Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
MCQ Questions

உள்ளாட்சி அமைப்புகள் 9th Social Science Lesson 15 Questions in Tamil

9th Social Science Lesson 15 Questions in Tamil

15. உள்ளாட்சி அமைப்புகள்

1. ஒரு பகுதி அல்லது ஒரு கிராமம், சிறிய நகரம் அல்லது மாநகரம் போன்ற சிறிய சமூகத்தினை நிர்வாகம் செய்யும் அமைப்புகள் ______

அ) சட்டமன்றம்

ஆ) நாடாளுமன்றம்

இ) உள்ளாட்சி அமைப்புகள்

ஈ) எதுவுமில்லை

குறிப்பு: உள்ளாட்சி அமைப்புகள் மக்களுக்கு நெருக்கமாகவும், அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதமாகவும் அடிமட்டத்திலிருந்து செயல்படுகின்றன.

2. ரிப்பன் பிரபுவின் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு

அ) 1882

ஆ) 1935

இ) 1937

ஈ) 1883

குறிப்பு: 1882ம் ஆண்டு ரிப்பன் பிரபுவின் தீர்மானத்தின் படி, மேற்கத்திய நாடுகளின் மக்களாட்சி முறையின் அடிப்படையில் 19ம் நூற்றாண்டின் கால் இறுதியில் உள்ளாட்சி அமைப்புகள் இந்தியாவில் புத்துயிர் பெற்றன.

3. பின்வருவனவற்றுள் சரியானது எவை?

1) உள்ளாட்சி அமைப்புகள் தன்னாட்சிக் குடியரசுக்கு கருவியாகச் செயல்படுகின்றன.

2) உள்ளாட்சி அமைப்பு உறுப்பினர்கள் மறைமுகமாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

அ) 1 மட்டும்

ஆ) 2 மட்டும்

இ) 1,2 இரண்டும்

ஈ) ஏதுமில்லை

குறிப்பு: உள்ளாட்சி அமைப்பு உறுப்பினர்கள் உள்ளூர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்

4. உள்ளாட்சி அமைப்புகளின் தந்தை என்று அழைக்கப்பட்டவர்

அ) லிட்டன் பிரபு

ஆ) கர்சன் பிரபு

இ) டல்ஹௌசி பிரபு

ஈ) ரிப்பன் பிரபு

குறிப்பு: நவீன உள்ளாட்சி அமைப்புகளுக்கு அடித்தளமிட்டதால் ரிப்பன் பிரபு உள்ளாட்சி அமைப்புகளின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.

5. 1935 ஆம் ஆண்டு தன்னாட்சியை அறிமுகப்படுத்திய சட்டம் எது?

அ) இந்திய அடிப்படை உரிமைகள் சட்டம்

ஆ) இந்திய குடியுரிமைச் சட்டம்

இ) இந்திய அரசுச் சட்டம்

ஈ) இந்திய அடிப்படை கடமைகள் சட்டம்

குறிப்பு: 1935 ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டம் நடைமுறைக்கு வந்தது.

6. பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் கிராமங்களிலிருந்து நகரங்கள் வரை கட்டமைக்கப்பட வேண்டும் என்பது யாருடைய கூறுகளில் முக்கியமானதாக இருந்தது?

அ) ரிப்பன் பிரபு

ஆ) காந்தியடிகள்

இ) நேரு

ஈ) பெரியார்

குறிப்பு: பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் கிராமங்களிலிருந்து நகரங்கள் வரை கட்டமைக்கப்பட வேண்டும் என்பது காந்தியடிகளின் திட்டங்களின் ஒரு முக்கிய கூறாக இருந்தது.

