Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Book Back QuestionsTnpsc

இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் Book Back Questions 10th Social Science Lesson 4

10th Social Science Lesson 4

4] இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

டாக்டர் சன் யாட் சென் (1866-1925): ஒரு ஏழ்மையான குடும்பத்தில் காண்டன் நகரத்தின் அருகே பிறந்த டாக்டர் சன்யாட் சென், நவீன சீனாவின் தந்தை, ஒரு கிறித்தவப் பள்ளியில் கல்வி பெற்றதோடு கிறித்தவராகவும் மாறினார். ஹாங்காங் நகரில் மருத்துவப் பயிற்சி பெற்றார். அரசியலில் ஆர்வம் கொண்டிருந்த அவர் 1895இல் மஞ்சுக்களுக்கு எதிரான கிளர்ச்சியில் ஈடுபட்டார். அவர் 1905ஆம் ஆண்டு டோக்கியோவில் ஒரு அரசியல் கட்சியைத் துவக்கினார். அதுவே 1912இல் கோமிங்டாங் என்றும் தேசிய மக்கள் கட்சி என்றும் உருவெடுத்தது. தேசியம், ஜனநாயகம், மக்களின் வாழ்க்கை முறை ஆகிய மூன்று கூறுகளைக் கொண்ட அவர் தம் கொள்கை சோஷியலிஸைச் சிந்தனையையே உச்சமாகக் கருத்தில் கொண்டது.

மா சே-துங் (1893-1976): தென்கிழக்குச் சீனாவில் உள்ள ஹீனான் நகரில் மா சே-துங் பிறந்தார். அவரது தந்தையார் செல்வச் செழிப்பான விவசாயிகளில் ஒருவர் என்பதோடு மஞ்சுக்களின் ஆட்சியை ஆதரித்தவராவார். வாசிப்பதில் மிகுந்த ஆர்வங்கொண்ட மா சே-துங் தன் திறமையால் சாங்ஸியாவிலிருந்த இளையோர் கல்லூரியில் இடம் பிடித்தார். அதே ஆண்டு (1911) சீனாவில் புரட்சி வெடித்தது. புரட்சிப்படை ஒன்றை உருவாக்கிய போதும் விரைவில் அதிலிருந்து விலகி சாங்ஸியாவிலிருந்து ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்தார் பின்னர் ஹீனான் நகரை மையமாகக் கொண்டு தனது அரசியல் வாழ்க்கையைத் துவங்கிய அவர் ஒரு முழு பொதுவுடைமைவாதியாக மாறினார்.

பனிப்போர்: இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கும் சோவியத் நாட்டிற்கும் இந்நாடுகளின் நட்பு நாடுகளுக்குமிடையே மூண்ட விரோதம், பரபரப்பையே பனிப்போர் என்கின்றனர். அவை நேரடியாக ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தவில்லை மாறாக அவர்கள் அரசியல் பொருளாதார சிந்தனைத் தளங்களைத் தேர்வு செய்துகொண்டனர்.

இரண்டாம் உலகப் போருக்கு பிறகு ஏற்பட்ட வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், இடம் பெயர்வு போன்ற பிரச்சனைகளே மேற்கு ஐரோப்பாவிற்குள் பொதுவுடைமைக் கருத்து வளரக் காரணமாய் அமையும் என்று அமெரிக்க ஐக்கிய நாடு கருதியது. அமெரிக்க ஐக்கிய நாட்டின் செயலர் ஜார்ஜ் சி. மார்ஷல் ஐரோப்பாவின் சுய முன்னேற்ற முயற்சிக்குத் தம் நாடு பண உதவி செய்யுமென்று அறிவித்தார். பதினாறு நாடுகள் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்தன. நிர்வாக மற்றும் தொழில் நுட்ப உதவிகளும் அமெரிக்க ஐக்கியப் பொருளாதார ஒத்துழைப்பு நிர்வாகத்தின் கீழ் வழங்கப்பட்டன. நிதியுதவி வழங்கும் மார்ஷலின் திட்டமானது 1951இல் முடிவுக்கு வந்தது.

