மகாசபைகள் நீதி விசாரணை நடைமுறைகளிலிருந்து பிராமணர்களைப் பாதுகாத்தன.

4. அசோகப் பேரரசு போன்ற புத்த பேரரசுகள் அனைத்தும் ஸ்மிருதி முறைகளை பின்பற்றின.

A) 1, 2 தவறு

B) 1, 4 தவறு

C) 2 மட்டும் தவறு

D) 4 மட்டும் தவறு

(குறிப்பு: அசோகப் பேரரசு போன்ற புத்த பேரரசுகள் பெரும்பாலும் ஸ்மிருதி முறைகளை புறம்தள்ளின.)

சரியான இணையைத் தேர்ந்தெடு.

1. திவான் – இ – குவாசா : நடுவர்

2. திவான் – இ – மசலிம் : அதிகாரத்துவத்தின் தலைவர்

3. திவான் – இ – ரியாசத் : தலைமை தளபதி

A) அனைத்தும் சரி

B) 1, 2 சரி

C) 2, 3 சரி

D) 1, 3 சரி

இடைக்கால இந்தியாவில், சுல்தானத்தின் தலைநகரில் _______________ வகையான நீதிமன்றங்கள் நிறுவப்பட்டு இருந்தன.

A) 4 B) 5 C) 6 D) 7

(குறிப்பு: ஆறு வகையான நீதிமன்றங்களாவன

மன்னர் நீதிமன்றம்

மேல்முறையீட்டு உச்சநீதிமன்றம் (திவான் – அல் – மசாலிம்)

குடிமையியல் வழக்குக்கு உச்ச நீதிமன்றம் (திவான் – இ -ரிசாலட்)

மாநிலத் தலைமை நீதிபதி நீதிமன்றம் (சத்ரே ஜகான் நீதிமன்றம்)

தலைமை நீதிபதி நீதிமன்றம்

தேசத்துரோக வழக்குகள் நீதிமன்றம் (திவான் – இ – ரியாசட்))

சத்ரே ஜகான் நீதிமன்றமும் தலைமை நீதிபதி நீதிமன்றமும் யாருடைய ஆட்சியில் இணைக்கப்பட்டன?

A) பால்பன்

B) அலாவுதீன் கில்ஜி

C) அசோகர்

D) ஷாஜகான்

(குறிப்பு: இடைக்கால இந்திய நீதிமன்றங்கள் அலுவலக ரீதியாக சுல்தானால் தலைமை தாங்கி நடத்தப்பட வேண்டும் எனினும், அவர் அதிகமாக குற்றவியல் நீதிவிசாரணைகளின்போது மட்டுமே கலந்து கொண்டார். சுல்தான் இல்லாத போது குவாசி – உல் – குசாட் எனும் அரசின் நீதிமன்ற தலைமை அலுவலர் தலைமை தாங்கி நடத்துவார். ஆனால், பின்னர் சத்ரே ஜகான் எனும் அலுவலர் பதவி உருவாக்கப்பட்டு நீதித்துறையின் உண்மையான தலைமை அலுவலராக செயல்பட்டார்.)

கீழ்க்கண்டவற்றுள் பெரும் தேச துரோக வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் எது?

A) திவான் – இ – மசாலிம்

B) திவான் – இ – ரிசாலட்

C) சத்ரே ஜகான் நீதிமன்றம்

D) திவான் – இ – ரியாசத்

(குறிப்பு: தலைமை நீதிபதியின் நீதிமன்றம் குடிமையியல் மற்றும் குற்ற வழக்குகளைக் கையாண்டது. முப்தி, பண்டிட், மொக்டாசிப் (அரசு வழக்கறிஞர் தரப்பு) தாத்பாக் (நிர்வாக அலுவலர்) போன்ற அலுவலர்கள் தலைமை நீதிபதியின் நீதிமன்றத்துடன் இணைக்கப்பட்டிருந்த அலுவலர்கள் ஆவர்.)

கிழக்கிந்திய கம்பெனி ___________ ஆண்டு முதலாம் ராணி எலிசபெத்தின் சாசன சட்டத்தின் மூலம் பதிவு செய்யப்பட்டது.

A) 1498 B) 1510 C) 1580 D) 1600

(குறிப்பு: கிழக்கிந்திய கம்பெனி வர்த்தகம் மேற்கொள்ளத் தேவையான ஒழுங்கு முறைகள் மற்றும் அங்கீகாரத்தை இங்கிலாந்து அரசு அளித்தது.)

_____________ ஆண்டு சாசன சட்டம் மதராஸ் பகுதியில் ஒரு ஆளுநர் அவருடன் தலா ஒரு குடியேற்றப் பகுதிக்கு ஒரு உறுப்பினர் என்ற அடிப்படையில் ஒரு குழு நியமிக்க வழி வகுத்தது.

A) 1660 B) 1661 C) 1662 D) 1663

(குறிப்பு: 1661 ஆம் ஆண்டு சாசன சட்டத்தின்படி நியமிக்கப்பட்ட குழுவே வழக்குகளை விசாரித்தது. கிழக்கிந்திய கம்பெனி குறிப்பாக மதராஸ் பகுதியில் ஒரு ஆளுகை சக்தியாக உருவானது. இங்கு ஏற்கனவே இயங்கிய உள்ளூர் நீதி நிர்வாக முறையைப் பின்பற்றும் வகையில் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாக் கொள்கையை கடைப்பிடித்தது.)

கூற்று 1: மதராஸ் நிர்வாகத்தில் இங்கிலாந்து அரசால் விசாரிக்கப்பட்ட முதல் வழக்கு அசென்டினா வழக்கு ஆகும்.

கூற்று 2: 1656 ஆம் ஆண்டு இந்த வழக்கு நடந்தது.

A) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

B) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

C) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

(குறிப்பு: அசென்டினா வழக்கு 1665 ஆம் ஆண்டு நடந்தது. அப்போது, பாக்ஸ் க்ராப்ட் ஆளுநராக இருந்தார்.)

ஸ்டிரெய்ன்ஷாம் மாஸ்டர் என்பவர் மதராஸ் நிர்வாக ஆளுநராக நியமனம் செய்யப்பட்ட ஆண்டு

A) 1668 B) 1672 C) 1675 D) 1678

(குறிப்பு: ஸ்டிரெய்ன்ஷாம் மாஸ்டர் ஆளுநராக நியமிக்கப்பட்டது, மதராஸ் நீதிமுறை அமைப்பு மறுசீரமைப்பு செய்யப்படுவதற்குக் காரணமானது. ஆளுநரும் அவருடைய குழுவும் சேர்ந்து நீதி வழங்கும் அதிகாரம் கொண்ட உயர் நீதிமன்ற ஆட்சி குழுவாக மாறியது.)

