Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Book Back QuestionsTnpsc

உயிரின் தோற்றமும் பரிணாமமும் Book Back Questions 10th Science Lesson 19

10th Science Lesson 19

19] உயிரின் தோற்றமும் பரிணாமமும்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

சடுதி மாற்றும் மற்றும் வேறுபாடுகளுக்கு இடையேயான தொடர்பு: பரிணாமம் என்பது சடுதிமாற்றம் மற்றும் வேறுபாடுகள் ஆகிய இரண்டு நிகழ்வுகளை உள்ளடக்கியது. DNA இரட்டிப்பாதலின் போது ஏற்படும் பிழைகள் அல்லது UV கதிர்கள் அல்லது வேதிப்பொருட்களோடு தொடர்புக் கொள்ளும் போது சடுதி மாற்றம் ஏற்படுகிறது. சடுதி மாற்றம் வேறுபாடுகளுக்கு வழிவகுக்கிறது. ஒரு உயிரியில் மாற்றங்களை இது ஏற்படுத்துகிறது.

வாழும் தொல் உயிர்ப் படிவங்கள் (Living Fossils) இவை தற்போது உயிருள்ளவை. இவை படிவமாக மாறிய முன்னோரைப் போன்ற தோற்றத்தை ஒத்திருப்பதால் இவற்றை வாழும் தொல் உயிர்ப் படிவங்கள் என்கிறோம். எ.கா: ஜிங்கோ பைலோபா.

புவி அமைப்புக் கால அளவை என்றால் என்ன?

புவி அமைப்புக் கால அளவை என்பது, பாறை அடுக்குகளின் அமைப்பினைக் கால வரிசைப்படி அறிந்து கொள்ளும் முறை ஆகும். இதன் மூலம் புவி அமைப்பு வல்லுநர்கள், தொல்பொருள் ஆய்வாளர்கள் மற்றும் புவி சார் அறிஞர்கள் புவியின் வரலாற்றினைக் காலத்தோடும் நிகழ்வுகளின் தொடர்போடும் இணைத்து விளக்குகின்றனர்.

திருவக்கரை (விழுப்புரம் மாவட்டம், தமிழ்நாடு) கல்மரப் படிவப் பூங்கா இரண்டாயிரம் மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தாவரத் தண்டுப் பகுதியானது ஆற்றங்கரையில் மண்ணில் புதையுண்டு காலப்போக்கில் அதிலுள்ள கரிமப் பொருள்கள் சிலிகாவினால் நிரப்பப்பட்டுப் படிவமாகியுள்ளது. கல்மரமான பின்பும் இத்தாவரங்கள் முந்தைய நிறம், வடிவம் வரித் தன்மை முதலானவற்றைத் தக்கவைத்துக் கொண்டுள்ளன. ஆண்டு வளையம், நிறங்களின் அடுக்கு, கணுப் பகுதிகள் போன்ற அனைத்துப் பண்புகளும் கல்மரமான பிறகும் புலப்படும் வகையில் அமைந்துள்ளன.

நாசா 2020இல் வான் உயிரியல் என்னும் திட்டத்தை உருவாக்கி அதன் மூலம் செவ்வாயின் பழமையான சூழல் குறித்தும் செவ்வாயின் மேற்புறப் புவி அமைப்புக் குறித்தும் செவ்வாயில் உயிரிகள் இருந்தனவா என்பது குறித்தும் அவ்வாறு உயிரிகள் இருந்தால் அவற்றைப் பாதுகாப்பது குறித்தும் ஆய்வு செய்து வருகிறது.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. உயிர்வழித் தோற்ற விதியின் கூற்றுப்படி

(அ) தனி உயிரி வரலாறும் தொகுதி வரலாறும் ஒன்றாகத் திகழும்

(ஆ) தனி உயிரி வரலாறு தொகுதி வரலாற்றை மீண்டும் கொண்டுள்ளது.

(இ) தொகுதி வரலாறு தனி உயிரி வரலாற்றை மீண்டும் கொண்டுள்ளது.

(ஈ) தொகுதி வரலாறு மற்றும் தனி உயிரி வரலாறு ஆகியவற்றுக்கு இடையே தொடர்பில்லை.

2. “பயன்பாடு மற்றும் பயன்படுத்தாமை” கோட்பாட்டை முன்மொழிந்தவர்.

(அ) சார்லஸ் டார்வின்

(ஆ) எர்னஸ்ட் ஹெக்கல்

(இ) ஜீன் பாப்டிஸ்ட் லாமார்க்

(ஈ) கிரிகர் மெண்டல்

3. பின்வரும் ஆதாரங்களுள் எது தொல்பொருள் வல்லுநர்களின் ஆய்விற்குப் பயன்படுகிறது?

