Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
MCQ Questions

ஐரோப்பியரின் வருகை 11th History Lesson 11 Questions in Tamil

11th History Lesson 11 Questions in Tamil

11] ஐரோப்பியரின் வருகை

1) பிளாசி போர் நடைபெற்ற ஆண்டு எது?

A) 1751

B) 1753

C) 1755

D) 1757

(குறிப்பு – 1757ஆம் ஆண்டு நடைபெற்ற பிளாசிப் போரில் வங்காள நவாப்பை ஆங்கிலேயர்கள் வெற்றி கொண்டனர். அந்த ஆண்டை இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியின் தொடக்கம் என்று வரையறுப்பது மரபு.)

2) இந்தியாவிற்கு முதல் முதலில் வருகை தந்த ஐரோப்பியர் யார்?

A) ஆங்கிலேயர்கள்

B) டச்சுக்காரர்கள்

C) போர்த்துகீசியர்

D) பிரஞ்சுக்காரர்கள்

(குறிப்பு – 14ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு வந்து விட்டனர். அவர்களின் நோக்கம் இந்தியப்பெருங்கடல் பகுதியில் வணிகத்தில் ஈடுபடுவதாகும்)

3) நன்னம்பிக்கை முனை எங்கு அமைந்துள்ளது?

A) ஆப்பிரிக்கா

B) இந்திய பெருங்கடல்

C) ஐரோப்பா

D) பசிபிக் பெருங்கடல்

(குறிப்பு – நன்னம்பிக்கை முனை ஆப்பிரிக்காவின் தெற்கு அட்லாண்டிக் கடல் பகுதியில் அமைந்துள்ளது.)

4) போர்த்துக்கீசியர் கோவாவை கைப்பற்றிய ஆண்டு எது?

A) 1500

B) 1505

C) 1510

D) 1515

(குறிப்பு – பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதியில் ஐரோப்பாவிலிருந்து ஆப்பிரிக்காவின் நன்னம்பிக்கைமுனை வழியே இந்தியாவிற்கு நேரடி கடல் வழியை கண்டு பிடித்தவர் வாஸ்கோடகாமா ஆவார். பிறகு மேற்கு கடற்கரைப் பகுதியில் போர்த்துக்கீசியர் கோவாவை 1510ஆம் ஆண்டு கைப்பற்றினர்)

5) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – பதினைந்தாம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவின் போர்த்துக்கீசியர் இந்தியாவிற்கு வந்தனர்.

கூற்று 2 – பதினாறாம் நூற்றாண்டில் ஆங்கிலேயரும், டச்சுக்காரரும் இந்தியாவிற்கு வருகை புரிந்தனர்.

கூற்று 3 – 1755ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் வங்காளத்தை கைப்பற்றினர்.

A) கூற்று 1, 2 மட்டும் சரி

B) கூற்று 2, 3 மட்டும் சரி

C) கூற்று 1, 3 மட்டும் சரி

D) எல்லா கூற்றுகளும் சரி

(குறிப்பு – போர்த்துக்கீசியர்களுக்குப் பிறகு இந்தியாவிற்கு வந்த ஐரோப்பியர் குறிப்பாக ஆங்கிலேயரும் டச்சுக்காரரும் தங்கள் நடவடிக்கைகளை போர்த்துக்கீசியரின் செயல்திட்டங்களை ஒன் மாதிரியாகக் கொண்டு வடிவமைத்து கொண்டனர்)

6) மேற்கு ஆசியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் நுழைவுவாயிலாகவும், மதிப்பு மிக்க வளங்களைக் கொண்ட துறைமுகமாகவும் இருந்தது எது?

A) பம்பாய்

B) சூரத்

C) கொச்சின்

D) கோழிக்கோடு

(குறிப்பு – மேற்கு ஆசியாவிற்கும், ஐரோப்பாவிற்கும் நுழைவாயிலாக இருந்த மதிப்புமிக்க வளங்களைக் கொண்ட துறைமுகமான சூரத் பதினாறாம் நூற்றாண்டுகளில் முகலாயரின் செல்வாக்கிற்கு உள்ளானது.)

7) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – 16ம் நூற்றாண்டுகளில் மெக்காவிற்கு புனிதப்பயணம் மேற்கொள்ளும் பயணிகளை ஏற்றிச் செல்லும் கப்பல்கள் சூரத்தில் இருந்து புறப்பட்டு சென்றன.

கூற்று 2 – முகலாய அரசு சூரத் நகரத்திற்கு 2 ஆளுநர்களை நியமித்து இருந்தது.

A) கூற்று 1 மட்டும் சரி

B) கூற்று 2 மட்டும் சரி

C) இரண்டு கூற்றுகளும் சரி

D) இரண்டு கூற்றுகளும் தவறு

(குறிப்பு – சூரத் நகரில் ஒரு ஆளுநர் நகரை பாதுகாப்பதற்காக தபதி நதியின் அருகே கட்டப்பட்டிருந்த கண்காணிப்பு கோபுரங்களுடன் கூடிய காவலரணில் பணி அமர்த்தப்பட்டு இருந்தார். இன்னொரு ஆளுனர் நகரம் தொடர்பான நிர்வாகத்திற்கும் சுங்கவரியை வசூலிப்பதற்கு பொறுப்பாவார்)

8) எந்த முகலாய அரசர்கள் காலத்தில் வங்காளம் முகலாயப் பேரரசின் மாகாணங்களில் ஒன்றாயிற்று?

A) அக்பர்

B) ஜஹாங்கீர்

C) ஷாஜகான்

D) அவுரங்கசீப்

(குறிப்பு – ஜஹாங்கீர் காலத்தில்தான் வங்காளம் முகலாய பேரரசின் மாகாணங்களில் (சுபா) ஒன்றாயிற்று. அதற்கு முன்னர் 30 ஆண்டுகளுக்கு வங்காளம் முகலாயப் பேரரசு ஒருங்கிணைக்கப்படாத பகுதியாகவே இருந்தது)

9) முகலாயகளிடமிருந்து பம்பாய் தீவை ஆங்கிலேயர்கள் பெற்ற ஆண்டு எது?

A) 1662

B) 1664

C) 1666

D) 1668

(குறிப்பு – 1668ஆம் ஆண்டு பம்பாய் தீர்வுகளை பெற்று அங்கு தங்கள் தலைமை இடத்தை ஆங்கிலேயர்கள் 1687இல் அமைத்தனர். அவர்களின் அடிப்படை நோக்கமானது தங்களது வணிக நடவடிக்கைகளுக்கு பம்பாயை சூரத் நகரத்திற்கு மாற்று இடமாக உருவாக்குவதுதான்)

10) விஜயநகர ஆட்சியின் போது தமிழக பகுதிகளில் கீழ்காணும் எந்த இடத்தில் நாயக்க அரசு நிறுவப்படவில்லை?

A) மதுரை

B) தஞ்சாவூர்

C) செஞ்சி

D) ராமநாதபுரம்

(குறிப்பு – விஜயநகர ஆட்சியின் போது தமிழக பகுதிகளில் மதுரை, தஞ்சாவூர், செஞ்சி ஆகிய மூன்று நாயக்க அரசுகள் நிறுவப்பட்டன. இவை நிறுவப்பட்டதன் நோக்கமே மைய அரசுக்கு தேவைப்படும் நிதி ஆதாரங்களையும் ராணுவ வீரர்களையும் திரட்டி கொடுப்பதுதான்)

11) தலைக்கோட்டை போர் நிகழ்ந்த ஆண்டு எது?

A) 1560 இல்

B) 1563 இல்

C) 1565 இல்

D) 1567 இல்

(குறிப்பு – 1565இல் நடைபெற்ற தலைக்கோட்டைப் போரில் அகமது நகர், பிஜபூர், கோல்கொண்டா ஆகிய சுல்தானிய கூட்டுப்படைகளால் விஜயநகர அரசு தோற்கடிக்கப்பட்டதை தொடர்ந்து முன்னர் ஆதிக்கம் செய்த மைய அரசு வலிமை குன்றியது)

12) 1646ஆம் ஆண்டு சோழமண்டல பகுதிகளும் ஊடுருவிய சுல்தானிய படை எது?

A) அகமது நகர்

B) பிஜபூர்

C) கோல்கொண்டா

D) ஹைதராபாத்

(குறிப்பு – 1646இல் சோழமண்டல பகுதிகளை ஊடுருவிய கோல்கொண்டாவின் படைகள் பழவேற்காட்டிற்கும் சாந்தோமிற்கும் இடைப்பட்ட பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டன.)

13) செஞ்சி நாயக்கரிடம் இருந்து பழவேற்காடு பகுதியை பெற்ற ஐரோப்பியர் யார்?

A) ஆங்கிலேயர்கள்

B) பிரஞ்சுக்காரர்கள்

C) டச்சுக்காரர்கள்

D) போர்த்துக்கீசியர்கள்

(குறிப்பு – நறுமணப் பொருட்களை உற்பத்தி செய்யும் இந்தோனேசியத் தீவுகள் உடனான வணிகத்திற்கு தேவைப்படும் சில்லறை பொருட்களை கொள்முதல் செய்ய தங்களுக்கு சோழமண்டல கடற்கரையில் வணிகத்தளம் தேவை என்பதை டச்சுக்காரர்கள் உணர்ந்தனர். செஞ்சி நாயக்கரிடம் இருந்து பழவேற்காடு பகுதியை அவர்கள் பெற்றனர்)

14) 1639ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் புனித ஜார்ஜ் கோட்டை கட்ட இடம் தந்தவர் யார்?

A) வேங்கடசாமி நாயக்கர்

B) கமலா வேங்கடாத்ரி நாயக்கர்

C) லட்சுமிபதி நாயக்கர்

D) சீனுசாமி நாயக்கர்

(குறிப்பு – கமலா வேங்கடாத்ரி நாயக்கர் என்பவரிடமிருந்து இடத்தை பெற்ற ஆங்கிலேயர்கள் 1639 ஆம் ஆண்டு புனித ஜார்ஜ் கோட்டையை கட்டினர். இவ்வாறாக ஆங்கிலேய வணிகத் தளங்கள் சென்னையில் நிறுவப்பட்டு காலப்போக்கில் வளர்ந்து மதராஸ் அதன் மாகாண தலைநகரம் ஆனது)

15) 1680களில் முகலாயர்களால் கைப்பற்றப்பட்ட இடங்கள் எது?

A) அகமது நகர்

B) பீஜப்பூர்

C) கோல்கொண்டா

D) இவை அனைத்தும்

(குறிப்பு – பேரரசர் அவுரங்கசீப் தெற்கே தக்காண பகுதி வரை தனது பேரரசை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற பெரும் விருப்புடன் செயல்பாடுகளை தொடங்கினார். 1680 களில் அகமது நகர், பிஜபூர் மற்றும் கோல்கொண்டா ஆகிய அரசுகள் கைப்பற்றப்பட்டன)

16) மராத்தியர்கள் முகலாயர்களின் வசமிருந்த சூரத் நகரை எந்த ஆண்டு தாக்கினர்?

A) 1660 இல்

B) 1662 இல்

C) 1664 இல்

D) 1666 இல்

(குறிப்பு – 1664இல் மராத்தியர்கள் சூரத்தை தாக்கியபோது முகலாயர்களின் பலவீனம் தெரிந்தது.1664இல் சூரத் நகரை சூரையாடுவது கடைசி நேரத்தில் தவிர்க்கப்பட்டது. ஆனால் 1670 இல் மராத்தியரால் சூரத்தும் அதன் வணிகமும் சூறையாடப்பட்ட போது ஏற்பட்ட அழிவுகளில் இருந்து மீள்வதற்கு பல ஆண்டுகள் ஆகின)

17) 1670இல் மராத்தியர்களின் சூரத் தாக்குதலுக்கு பிறகு சிவாஜி கீழ்க்காணும் எந்த நாயக்க அரசுகளை தோற்கடித்தார்?

I. செஞ்சி

II. தஞ்சாவூர்

III. மதுரை

A) I, II மட்டும்

B) II, III மட்டும்

C) I, III மட்டும்

D) இவை அனைத்தும்

(குறிப்பு – சூரத் தாக்குதலுக்கு பின்னர் சிவாஜி தனது கவனத்தை தென்னிந்தியாவை நோக்கி திருப்பி செஞ்சி தஞ்சாவூர் நாயக்க அரசுகளை தோற்கடித்தார். சில ஆண்டுகளுக்குப் பின்னர் செஞ்சி முகலாயரால் மீண்டும் கைப்பற்றப்பட்டது)

18) தென்னிந்தியாவில் மராத்தியரால் ஆளப்படும் அரசின் தலைநகரமாக நீடித்தது எது?