வணிகர்கள் கடலில் மேற்கொள்ளும் குற்றங்களை விசாரிக்க ஒரு கடற்படை நீதிமன்றம் நிறுவ______________ ஆண்டு சாசன சட்டம் வழிவகுத்தது.

A) 1681 B) 1682 C) 1683 D) 1684

_____________ ஆண்டு சாசன சட்டம் மதராஸ் மாநகராட்சி அமைப்பதற்கு கிழக்கிந்திய கம்பெனிக்கு அதிகாரமளித்தது.

A) 1683 B) 1685 C) 1686 D) 1687

(குறிப்பு: 1687 ஆம் ஆண்டு சாசன சட்டத்தின்படி மதராஸ் மாநகராட்சியோடு மேயர் நீதிமன்றம் இணைக்கப்பட்டது. இதுவே மதராஸ் நகரத்தின் நீதிமன்றமாக இயங்கியது.)

பாம்பே மீது கிழக்கிந்திய கம்பெனி நீதித்துறை அதிகாரம் செலுத்த ____________ ஆண்டு சாசன சட்டம் அதிகாரம் அளித்தது.

A) 1665 B) 1666 C) 1667 D) 1668

___________ ஆண்டு பிரகடனம் ஆங்கிலேயச் சட்டத்தை பம்பாயில் அறிமுகப்படுத்தியது.

A) 1668 B) 1670 C) 1672 D) 1674

(குறிப்பு: பம்பாய் நீதி வழங்கும் அதிகாரம் கொண்ட நீதித்துறை புதிய மத்திய நீதிமன்றத்தை நிறுவியது. ஆங்கில சட்டத்தின் பயன்பாடு என்பது ஐரோப்பியர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் நலன்கள் சார்ந்த விவகாரங்களுக்கு பொருந்தக் கூடியதாகும்.)

சித்தி யாக்கூப் எனும் முகலாய கடற்படை தளபதியின் படையெடுப்பின் காரணமாக பம்பாயில் நீதிமன்றம் கலைக்கப்பட்ட ஆண்டு

A) 1670 B) 1680 C) 1690 D) 1695

(குறிப்பு: 12 ஆண்டுகளுக்குப் பிறகு, 1718 ஆம் ஆண்டு மீண்டும் நீதி வழங்கும் அதிகாரம் கொண்ட நீதிமன்றம் புதுப்பிக்கப்பட்டது. இந்த நீதிமன்றம் வாரத்திற்கு ஒரு முறை கூடினாலும், துரிதமான விசாரனைக்கும் பாகுபாடற்ற தீர்ப்புகளுக்கும் புகழ்பெற்றதாகக் கருதப்படுகிறது.)

_____________ ஆண்டு சாசன சட்டம் சென்னை, பம்பாய், கல்கத்தா ஆகிய மூன்று மாகாணங்களிலும் ஒவ்வொரு மேயர் நீதிமன்றங்களை அமைத்தது.

A) 1718 B) 1722 C) 1724 D) 1726

(குறிப்பு: 1753 ஆம் ஆண்டு சாசன சட்டம், 1726 ஆம் ஆண்டு சாசனத்தில் நீதி தொடர்பான பகுதிகளை மேலும் சீர்திருத்தம் செய்தது.)

1753 ஆம் ஆண்டு சாசன சட்டம் ____________ நீதிமன்றங்களை நிறுவியது.

A) 3 B) 4 C) 5 D) 6

(குறிப்பு: ஐந்து நீதிமன்றங்கள்

கோரிக்கைகள் நீதிமன்றம்

மேயர் நீதிமன்றம்

குடியரசுத் தலைவர் நீதிமன்றம்

ஆட்சிக்குழு கொண்ட நீதிமன்றம்

அரசர் தலைமையிலான நீதிமன்றம்)

1780 ஆம் ஆண்டுகளில் மாகாண நீதிமன்றங்களை சீரமைத்தவர்

A) வில்லியம் பெண்டிங்

B) வாரன் ஹேஸ்டிங்

C) மிண்டோ பிரபு

D) ராபர்ட் கிளைவ்

(குறிப்பு: 1772 ஆம் ஆண்டு வாரன் ஹேஸ்டிங்கின் திட்டம் நீதித்துறை நிர்வாகத்தை ஒழுங்குப்படுத்துவதாக இருந்தது. முதலாவது கவர்னர் ஜெனரல் பதவி வகித்த வாரன் ஹேஸ்டிங்ஸ் இந்து சட்டங்களைத் தொகுப்பதற்கு காரணமானவர் ஆவார்.)

கொல்கத்தாவில் உச்ச நீதிமன்ற நீதி நிர்வாகம் அமைக்க மன்னருக்கு அதிகாரம் அளித்த சட்டம்

A) 1773 – ஒழுங்குமுறைச் சட்டம்

B) 1783 – ஒழுங்குமுறைச் சட்டம்

C) 1793 – ஒழுங்குமுறைச் சட்டம்

D) 1803 – ஒழுங்குமுறைச் சட்டம்

(குறிப்பு: சாசனச் சட்டம் 1774 உச்ச நீதிமன்றத்தின் அதிகார வரம்புகளை விரிவாக்கம் செய்தது.)

மதராஸ், பம்பாய் உச்சநீதிமன்றங்கள் நிறுவப்பட்ட ஆண்டுகள் முறையே

A) 1824, 1801

B) 1801, 1824

C) 1701, 1724

D) 1724, 1701

‘காரன்வாலிஸ் சட்டத் தொகுப்பு’ தயாரிக்கப்பட்ட ஆண்டு

A) 1773 B) 1775 C) 1783 D) 1793

(குறிப்பு: இந்த சட்டத்தொகுப்பு குடிமை மற்றும் குற்றவியல் என இரு விசாரணை முறைகளையும் கையாளுவதாக இருந்தது. காரன்வாலிஸ் குடிமையியல் நீதிமன்றங்களை அங்கீகரித்தார். நீதிமன்றக் கட்டணங்களை ஒழித்தார். மேலும், குற்றவியல் நீதிமன்றங்களில் சீர்திருத்தம் செய்தார்.)