சீயோனிய இயக்கம்: யூதர்களின் பூர்வீகப் பகுதியான பாலஸ்தீனத்தில் 1900இல் ஆயிரம் யூதர்களே குடியிருந்தனர். இவ்வினத்தின் பதினைந்து மில்லியன் மக்கள் ஐரோப்பாவிலும் வடக்கு அமெரிக்காவிலும் பரவிக்கிடந்தனர் (இதுவே “புலம்பெயர்” சமூகம் என்று குறிக்கப்படுகிறது). வியன்னாவில் பத்திரிகையாளராக இருந்த தோடோர் ஹெர்சல் யூத நாடு என்ற பெயரில் 1896ஆம் ஆண்டு ஒரு துண்டுப் பிரசுரத்தை வெளியிட்டார். அதற்கு அடுத்த ஆண்டு (1897) உலக சீயோனிய அமைப்பு உருவாக்கப்பட்டது.

பாலஸ்தீனிய விடுதலை அமைப்பு: இஸ்ரேல் என்ற தேசம் 1948இல் உருவாவதற்கு முன் பாலஸ்தீனில் வாழ்ந்த அரேபியர்களுக்கும் அவர்கள் வம்சாவளியினருக்குமாக உருவாக்கப்பட்ட ஒரு பரந்த அமைப்பு இதுவாகும். இரகசியமாக செயல்பட்டு வந்த எதிர்ப்பு இயக்கங்கள் தங்களை ஒருங்கிணைக்க 1964இல் உருவாக்கப்பட்ட அமைப்பாகும். இவ்வமைப்பின் முக்கிய தலைவர் யாசர் அராபத் ஆவார்.

யாசர் அராபத் (1924-2004): யாசர் அராபத் பாலஸ்தீன விடுதலை அமைப்பின் செயற்குழுவிற்கு 1969இல் தலைமையேற்று 2004இல் அவர் இறக்கும் வரை அப்பொறுப்பில் வீற்றிருந்தார். செப்டம்பர் 1970இல் அவர் அனைத்துப் பாலஸ்தீன அரபு கொரில்லாப்படைகளுக்கும் முதன்மைத் தளபதியாகவும் நியமிக்கப்பட்டிருந்தார். ஒரு தலைப்பாகையுடனும் மறைவாக அவர் வைத்திருந்த துப்பாக்கியும் ஆலிவ் மரக்கிளையின் பகுதியும் அவர் தம் இராணுவச் சீருடையும் காண்போர் மனதில் பாலஸ்தீனப் பிரச்சனையின் தீவிரத்தை நினைவூட்டுவதாக அமைந்தது. அவர் 2 ஏப்ரல் 1989 அன்று பாலஸ்தீன விடுதலை அமைப்பின் நடுவண்குழுவால் பாலஸ்தீன தேசத்தின் முதல் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேற்கு ஜெர்மனியின் வேந்தராக (Chancellor) 1982 முதல் 1990 வரை பொறுப்பு வகித்த ஹெல்மட் கோல் கிழக்கு ஜெர்மனியையும், மேற்கு ஜெர்மனியையும் 1990இல் இணைக்கப் பெரும் பங்காற்றினார். அதன் மூலம் நாற்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பின் ஒன்றுபட்ட ஜெர்மனியின் வேந்தரானார். அவர் பிரெஞ்சு குடியரசுத் தலைவரான மிட்டரண்டோடு இணைந்து மாஸ்ட்ரிக்ட் ஒப்பந்தத்தை உருவாக்கி அதன் மூலமாக ஒருங்கிணைந்த ஐரோப்பாவிற்கும் (European Union), யூரோ பண உருவாக்கத்திற்கும் வித்திட்டார்

பெரிஸ்ட்ரோய்கா (மறுகட்டமைப்பு) என்பது மிக்கேல் கோர்பசேவால் சோவியத் நாட்டின் பொருளாதாரத்தையும், அரசியல் அமைப்பையும் மறுசீரமைப்பிற்கு உட்படுத்த 1980களின் கடைசியில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்றாகும். வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளின் முன்னேற்றத்திற்கு சோவியத்தின் பொருளாதாரம் ஈடு கொடுக்கும் படி அதற்குப் புத்துணர்வு ஊட்ட வெளிப்படைத் தன்மை (Glasnost) கொள்கையோடு அறிமுகப்படுத்தபட்டதே பெரிஸ்ட்ரோய்கா ஆகும். வெளிப்படைத்தன்மை என்ற கொள்கை மிக்கேல் கோர்பசேவால் பெரிஸ்ட்ரோய்காவோடு அறிமுகப்படுத்தப்பட்ட வெளிப்படையான ஒரு கருத்தியல் கொள்கையாகும். வெளிப்படைத்தன்மை எழுத்தாளர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளைத் தளர்த்தி அரசையும், அரசியலையும் விமர்சிக்க உரிமை வழங்கியது.

