Book Back QuestionsTnpsc

உள்ளாட்சி அமைப்புகள் Book Back Questions 9th Social Science Lesson 24

9th Social Science Lesson 24

24] உள்ளாட்சி அமைப்புகள்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

ரிப்பன் பிரபு: 1882ஆம் ஆண்டு உள்ளாட்சி அமைப்புகளை அறிமுகம் செய்ததன் மூலம் இந்தியர்களுக்கு சுதந்திரத்தின் சுவையை அறிமுகப்படுத்தியவர் ரிப்பன் பிரபு ஆவார். இந்தியாவில் நிர்வாகத்தை தாராளமயம் ஆக்கும் சில நடவடிக்கைகளை ரிப்பன் மேற்கொண்டார். நிர்வாகத்தை பரவலாக்க வேண்டும் என்பதற்காகவே உள்ளாட்சி அமைப்புகளை அவர் முறைப்படுத்தினார்.

உள்ளாட்சி அமைப்புகளை நடைமுறைப்படுத்துவதில் இருந்த சில தடைகளை 1882ஆம் ஆண்டு அவர் இயற்றிய தீர்மானத்தின் மூலம் அகற்ற முயன்றார். கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள அமைப்புகளுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களுக்கும் அதிக அதிகாரங்களையுடைய உள்ளாட்சி நிர்வாக உரிமைகளை வழங்கும் விதமாக ரிப்பன் தொடர்ச்சியான பல சட்டங்களை ஏற்படுத்தினார்.

தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் வரலாற்றுத் தொடக்கம் மற்றும் வளர்ச்சி: காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள உத்திரமேரூர் கல்வெட்டுகளில் காணப்படுகின்ற ஆதாரங்களின்படி, உள்ளாட்சி அமைப்புகளில் தமிழ்நாடு ஒரு நீண்ட வரலாற்றினைக் கொண்டதாக அறியப்படுகின்றது. அக்காலத்தில் தமிழ்நாடு பல கிராம குடியாட்சியைக் கொண்ட நிலமாக விளங்கியது. பல சமூகக் குழுக்கள் தங்களது பகுதி மேம்பாட்டிற்காக பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். பத்து மற்றும் பதினோறாம் நூற்றாண்டுகளில் நடைபெற்ற சோழர்களது ஆட்சிக் காலத்தில், இந்த முறை உச்ச நிலையை அடைந்தது. கிராம சபைகள் வரி விதித்தன; சமூக வாழ்வினை மேம்படுத்தின; தங்களது குறிப்பிட்ட பகுதியில் நீதியையும் நிலைநாட்டின. இந்தக் கிராம சபைகள் சோழ அரசர்களுடன் வலிமையான உறவுகளைக் கொண்டிருந்தனர். கிராம சபையின் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க “குடவோலை முறை” என்ற இரகசிய தேர்தல் முறை புழக்கத்தில் இருந்தது. சோழர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு, கிராம தன்னாட்சி சரியவும், நிலப்பிரபுக்களின் மையப்படுத்தப்பட்ட நிர்வாக முறை மேலோங்கவும் தொடங்கியது. இம்முறை, ஆங்கிலேய காலனி ஆதிக்க ஆட்சி உள்ளாட்சி அமைப்புகளை அவர்களுக்கு ஏதுவாக இருக்கும் விதமாக அறிமுகம் செய்யும் வரை தொடர்ந்தது. சுதந்திர இந்தியாவில், ஜனநாயக பரவலாக்கத்தின் முதல் சட்டமாக, 1950இல் மதராஸ் கிராம பஞ்சாயத்து சட்டம் இயற்றப்பட்டது. 1957, உள்ளுர் நிர்வாக சீர்திருத்தங்கள் தொடர்பாக வெளியான விவரங்களின் தொடர்ச்சியாக, 1958ல் மதராஸ் பஞ்சாயத்து சட்டமும், மதராஸ் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் சட்டமும் இயற்றப்பட்டன,

காந்தியின் கிராம சுயராஜ்யம்: காந்தியடிகள் கிராமப்புறங்களின் பிரதிநிதிகளைக் மக்களாகக் கொண்ட கிராம சுயராஜ்ஜியத்தை விரும்பினார். இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் வாழ்கிறது என்பதை உணர்ந்தார் காந்தியடிகள். சுதந்திர இந்தியாவில் கிராம குடியரசு எனும் பஞ்சாயத்துக்களை கனவு கண்டார். காந்தியடிகள் பஞ்சாயத்து ராஜ் ஒரு அதிகார பகிர்வு கொண்ட அரசாக இருக்க அறிவுறுத்தினார். இந்திய அரசியலமைப்பின் அடிப்படையாக திகழும் கிராமங்கள் தங்களின் தேவைகளுக்கு தாங்களே பொறுப்பாவர். எளிமையான சொற்களில் சொல்வதென்றால் காந்தியின் சுயராஜ்ய கிராமம், அடிப்படையில் சுயசார்புடையதாக இருக்க வேண்டும். வாழ்க்கைக்குத் தேவையான உணவு, தூய்மையான நீர், சுகாதாரம், வீட்டு வசதி, கல்வி மற்றும் பிற தேவைகளுக்கு என அனைத்து தேவைகளையும் ஏற்கும் அரசாங்கம் மற்றும் சுய பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்தையும் வழங்க வேண்டும்.

