Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Book Back QuestionsTnpsc

உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து Book Back Questions 10th Social Science Lesson 25

10th Social Science Lesson 25

25] உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

குறைந்தபட்ச ஆதரவு விலை (Minimum Support Price): குறைந்த பட்ச ஆதரவு விலை என்பது அந்த பயிரின் சாகுபடியில் பல்வேறு செலவுகளை கருத்தில் கொண்டு ஒரு குறிப்பிட்ட பயிருக்கு ஒரு விலை, நிபுணர் குழுவால் நிர்ணயிக்கப்படுகிறது. குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவித்த பின்னர், இந்த பயிர்கள் பரவலாக வளர்க்கப்படும் இடங்களில் அரசு கொள்முதல் மையங்களைத் திறக்கும். எனினும், அந்த விவசாயிகள் தங்கள் பயிர், விளை பொருள்களுக்கு நல்ல விலையைப் பெற்றால் திறந்தவெளி சந்தையில் விற்க இயலும். மறுபுறம், திறந்த வெளி சந்தையில் விலை குறைந்தபட்ச ஆதரவு விலையை விட குறைவாக இருந்தால், விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு விற்பதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட விலையைப் (MSP) பெறுவார்கள்.

தமிழ்நாட்டில் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம்: இந்தியாவில் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் துவங்கி மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர், இச்சட்டம் தமிழ்நாட்டில் நவம்பர் 1, 2016 அன்று துவங்கப்பட்டது.

தாங்கியிருப்பு (Buffer Stock): தாங்கியிருப்பு என்பது உணவு தானியங்களான கோதுமை மற்றும் அரிசு, இந்திய உணவுக் கழகத்தின் (Food Corporation of India) மூலம் அரசாங்கத்தால் வாங்கப்படுகிறது. உபரி உற்பத்தி இருக்கும் மாநிலங்களில் விவசாயிகளிடமிருந்து கோதுமை மற்றும் அரிசியை FCI வாங்குகிறது. விவசாயிகளுக்கு அவர்களின் பயிர்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்ட விலை வழங்கப்படுகிறது. இந்த விலை குறைந்த பட்ச ஆதரவு விலை (Minimum Support Price) என்று அழைக்கப்படுகிறது. இந்த பயிர்களின் உற்பத்தியை உயர்த்துவதற்காக விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை வழங்குவதற்காக விதைப்பு பருவத்திற்கு முன்னர் ஒவ்வொரு ஆண்டும் குறைந்த பட்ச ஆதரவு விலை (MSP) அரசாங்கத்தால் அறிவிக்கப்படுகிறது. கொள்முதல் செய்யப்பட்ட உணவு தானியங்கள் களஞ்சியங்களில் சேமிக்கப்படுகின்றன.

வாங்கும் சக்தி சமநிலை (Purchasing Power Parity): வாங்கும் சக்தி சமநிலை (PPP) என்பது வாங்கும் சக்தி தொடர்பான ஒரு கருத்தாகும். இது ஒரு பொருளாதாரக் கோட்பாடாகும். ஒரு பொருளின் விலையுடன் சரி செய்யப்பட வேண்டிய தொகையை மதிப்பிடுகிறது. நாடுகளின் வருமான நிலைகள் மற்றும் வாழ்க்கைச் செலவு தொடர்பான பிற தொடர்புடைய பொருளாதாரத் தரவு அல்லது பணவீக்கம் மற்றும் பணவாட்டத்தின் சாத்தியமான விகிதங்களை ஒப்பிடுவதற்கு வாங்கும் சக்தி சமநிலையை பயன்படுத்தலாம். சமீபத்தில் வாங்கும் சக்தி சமநிலையின் அடிப்படையில் இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது. சீனா மிகப்பெரிய பொருளாதாரமாக மாறி, அமெரிக்காவை இரண்டாவது இடத்திற்கு தள்ளியுள்ளது.

