Book Back QuestionsTnpsc

ஒலியியல் Book Back Questions 10th Science Lesson 5

10th Science Lesson 5

5] ஒலியியல்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

கோல்கொண்டா கோட்டை (ஹைதராபாத், தெலங்கானா) – கோல்கொண்டா கோட்டையிலுள்ள கைத்தட்டும் அறையின் மேற்புறம் பல தொடர்ச்சியான வளைவுகள் உள்ளன. இதில் ஒவ்வொரு வளைவும், முந்தைய வளைவை விட சிறியதாக காணப்படும். எனவே இந்த அறையின் குறிப்பிட்டப் பகுதியில் எழுப்பப்படும் ஒலியானது, அழுத்தப்பட்டு எதிரொலிக்கப்பட்டு, பின் தேவையான அளவு பெருக்கமடைந்து ஒரு குறிப்பிட்டத் தொலைவிற்குக் கேட்கிறது.

மெதுவாகப் பேசும் கூடம் மிகவும் புகழ் பெற்ற மெதுவாகப் பேசும் கூடம் இலண்டனிலுள்ள புனித பால் கேதிட்ரல் ஆலயத்தில் அமைந்துள்ளது. அந்த அறையில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் பேசப்படும் ஒலியானது எதிர்புறம் உள்ளக் குறிப்பிட்டப் பகுதியில் தெளிவாகக் கேட்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. வளைவான பகுதிகளில் நடைபெறும் பல்முனை எதிரொலிப்பே இதற்குக் காரணம் ஆகும்.

அடர்குறை மற்றும் அடர்மிகு ஊடகம் என்றால் என்ன?

ஒலியானது ஒரு ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்கு செல்லும் போது அதன் திசைவேகம் அதிகரித்தால் அது அடர்குறை ஊடகம் ஆகும் (காற்றுடன் ஒப்பிடும் போது நீரானது ஒலிக்கு அடர்குறை ஊடகம் ஆகும்). ஒலியானது ஒரு ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்கு செல்லும் போது அதன் திசைவேகம் குறையுமானால் அது அடர்மிகு ஊடகம் ஆகும். (நீருடன் ஒப்பிடும் போது காற்றானது ஒலிக்கு அடர்மிகு ஊடகம் ஆகும்)

ஒலி மூலத்திற்கும், கேட்குநருக்கும் இடையே சார்பியக்கம் இருக்கும் போது, கேட்குநரால் கேட்கப்படும் ஒலியின் அதிர்வெண்ணானது, ஒலி மூலத்தின் அதிர்வெண்ணிலிருந்து மாறுவது போல் தோன்றும். இந்நிகழ்வு டாப்ளர் விளைவு எனப்படும்.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. ஒலி அலைகள் காற்றில் பரவும் போது அதன் துகள்கள்.

(அ) அலையின் திசையில் அதிர்வுறும்.

(ஆ) அதிர்வுறும், ஆனால் குறிப்பிட்ட திசை இல்லை.

(இ) அலையின் திசைக்கு செங்குத்தாக அதிர்வுறும்

(ஈ) அதிர்வுறுவதில்லை.

2. வாயு ஊடகத்தில் ஒலியின் திசைவேகம் 330 மீவி-1. வெப்பநிலை மாறிலியாக இருக்கும் போது, அதன் அழுத்தம் 4 மடங்கு உயர்த்தப்பட்டால், ஒலியின் திசைவேகம்.

(அ) 330 மீவி-1

(ஆ) 660 மீவி-1

(இ) 156 மீவி-1

(ஈ) 990 மீவி-1

3. மனிதனால் உணரக்கூடிய செவியுணர் ஒலியின் அதிர்வெண்

(அ) 50 kHz

(ஆ) 20 kHz

(இ) 15000 kHz

(ஈ) 10000 kHz

4. காற்றில் ஒலியின் திசைவேகம் 330 மீவி-1 அதன் வெப்பநிலை இரட்டிப்பாக்கப்பட்டு, அழுத்தம் பாதியாகக் குறைக்கப்பட்டால் ஒலியின் திசைவேகம் காண்க.

(அ) 330 மீவி-1

(ஆ) 165 மீவி-1

(இ) 330 x √2 மீவி-1

(ஈ) 320 x √2 மீவி-1

5. 1.25 x 104 Hz அதிர்வெண் உடைய ஒலியானது 344 மீவி-1 வேகத்தில் பரவுகிறது எனில், அதன் அலை நீளம்?

(அ) 27.52 மீ

(ஆ) 275.2 மீ

(இ) 0.02752 மீ

(ஈ) 2.752 மீ

6. ஒரு ஒலி அலையானது எதிரொலிக்கப்பட்டு மீண்டும் அதே ஊடகத்தில் பரவும்போது, கீழ்கண்டவற்றுள் எது மாற்றமடையும்.

