Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Book Back QuestionsTnpsc

இயக்கம் Book Back Questions 9th Science Lesson 2

9th Science Lesson 2

2] இயக்கம்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

கணக்கீடு 1: ஒரு பொருள் 16 மீ தொலைவை 4 நொடியிலும் மேலும் 16 மீ தொலைவை 2 நொடியிலும் கடக்கிறது. அப்பொருளின் சராசரிவேகம் என்ன?

தீர்வு: பொருள் கடந்த மொத்தத் தொலைவு = 16 மீ + 16 மீ = 32 மீ

மொத்த நேரம் = 4 வி + 2 வி = 6 வி

சராசரி வேகம் = மொத்தத் தொலைவு / மொத்தநேரம் = 32 / 6 = 5.33 மீ/வி

எனவே, பொருளின் சராசரி வேகம் 5.33 மீ/வி ஆகும்.

கணக்கீடு 2: ஒரு மழை நாளில் வானத்தில் மின்னல் ஏற்பட்ட 5 விநாடிக்குப் பிறகு ஒலி கேட்டது. மின்னல் ஏற்பட்ட இடம் எவ்வளவு தொலைவில் உள்ளது என்று கண்டுபிடிக்கவும். காற்றில் ஒலியின் வேகம் = 346 மீ/விநாடி.

தீர்வு: வேகம் = தொலைவு/காலம்

தொலைவு = வேகம் x காலம் = 346 x 5 = 1730 மீ

மின்னல் ஏற்பட்ட இடம் இடியைக் கேட்ட இடத்திலிருந்து 1730 மீ தொலைவில் இருக்கும்.

வாகனத்தில் உள்ள வேகமானி ஒரு குறிப்பிட்ட கண நேரத்தில் நிகழும் வேகத்தை அளக்கும். ஒருபரிமாண சீரான இயக்கத்தில் சராசரித் திசைவேகமும் உடனடித் திசைவேகமும் சமம். எந்த ஒரு கணத்திலும் கணக்கிடப்படும் உடனடித் திசைவேகம் என்பதை அப்பொருளின் திசைவேகம் என்றும் உடனடி வேகம் என்றும் வேகம் என்றும் கூறலாம்.

கணக்கீடு 3: மகிழுந்து ஒன்றில் வேகத்தடையைப் பயன்படுத்தும் போது, 6 மீ/வினாடி2 முடுக்கத்தை அது செல்லும் திசைக்கு எதிர்த்திசையில் ஏற்படுத்துகிறது. நிறுத்தக் கருவியைப் (brake) பயன்படுத்திய பிறகு 2 விநாடி கழித்து மகிழுந்து நின்றது. இக்கால இடைவெளியில் அது கடந்த தொலைவைக் கணக்கிடுக.

தீர்வு: கொடுக்கப்பட்ட தகவல்கள் முடுக்கம் a = -6 மீ/விநாடி2

காலம் t = 2 விநாடி

இறுதிவேகம் v = 0

இயக்கச் சமன்பாட்டிலிருந்து, v = u + at

0 = u + (-6 x 2)

0 = u – 12

u = 12 மீ/விநாடி

s = ut + ½ at2 = [(12 x 2) + ½ (-6 x 2 x 2)]

S = 24 – 12 = 12 மீ

நிறுத்தக் கருவியைப் (brake) பயன்படுத்திய பின்னர் மகிழுந்து ஓய்வு நிலைக்கு வருவதற்குள் அது 12 மீ தொலைவைக் கடந்திருக்கும்.

ஓரு பொருள் சுழி திசைவேகம் மற்றும் வரையறுக்கப்பட்ட முடுக்கத்தைக் கொண்டிருக்க முடியுமா? ஆம், ஒரு பொருளை செங்குத்தாக மேல் நோக்கி எறிந்தால், பொருளின் திசைவேகம் படிப்படியாகக் குறைந்து, பெரும உயரத்தை அடைந்த நிலையில் சுழி மதிப்பைப் பெறுகிறது. அப்போது அப்பொருளின் முடுக்கம் புவிஈர்ப்பு முடுக்கத்துக்குச் சமமாக இருக்கும்.

