Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Book Back QuestionsTnpsc

ஊடகமும் ஜனநாயகமும் Book Back Questions 7th Social Science Lesson 17

7th Social Science Lesson 17

17] ஊடகமும் ஜனநாயகமும்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

அச்சு இயந்திரம் ஜோஹன்னஸ் குட்டன்பெர்க் என்பவரால் 1453இல் கண்டுபிடிக்கப்பட்டது.

ஊடகத்தின் வகைப்பாடு: குறுகிய தொடர்பு ஊடகம்-கேபிள் தொலைக்காட்சி, நேரடி அஞ்சல், கருத்தரங்கு. தொலைத்தொடர்பு ஊடகம்-திரைப்படங்கள் தொலைக்காட்சி வானொலி. அச்சு ஊடகம்-செய்தித்தாள்கள், இதழ்கள், பத்திரிக்கைகள் புத்தகங்கள், சுவரொட்டிகள், அறிக்கைகள். இணைய ஊடகம்-கூகுள் இணைய தளங்கள் மற்றும் வலைப்பதிவுகள். சமூக ஊடகம்-கீச்சகம், முகநூல், புலனம்/கட்செவி அஞ்சல் மற்றும் படவரி

அகில இந்திய வானொலி: 1956ஆம் ஆண்டிலிருந்து ஆகாச வானி (வானிலிருந்து வரும் ஒலி) என்ற பெயரில் வானொலி ஒலிபரப்பை செய்து வருகிறது. இது 1936ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

மக்களாட்சியின் கோட்பாடு: மக்களாட்சி என்றால் மக்களால் ஆட்சி செய்யப்படுதல் என்பதாகும். இது இரண்டு கிரேக்க சொற்களால் ஆனது. டெமோஸ் (Demos) மக்களைக் குறிக்கிறது. க்ராடோஸ் (Kratos) அதிகாரம் அல்லது ஆட்சி என்று பொருள்.

உங்கள் பகுதியின் உள்ளுர் ஊடகங்கள் சிலவற்றின் பெயரினை குறிப்பிடுக.

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. கீழ்க்கண்டவற்றில் அச்சு ஊடகத்தின் கீழ் வருவது எது?

(அ) வானொலி

(ஆ) தொலைக்காட்சி

(இ) செய்தித்தாள்

(ஈ) இணையதளம்

2. கீழ்க்கண்டவற்றில் ஒலிபரப்பு ஊடகம் என்பது

(அ) இதழ்கள்

(ஆ) அறிக்கைகள்

(இ) நாளிதழ்கள்

(ஈ) வானொலி

3. உலகினை மக்களின் அருகாமையில் கொண்டு வந்த ஊடகம்

(அ) தட்டச்சு

(ஆ) தொலைக்காட்சி

(இ) தொலைப்பேசி

(ஈ) இவற்றில் எதுவும் இல்லை.

4. வெகுஜன ஊடகம் என்பது

(அ) வானொலி

(ஆ) தொலைக்காட்சி

(இ) அ மற்றும் ஆ

(ஈ) இவற்றில் எதுவுமில்லை

5. ஊடகம் ஏன் சுதந்திரமாக செயல்பட வேண்டும்

(அ) நிறைய பணம் ஈட்ட

(ஆ) நிறுவனத்தை ஊக்கப்படுத்த

(இ) நடுநிலையான தகவலை தருவதற்கு

(ஈ) இவற்றில் எதுவுமில்லை.

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. உலகத்தினை சிறியதாகவும், மிக அருகாமையிலும் கொண்டு வந்தது ———-

2. ஒவ்வொரு தனிமனிதனும் ———– ஆகும்.

3. அச்சு இயந்திரம் ———— என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது

4. நமது வாழ்க்கையை தீர்மானிக்கும் மதிப்பீடகளின் தொகுப்பு ———- ஆகும்.

5. இந்திய அரசின் வானொலி ஒலிபரப்பு நிறுவனம் ————

III. பொருத்துக:

1. குறு அளவிலான ஊடகம் – அ) கூகுள் இணையம்

2. சமூக ஊடகம் – ஆ) சுவரொட்டிகள்

3. அச்சு ஊடகம் – இ) கருத்தரங்கு

4. இணைய ஊடகம் – ஈ) திரைப்படங்கள்

5. ஒலிபரப்பு ஊடகம் முகநூல்

IV. பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

1. கூற்று: அச்சு ஊடகம் மக்களின் பல்கலைக்கழகம் என கருதப்படுகிறது.

காரணம்: பொதுமக்களுக்கு தகவல்களை வழங்குவதிலும், கல்வியறிவு ஊட்டுவதிலும் பெரும்பங்கு வகிக்கிறது மற்றும் பொது மக்களின் பாதுகாவலனாகவும் செயல்படுகிறது.

(அ) கூற்று சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.

(ஆ) கூற்று சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல

(இ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி

(ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.

2. தவறான வாக்கியத்தை திருத்தி எழுதுக:

(அ) செய்தித்தாள்கள் (ஆ) நாளிதழ்கள் (இ) கீச்சகம் (ஈ) சுவரொட்டிகள்

3. பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

(அ) ஊடகம் என்பது பொதுவாக ஒருவருக்கொருவர் தகவல்களை பகிர்ந்து கொள்ளும் சாதனம் ஆகும்.

(ஆ) ஊடகம் மிகவும் சக்திவாய்ந்த நிறுவனமாகும்.

(இ) ஊடகம் மக்களிடம் பொது கருத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

(ஈ) ஊடகத்திற்கு எந்த பொறுப்பும் கிடையாது

i) அ, ஆ மற்றும் இ சரி

ii) அ, ஆ மற்றும் ஈ சரி

iii) ஆ, இ மற்றும் சரி

iv) அ, ஆ மற்றும் ஈ சரி

விடைகள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. செய்தித்தாள், 2. வானொலி, 3. தொலைப்பேசி, 4. அ மற்றும் ஆ, 5. நடுநிலையான தகவலை தருவதற்கு

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. ஊடகம், 2. ஊடகத்தின் வெளிப்பாடு, 3. ஜோஷன்னஸ் குட்டன்பெர்க், 4. நெறிமுறை, 5. ஆகாசவானி

III. பொருத்துக:

1. 1. இ, 2. உ, 3. ஆ, 4. அ, 5. ஈ

IV. பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

1. கூற்று சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும், 2. கீச்சகம், 3. அ, ஆ மற்றும் இ சரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!