வங்காளத்தின் கவர்னர் ஜெனரலாக மின்டோ பிரபு பதவியேற்ற ஆண்டு

A) 1801 B) 1803 C) 1807 D) 1809

(குறிப்பு: மின்டோ பிரபு பல்வேறு நீதிமன்றங்களின் அதிகாரங்களையும், அதிகார வரம்பினையும் அதிகரித்தார்.)

ஹாஸ்டிங்ஸ் பிரபு கவர்னர் ஜெனரலாக நியமிக்கப்பட்ட ஆண்டு

A) 1809 B) 1811 C) 1812 D) 1813

(குறிப்பு: ஹேஸ்டிங்ஸ் பிரபு நாட்டின் குடிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நிர்வாகத்தில் மிண்டோ பிரபுவை போல பல சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார். நீதி நிர்வாகத்தில் நிலவும் சிவப்பு – நாடா முறையை தடுக்க முயற்சி எடுக்கப்பட்டது.)

மாகாண மேல்முறையீட்டு நீதிமன்றங்களை மூடி அதன் பணிகளை மாவட்ட நடுவர் நீதிமன்றங்களுக்கு மாற்றியவர்

A) மின்டோ பிரபு

B) ஹாஸ்டிங்ஸ் பிரபு

C) காரன் வாலிஸ்

D) பெண்டிங் பிரபு

(குறிப்பு: ஹாஸ்டிங்ஸ் பிரபுவைத் தொடர்ந்து கவர்னர் ஜெனரலாக பெண்டிங் பதவியேற்றார். இவர் இந்தியாவின் நீதித்துறை நிர்வாகத்தை மறுசீரமைப்பு மற்றும் தொகுக்கும் பணியை செய்தார்.)

கல்கத்தா, மதராஸ், பம்பாய் ஆகிய நகரங்களில் நீதி வழங்கும் அதிகாரம் கொண்ட உயர்நீதிமன்றங்களை அமைக்க மன்னருக்கு அதிகாரம் அளித்த சட்டம்

A) இந்திய உயர்நீதிமன்ற சட்டம் 1858

B) இந்திய உயர்நீதிமன்ற சட்டம் 1859

C) இந்திய உயர்நீதிமன்ற சட்டம் 1860

D) இந்திய உயர்நீதிமன்ற சட்டம் 1861

(குறிப்பு: இந்த சட்டம் உச்சநீதிமன்றமுறை ஒழிப்புக்கு இட்டுச் சென்றது. இதுவே இந்தியாவில் உயர் நீதிமன்றங்கள் தோன்றுவதற்கான வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வாகக் கருதப்படுகிறது.)

இந்தியா விடுதலை அடைந்து அரசமைப்பு ஏற்கப்பட்ட காலகட்டத்தில் எத்தனை உயர்நீதிமன்றங்கள் நிறுவப்பட்டிருந்தன?

A) 5 B) 6 C) 7 D) 8

(குறிப்பு: ஏழு உயர்நீதிமன்றங்கள்

பஞ்சாப், அசாம், ஒடிசா, ராஜஸ்தான், திருவாங்கூர், மைசூர், ஜம்மு காஷ்மீர்)

கூற்று 1: அனைத்து மாநிலங்களும், ஒன்றிய ஆளுகைக்குட்பட்டப் பகுதிகளும் உயர்நீதிமன்றம் பெறும் வகையில் ஒவ்வொரு மாநிலம் அல்லது இரண்டு, மூன்று பகுதிகளை இணைத்து உயர்நீதிமன்றங்களை நிறுவ நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

கூற்று 2: 1976ஆம் ஆண்டு 42வது அரசமைப்பு திருத்தச்சட்டம் உயர் நீதிமன்றங்களின் அதிகார வரம்பில் பெருமளவு மாற்றத்தினை கொண்டு வந்தது.

A) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

B) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

C) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

கூட்டாட்சி முறை சார்ந்த நீதிமன்றம் தொடங்கி வைக்கப்பட்ட ஆண்டு

A) 1935 B) 1936 C) 1937 D) 1938

(குறிப்பு: இந்த நீதிமன்றம் ஒரு தலைமை நீதிபதியையும் மற்றும் ஆறு நீதிபதிகளையும் கொண்டிருந்தது. 1950ஆம் ஆண்டு இந்நீதிமன்றம் இந்தியாவின் உச்சநீதிமன்றமாக ஆனது.)

சட்டீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் ஊடுருவல்களை தடுக்க கோயா கமாண்டோஸ், சல்வாஜுடும் அல்லது விகரப் பெயர்களில் அங்குள்ள பழங்குடி இளைஞர்களை சிறப்பு காவல்படை அலுவலர்களாக நியமித்தது அரசமைப்பிற்கு விரோதமானது, செல்லாது என்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள்

1. நந்தினி சுந்தர் 2. பி. சுதர்சன் ரெட்டி

3. எஸ்.எஸ்.நிஜ்ஜார் 4. ரா.சுந்தரராஜன்

A) 1, 2 B) 2, 3 C) 1, 3 D) 2, 4

(குறிப்பு: இந்த வழக்கிற்கான ரிட் மனுவை சமூக மானுடவியல் பேராசிரியர் நந்தினி சுந்தர் மற்றும் இதரர் தாக்கல் செய்தனர்.)

இறுதிக்கட்ட மேல்முறையீட்டுக்காக பிரிந்து செல்லாமல் இந்தியாவிலேயே மேல்முறையீடு செய்யும் ஒரு அனைத்திந்திய தலைமை நீதிமன்றத்தின் தேவையை 1921 ல் உணர்ந்தவர்

A) பி.ஆர். அம்பேத்கர்

B) திரு.ஹரிலால் ஜெ. கனியா

C) சர் ஹரி சிங் கோர்

D) கே.ஜி. பாலகிருஷ்ணன்

இந்திய உச்சநீதிமன்றத்தை நிறுவ வழி செய்த அரசமைப்பு உறுப்பு

A) 112 B) 124 C) 214 C) 241

(குறிப்பு: ஜனவரி 26, 1950ஆம் ஆண்டு அரசமைப்பு அமலாக்கப்பட்டதன் மூலம் உறுப்பு 124 ன் படி இந்திய உச்ச நீதிமன்றம் உருவானது.)

இந்திய அரசமைப்பு _____________ அடுக்கு நீதித்துறை அமைப்பினை வழங்குகிறது.

