Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Samacheer NotesTnpsc

ஐரோப்பியரின் வருகை Notes 11th History

11th History Lesson 11 Notes in Tamil

11. ஐரோப்பியரின் வருகை

அறிமுகம்

1757ஆம் ஆண்டு நடைபெற்ற பிளாசிப் போரில் வங்காள நாவாப்பை ஆங்கிலேயர் வெற்றிகொண்ட பிறகு அந்த ஆண்டை இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியின் தொடக்கம் என்று கூறுவது ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்து. ஆனால் ஐரோப்பியர் பதினாறாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே இந்தியாவிற்கு வந்துவிட்டனர். அவர்களின் நோக்கம் ஐரோப்பியச் சந்தைக்குத் தேவையான மிளகு, இலவங்கம், கிராம்பு முதலான நறுமணப் பொருட்களைக் கொள்முதல் செய்வதும் இந்தியப் பெருங்கடல் பகுதி வணிகத்தில் ஈடுபடுவதுமாகும்.

இந்தியாவில் முதலாவதாகத் தங்களை நிலைநிறுத்திக் கொண்ட ஐரோப்பியர் போர்த்துகீசியரே. பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதியில் ஐரோப்பியாவிலிருந்து ஆப்பிரிக்காவின் நன்னம்பிக்கை முனையைச் சுற்றி இந்தியாவிற்கு நேரடிக் கடல்வழியைக் கண்டுபிடித்தவர் வாஸ்கோடகாமா ஆவார். பிறகு மேற்குக் கடற்கரைப் பகுதியில் போர்த்துகீசியர் கோவாவை 1510இல் கைப்பற்றினார். இதனால் இந்தியாவிலிருந்த போர்த்துகீசியருக்கும் கிழக்கே மலாக்கா, ஜாவா பகுதிகளுக்கும் கோவா அரசியல் தலைமையிடமானது. போர்த்துகீசியர் தங்களுடைய அரசியல் ஆக்கிரமிப்பு, வலுவான கப்பற்படை ஆகியவை மூலம் இந்தியப் பெருங்கடல் பகுதி வணிகத்தைத் தங்களின் முறையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர். சையூ, டாமனிலிருந்த கோட்டைகள், கப்பற்படை வலிமை ஆகியவற்றின் துணைகொண்டு அரபிக்கடலின் கப்பல் போக்குவரத்தையும் அவர்களால் கட்டுப்படுத்த முடிந்தது. ஒரு நூற்றாண்டு கால இடைவெளிக்குப் பின்னர் இந்தியாவிற்கு வந்த ஐரோப்பியர் குறிப்பாக ஆங்கிலேயரும் டச்சுக்காரரும் தங்களின் நடவடிக்கைகளைப் போர்த்துகீசியரின் செயல்திட்டங்களை முன்மாதிரியாகக் கொண்டு வடிவமைத்துக் கொண்டனர். ஆகவே ஐரோப்பிய வணிக நிறுவனங்களின் வருகையானது இந்திய வணிக நிறுவனங்களின் வருகையானது இந்திய அரசியல் அதிகார சக்திகளோடும், உள்ளூர் வணிகர்கள் மற்றும் சமூகத்தோடும் தொடர்ந்து கொண்டிருந்த தொடர்பின் உச்சமே 1757இல் வங்காளத்தை ஆங்கிலேயர் கைப்பற்றியது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இப்பாடம் இரு பகுதிகளைக் கொண்டுள்ளது. முதல் பகுதி இந்திய அரசியல் வரலாற்றையும், 1600க்குப் பின்னர் அரசியல் அரங்கில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்தும் விவாதிக்கிறது. இரண்டாம் பகுதி ஐரோப்பிய வணிக நிறுவனங்களின் வருகையையும் அவை ஒவ்வொன்றும் இந்தியச் சமுதாயத்தில் ஏற்படுத்தியத் தாக்கத்தினையும் விவாதிக்கிறது.

I. அரசியல் நடவடிக்கைகள்

முகலாயப் பேரரசு, 1600 – 1650

  • 1600 முதல் 1650 வரையான காலப்பகுதியில் முகலாயப் பேரரசு அதன் அதிகாரத்தின் உச்சத்தில் இருந்தது. ஆங்கிலக் கவிஞர்கள் இந்தியாவின் செல்வ வளங்கள் குறித்து எழுதியுள்ளனர். இதனால் முகலாயப் பேரரசின் வலிமை குறித்தும் பொருளாதாரம் வளம் பற்றியும் ஐரோப்பியர் நன்கு அறிந்திருந்தனர்.
  • பதினாறு, பதினேழாம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவின் பல பகுதிகளைச் சார்ந்த பயணிகள் தொடர்ந்து இந்தியாவிற்கு வந்தனர். அவர்களின் பயணக் குறிப்புகள் முகலாயப் பேரரசு மற்றும் அக்காலச் சமூகம் குறித்த விரிவான சமகால விவரங்களைத் தருகின்றன.
  • அக்பர் 1600களில் ராஜஸ்தானையும் குஜராத்தையும் கைப்பற்றி முகலாயப் பேரரசின் எல்லைகளை விரிவுபடுத்தியதன் மூலம் தனது ஏகாதுபத்தியக் கனவுகளை நிறைவேற்றினார்.
  • 1573ஆம் ஆண்டு குஜராத்தையும் வென்றார். இதனால் மேற்காசியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் நுழைவாயிலாக இருந்த, மதிப்பு மிக்க வளங்களைக் கொண்ட துறைமுகமான சூரத் முகலாயரின் செல்வக்கிற்கு உள்ளானது.
  • வணிகம் தவிர மெக்காவிற்குப் புனிதப்பயணம் மேற்கொள்ளும் பயணிகளை ஏற்றிச் செல்லும் கப்பல்கள் சூரத்திலிருந்தே புறப்பட்டுச் சென்றன. முகலாய அரசு சூரத் நகரத்திற்கு இரண்டு ஆளுநர்களை நியமித்திருந்தது.
  • ஓர் ஆளுநர் நகரைப் பாதுகாப்பதற்காகத் தபதி நதியின் அருகே கட்டப்பட்டிருந்த, கண்காணிப்புக் கோபுரங்களுடன் கூடிய காவல் அரணில் பணியமர்த்தப்பட்டிருந்தார். மற்றொரு ஆளுநர் நகரம் தொடர்பான நிர்வாகத்திற்கும் சுங்க வரியை வசூலிப்பதற்கும் பொறுப்பாவார். இந்த நிர்வாக ஏற்பாடே முகலாயப் பேரரசுக்குச் சூரத் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர்த்தும்.

  • அக்பர் வங்காளத்தைக் கைப்பற்றி பீகாருக்கும் கிழக்கே தனது பேரரசை விரிவுப்படுத்த முயன்றார். எனினும் அடுத்த முப்பது ஆண்டுகளுக்கு வங்காளம் முகலாயப் பேரரசோடு ஒருங்கிணைக்கப்படாத பகுதியாகவே இருந்தது.
  • பின்னர் பேரரசர் ஜஹாங்கீர் காலத்தில்தான் வங்காளம் முகலாயப் பேரரசின் மாகாணங்களில் (சுபா)ன் ஒன்றாயிற்று. அக்பர் காலத்தில், தோடர்மாலின் வழிகாட்டலில் பேரரசின் வருவாய்த்துறை நிர்வாகம் முற்றிலும் சீரமைக்கப்பட்டதால் பேரரசு முழுவதும் ஒரே சீரான நிர்வாகமும் வரிவசூலும் நடைபெற்றது. அக்பர் தனது மறைவின்போது வகுவான, பொருளாதார வளம் மிகுந்த, நன்கு நிர்வகிக்கப்பட்ட பேரரசை விட்டுச் சென்றார்.
  • டச்சுக்காரரும் , அவர்களைத் தொடர்ந்து ஆங்கிலேயரும் 1600களின் தொடக்க ஆண்டுகளில் வணிக நடவடிக்கைகளைத் தொடங்குவதற்காகச் சூரத் வந்தனர். அவர்களுக்கு வணிகம் செய்வதற்கும், தங்களுடைய பண்டங்களைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளக் கிட்டங்கிகளைக் கட்டிக்கொள்வதற்கும் முகலாய ஆளுநர் அனுமதியளித்தார்.
  • ஆனால் நகரின் எந்தப் பகுதியையும் தங்களின் சொந்தப்பகுதியாக உரிமை கொண்டாடும் வகையில் சொந்தப்பகுதியாக உரிமை மறுத்துவிட்டார். இதனால் போர்த்துகீசியரை மாதிரியாகக்கொண்டு, வணிகத்தளம் அமைக்கும் தங்களுடைய ஆசை நிறைவேறாததால் டச்சுக்காரர் மனமுடைந்தனர்.
  • 1668 இல் பம்பாய் தீவுகளைப் பெற்று அங்கு தங்கள் தலைமையிடத்தை ஆங்கிலேயர் 1687இல் ஏற்படுத்தினர். அவர்களின் அடிப்படை நோக்கமானது தங்களது வணிக நடவடிக்கைகளுக்கு பம்பாயை மாற்று இடமாக உருவாக்குவதுதான்.
  • ஆனாலும் முகலாயரின் பாதுகாப்பிலிருந்த சூரத் வணிகர்களால் பெரிதும் விரும்பப்பட்ட வர்த்தக நடவடிக்கைகளின் மையமாகத் தொடர்ந்தது.

விஜயநகருக்குப் பின் தென்னிந்தியா (1600 – 1650)

  • தென்னிந்தியாவில் , குறிப்பாகத் தமிழகப் பகுதிகளில் இக்காலகட்டத்தில் முகலாயப் பேரரசின் மையப்படுத்தப்பட்ட உறுதியான அரசியல் நிலைக்கும் நேர் எதிரான சூழல் நிலவியது.
  • அரசியல் ரீதியாக இப்பகுதிகள் பிளவுபட்டு ஓர் நிச்சயமற்ற தன்மையைக் கொண்டிருந்தன. விஜயநகர ஆட்சியின்போது தமிழகப் பகுதியில் மதுரை, தஞ்சாவூர், செஞ்சி ஆகிய மூன்று நாயக்க அரசுகள் நிறுவப்பட்டன.
  • இவை நிறுவப்பட்டதன் நோக்கமே மைய அரசுக்குத் தேவைப்படும் நிதி ஆதாரங்களையும் மனித ஆற்றலையும் (இராணுவ வீரர்களை) திரட்டிக் கொடுப்பதுதான்.
  • 1565இல் நடைபெற்ற தலைக்கோட்டைப் போரில் அகமதுநகர், பீஜப்பூர், கோல்கொண்டா ஆகிய சுல்தானியக் கூட்டுப்படைகளால் விஜயநகர அரசு தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து முன்னர் ஆதிக்கம் செய்த மைய அரசு வலிமை குன்றியது.
  • விஜயநகரப் பேரரசின் அதிகாரத்தைப் பெயரளவிற்கு அங்கீகரித்த இந்த நாயக்க அரசுகள் நடைமுறையில் சுயாட்சி பெற்றவைகளாகச் செயல்பட்டன. அளவில் பெரிதான இந்நாயக்க அரசுகளோடு பல்வேறு பகுதிகள் உள்ளூர் ஆட்சியர்கள் வசமும் இருந்தன. அவர்களில் இராமநாதபுரம் அரசின் முக்கியமானவர் இராமநாதபுரம் அரசின் சேதுபதி ஆவார்.
  • அவரும் தன்னைச் சுதந்திர அரசராக நிலைநிறுத்திக் கொள்ள விரும்பினார். இத்தகைய நிச்சயமற்ற அரசியல் சூழலால் 1590க்கும் 1649க்குமிடையே இப்பகுதிகள் பல இராணுவ மோதல்களைக் கண்டன.
  • தங்கள் மேலாதிக்கத்தை நிறுவுவதற்காக செஞ்சி, மதுரை , தஞ்சாவூர் அரசுகளும் பல போர்களை செய்தன. விஜயநகரப் பேரரசருக்கு எதிராகக் கிளர்ச்சிகளும் நடைபெற்றன.
  • நடைபெற்றுக்கொண்டிருந்த இம்மோதல்கள் தவிர 1646இல் சோழமண்டலப் பகுதிகளை ஊடுருவிய கோல்கொண்டாவின் படைகள் பழவேற்காட்டிற்கும் சாந்தோமுக்கும் இடைப்பட்ட பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டன.
  • இக்காலகட்டத்தில் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் டச்சுக்காரரும் ஆங்கிலேயரும் சில இடங்களைத் தங்களுக்குச் சொந்தமானதாகப் பெற்று அவற்றின் மேல் தங்கள் உரிமையை நிறுவினர். நறுமணப் பொருட்களை உற்பத்தி செய்யும் இந்தோனேசியத் தீவுகளுடனான வணிகத்திற்குத் தேவைப்படும் சில்லறைப் பொருட்களைக் கொள்முதல் செய்யத் தங்களுக்குச் சோழமண்டலக் கடற்கரையில் வணிகத்தளம் தேவை என்பதை டச்சுக்காரர் உணர்ந்தனர்.
  • செஞ்சி நாயக்கரிடமிருந்து பழவேற்காடு பகுதியைப் பெற்ற அவர்கள் அங்கே ஒரு கோட்டையைக் கட்டிக்கொண்டனர். தமர்லா வேங்கடாத்திரி நாயக்கர் என்பவரிடமிருந்து நிலத்தைப் பெற்ற ஆங்கிலேயர் அங்கு 1639இல் புனித ஜார்ஜ் கோட்டையைக் கட்டினர். இவ்வாறாக ஆங்கிலேய வணிகத் தளங்கள் சென்னையில் நிறுவப்பட்டு காலப்போக்கில் வளர்ந்து, மதராஸ் அதன் மாகாணத் தலைநகரமானது.