(அ) வேகம்

(ஆ) அதிர்வெண்

(இ) அலைநீளம்

(ஈ) எதுவுமில்லை

7. ஒரு கோளின் வளி மண்டலத்தில் ஒலியின் திசைவேகம் 500 மீவி-1 எனில் எதிரொலி கேட்க ஒலி மூலத்திற்கும், எதிரொலிக்கும் பரப்பிற்கும் இடையே தேவையான குறைந்த பட்சத் தொலைவு என்ன?

(அ) 17 மீ

(ஆ) 20 மீ

(இ) 25 மீ

(ஈ) 50 மீ

கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. ஒரு துகளானது ஒரு மையப்புள்ளியிலிருந்து முன்னும், பின்னும் தொடர்ச்சியாக இயங்குவது__________ ஆகும்.

2. ஒரு நெட்டலையின் ஆற்றலானது தெற்கிலிருந்து வடக்காகப் பரவுகிறது எனில், ஊடகத்தின் துகள்கள் _________ லிருந்து _________ நோக்கி அதிர்வடைகிறது.

3. 450 Hz அதிர்வெண் உடைய ஊதல் ஒலியானது 33 மீவி-1 வேகத்தில் ஓய்வு நிலையிலுள்ள கேட்குநரை அடைகிறது. கேட்குநரால் கேட்கப்படும் ஒலியின் அதிர்வெண் ___________ (ஒலியின் திசைவேகம் = 330 மீவி-1).

4. ஒரு ஒலி மூலமானது 40 கி.மீ/மணி வேகத்தில், 2000 Hz அதிர்வெண்ணுடன் கேட்குநரை நோக்கி நகர்கிறது. ஒலியின் திசைவேகம் 1220 கி.மீ/மணி எனில் கேட்குநரால் கேட்கப்படும் தோற்ற அதிர்வெண் ___________

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: தவறான வாக்கியத்தை திருத்தி எழுதுக

1. ஒலியானது திட, திரவ, வாயு மற்றும் வெற்றிடத்தில் பரவும்.

2. நில அதிர்வின் போது உருவாகும் அலைகள் குற்றொலி அலைகள் ஆகும்.

3. ஒலியின் திசைவேகம் வெப்ப நிலையைச் சார்ந்தது அல்ல.

4. ஒலியின் திசைவேகம் திரவங்களைவிட வாயுக்களில் அதிகம்.

பொருத்துக:

1. குற்றொலி – அ. இறுக்கங்கள்

2. எதிரொலி – ஆ. 22 kHz

3. மீயொலி – இ. 10 Hz

4. அழுத்தம் மிகுந்த பகுதி – ஈ. அல்ட்ரா சோனோ கிராபி

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

(அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கு சரியான விளக்கம்

(ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமல்ல.

(இ) கூற்று சரியானது. ஆனால் காரணம் சரியல்ல.

(ஈ) கூற்று தவறானது. ஆனால், காரணம் சரியானது.

1. கூற்று: காற்றின் அழுத்த மாறுபாடு ஒலியின் திசைவேகத்தைப் பாதிக்கும்.

காரணம்: ஏனெனில் ஒலியின் திசைவேகம், அழுத்தத்தின் இருமடிக்கு நேர்தகவில் இருக்கும்.

2. கூற்று: ஒலி வாயுக்களை விட திடப்பொருளில் வேகமாகச் செல்லும்.

காரணம்: திடப்பொருளின் அடர்த்தி, வாயுக்களை விட அதிகம்.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)

1. அலையின் திசையில் அதிர்வுறும், 2. (330 மீ வி-1), 3. (20 kHz), 4. (330×√2 மீ வி-1), 5. (0.02752 மீ) 6. எதுவுமில்லை
7. (25 மீ)

கோடிட்ட இடங்களை நிரப்புக: (விடைகள்)

1. நெட்டலை/அதிர்வு 2. வடக்கிலிருந்து, தெற்கு 3. (500 Hz), 4. (2068 Hz)

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: (தவறானதைத் திருத்தி எழுதுக)

1. தவறு

சரியான விடை: ஒலியானது திட, திரவ, வாயு வழியே பரவும் மற்றும் வெற்றிடத்தில் பரவாது.

2. சரி

3. தவறு

சரியான விடை: ஒலியின் திசைவேகம் வெப்பநிலையைச் சார்ந்தது.

4. தவறு

சரியான விடை: ஒலியின் திசைவேகம் திரவங்களைவிட வாயுக்களில் குறைவு.

பொருத்துக: (விடைகள்)

1. குற்றொலி – 10 Hz

2. எதிரொலி – அல்ட்ராசோனோ கிராபி

3. மீயொலி – 22 kHz

4. அழுத்தம் மிகுந்த பகுதி – இறுக்கங்கள்

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றைத் தேர்வு செய்க: (விடைகள்)

1. கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.

2. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமல்ல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!