எல்சின் ஆரம்ப காலத்தில் கோர்பசேவின் நண்பராகவே இருந்தார். மாஸ்கோ நகரின் மேயராக இருந்த அவர் அரசியல் மற்றும் பொருளாதாரச் சுதந்திரத்தை ஆதரித்ததின் மூலமாகப் பெரும்புகழ் பெற்றார். சோவியத் பாராளுமன்றத்திற்கு 1989இல் ஜனநாயக முறைப்படி கோர்பசேவ் நடத்திய தேர்தலில் மாஸ்கோ தொகுதியில் போட்டியிட்ட அவர் பெரும் வெற்றி பெற்று அதிகாரத்திற்குத் திரும்பினார். அதற்கு அடுத்த ஆண்டு கோர்பசேவின் எதிர்ப்பையும் மீறி அவர் ரஷ்யாவின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ரஷ்யக் குடியரசின் தன்னாட்சியை வலியுறுத்திய அவர், பாராளுமன்றத்திற்கு கட்டுப்படாத முழு நிர்வாகப் பொறுப்பை கைகொள்ளும் அதிபர் முறையை முன்வைத்தார்.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. எந்த அமெரிக்கக் குடியரசுத் தலைவர் பொதுவுடைமைக் கொள்கையைக் கட்டுக்குள் அடக்க ஒரு கொள்கை வரைவை முன்வைத்தார்?

(அ) உட்ரோ வில்சன்

(ஆ) ட்ருமென்

(இ) தியோடர் ரூஸ்வெல்ட்

(ஈ) பிராங்க்ளின் ரூஸ்வெல்ட்

2. சீனாவில் மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாடு எப்போது நடைபெற்றது?

(அ) செப்டம்பர் 1959

(ஆ) செப்டம்பர் 1949

(இ) செப்டம்பர் 1954

(ஈ) செப்டம்பர் 1944

3. அமெரிக்க ஐக்கிய நாடும் அதன் ஐரோப்பிய நேச நாடுகளும் சேர்ந்து சோவியத் நாட்டின் ஆக்கிரமிப்பைத் தவிர்க்க ஏற்படுத்திய அமைப்பின் பெயர் _________ ஆகும்.

(அ) சீட்டோ

(ஆ) நேட்டோ

(இ) சென்டோ

(ஈ) வார்சா ஒப்பந்தம்

4. பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் செயற்குழுவிற்கு 1969இல் தலைவராகப் பதவியேற்றவர் யார்?

(அ) ஹபீஸ் அல்-ஆஸாத்

(ஆ) யாசர் அராபத்

(இ) நாசர்

(ஈ) சதாம் உசேன்

5. வடக்கு மற்றும் தெற்கு வியட்நாம் எந்த ஆண்டு ஒன்று சேர்க்கப்பட்டது?

(அ) 1975

(ஆ) 1976

(இ) 1973

(ஈ) 1974

6. எந்த ஆண்டு வார்சா ஒப்பந்தம் கலைக்கப்பட்டது?

(அ) 1979

(ஆ) 1989

(இ) 1990

(ஈ) 1991

கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. நவீன சீனாவின் தந்தை என்று அழைக்கப்படுபவர் ___________ ஆவார்.

2. 1918இல் __________ பல்கலைகழகத்தில் மார்க்ஸியக் கோட்பாட்டை அறியும் அமைப்பு நிறுவப்பட்டது.

3. டாக்டர் சன் யாட் சென்னின் மறைவுக்குப் பின்னர் கோமிங்டாங் கட்சியின் தலைவராக இருந்தவர் ___________ ஆவார்.

4. அமைதியையும் பாதுகாப்பையும் விரும்பிய அரபு நாடுகளுக்கு திறந்தே இருந்த ஒப்பந்தம் ___________ ஆகும்.

5. துருக்கிய அரபுப் பேரரசை ஏற்படுத்தும் நோக்கைக் கொண்டிருந்த ஒப்பந்தம் ___________ ஆகும்.

6. ஜெர்மனி நேட்டோவில் __________ ஆம் ஆண்டு இணைந்தது.

7. ஐரோப்பியக் குழுமத்தின் தலைமையகம் ___________ நகரில் அமைந்துள்ளது.

8. ஐரோப்பிய இணைவை உறுதி செய்ய 7 பிப்ரவரி 1992இல் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் ___________ ஆகும்.

