Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Book Back QuestionsTnpsc

ஒளியியல் Book Back Questions 7th Science Lesson 14

7th Science Lesson 14

14] ஒளியியல்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

தாவரங்களுக்கு முக்கிய ஆற்றல் மூலமாகத் திகழ்வது சூரிய ஒளி ஆகும். எனவே, தாவரங்கள் பெரும்பாலும் சூரிய ஒளியைச் சார்ந்துள்ளன. மனிதர்களும் விலங்குகளும் தாம் உண்ணும் உணவிலிருந்து கார்போஹைட்ரேட், புரதம் மற்றும் கொழுப்பு ஆகிய ஊட்டச்சத்துகளைப் பெற்றுக் கொள்கின்றன. தாவரங்கள் சூரிய ஒளி, காற்றில் உள்ள கார்பன்-டை-ஆக்சைடு மற்றும் புவியில் உள்ள நீர் ஆகியவற்றைப் பயன்படுத்தி ஒளிச்சேர்க்கை என்னும் நிகழ்வு மூலம் உணவைத் தயாரித்துக் கொள்கின்றன. தாவரங்களின் ஒளிச்சேர்க்கை நிகழ்விற்கு சூரிய ஒளி மிகவும் அவசியம் ஆகும்.

சந்திரன் ஓர் ஒளிரும் பொருளா? சந்திரன் நன்கு ஒளியைத் தரும் மூலம் ஆகும். ஆனால், சந்திரன் தாமாகவே ஒளியை உமிழும் மூலம் அல்ல. அது சூரியனிடமிருந்து ஒளியைப் பெற்று, பின் அதனைப் பூமிக்குப் பிரதிபலிக்கிறது. நாம் சந்திரனைப் பார்க்கும் போது சந்திரனின் ஒளிரும் ஒரு பாதியை மட்டுமே காண்கிறோம். சந்திரனின் ஒரு பாதி எப்பொழுதும் சூரியனை நோக்கி அமைந்து, ஒளியைப் பெறுகிறது. இவ்வாறே சந்திரனிடமிருந்து நாம் ஒளியைப் பெறுகிறோம்.

நாம் வீட்டில் பயன்படுத்தும் குழல் விளக்கு (tube light) ஒரு வகையான வாயுவிறக்க ஒளி மூலம் ஆகும். இது ஒளிர்தலின் மூலம் நமக்குக் கண்ணுரு ஒளியைத் தருகிறது. குழாயின் வழியே செல்லும் மின்னோட்டம், பாதரச ஆவியைத் தூண்டி, குறைந்த அலைநீளம் கொண்ட புற ஊதாக் கதிர்களை உருவாக்குகிறது. இக்கதிர்கள் குழாயின் உட்பகுதியில் பூசப்பட்ட பாஸ்பரஸின் மேல் விழுந்து, குழல் விளக்கை ஒளிரச் செய்கின்றன.

ஒளியானது நேர்கோட்டில் செல்லும். ஒளியானது தானே வளைந்து செல்லாது. இதுவே ஒளியின் நேர்கோட்டுப் பண்பு எனப்படும். இது ஒளியின் முக்கியமான பண்பு ஆகும்.

அல்-ஹசன்-ஹயத்தம் என்ற அறிவியல் அறிஞர் ஒளி, காட்சி மற்றும் ஒளியியல் தொடர்பான புரிதலுக்கு, முக்கிய பங்காற்றியவர். சிறு துளை வழியாக வரும் ஒளி, நேர்கோட்டுப் பாதையில் பயணித்து, எதிரே உள்ள சுவரில் ஒரு பிம்பத்தைத் தோற்றுவிப்பதை அவர் கண்டறிந்தார். அத்தகைய சோதனைகளின் அடிப்படையில், கண்ணுக்குப் புலனாகும் காட்சி என்பது வெளிப்புற ஒளி மூலங்களில் இருந்து வரும் கதிர்கள், கண்ணுக்குள் நுழைகிறது என்பதைக் கண்டறிந்தார். ஒளியுடன் கூடிய சோதனைகளைச் செய்து, ஒளியின் நேர்கோட்டுப் பண்பினைக் கண்டறிந்த முதல் அறிஞர் இவரே ஆவார்.

