Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Book Back QuestionsTnpsc

உயிரினங்களின் அமைப்பு நிலைகள் Book Back Questions 10th Science Lesson 13

10th Science Lesson 13

13] உயிரினங்களின் அமைப்பு நிலைகள்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

அட்டைகளுக்கு காது இல்லை, அவை அதிர்வுகளைத் தோல் மூலம் உணர்கின்றன. அட்டைகள் 2 முதல் 10 சிறிய கண்கள் மூலம் உணவை அடையாளம் காண்கின்றன. அட்டை தமது உடல் எடையைப் போன்று ஐந்து மடங்கு அதிக இரத்தத்தை உறிஞ்சும் அளவுக்குப் பெரும் பசி கொண்டவை. அட்டை தனது முழு உணவையும் செரித்து, உறிஞ்சிக் கொள்ள ஓராண்டுக்கும் மேலாகிறது.

இரத்தத்தை வழிய விடுதல் என்பது நோயாளியின் உடலிலிருந்து நச்சு, அசுத்தப் பொருள்களை வெளியேற்றும் ஒரு நுட்பமாகும்.

அட்டைகள் இரத்த ஓட்டத்தை விரைவுபடுத்துவதில் செயல்திறன் மிக்கவை. சுற்றோட்டக் குறைவாடுகளையும், இரத்த ஓட்ட மண்டலம் தொடர்பான நோய்களையும் அட்டைகள் குணப்படுத்துகின்றன. மேலும் அட்டையின் உமிழ்நீரிலிருந்து பிரித்தெடுக்கப்படும் வேதிப்பொருள்கள் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் மருந்துகள் தயாரிக்கப்பயன்படுகின்றன.

குள்ள முயலானது அழியும் அபாய நிலையிலுள்ள விலங்கு என 1990 இல் வாஷிங்டனில் பட்டியலிடப்பட்டது. வாழிட இழப்பால் இம்முயலின் எண்ணிக்கையும், பரவுலும் குறைந்து போனதே இதற்குக் காரணம். மார்ச் 2003 இல் கொலம்பியா வடிநில குள்ள முயல் அழியும் நிலையிலுள்ள விலங்கு என அறிவிக்கப்பட்டது.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. அட்டையில் இடப்பெயர்ச்சி _____________ மூலம் நடைபெறுகிறது.

(அ) முன் ஓட்டுறுப்பு

(ஆ) பக்கக் கால்கள்

(இ) சீட்டாக்கள்

(ஈ) தசைகளின் சுருக்கம் மற்றும் நீள்தல்

2. அட்டையின் உடற்கண்டங்கள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன.

(அ) மெட்டாமியர்கள் (சோமைட்டுகள்)

(ஆ) புரோகிளாட்டிடுகள்

(இ) ஸ்ட்ரோபிலா

(ஈ) இவை அனைத்தும்

3. அட்டையின் தொண்டைப்புற நரம்புத்திரள் எந்த உறுப்பு மண்டலத்தின் ஒரு பகுதி

(அ) கழிவுநீக்க மண்டலம்

(ஆ) நரம்பு மண்டலம்

(இ) இனப்பெருக்க மண்டலம்

(ஈ) சுவாச மண்டலம்

4. அட்டையின் மூளை இதற்கு மேலே உள்ளது.

(அ) வாய்

(ஆ) வாய்க்குழி

(இ) தொண்டை

(ஈ) தீனிப்பை

5. அட்டையின் உடலில் உள்ள கண்டங்களின் எண்ணிக்கை

(அ) 23

(ஆ) 33

(இ) 38

(ஈ) 30

6. பாலூட்டிகள் _____________ விலங்குகள்

(அ) குளிர் இரத்த

(ஆ) வெப்ப இரத்த

(இ) பாய்கிலோதெர்மிக்

(ஈ) இவை அனைத்தும்

7. இளம் உயிரிகளைப் பிரசவிக்கும் விலங்குகள்

(அ) ஓவிபேரஸ்

(ஆ) விவிபேரஸ்

(இ) ஓவோவிவிபேரஸ்

(ஈ) அனைத்தும்

கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. __________ கண்டத்தின் மாறுபாட்டால் அட்டையின் பின் ஒட்டுறுப்பு உருவாகியுள்ளது.