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

1. i) கற்றறிந்த சிறுபன்மையினரின் தாக்கத்தில் சீனாவில் (1898) இளம் பேரரசர் துவக்கிய சீர்திருத்தங்கள் நூறு நாள் சீர்திருத்தம் என்று அறியப்படுகிறது.

ii) கோமிங்டாங் கட்சி தொழிலாளர்களையும் விவசாயிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தியது.

iii) மஞ்சூரியா மீதும் ஷாண்டுங் மீதும் ஜப்பான் பொருளாதாரக் கட்டுப்பாட்டை விதிக்க யுவான் ஷி-கே உடன்பட்டதால் தேசியவாதிகள் பார்வையில் அவர் செல்வாக்கு இழந்தார்.

iv) சோவியத் நாடு இருபது ஆண்டு காலத்திற்கும் மேலாக சீன மக்கள் குடியரசை அங்கீகரிக்க மறுத்தது.

(அ) i மற்றும் ii சரி

(ஆ) ii மற்றும் iii சரி

(இ) i மற்றும் iii சரி

(ஈ) i மற்றும் iv சரி

2. i) கிழக்கு ஐரோப்பாவில் 1948இல் சோவித் நாடு நிறுவிய இடது சாரி அரசுகளை சோவியத் ராணுவம் விடுதலை செய்தது.

ii) வடக்கு அட்லாண்டிக் பகுதியில் அமைதியையும் பாதுகாப்பையும் உறுதி செய்யவே நேட்டோ உருவாக்கப்பட்டது.

iii) சீட்டோவின் உறுப்பு நாடுகள் அப்பகுதியில் மக்களாட்சி பரவுவதைத் தடுக்கும் நோக்கோடு செயல்பட்டார்கள்.

iv) ஜப்பானுக்கெதிராக பிரிட்டன் அணுகுண்டைப் பயன்படுத்தியதின் மூலம் அது ரஷ்யாவுக்கு தன்னுடைய அழிக்கும் திறனை எடுத்துக்காட்ட விரும்பியது.

(அ) ii, iii மற்றும் iv சரி

(ஆ) i மற்றும் ii சரி

(இ) iii மற்றும் iv சரி

(ஈ) i, ii மற்றும் iii சரி

3. கூற்று: அமெரிக்காவின் மார்ஷல் திட்டம் போரில் பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளின் மறுநிர்மாணத்திற்காக முன் வைக்கப்பட்டது.

காரணம்: அமெரிக்க நாடு அத்திட்டத்தின் மூலம் மேற்கு ஐரோப்பிய நாடுகளைத் தன் செல்வாக்கின் கீழ் கொண்டு வர நினைத்தது.

(அ) கூற்றும் காரணமும் இரண்டுமே சரி. ஆனால் காரணம், கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.

(ஆ) கூற்றும் காரணமும் தவறானவை.

(இ) கூற்றும் காரணமும் சரி. காரணம், கூற்றை சரியாக விளக்குகிறது.

(ஈ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி.

பொருத்துக:

1. டாக்டர் சன் யாட் சென் – தெற்கு வியட்நாம்

2. சிங்மென் ரீ – கோமிங்டாங்

3. அன்வர் சாதத் – கொரியா

4. ஹோ சி மின் – எகிப்து

5. நிகோ டின் டியம் – வடக்கு வியட்நாம்

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)

1. ட்ரூமென் 2. (செப்டம்பர் 1949) 3. நேட்டோ 4. யாசர் அராபத் 5. (1976)

6. (1991)

கோடிட்ட இடங்களை நிரப்புக: (விடைகள்)

1. டாக்டர் சான்யாட் சென் 2. பீகிங் 3. ஷியாங்-கை-ஷேக்

4. சென்டோ/பாக்தாத் ஒப்பந்தம் 5. வெர்செயில்ஸ் 6. (1955) 7. ஸ்ட்ராஸ் பர்க்

8. மாஸ்டிரிக்ட் – நெகர்லாந்து

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றைத் தேர்வு செய்க: (விடைகள்)

1. (i மற்றும் ii சரி) 2. (i மற்றும் ii சரி)

3. கூற்றும் காரணமும் சரி, காரணம், கூற்றை சரியாக விளக்குகிறது.

பொருத்துக: (விடைகள்)

1. டாக்டர் சன் யாட் சென் – கோமிங்டாங்

2. சிங்மென் ரீ – கொரியா

3. அன்வர் சாதத் – எகிப்து

4. ஹோ சி மின் – வடக்கு வியட்நாம்

5. நிகோ டின் டியம் – தெங்கு வியட்நாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!