Book Back QuestionsTnpsc

இரண்டாம் உலகப்போர் Book Back Questions 10th Social Science Lesson 3

10th Social Science Lesson 3

3] இரண்டாம் உலகப்போர்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

இரண்டாவது உலகப் போரின்போது ஜெர்மானியர்களால் ஆறு மில்லியன் யூத மக்கள் கொல்லப்பட்ட இன அழிப்பை விளக்குவதற்கு பேரழிவுப்படுகொலை (Holocaust) என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. ஹிட்லர் மற்றும் நாசிகளுடடைய அரசியல் நிகழ்ச்சி நிரலின் முக்கிய அம்சங்களின் ஒன்று யூதர்களை அழிப்பதாகும். ஜெர்மனியில் சாதாரணமாகவும் சொல்லப்போனால் ஐரோப்பா முழுவதும் ஏற்கனவே நிலவி வந்த யூத எதிர்ப்பு உணர்வுகளை ஹிட்லர் பயன்படுத்திக் கொண்டார். யூதர்கள் ஐரோப்பா முழுவதிலும் சிதறிக்கிடந்தனர். அவர்களில் பலர் வணிகத்துறையிலும் கலைகளிலும் தொழிற்துறைகளிலும் புகழ்பெற்று விளங்கினார். வட்டித் தொழில் யூதர்களிடையே முக்கிய வணிக நடவடிக்கையாக இருந்தது. இது அவர்களுக்கு எதிரான வெறுப்பை மேலும் வலுவடையச் செய்தது. ஷேக்ஸ்பியரின் வெனிஸ் நகர வணிகர் (Merchant of Venice) எனும் நாடகம் மக்களிடையே யூதர்களின் மீதிருந்த வெறுப்பையும் அவநம்பிக்கையையும் படம் பிடித்துக் காட்டியது.

“ஐக்கிய நாடுகள் சபையின் மக்களாகிய நாங்கள் எதிர்கால சந்ததியினரை போரின் துயரங்களிலிருந்துக் காப்போம் என உறுதி கூறுகிறோம். அது நம்முடைய வாழ்நாளில் இருமுறை மனித குலத்திற்குச் சொல்ல முடியாத துயரங்களைக் கொண்டு வந்துள்ளது. மேலும் அடிப்படை மனித உரிமைகள், மனிதப் பண்புகளைப் பெற்றுள்ள தனிநபர்களின் கண்ணியம், மதிப்பு ஆணுக்கும் பெண்ணுக்கும், சிறிய நாட்டிற்கும் பெரிய நாட்டிற்கும் சம உரிமை ஆகியவற்றின் மீதான நம்பிக்கையை மீண்டும் உறுதி செய்வோம்” – ஐக்கிய நாடுகள் சபையின் முகவுரையிலிருந்து.

பன்னாட்டு நிதியமைப்பின் (IMF) நோக்கங்கள்: உலக அளவில் நிதி சார்ந்த ஒத்துழைப்பைப் பேணுவது, நிதி நிலையை உறுதியானதாக வைத்திருத்தல், பன்னாட்டு வணிகத்திற்கு வசதிகள் ஏற்படுத்திக் கொடுப்பது, வேலை வாய்ப்பினைப் பெருக்குவது, நீடித்தப் பொருளாதார வளர்ச்சி, உலகம் முழுவதிலும் வறுமையை ஒழிப்பது என்பனவாகும்.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. ஜப்பான் சரணடைவதாக எப்போது முறைப்படி கையெழுத்திட்டது?

(அ) செப்டம்பர் 2, 1945

(ஆ) அக்டோபர் 2, 1945

(இ) ஆகஸ்டு 15, 1945

(ஈ) அக்டோபர் 12, 1945

2. பன்னாட்டு சங்கம் உருவாக்கப்படுவதில் முன்முயற்சி எடுத்தவர் யார்?

(அ) ரூஸ்வெல்ட்

(ஆ) சேம்பெர்லின்

(இ) உட்ரோ வில்சன்

(ஈ) பால்டுவின்

3. ஜப்பானியக் கப்பற்படை அமெரிக்க கப்பற்படையால் எங்கே தோற்கடிக்கப்பட்டது?

