Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Book Back QuestionsTnpsc

ஒலியியல் Book Back Questions 8th Science Lesson 6

8th Science Lesson 6

6] ஒலியியல்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

தாமஸ் ஆல்வா எடிசன், 1877ஆம் ஆண்டில் ஒலிப்பதிவு சாதனத்தைக் கண்டுபிடித்தார். இதன் மூலம் பதிவுசெய்யப்பட்ட ஒலியை மீண்டும் கேட்க முடியும்.

அலைநீளம் என்பது ஒரே கட்டத்தில் அதிர்வுறும் தொடர்ச்சியான இரண்டு துகள்களுக்கு இடையிலான தூரம் ஆகும். இது λ என்ற கிரேக்க எழுத்தால் குறிக்கப்படுகிறது. அலைநீளத்தின் அலகு மீட்டர் (மீ) ஆகும். அதிர்வெண் என்பது ஒரு நொடியில் ஏற்படும் அதிர்வுகளின் எண்ணிக்கை ஆகும். இது ‘n’ என்ற எழுத்தால் குறிக்கப்படுகிறது. அதிர்வெண்ணின் அலகு ஹெர்ட்ஸ் (Hz) ஆகும்.

காற்றில் உள்ள நீராவியின் அளவு ஈரப்பதம் என்று அழைக்கப்படுகிறது. இது குளிர்காலத்தில் குறைவாகவும், கோடை காலத்தில் அதிகமாகவும் இருக்கும். ஈரப்பதம் அதிகரிப்பதன் மூலம் ஒலியின் வேகம் அதிகரிக்கிறது. ஈரப்பதம் அதிகரிக்கும்போது காற்றின் அடர்த்தி குறைவதே இதற்குக் காரணம்.

விண்வெளி வீரர்கள் ஒருவருக்கொருவர் எவ்வாறு தொடர்பு கொள்கிறார்கள்? விண்வெளி வீரர்கள் தங்கள் தலைக் கவசங்களில் சில சாதனங்களைக் கொண்டுள்ளனர். அவை ஒலி அலைகளை ரேடியோ அலைகளாக மாற்றி கடத்துகின்றன. இது ஏறக்குறைய உங்கள் வீட்டிலுள்ள ரேடியோ செயல்படுவதைப் போன்றது.

பூகம்பத்தின் போது உருவாகும் அலைகள் நெட்டலைக்கு உதாரணம் ஆகும். பூகம்பங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகள் காரணமாக பூமியின் அடுக்குகள் வழியாக பரவும் அலைகள் நில அதிர்வு அலைகள் என்று அழைக்கப்படுகின்றன. ஒரு ஹைட்ரோஃபோன் மற்றும் நில அதிர்வு அளவையைப் பயன்படுத்தி ஒருவர் இந்த அலைகளை அறிந்து அவற்றைப் பதிவு செய்யலாம். நில அதிர்வியல் (Seismology) என்பது நில அதிர்வு அலைகளின் ஆய்வைப் பற்றிய அறிவியலின் ஒரு பிரிவு ஆகும்.

அலையின் வீச்சு என்பது அதிர்வுறும் துகள் ஒன்று மையப்புள்ளியில் இருந்து அடையும் அதிகபட்ச இடப்பெயர்ச்சி ஆகும். இது ‘A’ என்ற எழுத்தால் குறிக்கப்படுகிறது வீச்சின் அலகு ‘மீட்டர்’ (m).

ஒரு வெளவால் 20,000 ஹெர்ட்ஸை விட அதிக அதிர்வெண் கொண்ட ஒலிகளைக் கேட்க முடியும். வெளவால்கள் அலறும்போது மீயொலியை உருவாக்குகின்றன. இந்த மீயொலி அலைகள் வெளவால்கள் தங்களது வழியையும் இரையையும் கண்டுபிடிக்க உதவுகின்றன.

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. ஒலி அலைகள் எதில் மிக வேகமாகப் பரவுகின்றன?

அ) காற்று

ஆ) உலோகங்கள்

இ) வெற்றிடம்

ஈ) திரவங்கள்

2. பின்வருவனவற்றுள் அதிர்வுகளின் பண்புகள் எவை?

i) அதிர்வெண் ii) கால அளவு iii) சுருதி iv) உரப்பு

அ) i மற்றும் ii

ஆ) ii மற்றும் iii

இ) iii மற்றும் iv

ஈ) i மற்றும் iv

3. ஒலி அலைகளின் வீச்சு இதைத் தீர்மானிக்கிறது

அ) வேகம்

ஆ) சுருதி

இ) உரப்பு

ஈ) அதிர்வெண்

4. சித்தார் எந்த வகையான இசைக்கருவி?

