Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Book Back QuestionsTnpsc

உயிரினங்களின் ஒருங்கமைவு Book Back Questions 8th Science Lesson 18

8th Science Lesson 18

18] உயிரினங்களின் ஒருங்கமைவு

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

நமது உடலானது கருமுட்டை (சைகோட்) என்ற ஒற்றை செல்லிலிருந்தே உருவாக்கப்படுகிறது. கருமுட்டையானது தொடர்ச்சியான பல மைட்டாசிஸ் பிளவுறுதல்களை அடைந்து வெவ்வேறு அளவு, வடிவம் மற்றும் உட்பொருள்களைக் கொண்ட திரள் செல்களாலான கருவை உருவாக்குகிறது. கருச்செல்கள் படிப்படியாக அவற்றின் அமைப்பிலும், பணியிலும் மாற்றங்களை அடைகின்றன. இந்நிகழ்வுக்கு செல் மாறுபாடடைதல் என்று பெயர்.

ஓய்வு நிலையில் உள்ள ஒரு வளர்ந்த மனிதன் சராசரியாக நிமிடத்திற்கு 15-18 முறை மூச்சை உள்ளிழுத்து வெளி விடுகின்றான். கடும் உடற்பயிற்சியின் போது இச்சுவாச வீதம் நிமிடத்திற்கு 25 முறைகளுக்கும் மேலாக இருக்கும். புகைபிடித்தல் நுரையீரல்களை சேதப்படுத்துகிறது. புகைப்பிடித்தல் புற்று நோய்க்குக் காரணமாவதால் அது தவிர்க்கப்பட வேண்டும். உங்களுக்கு தும்மல் ஏற்படும் போது நீங்கள் நாசித் துவாரங்களை மூடிக்கொள்ள வேண்டும். இதன் மூலம் நீங்கள் வெளியேற்றும் அயல் பொருள்கள் அருகில் இருப்பவர்களுக்குப் பரவாமல் தடுக்க முடியும்.

பரவல் முறையின் மூலம் உணவுப்பொருள்கள் செரிமான நொதியுடன் கலக்கின்றன. சுவாச வாயுக்களான ஆக்சிஜன் மற்றும் கார்பன் டைஆக்சைடு போன்றவை இரத்தம் மற்றும் திசுத் திரவங்களுக்கு இடையிலும், திசுத்திரவம் மற்றும் செல்களுக்கிடையிலும் பரவல் மூலம் பரிமாற்றம் அடைகின்றன.

காற்றுள்ள சுவாசமானது காற்றில்லா சுவாசத்தினை விட 19 மடங்கு அதிக ஆற்றலை ஒரே அளவு குளுக்கோஸிலிருந்து வெளிப்படுத்துகிறது. காற்றுள்ள சுவாசத்தின் போது ஒவ்வொரு குளுக்கோஸ் மூலக்கூறும் 36 ATP மூலக்கூறுகளை உருவாக்கும்.

ஒருவர் உணவு சாப்பிட்ட பிறகு 12-18 மணி நேரத்திற்குப் பின் மிதமான வளிமண்டலச் சூழலில் முழுமையான ஓய்வு நிலையில் இருக்கும் போதும் அவருக்கு ஒரு குறைந்த அளவிலான ஆற்றல் தேவைப்படும். அந்த ஆற்றலே அடிப்படை வளர்சிதை மாற்றம் எனப்படும்.

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. ____________ என்பது உறுதியான, தடித்த வெண்ணிற உறையாக அமைந்து கண்ணின் உள்பாகங்களைப் பாதுகாக்கிறது.

அ) ஸ்கிளிரா

ஆ) கண்ஜங்டிவா

இ) கார்னியா

ஈ) ஐரிஸ்

2. ____________ செல்கள் சிறப்பு வாய்ந்த செல்களாகும். இவை உடலின் எந்த ஒரு செல்லாகவும் மாற இயலும்.

அ) நரம்பு

ஆ) மூல

இ) இதய

ஈ) எலும்பு

3. உடலின் உள் சூழ்நிழலையை சீராகப் பராமரித்தல் __________ எனப்படும்.

அ) தன்னிலை காத்தல்

ஆ) ஹோமியோபைட்ஸ்

இ) ஹோமியோஹைனசிஸ்

ஈ) ஹோமியோவிலிக்ஸ்

4. காற்றில்லா அல்லது ஆக்சிஜனற்ற சூழலில் குளுக்கோஸ் சிதைவடைந்து ______________ஐக் கொடுக்கும்.