முகலாயப் பேரரசு 1650 – 1700

  • பேரரசர் ஔரங்கசீப் தெற்கே தக்காணப்பகுதி வரை தனது பேரரசை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற பெருவியப்புடன் செயல்பாடுகளைத் தொடங்கினார். 1680களில் அகமதுநகர், பிஜப்பூர், கோல்கொண்டா ஆகிய அரசுகள் கைப்பற்றப்பட்டன. இதனால் சென்னைக்குத் தெற்கேயுள்ள பகுதிகளும் முகலாயரின் மைய ஆட்சியின்கீழ் கொண்டுவரப்பட்டன.
  • அளவுக்கு அதிகமாகப் பெரிதாகிவிட்ட முகலாயப் பேரரசு விரைவில் தனது பலவீனங்களை வெளிக்காட்டத் தொடங்கியது. சிவாஜியின் தலைமையில் மராத்தியர்கள் ஒன்றுபட்டு அதிகாரத்திலும் இராணுவ பலத்திலும் வளர்ந்து, 1664இல் சூரத்தைத் தாக்கிய போது இப்பலவீனம் தெளிவாகத் தெரிந்தது. எனவே சூரத்தைச் சூறையாடுவது கடைசி நேரத்தில் கைவிடப்பட்டது.
  • ஆனால் 1670இல் மராத்தியரால் சூரத்தும் அதன் வணிகமும் சூறையாடப்பட்ட போது ஏற்பட்ட அழிவுகளிலிருந்து மீள்வதற்குப் பல ஆண்டுகள் ஆகின.
  • தாங்கள் வெல்ல முடியாதவர்கள் என முகலாயர்கள் நினைத்ததற்கு இது பெரும் சவாலாக அமைந்ததோடு முகலாயப் பேரரசின் படிப்படியான சரிவுக்கு ஆரம்பமாகவும் அமைந்தது.
  • சூரத் தாக்குதலுக்குப் பின்னர், சிவாஜி தனது கவனத்தைத் தென்னிந்தியாவை நோக்கித் திருப்பி செஞ்சி, தஞ்சாவூர் நாயக்க அரசுகளைத் தோற்கடித்தார்.
  • சில ஆண்டுகளுக்குப் பின்னர் செஞ்சி முகலாயரால் கைப்பற்றப்பட்டாலும் தஞ்சாவூர் மராத்தியரால் ஆளப்படும் அரசாக நீடித்தது, கலாச்சாரப் பாரம்பரியங்களை உள்வாங்கி ஏற்கும் கொள்கையால் தமிழகப் பகுதியின் பண்பாட்டுத் தலைநகராகத் தஞ்சாவூரை மாற்றினர்.

முகலாயப் பேரரசும் வழித்தோன்றல்களும் 1700 – 1750

  • மாபெரும் முகலாய அரசர்களில் கடைசி அரசரான ஔரங்கசீப் 1707இல் இயற்கை எய்தினார். அவத், அவங்காளம், ஐதராபாத், கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து முகலாய அரசப்பிரதிநிதிகள் தங்களைச் சுதந்திரமான ஆட்சியாளர்களாக அறிவித்துக்கொண்டனர். ஆங்கிலேயரும் டச்சுக்காரரும் முகலாயப் பேரரசின் வலிமைகுன்றிய பாதுகாப்பற்ற நிலையை நன்கு அறிந்திருந்தனர்.
  • வங்காள, கர்நாடக நவாப்புகள் பெருமளவிலான பணத்தை ஆங்கிலேயரிடமிருந்து கடனாகப் பெற்றனர். அத்தொகையைத் திருப்பிச் செலுத்தும் ஒரு வழியாகத் தங்களின் பரந்த நிலப்பகுதிகளில் நிலவரியை வசூல் செய்து கொள்ளும் உரிமையை ஆங்கிலேயருக்கு வழங்கினர். வரி வசூலிப்பவர்களாக ஆங்கிலேயர் ஆட்சி தொடங்கியதை இது குறிக்கிறது.
  • டச்சுக்காரர் இதற்குள் பழவேற்காட்டிலிருந்து வெளியேறி தங்களின் தலைநகரை நாகப்பட்டினத்திற்கு மாற்றியிருந்தனர். இதே காலத்தில் சென்னை செழிப்பு மிக்க நகரமாக வளர்ச்சியடைந்திருந்தது.
  • ஆங்கிலேயர் பல ஆண்டுகாலப் போராட்டங்களுக்குப் பின்னர் இப்பகுதியின் அங்கீகரிக்கப்பட்ட சக்தியாயிருந்தனர். சூரத் நகரின் உள்ளூர் வணிகர்கள் தங்கள் பாதுகாப்புக் கருதி, தாங்கள் டச்சுக்காரரின் அல்லது ஆங்கிலேயரின் “பாதுகாப்பின் கீழ்” இருப்பதாக 1750 இல் அறிவித்துக்கொண்டார். எனவே உறுதியற்ற அரசியல் சூழலால் சூரத் அல்லலுற்றது.
  • இதனால் பம்பாய் மாற்று வணிகத்தளமாக மாறி, சூரத்திலிருந்தும் குஜராத்தின் ஏனைய பகுதிகளிலிருந்தும் வணிகர்களை ஈர்க்கத் தொடங்கியிருந்தது.

  • கர்நாடகம் என்பது உண்மையில் கன்னடம்மொழி பேசும் மக்கள் வாழ்கின்ற பகுதியைக் குறிப்பதாகும். பதினெட்டாம் நூற்றாண்டில் இது மேற்குத்தொடர்ச்சி மலைகளுக்கும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளுக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ள இன்றைய இந்திய மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடகா, தெற்கு ஆந்திரப்பிரதேசம் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். இப்பகுதிகளை ஆற்காட்டு நவாப் கட்டுப்படுத்தினார்.

பொருளாதாரம்

வேளாண்மை

  • கிராமப்புற வாழ் மக்களில் பெரும்பாலோர் தங்கள் வாழ்க்கைக்கு வேளாண்மையைச் சார்ந்திருந்தனர். உணவுதானியப் பயிர்களுடன் கூடுதலாக கரும்பு, எண்ணெய்வித்துக்கள், பருத்தி, அவுரி உள்ளிட்ட வணிகப் பயிர்களும் பயிர் செய்யப்பட்டன. இந்தியாவிற்குள் உபரியான பகுதியிலிருந்து பற்றாக்குறைப் பகுதிகளுக்கு உணவுத்தானியங்கள் , நெய், சர்க்கரை முதலான உணவுப் பண்டங்களைக் கொண்டு சென்றதன் மூலம் விறுவிறுப்பாக வணிகம் நடந்தது.
  • குறிப்பாக உணவுதானியங்கள் படகுகள் மூலம் கொண்டு செல்லப்பட்டன. தமிழகம், உணவு தானியங்களை ஆந்திர பிரதேசத்திலிருந்தும் வங்காளத்திலிருந்தும் இறக்குமதி செய்தது. குஜராத் மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் மிளகு, இலவங்கம், இஞ்சி ஆகியவற்றுக்குப் பதிலாக உணவுதானியங்களை மலபார் பகுதிக்கு ஏற்றுமதி செய்தது. இலங்கையிலும் பட்டாவியாவிலும் (இந்தோனேசியா) இருந்த டச்சு குடியேற்றங்களுக்கும் உணவு தானியங்கள் அனுப்பப்பட்டன.

பருத்தி உற்பத்தி

  • இந்தியா பொருள் உற்பத்திக்கான வலுவான அடிப்படைத்தளத்தைப் பெற்றிருந்தது. குறிப்பாக நாட்டின் பல்வேறு மையங்களில் உற்பத்தி செய்யப்பட்ட பருத்தியிழைத் துணிகளுக்காக அது புகழ் பெற்றிருந்தது.
  • நெசவுத் தொழில் நாட்டின் இரண்டாவது முக்கியமான பொருளாதார நடவடிக்கையாக இருந்தது. இதற்கு ஆதாரத் துணை நடவடிக்கைகளாக நூல் நூற்றலும் சாயத் தொழிலுமிருந்தன. கைவினைப் பொருளுற்பத்தி நகர்ப்புறம் கிராமப்புறம் ஆகிய இரண்டிலும் நடைபெற்றது. ஆடம்பரத் தொழில்கள் (எடுத்துக்காட்டாக உலோக வேலைகள்) நகரங்கள் சார்ந்தனவாக இருந்தன.
  • நெசவுத் தொழில் பெரும்பாலும் கிராமங்களில் மேற்கொள்ளப்பட்டது. நமது நாட்டில் பருத்தி விளைந்தது அதற்கு சாதகமாக அமைந்தது. படிகாரம் போன்ற வேதியியல் பொருட்களைப் பயன்படுத்தி நிரந்தர வண்ணங்களைத் தயாரித்துத் துணிகளுக்குச் சாயமேற்றுவதில் இந்தியக் கைவினைச் சமூகங்கள் சிறப்பான அறிவினையும் நிபுணத்துவத்தையும் பெற்றிருந்தன.
  • சோழமண்டலப்பகுதி வண்ணம் பூசப்பட்ட ‘கலம்காரி’ எனப்படும் துணி வகைக்குப் பெயர் பெற்றதாகும். இவ்வகைத் துணியில் அலங்காரக் கோடுகளோ அல்லது வடிவங்களோ முதலில் வரையப்பட்டு பின்னர் சாயம் ஏற்றப்படும். இது பதினாறாம் நூற்றாண்டில் தென்கிழக்கு ஆசிய நாடுகளில், குறிப்பாக இந்தோனேசியத் தீவுகளில் வாழும் மக்கள் விரும்பி வாங்குன் நுகர்வுப் பொருளானது.
  • இந்தியாவின் அனைத்து பகுதிகளிலிருந்தும் ஏனைய உலகநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பொருள்களுள் மிக முக்கியமானவை துணிகளேயாகும். பதினெட்டாம் நூற்றாண்டு வரை இந்நிலை தொடர்ந்தது.

சந்தைப்படுத்துதல்

  • வெளிச் சந்தைக்கான உற்பத்தியும் பரந்து விரிந்திருந்தது. இதனால் சொந்தத் தேவை என்ற எல்லையைத் தாண்டி பொருளுற்பத்தி வணிகமயமாயிருந்தது. இதற்குச் சந்தைப்படுத்தும் முகமை அமைப்புகள் தேவைப்பட்டன.
  • இவை உற்பத்தியாளரிடமிருந்து வேறுபட்ட வணிக வர்க்கத்தினர் அடங்கிய அமைப்புகளாகும். இவ்வாறு வணிகர்கள் கிராமப்புறப் பகுதிகளில் பரவலாக இருந்த உற்பத்தியாளர்களை உள்நாட்டிற்குள் இருந்த நகர சந்தைகளோடு நாட்டுக்கு வெளியேயிருந்த வெளிச் சந்தைகளோடும் இணைத்தனர்.
  • நாட்டிலிருந்த விரிவான ஒருங்கிணைந்த வணிக நடவடிக்கைகள் பல சுற்றுகளில் செயல்பட்டன. பொருள்கள் கிராமப்புறச் சந்தைகளிலிருந்து மண்டல அளவிலான சந்தைகளுக்கும், அடுத்து பெரிய நகர வணிக மையங்களுக்கும் சென்று இறுதியாகத் துறைமுகங்களைச் சென்றடைந்தன. அவையே நாட்டிற்கு வெளியேயுள்ள சந்தைகளுக்கான வாயில்களாகும்.

வணிகக் குழுக்கள்

  • பல்வேறு நிலைகளில் செயல்பட்ட பல்வகைப்பட்ட சந்தைகளைப் போலவே வணிகர்களும் ஒரே வகைப்பட்ட குழுவைச் சார்ந்தவர்கள் அல்ல. சிறிய இடங்களிலிருந்த சந்தைகளுக்குச் சேவை செய்ய வியாபாரிகளும் சில்லரை வர்த்தகர்களும் இருந்தனர்.
  • வணிக நடவடிக்கைகளை ஒரு பிரமிடாக நாம் கற்பனை செய்து கொண்டால் இவ்வணிகர்கள் பிரமிடின் அடித்தளப் பகுதியிலிருந்தனர். பிரமிடின் உச்சத்தில் பெரும் வர்த்தகர்கள் இருந்தனர். பெருமளவிலான மூலதனத்தைக் கையிருப்பாகக் கொண்ட இவர்களே கடல் வணிகத்தை முன்னின்று இயக்கியதோடு, துறைமுகங்களின் கடலோரப் பகுதியைச் சேர்ந்த உற்பத்தியாளர்களையும் கட்டுப்படுத்தினர். இவர்கள் தங்களின்கீழ் தரகர்களையும் துணைத்தரகர்களையும் பணியமர்த்தி உள்நாட்டு பகுதிகளிலோ துறைமுக நகரங்களின் உட்பகுதிகளிலோ உற்பத்தியாகும் பொருட்களைக் கொள்முதல் செய்தனர். இவர்களை வணிகர்களின் பிரமிடில் இடை அடுக்கைச் சார்ந்தவர்களாகக் கருதலாம்.

வங்கித்தொழிலும் வணிக முதலீட்டாளரின் எழுச்சியும்

  • பரந்துவிரிந்த இத்தகைய வணிகத்தை மேம்படுத்த வணிக நிறுவனங்களும் நன்கு வளர்ந்திருந்தன. பல்வகைப்பட்ட நாணயங்க புழக்கத்திலிருந்ததால், அவற்றின் தூய்மை நிலையைப் பரிசோதிக்கவும் அவற்றின் மதிப்பை அன்றைய அளவில் மதிப்பிடவும் ‘சராப்’ (Shroffs) எனப்பட்ட பணம் மாற்றுவோரும் இருந்தனர். அவர்கள் உள்ளூர் வங்கியாளராகவும் செயல்பட்டனர்.
  • ஓரிடம் விட்டு மற்றொரு இடத்திற்குப் பணத்தை ரொக்கமாக அனுப்புவதற்குப் பதிலாக வணிகர்கள் பணமாற்று முறிகளை (Bills of Exchange) வழங்கினர். உண்டி என்றழைக்கப்பட்ட இவை பல்வேறு இடங்களில் ‘சராப்’ களால் குறிப்பிட்ட தள்ளுபடியோடு பணமாக மாற்றப்பட்டன.
  • நன்கு வளர்ந்த உள்கட்டுமானங்களோடும் அமைப்புகளோடும் இருந்த வணிகம், பணம் படைத்த வணிகர்களுக்கு மேலும் பெரும் செல்வத்தை ஈட்ட உதவியது. இவ்வகையான வணிக இளவரசர்களை அல்லது முதலாளிகளை நாம் இந்தியா முழுவதும் காணலாம்.
  • சூரத்திலிருந்த பனியாக்கள், பாரசீக வணிகர்கள், அகமதாபாத்தின் நகர்சேத்துகள், வங்காளத்து ஜெகத் சேத்துகள் மற்றும் சோழமண்டலப்பகுதியைச் சேர்ந்த நகரத்தார் ஆகியோரை எடுத்துக்காட்டாகக் கூறலாம்.
  • சமகால ஐரோப்பியப் பார்வையாளர்கள், வணிகத்தில் வரும் இலாபம் அனைத்தையும் பெருவணிகர்களான இவர்களே கைவசப்படுத்திக் கொண்டதால், அடிப்படையில் உற்பத்தி செய்பவர்களான விவசாயிகள், நெசவாளர்கள் போன்றோரின் வருமானமும் வாழ்க்கையும் இரங்கத்தக்க நிலையில் இருந்தது எனக் குறிப்பிடுகின்றனர்.
  • ஆங்கிலேயர் நடுநிலைமை தவறி சார்புத் தன்மையுடன் இவ்வாறு கூறியுள்ளனர் என்று நினைத்தாலும், பிறருடைய கருத்துக்களை எடுத்துக்கொள்ளாமல் முழுமையான அளவுகோல்களைக் கொண்டு கணித்தாலும் அடிப்படைத் தொழிலாளர்களின் ஊதியமும் வாழ்க்கைத்தரமும் கீழ்நிலையிலிருந்தது என்பதே உண்மை இதன் காரணமாகப் பஞ்சங்கள் போன்ற இயற்கைச் சிஈற்றங்களின்போது இவர்கள் பாதுகாப்பற்றவர்களாகவே இருந்தனர்.
  • எடுத்துக்காட்டாக சென்னை மாகாணப் பகுதிகளில் 1678 முதல் 1750ஆம் ஆண்டுகளுக்கிடையே பத்துப் பஞ்சங்கள் ஏற்பட்டன. சில சமயங்களில் அவை பரந்தி விரிந்தனவாகவும் பல ஆண்டுகளுக்கு நீடித்துமிருந்தன. இவை கிராமப்புற ஏழை மக்கள் தங்களை அடிமைகளாக விற்றுக் கொள்ளும் அளவிற்கு அவர்களைத் தள்ளியது.
  • சோழமண்டலப் பகுதியிலிருந்து படாவியாவிற்கு அனுப்பப்பட்ட சரக்குகளோடு வழக்கமாக அனுப்பப்பட்ட ஆண், பெண் அடிமைகளின் பெயர்கள் டச்சு ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