தமிழ்நாட்டின் அதிக மற்றும் குறைவான MPI மாவட்டங்கள்: முதல் ஐந்து மாவட்டங்கள் – காஞ்சிபுரம், சென்னை, கடலூர், கோயம்புத்தூர், நாகப்பட்டினம். கடைசி ஐந்து மாவட்டங்கள் – தர்மபுரி, பெரம்பலூர், இராமநாதபுரம், விருதுநகர், அரியலூர்.

தமிழ்நாட்டில் செயல்படும் முக்கியமான திட்டங்கள்: (1) டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நலத்திட்டத்தின் (Dr. Muthulakshmi Reddy Maternity Benefit Scheme) கீழ், ஏழை கர்பிணிப் பெண்களுக்கு ₹ 12, 000/- நிதியுதவி வழங்கப்படுகிறது. (2) முதலமைச்சரின் விரிவான சுகாதார காப்பீடு திட்டம் (Chief Minister’s Comprehensive Health Insurance Scheme) 2011-12ஆம் ஆண்டில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. இதன் நோக்கம் அனைவருக்கும் உடல் நலம் வழங்கும் நோக்கில் அரசாங்கத்தால் இலவச மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை வழங்குவதாகும். (3) தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்டங்கள் (Tamil Nadu Health Systems Projects) இலவசமாக ஆம்புலன்ஸ் சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது (108 அவசர ஆம்புலன்ஸ் சேவை). (4) ”பள்ளி சுகாதார திட்டம்” (School Health Programme) விரிவான சுகாதார சேவையை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் வழங்குவதை வலியுறுத்துகிறது. (5) தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டத்தின் (National Leprosy Eradication Programme) மூலம் அனைத்து தொழுநோயாளிகளையும் கண்டறிந்து தொடர்ச்சியான சிகிச்சையை வழங்குவதை நோக்கமாக கொண்டு மாநிலத்தில் செயல்படுத்தப்படுகிறது.

தமிழ்நாட்டில் சில ஊட்டச்சத்து திட்டங்கள்: (1) புரட்சித் தலைவர் எம். ஜி. ஆர் ஊட்டச்சத்து உணவுத்திட்டம்; (2) ஆரம்பக் கல்விக்கு தேசிய ஊட்டச்சத்து ஆதரவு திட்டம்; (3) பொது ICDS திட்டங்கள் மற்றும் உலக வங்கி உதவியுடன் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் (General ICDS Projects and World Bank Assistegrated Integrated Child Development Services); (4) பிரதம மந்திரி கிராமோதயா யோஜனா திட்டம்; (5) தமிழ்நாடு ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து திட்டம்; (6) மதிய உணவுத் திட்டம்.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. ___________ என்பது விரும்பிய அளவுகளில் உணவு இருப்பு இருப்பது, உள்நாட்டு உற்பத்தியில் இருப்பில் மாற்றங்கள் மற்றும் இறக்குமதி பற்றிய ஒரு செயல்பாடாகும்.

(அ) உணவு கிடைத்தல்

(ஆ) உணவுக்கான அணுகல்

(இ) உணவில் முழு ஈடுபாடு

(ஈ) இவை ஏதுமில்லை

2. தாங்கியிருப்பு என்பது உணவுப் பங்கு தானியங்கள் அதாவது கோதுமை மற்றும் அரிசியை __________ மூலம் அரசாங்கம் கொள்முதல் செய்கிறது.

(அ) FCI

(ஆ) நுகர்வோர் கூட்டுறவு

(இ) ICICI

(ஈ) IFCI

3. எது சரியானது?