7. கிராமப்பஞ்சாயத்து பற்றிக் குறிப்பிடும் சட்டம்

அ) சட்டம் 40

ஆ) சட்டம் 41

இ) சட்டம் 42

ஈ) சட்டம் 43

குறிப்பு: சட்டம் 40: அரசு, ஊராட்சி மன்றங்களை அமைப்பதற்கும், தன்னாட்சி அமைப்பு கூறுகளாக அவை இயங்குவதற்கும் தேவைப்படும் அதிகாரங்களையும், அதிகார அடைவையும் அவற்றுக்கு வழங்குவதற்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் வேண்டும். இச்சட்டம் விடுதலைக்குப் பின் 40ம் சட்டமாக இணைக்கப்பட்டது.

8. பொருத்துக

(1) பேரூராட்சி – பல இலட்சத்திற்கும் மேல் மக்கள் வாழும் பகுதி

(2) நகராட்சி – பத்தாயிரத்திற்கும் மேல் மக்கள் வாழும் பகுதி

(3) மாநகராட்சி – ஒரு இலட்சத்திற்கும் மேல் மக்கள் வாழும் பகுதி

அ) 1 2 3

ஆ) 2 1 3

இ) 3 1 2

ஈ) 2 3 1

குறிப்பு: பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகியவை நகர்ப்புற உள்ளாட்சிகள் ஆகும்.

9. கிராமப்புறங்களின் பிரதிநிதிகளை மக்களாகக் கொண்ட கிராம சுயராஜ்ஜியத்தை உருவாக்க விரும்பியவர்

அ) காந்தியடிகள்

ஆ) அம்பேத்கர்

இ) பெரியார்

ஈ) நேரு

குறிப்பு: காந்தியின் சுயராஜ்ஜியம் என்பது கிராமம் அடிப்படையில் சுயசார்புடையதாக இருக்க வேண்டும். இந்திய அரசியலமைப்பின் அடிப்படையாக திகழும் கிராமங்கள் தங்களின் தேவைகளுக்கு தாங்களே பொறுப்பாவர்.

10. பேரூராட்சியினை நிர்வாகம் செய்ய நியமிக்கப்படுபவர்

அ) ஆணையர்

ஆ) செயல் அலுவலர்

இ) மேயர்

ஈ) கவுன்சிலர்

குறிப்பு: பத்தாயிரத்திற்கும் அதிகமான மக்கள் வாழும் பகுதி பேரூராட்சி ஆகும்.

11. தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் அல்லது தமிழ்நாடு பஞ்சாயத்து ராஜ் சட்டம் நடைமுறைக்கு வந்த ஆண்டு

அ) 1994

ஆ) 1993

இ) 1992

ஈ) 1995

குறிப்பு: புதிய பஞ்சாயத்து ராஜ் அமைப்பு – தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் அடிப்படையில் செயல்படுத்தப்பட்டது.

12. உள்ளாட்சி அமைப்புகள் எக்காலத்தில் உச்ச நிலையை அடைந்தது?

அ) மௌரியப்பேரரசு

ஆ) பிற்காலச்சோழர்கள்

இ) குப்தப்பேரரசு

ஈ) பல்லவர்கள்

குறிப்பு: மௌரியப்பேரரசு காலத்திலும் உள்ளாட்சி அமைப்புகளைப் பற்றிய ஆவணக்குறிப்புகள் உள்ளன.

13. ஒரு வருடத்தில் எத்தனை முறை கிராம சபைக்கூட்டங்கள் நடத்தப்படுகின்றன?

அ) 2

ஆ) 4

இ) 6

ஈ) 8

குறிப்பு: ஜனவரி – 26, மே – 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2

14. கிராம சபையின் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க சோழர்கள் காலத்தில் பயன்படுத்தப்பட்ட தேர்தல் முறை

அ) நேரடித் தேர்தல்

ஆ) மறைமுகத் தேர்தல்

இ) குடவோலை முறை

ஈ) வாக்குச்சீட்டு முறை

குறிப்பு: காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள உத்திரமேரூர் கல்வெட்டுகளில் இதற்கான ஆதாரங்கள் காணப்படுகிறது.