கடல் கடந்த வணிகம்

  • கிழக்கு மற்றும் மேற்குக் கடற்கரைகளின் கடல் கடந்த வணிகமானது இந்தியப் பெருங்கடல் வணிகத்தில் இணைக்கப்பட்டு உறுதியான நன்கு வடிவமைக்கப்பட்ட வணிக முறையாகப் பதினாறாம் நூற்றாண்டில் மாறியது.
  • இந்தியப் பெருங்கடலில் சரக்குகளைச் சுமந்து செல்வது எனப்து பல்வேறு கூறுகளாகப் பிரிக்கப்பட்டு வரையறை செய்யப்பட்ட நிலைகளில் மேற்கொள்ளப்பட்டது.
  • சீனாவிலிருந்தும் ஏனைய தூரக்கிழக்கு நாடுகளிலிருந்தும் ஏனைய தூரக்கிழக்கு நாடுகளிலிருந்தும் வந்த கப்பல்கள் மலாக்காவை வந்தடைந்து சரக்குகள் அங்கு இறக்கப்பட்டு மேற்கேயிருந்து வந்த பொருட்கள் அக்கப்பல்களில் ஏற்றப்பட்டன.
  • ஏற்கனவே இறக்கப்பட்ட சரக்குகள் வேறு கப்பல்களில் ஏற்றப்பட்டு அவை மேற்குக் கடற்கரையிலுள்ள கள்ளிக்கோட்டை அல்லது குஜராத்திலுள்ள சூரத் தூறைமுகத்தை வந்தடையும். இப்படியான துறைமுகங்கள் இடைநிலைத் துறைமுகங்கள் (Enterpots) என்றழக்கப்பட்டன.
  • ஐரோப்பா, மேற்காசியாவிலிருந்து வந்த பொருட்கள், இத்துறைமுகங்களில் கிழக்கேயிருந்து வந்த பண்டங்கள் மற்றும் உள்ளூர் தயாரிப்புகளான நறுமணப் பொருட்கள் , சாயம், துணி, உணவு தானியப் பொருட்களுக்காக மாற்றப்படும்.
  • பதினாறாம் நூற்றாண்டில் கள்ளிக்கோட்டை மதிப்பிழந்தது. மாறாக, பரந்துவிரிந்த பல்வகைப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்யும் கடலோரப் பகுதிகளைக் கொண்ட குஜராத் துறைமுகங்கள் முக்கியத்துவம் பெற்றன.
  • சோழமண்டலக் கடற்கரையின் துறைமுகங்களான மசூலிப்பட்டினம், பழவேற்காடு ஆகியவையும், அவற்றிற்கு தெற்கே உள்ள ஏனைய தூறைமுகங்களும் பர்மா, மலாய் தீபகற்பத்திலிருந்து வரும் கப்பல்களுக்கு இடைநிலைத் துறைமுகங்களாகச் சேவை செய்தன.

ஐரோப்பியர் வருகை

  • நன்கு நிறுவப்பட்ட முறைப்படுத்தப்பட்ட இவ்வணிகத்திற்கு வெளியே இருந்து வந்த முதல் அதிர்ச்சி என்பது போர்த்துகீசியரிலிருந்து தொடங்கிய ஐரோப்பியரின் வருகையே ஆகும்.
  • ஐரோப்பாவிற்குத் தேவையான நறுமணப் பொருட்களை நேரடியாகப் பெறுவது என்பதே ஐரோப்பியரின் முதன்மை நோக்கமாக இருந்தது. பண்டைய நாட்களில் நறுமணப் பொருட்கள் கடல் வழியாகப் பாரசீக வளைகுடாவிலுள்ள தூறைமுகங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து நிலவழிப் பாதை மூலம் மத்திய தரைக்கடல் பகுதியைச் சென்றடையும். இருவருக்கிடையில் எளிமையான நேரடொயான வணிகத்திற்கு ஆசியச் சந்தைகளில் வாய்ப்பில்லை என்பதை ஐரோப்பியர் விரைவிலேயே புரிந்துகொண்டனர்.
  • ஏனெனில் உள்ளூர்ப் பொருளாதாரங்களில் ஐரோப்பியப் பொருட்களுக்கான (தங்கம், வெள்ளி தவிர) தேவை இல்லை. ஆனால் மற்றொரு புறம் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சந்தைகளில் இந்தியத் துணிகளுக்கு இருந்த உலகளாவிய தேவையால் இந்தியத் துணிகள் செலாவணி ஊடகமாயிற்று.
  • இந்தோனேசியத் தீவுகளில் சோழமண்டலக் கடற்கரைப் பகுதியைச் சேர்ந்த வண்ணம்பூசப்பட்ட துணிகளுக்கான தேவை டச்சுக்காரரையும் ஆங்கிலேயரையும் கிழக்குக் கடற்கரையில் தங்கள் நிறுவனங்களை அமைத்துக் கொள்ளச் செய்தது.
  • அங்கிருந்துகொண்டு துணிகளைக் கொள்முதல் செய்து அவற்றை இலாபகரமான நறுமணப் பொருட்களுக்காகப் பண்டமாற்று செய்து கொண்டனர்.

இந்திய வணிகர்களுடன் கூட்டமைப்பு

  • இந்தியாவில் மிகப்பெரும் வணிகர்களின் உதவியும் உறவும் இருந்தால்தா தாங்கள் வெற்றிபெற இயலும் என்பதைத் தொடக்கத்திலிருந்தே ஐரோப்பியர் உணர்ந்தனர்.
  • இந்திய வணிகர்கள் ஐரோப்பியர்களிடம் தங்கள் வணிகத்தை விரிவுபடுத்தக் கிடைத்த புதிய வணிக வாய்ப்பினைக் கண்டு அவர்களோடு இணைந்து செயல்பட்டனர்.
  • சூரத் நகரில் பிரச்ச்னைகள் ஏற்பட்டதால் தங்களுக்கு ஆதரவு தரும் முகலாய அரசாங்கத்தின் கீழிருந்த சென்னை, பிரெஞ்சுக்காரரின் கீழிருந்த புதுச்சேரி ஆகிய காலனியாதிக்க நிலப்பகுதிகளைத் தங்களுக்குப் பாதுகாப்பான இடங்களாக இந்திய வணிகர் கருதினர்.
  • தமிழகப் பகுதியில் தொடரும் அரசியல் குழப்பங்களிலிருந்து விலகி இவ்விடங்களிலிருந்து தங்கள் வணிகத்தைப் பாதுகாப்பாக செய்ய இயலும் என நினைத்தனர்.
  • ஐரோப்பியருடன் இந்திய வணிகர் மேற்கொண்ட வணிக நடவடிக்கைகள் 1700 ஆம் ஆண்டு வரை பாதகமற்ற முறையிலிருந்தன. சூரத்தில் மராத்தியப் படையெடுப்புக் குறித்த அச்சத்தினாலும் தகுந்த பாதுகாப்பு வழங்க இயலாத முகலாய அரசின் இயலாமையினாலும் சூழ்நிலை மாறியது.
  • சென்னையில் தங்களை வலுவாக நிலைநிறுத்திக் கொண்ட ஆங்கிலேயரால் ஐரோப்பாவிற்கானத் துணி ஏற்றுமதியை அதிகரிக்க, இந்திய வணிகர்களை ஏற்கவியலாத வணிக நிபந்தனைகளை ஏற்க வைக்க முடிந்தது.
  • படிப்படியாக ஆங்கிலேய வணிகருக்கும் உள்ளூர் வணிகருக்கும் இடையிலான அதிகார உறவு மாறத் தொடங்கியது. முந்தைய நூற்றாண்டில் வணிகக் காட்சியில் கதாநாயகர்களாக இருந்த வர்த்தக இளவரசர்கள் முற்றிலும் காணாமல் போனதை நம்மால் பார்க்க முடிகிறது.
  • ஐரோப்பாவில் இந்தியத் துணிகளுக்கான தேவை அதிகரித்ததால் அது இந்தியப் பொருளாதாரத்தின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தொடக்கத்தில் இத்தேவை அதிகரிப்பு உள்ளூர் பொருளாதாரத்திற்குப் பயனளிப்பதாக அமைந்தது.
  • உற்பத்திக் காரணிகளும் (தொழிலாளர், கச்சாப் பொருள், மூலதனம்) நேர்மறையாக வினையாற்றின. இருந்தபோதிலும் ஐரோப்பாவின் தேவை தொடர்ந்து அதிகரித்தபோது அதிக உற்பத்திக்காகக் கொடுக்கப்பட்ட நெருக்கடி மிக விரைவாக உற்பத்தி ஆதாரங்களைப் பாதித்தது.
  • தெற்கே அடிக்கடி ஏற்பட்ட பஞ்சங்களும், கச்சாப் பொருட்களுக்கும் உணவு தானியங்களுக்கும் ஏற்பட்ட பற்றாக்குறையையும் நெசவாளர்கள் கூடுதலாக ஏற்க வேண்டிய சுமைகளாயின.
  • இப்படி அதிகமான வணிக வாய்ப்புகள் குறுகிய காலத்திற்குப் பயனளித்ததாலும் நீண்டகால விளைவென்பது அவ்வாறே இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை.
  • இந்த 150 வருட காலத்தில் இந்தியாவிலிருந்த ஆங்கிலேயர் படிப்படியான மாற்றத்திற்கு உள்ளாயினர். வணிகராயிருந்த ஆங்கிலேயர் வணிகப் பேரரசை நிறுவியவர்களாக உருமாறி இறுதியில் நாட்டின் பெரும்பகுதி ஆட்சியாளராக மாறினர்.

II. ஐரோப்பியர் வருகையும் அதற்குப் பின்பும்

இந்தியாவில் போர்த்துகீசியர்

  • தனது முதல் பயணத்தில் வாஸ்கோடகாமா மூன்று கப்பல்களில் 170 நபர்களோடு வந்தார். கள்ளிக்கோட்டை அரசர் சாமுத்ரியினுடைய (சாமரின்) நட்புணர்வு வாஸ்கோடகாமாவிற்கு மகிழ்ச்சியளித்தது.
  • 1498 ஆகஸ்ட் 29ஆம் நாள் தன்னுடன் வந்தவர்களில் உயிரோடிருந்த ஐம்பத்தைந்து மாலுமிகளுடனும் மூன்றில் இரண்டு கப்பல்களில் இந்தியச் சரக்குகளுடனும் ஊர்திரும்பும் பயணத்தை மேற்கொண்டார்.
  • வாஸ்கோடகாமாவின் வெற்றி போர்த்துகளை 1200 மாலுமிகளை 13 கப்பல்களுடன் பெட்ரோ ஆல்வரிஸ் கேப்ரல் என்பவரின் தலைமையில் மீண்டும் அனுப்பி வைக்கச் செய்தது.
  • 1502 அக்டோபர் 29 ஆம் நாள் 20 கப்பல்களுடன் வாஸ்கோடகாமா மீண்டும் கள்ளிக்கோட்டை வந்தார். அங்கிருந்து அதிக வசதிகளைக் கொண்ட கொச்சிக்குச் சென்றார்.
  • ஐரோப்பிய வணிகம் பெருக வேண்டுமெனில் வணிகத்தின் மீது அராபியர்கள் கொண்டிருந்த முற்றுரிமை உடைக்கப்பட வேண்டுமென்பதை அவர் உணர்ந்தார். கொச்சி மற்றும் கள்ளிக்கோட்டையின் இந்து மன்னர்களிடையே நிலவிய பகைமையை அவர் தனது நலனுக்குப் பயன்படுத்திக் கொண்டார்.
  • இந்தியப் பெருங்கடல், செங்கடல் வணிகத்தில் அராபியர் கொண்டிருந்த முற்றுரிமையை ஒழித்தார். போர்த்துகல்லுக்குத் திரும்பும் முன்னர் கொச்சியில் ஒரு சரக்குக் கிடங்கையும் கண்ணூரில் ஒரு சிறைச்சாலையையும் நிறுவினார்.