A) 2 B) 3 C) 4 D) 5

(குறிப்பு: மூன்று அடுக்கு நீதித்துறை

இந்திய உச்சநீதிமன்றம்

அரசமைப்புப்படி உருவாக்கப்பட்ட மாநிலங்களில் உள்ள உயர் நீதிமன்றங்கள்

ஒவ்வொரு மாநிலத்திலும் நீதி மாவட்டங்கள் வாரியாக மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றங்கள்)

தவறானக் கூற்றைத் தேர்ந்தெடு.

A) உச்சநீதிமன்றமே அரசமைப்பின் காவலன் ஆகும்.

B) அமெரிக்க ஐக்கிய நாடுகளின் கூட்டாட்சி அமைப்பு போன்று ஒன்று கூட்டாட்சிக்காக மற்றொன்று மாநிலங்களுக்காக என இரண்டு தொகுப்பு நீதித்துறை அமைப்பினை இந்திய அரசமைப்பு வழங்குகிறது.

C) உச்சநீதிமன்றம் தலைமை நீதிமன்றமாக இந்தியாவில் உள்ள அனைத்து நீதிமன்றங்கள் மீதும் அதிகாரம் செலுத்துகிறது.

D) ஆட்சித்துறை சட்டமன்றங்களின் தலையீடுகளில் இருந்து நீதித்துறைக்கு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது.

(குறிப்பு: அமெரிக்க ஐக்கிய நாடுகளின் கூட்டாட்சி அமைப்பு போன்று ஒன்று கூட்டாட்சிக்காக மற்றொன்று மாநிலங்களுக்காக என இரண்டு தொகுப்பு நீதித்துறை அமைப்பினை இந்திய அரசமைப்பு வழங்கவில்லை. இந்தியா ஒரு ஒருங்கிணைந்த நீதித்துறை முறையினை மட்டுமே கொண்டிருக்கிறது.)

“இந்திய கூட்டாட்சி, இரட்டை ஆட்சி அமைப்புமுறை கொண்டிருந்தாலும் இரட்டை நீதித்துறை அமைப்பைக் கொண்டிருக்கவில்லை. உயர் நீதிமன்றங்களும் உச்சநீதிமன்றமும், அரசமைப்பின் கீழ் ஒரு ஒருங்கிணைந்த நீதித்துறையாகச் செயல்பட்டு அனைத்து குடிமையியல் அல்லது குற்றவியல் வழக்குகளுக்கு தீர்வு காண்கிறது. தீர்வு வழங்கும் முறையில் வேறுபாடுகளை களைவதற்காக இவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது.” என்று கூறியவர்

A) பி.ஆர். அம்பேத்கர்

B) திரு.ஹரிலால் ஜெ. கனியா

C) சர் ஹரி சிங் கோர்

D) கே.ஜி. பாலகிருஷ்ணன்

கூற்று 1: உச்சநீதிமன்றம் அசல், மேல்முறையீட்டு மற்றும் ஆலோசனை வழங்குதல் என மூன்று அதிகார வரம்புகளைக் கொண்டுள்ளது.

கூற்று 2: அடிப்படை உரிமைகள் தொடர்புடைய வழக்குகளில் உச்ச நீதிமன்றமானது அசல் நீதித்துறை, மேல்முறையீட்டு அதிகார வரம்பு என இரண்டு அதிகாரங்களையும் கொண்டிருக்கிறது.

A) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

B) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

C) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

(குறிப்பு: அசல் நீதி அதிகார வரம்பு என்பது உச்ச நீதிமன்றங்களில் அனைத்து வழக்குகளுக்கும் மூலதாரமாகிவிடுகிறது என்பதாகும். இவை மத்திய அரசாங்கங்களுக்கும் அல்லது இதர மாநில அரசுகளுக்கும் இடையே எழும் கருத்து வேறுபாடுகள் அல்லது மாநிலங்களுக்கு இடையே எழுகின்ற சிக்கல்களையும் உள்ளடக்கியது ஆகும்.)

தேசிய நீதித்துறை தகவல் அமைப்பின்படி, நாடு முழுவதும் மாவட்ட மற்றும் துணை நிலை நீதிமன்றங்களில் ______________ வழக்குகள் தேக்கமடைந்துள்ளன.

A) 2.19 கோடி

B) 2.91 கோடி

C) 9.21 கோடி

D) 12.9 கோடி

(குறிப்பு: இவற்றில் 21.9 லட்சம் வழக்குகள் 10 ஆண்டுகளுக்கும் அதிகமாக நிலுவையில் உள்ளன.)

தவறானக் கூற்றைத் தேர்ந்தெடு.

1. வழக்குகள் அதிகமாக தேக்கமடைந்த மாநிலங்களில் உத்திரப்பிரதேச மாநிலத்திற்கு அடுத்தபடியாக பீகார் மாநிலத்தில் மூன்று லட்சம் வழக்குகளும் மஹாராட்டிர மாநிலத்தில் இரண்டு லட்சம் வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

2. சிக்கிம் மாநிலத்தில் இரண்டு வழக்குகள் மட்டுமே நிலுவையில் உள்ளது.

3. அஸ்ஸாம் மாநிலத்தில் ஒரு வழக்கும் நிலுவையில் இல்லை.

A) 1 மட்டும் தவறு

B) 2 மட்டும் தவறு

C) 3 மட்டும் தவறு

D) எதுவுமில்லை

(குறிப்பு: அந்தமான் நிக்கோபார் மாநிலத்தில் ஒரு வழக்கும் நிலுவையில் இல்லை.)

கூற்று 1: குடியரசுத் தலைவர் உச்சநீதிமன்றத்திடம் எந்த ஒரு சட்ட விவகாரம் குறித்தும் ஆலோசனை கேட்டு அணுக முடியும்.

கூற்று 2: உச்சநீதிமன்றத்தின் ஆலோசனைகளை குடியரசுத் தலைவர் ஏற்க வேண்டிய கட்டாயம் இல்லை.

A) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

B) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

C) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

இந்திய உச்சநீதிமன்றத்தின் வடிவம் மற்றும் அதிகார வரம்புகள் குறித்து கூறும் அரசமைப்பு உறுப்புகள்

A) 124 முதல் 127 வரை

B) 124 முதல் 137 வரை

C) 124 முதல் 147 வரை

D) 124 முதல் 157 வரை

(குறிப்பு: உச்ச நீதிமன்றமானது இந்திய அரசமைப்புப் பகுதி 5 அத்தியாயம் 4 மூலம் நிறுவப்பட்டுள்ளது.)

உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 30 ஆக அதிகரிக்கப்பட்ட ஆண்டு

A) 2005 B) 2006 C) 2007 D) 2008

(குறிப்பு: அரசமைப்பு ஆரம்பத்தில் ஒரு நீதிபதி, ஏழு கீழ்நிலை நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்றத்தினை அனுமதித்தது. இந்த எண்ணிக்கையை அதிகரிக்கவும் நாடாளுமன்றத்திற்கு அரசமைப்பு அதிகாரம் கொடுத்திருந்தது.)

தவறானக் கூற்றைத் தேர்ந்தெடு.

A) உச்சநீதிமன்ற நீதிபதியை நியமனம் செய்வதற்கு, தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்றத்தின் இதர நான்கு மூத்த நீதிபதிகள் கொண்ட “குழு”வுடன் கலந்தாலோசிக்க வேண்டும்.

B) உச்ச நீதிமன்றத்தின் ஒவ்வொரு நீதிபதியும் அமைச்சரவை மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுடன் கலந்தாலோசனை செய்த பின்னர் குடியரசுத்தலைவரால் நியமனம் செய்யப்படுகிறார்.

C) உச்ச நீதிமன்ற நீதிபதி 65 வயது அடையும் வரை பதவியில் இருக்கலாம்.

D) உச்சநீதிமன்ற நீதிபதி பதவி விலக நினைத்தால், தன்னால் கைப்பட எழுதிய பதவி விலகல் கடிதத்தில் கையொப்பமிட்டு பிரதமரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

(குறிப்பு: உச்சநீதிமன்ற நீதிபதி தனது பதவி விலகல் கடிதத்தை குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.)

உச்சநீதிமன்ற நீதிபதி ஆவதற்கான தகுதிகளில் தவறானதைத் தேர்ந்தெடு.

1. இந்தியக் குடியுரிமைப் பெற்றிருத்தல் வேண்டும்

2. உயர்நீதிமன்ற நீதிபதியாக ஐந்து ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் அல்லது குறைந்தது 10 ஆண்டுகள், தொடர்ந்து ஒன்று அல்லது இரண்டுக்கு மேற்பட்ட உயர்நீதிமன்றங்களில் வழக்குரைஞராகப் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்.

3. குடியரசுத்தலைவரின் கருத்தில் தலைசிறந்த சட்டநிபுணராக இருக்க வேண்டும்.

A) 2 மட்டும் தவறு

B) 2, 3 தவறு

C) 1 மட்டும் தவறு

D) எதுவுமில்லை

கூற்று 1: உச்சநீதிமன்ற நீதிபதியை நாடாளுமன்றத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றுவதன் மூலம் பதவி நீக்கம் செய்ய முடியும்.

கூற்று 2: நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதிக்கப்பட்டு ஒட்டு மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்குக்கு குறையாமல் கலந்துகொண்டு, அதே அமர்வில் வாக்கெடுப்பில் ஆதரவு பெரும்பான்மை பெற்றால் உச்ச நீதிமன்ற நீதிபதியை விசாரிக்க குடியரசுத் தலைவர் ஆணையிடுவார்.

A) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

B) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

C) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

(குறிப்பு: நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதிக்கப்பட்டு ஒட்டு மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கையில் மூன்றில் இரண்டு பங்குக்கு குறையாமல் கலந்துகொண்டு, அதே அமர்வில் வாக்கெடுப்பில் ஆதரவு பெரும்பான்மை பெற்றால் உச்ச நீதிமன்ற நீதிபதியை விசாரிக்க குடியரசுத் தலைவர் ஆணையிடுவார்.)

பட்டியலினத்தவர் சமுதாயத்தில் இருந்து ஒருவர் முதல் முறையாக உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்ட ஆண்டு

A) 2000 B) 2003 C) 2005 D) 2008

(குறிப்பு: பட்டியலினத்தை சேர்ந்த முதல் உச்சநீதிமன்ற நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் ஆவார். இவர் 2007 இல் பட்டியலினத்தைச் சார்ந்த முதல் தலைமை நீதிபதியாக உயர்ந்தார்.)

தற்போதுள்ள அரசமைப்பின் கீழ் இந்திய உச்சநீதிமன்றம் எப்போது செயல்படத் தொடங்கியது?

A) ஜனவரி 25, 1950

B) ஜனவரி 26, 1950

C) ஜனவரி 27, 1950

D) ஜனவரி 28, 1950

(குறிப்பு: இந்திய உச்ச நீதிமன்றம் தொடக்கத்தில் நாடாளுமன்றத்தின் இளவரசர்கள் மாடத்தில் செயல்பட்டது. 1958 ஆம் ஆண்டு தற்போது உள்ள வளாகத்துக்கு மாற்றப்பட்டது.)

கூற்று 1: நீதிபதி ஹரிலால் ஜெ.கனியா உச்சநீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதி ஆவார்.

கூற்று 2: அவருடன் நீதிபதிகளாக பதவியேற்றவர்கள் முறையே நீதிபதி சையத் பாசல் அலி, பதஞ்சலி சாஸ்திரி, நீதிபதி மெகர்சந் மகாஜன், நீதிபதி பிஜன் குமார், நீதிபதி முகர்ஜி மற்றும் நீதிபதி எஸ்.ஆர்.தாஸ் ஆகியோர்கள் ஆவர்,

A) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

B) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

C) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

தற்போது இந்தியாவில் ________________ மாநிலங்கள் ஒன்றுக்கு அதிகமான மாநிலங்களுடன் இணைந்த உயர் நீதிமன்றத்தினைக் கொண்டுள்ளன.

A) 2 B) 3 C) 4 D) 5

(குறிப்பு: ஆறு ஒன்றிய ஆளுகைக்குட்பட்ட பகுதிகள் அருகே அமைந்த மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தின் நீதி அதிகார வரம்பின் கீழ் வருகின்றன.)

ஒன்றிய ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் ___________ தனக்கான உயர் நீதிமன்றத்தினைக் கொண்டுள்ளது.

A) பாண்டிச்சேரி

B) டில்லி

C) சண்டிகர்

D)அந்தமான் நிக்கோபர்

கூற்று 1: உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியினை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, மாநிலத்தின் ஆளுநர் ஆகியோரை கலந்தாலோசித்து குடியரசுத் தலைவர் நியமனம் செய்கிறார்.