கணக்கீடு 4: 900 கிலோ கிராம் நிறையுடைய மகிழுந்து ஒன்று 10 மீ/விநாடி வேகத்தில் 25 மீட்டர் ஆரம் உடைய வட்டத்தைச் சுற்றி வருகிறது. மகிழுந்தின் மீது செயல்படும் முடுக்கம் மற்றும் நிகர விசையைக் கணக்கிடுக.

தீர்வு: மகிழுந்து வட்டப்பாதையில் இயங்கும் போது, அதன் மீது செயல்படும் மையநோக்கு முடுக்கத்திற்கான சமன்பாடு, a = ʋ2/r

a = ʋ2/r = (10)2/25 = 100/25 = 4 மீ/நொடி2 மகிழுந்தின் மீது செயல்படும் நிகர விசை,

F = ma = 900 x 4 = 3600 நியூட்டன்.

பொழுதுபோக்குப் பூங்காவில் குடை இராட்டினத்தில் சுற்றும்பொழுது நீங்கள் எந்த மாதிரியான விசையை உணர்கிறீர்கள்? குடை இராட்டினம் ஒரு செங்குத்து அச்சைப் பற்றி சுழலும் போது நாம் ஒரு வெளிநோக்கிய திசையில் ஏற்படும் இழுவிசையை உணர்கிறோம். இது மையவிலக்கு விசையினால் ஏற்படுவதாகும்.

ஈர்ப்பு விசை, உராய்வு விசை, காந்த விசை, நிலை மின்னியல் விசை மற்றும் இது போன்ற எந்த ஒரு விசையும் மையநோக்கு விசை போன்று செயல்படும்.

சரியான விடையைத் தேர்ந்தெடு

1. திசைவேகம்-காலம் வரைபடம் உள்ளடக்கும் பரப்பளவு எதனைப் பிரதிபலிக்கிறது?

(அ) நகரும் பொருளின் திசைவேகம்

(ஆ) நகரும் பொருள் அடைந்த இடப்பெயர்ச்சி

(இ) நகரும் பொருளின் வேகம்

(ஈ) நகரும் பொருளின் முடுக்கம்

2. கீழ்க்கண்டவற்றில் எது பெரும்பாலும் சீரான வட்ட இயக்கம் அல்ல?

(அ) சூரியனைச் சுற்றிவரும் பூமியின் இயக்கம்

(ஆ) வட்டப் பாதையில் சுற்றி வரும் பொம்மை ரயிலின் இயக்கம்

(இ) வட்டப் பாதையில் செல்லும் பந்தய மகிழுந்து

(ஈ) கடிகாரத்தின் மணி முள்ளின் இயக்கம்.

3. கீழ்வரும் வரைபடத்தில் சீரான இயக்கத்தில் நகரும் ஒரு பொருளைக் குறிப்பிடுவது எது?

4. மையவிலக்கு விசை ஒரு

(அ) உண்மையான விசை

(ஆ) மையநோக்கு விசைக்கு எதிரான விசை

(இ) மெய்நிகர் விசை

(ஈ) வட்டப் பாதையின் மையத்தை நோக்கி இயங்கும் விசை

கோடிட்ட இடங்களை நிரப்பு:

1. வேகம் ஒரு _________ அளவு. அதே சமயம் திசைவேகம் ஒரு __________ அளவு.

2. தொலைவு–கால வரைபடத்தின் எந்த ஒரு புள்ளியிலும் சாய்வின் மதிப்பைத் தருவது __________

3. எதிர்மறை முடுக்கத்தை __________ என்றும் கூறலாம்.

4. இடப்பெயர்ச்சி – காலம் வரைபடத்தில் உள்ள பரப்பளவு குறிப்பிடுவது ___________

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: தவறான வாக்கியத்தை திருத்தி எழுதுக:

1. நகரத்தின் நெருக்கடி மிகுந்த கடுமையான போக்குவரத்திற்கிடையே செல்லும் ஒரு பேருந்தின் இயக்கம் சீரான இயக்கத்துக்கு ஒரு உதாரணம்.

2. முடுக்கம் எதிர்மறை மதிப்பும் பெறும்.

3. எந்தவொரு கால இடைவெளியிலும் ஒரு பொருள் கடந்த தூரம் சுழி ஆகாது. ஆனால் இடப்பெயர்ச்சி சுழி ஆகும்.