15. ஊரக உள்ளாட்சி அமைப்பில் வரி விதிக்கும் அதிகாரத்தைப் பெற்றுள்ள அமைப்பு

அ) மாவட்ட ஊராட்சி

ஆ) ஊராட்சி ஒன்றியம்

இ) மாநகராட்சி

ஈ) கிராம ஊராட்சி

குறிப்பு: ஊரக உள்ளாட்சியில் 3 அடுக்கு அமைப்பு உள்ளது. மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், கிராம ஊராட்சி

16. பல ஊராட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கப்படுவது

அ) கிராம ஊராட்சி

ஆ) மாவட்ட ஊராட்சி

இ) ஊராட்சி ஒன்றியம்

ஈ) மாவட்ட ஊராட்சி

குறிப்பு: ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்களை மக்கள் நேரடியாக தேர்ந்தெடுக்கின்றனர். உறுப்பினர்கள் தங்களில் ஒருவரை ஊராட்சி ஒன்றிய தலைவராகத் தேர்ந்தெடுக்கின்றனர்.

17. ஒவ்வொரு மாவட்டத்திலும் எத்தனை மாவட்ட ஊராட்சி அமைக்கப்பட்டுள்ளது?

அ) 1

ஆ) 2

இ) 3

ஈ) 4

குறிப்பு: 50,000 மக்கள்தொகை என்ற அடிப்படையில் மாவட்டம் பல பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது.

18. குடிசைகள் இல்லாத கிராமம் எது?

அ) ஆலாந்துறை

ஆ) பெருந்துறை

இ) ஓடந்துறை

ஈ) பாலத்துறை

குறிப்பு: ஓடந்துறையில் நிரந்திர வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. இங்கு தடையில்லா நீர் விநியோகமும் தரமான சாலை வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன.

19. தவறான கூற்றைத் தேர்ந்தெடு.

(1) ஒவ்வொரு ஊராட்சியிலும், அவ்வூராட்சி அதிகார எல்லைக்குட்பட்ட மக்களே கிராம சபை உறுப்பினர்களாக இருப்பர். ஊராட்சித்தலைவர் தலைமை தாங்குவார்.

(2) கிராம ஊராட்சிகளின் உருவாக்கம் என்பது ஒரு சமூக இயக்கமாகவே இருந்தது.விடுதலைப்போராட்டத்தின் போது பஞ்சாயத்து சீரமைப்பு என்பது மக்களுக்கு நம்பிக்கைகை ஊட்டியது.

(3) கிராம சபைக்கூட்டத்தில் வரவு செலவு கணக்குகளும், திட்டங்களினால் பயனடைந்தோர் பற்றியும் கலந்துரையாடப்படும்.

அ) கூற்று 1 தவறு

ஆ) கூற்று 2 தவறு

இ) கூற்று 3 தவறு

ஈ) அனைத்தும் சரி

குறிப்பு: ஒரு வருடத்தில் நான்கு முறை கிராம சபைக்கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.

20. மாவட்ட ஆட்சியர், திட்ட அலுவலர் மற்றும் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் _____________ன் வளர்ச்சிப் பணிகளை மேற்பார்வையிடும் அதிகாரம் பெற்றுள்ளனர்.

அ) மாவட்ட ஊராட்சி

ஆ) நகராட்சி

இ) மாநகராட்சி

ஈ) ஊராட்சி ஒன்றியம்

குறிப்பு: ஊராட்சி ஒன்றியத்தலைவர் சேர்மன் எனவும், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் கவுன்சிலர்கள் எனவும் அழைக்கப்படுகின்றனர்.

21. மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களின் பதவிக்காலம் எவ்வளவு ஆண்டுகள்?

அ) 5

ஆ) 6

இ) 3

ஈ) 2

குறிப்பு: மாவட்ட ஊராட்சி பகுதி உறுப்பினர்கள் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இவ்வுறுப்பினர்கள் தலைவராக தங்களில் ஒருவரை தேர்ந்தெடுக்கின்றனர்.