போர்த்துகீசிய வணிகம் ஒருங்கிணைக்கப்படல்

  • ஆண்டுதோறும் பயணம் மேற்கொள்வதை நிறுத்திய போர்த்துகீசியர், இந்தியாவில் ஒரு ஆளுநரை அமர்த்த முடிவு செய்தனர். முதல் ஆளுநரான பிரான்ஸிஸ்கோ –டி-அல்மெய்டா “நீலநீர்க் கொள்கை”யைக் கடைபிடித்தார்.
  • இக்கொள்கையின் மூலம் அவர் குடியிருப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்காமல் கப்பல்களின் எண்ணிக்கையை அதிகரித்து கப்பற்படையை வலுப்படுத்தினார். சாமுத்ரியினுடைய கப்பற்படையையும் எகிப்திய சுல்தானின் கப்பற்படையும் மூழ்கடித்தார். கொச்சி அரசருடன் நட்பு பூண்டு அவர் கொச்சி, கண்ணூர், மலபார் கடற்கரையின் ஏனைய இடங்களிலும் கோட்டைகளைக் கட்டினார்.
  • அல்மெய்டாவிற்குப் பின்னர் அல்புகர்க் (1509 – 1515) பதவியேற்றார். இந்தியாவில் போர்த்துகீசியப் பேரரசை உண்மையில் நிறுவியவர் இவரே. பீஜப்பூரின் அரசர் யூசுப் அடில் கானைத் தோற்கடித்த இவர் 1510இல் கோவாவைக் கைப்பற்றினார்.
  • கோவாவை முக்கிய வணிக மையமாக வளர்த்தெடுத்தார். அனைத்து மதம் சார்ந்த மக்களையும் கோவாவில் குடியேற ஊக்கப்படுத்தினார். ஐரோப்பியர் இந்தியப் பெண்களைத் திருமணம் செய்து கொண்டு, போர்த்துகீசியர் கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகளில் குடியேறுவதை ஆதரித்தார்.
  • இந்தியாவிற்கும் –சீனாவிற்கும், மெக்காவிற்கும் –கெய்ரோவிற்கும் இடைப்பட்ட வணிகத் தடங்களின் மீது மேலாதிக்கம் செலுத்திவந்த முஸ்லீம் வணிகர்களைத் தோற்கடித்த அவர் மலாக்காவை (மலேசியாவில் உள்ளது) கைப்பற்றியதால் பேரரசு விரிவடைந்தது.
  • அராபியரைத் தக்கி ஏடன் நகரைக் கைப்பற்றுவதில் வெற்றிபெற்றார். 1515இல் ‘ஆர்மசு’ துறைமுகம் அவர் கட்டுப்பாட்டின் கீழ்வந்தது.
  • இந்தியாவில் போர்த்துகீசிய பேரரசை வலிமைப்படுத்துவதில் மேலும் இரண்டு ஆளுநர்கள் முக்கியப் பங்காற்றினர். அவர்கள் நினோ டா குன்கா, ஆன்டானியோ டி நொரன்கா 1537இல் டையூவையும் கைப்பற்றினார்.
  • 1559இல் டாமன் தூறைமுகம் இமாத்-உல்-முல்க் என்பவரிடமிருந்து பறிக்கப்பட்டது. இதே சமயத்தில் பதினாறாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் கொழும்புவில் ஒரு கோட்டை கட்டியதைத் தொடர்ந்து இலங்கையின் மீதான போர்த்துகீசியரின் கட்டுப்பாடு அதிகமானது.
  • டி நொரன்காவின் காலத்தில்தான் (1571) முகலாய அரசர் அக்பர் குஜராத்திலுள்ள காம்பேவுக்கு வந்தார். போர்த்துகீசியருக்கும் முகலாயருக்கும் இடையிலான தொடர்பு உருவானது.

  • ஸ்பெயின் நாட்டு அரசர் இரண்டாம் பிலிப் 1580இல் போர்த்துக்கல் நாட்டைக் கைப்பற்றி இணைத்துக் கொண்டார். போர்த்துகீசியரை முதல் இலங்கையில் தோற்கடித்த டச்சுக்காரர் பின்னர் மலபார் கடற்கரையிலிருந்த அவர்களின் கோட்டையையும் கைப்பற்றினர்.
  • இதனால் போர்த்துகீசியர்இந்தியாவில் தங்கள் குடியேற்றங்களைப் பாதுகாப்பதைக் காட்டிலும் பிரேசிலின் மீது ஆர்வம் காட்டத் தொடங்கினர்.
  • உடன்கட்டை (சதி) ஏறும் பழக்கத்தை நிறுத்த அல்புகர்க் முயன்றார்.

போர்த்துகீசிய வருகையின் தாக்கம்

  • இந்திய அரசியல் வரலாற்றில் முதன்முறையாக ஐரோப்பியர் இந்திய அரசர்களை வென்று அவர்களின் பகுதிகளைக் கைப்பற்றினர்
  • இந்திய அரசர்கள் எப்போதும் பிரிந்திருந்தனர். அதை ஐரோப்பியர் சாதகமாக்கிக் கொண்டனர்.
  • போரிடுவதில் ஐரோப்பியர் புதிய முறைகளைக் கைக்கொண்டனர். வெடிமருந்தும், வகிமை வாய்ந்த பீரங்கிப்படையும் முக்கியப் பங்கு வகித்தன.
  • போர்த்துகீசியரால் அராபியரின் வணிக முற்றுரிமையைக் கட்டுப்படுத்த முடிந்தது. ஆனால் உண்மையில் அது அவர்களுக்கு உதவவில்லை; மாறாக அது ஆங்கிலேயருக்குப் பயனளித்தது. ஆங்கிலேயர் கடற்கொள்ளையரை அழித்து கடற்பயணத்தைப் பாதுகாப்பானதாக ஆக்கினர்.
  • தாங்கள் கைப்பற்றிய பகுதிகளில் ஐரோப்பியருக்கும் இந்தியருக்கும் இடையிலான திருமணங்களைப் போர்த்துகீசியர் ஊக்குவித்ததன் விளைவாக ஒரு புதிய யூரேசிய இனக்குழு உருவானது. இவர்கள் பின்னாளில் ஆப்பிரிக்காவிலும் ஆசியாவிலுமிருந்த போர்த்துகீசியரின் காலனிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
  • சென்னை சாந்தோம் போர்த்துகீசியரின் வருகைக்கான முக்கியச் சான்றாக உள்ளது. போர்த்துகீசியர் கருப்பர் நகரம் (BlACK Town) என்று மயிலாப்பூரை அழைத்தனர் (ஆங்கிலேயர் கருப்பர் நகரம் என்று ஜார்ஜ் டவுனை அழைத்தனர்).
  • போர்த்துகீசியரின் குடியேற்றங்களுக்குப் பிறகு சேசு சபையைச் சார்ந்த சமயப்பரப்பாளர்கள் இந்தியா வந்தனர். அவர்களில் குறிப்பிடத்தகுந்தவர்கள்,
  1. இராபர்டோ டி நொபிலி தமிழிலும் சமஸ்கிருதத்திலும் விரிவாக எழுதினார் இவர் தமிழ் உரைநடையின் தந்தையெனக் கருதப்படுகிறார்.
  2. ஹென்ரிக்ஸ், போர்த்துகல் நாட்டு யூதரான இவர் தமிழ் அச்சுப் பதிப்பின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.
  • மீன்பிடிக்கும் உரிமை, படகோட்டும் உரிமை, முத்துக்குளித்தல் ஆகியவை தொடர்பாக போர்த்துகீசியருக்கும் கீழைக் கடற்கரையைச் சார்ந்த மூஸ்லீம் குழுக்களுக்கும் இடையே 1530களில் மோதல்கள் நடந்தன.
  • இதைப் பொறுத்தமட்டில், பரதவ மக்களின் ஒரு குழுவானது, ஆயுதம்பூண்ட முஸ்லீம் வணிகர்களின் தாக்குதல்களால் தாங்கள் பட்ட துயரங்களை கொச்சியிலிருந்த போர்த்துகீசிய அதிகாரிகளிடம் முறையிட்டு உதவி கேட்டனர்.
  • இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட போர்த்துகீசியர் தங்களது ரோமன் கத்தோலிக்க குருமார்களைக் கீழைக் கடற்கரைக்கு அனுப்ப, ஆயிரக்கணக்கான பரதவகுல மக்கள் கத்தோலிக்கக் கிறித்தவ மதத்திற்கு மதமாறினர்.
  • இதனைத் தொடர்ந்து சேசு சபையை உருவக்கியவர்களில் ஒருவரான புனித பிரான்ஸிஸ் சேவியர் 1542இல் கோவா வந்தார். பின்னர் மதம் மாறியவர்களுக்கு திருமுழுக்கு சடங்கு நடத்துவதற்காகத் தூத்துக்குடி, புன்னைக்காயல் வரை பயணம் செய்தார். சோழமண்டலக் கடற்கரைக் கிராமங்களில் உயர் கோபுரங்களோடு உருவான தேவாலயங்களை இன்றும் காணலாம்.
  • கார்டஸ் (cartaz) என்ற பெயரில் போர்த்துகீசியர் வழங்கும் பாதுகாப்பை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். இல்லையெனில் வன்முறை மூலம் வணிகத்திற்கு இடையூறு செய்யப்போவதாக பயமுறுத்துவர்.
  • கார்டஸ் மூறையில் போர்த்துகீசியர் வணிகர்களிடமிருந்து பணம் பறித்தனர். கடற் கொள்ளையர்களுக்கு எதிராக தாங்கள் பாதுகாப்பு வழங்குவதாக கூறிக்கொண்டனர். ஆனால் அதைப் போன்ற இடையூறுகளில் பலவற்றை செய்தவர்களும் போர்த்துகீசிய கடற்கொள்ளையரே.

டச்சுக்காரர்

  • ஜேன் ஹீயுன் வான் லின்சோடென் என்னும் நெதர்லாந்தைச் சேர்ந்த லிஸ்பனில் வாழ்ந்து வந்த வணிகர் டச்சுக்காரரின் முதல் பயணத்தை தென்கிழக்கு ஆசியவை நோக்கி 1595 ஆம் ஆண்டு மேற்கொண்டார்.
  • கீழ்த்திசை நாடுகளோடு வணிகம் செய்வதற்காகப் பல நிறுவனங்கள் வணிகர்களாலும் தனிநபர்களாலும் நிறுவப்பட்டிருந்தன. அரசு தலையிட்டு அவையனைத்தையும் ஒருங்கிணைத்து 1602இல் டச்சு கிழக்கிந்தியக் கம்பெனியை உருவாக்கியது. புதிதாக உருவான இக்கம்பெனி இந்தோனேசியாவில் தனது ஆதிக்கத்தை நிறுவியது.
  • டச்சுக்காரர் மலாக்காவை போர்த்துகீசிரியரிடமிருந்து 1641இல் கைப்பற்றினர். மேலும் 1658இல் இலங்கையைத் தங்கள் வசம் ஒப்படைக்கப் போர்த்துகீசியரைக் கட்டாயப்படுத்தினர்.
  • நறுமணத் தீவுகளில் டச்சுக்காரர் வெற்றி பெற்றனர். ஆனால் இந்தியாவில் ஆங்கிலேயரிடம் ஏற்பட்ட பின்னடைவுகளால் அவர்கள் துயருற்றனர்.
  • 1623இல் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஊழியர்கள், போர்த்துகீசியர், ஜப்பானியர் அடங்கிய இருபது பேர்களை டச்சு கிழக்கிந்தியக் கம்பெனியின் முகவர்கள் இந்தேனேசியாவிலுள்ள அம்பாய்னா என்னும் தீவில் சித்திரவதை செய்து கொன்றனர். இது அம்பாய்னா படுகொலை என்றழைக்கப்படுகிறது.

தமிழகத்தில் டச்சுக்காரர்

  • 1502 முதல் பழவேற்காட்டைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த போர்த்துகீசியர் டச்சுக்காரரால் அகற்றப்பட்டனர். சென்னை நகருக்கு வடக்கே 60 கி.மீ தொலைவில் அமைந்துள்ள பழவேற்கட்டில் டச்சுக்காரர் ஜெல்டிரியா என்னும் பாதுகாப்புக் கோட்டையைக் கட்டினர்.
  • 400 ஆண்டுகள் கடந்தும் அதன் எச்சங்களை இன்றும் காணலாம். இக்கோட்டை ஒரு காலத்தில் டச்சுக்காரரின் அதிகார பீடமாக இருந்தது. தங்கள் அதிகாரத்தை 1605இல் மசூலிப்பட்டினத்தில் நிறுவிய டச்சுக்காரர் பழவேற்காட்டில் சில குடியேற்றங்களை 1610இல் நிறுவினர்.
  • நாகப்பட்டினம், புன்னைக்காயல், பரங்கிப்பேட்டை , கடலூர் (திருப்பாதிரிப்புலியூர்), தேவனாம்பட்டினம் ஆகியவை டச்சுக்காரரின் ஏனைய கோட்டை மற்றும் காலனியாதிக்கப் பகுதிகளாகும்.

  • பழவேற்காடு, டச்சுக் கிழக்கிந்தியக் கம்பெனியின் சோழமண்டலப்பகுதியின் தலைமையிடமாயிற்று. பழவேற்காட்டிலிருந்து மேலை நாடுகளுக்கு வைரம் ஏற்றுமதி செய்யப்பட்டது.
  • ஜாதிக்காய், ஜாதிபத்ரி, கிராம்பு ஆகியவையும் இங்கிருந்து ஐரோப்பாவிற்கு அனுப்பப்பட்டன. பதினேழாம் நூற்றாண்டில் டச்சுக்காரர் கிழக்குப் பகுதிகளைக் கட்டுப்படுத்துவதற்காக வெடிமருந்து தொழிற்கூடம் ஒன்றை நிறுவினர்.
  • அடிமை வியாபாரத்தில் டச்சுக்காரர் ஈடுபட்டனர் என்பதற்கும் ஆதாரங்கள் கிடைத்துள்ளன. வங்காளத்திலிருந்தும், குடியேற்றப்பகுதிகளான தேங்காய்ப்பட்டினம், காரைக்கால் ஆகியவற்றிலிருந்தும் அடிமைகள் பழவேற்காட்டிற்குக் கொண்டுவரப்பட்டனர்.
  • அடிமைகளைப் பிடிப்பதற்காக டச்சுக்காரர் சென்னையில் தரகர்களை நியமித்தனர். இவர்கள் அனைவரும் சென்னையில் கப்பல்களில் ஏற்றப்பட்டனர். பஞ்சமும், வறட்சியும் போர்களும் அடிமை வணிகம் செழிக்க உதவின.
  • லெய்டன் பல்கலைக்கழக முனைவர் பட்ட ஆய்வாளரான வில் ஓ டிஜிக் (Wil O Dijk) என்பார் ஒரு ஆய்வுக்கட்டுரையில் , இங்கிருந்தும் வங்காள விரிகுடாப் பகுதிகளிலிருந்தும் டச்சுக் கப்பல்களில் ஏற்றி அனுப்பப்பட்ட அடிமைப் பயணிகளின் பட்டியலைக் குறிப்பிட்டுள்ளார். 1620 ஜூன் முதல் 1665 நவம்பர் வரை மொத்தம் 26,885 ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அடிமைகளாக அனுப்பப்பட்டுள்ளனர். அவர்களில் 1379 நபர்கள் உயிரிழந்தனர். விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் தஞ்சாவூர், மதுரை, செஞ்சி நாயக்க அரசுகளால் உருவான பஞ்சம் போன்ற காரணங்களால் சோழமண்டலத்தில் அடிமை ஏற்றுமதி பெருகியது என அவ்வாய்வாளர் மேலும் குறிப்பிடுகின்றார்.