தமிழ்நாட்டில் 15 மாநகராட்சிகள் உள்ளன. அவை சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், ஈரோடு, வேலூர், தூத்துக்குடி, திருப்பூர், தஞ்சாவூர், திண்டுக்கல், ஆவடி, ஓசூர் மற்றும் நாகர்கோவில்.

நகராட்சி தலைவராக பெரியார்: பெரியார் ஈ. வே. இராமசாமி அவர்கள் 1917ஆம் ஆண்டில் இருந்து பல ஆண்டுகள் ஈரோடு நகராட்சியின் பெருந்தலைவராக பதவி வகித்தார். அவரது பதவிக் காலத்தில் ஈரோடு நகராட்சி மக்களுக்கான முறையான குடிநீர் வசதி மற்றும் சுகாதார வசதிகளை ஏற்படுத்தி தருவதில் முனைப்பு காட்டினார். 1919இல் குழாய் மூலம் குடிநீர் விநியோகம் முறையினை பெரியார் செயல்படுத்தினார். இந்திய நகராட்சி நிர்வாகங்களின் வரலாற்றில் இத்திட்டத்தினை முதன்முதலில் செயல்படுத்தியவர் பெரியார் என அறியப்படுகிறது.

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. 1985ஆம் ஆண்டு திட்டக் குழுவினால் நிறுவப்பட்ட குழு எது?

(அ) பல்வந்தராய் மேத்தா குழு

(ஆ) அசோக் மேத்தா குழு

(இ) GVK ராவ் மேத்தா குழு

(ஈ) LM சிங்வி மேத்தா குடு

2. ——— காலத்தில் இருந்த உள்ளாட்சி அமைப்புப் பற்றி உத்திர மேரூர் கல்வெட்டு தெரிவிக்கிறது.

(அ) சோழர்

(ஆ) சேரர்

(இ) பாண்டியர்

(ஈ) பல்லவர்

3. 73 மற்றும் 74வது அரசமைப்புத் திருத்தச் சட்டங்கள் இவ்வாண்டில் நடைமுறைக்கு வந்தன.

(அ) 1992

(ஆ) 1955

(இ) 1997

(ஈ) 1990

4. ஊராட்சிகளின் ஆய்வாளராகச் செயல்படுகின்றவர் ————– ஆவார்.

(அ) ஆணையர் (ஆ) மாவட்ட ஆட்சியர் (இ) பகுதி உறுப்பினர் (ஈ) மாநகரத் தலைவர்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. “உள்ளாட்சி அமைப்புகளின்” தந்தை என அழைக்கப்படுபவர் —————-

2. நமது விடுதலைப் போராட்டத்தின் போது மறுசீரமைப்பு என்பது —————–ஆக விளங்கியது.

3. சோழர் காலத்தின் போது கிராம சபை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்த இரகசிய தேர்தல் முறை ———— என்றழைக்கப்பட்டது.

4. கிராமங்களில் செயல்படும் உள்ளாட்சி அமைப்பு —————- ஆகும்.

5. பேரூராட்சிகளின் நிர்வாகத்தினைக் கண்காணிப்பவர் —————– ஆவார்.

III. பொருத்துக:

1. மாவட்ட ஊராட்சி – அ] கிராமங்கள்

2. கிராம சபைகள் – ஆ] மாநகரத் தலைவர்

3. பகுதி குழுக்கள் – இ] பெருந்தலைவர்

4. ஊராட்சி ஒன்றியம் – ஈ] மாவட்ட ஆட்சியர்

5. மாநகராட்சி -உ] நகராட்சிகள்

IV. சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக:

1. ஊராட்சி ஒன்றியம் பல மாவட்டங்கள் ஒன்றிணைவதால் உருவாகின்றது.

2. ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு மாவட்ட ஊராட்சி ஒன்றியம் அமைந்துள்ளது.

3. நகராட்சி ஆணையர் ஓர் இந்திய அரசுப் பணிகள் அலுவலர் ஆவார்.

4. ஊராட்சிகளில், ஊராட்சித் தலைவர் மற்றும் பகுதி உறுப்பினர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

விடைகள்:

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. GVK ராவ் மேத்தா குழு, 2. சோழர், 3. 1992, 4. ) மாவட்ட ஆட்சியர்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. ரிப்பன் பிரபு, 2. மக்களுக்கு நம்பிக்கை ஊட்டியது, 3. குடவோலை முறை, 4. கிராம ஊராட்சி, 5. செயல் அலுவலர்

III. பொருத்துக:

1. ஈ, 2. அ, 3. உ, 4. இ, 5. ஆ

IV. சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக:

1. கிராமங்கள், 2. கிராம, 3. சரி, 4. சரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!