22. பொருத்துக

(1) 1950 – கிராம தன்னாட்சிக் கொள்கை

(2) 1919 – மதராஸ் கிராம பஞ்சாயத்துச்சட்டம்

(3) 1958 – 73 மற்றும் 74வது அரசமைப்பு திருத்தச்சட்டங்கள்

(4) 1992 – குழாய் மூலம் குடிநீர் விநியோகம்

(5) காந்தியடிகள் – மதராஸ் பஞ்சாயத்துச்சட்டம், மதராஸ் மாவட்ட வளர்ச்சி

கவுன்சில் சட்டம்

அ) 1 2 3 5 4

ஆ) 5 1 4 2 3

இ) 3 1 2 4 5

ஈ) 2 3 1 4 5

குறிப்பு: 1919ல் குழாய் மூலம் குடிநீர் விநியோகம் முறையினை பெரியார் செயல்படுத்தினார். இந்திய நகராட்சி நிர்வாகங்களின் வரலாற்றில் இத்திட்டத்தினை முதன்முதலில் செயல்படுத்தியவர் பெரியார்.

23. ஓடந்துறையில் தயாரிக்கப்படும் மின்சாரத்தின் அளவு

அ) 2.5 யூனிட்டுகள்

ஆ) 4.5 யூனிட்டுகள்

இ) 5.5 யூனிட்டுகள்

ஈ) 7.5 யூனிட்டுகள்

குறிப்பு: வங்கிக்கடன் மற்றும் அரசின் மானியத்தைப் பெற்று ரூ. 2 கோடியே 30 இலட்சம் செலவில் நிறுவப்பட்ட சிறிய காற்றாலையின் மூலமாக ஓடந்துறையில் தயாரிக்கப்படும் மின்சாரத்தின் அளவு 7.5 யூனிட்டுகள் ஆகும்.

24. தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகளின் எண்ணிக்கை

அ) 15

ஆ) 14

இ) 13

ஈ) 12

குறிப்பு: சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், ஈரோடு, வேலூர், தூத்துக்குடி, திருப்பூர், தஞ்சாவூர், திண்டுக்கல், ஓசூர், நாகர்கோவில், ஆவடி.

25. மாநகராட்சித்தலைவரின் முக்கிய பணிகள் யாவை?

(1) வெளிநாட்டு பிரமுகர்களை வரவேற்று உபசரிப்பார்.

(2) மாநகராட்சி குழு கூட்டங்களுக்குத் தலைமை தாங்குவார்.

(3) அரசுக்கும், மாநகராட்சி உறுப்பினர்களுக்கும் இடையே ஒரு இணைப்புப் பாலமாக செயல்படுகிறார்.

அ) கூற்று 1 மட்டும்

ஆ) கூற்று 2 மட்டும்

இ) கூற்று 3 மட்டும்

ஈ) அனைத்தும் சரி

குறிப்பு: மாநகராட்சித்தலைவர் மேயர் என்றும் அழைக்கப்படுகிறார். மேயர் மற்றும் பிற உறுப்பினர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள்

26. பெரியார் எந்த ஆண்டிலிருந்து ஈரோடு நகராட்சியின் தலைவராக பதவி வகித்தார்?

அ) 1918

ஆ) 1916

இ) 1917

ஈ) 1913

குறிப்பு: பெரியாரின் பதவிக்காலத்தில் ஈரோடு நகராட்சியின் மக்களுக்கான முறையான குடிநீர் வசதிகளை ஏற்படுத்தி தருவதில் முனைப்பு காட்டினார்.

27. உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல்களை ________ நடத்துகின்றது.

அ) மாநிலத்தேர்தல் ஆணையம்

ஆ) நாடாளுமன்றம்

இ) சட்டமன்றம்

ஈ) வட்டார வளர்ச்சி அலுவலகம்

குறிப்பு: வாக்காளர் பட்டியலை பகுதி வாரியாக தயாரிக்கின்றது. பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் மற்றும் பெண்கள் ஆகியோருக்கு சுழற்சி முறையில், மக்கள் விகிதாச்சார அடிப்படையில் இட ஒதுக்கீடு செய்யப்படுகின்றது.

