Book Back QuestionsTnpsc

ஒளியியல் Book Back Questions 10th Science Lesson 2

10th Science Lesson 2

2] ஒளியியல்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

மிக நுண்ணிய துகள்கள் மற்றொரு பொருளில் சம அளவில் விரவி இருப்பதை கூழ்மம் என்கிறோம். எ.கா. பால், புகை, ஐஸ்கிரீம் மற்றும் கலங்கலான நீர்.

லென்சு சமன்பாடு மற்றும் லென்சை உருவாக்குவோர் சமன்பாடு ஆகியவை மெல்லிய லென்சுகளுக்கு மட்டுமே பொருந்தக் கூடியவை. தடிமனான லென்சுகளுக்கு இவ்விரு சமன்பாடுகளும் சிறிய மாற்றங்கள் செய்து பயன்படுத்தப்படுகின்றன.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. A, B, C, D என்ற நான்கு பொருள்களின் ஒளி விலகல் எண்கள் முறையே 1.31, 1.43, 1.33, 2.4 எனில் இவற்றில் ஒளியின் திசைவேகம் பெருமமாக உள்ள பொருள் எது?

(அ) A

(ஆ) B

(இ) C

(ஈ) D

2. பொருளின் அளவிற்கு சமமான, தலைகீழான மெய்ப்பிம்பம் கிடைக்க பொருள் வைக்கப்பட வேண்டிய தொலைவு

(அ) f

(ஆ) ஈறிலாத் தொலைவு

(இ) 2f

(ஈ) f க்கும் 2f க்கும் இடையில்

3. மின் விளக்கு ஒன்று குவிலென்சு ஒன்றின் முதன்மைக் குவியத்தில் வைக்கப்பட்டுள்ளது. மின் விளக்கு ஒளியூட்டப்படும் போது, குவி லென்சானது

(அ) விரிக்கும் கற்றைகளை உருவாக்கும்

(ஆ) குவிக்கும் கற்றைகளை உருவாக்கும்

(இ) இணைக் கற்றைகளை உருவாக்கும்

(ஈ) நிறக் கற்றைகளை உருவாக்கும்.

4. குவி லென்சின் உருப்பெருக்கமானது எப்போதும் __________ மதிப்புடையது.

(அ) நேர்க்குறி

(ஆ) எதிர்க்குறி

(இ) நேர்க்குறி (அ) எதிர்க்குறி

(ஈ) சுழி

5. ஒரு குவி லென்சானது, மிகச்சிறிய மெய்பிம்பத்தை முதன்மைக் குவியத்தில் உருகாக்கினால், பொருள் வைக்கப்படும் இடம் _____________

(அ) முதன்மைக் குவியம்

(ஆ) ஈறிலாத் தொலைவு

(இ) 2f

(ஈ) f க்கும் 2f க்கும் இடையில்

6. ஒரு லென்சின் திறன் -4D எனில் அதன் குவியத் தொலைவு

(அ) 4 மீ

(ஆ) -40 மீ

(இ) -0.25 மீ

(ஈ) -2.5 மீ

7. கிட்டப்பார்வை குறைபாடு உடைய கண்ணில், பொருளின் பிம்பமானது _______ தோற்றுவிக்கப்படுகிறது.

(அ) விழித் திரைக்குப் பின்புறம்

(ஆ) விழித்திரையின் மீது

(இ) விழித் திரைக்கு முன்பாக

(ஈ) குருட்டுத் தானத்தில்

8. விழி ஏற்பமைவுத் திறன் குறைபாட்டைச் சரி செய்ய உதவுவது

(அ) குவி லென்சு

(ஆ) குழி லென்சு

(இ) குவி ஆடி

(ஈ) இரு குவிய லென்சு

9. சொல் அகராதியில் உள்ள சிறிய எழுத்துகளைப் படிப்பதற்கு உகந்த லென்சு எது?

(அ) 5 செ.மீ குவிய தூரம் கொண்ட குவிலென்சு

(ஆ) 5 செ.மீ குவிய தூரம் கொண்ட குழி லென்சு

(இ) 10 செ.மீ குவிய தூரம் கொண்ட குவி லென்சு

(ஈ) 10 செ.மீ குவிய தூரம் கொண்ட குழி லென்சு

10. ஒரு முப்பட்டகத்தின் வழியே செல்லும், நீலம், பச்சை மற்றும் சிவப்பு நிறங்களின் திசை வேகங்கள் VB, VG.VR எனில் பின்வருவனவற்றுள் எச்சமன்பாடு சரியானது?

(அ) VB = VG = VR

(ஆ) VB > VG >VR

(இ) VB < VG < VR

(ஈ) VB < VG >VR

கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. ஒளி செல்லும் பாதை __________ என்று அழைக்கப்படுகிறது.