A) செஞ்சி

B) மதுரை

C) தஞ்சாவூர்

D) புதுக்கோட்டை

(குறிப்பு – தமிழரின் அறிவார்ந்த கலாச்சார பாரம்பரியங்களை உள்வாங்கி ஏற்கும் கொள்கையால் தமிழக பகுதியின் பண்பாட்டுத் தலைநகராக தஞ்சாவூரை மராத்தியர்கள் மாற்றினர்)

19) முகலாயப் பேரரசரான அவுரங்கசீப் எந்த ஆண்டு இயற்கை எய்தினார்?

A) 1701ஆம் ஆண்டு

B) 1703ஆம் ஆண்டு

C) 1705ஆம் ஆண்டு

D) 1707ஆம் ஆண்டு

(குறிப்பு – மாபெரும் முகலாய அரசர்களின் கடைசி அரசரான அவுரங்கசீப் 1707 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். அவத், வங்காளம், ஹைதராபாத், கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து முகலாய அரச பிரதிநிதிகள் தங்களை சுதந்திரமான ஆட்சியாளராக அறிவித்துக் கொண்டனர்)

19) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – வங்காள கர்நாடக நவாப்புகள் பெருமளவிலான பணத்தை ஆங்கிலேயரிடம் இருந்து கடனாக பெற்றனர்.

கூற்று 2 – கடன் பெற்ற தொகையை திருப்பி செலுத்தும் ஒரு வழியாக தங்களின் பரந்த நிலப் பகுதிகளில் நில வரியை வசூல் செய்து கொள்ளும் உரிமையை ஆங்கிலேயருக்கு வழங்கினர்.

கூற்று 3 – கர்நாடகம் என்பது பதினெட்டாம் நூற்றாண்டில் தற்போதைய தமிழ்நாடு, கர்நாடகா, தெற்கு ஆந்திரப் பிரதேசம் ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதியாக இருந்தது)

A) கூற்று 1, 2 மட்டும் சரி

B) கூற்று 2, 3 மட்டும் சரி

C) கூற்று 1, 3 மட்டும் சரி

D) எல்லா கூற்றுகளும் சரி

(குறிப்பு – பதினெட்டாம் நூற்றாண்டில் மேற்கு தொடர்ச்சி மலைக்கும் கிழக்குத் தொடர்ச்சி மலைக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ள இன்றைய இந்திய மாநிலங்களான தமிழ்நாடு கர்நாடகா மற்றும் தெற்கு ஆந்திரப் பிரதேசம் ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதி கர்நாடகம் என்று அழைக்கப்பட்டது. இப்பகுதிகளை ஆற்காட்டு நவாப் கட்டுப்படுத்தினார்)

20) 1750ஆம் ஆண்டு சூரத் நகரின் உள்ளூர் வணிகர்கள் தங்கள் பாதுகாப்பு கருதி தாங்கள் யாருடைய “பாதுகாப்பின் கீழ்” இருப்பதாக அறிவித்துக் கொண்டனர்?

I. ஆங்கிலேயர்கள்.

II. டச்சுக்காரர்கள்

III. போர்ச்சுகீசியர்கள்

IV. முகலாயர்கள்

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) IV மட்டும் சரி

D) I மட்டும் சரி

(குறிப்பு – 1700களில் டச்சுக்காரர்கள் பழவேற்காட்டில் இருந்து வெளியேறி தங்களின் தலைநகரை நாகப்பட்டினத்திற்கு மாற்றி இருந்தனர். சூரத் நகரின் உள்ளூர் வணிகர்கள் தங்கள் பாதுகாப்பு கருதி தாங்கள் டச்சுக்காரரின் அல்லது ஆங்கிலேயரின் பாதுகாப்பின் கீழ் இருப்பதாக 1750 ஆம் ஆண்டில் அறிவித்துக் கொண்டனர் எனவே உறுதியற்ற அரசியல் சூழலால் சூரத் நகரம் அல்லலுற்றது)

21) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. 1700 களில் தமிழகம் உணவு தானியங்களை ஆந்திரப் பிரதேசத்தில் இருந்தும் வங்காளத்தில் இருந்தும் இறக்குமதி செய்தது.

II. குஜராத் மேற்கு கடற்கரை பகுதிகளில் மிளகு, லவங்கம், இஞ்சி ஆகியவற்றுக்குப் பதிலாக உணவு தானியங்களை மலபார் பகுதிக்கு ஏற்றுமதி செய்தது.

III. இலங்கையிலும், பட்டாவியாவிலும்(இந்தோனேஷியா) திரும்ப டச்சு குடியேற்றங்களுக்கும் உணவு தானியங்கள் அனுப்பப்பட்டன.

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, III மட்டும் சரி

D) எல்லா கூற்றுகளும் சரி

(குறிப்பு – 1700 களில் உணவு தானிய பயிர்களுடன், கூடுதலாக கரும்பு, எண்ணெய் வித்துக்கள், பருத்தி, அவுரி முதலிட்ட வணிகப் பயிர்களும் பயிர் செய்யப்பட்டன. இந்தியாவிற்குள் உபரியான பகுதிகளிலிருந்து பற்றாக்குறை பகுதிகளுக்கு உணவு தானியங்கள், நெய், சர்க்கரை முதலான உணவுப் பண்டங்களை கொண்டு சென்றதன் மூலம் விறுவிறுப்பாக வணிகம் நடந்தது)

22) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. நெசவுத்தொழில் பெரும்பாலும் கிராமங்களில் மேற்கொள்ளப்பட்டது.

II. படிகாரம் போன்ற வேதியல் பொருட்களைப் பயன்படுத்தி நிரந்தர வண்ணங்களை தயாரித்து துணிகளுக்கு சாயமிடுவதில் இந்திய கைவினை சமூகங்கள் சிறப்பான அறிவையும், நிபுணத்துவத்தையும் பெற்று இருந்தன.

III. நெசவுத்தொழில் நாட்டின் இரண்டாவது முக்கியமான பொருளாதார நடவடிக்கையாக இருந்தது.

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, III மட்டும் சரி

D) எல்லா கூற்றுகளும் சரி

(குறிப்பு – நூல் நூற்றலும், சாயத் தொழிலும் நெசவுத் தொழிலின் ஆதாரத்துறை நடவடிக்கைகளாக இருந்தன. கைவினை பொருள் உற்பத்தி நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறம் என இரண்டிலும் நடைபெற்றது.)

23) கலம்காரி எனப்படும் துணி வகைக்கு பெயர் பெற்று விளங்கிய இடம் எது?

A) சோழமண்டலம்

B) சேர மண்டலம்

C) தக்காணம்

D) இது எதுவும் அல்ல

(குறிப்பு – சோழமண்டல பகுதி வண்ணம் பூசப்பட்ட கலம்காரி எனப்படும் துணி வகைக்கு பெயர் பெற்றதாகும். இவ்வகை துணியில் அலங்கார கோடுகள் அல்லது வடிவங்களும் முதலில் வரையப்பட்டு பின்னர் சாயம் ஏற்றப் படும். இது பதினாறாம் நூற்றாண்டில் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் குறிப்பாக இந்தோனேசியத் தீவுகளில் வாழும் மக்கள் விரும்பி வாங்கும் நுகர்வு பொருளாக விளங்கியது)

24) பதினெட்டாம் நூற்றாண்டில் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலிருந்தும் ஏனைய உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பொருள்களுள் மிக முக்கியமானவை கீழ்க்கண்டவற்றுள் எது?

A) துணி

B) சணல்

C) பருத்தி

D) சாயம்

(குறிப்பு – இந்தியாவின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் ஏனைய உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களில் மிக முக்கியமானவை துணிகளேஆகும். சோழ மண்டலப் பகுதி வண்ணம் பூசப்பட்ட கலம்காரி எனப்படும் துணி வகைகள் பெயர் பெற்றதாகும். இது தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மக்கள் மிகவும் விரும்பி வாங்கும் நுகர்வு பொருளாக விளங்கியது.)

25) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – பல்வேறு நிலைகளில் செயல்பட்ட பல்வகைப்பட்ட சந்தைகளை போலவே வணிகர்களும் ஒரே வகைப்பட்ட குழுவை சார்ந்தவர்கள் அல்ல.

கூற்று 2 – சிறிய இடங்களில் இருந்த சந்தைகளுக்கு சேவை செய்ய வியாபாரிகளும் சில்லறை வர்த்தகர்களும் இருந்தனர்.

கூற்று 3 – வணிக நடவடிக்கைகளை ஒரு பிரமிடாக நாம் கற்பனை செய்துகொண்டால், பிரமிடின் உச்சத்தில் பெரும் வணிகர்கள் இருந்தனர்.

A) கூற்று 1, 2 மட்டும் சரி

B) கூற்று 2, 3 மட்டும் சரி

C) கூற்று 1, 3 மட்டும் சரி

D) எல்லா கூற்றுகளும் சரி

(குறிப்பு – பெரும் வர்த்தகர்கள் பெருமளவிலான மூலதனத்தை கையிருப்பாக கொண்ட இவர்களே கடல் வணிகத்தை முன்நின்று இயக்கியதோடு, துறைமுகங்களின் கடலோரப் பகுதியை சேர்ந்த உற்பத்தியாளர்களையும் கட்டுப்படுத்தினர். இவர்கள் தங்களின் கீழ் தரகர் களையும் துணைத் அரக்கர்களையும் பணியமர்த்தி உள்நாட்டுப் பகுதிகளிலும் துறைமுக நகரங்களில் உள் பகுதியிலோ உற்பத்தியாகும் பொருட்களை கொள்முதல் செய்தனர்)

26) 16 மற்றும் 17 ஆம் நூற்றாண்டுகளில் நாணயங்களின் தூய்மை நிலையை பரிசோதிக்கவும் அவற்றின் மதிப்பை அன்றைய அளவில் மதிப்பிடவும் நியமிக்கப்பட்டிருந்தவர்களின் பெயர் என்ன?

A) திவான்

B) நிதி ராஜ்

C) சராப்

D) இவர்கள் யாரும் அல்ல

(குறிப்பு – பரந்து விரிந்த வணிகத்தை மேம்படுத்த வணிக நிறுவனங்களும் நன்கு வளர்ந்திருந்தன. பல்வகைப்பட்ட நாணயங்கள் புழக்கத்தில் இருந்ததினால் அவற்றின் தூய்மை நிலையை பரிசோதிக்கவும் அவற்றின் மதிப்பை அன்றைய அளவில் மதிப்பிடவும் சராப் எனப்பட்ட பணம் மாற்றுவோரும் இருந்தனர்)

28) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. சென்னை மாகாணப் பகுதிகளில் 1628 முதல் 1750 ஆம் ஆண்டுகளிடையே 10 பஞ்சங்கள் ஏற்பட்டன. சில சமயங்களில் அவை பரந்து விரிந்தனவாகவும் பல ஆண்டுகளுக்கு நீடித்தும் இருந்தன.

II. பஞ்சங்களினால் கிராமப்புற ஏழை மக்கள் தங்களை அடிமைகளாக விற்றுக் கொள்ளும் அளவிற்கு அவர்களை தள்ளியது.

III. சோழ மண்டல பகுதிகளில் இருந்து படவியாவிற்கு அனுப்பப்பட்ட சரக்குகளுடன் வழக்கமாக அனுப்பப்பட்ட ஆண் பெண் அடிமைகளின் பெயர்கள் டச்சு ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, III மட்டும் சரி

D) எல்லா கூற்றுகளும் சரி

(குறிப்பு – ஆங்கிலேயர் நடுவுநிலைமை தவறி சார்பு தன்மையுடன் இருந்தார்கள் என்று நினைத்தாலும், பிறருடைய கருத்துகளை எடுத்துக் கொள்ளாமல் முழுமையான அளவுகோல்களைக் கொண்டு கணித்தாலும் அடிப்படை தொழிலாளர்களின் ஊதியமும் வாழ்க்கை தரமும் இந்நிலையில் இருந்தது என்பது உண்மை.)

29) ஆங்கிலேயர் காலத்தில் நடைபெற்ற கடல் கடந்து வணிகம் பற்றிய கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – மேற்கு கடற்கரையில் உள்ள கள்ளிக்கோட்டை அல்லது குஜராத்தில் உள்ள சூரத் துறைமுகங்கள் இடைநிலை துறைமுகங்கள் என்றழைக்கப்பட்டன.

கூற்று 2 – 16ஆம் நூற்றாண்டில் கள்ளிக்கோட்டை மதிப்பிழந்தது. அதற்கு மாற்றாக கடலோரப் பகுதிகளை கொண்ட குஜராத் துறைமுகங்கள் முக்கியத்துவம் பெற்றன.

A) கூற்று 1 மட்டும் சரி

B) கூற்று 2 மட்டும் சரி

C) இரண்டு கூற்றுகளும் சரி

D) இரண்டு கூற்றுகளும் தவறு

(குறிப்பு – சோழமண்டல கடற்கரையில் துறைமுகங்களான மசூலிப்பட்டினம், பழவேற்காடு ஆகியவையும் அவற்றுக்கு தெற்கே உள்ள ஏனைய துறைமுகங்களும் பர்மா, மலாய் தீபகற்பத்தில் இருந்துவரும் கப்பல்களுக்கு இடைநிலை துறைமுகங்களாக சேவை செய்தன)

30) இந்தியாவிற்கு வருகை தந்த முதல் ஐரோப்பியர் யார்?