28. நகராட்சியினை நிர்வாகம் செய்ய நியமிக்கப்படுபவர்

அ) செயல் அலுவலர்

ஆ) நகராட்சி ஆணையர்

இ) மேயர்

ஈ) கவுன்சிலர்

குறிப்பு: நகர சபைத்தலைவர் மற்றும் பகுதி உறுப்பினர்கள் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இவர்களின் பதவிக்காலம் – 5 ஆண்டுகள்.

29. இந்திய மக்களாட்சிக்கு ________ அமைப்புகளே அடிப்படை ஆகும்.

அ) தேர்தல் ஆணையம்

ஆ) நாடாளுமன்றம்

இ) சட்டமன்றம்

ஈ) உள்ளாட்சிகள்

குறிப்பு: உள்ளாட்சி அமைப்புகளின் அரசமைப்பு நிலை, அவற்றின் செயல்பாட்டிற்கு மிகவும் முக்கியத்துவத்தினை அளிக்கின்றது.

30. ஓடந்துறை பஞ்சாயத்து எத்தனை யூனிட் மின்சாரத்தை தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு (TANGEDCO) வழங்கி வருகிறது?

அ) 2.5 யூனிட்டுகள்

ஆ) 4.5 யூனிட்டுகள்

இ) 5.0 யூனிட்டுகள்

ஈ) 7.5 யூனிட்டுகள்

குறிப்பு: 7.5 யூனிட்டுகள் மின்சாரம் ஓடந்துறை பஞ்சாயத்து மூலம் தயாரிக்கப்படுகிறது. இப்பஞ்சாயத்தின் மொத்த தேவையான 2.5 யூனிட்டுகள் போக மீதியுள்ள மின்சாரம் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு விற்கப்படுகிறது. இதனால் ஆண்டுதோறும் 20இலட்சம் ரூபாய் வருமானம் ஈட்டுகிறது.

31. மாநகராட்சியின் நிர்வாக அலுவலர் ______

அ) செயல் அலுவலர்

ஆ) மாநகராட்சி ஆணையர்

இ) மேயர்

ஈ) கவுன்சிலர்

குறிப்பு: இந்திய ஆட்சிப்பணி அதிகாரி (IAS) ஒருவர் மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்படுகிறார்.

32. பின்வருவனவற்றுள் சரியானவை எவை?

(1) ஓடந்துறை பஞ்சாயத்தில் சூரிய ஒளியினால் இயங்கும் தெருவிளக்குகள் மற்றும் அனைத்து குடும்பங்களுக்கும் சமைப்பதற்கான உயிரி வாயு இணைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவை ஆற்றல் தன்னிறைவுக்கான சிறந்த எடுத்துக்காட்டுகள் ஆகும்.

(2) புதுப்பிக்கக் கூடிய வளங்களில் செய்யும் சோதனை முயற்சிகள் ஓடந்துறையின் சுய முயற்சிகளில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

அ) 1 மட்டும்

ஆ) 2 மட்டும்

இ) 1,2 இரண்டும்

ஈ) ஏதுமில்லை

33. இந்தியர்களுக்கு சுதந்திரத்தின் சுவையை அறிமுகப்படுத்தியவர்

அ) காந்தியடிகள்

ஆ) ராஜாஜி

இ) பெரியார்

ஈ) ரிப்பன் பிரபு

குறிப்பு: 1882- ஆம் ஆண்டு உள்ளாட்சி அமைப்புகளை அறிமுகம் செய்ததன் மூலம் இந்தியர்களுக்கு சுதந்திரத்தின் சுவையை அறிமுகப்படுத்தினார்.

34. ஓடந்துறை பஞ்சாயத்தில் பயோமாஸ் அமைப்பு எத்தனை வாட் மின்சாரத்தை தயாரிக்கின்றது?

