Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Book Back QuestionsTnpsc

ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் Book Back Questions 9th Science Lesson 21

9th Science Lesson 21

21] ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

டாக்டர் ஃபன்க் என்பவரால் வைட்டமின் என்ற வார்த்தை அறிமுகப்படுத்தப்பட்டது. வைட்டமின் Aக்கு ஆங்கில எழுத்தின் முதல் எழுத்தான A கொடுக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட வைட்டமின் இதுவாகும்.

மனிதனின் தோலால் வைட்டமின் Dஐ உருவாக்க முடியும். மனிதனின் தோலின் மீது சூரியக்கதிர்கள் விழும்போது (குறிப்பாக அதிகாலையில்) வைட்டமின் D உருவாக்கப்படுகின்றது. சூரியக் கதிர்கள் தோலின் மேல் விழும்போது டிஹைடிரோ கொலஸ்ட்ரால் எனும் பொருள் வைட்டமின் D ஆக மாறுகிறது. எனவே, வைட்டமின் D “சூரிய ஒளி வைட்டமின்” என்று அழைக்கப்படுகிறது. வைட்டமின் D கால்சியம் உறிஞ்சுதலுக்கு உதவுவதன் மூலம் எலும்பின் பலத்தை அதிகப்படுத்துகிறது.

வாழைப்பழத்தை அறை வெப்ப நிலையில் கெட்டுப்போகாமல் நீண்ட நாட்கள் பாதுகாக்கலாம். ஆனால், அதனை குளிர் சாதனப்பெட்டியில் வைத்தால், பழுக்கச் செய்வதற்குத் தேவைப்படும் நொதியானது செயலிழந்து விடுகிறது. மேலும், செல்களை அழத்து பழுப்பு நிறத்தை உருவாக்கக் காரணமான நொதியானது அதிகம் செயல்பட்டு, அதனால் பழத்தின் தோல் மஞ்சள் நிறத்திலிருந்து இருண்ட பழுப்பு நிறத்திற்கு மாறுகிறது.

அக்டோபர் 16ம் தேதி உலக உணவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. அன்று, உணவுப் பாதுகாப்பு மற்றும் உணவு கெட்டுப் போவதைத் தடுத்தல் வலியுறுத்தப்படுகிறது.

உணவுப் பாதுகாத்தலை ஊக்குவிப்பதற்காகவும் அதன் முன்னேற்றத்திற்காகவும் 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7ஆம் தேதி “உலக சுகாதார தினத்தன்று” “பண்ணை முதல் உண்ணும் வரை பாதுகாத்திடுவீர் உணவை” என்ற முழக்கம் எழுப்பப்பட்டது.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. மனித உடலின் சில தேவைகளைப் பூர்த்தி செய்ய குறைந்த அளவே (மைக்ரோ) தேவைப்படும் ஊட்டச்சத்து

(அ) கார்போஹைட்ரேட்

(ஆ) புரோட்டீன்

(இ) வைட்டமின்

(ஈ) கொழுப்பு

2. சிட்ரஸ் வகை பழங்களை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ‘ஸ்கர்வி’ நோயைக் குணப்படுத்த முடியும் என்று கூறியவர்.

(அ) ஜேம்ஸ் லிண்ட்

(ஆ) லூயிஸ் பாஸ்டர்

(இ) சார்லஸ் டார்வின்

(ஈ) ஐசக் நீயூட்டன்

3. வெங்காயம், உருளைக்கிழங்கு போன்றவை முளை கட்டுவதைத் தடுக்கும் முறை.

(அ) அதிக குளிர் நிலையில் பாதுகாத்தல்

(ஆ) கதிர் வீச்சு முறை

(இ) உப்பினைச் சேர்த்தல்

(ஈ) கலன்களில் அடைத்தல்

4. மத்திய அரசின் உணவு மற்றும் உணவுக் கலப்படச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு.

(அ) 1964

(ஆ) 1954

(இ) 1950

(ஈ) 1963

5. உணவு கெட்டுப்போவதற்குக் காரணமாக உள்காரணியாகச் செயல்படுவது.

(அ) மெழுகுப் பூச்சு

(ஆ) சுகாதாரமற்ற சமையல் பாத்திரங்கள்

(இ) உணவின் ஈரத்தன்மை

(ஈ) செயற்கை உணவுப் பாதுகாப்புப் பொருட்கள்

கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. உணவில் __________ எடுத்துக்கொள்வதன் மூலம் குறைபாட்டு நோய்களைத் தடுக்க முடியும்.

2. உணவுப் பொருட்களின் இயல்பான தன்மை மற்றும் அதன் தரத்தைப் பாதிக்கக்கூடிய செயல்பாடு ___________ என்று அழைக்கப்படுகிறது.