A) வாஸ்கோடகாமா

B) அல்புகார்க்

C) அல்மெய்டா

D) இவர்கள் யாரும் அல்ல

(குறிப்பு – தனது முதல் பயணத்தில் வாஸ்கோடகாமா மூன்று கப்பல்களில் 120 நபர்களோடு இந்தியாவிற்கு வந்தார். ஐரோப்பாவிலிருந்து ஆப்பிரிக்காவின் நன்னம்பிக்கை முனை வழியே இந்தியாவிற்கு நேரடி கடல் வழியை கண்டு பிடித்தவர் வாஸ்கோடகாமா ஆவார்)

31) வாஸ்கோடகாமா எந்த நாளில் இந்தியாவில் இருந்து இந்திய சரக்குகளுடன் போர்த்துகீசிய நாட்டிற்கு திரும்பினார்?

A) 1498, ஆகஸ்ட் 20ஆம் நாள்

B) 1498, ஆகஸ்ட் 23ஆம் நாள்

C) 1498, ஆகஸ்ட் 26ஆம் நாள்

D) 1498, ஆகஸ்ட் 29ஆம் நாள்

(குறிப்பு – 1498ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 29ஆம் நாள் தன்னுடன் வந்தவர்களில் உயிரோடு இருந்த 55 மாலுமிகளுடனும், மூன்றில் இரண்டு கப்பல்களில் இந்திய சரக்குகளுடனும் ஊர்திரும்பும் பயணத்தை மேற்கொண்டார்)

32) வாஸ்கோடகாமாவின் முதல் பயணத்தின் போது அவருக்கு யாருடைய நட்பு கிடைத்தது?

A) கள்ளிக்கோட்டை அரசர்

B) கொச்சின் அரசர்

C) கொல்லம் அரசர்

D) திருவனந்தபுரம் அரசர்

(குறிப்பு – கள்ளிக்கோட்டை அரசர் சாவித்திரியினுடைய (சாமரின்) நட்புணர்வு வாஸ்கோடகாமாவிற்கு மகிழ்ச்சி அளித்தது. இந்திய சரக்குகளுடன் தாய் நாட்டுக்கு திரும்பிய அவர், 1200 மாலுமிகளை, 13 கப்பல்களுடன் பெட்ரோ ஆல்வரிஸ் கேப்ரல் என்பவரின் தலைமையில் மீண்டும் அனுப்பிவைத்தார்.)

33) வாஸ்கோடகாமா இந்தியாவிற்கு இரண்டாம் முறை வந்த ஆண்டு எது?

A) 1500 இல்

B) 1501 இல்

C) 1502 இல்

D) 1503 இல்

(குறிப்பு – 1502ஆம் ஆண்டு, அக்டோபர் 29ஆம் நாள், 20 கப்பல்களுடன் வாஸ்கோடகாமா மீண்டும் கள்ளிக்கோட்டை வந்தார். அங்கிருந்து அதிக வசதிகளை கொண்ட கொச்சிக்கு சென்றார். ஐரோப்பிய வணிகம் பெருக வேண்டும் எனில் வணிகத்தின் மீது அராபியர்கள் கொண்டிருந்த முற்றுரிமை உடைக்கப்பட வேண்டும் என்பதை அவர் உணர்ந்தார்)

34) வாஸ்கோடகாமா போர்ச்சுகலுக்கு திரும்பும் முன்னர் ஒரு சரக்கு கிடங்கை எங்கு நிறுவினார்?

A) கொச்சி

B) கோழிக்கோடு

C) கண்ணனூர்

D) கொல்லம்

(குறிப்பு – ஐரோப்பிய வணிகம் பெருக வேண்டும் எனில் கணிதத்தின் மீது அரபியர்கள் கொண்டிருந்த முற்றுரிமை உடைக்கப்பட வேண்டும் என்பதை வாஸ்கோடகாமா உணர்ந்தார். கொச்சி மற்றும் கள்ளிக் கோட்டையில் இந்து மன்னர்கள் இடையே நிலவிய பகைமையை அவர் தமது நலனுக்கு பயன்படுத்திக் கொண்டார். இந்திய பெருங்கடல், செங்கடல் வணிகத்தில் அரேபியர் கொண்டிருந்த உரிமையை ஒழித்தார்.)

35) போர்த்துகீசியரால் நியமிக்கப்பட்ட இந்தியாவின் முதல் ஆளுநர் யார்?

A) பிரான்சிஸ்கோ டி அல்மெய்டா

B) அல்புகர்க்

C) நினோ டா குன்கா

D) ஆண்டானியோ டி நோரன்கா

(குறிப்பு – ஆண்டு தோறும் பயணம் மேற்கொள்வதை நிறுத்திய போர்ச்சுக்கீசியர், இந்தியாவில் ஒரு ஆளுநரை அமர்த்த முடிவு செய்தனர். முதல் ஆளுநரான பிரான்சிஸ்கோ டி அல்மெய்டா நீலநீர் கொள்கையை கடைப்பிடித்தார்)

36) பிரான்சிஸ்கோ டி அல்மெய்டா என்னும் போர்த்துகீசிய ஆளுனரின் நீல நீர் கொள்கை என்பது என்ன?

I. குடியிருப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்காமல், கப்பல்களின் எண்ணிக்கையை அதிகரித்தல்

II. கப்பல்களின் எண்ணிக்கையை அதிகரித்து, வணிகத்தை விரிவுபடுத்துதல்

III. போர்த்துகீசிய கப்பற்படையை இந்தியாவில் அதிகப்படுத்துதல், மற்றும் வலுப்படுத்துதல்.

A) I, II மட்டும்

B) II, III மட்டும்

C) I, III மட்டும்

D) இவை அனைத்தும்

(குறிப்பு – நீல நீர் கொள்கை மூலம் பிரான்சிஸ்கோ டி அல்மெய்டா குடியிருப்புகளின் எண்ணிக்கையை அதிகரிக்காமல் கப்பல்களின் எண்ணிக்கையை அதிகரித்து கப்பற்படையை வலுப்படுத்தினார். சாமுத்திரியினுடைய கப்பல் படையையும், எகிப்திய சுல்தான் கடற்படையையும் மூழ்கடித்தார்)

37) பிரான்சிஸ்கோ டி அல்மெய்டா கீழ்க்காணும் எந்த இடங்களில் கோட்டைகளைக் கட்டினார்?

I. கொச்சி

II. கண்ணூர்

III. மசூலிப்பட்டினம்

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, III மட்டும் சரி

D) இவை அனைத்தும் சரி

(குறிப்பு – பிரான்சிஸ்கோ டி அல்மெய்டா கொச்சி அரசருடன் நட்பு பூண்டார். அவர் கொச்சி, கண்ணூர், மலபார் கடற்கரையின் ஏனைய இடங்களிலும் கோட்டைகளைக் கட்டினார்)

38) பிரான்சிஸ்கோ டி அல்மெய்டாவிற்கு பின்னர் பொறுப்பேற்ற போர்த்துகீசிய ஆளுநர் யார்?

A) பிரான்சிஸ்கோ டி அல்மெய்டா

B) அல்புகர்க்

C) நினோ டா குன்கா

D) ஆண்டானியோ டி நோரன்கா

(குறிப்பு – அல்மெய்டாவிற்குப் பின்னர் அல்புகார்க்(1509-1515) பதவியேற்றார். இந்தியாவில் போர்த்துகீசிய பேரரசை உண்மையில் நிறுவியவர் இவரே ஆவார்)

39) போர்த்துகீசிய ஆளுநர் அல்புகார்க் பீஜப்பூர் அரசர் யூசுப் அடில் கானை தோற்கடித்து எந்த ஆண்டு கோவாவை கைப்பற்றினார்?

A) 1508 இல்

B) 1510 இல்

C) 1512 இல்

D) 1514 இல்

(குறிப்பு – பிஜப்பூர் அரசர் யூசுப் அடில் கானை தோற்கடித்த போர்த்துகீசிய ஆளுநர் அல்புகார்க் 1510 ஆம் ஆண்டில் கோவாவை கைப்பற்றினார் கோவாவை முக்கிய வணிக மையமாக வளர்த்தெடுத்தார். அனைத்து மதம் சார்ந்த மக்களையும் கோவாவில் குடியேற ஊக்கப்படுத்தினார்)

40) அல்புகார்க் 1515இல் எந்த துறைமுகத்தை கைப்பற்றினார்?

A) சுமத்ரா

B) கொச்சின்

C) ஆர்மசு

D) குஜராத்

(குறிப்பு – இந்தியாவிற்கும் சீனாவிற்கும், மெக்காவிற்கும் கெய்ரோவிற்கும் இடைப்பட்ட வணிக தடங்களின் மீது மேலாதிக்கம் செலுத்தி வந்த முஸ்லீம் வணிகர்களை அல்புகார்க் தோற்கடித்தார். அரபியரை தாக்கி ஏடன் நகரை கைப்பற்றுவதில் வெற்றி பெற்றார்.1515இல் ஆர்மசு துறைமுகத்தை கைப்பற்றினார்)

41) எந்தப் போர்த்துகீசிய ஆளுநரின் காலத்தில் முகலாய அரசர் அக்பர் குஜராத்தில் உள்ள காம்பேவிற்கு வந்தார்?

A) பிரான்சிஸ்கோ டி அல்மெய்டா

B) அல்புகர்க்

C) நினோ டா குன்கா

D) ஆண்டானியோ டி நோரன்கா

(குறிப்பு – 1571ஆம் ஆண்டு, டி நொரன்காவின் காலத்தில்தான் முகலாய அரசர் அக்பர் குஜராத்தில் உள்ள காம்பேவிற்கு வந்தார். அப்போதுதான் போர்த்துகீசியருக்கும் முகலாயருக்கும் இடையிலான தொடர்பு உருவானது)

42) போர்த்துக்கீசியர்கள் கைப்பற்றிய இடங்களை பொருத்துக?

I. ஆர்மசு – a) 1559

II. பஸீன் – b) 1515

III. டையூ – c) 1534

IV. டாமன் – d) 1537

A) I-b, II-c, III-d, IV-a

B) I-c, II-d, III-a, IV-b

C) I-d, II-b, III-c, IV-a

D) I-a, II-d, III-c, IV-b

(குறிப்பு – டா குன்கா 1534இல் பசீனையும், 1537இல் டையூவையும் கைப்பற்றினார்.1559இல் டாமன் துறைமுகம் இமாத் உல் முல்க் என்பவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டது)

43) சதி என்னும் உடன்கட்டை பழக்கத்தை நிறுத்த முயன்ற போர்த்துகீசிய ஆளுநர் யார்?

A) பிரான்சிஸ்கோ டி அல்மெய்டா

B) அல்புகர்க்

C) நினோ டா குன்கா

D) ஆண்டானியோ டி நோரன்கா

(குறிப்பு – போர்த்துக்கீசிய பேரரசை உண்மையில் நிறுவியவர் இவரே ஆவார். 1610 ஆம் ஆண்டு கோவாவை கைப்பற்றினார். ஐரோப்பியர் இந்திய பெண்களை திருமணம் செய்துகொண்டு, போர்த்துக்கீசியர் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் குடியேறுவதை இவர் ஆதரித்தார்)

44) ஸ்பெயின் நாட்டு அரசர் இரண்டாம் பிலிப் எந்த ஆண்டு போர்ச்சுக்கல் நாட்டை கைப்பற்றினார்?

A) 1560 இல்

B) 1570 இல்

C) 1580 இல்

D) 1590 இல்

(குறிப்பு – 1580 இல் ஸ்பெயின் நாட்டு அரசர் இரண்டாம் பிலிப் போர்ச்சுக்கல் நாட்டை கைப்பற்றி இணைத்துக் கொண்டார். போர்ச்சுகீசியரை முதலில் இலங்கையில் தோற்கடித்த டச்சுக்காரர் பின்னர் மலபார் கடற்கரையில் இருந்த அவர்களின் கோட்டையையும் கைப்பற்றினர். இதனால் போர்ச்சுக்கீசியர் இந்தியாவில் தங்கள் குடியேற்றங்களை பாதுகாப்பதை காட்டிலும் பிரேசிலின் மீது ஆர்வம் காட்டத் தொடங்கினர்)

45) ஐரோப்பியர்களுக்கும் இந்தியருக்கும் இடையிலான திருமணங்களை ஊக்குவித்தவர்கள் யார்?