அ) 3 கிலோவாட்

ஆ) 6 கிலோவாட்

இ) 9 கிலோவாட்

ஈ)8 கிலோவாட்

குறிப்பு: ஓடந்துறை பஞ்சாயத்தில் 9 கிலோவாட். மின்சாரம் தயாரிக்கக்கூடிய பயோமாஸ் என்னும் அமைப்பினை உருவாக்கி அனைத்து கிராமங்களுக்கும் தேவையான குடிநீரை இறைக்க பயன்படுத்துகின்றனர்

35. கிராம ஊராட்சியின் ஆய்வாளராக செயல்படுபவர்

அ) மாவட்ட ஆட்சியர்

ஆ) மாநகராட்சி ஆணையர்

இ) மேயர்

ஈ) கவுன்சிலர்

குறிப்பு: 500க்கும் மேற்பட்ட மக்கள் தொகையைக் கொண்டுள்ள ஒவ்வொரு கிராமமும் கிராம ஊராட்சியாக உருமாறியுள்ளது.

36. 73 மற்றும் 74வது அரசமைப்புத் திருத்தச்சட்டங்களின் படி, தலைவர்கள் பதவிக்கு எத்தனை சதவீதம் இட ஒதுக்கீடு பெண்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது?

அ) 2ல் ஒரு பங்கு

ஆ) 4ல் ஒரு பங்கு

இ) 5ல் ஒரு பங்கு

ஈ) 3ல் ஒரு பங்கு

குறிப்பு: எல்லா அளவு நிலைகளிலும் தலைவர்கள் பதவிக்கு 3ல் ஒரு பங்கு (33%) இடம் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

37. பொருத்துக

(1) 1957 – எல்.எம். சிங்வி குழு

(2) 1977 – 1978 – ஜி.வி.கே. ராவ் குழு

(3) 1985 – 73 மற்றும் 74வது அரசமைப்பு திருத்தச்சட்டங்கள்

(4) 1986 – அசோக் மேத்தா குழு

(5) 1992 – பல்வந்த் ராய் மேத்தா குழு

அ) 1 2 3 5 4

ஆ) 5 1 4 2 3

இ) 4 3 5 2 1

ஈ) 2 3 1 4 5

38. 1957ம் ஆண்டின் பஞ்சாயத்து ராஜ் திட்டத்திற்கு அடிப்படையாகத் திகழ்ந்தவை

அ) சமூக அபிவிருத்தி திட்டம்

ஆ) தேசிய நீட்டிப்பு சேவை

இ) அ, ஆ இரண்டும்

ஈ) ஏதுமில்லை

குறிப்பு: சமூக அபிவிருத்தி திட்டம் – 1952 மற்றும் தேசிய நீட்டிப்பு சேவை – 1953 ஆகியன 1957ம் ஆண்டின் பஞ்சாயத்து ராஜ் திட்டத்திற்கு அடிப்படையாகத் திகழ்ந்தன.

39. 2 மில்லியனுக்குக் குறைவான மக்கள்தொகையை உடைய சிறு மாநிலங்களில் இயங்கும் பஞ்சாயத்து அமைப்பு

அ) 3 அடுக்கு முறை

ஆ) 2 அடுக்கு முறை

இ) 4 அடுக்கு முறை

ஈ) 5 அடுக்கு முறை

குறிப்பு: இது 73 மற்றும் 74வது அரசமைப்பு திருத்தச்சட்டங்களின் (1992) சிறப்பம்சமாகும்.

40. கிராமங்களில் செயல்படும் உள்ளாட்சி அமைப்புகள் _______ என்று அழைக்கப்படுகின்றன

அ) கிராம சபை

ஆ) கிராம பஞ்சாயத்து

இ) கிராம ஊராட்சி

ஈ) கிராமப்பள்ளி

குறிப்பு: கிராம ஊராட்சியில் தலைவர் மற்றும் பகுதி உறுப்பினர்கள் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் (18 வயது பூர்த்தியடைந்தோர்) இவர்களின் பதவிக்காலம் – 5 ஆண்டுகள்.