(i) HYV – அதிக விளைச்சல் தரும் வகைகள்

(ii) MSP – குறைந்தபட்ச ஆதரவு விலை

(iii) PDS – பொது விநியோக முறை

(iv) FCI – இந்திய உணவுக் கழகம்

(அ) i மற்றும் ii சரியானவை

(ஆ) iii மற்றும் iv சரியானவை

(இ) ii மற்றும் iii சரியானவை

(ஈ) மேற்கூறிய அனைத்தும் சரி

4. நீட்டிக்கப்பட்ட உதவி பொதுச் சட்டம் 480ஐ கொண்டு வந்த நாடு ___________

(அ) அமெரிக்கா

(ஆ) இந்தியா

(இ) சிங்கப்பூர்

(ஈ) இங்கிலாந்து

5. _________ இந்தியாவில் தோன்றியதால் உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு பெற வழி வகுத்தது.

(அ) நீலப்புரட்சி

(ஆ) வெள்ளைப்புரட்சி

(இ) பசுமைப்புரட்சி

(ஈ) சாம்பல் புரட்சி

6. உலகளாவிய பொது வழங்கல் முறையை ஏற்றுக் கொண்ட ஒரே மாநிலம் ____________

(அ) கேரளா

(ஆ) ஆந்திரபிரதேசம்

(இ) தமிழ்நாடு

(ஈ) கர்நாடகா

7. ___________ என்பது உடல் நலம் மற்றும் வளர்ச்சிக்குத் தேவையான உணவை வழங்கும் அல்லது பெறும் செயல்முறையாகும்.

(அ) ஆரோக்கியம்

(ஆ) ஊட்டச்சத்து

(இ) சுகாதாரம்

(ஈ) பாதுகாப்பு

கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. ___________ ஊட்டச்சத்து குறைபாட்டின் முக்கியமான குறியீடாகும்.

2. ____________ ஆம் ஆண்டில் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் இந்திய நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது.

3. பொதுவான மக்களுக்கு பொறுப்பான விலையில் தரமான பொருள்களை வழங்குவதில் __________ முக்கியப்பங்கு வகிக்கிறது.

பொருத்துக:

1. நுகர்வோர் கூட்டுறவு – மானிய விகிதங்கள்

2. பொது விநியோக முறை – 2013

3. UNDP – குறைந்த ஏழ்மை உள்ள பகுதி

4. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் – தரமான பொருள்களை வழங்குதல்

5. கேரளா – ஐக்கிய நாடுகள் சபை வளர்ச்சித் திட்டம்

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

1. கூற்று: விலை குறைந்தால் வாங்கும் சக்தி அதிகரிக்கிறது மற்றும் இது நேர்மாறானது.

காரணம்: பொருள்களின் உற்பத்தி குறைந்து, விலை அதிகரிப்பதால் வாங்கும் திறன் பாதிக்கப்படுகிறது.

(அ) கூற்று சரியானது, காரணம் தவறானது

(ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறானது

(இ) கூற்று சரியானது, ஆனால் காரணம் சரியான விளக்கம் அல்ல

(ஈ) கூற்று சரியானது, காரணம் கூற்றின் சரியான விளக்கம்

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)

1. உணவு கிடைப்பது 2. FCI 3. மேற்கூறிய அனைத்தும் சரி 4. அமெரிக்கா

5. பசுமைப் புரட்சி 6. தமிழ்நாடு 7. ஊட்டச்சத்து

கோடிட்ட இடங்களை நிரப்புக: (விடைகள்)

1. எடை குறைவு 2. (2013) 3. நுகர்வோர் கூட்டுறவு சங்கங்கள்

பொருத்துக: (விடைகள்)

1. நுகர்வோர் கூட்டுறவு – தரமான பொருட்களை வழங்குதல்

2. பொது விநியோக முறை – மானிய விகிதங்கள்

3. UNDP – ஐக்கிய நாடுகள் சபை வளர்ச்சித் திட்டம்

4. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் – 2013

5. கேரளா – குறைந்த ஏழ்மை உள்ள பகுதி

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றைத் தேர்வு செய்க:

1. கூற்று சரியானது, காரணம் கூற்றின் சரியான விளக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!