பிரெஞ்சுக்காரர்

  • இந்தியாவுடன் வணிக உறவை மேற்கொள்ள பிரெஞ்சுக்காரர் 15278ஆம் ஆண்டிலேயே முயற்சி மேற்கொண்டனர். போர்த்துகீசியராலும் டச்சுக்காரராலும் தூண்டப்பட்ட பிரெஞ்சுக்காரர் 1664இல் உருவாக்கப்பட்ட பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பெனி மூலம் தங்கள் வணிகச் செயல்பாடுகளைத் தொடங்கினர்.
  • ஏனைய ஐரோப்பிய நாடுகளின் வணிக நிறுவனங்கள் தனியார் வணிக நிறுவனங்களாக இருக்க, பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பெனி அரசர் பதினான்காம் லூயியின் திட்டமாக அமைந்தது. அவருடைய நிதியமைச்சரான கோல்பெர் பிரெஜ்சுக் கிழக்கிந்தியக் கம்பெனி நிறுவப்படுவதற்கு காரணமாக இருந்தார்.
  • பிரான்சின் முயற்சியானது அரசால் தொடங்கப்பட்ட முயற்சியாக இருந்ததால் பொதுமக்களின் ஆர்வத்தை அது ஈர்க்கத் தவறியது. மேலும் வரிவிதிப்பதற்கான மற்றொரு வழியென்றே அதை மக்கள் கருதினர்.

மடகாஸ்கர் வழியாகப் புதுச்சேரி

  • 1602இல் பிரெஞ்சு வணிகர்கள் ஆப்ரிக்காவிலுள்ள மடகாஸ்கரை அடைந்தனர். மடகாஸ்கரைத் தங்களின் காலனியாதிக்கப் பகுதியாக கொண்டிருந்தாலும், 1674இல் கடற்கரையோரமுள்ள ஒரு சிறு வணிகமுகாமைத் தவிர ஏனைய இடங்களைக் கைவிட நேர்ந்தது.
  • இந்தியாவிலிருந்த பிரெஞ்சு முகவரான பெர்பர், செப்டம்பர் 4, 1666இல் முகலாயப் பேரரசர் ஔரங்கசீப்பிடமிருந்து அனுமதி ஆணை பெற்று தங்களின் முதல் நிறுவனத்தை டிசம்பர் 1668 இல் டச்சுக்காரரின் எதிர்ப்பையும் மீறி சூரத்தில் அமைத்தார். ஓராண்டிற்குள் மசூலிபட்டினத்தில் மற்றுமொரு நிறுவனமும் அமைக்கப்பட்டது.
  • இந்தியாவில் காலூன்ற வலுவான இடம் தேவை என்பதை உணர்ந்த நிதியமைச்சர் கோல்பெர்ட், ஹேய் (ஜேக்கப் பிளான்குயிட் டி லா ஹேய், Jacob Blanquet de la Haye) என்பாரின் தலைமையில் கப்பற்படையொன்றை அனுப்பி வைத்தார்.
  • சாந்தோமிலிருந்தும் மயிலாப்பூரிலிருந்தும் டச்சுக்காரரை வெளியேற்றுவதில் பிரெஞ்சுக்காரர் 1672இல் வெற்றி பெற்றனர். டச்சுக்காரர்களுக்கு எதிராகப் பீஜப்பூர் சுல்தானின் பிரதிநியான உள்ளூர் ஆளுநர் செர்கான் லோடியின் உதவியை பிரெஞ்சுக்காரர் நாடினர்.
  • பீஜப்பூரின் எதிரியான கோல்கொண்டா சுல்தானோடு, டச்சுக்காரர் நட்பு கொண்டனர். பிரெஞ்சுக்காரர் குடியேறுவதற்குப் பொருத்தமான இடமென புதுச்சேரியை செர்கான் லோடி வழங்கினார். 1673இல் புதுச்சேரி ஒரு சிறிய மீனவக் கிராமமாக இருந்தது.
  • மடகாஸ்கரில் நான்கு ஆண்டுகள் பணியாற்றிய பின்னர் சூரத் வந்த பிரான்சிஸ் மார்ட்டின் என்பவர் புதுச்சேரியின் ஆளுநர் ஆனார். இந்தியாவில் பிரெஞ்சுக் குடியேற்றங்களின் அதிகார மையமாக அதை உருவாக்கினார்.
  • இக்காலத்தில் நிறுவனம் (factory) என்பது அயல்நாடுகளிலுள்ள தங்கள் முதலாளிகளுக்காக வணிக முதலாளிகளுக்காக வணிக முகவர்கள் தங்கியிருந்து வணிக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இடம் என்னும் பொருளை பெற்றது.
  • “நாங்கள் கடந்து சென்ற கிராமப்புறப்பகுதி (புதுச்சேரிக்கு வெளியேயுள்ள பகுதி) மிக நன்றாக விவசாயம் செய்யப்பட்டிருந்தது. மிக அழகாகவும் இருந்தது. அரிசி ஏராளமாகக் காணப்பட்டது. எங்கே நீர் இருந்ததோ அங்கே பருத்தி விளைவிக்கப்பட்டது”. புதுச்சேரி நிலப்பரப்பை குறித்து பிரான்ஸிஸ் மார்ட்டின் தனது நாட்குறிப்பில் எழுதியது.

டச்சுக்காரருடன் போட்டியும் போர்களும்

  • புதுச்சேரியைத் தங்கள் குடியேற்றமாக்கும் முயற்சியில் பிரெஞ்சுக்காரர் மிகவும் சிரமப்பட்டனர். தங்களின் முக்கியப் போட்டியாளரான டச்சுக்காரர்களை முதலில் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
  • பிரான்சும் ஹாலந்தும் 1672இலிருந்தும் தொடர்ந்து போர்கள் செய்து கொண்டிருந்தன. இந்தியாவில் பிரெஞ்சுக்காரர்களுக்குப் போதுமான நிதி, ஆயுதம், வீரர்கள் இல்லை. ஏனெனில் அவை வங்காளத்திலிருந்த மறொரு பிரெஞ்சுக் குடியெஏற்றமான சந்தன்நகருக்கு (சந்திரநாகூர்) கொண்டு செல்லப்பட்டிருந்தன. ஆகவே 1693இல் புதுச்சேரியை டச்சுக்காரர் எளிதாகக் கைப்பற்ற முடிந்தது.
  • புதுச்சேரி தொடர்ந்து ஆறு ஆண்டுகள் டச்சுக்காரரின் கட்டுப்பட்டிலேயே இருந்தது. 1697இல் ரிஸ்விக் உடன்படிக்கையின்படி புதுச்சேரி மீண்டும் பிரெஞ்சுக்காரருக்குத் தரப்பட்டது. இருந்தபோதிலும் 1699இல்தான் அது பிரெஞ்சுக்காரர் வசம் ஒப்படைக்கப்பட்டது. 1706இல் பிரான்ஸிஸ் மார்ட்டின் இயற்கை எய்தும்வரை அதன் ஆளுநராக இருந்தார்.
  • பிரெஞ்சுக்காரர் மேற்கொண்ட பெருமுயற்சியின் விளைவாக 1725இல் மாகியையும், 1739இல் காரைக்காலையும் பெற்றனர். வங்காளப் பகுதியில் காசிம் பஜார், சந்தன்நகர், பாலசோர் ஆகிய இடங்களில் தங்களது குடியேற்றங்களை நிறுவி விரிவுபடுத்துவதில் பிரெஞ்சுக்காரர் வெற்றி பெற்றனர்.
  • பியரி பெனாய்ட் டூமாஸ் என்பவர் (1668-1745) புதுச்சேரியின் மற்றுமொரு சிறந்த ஆளுநர் ஆவார். இருந்தபோதிலும் தங்களைவிட மிகவும் வலிமை வாய்ந்த போட்டியாளரான ஆங்கிலேயரின் பயமுறுத்துதல்களை அவர்கள் எதிர்கொள்ள நேர்ந்தது. இறுதியில் தாங்கள் சேகரித்த செல்வம் அனைத்தையும் ஆங்கிலேயரிடம் இழந்தனர்.
  • பிரெஞ்சுக்காரரின் செல்வாக்கை புதுச்சேரி, காரைக்கால் , மாகி சந்தன்நகர் ஆகிய இடங்களில் இன்றும் கண்கூடாகக் காணலாம்.

டேனியர்

  • டென்மார்க் மற்றும் நார்வே (1813 வரை இரண்டும் இணைந்திருந்தது) இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் குடியேற்றங்களைக் கொண்டிருந்தது. தமிழ்நாட்டில் தரங்கம்பாடி, மேற்கு வங்காளத்தில் செராம்பூர், நிக்கோபர் தீவுகள் ஆகிய டேனியர் வசம் இருந்த பகுதிகளாகும்.
  • 1616 மார்ச் 17ஆம் நாள் டென்மார்க் அரசர் நான்காம் கிறிஸ்டியன் ஒரு பட்டயத்தை வெளியிட்டதன் மூலம் டேனியக் கிழக்கிந்தியக் கம்பெனியை உருவாக்கினார். டேனிய வணிகரிடையே இந்நிறுவனத்திற்கு பெரும் ஆதரவு ஏதுமில்லை.
  • 1618இல் கடற்படைத் தலைவர் ஒவி ஜெடி இலங்கைக்கு முதல் கடற்பயணத்தை மேற்கொண்டார். டேனியரால் இலங்கையோடு வணிக ஒப்பந்தம் எதையும் மேற்கொள்ள இயலவில்லை. ஏமாற்றத்தோடு திரும்புகிற வழியில் காரைக்காலுக்கு அருகே அவர்களின் முக்கியக் கப்பல் போர்த்துகீசியரால் மூழ்கடிக்கப்பட்டது. சிக்கிக்கொண்ட பதிமூன்று மாலுமிகளும் அவர்களின் வணிக இயக்குநரான ராபர்ட் கிராப்பி என்பவரும் தஞ்சாவூர் நாயக்க அரசரிடம் அழைத்துச் செல்லப்பட்டனர்.
  • ராபர்ட் கிரப்பி தஞ்சாவூர் அரசரோடு பேச்சுவார்த்தை நடத்தி ஓர் ஒப்பந்தத்தையும் செய்துகொண்டார். 1620 நவம்பர் 20 ஆம் நாள் கையெழுத்தான அவ்வொப்பந்தத்தின்படி டேனியர்கள் தரங்கம்பாடியையும் அதில் கோட்டை கட்டிக்கொள்ளும் உரிமையையும் பெற்றனர்.
  • தரங்கம்பாடியிலுள்ள டேனியர் கோட்டை அடிக்கடி சாலைகளையும் வீடுகளையும் சேதப்படுத்திய பேரலைகளின் முன் பாதுகாப்பற்றதாக இருந்தது. முப்பதாண்டுப் போரில் பங்கேற்று பெருமளவில் பண இழப்பு அடைந்தபோதிலும் அவர்களால் மசூலிப்பட்டினத்தில் ஒரு கிடங்கை (factory) அமைக்க முடிந்தது.
  • பாலசோரிலும் , பிப்ளி (ஹுக்ளி ஆற்றின் அருகே) என்ற இடத்திலும் வணிக முகாம்கள் அமைக்கப்பட்டன. இந்நிறுவனத்தில் முதலீடு செய்திருந்த டென்மார்க் முதலீட்டாளர்கள் இந்நிறுவனத்தை கலைக்க வேண்டுமென்றனர். ஆனால் அரசர் நான்காம் கிறிஸ்டியன் அதை எதிர்த்தார். 1648இல் அவரின் மரணத்திற்குப் பின்னர் அவருடைய மகன் பிரடெரிக் இந்நிறுவனத்தைக் கலைத்தார்.
  • இரண்டாவது டேனிய கிழக்கிந்தியக் கம்பெனி 1696இல் தொடங்கப்பட்டது. டென்மார்க்கிற்கும் தரங்கம்பாடிக்கும் இடையிலான வணிகம் மீண்டும் நடைபெறத் துவங்கியது. பல புதிய வணிக முகாம்கள் அமைக்கப்பட்டன.
  • தஞ்சாவூர் நாயக்க அரசர் தரங்கம்பாடியைச் சுற்றியிருந்த மேலும் மூன்று கிராமங்களைப் பரிசாக அளித்தார். 1706 ஜுன் 9 ஆம் நாள் டென்மார்க்கிலிருந்து முதன்முதலாக இரண்டு லுத்தரன் சமயப்பரப்பாளர்கள் வந்தனர்.
  • டேனியர்கள் 1755இல் அந்தமானிலும் நிக்கோபாரிலும் குடியேறினர். ஆனால் மலேரியா காய்ச்சல் ஏற்படுத்திய அச்சத்தால் அவற்றை 1848இல் கைவிட்டனர். நெப்போலினியப் போர்களின் போது டேனியரின் பகுதிகளை ஆங்கிலேயர் பெரும் பாதுப்புக்கு உள்ளாக்கினர். 1839இல் செராம்பூர் ஆங்கிலேயருக்கு விற்கப்பட்டது. தரங்கம்பாடி உள்ளிட்ட ஏனைய குடியேற்றங்கள் 1845இல் விற்கப்பட்டன.