41. திட்டக்ககுழுவால் நியமிக்கப்படுதல் கீழ்க்காணும் எதனுடன் தொடர்புடையது?

அ) எல்.எம். சிங்வி குழு

ஆ) ஜி.வி.கே. ராவ் குழு

இ) அசோக் மேத்தா குழு

ஈ) பல்வந்த் ராய் மேத்தா குழு

குறிப்பு: ஜி.வி.கே. ராவ் குழு வேரற்ற புற்கள் போன்று கருதப்படுகின்றது.

42. புதிய பஞ்சாயத்து ராஜ் அமைப்பின் சிறப்பம்சங்கள் யாவை?

அ) 3 அடுக்கு அமைப்பு, கிராம சபை, தேர்தல் ஆணையத்தினை நிறுவுதல்

ஆ) நிதி ஆணையத்தினை நிறுவுதல், மக்கள்தொகைக்கு ஏற்ற விகிதத்தில் பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினர் இட ஒதுக்கீடு

இ) பெண்களுக்கு 3ல் ஒரு பங்கு இட ஒதுக்கீடு மற்றும் மாவட்ட திட்டக் குழுக்களை அமைத்தல்

ஈ) மேற்கூறிய அனைத்தும்

43. பொருத்துக

(1) நேரடித்தேர்தல் – வட்டாரம்

(2) பஞ்சாயத்து சமிதி – மாவட்டம்

(3) ஜில்லா பரிஷத்து – கிராம ஊராட்சிகள்

குறிப்பு: கிராம அளவில் கிராம ஊராட்சிகள் (நேரடித்தேர்தல்), வட்டார அளவில் பஞ்சாயத்து சமிதி, மாவட்ட அளவில் ஜில்லா பரிஷத்து (மறைமுகத்தேர்தல்) ஆகிய முறைகளை பல்வந்த் ராய் மேத்தா குழு பரிந்துரை செய்தது.

44. 2 அடுக்கு முறை மற்றும் அரசியல் கட்சிகள் அனைத்துத் தேர்தல்களிலும் பங்கு பெற வேண்டும் எனக் கூறுவது

அ) எல்.எம். சிங்வி குழு

ஆ) ஜி.வி.கே. ராவ் குழு

இ) அசோக் மேத்தா குழு

ஈ) பல்வந்த் ராய் மேத்தா குழு

குறிப்பு: அசோக் மேத்தா குழு காலகட்டம் – 1977-1978

45. கீழ்க்கண்டவற்றுள் எவை 73 மற்றும் 74வது அரசமைப்பு திருத்தச்சட்டங்களின் சிறப்பம்சமாகும்?

(1) ஊராட்சி மற்றும் நகராட்சிகள் உள்ளாட்சி அமைப்பு நிறுவனங்களாகச் செயல்படும்.

(2) நேரடித் தேர்தலின் மூலம் அனைத்து அளவிலும் இடங்கள் நிரப்பப்படுகின்றன.

(3) வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ள உரிய வயதுடையோரைக் கொண்ட கிராம சபைகள் (கிராமங்கள்) மற்றும் பகுதி குழுக்கள் (நகராட்சிகள்) ஆகியன குடியரசு அமைப்பின் அடிப்படை அலகுகள் ஆகும்.

அ) 1 மட்டும்

ஆ) 1 மட்டும்

இ) 1 மட்டும்

ஈ) அனைத்தும் சரி

46. பொருத்துக

(1) எல்.எம். சிங்வி குழு – 2 அடுக்கு பஞ்சாயத்து அமைப்பு

(2) ஜி.வி.கே. ராவ் குழு – 3 அடுக்கு பஞ்சாயத்து அமைப்பு

(3) அசோக் மேத்தா குழு – 73 மற்றும் 74வது அரசமைப்பு திருத்தச்சட்டங்கள்

(4) பல்வந்த் ராய் மேத்தா குழு – வேரற்ற புற்கள்

அ) 3 4 1 2

ஆ) 1 4 2 3

இ) 4 3 2 1

ஈ) 2 3 1 4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!