2. ஒரு ஒளிபுகும் ஊடகத்தின் ஒளி விலகல் எண் எப்போதும் ஒன்றை விட ___________

3. படுகின்ற ஒளிக்கற்றையின் ஆற்றலும் சிதறலடைந்த கற்றையின் ஆற்றலும் சமமாக இருந்தால் அது __________ சிதறல் எனப்படும்.

4. ராலே சிதறல் விதிப்படி, சிதறல் அளவானது, படுகின்ற ஒளிக்கதிரின் __________ ன் நான்மடிக்கு எதிர் தகவில் இருக்கும்.

5. ___________ கண்ணிற்குள் நுழையும் ஒளியின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: தவறான வாக்கியத்தை திருத்தி எழுதுக

1. அடர்வு மிகு ஊடகத்தில் ஒளியின் திசை வேகமானது, அடர்வு குறை ஊடகத்தில் இருப்பதைவிட அதிகமாக இருக்கும்.

2. லென்சின் திறனானது லென்சின் குவியத் தொலைவைச் சார்ந்தது.

3. விழி லென்சின் குவிக்கும் திறன் அதிகரிப்பதால் தூரப்பார்வை ஏற்படுகிறது.

4. குவிலென்சானது, எப்போதும் சிறிய மாயப் பிம்பத்தையே உருவாக்கும்.

பொருத்துக:

1. ரெட்டினா – அ. கண்ணில் ஒளிக்கதிர் செல்லும் பாதை

2. கண் பார்வை – ஆ. சேய்மைப்புள்ளி விழியை நோக்கி நகர்தல்

3. சிலியரித் தசைகள் – இ. அண்மைப்புள்ளி விழியை விட்டு விலகிச் செல்லுதல்

4. கிட்டப்பார்வை – ஈ. விழித்திரை

5. தூரப்பர்வை – உ. விழி ஏற்பமைவுத்திறன்

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

(அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கம்.

(ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கமன்று.

(இ) கூற்று சரியானது. ஆனால் காரணம் சரியன்று.

(ஈ) கூற்று தவறானது. ஆனால், காரணம் சரியானது.

1. கூற்று: ஊடகத்தின் ஒளிவிலகல் எண் அதிகமாக இருந்தால் (அடர்வு மிகு ஊடகம்), அந்த ஊடகத்தில் ஒளியின் திசைவேகம் குறைவாக இருக்கும்.

காரணம்: ஊடகத்தின் ஒளிவிலகல் எண், ஒளியின் திசைவேகத்திற்கு எதிர்த்தகவில் இருக்கும்.

2. கூற்று: விழி லென்சின் குவிக்கும் திறன் அதிகரிப்பதால், கிட்டப்பார்வை என்னும் பார்வைக் குறைபாடு தோன்றுகிறது.

காரணம்: குழிலென்சைப் பயன்படுத்தி கிட்டப்பார்வைக் குறைப்பாட்டைச் சரி செய்யலாம்.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)

1. A, 2. (2f), 3. இணைக் கற்றைகளை உருவாக்கும், 4. நேர்க்குறி (அ) எதிர்க்குறி, 5. ஈறிலாத் தொலைவு, 6. (-0.25மீ),
7. விழித் திரைக்கும் முன்பாக, 8. இரு குவிய லென்சு, 9. (5 செ.மீ. குவிய தூரம் கொண்ட குவிலென்சு), 10. VB < VG < VR

கோடிட்ட இடங்களை நிரப்புக: (விடைகள்)

1. ஒளிக்கதிர், 2. அதிகம், 3. மீட்சித் சிதறல், 4. அலைநீளத்தில், 5. ஐரிஸ்

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: தவறான வாக்கியத்தைத் திருத்தி எழுதுக.

1. தவறு

சரியான விடை: அடர்வு மிகு ஊடகத்தில் ஒளியின் திசை வேகமானது, அடர்வு குறை ஊடகத்தில் இருப்பதைவிட குறைவாக இருக்கும்.

2. சரி

லென்சின் திறனானது லென்சின் குவியத் தொலைவைச் சார்ந்தது.

3. தவறு

சரியான விடை: விழி லென்சின் குவிக்கும் திறன் அதிகரிப்பதால் கிட்டப்பார்வை ஏற்படுகிறது.

4. தவறு

சரியான விடை: குழிலென்சானது, எப்போதும் சிறிய மாயப் பிம்பத்தையே உருவாக்கும்;.

பொருத்துக: (விடை)

1. ரெட்டினா – விழித்திரை

2. கண்பாவை – கண்ணில் ஒளிக்கதிர் செல்லும் பாதை

3. சிலியரித் தசைகள் – விழி ஏற்பமைவுத்திறன்

4. கிட்டப்பார்வை – சேய்மைப் புள்ளி விழியை நோக்கி நகர்தல்

5. தூரப்பார்வை – அண்மைப்புள்ளி விழியை விட்டு விலகிச் செல்லுதல்

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றைத் தேர்வு செய்க: (விடைகள்)

1. கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கம்.

2. கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கமன்று.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!