டேனியரும் தமிழகமும்

  • தரங்கம்பாடியில் டேனியர் கட்டிய கோட்டை இன்றும் சீர்கெடாமல் உள்ளது. டென்மார்க்கிலிருந்து இந்தியா வந்த முதலிரண்டு லுத்தரன் மதப் பரப்பாளர்களான பார்த்தலோமியஸ் சீகன்பால்கு, ஹென்ரிச் புலுட்சா ஆகிய இருவரும் 1706 செப்டம்பரில் தரங்கம்பாடி வந்தனர்.
  • அவர்கள் சமயப் பிரச்சாரம் செய்யத் தொடங்கினர். பத்து மாதங்களுக்குள் தங்களால் மதமாற்றம் செய்யப்பட்டோருக்குத் திருமுழுக்கு சடங்கு நடத்தி வைத்தனர். அவர்களின் பணிகளை உள்ளூர் டேனிய அதிகாரிகளும் இந்துக்களும் எதிர்த்தனர். உள்ளூர் மக்களை மதமாற்றம் செய்வதன் மூலம் சீகன்பால்கு கலகத்தைத் தூண்டுகிறார் எனக் குற்றம் சாட்டப்பட்டு நான்கு மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
  • கோபன்ஹேகனைச் சேர்ந்த ஒரு மதப்பரப்பாளர் சங்கம் உள்ளூர் கிறித்தவத் திருச்சபையை ஊக்கப்படுத்த நினைத்தது. அதன்படி தனது மதப்பரப்பாளர்களை மதபோதனை மட்டும் செய்யுமாறும் ஏனையவற்றைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம் எனவும் அறிவுறுத்தியது.
  • இருந்தபோதிலும் சீகன்பால்கு மற்றவர்கள் நலனில் அக்கறைகொள்வது என்பது மதபோதனையின் உட்பொருளாக உள்ளது என வாதிட்டார்.
  • சீகன்பால்கு ஓர் அச்சுக்கூடத்தை நிறுவினார். தமிழ்மொழி, இந்திய மதங்கள், பண்பாடு குறித்த நூல்களை வெளியிட்டார். 1715இல் அவர் விவிலியத்தின் புதிய ஏற்பாட்டை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார். அவரும் அவருடைய சாகாக்களும் 1718இல் கட்டிய தேவாலயக் கட்டடமும் இன்றும் பயன்பாட்டில் உள்ளது.
  • உள்ளூர் மத குருமார்களுக்குப் பயிற்சி அளிப்பதாக ஒரு இறையியல் பயிற்சிப் பள்ளியையும் நிறுவினார். 1719 பிப்ரவரி 23ஆம் நாள் அவர் இயற்கை எய்திய போது தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட, பழைய & புதிய ஏற்பாடு, தமிழில் சுருக்கமாக எழுதப்பட்ட பல ஏடுகள், இரண்டு தேவாலயங்கள், இறையியல் பயிற்சிப் பள்ளி ஆகியவற்றையும் புனித நீராட்டல் சங்கை முடித்திருந்த 250 கிறித்தவர்களையும் விட்டுச் சென்றார்.

ஆங்கிலேயரின் வருகை

ஆங்கிலக் கிழக்கிந்திய வணிக நிறுவனம்

  • இலண்டன் நகரின் லேடன்ஹால் வீதியைச் சேர்ந்த ஒரு வணிகக்குழு , கீழை நாடுகளுடனான பெரும் இலாபத்தை ஈட்டித்தரும் நறுமணப் பொருட்கள் வியாபாரத்தில் தாங்களும் பங்கு பெற அரசியார் முதலாம் எலிசபெத்திடமிருந்து பட்டயம் (உரிமை ஆணை) ஒன்றைப் பெற்றனர்.
  • ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி பணம் படைத்த வணிகரையும், மேட்டுக்குடி மக்களையும் பங்குதாரர்களாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இந்நிறுவனம் ஒரு அளுநராலும் 24 இயக்குநர்களைக் கொண்ட குழுவாலும் மேலாண்மை செய்யப்பட்டது.
  • 1611 இல் அரசர் முதலாம் ஜேம்ஸ், வில்லியம் ஹாக்கின்ஸ் மூலம் இந்தியவைடன் இயல்பாக வணிகம் செய்யும் அனுமதியை முகலாய அரசர் ஜஹாங்கீரிடம் பெற்றர். ஆங்கிலேயர் சூரத்தில் சில வணிக உரிமைகளிஅப் பெற்றனர்.
  • குஜராத்தின் முகலாய ஆளுநரான இளவரசர் குர்ரம் ஆங்கிலேயருக்கு வணிக உரிமைகளை வழங்கினார். ஆனால் இப்பகுதிகளில் போர்த்துகீசியர் மிகுந்த செல்வக்குப் பெற்றிருந்ததால் ஆங்கிலேயரால் சுதந்திரமாகச் செயல்பட முடியவில்லை.
  • 1639இல் சந்திரகிரியின் அரசர் சென்னையை ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனிக்குக் கொடுத்து அதில் கோட்டைக் கட்டிக் கொள்ளும் அனுமதி வழங்கினார். கட்டப்பட்ட கோட்டை புனித ஜார்ஜ் கோட்டை எனப் பெயரிடப்பட்டது.
  • இந்திய மண்ணில் ஆங்கிலேயக் கிழக்கிந்திய வணிகக் குழு முதன்முதலாகப் பெற்ற நிலப்பகுதி இதுவே. சென்னையில் கம்பெனியின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகள் மீது 1645ஆம் ஆண்டு கோல்கொண்டா அரசர் படையெடுத்து பாழ்படுத்தினார்.
  • 1687இல் ஔரங்கசீப் கோல்கொண்டாவைக் கைப்பற்றிக் கம்பெனியின் பகுதிகளை முகலாய ஆட்சியின் கீழ் கொண்டுவந்தார். ஆனால் ஆங்கிலேயருக்கு ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த உரிமைகள் தொடர்ந்தன.
  • குறுகிய காலத்திற்குள் மசூலிப்பட்டினத்திற்கு மாற்றாகக் கம்பெனியின் சோழமண்டலக் கடற்கரைப் பகுதியின் தலைமையிடமாக சென்னை மாறியது. அரசர் இரண்டாம் சார்லஸ் திருமணத்தின்போது மணக்கொடையாகப் பெற்ற பம்பாய் தீவு 1668இல் கம்பெனிக்கு வழங்கப்பட்டது.
  • 1683ஆம் ஆண்டுப் பட்டயம் கம்பெனிக்குப் படைகளை உருவாக்கிக் கொள்ளவும் அமெரிக்கா, அப்பிரிக்கா, ஆசியா ஆகியவற்றிலுள்ள நாடுகளுக்கு எதிராகப் போர் அறிவிவிப்புச் செய்யவும் அமைதி உடன்படிக்கை மேற்கொள்ளவும் உரிமை வழங்கியது.
  • 1684இல் சென்னை ஒரு மாகாணமாக உருவானது. 1688இல் சென்னை ஒரு மேயரையும், பத்து உறுப்பினர்கள் (Aldermen) அடங்கிய ஆலோடனைக் குழுவையும் கொண்ட நகராட்சி அரசைப் பெற்றிருந்தது. 1693இல் சென்னையைச் சுற்றியுள்ள மூன்று கிராமங்களையும் 1702இல் மேலும் ஐந்து கிராமங்களையும் பெற்றது.

வங்காளம்

  • ஆங்கிலேயருக்கு வங்காளத்தில் வணிக உரிமைகளைப் பெறுவது நீண்டகாலப் போராட்டமாக அமைந்தது. முகலாய அரசர் ஷாஜகானின் இரண்டாவது மகனும் வங்காளத்தின் ஆளுநருமான ஷா சுஜாவிடமிருந்து கம்பெனி சில வணிக உரிமைகளைப் பெற்றிருந்தது.
  • ஆனால் அவ்வுரிமைகள் முகலாய அரசால் முறையாக உறுதி செய்யப்படவில்லை. 1608இல் வங்காளத்திலிருந்த ஆங்கிலேயர் வணிக உரிமைகளைப் பெற்றனர். ஆனால் ஆங்கிலேயரின் வணிக உரிமைகளில் உள்ளூர் அதிகாரிகள் தலையிட்டதால் கம்பெனி முகலாய அரசின் பிரதிநிதியாக வங்காளத்தை நிர்வகிக்கும் ஆட்சியாளருக்கும் எதிராகப் போர் அறிவிப்புச் செய்தது.
  • 1690இல் அமைதி மீட்கப்பட்டதைத் தொடர்ந்து கம்பெனி சுதநுதி என்ற இடத்தில் தனது முதல் குடியேற்றத்தை நிறுவியது. இவ்விடமே பிற்காலத்தில் கல்கத்தாவாயிற்று. 1696இல் அங்கு கோட்டை கட்டப்பட்டது. 1698இல் சுதநுதி, காளிகட்டா, கோவிந்தப்பூர் ஆகிய கிராமங்களின் ஜமீன்தாரி உரிமையைக் கம்பெனி பெற்றது.
  • இதற்குப் பதிலாக கம்பெனி ஆண்டுதோறும் ரூ. ,200 செலுத்தியது. கல்கத்தாவில் கட்டப்பட்ட புனித வில்லியம் கோட்டை 1770இல் மாகாணத்தின் தலைமையிடமாயிற்று.

நரிஸ் தூதுக்குழு

இங்கிலாந்து அரசர் மூன்றாம் வில்லியம் சர் வில்லியம் நாரீஸ் என்பவரை இந்தியாவிற்கு அனுப்பி வைத்தார். அவர் 1698இல் ஔரங்கசீப்பை சந்தித்தார். ஆங்கிலேயக் குடியேற்றங்கள் மீது அங்கிலேயரின் முழுமையான கட்டுப்பாட்டைப் பெறுவதும், ஏற்கனவே பெறப்பட்ட சிறப்பு உரிமைகளை உறுதிப்படுத்துவதும், வணிக உரிமைகளை மேலும் நீட்டிப்பதும் இச்சந்திப்பின் நோக்கங்களாக இருந்தன. ஆனால் இவ்வேண்டுகோள் 1714 – 1717 ஆண்டுகளில் சுர்மன் என்பவரின் தலைமையின் கீழ்வந்த தூதுக்குழு முகலாயப் பேரரசர் பருக்சியாரைச் சந்தித்தபோதுதான் ஏற்கப்பட்டது. சுர்மன் வணிக உரிமைகள் தொடர்பான அரசரின் ஆணையை பருக்சியாரிடமிருந்து பெற்றார். இவ்வாணை குஜராத், ஹைதராபாத், வங்காளம் ஆகிய பகுதிகளின் உள்ளூர் ஆட்சியாளர்களுக்கு வழங்கப்பட்டியிருந்தது.

கர்நாடகப் போர்கள்

ஆங்கிலேயர் தங்கள் மேலாதிக்கத்தை நிறுவுவதற்கு 1746 – 1763 காலப்பகுதியில் பிரெஞ்சுக்காரர்களுக்கு எதிராக மூன்று போர்களை நடத்தினர். வரலாற்று அறிஞர்கள் இப்போர்களை கர்நாடகப் போர்கள் எனக் குறிப்பிடுகின்றனர்.

முதல் கர்நாடகப் போர் , 1746 – 1748

  • ஐரோப்பாவில் நடைபெற்ற ஆஸ்திரிய வாரிசுரிமைப் போர் இந்தியாவிலும் எதிரொலித்தது. ஆஸ்திரிய அரசர் ஆறாம் சார்லஸ் 1740இல் காலமானார். அவரைத் தொடர்ந்து அவருடைய மகள் மரிய தெரேசா அரசபதவியை ஏற்றார். மரிய தெரேசாவின் உரிமையை ஏற்க மறுத்த பிரான்ஸ், ஜெர்மானிய மொழி பேசப்படும் பகுதிகளான பவேரியா, சாக்ஸனி, ஸ்பெயின் ஆகிய நாடுகளோடு மரிய தெரேசாவுக்கு எதிராகக் கைகோத்தது.
  • பிரஷ்ய அரசர் இரண்டாம் பிரடெரிக் (பிரஷ்யாவின் மகாபிரடெரிக் என அறியப்பட்டவர்) இப்புதிய அரசியல் சூழலைத் தனக்கு சாதகமாக்கி பிரான்சின் உதவியுடன் ஆஸ்திரிய நாட்டின் ஒரு பகுதியான சைலீசியாவைக் கைப்பற்றினார்.
  • இப்பிரச்சனையில் இங்கிலாந்து பிரான்சிற்கு எதிராகவும் ஆஸ்திரியாவிற்கு ஆதரவாகவும் களம் கண்டது. ஐரோப்பாவில் இங்கிலாந்திற்கும் பிரான்சிற்கும் இடையே ஏற்பட்ட போர்களால் வட அமெரிக்காவிலும் இந்தியாவிலும் இருந்த இருநாட்டுக் குடியேற்றங்களிலும் போர்கள் ஏற்பட்டன.
  • போர் வெடித்தபோது புதுச்சேரியின் புதிய ஆளுநர் துய்ப்ளே, சென்னையின் ஆங்கிலேய ஆளுநர் மோர்சிடம் ஐரோப்பாவில் இவரிடையே போர்மூண்டாலும் இங்கே நடுநிலைமை காக்கும்படி கேட்டுக்கொண்டார்.
  • ஆனால் பார்னெட் என்பாரின் தலைமையிலான ஆங்கிலக் கப்பற்படை இந்தியப் பொருட்களை ஏற்றிச் சென்ற சில பிரெஞ்சுக் கப்பல்களைக் கைப்பற்றியது.
  • இந்நிக்ழவால் அதிர்ச்சிக்குள்ளான துய்ப்ளே கர்நாடக நவாப் அன்வாருதீனின் உதவியை நாடி ஆங்கிலேயரோடு போர் ஏற்படுவதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டார். இதனால் சில காலம் அமைதி நிலவியது.
  • இதனிடையே துய்ப்ளே, பிரான்சின் தீவின் (Isle of France) ஆளுநராக இருந்த லா போர்டோனாய் என்பவரைத் தொடர்பு கொண்டார். அவர் தனது எட்டு போர்க் கப்பல்களுடன் இந்தியப் பெருங்கடலுக்குள் நுழைந்தார்.
  • ஆங்கிலக் கப்பற்படைக்குத் தலைமையேற்ற பைடன் தனது நான்கு கப்பல்களோடு பிரெஞ்சுக் கப்பல்களை இடைமறித்தார்.
  • 1746 ஜூலை 6 ஆம் நாள் நடைபெற்ற இப்போரில் தோல்வியடைந்த பைடன் இங்கிலாந்திலிருந்து வரவேண்டிய கப்பல்களை எதிர்பார்த்து கல்கத்தாவிலுள்ள ஹுக்ளிக்குப் பின்வாங்கினார்.

சென்னையின் வீழ்ச்சி

  • வெற்றிபெற்ற பிரெஞ்சுக் கப்பற்படை பாதுகாப்பற்றிருந்த சென்னையை 1746 செப்டம்பர் 15ஆம் நாள் கைப்பற்றியது. சென்னை ஆளுநர் மோர்ஸ் சரணடையுமாறு அறிவுறுத்தப்பட்டார். ஆனால் அவர் ஆற்காடு நவாப் அன்வாருதீனின் உதவியை நாடினார்.
  • அரசியல் விவேகத்துடன் செயல்பட்ட துய்ப்ளே தட்டிக்கழித்தார். உடனடியாக நவாப் 10,000 வீரர்களைக் கொண்ட ஒரு படையை தனது மகன் மாபுஸ்கானின் தலைமையில் அனுப்பி வைத்தார்.