4. ஈர்ப்பு விசையால் தடையின்றி தானே விழும் ஒரு பொருளின் திசைவேகம் – காலம் வரைபடமானது x – அச்சுக்கு இணையாக ஒரு நேர்கோடாக இருக்கும்.

5. ஒரு பொருளின் திசைவேகம் – காலம் வரைபடம் ஒரு நேர்கோடாக இருந்து, அது காலத்தினுடைய அச்சுக்கு சாய்வாக இருந்தால் அதன் இடப்பெயர்ச்சி – காலம் வரைபடம் ஒரு நேர் கோடாக அமையும்.

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

(அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் உண்மை. மேலும், காரணம் கூற்றின் சரியான விளக்கம்

(ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் உண்மை. ஆனால், காரணம் கூற்றின் தவறான விளக்கம்

(இ) கூற்று உண்மை. ஆனால் காரணம் தவறு

(ஈ) கூற்று தவறு. ஆனால் காரணம் உண்மை

1. கூற்று: ஒரு பொருளின் முடுக்குவிக்கப்பட்ட இயக்கம் அதன் திசைவேக அளவு அல்லது திசைமாற்றம் அல்லது இரண்டும் மாற்றம் அடைவதால் ஏற்படுவது.

காரணம்: ஒரு பொருளின் முடுக்கம் அதன் திசைவேகத்தின் அளவு மாறுபடுவதால் மட்டுமே நிகழும். அது திசை மாற்றத்தைப் பொறுத்தது அல்ல.

2. கூற்று: மகிழுந்து அல்லது மோட்டார் சைக்கிளில் உள்ள வேகமானி அதன் சராசரி வேகத்தை அளவிடுகிறது.

காரணம்: மொத்த தூரத்தை நேரத்தால் வகுத்தால் அது சராசரி திசை வேகத்துக்கு சமம்

3. கூற்று: ஒரு பொருளின் இடப்பெயர்ச்சி சுழி ஆனால் அப்பொருள் கடந்த தூரம் சுழி இல்லை.

காரணம்: இடப்பெயர்ச்சி தொடக்க நிலைக்கும் முடிவு நிலைக்கும் இடையே உள்ள குறுகிய பாதை ஆகும்.

பொருத்துக:

சரியான விடையைத் தேர்ந்தெடு: (விடைகள்)

1. நகரும் பொருளின் முடுக்கம் 2. வட்டப் பாதையில் செல்லும் பந்தய மகிழுந்து 3. (ஆ) 4. மெய்நிகர் விசை

கோடிட்ட இடங்களை நிரப்புக: (விடைகள்)

1. ஸ்கேலார், வெக்டார் 2. வேகம் 3. வேக இறக்கம் அல்லது ஒடுக்கம் 4. இடப்பெயர்ச்சி

சரியா, தவறா தவறெனில் திருத்துக: (விடைகள்)

1. தவறு

சரியான விடை: நகரத்தின் நெருக்கடி மிகுந்த கடுமையான போக்குவரத்திற்கு இடையே செல்லும் ஒரு பேருந்தின் இயக்கம் சீரற்ற இயக்கத்திற்கு ஒரு உதாரணம்.

2. சரி

3. சரி

4. தவறு

சரியான விடை: ஈர்ப்பு விசையால் தடையின்றித் தானே விழும் ஒரு பொருளின் திசைவேகம் – காலம் வரைபடமானது x அச்சுக்கு இணையாக ஒரு நேர்க் கோடாக இருக்காது.

5. சரி

கூற்று மற்றும் காரணக் கேள்விகள்:

1. கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் உண்மை மேலும் காரணம் கூற்றின் சரியான விளக்கமாகும்.

2. கூற்று தவறு ஆனால் காரணம் உண்மை.

3. கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் உண்மை மேலும் காரணம் கூற்றின் சரியான விளக்கம்.

பொருத்துக:

1. சமகால அளவுகளின் சம இடைவெளியைக் கடக்கும் ஒரு பொருளின் இயக்கம் – ஆ

2. சீரற்ற முடுக்கம் – இ

3. நிலையான எதிர்மறை முடுக்கம் – அ

4. சீரான முடுக்கம் – ஈ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!