A) ஆங்கிலேயர்கள்

B) டச்சுக்காரர்கள்

C) பிரெஞ்சுக்காரர்கள்

D) போர்ச்சுகீசியர்கள்

(குறிப்பு – போர்ச்சுகீசியர்கள் தாங்கள் கைப்பற்றிய பகுதிகளில் ஐரோப்பியர்கள் இந்தியாவுக்கும் இடையிலான திருமணங்களை ஊக்குவித்ததின் விளைவாக ஒரு புதிய யூரேசிய இனக் குழு உருவானது. இவர்கள் பின்னாளில் ஆப்பிரிக்காவிலும் ஆசியாவிலும் இருந்த போர்த்துக்கீசியரின் காலனிகளுக்கு அழைத்து செல்லப்பட்டனர்)

46) போர்த்துக்கீசியர்கள் கருப்பர் நகரம் என்று எதை அழைத்தனர்?

A) மயிலாப்பூர்

B) ஜார்ஜ் டவுன்

C) கள்ளிக்கோட்டை

D) கொச்சி

(குறிப்பு – சென்னை சாந்தோம் போர்த்துகீசியரின் வருகைக்கான முக்கிய சான்றாக உள்ளது. போர்ச்சுகீசியர்கள் கருப்பர் நகரம் என்று மயிலாப்பூரை அழைத்தனர்)

47) ஆங்கிலேயர்கள் கருப்பர் நகரம் என்று எதை அழைத்தனர்?

A) மயிலாப்பூர்

B) ஜார்ஜ் டவுன்

C) கள்ளிக்கோட்டை

D) கொச்சி

(குறிப்பு – போர்த்துக்கீசியரின் வருகையின் தாக்கமானது, இந்தியஅரசியல் வரலாற்றில் முதன்முறையாக ஐரோப்பியர் இந்திய அரசர்களை வென்று அவர்களின் பகுதிகளை கைப்பற்றினர் எனும் வரலாற்றை உருவாக்கியது.)

48) தமிழ் உரைநடையின் தந்தை என கருதப்படுபவர் கீழ்க்கண்டவரில் யார்?

A) ஹென்ரிக்ஸ்

B) லின்சோடென்

C) ராபர்டோ டி நொபிலி

D) நினோ டா குன்கா

(குறிப்பு – போர்த்துக்கீசியரின் குடியேற்றங்களுக்கு பிறகு சேசு சபையைச் சார்ந்த சமயப் பரப்பாளர்கள் இந்தியா வந்தனர். அவர்களில் ராபர்டோ டி நொபிலி தமிழிலும், சமஸ்கிருதத்திலும் விரிவாக எழுதினார். இவர் தமிழ் உரைநடையின் தந்தை என கருதப்படுகிறார்)

49) தமிழ் அச்சுப் பதிப்பின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?

A) ஹென்ரிக்ஸ்

B) லின்சோடென்

C) ராபர்டோ ட நொபிலி

D) நினோ டா குன்கா

(குறிப்பு – ஹென்ரிக்ஸ் என்பவர் போர்ச்சுகல் நாட்டு யூதர் ஆவார். இவர் சேசு சபையின் சமயப் பரப்பாளராக இந்தியா வந்தார். இவர் தமிழ் அச்சுப்பதிப்பின் தந்தை என்று அழைக்கப்படுகிறார் )

50) மீன் பிடிக்கும் உரிமை, படகோட்டும் உரிமை போன்றவற்றிற்காக போர்த்துகீசியர்கள் மற்றும் கீழே கடற்கரையில் சார்ந்த முஸ்லிம் குழுக்களுக்கும் எந்த ஆண்டு மோதல்கள் நிகழ்ந்தன?

A) 1520 இல்

B) 1525 இல்

C) 1530 இல்

D) 1535 இல்

(குறிப்பு – மீன் பிடிக்கும் உரிமை, படகோட்டும் உரிமை, முத்துக் குளித்தல் ஆகியவை தொடர்பாக போர்த்துகீசியருக்கும் கீழை கடற்கரையை சார்ந்த முஸ்லிம் குழுக்களுக்கும் இடையே 1530களில் மோதல்கள் நடந்தன.)

51) 1542இல் கோவாவிற்கு வருகை புரிந்த போர்த்துக்கீசிய கிறிஸ்தவ சபையை சார்ந்தவர் யார்?

A) புனித டேவிட்

B) புனித பிரான்சிஸ் சேவியர்

C) புனித மேத்யூஸ்

D) புனித தாமஸ் சேவியர்

(குறிப்பு – சேசு சபையை உருவாக்கியவர்களில் ஒருவரான புனித பிரான்சிஸ் சேவியர் 1542 இல் கோவாவிற்கு வந்தார். மதம் மாறியவர்களுக்கு திருமுழுக்கு சடங்கு நடத்துவதற்காக தூத்துக்குடி, புன்னைக்காயல் வரை பயணம் செய்தார்)

52) _____________ என்ற பெயரில் போர்த்துக்கீசியர் கடற் கொள்ளையர்களிடமிருந்து பாதுகாப்பு வழங்குவதாக கூறினர்.

A) கார்பஸ்

B) கார்ட்டஸ்

C) செப்டஸ்

D) செக்டஸ்

(குறிப்பு – கார்ட்டஸ்(Cartaz) என்ற பெயரில் போர்த்துக்கீசியர் வழங்கும் பாதுகாப்பை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். இல்லையெனில் வன்முறை மூலம் வணிகத்திற்கு இடையூறு செய்யப்போவதாக போர்த்துக்கீசியர் பயமுறுத்துவர். இந்த முறையில் போர்த்துக்கீசியர் வணிகர்களிடம் இருந்து பணம் பறித்தனர்)

53) டச்சு கிழக்கிந்திய கம்பெனி உருவான ஆண்டு எது?

A) 1600 இல்

B) 1601 இல்

C) 1602 இல்

D) 1603 இல்

(குறிப்பு – 1602 ஆம் ஆண்டு டச்சு கிழக்கிந்திய கம்பெனி உருவானது. புதிதாக உருவாகி இக்கம்பெனி இந்தோனேசியாவில் தனது ஆதிக்கத்தை நிறுவியது)

54) ஜேன் ஹியூன் வான் லின்சோடென் என்னும் டச்சுக்காரர் தென் கிழக்கு ஆசியாவை நோக்கிய தனது முதல் பயணத்தை எந்த ஆண்டு மேற்கொண்டார்?

A) 1585 இல்

B) 1590 இல்

C) 1595 இல்

D) 1575 இல்

(குறிப்பு – ஜேன் ஹியூன் வான் லின்சோடென் என்னும் நெதர்லாந்தை சேர்ந்த லிஸ்பனில் வாழ்ந்து வந்த வணிகர் டச்சுக்காரரின் முதல் பயணத்தை தென் கிழக்கு ஆசியாவை நோக்கி 1595 இல் மேற்கொண்டார்.)

55) அம்பாயானா படுகொலை நிகழ்ந்த ஆண்டு எது?

A) 1620 ஆம் ஆண்டு

B) 1621 ஆம் ஆண்டு

C) 1622 ஆம் ஆண்டு

D) 1623 ஆம் ஆண்டு

(குறிப்பு – 1623ஆம் ஆண்டு ஆங்கிலேயே கிழக்கிந்திய கம்பெனியின் ஊழியர்கள், போர்த்துக்கீசியர், ஜப்பானியர் அடங்கிய 20 பேர்களை டச்சு கிழக்கிந்திய கம்பெனியின் முகவர்கள் இந்தோனேசியாவில் உள்ள அம்பாய்னா என்னும் தீவில் சித்திரவதை செய்து கொண்டனர். இது அம்பாய்னா படுகொலை என்றழைக்கப்படுகிறது)

56) டச்சுக்காரர்கள் 1641ஆம் ஆண்டு எந்த இடத்தை போர்த்துக்கீசியர்களிடமிருந்து கைப்பற்றினர்?

A) இலங்கை

B) மலாக்கா

C) சுமத்ரா

D) மாஹே

(குறிப்பு – டச்சுக்காரர்கள் மலாக்காவை போர்த்துக்கீசியர்கள் இடமிருந்து 1641 ஆம் ஆண்டு கைப்பற்றினர். மேலும் 1658 ஆம் ஆண்டு இலங்கையை தங்கள் வசம் ஒப்படைக்க போர்த்துக்கீசியரை கட்டாயப்படுத்தினர். நறுமண தீவுகளில் டச்சுக்காரர்கள் வெற்றி பெற்றனர்)

57) ஜெல்டிரியா என்னும் பாதுகாப்பு கோட்டையை கட்டியவர்கள் யார்?

A) ஆங்கிலேயர்கள்

B) போர்த்துக்கீசியர்கள்

C) டச்சுக்காரர்கள்

D) பிரெஞ்சுக்காரர்கள்

(குறிப்பு – 1502 ஆம் ஆண்டு முதல் பழவேற்காட்டை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த போர்த்துகீசியர்கள், டச்சுக்காரர்களால் அகற்றப்பட்டனர். சென்னை நகருக்கு வடக்கே 60 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள பழவேற்காட்டில் டச்சுக்காரர் ஜெல்ட்ரியா என்னும் பாதுகாப்பு கோட்டையைக் கட்டினர்.)

58) டச்சுக்காரர்கள் 1605 ஆம் ஆண்டில் எந்த இடத்தில் கோட்டையை எழுப்பினர்?

A) பழவேற்காடு

B) கோழிக்கோடு

C) கண்ணூர்

D) மசூலிப்பட்டினம்

(குறிப்பு – 1605 இல் மசூலிப்பட்டினம் தங்கள் அதிகாரத்தை நிறுவிய டச்சுக்காரர்கள், 1610ஆம் ஆண்டில் பழவேற்காட்டில் சில குடியேற்றங்களை நிறுவினர்.)

59) டச்சு கிழக்கிந்திய கம்பெனியின் சோழமண்டலப் பகுதியின் தலைமை இடமாக இருந்த இடம் எது?

A) மசூலிப்பட்டினம்

B) பழவேற்காடு

C) மதராஸ்

D) தஞ்சாவூர்

(குறிப்பு – பழவேற்காடு, டச்சு கிழக்கிந்திய கம்பெனியின் சோழ மண்டலப் பகுதியின் தலைமையிடம் ஆயிற்று. பழவேற்காட்டில் இருந்து மேலைநாடுகளுக்கு வைரம் ஏற்றுமதி செய்யப்பட்டது. ஜாதிக்காய், ஜாதிபத்திரி, கிராம்பு ஆகியவையும் இங்கிருந்து ஐரோப்பாவிற்கு அனுப்பப்பட்டன)

60) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – 17ஆம் நூற்றாண்டில் டச்சுக்காரர் கிழக்கு பகுதிகளை கட்டுப்படுத்துவதற்காக வெடிமருந்து தொழில் கூடம் ஒன்றை நிறுவினர்.

கூற்று 2 – டச்சுக்காரர்கள் காலத்தில் வங்காளத்தில் இருந்தும் குடியேற்ற பகுதிகளான தேங்காய்ப்பட்டினம் காரைக்கால் ஆகியவற்றிலிருந்தும் அடிமைகள் பலவேற்காட்டிற்கு கொண்டுவரப்பட்டனர்.

கூற்று 3 – அடிமைகளைப் பிடிப்பதற்காக டச்சுக்காரர்கள் சென்னையின் தரகர்களை நியமித்தனர்

A) கூற்று 1, 2 மட்டும் சரி

B) கூற்று 2, 3 மட்டும் சரி

C) கூற்று 1, 3 மட்டும் சரி

D) எல்லா கூற்றுகளும் சரி

(குறிப்பு – டச்சுக்காரர்கள் காலத்தில் பஞ்சமும் வறட்சியும் போர்களும் அடிமை வணிகம் செழிக்க உதவின. இதனைத் தொடர்ந்து பிஜப்பூர் சுல்தான் மேற்கொண்ட படையெடுப்பு தஞ்சாவூரின் வளமான வேளாண் நிலங்களை பாழ்படுத்தியதால் மேலும் பல மக்கள் அடிமைகள் ஆயினர்)

61) பிரஞ்சு கிழக்கிந்திய கம்பெனி தோன்றிய ஆண்டு எது?

A) 1661 ஆம் ஆண்டு

B) 1662 ஆம் ஆண்டு

C) 1663 ஆம் ஆண்டு

D) 1664 ஆம் ஆண்டு

(குறிப்பு – இந்தியாவுடனான வணிக உறவை மேற்கொள்ள பிரெஞ்சுக்காரர்கள் 1527ஆம் ஆண்டிலேயே முயற்சிகள் மேற்கொண்டனர். போர்த்துக்கீசியர்களாளும் டச்சுக்காரர்களும் தூண்டப்பட்ட பிரெஞ்சுக்காரர்கள், 1664 இல் உருவாக்கிய பிரஞ்சு கிழக்கிந்திய கம்பெனி மூலம் தங்கள் வணிக செயல்பாடுகளை தொடங்கினர்)

62) கீழ்க்காணும் எந்த கிழக்கிந்திய கம்பெனி தனியார் வணிக நிறுவனமாக அல்லாமல் அரசின் திட்டமாக இந்தியாவில் உதித்தது?

A) ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி

B) டச்சுக்காரர் கிழக்கிந்திய கம்பெனி

C) போர்த்துகீசிய கிழக்கிந்திய கம்பெனி

D) பிரஞ்சு கிழக்கிந்திய கம்பெனி

(குறிப்பு – ஏனைய ஐரோப்பிய நாடுகளின் வணிக நிறுவனங்கள் தனியார் வணிக நிறுவனங்களாக இருக்க, பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி அரசர் பதினான்காம் லூயியின் திட்டமாக அமைந்தது. அவருடைய நிதி அமைச்சரான கோல்பேர், பிரஞ்சு கிழக்கிந்திய கம்பெனி நிறுவப்படுவதற்கு காரணமாக இருந்தார்)

63) இந்தியாவிலிருந்த பிரெஞ்சு முகவரான பெர்பர் எப்போது முகலாய பேரரசர் அவுரங்கசீப்பிடமிருந்து அனுமதி ஆணை பெற்றார்?

A) செப் 4, 1665

B) செப் 4, 1666

C) செப் 4, 1667

D) செப் 4, 1668

(குறிப்பு – 1602 ஆம் ஆண்டு பிரெஞ்சு வணிகர்கள் ஆப்பிரிக்காவில் உள்ள மடகாஸ்கரை அடைந்தனர். மடகாஸ்கரை தங்களின் காலனி ஆதிக்க பகுதியாக கொண்டிருந்தாலும், 1674இல் கடற்கரையோரம் உள்ள ஒரு சிறு வணிக முகாமை தவிர ஏனைய இடங்களை கைவிட நேர்ந்தது)

64) சாந்தோமில் இருந்தும், மயிலாப்பூரில் இருந்தும் டச்சுக்காரரை வெளியேற்றுவதில் பிரஞ்சுக்காரர்கள் எந்த ஆண்டு வெற்றி கண்டனர்?

A) 1666 ஆம் ஆண்டு

B) 1672 ஆம் ஆண்டு

C) 1678 ஆம் ஆண்டு

D) 1684 ஆம் ஆண்டு

(குறிப்பு – இந்தியாவில் காலூன்ற வலுவான இடம் தேவை என்று உணர்ந்த நிதியமைச்சர் கோல்பேர், ஜேக்கப் பிளான்குயிட் என்பவரின் தலைமையில் கப்பல் படை ஒன்றை அனுப்பி வைத்தார். சாந்தோம், மயிலாப்பூர் ஆகிய இடங்களிலிருந்து டச்சுக் காரர்களை வெளியேற்றுவதில் பிரஞ்சுக்காரர்கள் வெற்றிகண்டனர்)

65) டச்சுக்காரர்களை விரட்டுவதற்கு பிரஞ்சுக்காரர்கள் யாரிடம் துணை கோரினர்?

A) பிஜப்பூர் சுல்தான்

B) கோல்கொண்டா சுல்தான்

C) அகமது நகர் சுல்தான்

D) ஐதராபாத் சுல்தான்

(குறிப்பு – டச்சுக்காரர்களுக்கு எதிராக பீஜப்பூர் சுல்தானின் பிரதிநிதியான உள்ளூர் ஆளுநர் ஷேர்கான் லோடியின் உதவியை பிரஞ்சுக்காரர்கள் நாடினர். பிஜப்பூரின் எதிரியான கோல்கொண்டா சுல்தானோடு டச்சுக்காரர் நட்பு கொண்டனர்)

66) மடகாஸ்கரில் நான்கு ஆண்டுகள் பணியாற்றிய பின்னர் சூரத் வந்த____________ என்பவர் புதுச்சேரியின் ஆளுநர் ஆனார்.

A) பிரான்சிஸ் மார்டின்

B) பிரான்சிஸ் வில்லியம்

C) பிரான்சிஸ் சேவியர்

D) பிரான்சிஸ் டேவிட்

(குறிப்பு – 1673இல் புதுச்சேரி ஒரு சிறிய மீனவ கிராமமாக இருந்தது. மடகாஸ்கரில் நான்கு ஆண்டுகள் பணியாற்றிய பின்னர் சூரத் வந்த பிரான்சிஸ் மார்டின் என்பவர் புதுச்சேரியின் ஆளுநர் ஆனார். இந்தியாவில் பிரஞ்சு குடியேற்றங்களின் அதிகார மையமாக அதை உருவாக்கினார்)

67) பிரெஞ்சுக்காரர்களிடமிருந்து டச்சுக்காரர்கள் புதுச்சேரியை எந்த ஆண்டு கைப்பற்றினர்?

A) 1690 இல்

B) 1693 இல்

C) 1696 இல்

D) 1699 இல்

(குறிப்பு – பிரான்சும், ஹாலந்தும் 1672 இல் இருந்து தொடர்ந்து போர்கள் செய்து கொண்டிருந்தன. இந்தியாவில் பிரெஞ்சுக்காரர்களுக்கு போதுமான நிதி, ஆயுதம், வீரர்கள் இல்லை. ஏனெனில் அவை வங்காளத்தில் இருந்த மற்றொரு பிரெஞ்சுக் குடியேற்றமான சந்தன்நகருக்கு கொண்டு செல்லப்பட்டு இருந்தன)

68) 1697ஆம் ஆண்டு எந்த உடன்படிக்கையின்படி புதுச்சேரி மீண்டும் பிரெஞ்சுக்காரர்களிடம் தரப்பட்டது?

A) பேட்ரிக் உடன்படிக்கை

B) ரிஸ்விக் உடன்படிக்கை

C) மார்கஸ் உடன்படிக்கை

D) இது எதுவும் அல்ல

(குறிப்பு – 1697ஆம் ஆண்டு ரிஸ்விக் உடன்படிக்கையின் படி புதுச்சேரி மீண்டும் பிரெஞ்சுக்காரர்களிடம் தரப்பட்டது.இருந்த போதும் 1699ஆம் ஆண்டில் தான் அது பிரஞ்சுக்காரர் வசம் ஒப்படைக்கப்பட்டது. 1706இல் பிரான்சிஸ் மார்டின் இயற்கை எய்தும் வரை அதன் ஆளுநராக இருந்தார்)

69) பிரஞ்சுக்காரர்கள் மேற்கொண்ட பெரு முயற்சியின் விளைவாக __________ இல் மாகியையும், __________இல் காரைக்காலையும் பெற்றனர்.

A) 1723, 1735

B) 1725, 1737

C) 1727, 1739

D) 1725, 1739

(குறிப்பு – வங்காள பகுதிகளில் காசிம் பஜார், சந்தன் நகர், பாலசோர் ஆகிய இடங்களில் தங்களது குடியேற்றங்களையும் நிறுவி விரிவுபடுத்துவதில் பிரெஞ்சுக்காரர்கள் வெற்றி பெற்றனர்)

70) பிரெஞ்சுக்காரர்களின் செல்வாக்கு மிகுந்த இடங்களில் தவறானது எது?

I. புதுச்சேரி

II. காரைக்கால்

III. மாகி

IV. மசூலிப்பட்டினம்

A) I, II மட்டும் சரி

B) I, II, III மட்டும் சரி

C) II, III மட்டும் சரி

D) இவை எல்லாமே சரி

(குறிப்பு – பியரி பெனாயிட் டூமாஸ் (1668-1745) என்பவர் புதுச்சேரியின் மற்றுமொரு சிறந்த ஆளுநர் ஆவார். இருந்தபோதிலும் தங்களை விட மிகவும் வலிமை வாய்ந்த போட்டியாளரான ஆங்கிலேயரின் பயமுறுத்தல்களை அவர்கள் எதிர்கொள்ள நேர்ந்தது)

71) நார்வே எந்த ஆண்டு வரை டென்மார்க்குடன் இணைந்து இருந்தது?

A) 1807 ஆம் ஆண்டு

B) 1809 ஆம் ஆண்டு

C) 1811 ஆம் ஆண்டு

D) 1813 ஆம் ஆண்டு

(குறிப்பு – டென்மார்க் இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் குடியேற்றங்களை கொண்டிருந்தது. நார்வே 1813ஆம் ஆண்டு வரை டென்மார்க் உடன் இணைந்து இருந்தது)

72) இந்தியாவில் டேனியர்கள் வசம் இருந்த பகுதிகளில் கீழ்க்கண்டவை களில் சரியானது எது?

I. தரங்கம்பாடி

II. செராம்பூர்

III. நிக்கோபார் தீவுகள்

IV. கண்ணூர்

A) I, II மட்டும் சரி

B) I, II, III மட்டும் சரி

C) II, III, IV மட்டும் சரி

D) இவை எல்லாமே சரி

(குறிப்பு – தமிழ்நாட்டின் தரங்கம்பாடி, மேற்கு வங்காளத்தில் செராம்பூர், நிக்கோபார் தீவுகள் ஆகியன தனியார் வசமிருந்த பகுதிகளாகும்)

73) டேனிய கிழக்கிந்திய கம்பெனி உருவான நாள் எது?

A) மார்ச் 11, 1616

B) மார்ச் 13, 1616

C) மார்ச் 15, 1616

D) மார்ச் 17, 1616

(குறிப்பு – 1616, மார்ச் 17 ஆம் நாள், டென்மார்க் அரசர் நான்காம் கிறிஸ்டியன் ஒரு பட்டயத்தை வெளியிட்டதன் மூலம் டேனிய கிழக்கிந்திய கம்பெனியை உருவாக்கினார். டேனிய வணிகர் இடையே இந்நிறுவனத்திற்கு பெரும் ஆதரவு ஏதுமில்லை)

74) டேனியர்களின் வணிக இயக்குனரான ராபர்ட் கிராபி என்பவர் யாருடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தின்படி தரங்கம்பாடியையும் அதில் கோட்டைகட்டிக் கொள்ளும் உரிமையையும் பெற்றனர்?

A) மதுரை அரசர்

B) ராமநாதபுரம் அரசர்

C) தஞ்சாவூர் அரசர்

D) புதுக்கோட்டை அரசர்

(குறிப்பு – ராபர்ட் கிராப்பி என்னும் டேனிய வணிக இயக்குனர் தஞ்சாவூர் நாயக்க அரச ரோடு பேச்சுவார்த்தை நடத்தி ஒரு ஒப்பந்தத்தை செய்து கொண்டார்.1620ஆம் ஆண்டு, நவம்பர் 20ஆம் நாள் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி தரங்கம்பாடியில் ஒரு கோட்டை கட்டும் உரிமையைப் பெற்றனர்)

75) 1648ஆம் ஆண்டு முதலாவது டேனிய கிழக்கிந்திய கம்பெனியை கலைத்தவர் யார்?

A) நான்காம் கிறிஸ்டியன்

B) இரண்டாம் கிறிஸ்டியன்

C) பிரடெரிக்

D) இரண்டாம் வில்லியம் ஹென்றி

(குறிப்பு – டேனியர்கள் தரங்கம்பாடியில் ஒரு கோட்டையையும், மசூலிப்பட்டினத்தில் ஒரு கிடங்கையும் அமைத்தனர்.பாலசோரிலும், ஹூக்ளி ஆற்றின் அருகே உள்ள பிப்ளி என்ற இடத்திலும் வணிக முகாம்கள் அமைக்கப்பட்டன)

76) இரண்டாவது டேனிய கிழக்கிந்திய கம்பெனி எப்போது தொடங்கப்பட்டது?

A) 1693 இல்

B) 1696 இல்

C) 1698 இல்

D) 1699 இல்

(குறிப்பு – இரண்டாவது டேனிய கிழக்கிந்திய கம்பெனி 1696இல் தொடங்கப்பட்டது. டென்மார்க்கிர்க்கும் தரங்கம்பாடிக்கும் இடையிலான வணிகம் மீண்டும் நடைபெறத் தொடங்கியது.)

77) டென்மார்க்கிலிருந்து முதன்முதலாக இரண்டு லுத்தரன் சமயப் பரப்பாளர்கள் எப்போது இந்தியா வந்தனர்?

A) 1702ஆம் ஆண்டு

B) 1704ஆம் ஆண்டு

C) 1706ஆம் ஆண்டு

D) 1708ஆம் ஆண்டு

(குறிப்பு – 1706ஆம் ஆண்டு ஜூன் 9ஆம் நாள் டென்மார்க்கில் இருந்து முதன் முதலாக இரண்டு லுத்தரன் சமயப் பரப்பாளர்கள் இந்தியா வந்தனர். டேனியர்கள் 1855ஆம் ஆண்டில் அந்தமானிலும் நிக்கோபாரிலும் குடியேறினர்)

78) 1839 ஆம் ஆண்டு டேனியர்களால் ______________ ஆங்கிலேயருக்கு விற்கப்பட்டது.