கூற்று 2: உயர்நீதிமன்றத்தின் பிற நீதிபதிகளின் நியமனத்தில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளின் பரிந்துரைகளும் ஆலோசனை கேட்கப்படும்.

A) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

B) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

C) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

(குறிப்பு: உயர்நீதிமன்ற நீதிபதிகளின் பதவிநீக்கத்தை பொருத்தவரை உச்சநீதிமன்ற நீதிபதியின் பதவி நீக்க நடைமுறை போலவே இருக்கும்.)

கூற்று 1: உயர்நீதிமன்ற நீதிபதிகள் 65 வயது நிரம்பும் வரை பதவியில் இருப்பர்.

கூற்று 2: உயர் நீதிமன்ற நீதிபதி நியமனத்திற்கு ஒருவர், இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும், 10 ஆண்டுகள் நீதித் துறையில் பணிபுரிந்திருக்க வேண்டும் அல்லது 10 ஆண்டுகள் உயர் நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றி இருக்க வேண்டும்.

A) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

B) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

C) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

(குறிப்பு: உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் 62 வயது நிரம்பும் வரை பதவியில் இருப்பர்.)

சரியானக் கூற்றைத் தேர்ந்தெடு.

1. உயர் நீதிமன்றத்தின் வழக்குகள் மாநில ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் அசல் நீதித்துறை மற்றும் மேல்முறையீட்டு அதிகார வரம்பு ஆகியனவற்றை உள்ளடக்கியது.

2. உயர்நீதிமன்ற நீதிபதிகள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உடனான ஆலோசனைக்கு பிறகு குடியரசுத் தலைவரால் ஒரு உயர் நீதிமன்றத்தில் இருந்து மற்றொரு உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட முடியும்.

3. உயர்நீதிமன்றங்களும் அடிப்படை உரிமைகள் தொடர்புடைய வழக்குகளில் நீதிப்பேராணைகள் வழங்கும் அதிகாரங்கள் கொண்டவைகளாகும்.

A) அனைத்தும் சரி

B) 1, 2 சரி

C) 2, 3 சரி

D) 1, 3 சரி

ஒரு நபரை உயிருடன் கொண்டு வந்து நிறுத்தும் படி கூறும் நீதிப்பேராணை

A) ஆட்கொணர்வு நீதிப்பேராணை

B) நெறியுறுத்தும் நீதிப்பேராணை

C) தடை நீதிப்பேராணை

D) விளக்கம் கோரும் ஆணை

(குறிப்பு: ஆட்கொணர்வு நீதிப்பேராணை ஒரு நபர் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டிருக்கும் ஒரு வழக்கிற்கு பொருந்தக்கூடியதாகும். இந்த நீதிப்பேராணையானது ஒவ்வொரு தனிநபரின், தனிநபர் சுதந்திரத்தைப் பாதுகாக்கிறது.)

சட்டப்படி இயங்கும் படியும், சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளைத் தடுப்பதற்கும் இடப்படும் அணை

A) ஆட்கொணர்வு நீதிப்பேராணை

B) நெறியுறுத்தும் நீதிப்பேராணை

C) தடை நீதிப்பேராணை

D) விளக்கம் கோரும் ஆணை

(குறிப்பு: எந்த ஒரு அதிகாரம் கொண்டோரையும் அவரின் சட்டப்பூர்வமான கடமையை செய்ய உத்தரவிடுவதை நெறியுறுத்தும் நீதிப்பேராணை குறிக்கும். இந்த ஆணை சட்டப்பூர்வ கடமையை வலியுறுத்துவதுடன், பொது மக்கள் நலன்காக்கும் கடமையை செய்ய மறுக்கும் அதிகாரி, அலுவலர்கள், அரசு என நீதிமன்ற அமைப்புகளுக்கு எதிராகக் கூட ஆணையிடக் கூடியதாகும்.)

நீதித்துறை சார்ந்த அமைப்புகள் அல்லது பகுதி அளவு நீதித்துறை அமைப்புகளுக்கு எதிராக மட்டும் வழங்கப்படும் ஆணை

A) ஆட்கொணர்வு நீதிப்பேராணை

B) நெறியுறுத்தும் நீதிப்பேராணை

C) தடை நீதிப்பேராணை

D) விளக்கம் கோரும் ஆணை

(குறிப்பு: தடை நீதிப் பேராணையானது உயர்மட்ட நீதிமன்றம், கீழ்நிலை நீதிமன்றம் அல்லது தீர்ப்பாயங்கள் தங்களின் அதிகார வரம்பை மீறி நடப்பதைத் தடுக்கும் விதமாக வழங்கப்படுவதாகும்.)

ஒரு நபர், ஒரு அரசு அலுவலக பதவியில், எந்தத் தகுதியின் அடிப்படையில் அமர்ந்திருக்கிறார் என வினா எழுப்பும் படியான விவகாரத்தில் வழங்கப்படும் நீதிப்பேராணை

A) ஆட்கொணர்வு நீதிப்பேராணை

B) நெறியுறுத்தும் நீதிப்பேராணை

C) தகுதி முறை வினவும் நீதிப் பேராணை

D) விளக்கம் கோரும் ஆணை

(குறிப்பு: தகுதி முறை வினவும் நீதிப் பேராணையின் பொருள், எந்த அதிகாரத்தின் அடிப்படையில் அல்லது பணி சான்றிதழ் ஆணை அடிப்படையில் என வினா எழுப்புவதை குறிப்பிடுவதாகும்.)

ஒரு பொது அலுவலில் சட்டப்பூர்வ நிலையை ஒருவர் எதன் அடிப்படையில் அல்லது எந்த அதிகார அமைப்பின் அடிப்படையில் அதில் அமர்த்தப்பட்டார் என்று கேள்வி கேட்கும் நீதிப்பேராணை

A) ஆட்கொணர்வு நீதிப்பேராணை

B) நெறியுறுத்தும் நீதிப்பேராணை

C) தகுதி முறை வினவும் நீதிப் பேராணை

D) விளக்கம் கோரும் ஆணை

கூற்று 1: நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றங்கள் இயற்றும் சட்டங்கள் அரசமைப்பிற்கு முரணாக இருக்குமானால் அச்சட்டம் செல்லாது என்று இந்திய உச்சநீதிமன்றம் அல்லது உயர்நீதிமன்றங்களால் நீக்கப்படும். இதற்கு நீதித்துறைச் சீராய்வு என்று பெயர்.