சாந்தோம் , அடையாறு போர்கள்

  • நவாப்பின் படைகள் புனித ஜார்ஜ் கோட்டையைச் சுற்றி வளைத்தன. ஆனால் பிரெஞ்சுப் படைகள் அவற்றை சாந்தோம் வரை பின்னுக்குத் தள்ளின. இதனிடையே பிரெஞ்சுப் படைகளுக்கு கூடுதல் படைகள் வந்து சேர்ந்தன.
  • பிரெஞ்சுப் படைகளின் முன்னேற்றத்தை அடையாறு ஆற்றங்கரையில் தடுத்து நிறுத்த மாபுஸ்கான் முயற்சி மேற்கொண்டார். ஆனால் பிரெஞ்சுப்படைகள் சிரமப்பட்டு நீரைக் கடந்து நவாப்பின் படைகளைத் தீவிரமாகத் தக்கின. நவாப்பின் படைகள் பெரும் நஷ்டத்திற்கு உள்ளானது.
  • இதன் பின்னர் துய்ப்ளே கடலூரிலிருந்த ஆங்கிலேயருக்குச் சொந்தமான புனித டேவிட் கோட்டையின் மீது கண் வைத்தார். ஆங்கிலேயர் நவாப்பின் உதவியோடு பிரெஞ்சுக்காரரிடம் தாங்கள் இழந்த பகுதிகளை மீட்கும் முயற்சியில் இறங்கினர்.
  • துய்ப்ளே மீண்டும் அரசியல் விவேக விளையாட்டை வீளையாடினார். அவர் நவாப்பிடம் ஒருவார காலத்திற்குப் புனித ஜார்ஜ் கோட்டையில் நவாப்பின் கொடியை பறக்கவிட்ட பின்னர் கோட்டையை ஆங்கிலேயர் வசம் ஒப்படைத்துவிட்வதாக உறுதிமொழி அளித்தார்.
  • மேலும் பிரெஞ்சுக்காரர் நவாபுக்கு ரூ. 40,000 மதிப்புள்ள பரிசுகளை வழங்கினர். நவாபும், ஆங்கிலேயருக்கு வழங்க இருந்த உதவிகளை திரும்பப் பெற்றுக்கொள்ளச் சம்மதித்தார். இதனிடையே ஆங்கிலப்படைகள் கடற்படைத் தலைவர் பாஸ்கோவென் தலைமையில் புதுச்சேரியைக் கைப்பற்ற மேற்கொண்ட இரு முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன.
  • இந்நிலையில் 1748இல் ஐரோப்பாவில் இங்கிலாந்தும் பிரான்சும் ஐ லா சபேல் (Aix La Chapelle) உடன்படிக்கையில் கையெழுத்திட்டன. இவ்வுடன்படிக்கையின்படி இந்தியாவில் ஆங்கிலேயரும் பிரெஞ்சுக்காரரும் தங்கள் மோதல்களை முடித்துக்கொண்டனர்.
  • பிரெஞ்சுக்காரர் சென்னையை ஆங்கிலேயருக்குத் திருப்பித் தருவதென்றும் அதற்கு மாறாக வட அமெரிக்காவில் லூயிஸ்பர்க் என்ற இடத்தை பிரெஞ்சுக்காரருக்குக் கொடுப்பதென்றும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

ஆனந்தரங்க பிள்ளை நாட்குறிப்புகள்

ஆனந்தரங்க பிள்ளை (1709 – 1761) அக்காலத்தில் தலைசிறந்த வணிகராக விளங்கிய திருவேங்கடம் பிள்ளைக்கு மகனாகப் பிறந்தார். தனது தந்தையின் மறைவுக்குப் பின்னர் பிரெஞ்சு ஆளுநர்களான டூமாஸ், துய்ப்ளே ஆகியோர் கொடுத்த ஆதரவால் புதுச்சேரியில் மாபெரும் வணிகரானார். துய்ப்ளே இவரை தலைமை துபாஷியாகவும் (துபாஷி – இரு மொழிகள் அறிந்தவர்) தலைமை வணிக முகவராகவும் (1746) அமர்த்தினார். இது அவரை புதுச்சேரில் பெரும் அரசியல் செல்வாக்குள்ள நபராக மாற்றியது. ஆனால் அவருடைய உண்மையான புகழ், தமிழில் எழுதப்பட்ட ஏராளமான செய்திகளை உள்ளடக்கிய அவருடைய நாட்குறிப்புகளைச் சார்ந்துள்ளது. அவரின் நாட்குறிப்பு 1736 முதக் 1760 வரையிலான காலத்திற்கு, முக்கியமாக துய்ப்ளே ஆளுநராக காலத்திற்கு, முக்கியமாக துய்ப்ளே ஆளுநராக இருந்த காலப்பகுதியின் வரலாற்றுக்கு மிகவும் மதிப்புமிக்க சான்றாதாரமாகும். மேலும் அது சமகால நிகழ்வுகள் குறித்த அவருடைய பார்வை மற்றும் கருத்துக்களின் பதிவுமாகும்.

இரண்டாம் கர்நாடகப் போர் 1749 – 1754

  • ஐரோப்பாவில் பிரான்சுக்கும் இங்கிலாந்திற்கும் இடையே அமைதி நிலவியது. ஆனால் இந்தியாவில் இவ்விரு காலனி நாடுகளாலும் அமைதியாக இருக்க முடியவில்லை. சுதேச அரசர்களை ஒருவருக்கு எதிராக மற்றொருவரைத் தூண்டிவிட்டனர். ஆற்காடு, ஹைதராபாத் அரசுகளில் ஏற்பட்ட வாரிசுரிமை போர்களில் பங்கெடுப்பதன் மூலம் துய்ப்ளே பிரான்சின் செல்வாக்கை மேம்படுத்த விரும்பினர்.
  • ஹைதரபாத்தின் நிஜாம் ஆசப்ஜா 1748இல் மரணமடைந்தார். அவருடைய பேரன் முசாபர் ஜங் அடுத்த நிஜாமாக ஆவதற்கு உரிமை கொண்டாடியதை துய்ப்ளே ஆதரித்தார்.
  • ஆற்காட்டில் முகமது அலிக்கு எதிராக சந்தா சாகிப்பை ஆதரித்தார். பிரெஞ்சுக்காரர், நிஜாம், கர்நாடக நவாப் ஆகியோரிடையே ஒரு முக்கூட்டு உடன்படிக்கை ஏற்பட்டது.
  • பெரும் மதிப்பு வாய்ந்த சென்னையை இழந்த ஆங்கிலேயருக்குப் புனித டேவிட் கோட்டை மட்டுமே இருந்தது. பிரெஞ்சுக்காரரின் செல்வாக்கை குறைப்பதற்காக ஆங்கிலேயர் ஹைதராபாத் அரியணைக்கு எதிர் போட்டியாளரான நாசிர் ஜங்கையும், கர்நாடகத்தில் 1749இல் நடைபெற்ற ஆம்பூர் போரில் நவாப் அன்வாருதீன் கொல்லப்பட்ட பின்னர் அவ்வரியணைக்கு முகமது அலியையும் ஆதரித்தனர்.

  • ஆம்பூர் போரைத் தொடர்ந்து வெற்றி பெற்ற படைகள் தக்காணத்தில் நுழைந்தன. பிரெஞ்சுப்படைகளால் நாசிர் ஜங் கொல்லப்பட்டார். முசாபர் ஜங் 1750 டிசம்பரில் ஹைதராபாத்தின் நிஜாமாக ஆக்கப்பட்டார்.
  • பேரரசை நிறுவ வேண்டுமென்ற துய்ப்ளேயின் கனவு நனவாகலாம் என்ற நிலை சில காலமிருந்தது. நிஜாமிடமிருந்தும் ஆற்காடு நவாப்பிடமிருந்தும் துய்ப்ளே பெருமளவு பணத்தையும் நிலங்களையும் பெற்றார்.
  • முசாபர் ஜங் பிரெஞ்சுக்காரரின் பாதுகாப்பைக் கோரியபோது துய்ப்ளே பிரெஞ்சுத் தளபதி புஸ்ஸி அவருடன் அதிக எண்ணிக்கையில் பிரெஞ்சு வீரர்களையும் அனுப்பி வைத்தார்.
  • ஆனால் முசாபர் ஜங் நீண்ட நாட்கள் உயிரோடில்லை. நாசிட்ர் ஜங்கை யார் கொன்றார்களோ அவர்களே முசாபர் ஜங்கையும் கொன்றனர். உடனடியாக புஸ்ஸி நாசிர் ஜங்கின் சகோதரனான சலபத் ஜங் என்பாரை அரியணை ஏற்றினார்.
  • சந்தா சாகிப் ஆங்கிலேயரின் செல்வாக்கை குறைக்க வேண்டும் என்பதற்காகவும் முகமது அலியைக் கைது செய்யவும் (அன்வாருதீன் கொல்லப்பட்ட பின்னர் திருச்சிக்கு தப்பியோடியவர்) நிஜாம் மற்றும் பிரெஞ்சுக்காரர் உதவியுடன் திருச்சியைக் கைப்பற்ற முடிவு செய்தார்.

ஆம்பூர் போர் (1749)

ஹைதராபாத் நிஜாமிற்கு உரிமை கோரிய முசாபர் ஜங், கர்நாடக அரியணைக்கு உரிமைகோரிய சந்தா சாகிப் ஆகிய இருவரும் நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட பிரெஞ்சுக் காலாட்படைகளின் உதவியோடு அன்வாருதீன் படைகளைத் தாக்கி பெருமளவு சேதத்தை ஏற்படுத்தினர். போரில் அன்வாருதீன் கொல்லப்பட்டார். சந்தா சாகிப் நவாபாக ஆற்காட்டினுள் நுழைந்தார். இதே சமயத்தில் அன்வாருதீனின் மகனான முகமது அலி திருச்சிக்குத் தப்பிச் சென்றார்.

கிளைவும் இரண்டாவது கர்நாடகப் போரும்

  • சந்தா சாகிப்பின் உதவியோடு திருச்சியைக் கைப்பற்ற வேண்டுமென துய்ப்ளேயும் உறுதி பூண்டிருந்தார். சந்தா சாகிப்பின் படையோடு பிரெஞ்சுப் படையினர் 900 பேர் சேர்ந்தனர். முகமது அலி 5000 படைவீரர்களையும் தனக்கு உதவியாக 600க்கும் மிகாத ஆங்கில வீரர்களை மட்டும் கொண்டிருந்தார்.
  • ராபர்ட் கீளைவின் எண்ணம் வரலாற்றின் போக்கை மாற்றியமைத்தது. பிரெஞ்சுக்காரரும் நாவாப்பும் திருச்சி முற்றுகையில் தீவிரமாக இருக்கையில் ஆற்காட்டின் மீது திடீர் தாக்குதலைத் கொடுக்க வேண்டும் என்ற கருத்தை ராபர்ட் கிளைவ் முன்வைத்தார்.
  • கிளைவ் 1752 ஆகஸ்ட் 26இல் புனித டேவிட் கோட்டையிலிருந்து 200 ஆங்கிலயே, 300 இந்திய வீரர்களுடன் புறப்பட்டார். எதிர்பார்த்தபடி சிறிய பகுதிகளைச் சேர்ந்த பல அரசர்களிடமிருந்து உதவிகளைப் பெற்றனர்.
  • மைசூர் மற்றும் தஞ்சாவூர் அரசர்கள் முகமது அலியை ஆதரித்தனர். சந்தா சாகிப் உடனடியாக 3000 வீரர்களைத் தனது மகன் ராஜா சாகிப்பின் தலைமையில் ஆற்காட்டுக்கு அனுப்பி வைத்தார்.
  • 1752 ஆகஸ்ட் 31இல் ஆற்காட்டைக் கைப்பற்றிய கிளைவ் ராஜாசாகிப்பின் 53 நாள் கோட்டை முற்றுகையையும் தாக்குப்பிடித்தார். ராஜாசாகிப்பிறகுப் புதுச்சேரியிலிருந்த பிரெஞ்சுக்காரர் உதவினர்.
  • ஆரணி போரில் ஆங்கிலேயரும் மராத்திய அரசர் முராரிராவும் தங்களைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையிலான பிரெஞ்சு மற்றும் ஆற்காட்டுப் படைகளை எதிர் கொண்டனர்.
  • தொடர்ந்து நடைபெற்ற பல போர்களில், குறிப்பாக காவேரிப்பாக்கத்தில் நடைபெற்ற போரில் சந்தா சாகிப் பிடிபட்டு கொல்லப்பட்டார். முகமது அலி எதிர்ப்பேதுமில்லாமல் கர்நாடகத்தின் அரசரானார்.
  • ஐரோப்பாவில் இங்கிலாந்தும் பிரான்சும் எப்போரிலும் ஈடுபடாத நிலையில் இந்தியாவில் தங்கள் காலனிகள் போரில் ஈடுபடுவதைக் கண்டனம் செய்தனர். பிரெஞ்சு அரசாங்கம் துய்ப்ளேயை திரும்ப அழைத்துக் கொண்டது.
  • 1755இல் ஆங்கிலேயருடன் புதுச்சேரி உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது. இந்திய சுதேச அரசுகளிடையே ஏற்படும் பிரச்சனைகளில் தலையிடுவதில்லை என இரு நாடுகளும் ஒப்புக் கொண்டன.
  • இவ்வுடன்படிக்கை, இந்தியாவில் இவ்விருவரும் சொந்தமாகக் கொண்டிருந்த பகுதிகளைத் தெளிவாக வரையறுத்தது. இந்நிலை சுமார் இருநூறு ஆண்டு காலம் இந்தியா விடுதலை பெறும் வரை நடைமுறையிலிருந்தது.

மூன்றாம் கர்நாடகப் போர் 1756 – 1763

  • ஐரோப்பாவால் 1756இல் தொடங்கிய ஏழாண்டுப் போரின் (1756 – 1763) விளைவே மூன்றாம் கர்நாடகப் போராகும். உலகளாவிய இம்மோதலில் முக்கிய எதிரிகளான இங்கிலாந்தும் பிரான்சும் போரிட்டன.
  • இப்போர் வட அமெரிக்காவிலும் (அமெரிக்க விடுதலைப் போராக முடிந்தது) மேற்கு ஆப்பிரிக்காவிலும் (பின்னர் பிரெஞ்சு மேற்கு ஆப்பிரிக்காவிலும் (பின்னர் பிரெஞ்சு மேற்கு ஆப்பிரிக்கா என்றானது) நடைபெற்றது. இந்தியாவில் இது மூன்றாவது கர்நாடகப் போராக வெளிப்பட்டது.
  • நம்முடைய கவனத்தை மூன்றாவது கர்நாடகப் போரில் திருப்பும் முன்னர் , இதே நேரத்தில் வங்காளத்தில் என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்.