காமிராவின் தொழில் நுட்பம் முன்னேற்றம் அடையாத காலத்தில், ஊசித்துளை காமிரா, சூரியனின் இயக்கத்தைப் பதிவு செய்ய பயன்பட்டது. இவ்வகையான புகைப்படம் எடுக்கும் முறைக்குச் சோலாகிராபி என்று பெயர். மேலும், ஊசித்துளைப் காமிரா நிலையான பொருள்களைப் புகைப்படம் எடுப்பதற்கும், சூரிய கிரகணத்தைக் காண்பதற்கும், அதனைப் பதிவு செய்வதற்குப் பயன்படுத்தப்பட்டது.

படுகோணமும் (i), எதிரொளிப்புக் கோணமும் (r) சமம் i = r.

படுகதிர், குத்துக்கோடு மற்றும் எதிரொளிப்புக் கதிர் ஆகியவை ஒரே தளத்தில் அமையும்.

ஒளி இழை: ஒளி இழை என்பது, முழு அக எதிரொளிப்புத் தத்துவத்தின் படி செயல்படும் ஒரு சாதனம் ஆகும். இச்சாதனம் மூலம் ஒளி சமிக்ஞைகளை, (signal) ஓரிடத்திலிருந்து, மற்றோர் இடத்திற்குக் குறைவான நேரத்தில் மிகுந்த ஆற்றல் இழப்பு இல்லாமல் அனுப்ப இயலும். இதனுள், ஒளி சமிக்ஞைகளை அனுப்பும் வகையில் கண்ணாடி உள்ளகம் கொண்ட ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட, வளையும் தன்மை கொண்ட இழைகளும் உள்ளன. ஒளி இழையினை வளைக்கலாம்; மடக்கலாம். ஒளியிழையின் ஒரு முனையில் ஒளியானது விழும்போது, அது கண்ணாடி உள்ளகத்தில் முழு அக எதிரொளிப்பு அடைந்து மறுமுனையில் குறைந்த ஆற்றல் இழப்புடன் வெளிவருகிறது. தரவு அல்லது தகவல் ஒளியியல் துடிப்புகளாக, ஒளி இழையின் மூலம் அனுப்பப்படுகிறது. ஒளி இழைகள் கேபிள் தொலைத்தொடர்பு, அகன்ற அலைவரிசை தொடர்புச் சாதனங்கள் போன்ற அதிவேக தொடர்பு அனுப்புகைகளில் பெருமளவு பயன்படுத்தப்படுகிறது. தொலை தொடர்புக்கு முன்னர் பயன்படுத்திய தாமிரக் கம்பியிலான வடத்திற்கு மாற்றாக இப்பொழுது ஒளியிழைகள் பயன்படுத்தப்படுகின்றன. தாமிரக் கம்பியிலான வடத்தை விட ஒளியிழை வடத்தின் மூலம் அதிக அளவு தகவல்களை அனுப்ப முடியும்.

ஆம்புலன்சுகளில் “AMBULANCE” என்ற வார்த்தை பின்னோக்கி ஏன் இது போன்று எழுதப்படுகிறது? சமதள ஆடியின் இடவலமாற்றம் என்ற பண்பு இங்குப் பயன்படுத்தப்படுகிறது. ஊர்தியில் பின்னோக்கி எழுதப்பட்ட வார்த்தையின் எழுத்துகள் முன் செல்லும் வாகனத்தின் கண்ணாடியில் இடவலமாற்றத்தின் காரணமாக “AMBULANCE” என நேராகத் தெரியும்.