அ) கம்பிக் கருவி

ஆ) தாள வாத்தியம்

இ) காற்றுக் கருவி

ஈ) இவை எதுவும் இல்லை

5. பொருந்தாத ஒன்றைக் கண்டுபிடி

அ) ஹார்மோனியம்

ஆ) புல்லாங்குழல்

இ) நாதஸ்வரம்

ஈ) வயலின்

6. இரைச்சலை ஏற்படுத்துவது

அ) அதிக அதிர்வெண் கொண்ட அதிர்வுகள்

ஆ) வழக்கமான அதிர்வுகள்

இ) ஒழுங்கான மற்றும் சீரான அதிர்வுகள்

ஈ) ஒழுங்கற்ற மற்றும் சீரற்ற அதிர்வுகள்

7. மனித காதுக்குக் கேட்கக்கூடிய அதிர்வெண் வரம்பு

அ) 2 Hz முதல் 2,000 Hz வரை

ஆ) 20 Hz முதல் 2,000 Hz வரை

இ) 20 Hz முதல் 20,000 Hz வரை

ஈ) 200 Hz முதல் 20, 000 Hz வரை

8. ஒலி அலையின் வீச்சு மற்றும் அதிர்வெண் அதிகரிக்கும்போது, பின்வருவனவற்றுள் எது உண்மையாக இருக்கும்?

அ) உரப்பு அதிகரிக்கிறது மற்றும் சுருதி அதிகமாக இருக்கும்.

ஆ) உரப்பு அதிகரிக்கிறது மற்றும் சுருதி மாறாது.

இ) சத்தம் அதிகரிக்கிறது மற்றும் சுருதி குறைவாக இருக்கும்

ஈ) உரப்பு குறைகிறது மற்றும் சுருதி குறைவாக இருக்கும்.

9. இரைச்சலால் ஏற்படுவது எது?

அ) எரிச்சல்

ஆ) மன அழுத்தம்

இ) பதட்டம்

ஈ) இவை அனைத்தும்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. ஒலி ____________ஆல் உருவாக்கப்படுகிறது.

2. தனி ஊசலின் அதிர்வுகள் ________ என்றும் அழைக்கப்படுகின்றன.

3. ஒலி ____________ வடிவத்தில் பயணிக்கிறது.

4. உங்களால் கேட்க முடியாத உயர் அதிர்வெண் கொண்ட ஒலிகள் ____________ எனப்படுகின்றன.

5. ஒலியின் சுருதி அதிர்வுகளின் __________ஐச் சார்ந்தது.

6. அதிர்வுறும் கம்பியின் தடிமன் அதிகரித்தால், அதன் சுருதி ____________

III. பொருத்துக:

1. மீயொலி – அ. அதிர்வெண் 20 Hz க்குக் கீழ் உள்ள ஒலி

2. காற்றில் ஒலியின் வேகம் – ஆ. ஊடகம் தேவை

3. இன்ஃப்ராசோனிக்ஸ் – இ. 331 ms-1

4. ஒலி – ஈ. அதிர்வெண் 20,000 Hz க்கு மேல் உள்ள ஒலி

IV. பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

1. கூற்று: மின்னல் தாக்கும் போது மின்னலைப் பார்த்த சிறிது நேரம் கழித்து ஒலி கேட்கப்படுகிறது.

காரணம்: ஒலியின் வேகத்தை விட ஒளியின் வேகம் அதிகம்.

2. கூற்று: சந்திரனின் மேற்பரப்பில் இரண்டு நபர்கள் ஒருவருக்கொருவர் பேச முடியாது.

காரணம்: சந்திரனில் வளிமண்டலம் இல்லை.

(அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றின் சரியான விளக்கம்.

(ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல.

(இ) கூற்று சரி, ஆனால் காரணம் தவறு.

(ஈ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி.

(உ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு

விடைகள்:

I.சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. உலோகங்கள், 2. (iii) மற்றும் (iv), 3. உரப்பு, 4. கம்பிக் கருவி, 5. வயலின், 6. ஒழுங்கற்ற மற்றும் சீரற்ற அதிர்வுகள், 7. 2 Hz முதல் 2,000 Hz வரை, 8. உரப்பு அதிகரிக்கிறது மற்றும் சுருதி அதிகமாக இருக்கும், 9. இவை அனைத்தும்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. அதிர்வுகளால், 2. அலைவுகள், 3. இயந்திர அலை, 4. மீயொலி, 5. அதிர்வெண்ணை, 6. குறையும்.

III. பொருத்துக:

1. ஈ, 2. இ, 3. அ, 4. ஆ

IV. பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

1. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றின் சரியான விளக்கம்.

2. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றின் சரியான விளக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!