ராபர்ட் கிளைவ் 1725 செப்டம்பர் 29இல் பிறந்தார். அவருக்குக் கல்வியில் ஆர்வமில்லை. படிப்பில் ஆர்வமின்மை, ஒழுக்கமின்மையால் மூன்று பள்ளிகளிலிருந்து வெளியேற்றப்பட்டார். மேலும் சண்டைக்காரன் என்ற அவப்பெயரையும் பெற்றார். அவருடைய நடத்தையால் வெறுப்புக் கொண்ட அவரின் தந்தை அவரை ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியில் எழுத்தர் பணியில் அமர்த்தி இந்தியாவிற்கு அனுப்பி வைத்தார். கிளைவ் சென்னை மாகாண ஆளுநராக உருவானார். முதல்முறை ஆளுநராக இருந்தபோது (1755 -60) பிளாசிப் போரில் வெற்றிபெற்று அதன்மூலம் இந்தியாவில் ஆங்கிலேயப் பேரரசிற்கு அடித்தளமிட்டார். இரண்டாவது முறை 1764 – 1767 ஆளுநராக இருந்தபோது பக்சார் போரில் வெற்றி பெற்று வங்காளத்தில் ஆங்கிலேயர் ஆட்சியை வலிமைகொள்ளச் செய்தார். அவர் இந்தியாவை விட்டுச் செல்லும் போது மிகப் பெரிய செல்வராக வெளியேறினார். அவரின் தனிப்பட்ட சொத்தாக 2,34,000 பவுண்டுகள் இருந்தது. அது தவிர வங்காளத்திலுள்ள அவரது ஜாகிர் மூலம் 27,000 பவுண்டுகள் வருடாந்திர வாடகை வருவாயைப் பெற்றார். அவர் இங்கிலாந்து திரும்பியபோது தன் மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்துப் பாராளுமன்ற விசாரணையை எதிர் கொண்டார். கிளைவ் தன் மீதான குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட போதிலும் தற்கொலை செய்து கொண்டார்.

பிளாசிப் போர் (1757)

  • வங்காளத்தில் உள்நாட்டு வணிகத்தில் பங்கேற்பதற்காக வங்காள நவாப்புக்கு செலுத்த வேண்டிய வரிகளைச் செலுத்தாமல், ஆங்கிலேயக் கிழக்கிந்திய வணிகக் குழு, முகலாய அரசு வழங்கிய வணிக உரிமைகளைத் தவறாகப் பயன்படுத்தியது.
  • இதைத் தவிர வங்காள நவாப் சிராஜ் உத தௌலாவுடன் பகை கொண்டிருந்த அவருடைய சகோதரியின் மகனுக்கு வணிகக்குழு அடைக்கலம் வழங்கியது. அவரைத் தன்னிடம் ஒப்படைக்குமாறு நவாப் கேட்டபோது வணிகக்குழு மறுத்துவிட்டது.
  • இதனால் நவாப் வில்லியம் கோட்டையைக் கைப்பற்றி ஆங்கிலேயரைச் சிறையில் அடைந்த்தார். வில்லியம் கோட்டையைச் சேர்ந்த ஆங்கில அதிகாரிகளின் இடர்பாடுகளைக் களைவதற்காக வணிகக்குழு புனித ஜார்ஜ் கோட்டையிலிருந்து ஒரு வலுவான படைப்பிரிவை ராபர்ட் கிளைவ், வாட்சன் ஆகியோர் தலைமையில் அனுப்பி வைத்தது. இதனைத் தொடர்ந்து நடைபெற்றப் போரே வரலாற்று அறிஞர்களால் பிளாசிப் போர் என அழைக்கப்படுகிறது.
  • பிளாசிப்போர் வணிக நிறுவனமாக இருந்த ஆங்கிலேயக் கிழக்கிந்திய வணிகக்குழுவை, வங்காளத்தின் மீது இறையாண்மை கொண்ட அரசியல் சக்தியாக மாற்றியது. ஆங்கிலேயர் பெற்றிருந்த வணிக உரிமைகளை இது உறுதி செய்தது.
  • சிராஜ் உத்தௌலாவிற்குப் பதிலாக அவருக்குத் துரோகமிழைத்த மீர் ஜாபர் வங்காள நவாப் ஆக்கப்பட்டார். கல்கத்தாவின் மீதான வணிகக்குழுவின் இறையாண்மை அங்கீகரிக்கப்பட்டது.
  • தன்னுடைய படைகளைப் பராமரிப்பதற்காக வணிகக்குழுவிற்கு நிலம் வழங்கப்பட்டது. வணிகக்குழுவின் அதிகாரி (Resident) ஒருவரை தன்னுடைய அவையில் அமர்த்திக்கொள்ளவும் மீர்ஜாபர் ஒத்துக்கொண்டார். பின்னர் மீர்ஜாபருக்குப் பதிலாக மீர்காசிம் நவாப் ஆக்கப்பட்டார். இவர் தன் சுதந்திரத்தை நிலைநிறுத்த மேற்கொண்ட முயற்சியை வணிகக்குழுவின் அதிகாரிகள் விரும்பவில்லை.

வங்காள நவாப்பால் கைது செய்யப்பட்ட 146 ஐரோப்பியர் 18க்கு 15 அடி அளவுள்ள ஓர் அறையில் அடைக்கப்பட்டதாகவும் அவர்களில் 23 பேர் மட்டுமே உயிர்பிழைக்க மற்றவர்கள் மூச்சுத்திணறி இறந்து போனதாகவும் பழி சொல்லப்பட்டது. இருட்டறைத் துயரம் (Black Hole Tragedy) என ஆங்கிலேய ஆவணங்களில் சுட்டும் இந்நிகழ்வின் உண்மைத் தன்மை குறித்து வரலாற்று அறிஞர்களிடையே விவாதம் நடைபெறுகிறது.

பக்சார் போர் (1764)

  • வங்காளத்திலிருந்து தப்பியோடிய மீர்காசிம் முகலாய அரசர் இரண்டாம் ஷா ஆலம், அவத்தின் நவாபான சூஜா உத்தௌலா ஆகியவர்களோடு கூட்டு சேர்ந்தார். தங்கள் உள் விவகாரங்களில் வணிகக்குழு தலையிடுவதால் அவர்களும் மனக்குறையோடு இருந்தனர். இம்மூவரும் வணிகக்குழுவுக்கு எதிராகப் போர் அறிவிப்புச் செய்தனர்.
  • 1764இல் பக்சார் என்னுமிடத்தில் நடைபெற்ற போரில் இம்மூவரும் வீரத்துடன் போரிட்டனர். வணிகக்குழுவின் படைகள் சிறப்பு வாய்ந்ததாக இருந்தமையால் அவர்கள் போரில் வெற்றி பெற்றனர். பக்சார் போரில் ஆங்கிலேயர் பெற்ற வெற்றி 1765இல் அலகாபாத் உடன்படிக்கைக்கு இட்டுச்சென்றது.
  • ராபர்ட் கிளைவும் இரண்டாம் ஷாஆலமும் உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர். இவ்பவுடன்படிக்கையின் மூலம் வணிகக்குழு வங்காளம், பீகார், ஒரிசா ஆகிய பகுதிகளின் திவானி (நிலவரு வசூலிக்கும் உரிமை) உரிமையைப் பெற்றது. மேலும் வங்காளத்திலிருந்த பர்த்தவான், மிட்னாபூர், சிட்டகாங் ஆகிய மூன்று மாவட்டங்களையும் , கல்கத்தாவின் மீதான இறையாண்மையும் பெற்றது. ஆங்கிலேயர் வங்காளத்தின் ஆட்சியாளராக மாறினர்.

மூன்றாம் கர்நாடகப் போர்

  • ஐரோப்பாவில் ஏழாண்டுப் போர் வெடித்தவுடன், வங்காளத்தில் பிரெஞ்சுக்காரர்களுக்குச் சொந்தமான சந்தன்நகரைக் கிளைவ் கைப்பற்றினார். இத்துடன் வங்காளத்தில் பிரெஞ்சுக்காரரின் செல்வாக்கு முடிவுக்கு வந்தது.
  • பிரெஞ்சு அரசு கவுண்ட்-டி-லாலி என்பவரை இந்தியாவிலுள்ள பிரெஞ்சுப் படைகளுக்குத் தலைமைத் தளபதியாக அனுப்பி வைத்தது. ஆங்கிலேயர் வங்காளத்தில் தங்கள் கவனத்தைக் குவித்திருந்ததால் லாலி சிலநாள் முற்றுக்கைக்குப் பின்னர் உடனடியாக டேவிட் கோட்டையை கைப்பற்றினார். அடுத்து தஞ்சாவூர் முற்றுகையிடப்பட்டது. பிரெஞ்சுக்காரர் தஞ்சாவூர் அரசரிடமிருந்து பணம் எதிர்பார்த்தனர்.
  • ஆனால் அவரால் தரஇயலவில்லை. புதுச்சேரியை ஆங்கிலப்படைகள் தக்கும் ஆபத்து இருந்த்தால் ஒரு பைசா லாபமில்லாமல் தஞ்சாவூர் முற்றுகை கைவிடப்பட்டது. ஒரு வேளை புதுச்சேரி தாக்கப்பட்டால் தனக்கு உதவியாக இருப்பதற்காக லாலி ஹைதராபாத்திலிருந்த புஸ்ஸியை அழைத்தார். இடையில் தக்காண அரசியலில் மாற்றங்கள் வேகமாக நடைபெற்றன.
  • இராஜமுந்திரியை 1758இலும் மசூலிபட்டினத்தை 1759இலும் பிரெஞ்சுக்காரர் இழந்தனர். ஹைதராபாத் நிஜாம் சலபத்ஜங் போரே செய்யாமல் ஆங்கிலேயரோடு ஒப்பந்தம் செய்து கொண்டார். பிரெஞ்சுக்காரருக்குத் தான் ஏற்கனவே வழக்கியிருந்த மசூலிபட்டினத்தையும் வடசர்க்கார் பகுதிகளையும் அவர் ஆங்கிலேயருக்கு மாற்றி வழங்கினார்.
  • புஸ்ஸி, லாலி ஆகியோரின் கூட்டுப்படை காஞ்சிபுரத்தைக் கைப்பற்றி, சென்னையைக் கைப்பற்ற விரைந்தது. ஆங்கிலேயர் வங்காளத்தில் தீவிரமாகச் செயல்பட்டுக்கொண்டிருந்ததால் சென்னையில் 800 ஆங்கில வீரர்களையும் 2500 இந்திய வீரர்களையும் மட்டுமே கொண்டிருந்தனர்.
  • 1758 டிசம்பர் 12ஆம் நாள் சென்னையை முற்றுகையிடத் தொடங்கிய பிரெஞ்சுக்காரரால் 1759 பிப்ரவரி வரை சிறிதும் கூட முன்னேற முடியவில்லை. இரண்டு பக்கங்களிலும் பலத்த சேதம் ஏற்பட்டது.
  • இருந்தபோதிலும் படைகளுக்குத் தேவையான பொருட்களின் வரத்து சுருங்கியதால் பிரெஞ்சுக்காரரால் முற்றுகையை நீட்டிக்க இயலவில்லை. இதே சமயத்தில் சென்னையை விடுவிப்பதற்காக ஆங்கிலேய ஜெனரல் போகாக் ஒரு கப்பற்படையோடு இந்தியா வந்தார். லாலி முற்றுகையைக் கைவிட்டுக் காஞ்சிபுரம் செல்லும் கட்டாயத்திற்கு உள்ளானார்.

வந்தவாசிப் போரும் புதுச்சேரியின் வீழ்ச்சியும்

  • பிரெஞ்சுப் படைகளை ஆற்காட்டில் விட்டுவிட்டு லாலி புதுச்சேரி திரும்பினார். வந்தவாசியை நோக்கிச் சென்ற ஆங்கிலப்படைகள் திடீரென காஞ்சிபுரத்தைத் தாக்கிக் கைப்பற்றின.
  • சர்அயர் கூட் என்பவரின் தலைமையில் புதிய ஆங்கிலப்படைப்பிரிவும் வந்து சேர்ந்தது. இறுதியில் 1760 ஜனவரி மாதம் இறுதிப்போர் அயர் கூட், லாலி ஆகியோரிடையே வந்தவாசியில் நடைபெற்றது.
  • புஸ்ஸி தோற்கடிக்கப்பட்டு சிறைபிடிக்கப்பட்டார். லாலி புதுச்சேரிக்குப் பின் வாங்கினார். ஆனால் புதுச்சேரி உடனடியாக முற்றுகையிடப்பட்டது. இதே சமயத்தில் செஞ்சியைக் கைப்பற்றிய ஆங்கிலப்படைகள், புதுச்சேரியை முற்றுகையிட்டது.
  • பாதுகாப்பு ஏற்பாடுகளை மாற்றி அமைத்த லாலி தீரத்துடன் போராடினார். பல மாதங்கள் நீடித்த புதுச்சேரி முற்றுகை 1761 பிப்ரவரி மாதம் 4 ஆம் நாள் முடிவுக்கு வந்து புதுச்சேரி வீழ்ந்தது. லாலி கைது செய்யப்பட்டு பிரெஞ்சு அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டார்.
  • தன்னுடைய நாட்டில் லாலி விசாரணை செய்யப்பட்டு மரணதண்டனை வழங்கப்பட்டது. அதே ஆண்டில் பிரெஞ்சு வணிகக்குழுவிற்குச் சொந்தமான மாகியையும் ஆங்கிலேயர் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.
  • பிரெஞ்சுக்காரர்கள் அனைத்து இடங்களையும் ஏழாண்டுப் போரின் இறுதியில், 1763இல் பாரிஸ் உடன்படிக்கை கையெழுத்தானபோது அனைத்துப் போர்களும் முடிவுக்கு வந்தன. பாரிஸ் உடன்படிக்கையின்படி புதுச்சேரியும் சந்தன்நகரும் மீண்டும் பிரெஞ்சுக்காரருக்கு வழங்கப்பட்டது. எனவே பிரெஞ்சுக்காரர் புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் (யூனியன் பிரதேசமான புதுச்சேரியின் பகுதிகள்), மாகி (கேரளாவிலுள்ள கண்ணூர் மாவட்டம்), சந்தன்நகர் (வங்காளம்) ஆகிய பகுதிகளை மட்டுமே தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டிருந்தனர்.
  • வணிக நிறுவனமாக இருந்த இங்கிலாந்து பெரும் நிலப்பரப்பை ஆளுகின்ற சக்தியாக மாறி அனைவராலும் அங்கீகரிக்கப்பட்ட காலனியாதிக்க நாடாக எழுச்சி பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!