Book Back QuestionsTnpsc

உற்பத்தி Book Back Questions 7th Social Science Lesson 10

7th Social Science Lesson 10

10] உற்பத்தி

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

பயன்பாட்டின் வகைகள்:

வடிவப் பயன்பாடு: ஒரு விளைபொருளின் வடிவம் மாற்றப்படும்போது, அதன் பயன்பாடு மிகுதியாகிறது. எடுத்துக்காட்டாக, விளைபொருளாகிய பருத்தியைப்கொண்டு ஆடைகள் உருவாக்கப்படும்போது, அதன் தேவையும் பயன்பாடும் உயர்கின்றன.

இடப்பயன்பாடு: ஒரு விளைபொருள், ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குக் கொண்டு செல்லப்படும்போது, அதன் பயன்பாடு மிகுதியாகிறது. எடுத்துக்காட்டாக, விளைபொருளான அரிசி தமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்கும் கொண்டு செல்லப்படும் போது, அதன் தேவையும் பயன்பாடும் அதிகரிக்கின்றன.

காலப்பயன்பாடு: ஒரு விளைபொருளை எதிர்காலத் தேவைக்காகச் சேமித்து வைக்கும்போது, அதன் பயன்பாடு மிகுகிறது. எடுத்துக்காட்டாக, நுகர்வோர்களால் ஆண்டு முழுவதும் பயன்படுத்தக்கூடிய உணவுப் பயிர்களான நெல், கோதுமை போன்றவற்றைச் சேமித்து வைப்பதால், அவற்றின் தேவையும் பயன்பாடும் மிகுதியாகின்றன.

நம் இந்தியாவில் கலப்பு பொருளாதார நிலை காணப்படுகிறது. அதாவது, பொருளாதாரத்தில் தனியார் துறை நிறுவனங்களும் பொதுத் துறை நிறுவனங்களும் ஒன்றாக இணைந்து செயல்படுகின்றன.

எடுத்துக்காட்டு முதன்மை மற்றும் இரண்டாம் நிலை உற்பத்தி: பருத்தி (முதன்மைத் துறை) – பருத்தித் தொழில் (இரண்டாம் நிலை உற்பத்தி) = ஆடை உற்பத்தி. இரும்புத்தாது (முதன்மைத் துறை) – இரும்புத் தொழில் (இரண்டாம் நிலை உற்பத்தி) = பொருள் தயாரிப்பு. கோதுமைமாவு (முதன்மைத் துறை) – ரொட்டித் தொழிற்சாலை = உணவு உற்பத்தி (இரண்டாம் நிலை உற்பத்தி).

நமது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், பெரும்பங்கு வகிப்பவை மூன்றாம் நிலை அல்லது சேவைத் துறை உற்பத்திகளே.

குறிப்பிட்ட நிலப்பகுதி அமைந்துள்ள இடத்தில் கிடைக்கும் வளங்களைப் பொருத்து, நிலத்தின் வடிவம் மாற்றமடைகிறது. எடுத்துக்காட்டாக, வேளாண்மை செய்யும்போது, விளைநிலமாகவும் மனை விற்பனை செய்யும்போது வீட்டு நிலமாகவும் மாறுகிறது.

ஆடம்ஸ்மித் “பொருளியலின் தந்தை” என அழைக்கப்படுகிறார். இவரது கோட்பாடு, செல்வத்தை அடிப்படையாகக் கொண்ட “செல்வ இலக்கணம் ஆகும். ” நன்னெறி கருத்து உணர்வுக் கொள்கை”, நாடுகளின் செல்வமும், அவற்றை உருவாக்குகின்ற காரணிகளும் ஓர் ஆய்வு” (1776) என்பன, அவரின் சிறந்த இரு படைப்பு நூல்கள்.

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. உற்பத்தி என்பது

(அ) பயன்பாட்டை அழித்தல்

(ஆ) பயன்பாட்டை உருவாக்குதல்

(இ) மாற்று மதிப்பு

(ஈ) மேற்கண்ட எதுவுமில்லை

2. பயன்பாட்டின் வகைகளாவன

(அ) வடிவப்பயன்பாடு

(ஆ) காலப்பயன்பாடு

(இ) இடப்பயன்பாடு

(ஈ) மேற்கண்ட அனைத்தும்

3. உற்பத்தியின் மூலம் பொருட்களை பிரித்தெடுக்கும் தொழில்

(அ) இரண்டாம் நிலை உற்பத்தி

(ஆ) முதன்மை உற்பத்தி

(இ) மூன்றாம் நிலை உற்பத்தி

(ஈ) பணித்துறை உற்பத்தி

4. முதன்மைக் காரணிகள் என்பன ——————

(அ) நிலம், மூலதனம்

(ஆ) மூலதனம், உழைப்பு

(இ) நிலம், உழைப்பு

(ஈ) எதுவுமில்லை

5. தொழில் முனைவோர் என அழைக்கப்படுபவர்

(அ) பரிமாற்றம் செய்பவர்

(ஆ) முகவர்

(இ) அமைப்பாளர்

(ஈ) தொடர்பாளர்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. —————- என்பது பண்டத்திற்கான விருப்பங்களை நிறைவு செய்யும் சக்தியாகும்.

2. பெறப்பட்ட காரணிகள் என்பது ————– மற்றும் ————– ஆகும்.

3. —————- என்பது நிலையான அளிப்பினை உடையது.

4. ————— என்பது மனித உற்பத்தியில் ஓர் இரு பொருள்.

5. —————– என்பது பல்வேறு பண்டங்களை உற்பத்தி செய்திட மனித முயற்சியால் உருவாக்கப்பட்டதாகும்.

III. பொருத்துக:

1. முதன்மை உற்பத்தி – அ) ஆடம்ஸ்மித்

2. காலப்பயன்பாடு – ஆ) மீன்பிடித்தல், சுரங்கத் தொழில்

3. நாடுகளின் செல்வம் – இ) தொழில் முனைவோன்

4. மனித மூலதனம் – ஈ) எதிர்கால சேமிப்பு

5. புதுமை புனைபவர் -உ) கல்வி, உடல்நலம்

விடைகள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. பயன்பாட்டை உருவாக்குதல், 2. மேற்கண்ட அனைத்தும், 3. முதன்மை உற்பத்தி, 4. நிலம், உழைப்பு, 5. அமைப்பாளர்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. பயன்பாடு, 2. மூலதனம் மற்றும் அமைப்பு, 3. நிலம், 4. மனித உழைப்பு, 5. மூலதனம்

III. பொருத்துக:

1. ஆ, 2. ஈ, 3. அ, 4. உ, 5. இ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!