வாகனங்களின் பின்புறம் ஏன் சிவப்பு நிற விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன? சிவப்பு நிறம் காற்று மூலக்கூறுகளால் குறைவான அளவில் சிதறடிக்கப்படுகின்றன. சிவப்பு நிறமானது மற்ற நிறங்களைவிட அதிக அலைநீளம் கொண்டது ஆகும். எனவே, சிவப்பு நிறம் காற்றில் அதிக தொலைவு பயணம் செய்யும்.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. ஒளியானது எப்பொழுதும் ________ செல்லும். இந்தப் பண்பு __________ என அழைக்கப்படுகிறது.

(அ) வளைகோட்டில், நிழல்கள்

(ஆ) நேர்கோட்டில், நிழல்கள்

(இ) நேர்கோட்டில், எதிரொளிப்பு

(ஈ) வளைந்து பின் நேராக, நிழல்கள்

2. ஆடியில் படும் ஒளியானது ___________

(அ) ஊடுருவிச் செல்கிறது

(ஆ) எதிரொளிப்பு அடைகிறது

(இ) உட்கவரப்படுகிறது

(ஈ) விலகலடைகிறது

3. ___________ பரப்பு ஒளியை எதிரொளிக்கிறது.

(அ) நீர்

(ஆ) குறுந்தகடு

(இ) கண்ணாடி

(ஈ) கல்

4. ஒளி என்பது ஒரு வகை __________

(அ) பொருள்

(ஆ) ஆற்றல்

(இ) ஊடகம்

(ஈ) துகள்

5. நீங்கள், உங்கள் பிம்பத்தைப் பளப்பளப்பான பரப்பில் பார்க்க இயலும், ஆனால், மர மேஜையின் பரப்பில் பார்க்க இயலாது, ஏனெனில் ___________

(அ) ஒழுங்கான எதிரொளிப்பு, மர மேஜையில் நடைபெறுகிறது மற்றும் ஒழுங்கற்ற எதிரொளிப்பு பளப்பளப்பான பரப்பில் நடைபெறுகிறது.

(ஆ) ஒழுங்கான எதிரொளிப்பு, பளப்பளப்பான பரப்பில் நடைபெறுகிறது மற்றும் ஒழுங்கற்ற எதிரொளிப்பு மர மேஜையில் நடைபெறுகிறது.

(இ) இரண்டு பரப்புகளிலும், ஒழுங்கான எதிரொளிப்பு நடைபெறுகிறது.

(ஈ) இரண்டு பரப்புகளிலும், ஒழுங்கற்ற எதிரொளிப்பு நடைபெறுகிறது.

6. பின்வருவனவற்றில் எது பகுதி ஒளி ஊடுருவும் பொருள்?

(அ) கண்ணாடி

(ஆ) மரம்

(இ) நீர்

(ஈ) மேகம்

7. ஒளியானது __________ எதிரொளிப்பு நடைபெறுகிறது.

(அ) எதிரொளிக்கும் பரப்பை அடையும் போது

(ஆ) எதிரொளிக்கும் பரப்பை அணுகும் போது

(இ) எதிரொளிக்கும் பரப்பின் வழியே செல்லும் போது

(ஈ) மேற்கூறிய எதுவும் இல்லை

8. கீழ்க்காணும் எப்பொருள், ஒளியை நன்கு எதிரொளிக்கும்?

(அ) பிளாஸ்டிக் தட்டு

(ஆ) சமதள ஆடி

(இ) சுவர்

(ஈ) காகிதம்

9. சிவராஜன் ஒரு மீட்டர் அளவுகோலை, காலை 7 மணிக்கு விளையாட்டு மைதானத்தில் நேர்க்குத்தாக நிற்க வைக்கிறான். நண்பகலில் தோன்றும் அளவுகோலின் நிழலானது ____________

(அ) தோன்றாது

(ஆ) காலையில் தோன்றிய நிழலைவிட நீளமானது மற்றும் நிழல், சூரியனின் எதிர்த்திசையில் தோன்றும்.

(இ) காலையில் தோன்றிய நிழலைவிடக் குறைவான நீளம் கொண்டது மற்றும் நிழல், சூரியனின் அதே திசையில் தோன்றும்.