கூற்று 2: வங்கிகள் தேசியமயமாக்கும் சட்டம் செல்லாது என தீர்ப்பளித்ததும், சிறுபான்மையினர் தங்களுக்கான கல்வி நிறுவனங்கள் நிறுவவும் நிர்வகிக்கவும் வழங்கப்பட்ட உரிமைகளைப் பறிக்கும் வகையில் இயற்றப்பட்ட சட்டங்கள் செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததும் நீதித்துறைச் சீராய்வு முறையீடு மனு மீது வழங்கப்பட்ட முக்கிய தீர்ப்பாகும்.

A) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

B) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

C) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

நாடு முழுவதும் ஒரே மாதிரியான விதிகளை அமல்படுத்துவது சரியல்ல என்று கூறும் இந்திய அரசமைப்பு உறுப்பு

A) 12 (3) B) 13 (2) C) 13 (3) D) 13 (1)

(குறிப்பு: நாடு தழுவிய ஒரே மாதிரியான விதிகள் அரசமைப்பு பாகம் 3 இல் வழங்கப்பட்டுள்ள உரிமைகளை பறிப்பதாகும் என 13 (2) வது உறுப்பு கருதுகிறது.)

____________க்குப் பின்னர் அரசமைப்பின் ஒன்பதாவது பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள சட்டங்கள் தொடர்பாக மறுசீராய்வு கோர முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

A) 24.04.1969

B) 24.04.1972

C) 24.04.1973

D) 24.04.1976

(குறிப்பு: தற்போது சீராய்வுக்கு உட்பட்டதாகத் தோன்றும் சட்டங்கள் ஒன்பதாவது பட்டியலில் சேர்க்கப்பட்டாலும் அவற்றின் மீது மறுசீராய்வு கோர முடியாது.)

கூற்று 1: நீதிமன்ற மறுசீராய்வு என்பது சட்டம் குறித்த வினாக்களுக்கு மட்டுமே பொருந்தக்கூடியது ஆகும். அரசியல் சம்பந்தமாக எழும் பிரச்சினைகளுக்கு இதனை செயல்படுத்த முடியாது.

கூற்று 2: உச்ச நீதிமன்றம் தானாகவே எந்த ஒரு சட்டத்தையும் மறுசீராய்வுக்கு உட்படுத்த முடியும்.

A) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

B) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

C) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

(குறிப்பு: உச்ச நீதிமன்றம் தானாகவே எந்த ஒரு சட்டத்தையும் மறுசீராய்வுக்கு உட்படுத்த முடியாது. ஒரு குறிப்பிட்ட விதி அல்லது சட்டம் ஆகியவற்றை எதிர்த்து வரும் வழக்கில் மட்டுமே பயன்படுத்த முடியும்.)

கூற்று 1: பொதுமக்கள் நலன் கருதி எந்த ஒரு தனிநபரும் நீதிமன்றத்தை நாடி மனு அளிக்க முடியும். இது பொதுநலன் மனு எனப்படுகிறது.

கூற்று 2: அரசமைப்பு உறுப்பு 32ன் கீழ் உச்ச நீதிமன்றத்திலும், அரசமைப்பு உறுப்பு 226ன் கீழ் உயர்நீதிமன்றங்களிலும், குற்றவியல் நடைமுறைச் சட்டம் 133ன் படி நடுவர் நீதி மன்றங்களிலும் பொது நல வழக்கிற்கான மனுவைத் தாக்கல் செய்ய முடியும்.

A) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

B) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

C) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

(குறிப்பு: மாநில அரசுகள், மத்திய அரசு, மாநகராட்சி ஆகியவற்றிற்கு எதிராக பொது நல வழக்கு தொடர முடியும். ஆனால், தனிநபருக்கு எதிராக பொது நல வழக்கு பதிவு செய்ய முடியாது.)

பெருகி வரும் சாலை விபத்துகளை கருத்திற்கொண்டு சாலை பாதுகாப்பு சட்டங்களை இயற்றுவதற்கான ‘பொது நலனுக்கான சமூகம் எதிர் இந்திய அரசு’ என்ற பொது நல வழக்கு நடைபெற்ற ஆண்டு

A) 2001 B) 2004 C) 2005 D) 2008

பரமானந் கட்டாரா எதிர் இந்திய அரசு என்ற பொதுநல வழக்கு எதனோடு தொடர்புடையது?

A) சாலை பாதுகாப்பு விதிகளை முறையாக நடைமுறைப்படுத்துதல்

B) குறைந்தபட்ச கூலி வழங்காமை

C) கொத்தடிமை தொழிலாளர்கள் முறை தொடர்பான விவகாரம்

D) காயமடைந்தவரை காத்திருக்க வைக்காமல் உடனடியாக மருத்துவ உதவியினை செய்தல்

நீதித்துறை செயல்பாட்டு முறை (Judicial Activism) என்ற சொல்லினை அறிமுகப்படுத்தியவர்

A) பரமானந் கட்டாரா

B) ஆர்தர் சன் சிங்கர் ஜூனியர்

C) ஜெகதீஷ் பகவதி

D) ஹரிலால் ஜெ.கனியா

(குறிப்பு: அமெரிக்காவில் 1947ஆம் ஆண்டு ஆர்தர் சன் சிங்கர் ஜூனியர் என்பவர் “உச்ச நீதிமன்றம்” 1947 என்று தலைப்பிட்ட கட்டுரை ஒன்றில் நீதித்துறை செயல்பாட்டு முறை என்ற சொல்லினை அறிமுகப்படுத்தினார்.)

கூற்று 1: மாறிக் கொண்டிருக்கும் ஒரு சமூகத்தில் நீதித்துறை மேற்கொள்ளும் வீரியமிக்க செயற்பாடுகள் நீதித்துறை செயல்பாட்டு முறை எனப்படுகிறது.

கூற்று 2: பிளாக்ஸின் சட்ட அகராதி Judicial Activism – என்பது ஒரு “நீதித்துறை தத்துவம்” என்று கூறுகிறது.

A) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

B) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

C) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

தவறான இணையைத் தேர்ந்தெடு.