(அ) கருவியல் சான்றுகள்

(ஆ) தொல் உயிரியல் சான்றுகள்

(இ) எச்ச உறுப்பு சான்றுகள்

(ஈ) மேற்குறிப்பிட்ட அனைத்தும்

4. தொல் உயிர்ப் படிவங்களின் காலத்தை அறிய உதவும் சிறந்த முறை

(அ) ரேடியோ கார்பன் முறை

(ஆ) யுரேனியம் காரீய முறை

(இ) பொட்டாசியம் ஆர்கான் முறை

(ஈ) அ மற்றும் இ

5. வட்டார இன தாவரவியல் என்னும் சொல்லை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர்

(அ) கொரானா

(ஆ) J.W.கார்ஸ் பெர்கர்

(இ) ரொனால்டு ராஸ்

(ஈ) ஹியுகோ டி விரிஸ்

கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. சூழ்நிலையின் மாற்றங்களுக்குப் எதிர் வினைப்புரியும் விதமாக, தங்கள் வாழ்நாளில் விலங்குகள் பெறுகின்ற பண்புகள் ____________ என அழைக்கப்படுகின்றன.

2. ஒரு உயிரினத்தில் காணப்படும் சிதைவடைந்த மற்றும் இயங்காத நிலையிலுள்ள உறுப்புகள் ____________ என்று அழைக்கப்படுகின்றன.

3.வெளவால்கள் மற்றும் மனிதனின் முன்னங்கால்கள் ____________ உறுப்புகளுக்கு எடுத்துக்காட்டு.

4. பரிணாமத்தின் இயற்கைத் தேர்வு கோட்பாட்டை முன்மொழிந்தவர் ___________

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: தவறான வாக்கியத்தை திருத்தி எழுதுக

1. உறுப்புகளின் பயன்பாடு மற்றும் பயன்படுத்தாமை கோட்பாட்டைக் கூறியவர் சார்லஸ் டார்வின்.

2. செயல் ஒத்த உறுப்புகள் பார்க்க ஒரே மாதிரியாகவும், ஒரே மாதிரியான பணிகளையும் செய்கின்றன. ஆனால் அவை வெவ்வேறு விதமான தோற்றம் மற்றும் கருவளர்ச்சி முறைகளைக் கொண்டதாக உள்ளன.

3. பறவைகள் ஊர்வனவற்றிலிருந்து தோன்றியவை.

பொருத்துக:

(அ) முன்னோர் பண்பு மீட்சி – முள்ளெலும்பு மற்றும் குடல்வால்

(ஆ) எச்ச உறுப்புகள் – பூனை மற்றும் வெளவாலின் முன்னங்கால்

(இ) செயல் ஒத்த உறுப்புகள் வளர்ச் (இ) செயல் ஒத்த உறுப்புகள் – வளர்ச்சியடையாத வால் மற்றும் உடல் முழுவதும் அடர்ந்த முடி

(ஈ) அமைப்பு ஒத்த உறுப்புகள் – வெளவாலின் இறக்கை மற்றும் பூச்சியின் இறக்கை

(உ) மரப்பூங்கா – கதிரியக்கக் கார்பன் (C14)

(ஊ) W.F.லிபி – திருவக்கரை

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)

1. தனி உயிரி வரலாறு தொகுதி வரலாற்றை மீண்டும் கொண்டுள்ளது, 2. ஜீன் பாப்டிஸ்ட் லாமார்க், 3. தொல் உயிரியல் சான்றுகள், 4. ரேடியோ கார்பன் முறை, 5. F.W.கார்ஸ் பெர்கர்,

கோடிட்ட இடங்களை நிரப்புக: (விடைகள்)

1. பெறப்பட்ட பண்புகள், 2. எச்ச உறுப்புகள், 3. அமைப்பு ஒத்த, 4. டார்வின்,

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: (தவறான வாக்கியத்தை திருத்தி எழுதுக)

1. தவறு

சரியான விடை: உறுப்புகளின் பயன்பாடு மற்றும் பயன்படுத்தாமை கோட்பாட்டைக் கூறியவர் ஜீன் பாப்டிஸ்ட் லாமார்க்.

2. சரி

3. சரி

பொருத்துக: (விடைகள்)

1. முன்னோர் பண்பு மீட்சி – வளர்ச்சியடையாத வால் மற்றும் உடல் முழுவதும் அடரந்த முடி

2. எச்ச உறுப்புகள் – முள்ளெலும்பு மற்றும் குடல்வால்

3. செயல் ஒத்த உறுப்புகள் – வெளவாலின் இறக்கை மற்றும் பூச்சியின் இறக்கை

4. அமைப்பு ஒத்த உறுப்புகள் – பூனை மற்றும் வெளவாலின் முன்னங்கால்

5. W.F. லிவி – கதிரியக்கக் கார்பன்(C14)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!