(ஈ) காலையில் தோன்றிய நிழலைவிடக் குறைவான நீளம் கொண்டது.

10. ஊசித்துளைக்காமிராவில் தோன்றும் பிம்பம் தலைகீழானது, ஏனெனில் __________

(அ) ஒளியானது நேர்க்கோட்டில் செல்லும்.

(ஆ) ஒளிக்கதிர்கள் துளையின் வழியேச் செல்லும் போது, தலைகீழாகச் செல்கிறது.

(இ) ஒளிக்கதிர்கள் துளையின் வழியேச் செல்கிறது.

(ஈ) ஒளிக்கதிர்கள் எதிரொளிக்கப்படுகின்றன.

11. பின்வரும் எந்தக்கூற்று, நிழல்கள் உருவாக்கத்தை விளக்குகிறது?

(அ) ஒளி நேர்க்கோட்டில் செல்கிறது.

(ஆ) ஒளி ஊடுருவாப் பொருள் ஒளியைத் தன் வழியே அனுமதிப்பதில்லை.

(இ) எதிரொளிப்பு, கண்ணாடி போன்ற பரப்புகளில் நடைபெறுகிறது.

(ஈ) இடவலமாற்றம் அடைகிறது.

i. அ மற்றும் ஆ

ii. அ மற்றும் ஈ

iii. அ மற்றும் இ

iv. அ மட்டும்

கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. ஒரு சமதள ஆடியானது உருவாக்கும் பிம்பம் ___________ ஆகும்.

2. ___________ எதிரொளிப்பு ஆனது பொருள்களைக் காண உதவுகிறது.

3. ஒளிக்கதிர்கள் பளபளப்பான பரப்பின் மீது விழும் போது, அவை ___________ அடைகின்றன.

4. சூரிய ஒளியானது, ___________ வண்ணங்களின் கலவை ஆகும்.

5. ஒரு வெள்ளொளி ஆனது, ஏழு வண்ணங்களாகப் பிரிகையடையும் நிகழ்வு ____________ எனப்படும்.

6. சந்திரன், சூரியனிடமிருந்து ஒளிக்கதிர்களை ____________ செய்கிறது.

7. ____________ பயன்படுத்தி, சூரிய ஒளியில் அடங்கியுள்ள வண்ணங்களைப் பிரிக்கலாம்.

8. சொரசொரப்பான பரப்பின் மேல் ____________ எதிரொளிப்பு நடைபெறுகிறது.

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: தவறான வாக்கியத்தை திருத்தி எழுதுக:

1. ஆடியின் முன் நிற்கும் போது, உன் வலக் கையின் பிம்பமும், இடக் கையின் பிம்பமும் ஒரே மாதிரியாகத் தோற்றமளிகின்றன.

2. சூரிய ஒளியானது, நீர்த்துளிகளின் மூலம் நிறப்பிரிகை அடைந்து வானவில் தோன்றுகிறது.

3. சமதள ஆடியில் தோன்றும் பிம்பம் இடவலமாற்றம் அடைகிறது. எனவே பெரிஸ்கோப்பின் மூலம் தோன்றும் பிம்பமும் இடவலமாற்றம் அடைகிறது.

4. சூரிய ஒளியைக் கோள்கள் எதிரொளிப்பதன் காரணமாக அதனைக் காண முடிகிறது.

5. புத்தகத்தின் மேற்பரப்பு, ஒளியை எதிரொளிப்பதால் புத்தகத்தை நாம் காண முடிகிறது.

6. ஊசித்துளைக் காமிராவில் தோன்றும் பிம்பம், நேர்மாறு பிம்பம் ஆகும்.

7. ஊசித்துளைக் காமிராவில் தோன்றும் பிம்பத்தின் அளவும், பொருளின் அளவும் சமம்.

8. சமதள ஆடியில் தோன்றும் பிம்பம் தலைகீழ் மாற்றம் அடைகிறது.

9. சமதள ஆடி, ஒளி ஊடுருவாத ஒரு பொருள் ஆகும்.