A) தரங்கம்பாடி

B) செராம்பூர்

C) பாலசோர்

D) பிப்ளி

(குறிப்பு – 1839 ஆம் ஆண்டு டேனியர்கள் செராம்பூர் பகுதியை ஆங்கிலேயருக்கு விற்றனர். தரங்கம்பாடி உள்ளிட்ட ஏனைய குடியேற்றங்கள் 1845ஆம் ஆண்டு விற்கப்பட்டன.)

79) பார்த்தலோமியஸ் சீகன் பால்கு எந்த ஆண்டு விவிலியத்தின் புதிய ஏற்பாட்டை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார்?

A) 1711 ஆம் ஆண்டு

B) 1713 ஆம் ஆண்டு

C) 1715 ஆம் ஆண்டு

D) 1717 ஆம் ஆண்டு

(குறிப்பு – சீகன்பால்கு ஓர் அச்சுக் கூடத்தை நிறுவினார். தமிழ் மொழி, இந்திய மதங்கள், பண்பாடு குறித்த நூல்களை வெளியிட்டார்.1715ஆம் ஆண்டு விவிலியத்தின் புதிய ஏற்பாட்டை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார்)

80) டேனிய கிறிஸ்துவ மதப்பரப்பாளரான பார்த்தலோமியஸ் சீகன் பால்கு எந்த ஆண்டு மறைந்தார்?

A) 1713, பிப்ரவரி 23ஆம் நாள்

B) 1715, பிப்ரவரி 23ஆம் நாள்

C) 1717, பிப்ரவரி 23ஆம் நாள்

D) 1719, பிப்ரவரி 23ஆம் நாள்

(குறிப்பு – பார்த்தலோமியஸ் சீகன்பால்கு 1718ஆம் ஆண்டு தேவாலய கட்டிடமும், உள்ளூர் மத குருமார்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக ஒரு இறையியல் பயிற்சி பள்ளியையும் நிறுவினார்.)

81) இங்கிலாந்து அரசர் முதலாம் ஜேம்ஸ், வில்லியம் ஹாக்கின்ஸ் மூலம் இந்தியாவுடன் இயல்பாக வணிகம் செய்யும் அனுமதியை எந்த ஆண்டு முகலாய அரசர் ஜஹாங்கீரிடம் பெற்றார்?

A) 1610 இல்

B) 1611 இல்

C) 1612 இல்

D) 1613 இல்

(குறிப்பு – ஆங்கிலேயர் சூரத் நகரத்தில் சில வணிக உரிமைகளைப் பெற்றனர். குஜராத்தின் முகலாய ஆளுநரான இளவரசர் குர்ரம் ஆங்கிலேயருக்கு வணிக உரிமைகளை வழங்கினார். ஆனால் இப்பகுதிகளில் போர்த்துக்கீசியர் மிகுந்த செல்வாக்குப் பெற்று இருந்ததால் ஆங்கிலேயரால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை)

82) சந்திரகிரி அரசர் எந்த ஆண்டு சென்னையை ஆங்கிலேயர்களுக்கு கொடுத்து அதில் கோட்டை கட்டும் அனுமதியை வழங்கினார்?

A) 1637 ஆம் ஆண்டு

B) 1638 ஆம் ஆண்டு

C) 1639ஆம் ஆண்டு

D) 1640ஆம் ஆண்டு

(குறிப்பு – சென்னையில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட கோட்டை புனித ஜார்ஜ் கோட்டை எனப் பெயரிடப்பட்டது. இந்திய மண்ணில் ஆங்கிலேய கிழக்கிந்திய வணிகக்குழு முதன்முதலாக பெற்ற நிலப்பகுதி இதுவே.)

83) அவுரங்கசீப் எந்த ஆண்டு கோல்கொண்டாவினை கைப்பற்றி அதனை முகலாய ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார்?

A) 1681 இல்

B) 1683 இல்

C) 1685இல்

D) 1687 இல்

(குறிப்பு – சென்னையின் கம்பெனியின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகள் மீது 1645 ம் ஆண்டு கோல்கொண்டா அரசர் படையெடுத்து பாழ்படுத்தினார். 1687ஆம் ஆண்டு அவுரங்கசீப் கோல்கொண்டா கைப்பற்றி கம்பெனியின் பகுதிகளை முகலாய ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார். ஆனால் கிழக்கிந்திய கம்பெனிக்கு வழங்கப்பட்டிருந்த உரிமைகள் தொடர்ந்தன)

84) பொருத்துக.

A) 1668ஆம் ஆண்டு – a) சென்னை மாகாணம் உருவாக்கம்

B) 1640ஆம் ஆண்டு – b) அவுரங்கசீப் கோல்கொண்டா மீது படையெடுப்பு

C) 1687ஆம் ஆண்டு – c) இரண்டாம் சார்லஸ் பம்பாய் தீவை பரிசாக பெறுதல்

D) 1684ஆம் ஆண்டு – d) புனித ஜார்ஜ் கோட்டை கட்டுதல்

A) I-c, II-d, III-b, IV-a

B) I-d, II-b, III-c, IV-a

C) I-b, II-d, III-a, IV-c

D) I-a, II-d, III-b, IV-c

(குறிப்பு – 1683ஆம் ஆண்டு பட்டயம் கம்பெனிக்கு படைகளை உருவாக்கி கொள்ளவும், அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசியா ஆகியவற்றில் உள்ள நாடுகளுக்கு எதிராக போர் அறிவிப்பு செய்யவும் அமைதி உடன்படிக்கை மேற்கொள்ளவும் உரிமை வழங்கியது)

85) சென்னை நகராட்சி உருவான ஆண்டு எது?

A) 1682ஆம் ஆண்டு

B) 1684ஆம் ஆண்டு

C) 1686ஆம் ஆண்டு

D) 1688ஆம் ஆண்டு

(குறிப்பு – 1688 இல் சென்னை ஒரு மேயரையும் 10 உறுப்பினர்கள் அடங்கிய ஆலோசனைக் குழுவையும் கொண்ட நகராட்சி அரசை பெற்றிருந்தது..1693இல் சென்னையை சுற்றி உள்ள மூன்று கிராமங்களையும், 1703இல் மேலும் 5 கிராமங்களையும் பெற்றது)

86) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. 1608 ஆம் ஆண்டு வங்காளத்தில் இருந்த ஆங்கிலேயர்கள் வணிக உரிமைகளைப் பெற்றனர்.

II. வங்காளத்தில் ஆங்கிலேயர்களுக்கு மனித உரிமை அளித்தவர் முகலாய அரசர் ஷாஜகானின் இரண்டாவது மகனும் வங்காளத்தின் ஆளுநரும் ஆன ஷா சுஜா என்பவராவார்.

III. 1685இல் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி சுதனுதி என்ற இடத்தில் தனது முதல் குடியேற்றத்தை நிறுவியது. இவ்விடமே பிற்காலத்தில் கல்கத்தா ஆயிற்று

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, III மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – 1690 இல் கிழக்கிந்திய கம்பெனி சுதநுதி என்ற இடத்தில் தனது முதல் குடியேற்றத்தை நிறுவியது. இவ்விடமே பிற்காலத்தில் கல்கத்தாவாயிற்று. 1696இல் அங்கு ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி கோட்டை கட்டியது.)

87) புனித வில்லியம் கோட்டை எப்போது மாகாண தலைமையிடம் ஆயிற்று?

A) 1760 இல்

B) 1765 இல்

C) 1770 இல்

D) 1775 இல்

(குறிப்பு – 1698 ஆம் ஆண்டு சுதனுதி, காளிகாட்டா, கோவிந்த பூர் ஆகிய கிராமங்களில் ஜமீன்தாரி உரிமையை ஆங்கிலேயே கிழக்கிந்திய கம்பெனி பெற்றது. இதற்கு பதிலாக கம்பெனி ஆண்டுதோறும் ரூபாய் 1200 செலுத்தியது. கல்கத்தாவில் கட்டப்பட்ட புனித வில்லியம் கோட்டை 1870இல் மாகாணத்தின் தலைமையிடம் ஆயிற்று)

88) ஆஸ்திரிய அரசர் ஆறாம் சார்லஸ் எந்த ஆண்டு காலமானார்?

A) 1740 இல்

B) 1741 இல்

C) 1742 இல்

D) 1743 இல்

(குறிப்பு – ஆஸ்திரிய அரசர் ஆறாம் சார்லஸ் 1740 இல் காலமானார். அவரைத் தொடர்ந்து அவருடைய மகள் மரிய தெரசா அரச பதவியை ஏற்றார். மரிய தெரசாவின் உரிமையை ஏற்க மறுத்த பிரான்ஸ், ஜெர்மானிய மொழி பேசும் பகுதிகளான பவேரியா, சாக்ஸனி, ஸ்பெயின் ஆகிய நாடுகளோடு மரியதெராசாவுக்கு எதிராக கைகோர்த்தது)

89) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – முதல் கர்நாடகப் போரின் போது புதுச்சேரியின் ஆளுநராக இருந்தவர் துய்ப்பிளே ஆவார்.

கூற்று 2 – முதல் கர்நாடகப் போரின் போது ஆங்கில கப்பல் படைக்கு தலைமை ஏற்றவர் பைடன் ஆவார்.

கூற்று 3 – முதல் கர்நாடகப் போர் 1746ஆம் ஆண்டு, ஜூலை 6ஆம் நாள் நிகழ்ந்தது.

A) கூற்று 1, 2 மட்டும் சரி

B) கூற்று 2, 3 மட்டும் சரி

C) கூற்று 1, 3 மட்டும் சரி

D) எல்லா கூற்றுகளும் சரி

(குறிப்பு – இப்போரில் தோல்வியடைந்த பைடன் ( ஆங்கில கப்பல் படைக்கு தலைமை ஏற்றவர்) இங்கிலாந்தில் இருந்து வரவேண்டிய கப்பல்களை எதிர்பார்த்து கல்கத்தாவிலுள்ள ஹுக்ளிக்கு பின்வாங்கினார்)

90) முதல் கர்நாடகப் போரில் வெற்றி பெற்ற பிரஞ்ச் கப்பற்படை சென்னையை எந்த ஆண்டு கைப்பற்றியது?

A) 1746ஆம் ஆண்டு, செப் 6

B) 1746ஆம் ஆண்டு, செப் 16

C) 1746ஆம் ஆண்டு, செப் 26

D) 1746ஆம் ஆண்டு, செப் 30

(குறிப்பு – முதல் கர்நாடகப் போரில் வெற்றி பெற்ற பிரெஞ்சு கப்பல் படை பாதுகாப்பு பற்றி இருந்த சென்னையை 1746 ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் நாள் கைப்பற்றியது. சென்னை ஆளுநர் மோர்ஸ் சரணடையுமாறு அறிவுறுத்தப்பட்டார். எனினும் அவர் ஆற்காடு நவாப் அன்வாருதீனின் உதவியை நாடினார்)

91) ஐரோப்பாவில் இங்கிலாந்தும் பிரான்ஸும் ஐ லா சபேல் (Aix La Chapelle) என்ற உடன்படிக்கையில் எந்த ஆண்டு கையெழுத்திட்டன?

A) 1746ஆம் ஆண்டு

B) 1747ஆம் ஆண்டு

C) 1748ஆம் ஆண்டு

D) 1749ஆம் ஆண்டு

(குறிப்பு – 1748ஆம் ஆண்டு, ஐரோப்பாவில் இங்கிலாந்தும் பிரான்சும் ஐ லா சபேல் உடன்படிக்கையில் கையெழுத்திட்டன. இந்த உடன்படிக்கையின் படி இந்தியாவில் ஆங்கிலேயர்கள் பிரெஞ்சுக்காரர்கள் மோதல்களை முடித்துக் கொண்டனர். பிரெஞ்சுக்காரர்கள் சென்னையை ஆங்கிலேயர்களிடம் திருப்பி தருவது என்று ஒப்புக்கொள்ளப்பட்டது)

92) ஐ லா சபேல் ( Aix La Chapelle) என்னும் உடன்படிக்கையின்படி ஆங்கிலேயர்கள் பிரெஞ்சுக்காரர்களுக்கு வட அமெரிக்காவின் ____________ என்ற இடத்தை கொடுப்பது என்று ஒப்புக் கொள்ளப்பட்டது.

A) கலிபோர்னியா

B) வாஷிங்டன்

C) லூயிஸ்பர்க்

D) இது எதுவும் அல்ல

(குறிப்பு – ஐ லா சபேல் (Aix La chapelle) உடன்படிக்கையின்படி இந்தியாவில் ஆங்கிலேயர் பிரெஞ்சுக்காரர்கள் தங்கள் மோதல்களை முடித்துக் கொண்டனர். பிரெஞ்சுக்காரர் சென்னையை ஆங்கிலேயருக்குத் திருப்பித் தருவது என்றும், அதற்கு மாறாக வட அமெரிக்காவில் லூயிஸ் பர்க் என்ற இடத்தை பிரெஞ்சுக்காரருக்கு கொடுப்பது என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டது)

93) முதல் கர்நாடகப் போரின் போது நடந்தவற்றுள் கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – புதுச்சேரியின் புதிய ஆளுநர் துய்ப்பிளே, ஆற்காடு நவாபிடம் ஒரு வார காலத்திற்கு புனித ஜார்ஜ் கோட்டையில் நவாபின் கொடியை பறக்க விட்ட பின்னர் கோட்டையை ஆங்கிலேயர் வசம் ஒப்படைத்து விடுவதாக உறுதிமொழி அளித்தார்.