2. ஒரு விலங்கின் வாழ்நாளில் இரு தொகுதி பற்கள் உருவானால் அது ____________ பல்லமைப்பு எனப்படும்.

3. அட்டையின் முன் முனையிலுள்ள கதுப்பு போன்ற அமைப்பு ___________ எனப்படும்

4. இரத்தத்தை உறிஞ்சும் அட்டையின் பண்பு ___________ என அழைக்கப்படுகிறது.

5. ___________ நைட்ரஜன் சார்ந்த கழிவுப் பொருள்களை இரத்தத்திலிருந்து பிரித்தெடுக்கிறது.

6. முயலின் தண்டுவட நரம்புகளின் எண்ணிக்கை _____________

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: தவறான வாக்கியத்தை திருத்தி எழுதுக:

1. இரத்தம் உறைவதைத் தடுக்கும் ஹிபாரின் என்ற பொருள் அட்டையின் உமிழ்நீரில் காணப்படுகிறது.

2. விந்து நாளம் அண்டம் வெளிச் செலுத்தப்படுவதில் பங்கேற்கிறது.

3. முயலின் முன்கடைவாய்ப் பற்களுக்கும் பின் கடைவாய் பற்களுக்கும் இடையேயான இடைவெளிப்பகுதி டயாஸ்டீமா எனப்படும்.

4. முயலின் பெருமூளை அரைக்கோளங்கள் கார்போரா குவாட்ரி ஜெமினா என்ற குறுக்கு நரம்பு பட்டையால் இணைக்கப்பட்டுள்ளது.

பொருத்துக:

1. கலம் I ஐ கலம் II மற்றும் III உடன் சரியாகப் பொருத்தி விடையைத் தனியே எழுதுக:

உறுப்புகள் சூழந்துள்ள சவ்வு அமைவிடம்
மூளை புளுரா வயிற்றறை
சிறுநீரகம் கேப்ஸ்யூல் மீடியாஸ்டினம்
இதயம் மூளை உறைகள் மார்பறையில்
நுரையீரல் பெரிகார்டியம் மண்டையோட்டுக் குழி

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)

1. முன் ஒட்டுறுப்பு மற்றும் பின் ஒட்டுறுப்பு, 2. மெட்டாமியர்கள் (சோமைட்டுகள்), 3. நரம்பு மண்டலம், 4. தொண்டை, 5. (33),
6. வெப்ப இரத்த, 7. விவிபேரஸ்

கோடிட்ட இடங்களை நிரப்புக: (விடைகள்)

1. இறுதி ஏழு, 2. இருமுறை தோன்றும், 3. முன் ஒட்டுறிஞ்சி, 4. சாங்கிஓரஸ், 5. சிறுநீரகங்கள், 6. (37 இணை நரம்புகள்)

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: தவறான வாக்கியத்தை திருத்தி எழுதுக:

1. தவறு

சரியான விடை: இரத்தம் உறைவதைத் தடுக்கும் ஹிருடின் என்ற பொருள் அட்டையின் உமிழ்நீரில் காணப்படுகிறது.

2. தவறு

சரியான விடை: விந்து நாளம் விந்து வெளிச் செலுத்தப்படுவதில் பங்கேற்கிறது.

3. தவறு

சரியான விடை: முயலின் கண்ணில் நிக்டிடேடிங் சவ்வு என்ற மூன்றாம் கண் இமை உள்ளது.

4. தவறு

சரியான விடை: முயலின் முன்கடைவாய்ப் பற்களுக்கும் வெட்டும் பற்களுக்கும் இடையேயான இடைவெளிப்பகுதி டயாஸ்டீமா எனப்படும்.

5. தவறு

சரியான விடை: முயலின் பெருமூளை அரைக்கோளங்கள் கார்பஸ் கலோசம் என்ற குறுக்கு நரம்பு பட்டையால் இணைக்கப்பட்டுள்ளது.

பொருத்துக: (விடைகள்)

உறுப்புகள் சூழ்ந்துள்ள சவ்வு அமைவிடம்
மூளை மூளை உறைகள் மண்டையோட்டுக் குழி
சிறுநீரகம் கேப்ஸ்யூல் வயிற்றறை
இதயம் பெரிகார்டியம் மீடியாஸ்டினம்
நுரையீரல் புளுரா மார்பறையில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!