10. ஒரு பொருளின் நிழல், பொருளில் இருக்கும் அதே பக்கத்தில் அமையும்.

11. நம்மைச்சுற்றி இருக்கும் பொருள்களை, ஒளியின் ஒழுங்கான எதிரொளிப்பின் மூலமே காண்கிறோம்.

12. ஒரு வெள்ளொளி ஆனது, முப்பட்டகம் வழியே செல்லும்போது, அது ஏழு வண்ணங்களாகப் பிரிகை அடைகிறது.

பொருத்துக:

1. நேர்கோட்டுப் பண்பு – முதன்மை ஒளிமூலம்

2. சமதள ஆடி – ஒளிராப் பொருள்

3. மின்மினிப்பூச்சி – பெரிஸ்கோப்

4. நிலா – ஊசித்துளைக் காமிரா

5. அகன்ற ஒளி மூலம் – நிறப்பட்டை

6. ஒழுங்கான எதிரொளிப்பு – ஒளிரும் பொருள்

7. சூரியன் – புற நிழல்

8. ஏழு வண்ணங்கள் – பளப்பளப்பான பரப்பு

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)

1. நேர்கோட்டில்இ நிழல்கள் 2. எதிரொளிப்பு அடைகிறது 3. கண்ணாடி 4. ஆற்றல்

5. ஒழுங்கான எதிரொளிப்பு, பளபளப்பான பரப்பில் நடைபெறுகிறது மற்றும் ஒழுங்கற்ற எதிரொளிப்பு மர மேஜையில் நடைபெறுகிறது.

6. மேகம் 7. எதிரொளிக்கும் பரப்பை அடையும் போது 8. சமதள ஆடி

9. காலையில் தோன்றிய நிழலைவிடக் குறைவான நீளம் கொண்டது

10. ஒளியானது நேர்க்கோட்டில் செல்லும் 11. அ மற்றும் ஆ

கோடிட்ட இடங்களை நிரப்புக: (விடைகள்)

1. நேரான, மாயபிம்பம் 2. ஒழுங்கான 3. ஒழுங்கான எதிரொளிப்பு 4. ஏழு

5. நிறப்பிரிகை 6. பெற்று பிரதிபலிக்க 7. முப்பட்டகத்தினைப் 8. ஒழுங்கற்ற

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: தவறானதைத் திருத்தி எழுதுக: (விடைகள்)

1. தவறு

சரியான விடை: ஆடியின் முன் நிற்கும் போது உன் வலக்கையின் பிம்பமும் இடக்கையின் பிம்பமும் இடவல மாற்றமாக தோற்றமளிக்கின்றன.

2. சரி

3. சரி

4. சரி

5. சரி

6. தவறு

சரியான விடை: ஊசித்துளை காமிராவில் தோன்றும் பிம்பம் தலைகீழ் மெய் பிம்பம் ஆகும்.

7. தவறு

சரியான விடை: ஊசித்துளை காமிராவில் தோன்றும் பிம்பித்தின் அளவும், பொருளின் அளவும் சமமல்ல.

8. தவறு

சரியான விடை: சமதள ஆடியில் தோன்றும் பிம்பம் இடவல மாற்றம் அடைகிறது.

9. சரி

10. தவறு

சரியான விடை: ஒரு பொருளின் நிழல் பொருளின் எதிர் பக்கத்தில் அமையும்.

11. சரி

12. சரி

பொருத்துக: (விடைகள்)

1. நேர்கோட்டுப் பண்பு – ஊசித்துளைக் காமிரா

2. சமதள ஆடி – ஒளிராப் பொருள்

3. மின்மினிப் பூச்சி – ஒளிரும் பொருள்

4. நிலா – புறநிழல்

5. அகன்ற ஒளி மூலம் – பெரிஸ்கோப்

6. ஒழுங்கான எதிரொளிப்பு – பளப்பளப்பான பரப்பு

7. சூரியன் – முதன்மை ஒளிமூலம்

8. ஏழு வண்ணங்கள் – நிறப்பட்டை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!