கூற்று 2 – பிரெஞ்சுக்காரர்கள் ஆற்காடு நவாபுக்கு ரூபாய் 40 ஆயிரம் மதிப்புள்ள பரிசுகளை வழங்கினார்.

கூற்று 3 – 1749ஆம் ஆண்டு ஐ லா சபேல் என்ற உடன்படிக்கை பிரெஞ்சுக்காரர்களுக்கும் ஆங்கிலேயருக்கும் இடையே கையெழுத்தானது.

A) கூற்று 1, 2 மட்டும் சரி

B) கூற்று 2, 3 மட்டும் சரி

C) கூற்று 1, 3 மட்டும் சரி

D) எல்லா கூற்றுகளும் சரி

(குறிப்பு – ஐ லா சபேல் (Aix La Chapelle) என்னும் உடன்படிக்கை பிரெஞ்சுக் காரர்களுக்கும் ஆங்கிலேயருக்கும் இடையே ஐரோப்பாவில் 1748இல் கையெழுத்தானது)

94) ஹைதராபாத் நிஜாம் ஆசப்ஜா 1748இல் இறந்த போது, அவருடைய மகன் முசாபர் ஜங் அடுத்த நிஜமாக வருவதற்கு ஆதரவு அளித்தவர் யார்?

A) துய்ப்ளெ

B) முகமது அலி

C) கர்நாடக நவாப்

D) இவர்கள் யாரும் அல்ல

(குறிப்பு – முதலாம் கர்நாடகப் போருக்குப் பின்னர் ஐரோப்பாவில் பிரான்சுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே அமைதி நிலவியது. ஆனால் இந்தியாவில் இவ்விரு காலனி நாடுகளாலும் அமைதியாக இருக்க முடியவில்லை. சுதேச அரசர்களை ஒருவருக்கு எதிராக மற்றொருவரை தூண்டிவிட்டனர்)

95) ஹைதராபாத் நிஜாம் ஆசப்ஜா மறைவுக்குப் பின்னர் கீழ்காணும் எந்த மூவர் இடையே ஒரு முக்கூட்டு உடன்படிக்கை ஏற்பட்டது?

I. ஆற்காடு நவாப்.

II. கர்நாடக நவாப்

III. ஹைதராபாத் நிஜாம்

IV. பிரெஞ்சுக்காரர்

A) I, II, III மூவரிடையே

B) II, III, IV மூவரிடையே

C) I, III, IV மூவரிடையே

D) எல்லாமே தவறு

(குறிப்பு – ஐதராபாத் நிஜாம் ஆசப்ஜா, மறைவுக்குப் பின்னர் அவரது பேரன் முசாபர் ஜங்க் அடுத்த நிஜமாக ஆவதற்கு துய்ப்ளெ ஆதரவை தெரிவித்தார். ஆற்காட்டில் முகமது அலிக்கு எதிராக சந்தாசாகிப்பை ஆதரித்தார். பிரெஞ்சுக்காரர், நிஜாம். கர்நாடக நவாப் ஆகியோரிடையே ஒரு முக்கூட்டு உடன்படிக்கை ஏற்பட்டது)

96) கர்நாடகத்தில் 1749இல் நடைபெற்ற ஆம்பூர் போரில் கொல்லப்பட்ட ஆற்காடு நவாப்?

A) நவாப் சந்தா சாகிப்

B) நவாப் அக்பருதீன்

C) நவாப் அன்வருதீன்

D) நவாப் முகம்மது அலி கான்

(குறிப்பு – பிரெஞ்சுக்காரர் இன் செல்வாக்கை குறைப்பதற்காக ஆங்கிலேயர் ஹைதராபாத் அரியணைக்கு போட்டியாளரான நாஸிர் ஜங்கையும், கர்நாடகத்தில் 1749இல் நடைபெற்ற ஆம்பூர் போரில் நவாஸுதீன் கொல்லப்பட்ட பின்னர் அரியணைக்கு முகமது அலியையும் ஆதரித்தனர்)

97) முசாபர் ஜங்க் ஹைதராபாத் நிஜமாக எந்த ஆண்டு பொறுப்பேற்றார்?

A) 1750 இல்

B) 1751 இல்

C) 1752 இல்

D) 1753 இல்

(குறிப்பு – ஆம்பூர் போரை தொடர்ந்து வெற்றிபெற்ற படைகள் தக்காணத்தில் நுழைந்தன. பிரெஞ்சு படைகளால் நாஸிர் ஜங் கொல்லப்பட்டார். முஜாபர் ஜங் 1750 டிசம்பரில் ஐதராபாத்தின் நிஜமாக ஆக்கப்பட்டார்)

98) ஆம்பூர் போர் நடைபெற்ற ஆண்டு எது?

A) 1750 இல்

B) 1751 இல்

C) 1752 இல்

D) 1753 இல்

(குறிப்பு – ஹைதராபாத் நிஜாமிற்கு உரிமை கோரிய முஜாபர் ஜங் கர்நாடக அரியணைக்கு உரிமை கோரிய சந்தா சாகிப் ஆகிய இருவரும் நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட பிரெஞ்சுக்காரர் படைகளின் உதவியோடு அன்வருதீன் படைகளைத் தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தினர். முடிவில் அன்வர்தீன் கொல்லப்பட்டார்)

99) ஆம்பூர் போருக்குப் பின்னர் நடந்தவற்றுள் கீழ்க்கண்ட கூற்றுகளில் எது சரியானது?

I. முசாபர் ஜங் கொல்லப்பட்டார், உடனடியாக நாஸிர் ஜங்கின் சகோதரனான சலாபத் ஜங் என்பாரை பிரெஞ்சு தளபதி புஸ்ஸி அரியணை ஏற்றினார்.

II. நிஜாம் இடம் இருந்தும், ஆற்காடு நவாப்பிடம் இருந்தும் துய்ப்பிளே பெருமளவு பலத்தையும் நிலங்களையும் பெற்றார்.

III. சந்தாசாகிப் ஆங்கிலேயரின் செல்வாக்கை குறைக்க வேண்டும் என்பதற்காகவும் முகமது அலியை கைது செய்யவும் நிஜாம் மற்றும் பிரெஞ்சுக்காரர் உதவியுடன் திருச்சியை கைப்பற்ற முடிவு செய்தார்.

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, III மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – ஆம்பூர் போரில் நவாப் அன்வருதீன் கொல்லப்பட்ட பின்னர் அரியணைக்கு முகமது அலியை ஆங்கிலேயர்கள் ஆதரித்தனர். முகமது அலி நவாப் அன்வாருதீனின் மகன் ஆவார். ஆம்பூர் போரின் போது, இவர் திருச்சிக்கு தப்பிச் சென்றார்)

100) பிரஞ்சுக்காரர்களும், நவாபும் திருச்சி முற்றுகையில் தீவிரமாக இருக்கையில் ஆற்காட்டின் மீது திடீர் தாக்குதல் தொடுக்க வேண்டும் என்ற கருத்தை முன் வைத்தவர் யார்?

A) துய்ப்பிளே

B) ராபர்ட் கிளைவ்

C) வில்லியம் பெண்டிங்

D) இவர்கள் யாரும் அல்ல

(குறிப்பு – சந்தா சாகிப்பின் உதவியோடு திருச்சியை கைப்பற்ற வேண்டும் என துய்ப்ளெவும் உறுதி பூண்டிருந்தார். சந்தா சாகிப்பின் படையோடு பிரெஞ்சுப் படையினர் 900 பேர் சேர்ந்தனர். முகமது அலி 5000 படை வீரர்களையும் தனக்கு உதவியாக 600க்கும் மிகாத ஆங்கில வீரர்களை மட்டும் கொண்டிருந்தார்)

101) ராபர்ட் கிளைவ் முதல் முறை ஆளுநராக இருந்தபோது எந்த போரில் வெற்றி பெற்றார்?

A) பிளாசிப் போர்

B) பக்சார் போர்

C) வந்தவாசி போர்

D) ஆம்பூர் போர்

(குறிப்பு – ராபர்ட் கிளைவ் சென்னை மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டார். முதல் முறை ஆளுநராக இருந்தபோது (1755-1760) பிளாசிப் போரில் வெற்றிபெற்று இந்தியாவில் ஆங்கிலேய பேரரசிற்கு அடித்தளமிட்டார்)

102) ராபர்ட் கிளைவ் எவ்வாறு இறந்தார்?

A) சுடப்பட்டு இறந்தார்

B) தூக்கில் இடப்பட்டு இறந்தார்

C) தற்கொலை செய்து கொண்டார்

D) போரின் போது இறந்தார்

(குறிப்பு – ராபர்ட் கிளைவ் இங்கிலாந்து திரும்பிய போது தன் மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்து பாராளுமன்ற விசாரணையை எதிர்கொண்டார். ராபர்ட் கிளைவ் தன் மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டபோதிலும் தற்கொலை செய்து கொண்டார்)

103) ராபர்ட் கிளைவ் ஆற்காட்டை எந்த ஆண்டு கைப்பற்றினார்?

A) 1750, ஆகஸ்ட் 31ஆம் நாள்

B) 1751, ஆகஸ்ட் 31ஆம் நாள்

C) 1752, ஆகஸ்ட் 31ஆம் நாள்

D) 1753, ஆகஸ்ட் 31ஆம் நாள்

(குறிப்பு – 1752, ஆகஸ்ட் 31ஆம் நாள் ஆற்காட்டை கைப்பற்றிய ராபர்ட் கிளைவ் ராஜா சாகிப்பின் 53 நாள் கோட்டை முற்றுகையையும் தாக்குப் பிடித்தார். ராஜா பாதிப்பிற்கு புதுச்சேரியில் இருந்த பிரஞ்சுக்காரர் உதவினர்)

104) சந்தாசாகிப் எந்த போரின் போது கொல்லப்பட்டார்?

A) வேலூர் போர்

B) காவேரிப்பாக்கம் போர்

C) ஆம்பூர் போர்

D) ஆற்காடு போர்

(குறிப்பு – ஆரணி போரில் ஆங்கிலேயரும் மராட்டிய அரசர் முராரிராவும் தங்களைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையிலான பிரஞ்சு மற்றும் ஆற்காடு படைகளை எதிர் கொண்டனர். எனினும் காவேரிப்பாக்கத்தில் நடைபெற்ற போரில் சந்தாசாகிப் பிடிபட்டு கொல்லப்பட்டார். முகமது அலி எதிர்ப்பு ஏதும் இல்லாமல் கர்நாடகத்தின் அரசரானார்)

105) இரண்டாம் கர்நாடக போருக்குப் பின்னர் புதுச்சேரி உடன்படிக்கை எந்த ஆண்டு கையெழுத்தானது?

A) 1753 இல்

B) 1755 இல்

C) 1757 இல்

D)1759 இல்

(குறிப்பு – ஐரோப்பாவில் இங்கிலாந்தும் பிரான்சும் எப்பொருளும் ஈடுபடாத நிலையில் இந்தியாவில் தங்கள் காலணிகள் ஊரில் ஈடுபடுவதை கண்டனம் செய்தனர். பிரெஞ்சு அரசாங்கம் துய்ப்ளேவை திரும்ப அழைத்துக் கொண்டது. 1755 இல் ஆங்கிலேயருடன் புதுச்சேரி உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது)

106) மூன்றாம் கர்நாடகப் போர் நடைபெற்ற காலம் எது?

A) 1756-1765

B) 1756-1763

C) 1755-1765

D) 1753-1763

(குறிப்பு – ஐரோப்பாவில் 1756இல் தொடங்கிய ஏழு ஆண்டு போரின் விளைவே மூன்றாம் கர்நாடகப் போர் ஆகும். உலகளாவிய இம்மோதலில் முக்கிய எதிரிகளான இங்கிலாந்தும் பிரான்சும் போரிட்டன. இப்போ வட அமெரிக்காவிலும் மேற்குஆப்பிரிக்காவிலும் நடைபெற்றது)

107) இருட்டு அறை துயரம் (Black Hole Tragedy) என ஆங்கிலேய ஆவணங்களில் சுட்டும் நிகழ்வு நடந்த ஆண்டு எது?

A) ஜூன், 1756

B) ஜூன், 1757

C) ஜூன், 1758

D) ஜூன், 1759

(குறிப்பு – வங்காள நவாப் பால் கைது செய்யப்பட்ட 146 ஐரோப்பியர் 18க்கு 15அடி அளவுள்ள ஒரு அறையில் அழைக்கப்பட்டதாகவும் அவர்களில் 23 பேர் மட்டுமே உயிர் பிழைக்க மற்றவர்கள் மூச்சு திணறி இறந்து போனதாகவும் பழி சொல்லப்பட்டது.)