1. இங்கிலாந்து – நாடாளுமன்ற மக்களாட்சி, தனித்துவ நீதித்துறை

2. அமெரிக்கா – அடிப்படை உரிமைகள், முன்வரைவு, கூட்டமைவு, கூட்டாட்சி

3. அயர்லாந்து – மாநிலக் கொள்கைகள் நேரடி கோட்பாடுகள்

A) 1 மட்டும் தவறு

B) 2 மட்டும் தவறு

C) 3 மட்டும் தவறு

D) எதுவுமில்லை

உச்சநீதிமன்றத்தில் அடிக்கடி எடுத்தாளப்படும் இந்திய அரசமைப்பு உறுப்பு

A) 19 B) 20 C) 21 D) 22

(குறிப்பு: இந்த அரசமைப்பு உறுப்பின் (21) மீதான தீர்ப்புகள் யாவும் நீதித்துறை செயல்பாட்டு முறை (Judicial Activism) போக்கினை பிரதிபலிக்கின்றன.)

கூற்று 1: ஏ.கே.கோபாலன் எதிர் மதராஸ் மாநில அரசு எனும் வழக்கில் ஒரு மனிதனின் வாழ்க்கை அல்லது சுதந்திரம் ஒடுக்கப்பட வேண்டும் என்ற வாதத்தை சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள செயல்முறைகள் அடிப்படையில் மட்டுமல்லாமல் பகுத்தறிவு மற்றும் நீதியின் அடிப்படையிலும் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

கூற்று 2: மேனகா காந்தி எதிர் இந்திய அரசு என்ற வழக்கில் ஏ.கே.கோபாலன் எதிர் மதராஸ் வழக்கின் நியாய வாதத்தினை நீதிமன்ற விளக்கம் மூலம் அரசமைப்பு உறுப்பு 21ல் துணைப் பிரிவாகச் சேர்க்கப்பட்டது.

A) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

B) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

C) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

___________ நாட்டின் உயர்நிலை நீதியமைப்பு உயர்நீதிமன்றம் என்றும் மாநில தலைமை நீதிமன்றங்கள் உச்சநீதிமன்றம் என்றும் அழைக்கப்படுகிறது.

A) அமெரிக்கா

B) இங்கிலாந்து

C) கனடா

D) ஆஸ்திரேலியா

கூற்று 1: நாட்டிற்காக சட்டமன்றங்களில் இயற்றப்படும் விதிகள் யாவும் “சட்டங்கள்” என்று அழைக்கப்படுகின்றன.

கூற்று 2: இந்தியாவில் சட்டத்தின் ஆட்சி என்ற ஆங்கிலக் கருத்தை காலனி ஆட்சி அறிமுகப்படுத்தியது.

A) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

B) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

C) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

(குறிப்பு: சட்டத்தின் ஆட்சியில் மூன்று முதன்மையான சிறப்புகள் உள்ளன. அவை,

சட்டத்தின் முன் அனைவரும் சமம்

சட்டத்திற்கு மேல் யாரும் இல்லை

சட்டம் அனைவரும் பொருந்தக்கூடியது.)

நிர்வாகச் சட்டங்கள் என்பவை நிர்வாகத்துடன் தொடர்புடையவை என கூறியவர்

A) ஐவேர் ஜென்னிங்ஸ்

B) ஆர்தர் சன் சிங்கர் ஜூனியர்

C) ஜெகதீஷ் பகவதி

D) ஹரிலால் ஜெ.கனியா

(குறிப்பு: நிர்வாகக் சட்டம் என்பது பொது சட்டத்தில் ஒரு பிரிவு ஆகும். அது அரசாங்கத்திற்கும் தனிமனிதனுக்கும் உள்ள உறவு குறித்து பேசுகிறது. இது சட்டத்தை அமலாக்கம் செய்யும் அமைப்பைத் தீர்மானிக்கும் உயர்மட்டத்தினர் மற்றும் பகுதியளவு நீதித்துறை அதிகாரம் கொண்டோரை வரையறை செய்கிறது.)

1834 ஆம் ஆண்டு இந்தியாவில் அமைக்கப்பட்ட முதல் சட்ட ஆணையத்தின் பரிந்துரையின் கீழ் __________ ஆண்டு இந்திய தண்டனைச் சட்டம் தயாரிக்கப்பட்டது.

A) 1840 B) 1850 C) 1860 D) 1865

(குறிப்பு: இந்திய தண்டனைச் சட்டம் என்பது இந்தியாவின் குற்றவியல் சட்டமாகும். இது தொடக்கக்கால பிரிட்டிஷ் இந்திய ஆட்சியின் கீழ் 1862 ல் அமலுக்கு வந்தது.)

கூற்று 1: இந்திய தண்டனைச் சட்டம் என்பது ஒரு நபர் மேற்கொள்ளும் அனைத்து குற்றங்களுக்கான வழக்குகள், அவற்றுக்கான தண்டனைகள் ஆகியனவற்றின் பட்டியல் கொண்ட ஆவணமாகும்.

கூற்று 2: இந்திய தண்டனைச் சட்டம் அனைத்து குடிமக்களையும் உள்ளடக்கியது. இராணுவத்தினரும் இதர படைகளின் வீரர்களும் விலக்களிக்கப்பட்டுள்ளனர்.

A) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

B) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

C) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

ஒரு குழு செயல்பாட்டில் கலந்து கொண்ட ஒரு நபர் ஆற்றிய பங்களிப்பு எவ்வளவு சிறியதாக இருந்தாலும், அக்குழுவினர் மேற்கொண்ட செயல்களின் பொது நோக்கிற்கும் முழுமையான பொறுப்பானவராகவே கருதப்படுவார் எனக் கூறும் இந்திய தண்டைனைக் குறியீட்டுக் கீழ் பிரிவு

A) 31 B) 32 C) 33 D) 34

(குறிப்பு: இதே சட்டம் பிரிவு 149ன் கீழ், சட்ட விரோதமாகக் கூடிய ஒரு குழுவைச் சேர்ந்த நபர்கள் அனைவரும் அந்த சட்ட விரோத குழுச் செயலின் உள்நோக்கம் அல்லது சட்டவிரோதக் கூடுதலில் ஏற்படக்கூடிய கெடு விளைவு அடிப்படையில் தண்டனைக்குரியவர்கள் ஆவர்.)

தொழில்நுட்ப வளர்ச்சிக்கு உகந்த புதிய குற்றவியல் சட்டத்தை உருவாக்க இந்திய அரசு ______________ ஆண்டு குழு அமைத்தது.

A) 2000 B) 2001 C) 2002 D) 2003

(குறிப்பு: இந்தக் குழு 2003ஆம் ஆண்டு தனது அறிக்கையை அளித்தது,)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!