(அ) க்வாடல்கெனால் போர்

(ஆ) மிட்வே போர்

(இ) லெனின் கிரேடு போர்

(ஈ) எல் அலாமெய்ன் போர்

4. அமெரிக்கா தனது முதல் அணுகுண்டை எங்கே வீசியது?

(அ) கவாசாகி

(ஆ) இன்னோசிமா

(இ) ஹிரோஷிமா

(ஈ) நாகசாகி

5. ஹிட்லர் எவரை மிகவும் கொடுமைப்படுத்தினார்?

(அ) ரஷ்யர்கள்

(ஆ) அரேபியர்கள்

(இ) துருக்கியர்கள்

(ஆ) யூதர்கள்

6. ஜெர்மனியோடு மியூனிச் உடன்படிக்கையில் கையெழுத்திட்ட பிரிட்டன் பிரதமர் யார்?

(அ) சேம்பரிலின்

(ஆ) வின்ஸ்டன் சர்ச்சில்

(இ) லாயிட் ஜார்ஜ்

(ஈ) ஸ்டேன்லி பால்டுவின்

7. எப்போது ஐக்கிய நாடுகள் சபையின் பட்டய சாசனம் கையெழுத்தானது?

(அ) ஜீன் 26, 1942

(ஆ) ஜீன் 26, 1945

(இ) ஜனவரி 1, 1942

(ஈ) ஜனவரி 1, 1945

கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. இராணுவ நீக்கம் செய்யப்பட்ட ___________ பகுதியை ஹிட்லர் தாக்கினார்.

2. இத்தாலி, ஜெர்மனி, ஜப்பான் ஆகியவற்றிக்கிடையேயான ஒப்பந்தம் ___________ என அழைக்கப்பட்டது.

3. _________ கடன் குத்தகைத் திட்டத்தைத் தொடக்கி வைத்தார்

4. 1940இல் ராஜினாமா செய்த பிரிட்டன் பிரதமர் ___________ ஆவார்.

5. _____________ என்பது தொலைவிலிருந்தே எதிரிகளின் போர் விமானங்களைக் கண்டுபிடிப்பதற்கான ஒரு கருவி.

பொருத்துக:

1. பிளிட்ஸ்கிரிக் – ரூஸ்வெல்ட்

2. ராயல் கப்பற்படை – ஸ்டாலின் கிரேடு

3. கடன் குத்தகை – சாலமோன் தீவு

4. வோல்கா – பிரிட்டன்

5. க்வாடல்கெனால் – மின்னல் வேகத்தாக்குதல்

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

1. கூற்று: குடியரசுத்தலைவர் ரூஸ்வெல்ட் அமெரிக்கா தனது தனித்திருக்கும் கொள்கையை மாற்றியமைக்க வேண்டும் என்பதை உணர்ந்தார்.

காரணம்: அவர் 1941இல் கடன் குத்தகைத் திட்டத்தை தொடங்கினார்.

(அ) கூற்றும் காரணமும் சரி

(ஆ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு

(இ) காரணம் கூற்று ஆகிய இரண்டுமே தவறானவை

(ஈ) காரணம் சரி ஆனால் அது கூற்றுடன் பொருந்தவில்லை

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)

1. (செப்டம்பர் 2, 1945) 2. உட்ரோ வில்சன் 3. மிட்வே போர் 4. ஹிரோஷிமா

5. யூதர்கள் 6. சேம்பர்லின் 7. (ஜீன் 26, 1945)

கோடிட்ட இடங்களை நிரப்புக: (விடைகள்)

1. ரைன்லாந்து 2. ரோம் பெர்லின் டோக்கியோ ஒப்பந்தம் 3. ரூஸ்வெல்ட்

4. சேம்பர்பின் 5. ரேடார்

பொருத்துக: (விடைகள்)

1. பிளிட்ஸ்கிரிக் – மின்னல்வேகத் தாக்குதல்

2. ராயல் கப்பற்படை – பிரிட்டன்/இங்கிலாந்து

3. கடன் குத்தகை – ரூஸ்வெல்ட்

4. வோல்கா – ஸ்டாலின் கிரேடு

5. க்வாடல்கெனால் – சாலமோன் தீவு

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றைத் தேர்வு செய்க: (விடை)

1. கூற்றும், காரணமும் சரி

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!