108) பிளாசிப் போரின்போது ஆங்கிலேயப் படைக்கு தலைமை ஏற்றவர் யார்?

I. ராபர்ட் கிளைவ்

II. வாட்சன்

III. மேஜர் கில்லஸ்பி

A) I மட்டும்

B) I, II மட்டும்

C) I, III மட்டும்

D) II, III மட்டும்

(குறிப்பு – வில்லியம் கோட்டையை சேர்ந்த ஆங்கில அதிகாரிகளின் இடர்பாடுகளை களைவதற்காக, வணிக குழு புனித ஜார்ஜ் கோட்டையில் இருந்து ஒரு வலுவான படைப்பிரிவை ராபர்ட் கிளைவ் மற்றும் வாட்சன் ஆகியோர் தலைமையில் அனுப்பி வைத்தது)

109) பிளாசிப் போருக்குப் பின்னர் வங்காள நவாப் ஆனவர் யார்?

A) சிராஜ் உத் தௌலா

B) மிர்சாபர்

C) மீர் காசிம் நவாப்

D) இவர்கள் யாரும் அல்ல

(குறிப்பு – பிளாசிப் போர் வணிக நிறுவனமாக இருந்த ஆங்கிலேயே கிழக்கிந்திய வணிகக் குழுவை வங்காளத்தின் மீது இறையாண்மை கொண்ட அரசியல் சக்தியாக மாற்றியது. சிராஜ்-உத்-தௌலா அதற்கு பதிலாக அவருக்கு துரோகம் இழைத்த மீர் ஜாபர் வங்காள நவாப் ஆக்கப்பட்டார். பின்னர் மிர்ஜாபருக்கு பதிலாக மீர் காசிம் நவாப் ஆக்கப்பட்டார்)

110) பக்சார் போர் நடைபெற்ற ஆண்டு எது?

A) 1762 ஆம் ஆண்டு

B) 1764 ஆம் ஆண்டு

C) 1766 ஆம் ஆண்டு

D) 1768 ஆம் ஆண்டு

(குறிப்பு – மீர்காசிம்நவாப், முகலாய அரசர் இரண்டாம் ஆலம் ஷா, அவத்தின் நவாபான சூஜா உத்தவுலா ஆகிய மூவரும் கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக போரிட்டனர். ஆங்கிலேயே கிழக்கிந்திய படையே வெற்றி பெற்றது)

111) பக்சார் போருக்குப் பின்னர் அலகாபாத் உடன்படிக்கையில்(1765இல்) கையெழுத்திட்டவர்கள் யார்?

I. ராபர்ட் கிளைவ்

II. முகலாய அரசர் இரண்டாம் ஷா ஆலம்

III.அவத்தின் நவாபான சூஜா உத்தவுலா

IV. மீர்காசிம்

A) I, II மட்டும்

B) I, III மட்டும்

C) I, IV மட்டும்

D) இவர்கள் அனைவரும்

(குறிப்பு – 1765இல் அலகாபாத் உடன்படிக்கையில் ராபர்ட் கிளைவ், முகலாய அரசர் இரண்டாம் ஷா ஆலம் ஆகிய இருவரும் கையெழுத்திட்டனர். இந்த உடன்படிக்கையின் படி வணிகக் குழு வங்காளம், பீகார், ஒரிசா ஆகிய பகுதிகளில் திவானி உரிமையை பெற்றது.)

112) இந்தியாவில் ஐரோப்பிய வணிகத் தளங்கள் இருந்த இடங்களை பொருத்துக.

I. டச்சுக்காரர் – a) சென்னை

II. ஆங்கிலேயர் – b) மாஹி

III. பிரெஞ்சுக்காரர் – c) கண்ணூர்

IV. போர்த்துக்கீசியர் – d) பழவேற்காடு

A) I-d, II-a, III-b, IV-c

B) I-d, II-b, III-a, IV-c

C) I-c, II-d, III-a, IV-b

D) I-d, II-c, III-a, IV-b

(குறிப்பு – டேனியர்கள் தரங்கம்பாடி, ஆங்கிலேயர்கள் சென்னை, மும்பை, அகமதாபாத், ஆக்ரா போர்த்துக்கீசியர்கள் டாமன், கள்ளிக்கோட்டை, கொச்சின் பிரெஞ்சுக்காரர்கள் புதுச்சேரி, மாஹி போன்ற இடங்களில் தங்களது வணிகத் தளங்களை நிறுவினர்)

113) மூன்றாம் கர்நாடகப் போருக்குப் பின்னர் பிரெஞ்சு அரசு இந்தியாவில் உள்ள பிரஞ்சு படைகளுக்கு தலைமை தளபதியாக யாரை அனுப்பி வைத்தது?

A) கவுண்ட்-டி-லாலி

B) புஸ்ஸி

C) துய்ப்பிளே

D) இவர்கள் யாரும் அல்ல

(குறிப்பு – ஐரோப்பாவில் ஏழாண்டு போர் வெடித்த உடன், வங்காளத்தில் பிரெஞ்சுக்காரர்களுக்கு சொந்தமான சந்தன்நகரை ராபர்ட் கிளைவ் கைப்பற்றினார். இத்துடன் வங்காளத்தில் பிரெஞ்சுக்காரர்களின் செல்வாக்கும் முடிவுக்கு வந்தது. பிரெஞ்சு அரசு கவுண்ட்-டி-லாலி என்பவரை இந்தியாவில் உள்ள பிரெஞ்சு படைகளுக்கு தலைமை தளபதியாக அனுப்பிவைத்தது)

114) பிரெஞ்சுக்காரர்கள் ராஜமுந்திரி மற்றும் மசூலிப்பட்டினத்தை முறையே __________ மற்றும் ____________ ஆங்கிலேயர்களிடம் இழந்தனர்.

A) 1756 இலும், 1759 இலும்

B) 1756 இலும், 1758 இலும்

C) 1758 இலும், 1759 இலும்

D) 1759 இலும், 1760 இலும்

(குறிப்பு – ஒருவேளை புதுச்சேரி தாக்கப்பட்டால் தனக்கு உதவியாக இருப்பதற்காக கவுண்ட்-டி-லாலி ஹைதராபாத்தில் இருந்த புஸ்ஸியை அழைத்தார். இடையில் தக்காண அரசியலில் மாற்றங்கள் வேகமாக நடைபெற்றன. ராஜாமுந்திரியை 1758இலும், மசூலிப்பட்டினத்தை 1759 இலும் பிரஞ்சுக்காரர்கள் ஆங்கிலேயர்களிடம் இழந்தனர். ஹைதராபாத் நிஜாம் சலபத்ஜங் போரே செய்யாமல் ஆங்கிலேயருடன் ஒப்பந்தம் செய்து கொண்டார்)

115) புஸ்ஸி மற்றும் லாலி ஆகியோரின் கூட்டுப் படை கீழ்காணும் எந்த இடத்தை கைப்பற்றியது?

A) சென்னை

B) திருச்சி

C) காஞ்சிபுரம்

D) தஞ்சாவூர்

(குறிப்பு – லாலி முதலில் டேவிட் கோட்டையை கைப்பற்றினார். அடுத்து தஞ்சாவூர் முற்றுகையிடப்பட்டது. எனினும் தஞ்சாவூர் முற்றுகை கைவிடப்பட்டது. பின்னர் துசி மற்றும் லாலி ஆகியோரின் கூட்டுப் படை காஞ்சிபுரத்தை கைப்பற்றி சென்னையை கைப்பற்ற விரைந்தது)

116) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – 1758ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் நாள் சென்னையில் முற்றுகையிட தொடங்கிய பிரெஞ்சுக்காரர்களால் 1759, பிப்ரவரி வரை சிறிதும் கூட முன்னேற முடியவில்லை.

கூற்று 2 – இதே சமயத்தில் சென்னையை விடுவிப்பதற்காக ஆங்கிலேய ஜெனரல் போகாக் ஒரு கப்பல் படையோடு இந்தியா வந்தார்.

கூற்று 3 – லாலி சென்னை முற்றுகையை கைவிட்டு காஞ்சிபுரம் செல்லும் கட்டாயத்திற்கு உள்ளானார்.

A) கூற்று 1, 2 மட்டும் சரி

B) கூற்று 2, 3 மட்டும் சரி

C) கூற்று 1, 3 மட்டும் சரி

D) எல்லா கூற்றுகளும் சரி

(குறிப்பு – ஆங்கிலேயர்கள் வங்காளத்தில் தீவிரமாக செயல்பட்டு கொண்டிருந்ததால் சென்னையில் 800 ஆங்கில வீரர்களையும், 2500 இந்திய வீரர்களை மட்டுமே கொண்டிருந்தனர். எனினும் பிரெஞ்சு படைகளால் சென்னையை கைப்பற்ற முடியவில்லை. இரண்டு பக்கங்களிலும் பலத்த சேதம் ஏற்பட்டது. படைகளுக்கு தேவையான பொருட்களின் வரத்து சுருங்கியதால் பிரெஞ்சுக்காரர்களால் முற்றுகையை நீடிக்க முடியவில்லை)

117) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. பிரெஞ்சு படைகளை ஆற்காட்டில் விட்டுவிட்டு லாலி புதுச்சேரி திரும்பினார். வந்தவாசியில் நோக்கி சென்ற ஆங்கிலப் படைகள் திடீரென காஞ்சிபுரத்தை தாக்கிக் கைப்பற்றின.

II. 1760, ஜனவரி மாதம் அயர் கூட், லாலி ஆகியோரிடையே வந்தவாசியில் நடைபெற்றது.

III. வந்தவாசி போரில் அயர் கூட் தோற்கடிக்கப்பட்டார்.

A) I, II மட்டும் சரி

B) I, III மட்டும் சரி

C) II, III மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – 1760, ஜனவரி மாதம் இறுதிப் போர் சர் அயர் கூட், கவுண்ட்-டி-லாலி ஆகியோரிடையே வந்தவாசியில் நடைபெற்றது. இப்போரின் முடிவில் புஸ்ஸி சிறை பிடிக்கப்பட்டார். லாலி புதுச்சேரிக்கு பின்வாங்கினார். எனினும் புதுச்சேரி உடனடியாக முற்றுகையிடப்பட்டது)

118) புதுச்சேரி எந்த நாளில் ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்டது?

A) 1761, ஜனவரி 4ஆம் நாள்

B) 1761, ஜனவரி 14ஆம் நாள்

C) 1761, ஜனவரி 15ஆம் நாள்

D) 1761, ஜனவரி 20ஆம் நாள்

(குறிப்பு – 1761ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் நாள் போர் முடிவுக்கு வந்தது. புதுச்சேரி ஆங்கிலேயர் வசம் வீழ்ந்தது. லாலி கைது செய்யப்பட்டு பிரஞ்சு அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டார். தன்னுடைய நாட்டில் லாலி விசாரணை செய்யப்பட்டு அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது)

119) பாரிசு உடன்படிக்கை எந்த ஆண்டு கையெழுத்தானது?

A) 1761 இல்

B) 1763 இல்

C) 1765 இல்

D) 1767 இல்

(குறிப்பு – ஏழு ஆண்டுகள் நடைபெற்ற போரின் இறுதியில், 1763ஆம் ஆண்டு பாரிஸ் உடன்படிக்கை கையெழுத்தானது. இந்த உடன்படிக்கையின்படி அனைத்து போர்களும் முடிவுக்கு வந்தன. இதன்படி புதுச்சேரியும், சந்தன்நகரும் மீண்டும் பிரெஞ்சுக்காரர்கள் வழங்கப்பட்டது)

120) வந்தவாசி போரின் இறுதியில் பாரிசு உடன்படிக்கைக்கு பின்னர் பிரெஞ்சுக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகள் எது?

I. புதுச்சேரி, காரைக்கால்

II. ஏனாம், மாஹி

III. சந்தன்நகர்

IV. கொச்சின்

A) I, II மட்டும்

B) I, II, III மட்டும்

C) I, II, IV மட்டும்

D) இவை அனைத்தும்

(குறிப்பு – பிரெஞ்சுக்காரர் புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் ( யூனியன் பிரதேசமான புதுச்சேரியின் பகுதிகள்), மாஹி ( கேரளாவில் உள்ள கண்ணூர் மாவட்டம்), சந்தன்நகர் (வங்காளம்) ஆகிய பகுதிகளை மட்டுமே தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டிருந்தனர். வணிக நிறுவனமாக இருந்த இங்கிலாந்து பெரும் நிலப்பரப்பை ஆளுகின்ற சக்தியாக மாறி அனைவராலும் அங்கீகரிக்கப்பட்ட காலனி ஆதிக்க நாடாக எழுச்சி பெற்றது)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!