அ) லாக்டிக் அமிலம்

ஆ) சிட்ரிக் அமிலம்

இ) அசிட்டிக் அமிலம்

ஈ) நைட்ரிக் அமிலம்

5. நுரையீரலுக்கு உள்ளேயும் வெளியேயும் வாயுப் பரிமாற்றம் நடைபெறும் நிகழ்விற்கு ____________ என்று பெயர்.

அ) உட்சுவாசம் (

ஆ) வெளிச்சுவாசம்

இ) சுவாசம்

ஈ) ஏதுமில்லை

6. சவ்வூடு பரவலின் மூலம் கரைசலின் இடப்பெயர்ச்சி __________

அ) செறிவுமிக்க கரைசலிலிருந்து செறிவு குறைவான கரைசலுக்குச் செல்லும்.

ஆ) செறிவு குறைவான கரைசலிலிருந்து செறிவு மிக்க கரைசலுக்குச் செல்லும்.

இ) இரு நிகழ்வும் நடைபெறும்

ஈ) இவற்றில் எதுமில்லை

7. சைட்டோபிளாசத்தை விட குறைந்த கரைபொருள் செறிவும், அதிக நீர்ச் செறிவும் உள்ள ____________ கரைசலில் இரத்த சிவப்பணுக்கள் உள்ளன.

அ) குறை செறிவு கரைசல

ஆ) மிகை செறிவு கரைசல்

இ) நடுநிலைக்கரைசல் (

ஈ) அமிலக் கரைசல்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. ____________ என்பது உயிரினங்களின் அமைப்பு மற்றும் செயல் அலகு ஆகும்.

2. மிகப்பெரிய செல் ________இன் முட்டை ஆகும்.

3. _______________ என்பது காற்றில்லா சுவாசத்திற்கு மிகச் சிறந்த உதாரணமாகும்.

4. கண்களின் இறுதியில் விழித்திரையின் பின்புறம் _________ நரம்பு அமைந்துள்ளது.

5. செல்லானது ______________ என்ற அலகால் அளக்கப்படுகிறது.

III. சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: தவறான வாக்கியத்தை திருத்தி எழுதுக

1. குறை செறிவுக் கரைசலில், செல்லிற்கு உள்ளே உள்ள கரைசலின் செறிவும் செல்லிற்கு வெளியே உள்ள கரைசலின் செறிவும் சமம்.

2. குறைந்த செறிவுடைய மூலக்கூறுகள் அதிக செறிவுடைய மூலக்கூறுகள் உள்ள பகுதிக்கு இடம்பெயர்வது பரவல் எனப்படும்.

3. மனிதன் ஒரு வெப்ப இரத்தப் பிராணி.

4. தசை மடிப்புக்களாலான குரல் வளையானது காற்று நுழையும் போது அதிர்வடைந்து ஒலியை எழுப்புகிறது.

5. முன் கண்ணறை திரவம் கண்ணின் வடிவத்தைப் பராமரிப்பதில் முக்கியப் பங்கு வகுக்கிறது.

IV. பொருத்துக:

1. கார்போஹைட்ரேட் – அ. CO2 நீர் மற்றும் வெப்பம்

2. குளுக்கோஸ் – ஆ. அமினோ அமிலம்

3. புரதம் – இ. குளுக்கோஸ்

4. அமினோ அமிலம் – ஈ. கொழுப்பு மற்றும் பிற ஸ்டீராய்டுகள்

5. கொழுப்பு அமிலம் – உ. நொதிகள், ஹார்மோன்கள் மற்றும் புரதங்கள்

விடைகள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. ஸ்கிளிரா, 2. மூல, 3. தன்னிலை காத்தல், 4. லாக்டிக் அமிலம், 5. சுவாசம், 6. செறிவு குறைவான கரைசலிலிருந்து செறிவு மிக்க கரைசலுக்குச் செல்லும், 7. குறை செறிவு கரைசல்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. செல், 2. நெருப்புக்கோழி, 3. நொதித்தல், 4. பார்வை நரம்பு, 5. மைக்ரான்

III. சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: தவறான வாக்கியத்தை திருத்தி எழுதுக

1. குறைவு, 2. அதிக செறிவுடைய மூலக்கூறுகள் குறைந்த செறிவுடைய மூலக்கூறுகள் உள்ள பகுதிக்கு இடம்பெயர்வது, 3. சரி, 4. சரி, 5. பின்

IV. பொருத்துக:

1. இ, 2. அ, 3. ஆ, 4. உ, 5. ஈ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!