3. சூரிய வெளிச்சத்தின் மூலம் உடலில் வைட்டமின் D உற்பத்தியாவதால் இதற்கு __________ வைட்டமின் என்று பெயர்.

4. நீரை வெளியேற்றுதல் முறையில் அடிப்படைக் கொள்கையானது ___________ நீக்குவதாகும்.

5. உணவுப்பொருள்களை அவற்றின் ____________ தேதி முடிந்த நிலையில் வாங்கக்கூடாது.

6. இந்தியாவில் தயாரிக்கப்படும் ___________ மற்றும் ___________ பொருட்களுக்கு அக்மார்க் தரக் குறியீடு சான்றிதழ் பெற வேண்டும்.

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: தவறான வாக்கியத்தை திருத்தி எழுதுக:

1. தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டிற்கு இரும்புச்சத்து தேவைப்படுகிறது.

2. மனித உடலின் இயல்பான செயல்பாட்டிற்கு வைட்டமின் பெருமளவில் தேவைப்படுகின்றது.

3. வைட்டமின் C நீரில் கரையக்கூடியது.

4. உணவில் கொழுப்புச்சத்து போதுமான அளவில் இல்லையென்றால் உடல் எடைக் குறைவு ஏற்படும்.

5. வேளாண் உற்பத்திப் பொருள்களுக்கு ISI முத்திரை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பொருத்துக:

1. கால்சியம் – தசைச்சோர்வு

2. சோடியம் – இரத்த சோகை

3. பொட்டாசியம் – ஆஸ்டியோ போரோசிஸ்

4. இரும்பு – முன் கழுத்துக் கழலை

5. அயோடின் – தசைப்பிடிப்புகள்

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

(அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. காரணம் கூற்றின் சரியான விளக்கம்

(ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல

(இ) கூற்று சரி. காரணம் தவறு

(ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.

1. கூற்று: ஹீமோகுளோபினில் இரும்பு உள்ளது.

காரணம்: இரும்புக் குறைபாடு இரத்த சோகை நோயை ஏற்படுத்துகிறது.

2. கூற்று: அக்மார்க் என்பது ஒரு தரக் கட்டுப்பாட்டு நிறுவனம்.

காரணம்: ஐஎஸ்ஐ என்பது தரத்தின் குறியீடு.

விரிவாக்கம் தருக:

1. ISI 2. FPO 3. AGMARK 4. FCI 5. FSSAI

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)

1. வைட்டமின்கள் 2. ஜேம்ஸ் லிண்ட் 3. கதிர் வீச்சு முறை 4. (1954) 5. உணவின் ஈரத்தன்மை

கோடிட்ட இடங்களை நிரப்புக: (விடைகள்)

1. சரிவிகித உணவு 2. உணவு கலப்படம் 3. சூரிய 4. நீரை 5. காலவதி 6. விவசாயம் மற்றும் கால்நடை

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: (தவறான வாக்கியத்தை திருத்தி எழுதுக)

1. தவறு

சரியான விடை: தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டிற்கு அயோடின் சத்து தேவைப்படுகிறது.

2. தவறு

சரியான விடை: மனித உடலின் இயல்பான செயல்பாட்டிற்கு வைட்டமின் சிறிய அளவில் தேவைப்படுகின்றன.

3. சரி

4. சரி

5. தவறு

சரியான விடை: தொழிற்சாலை உற்பத்தி பொருள்களுக்கு ஐளi முத்திரை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பொருத்துக:

1. கால்சியம் – ஆஸ்டிரியோ போரோசிஸ்

2. சோடியம் – தசைப்பிடிப்புகள்

3. பொட்டாசியம் – தசைச்சோர்வு

4. இரும்பு – இரத்த சோகை

5. அயோடின் – முன் கழுத்துக் கழலை

பின்வரும் கூற்றினை ஆராய்ந்த சரியானவற்றை தேர்வு செய்க:

1. கூற்றும் மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. காரணம் கூற்றின் சரியான விளக்கம் எல்ல.

2. கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு

விரிவாக்கம்:

1. ISI – Indian Standards Institution (இந்திய தரக்கட்டுப்பாட்டு நிறுவனம்)

2. FPO – Fruit Process Order (கனி உற்பத்திப் பொருள்கள் ஆணை)

3. AGMARK – Agricultural Marking (வேளாண் பொருட்களுக்கான தரக்குறியீடு)

4. FCI – Food Corporation of India (இந்திய உணவுக் கழகம்)

5. FSSAI – Food Safety and Standards Authority of India (இந்திய உணவுப் பொருள் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம்).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!